Wednesday, March 14, 2012

மார்க்கெட் சரியவில்லை: எனக்கு திருமணம் என்று வதந்தி பரப்புவதா? திரிஷா ஆவேசம்!!!

Wednesday,March,14,2012
நடிகை திரிஷாவுக்கு மார்க்கெட் சரிந்து விட்டதாகவும் எனவே விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து இருப்பதாகவும் செய்திகள் பரவியுள்ளது.

இளம் நாயகிகள் வரத்து அதிகரித்துள்ளதால் திரிஷா போன்ற மூத்த நாயகிகளை இயக்குனர்களும், ஹீரோக்களும் ஒதுக்குவதாகவும் கிசுகிசுக்கள் பரவியுள்ளன.

இதற்கு பதில் அளித்து திரிஷா அளித்த பேட்டி வருமாறு:-

என்னைப் பற்றி ஏற்கனவே நிறைய வதந்திகள் பரவியுள்ளன. அதன் தொடர்ச்சியாக இந்த வதந்தியும் வந்து இருக்கிறது. இதுபோன்ற கிசுகிசுக்கள் எங்கிருந்து கிளம்புகின்றன என்று எனக்கு தெரியவில்லை.

'தம்மு' தெலுங்கு படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறேன். திருப்பாச்சி, கில்லி மாதியான படம் அது. என்னைப் பற்றி வரும் வதந்திகளை நான் பொருட்படுத்துவது இல்லை. படம் ரிலீஸ் ஆகும்போது மக்கள் என் நடிப்பை உணர்வார்கள்.

சினிமாவில் எனது மார்க்கெட் நன்றாக இருப்பதால் திருமணத்தை பற்றி நான் சிந்திக்கவில்லை. அடுத்த இரண்டு வருடத்துக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இவ்வாறு திரிஷா கூறினார்.

ஒசாகா ஆசிய திரைப்பட விழாவில் 'தெய்வத்திருமகள்!!!

Wednesday,March,14,2012
விக்ரம் நடித்த 'தெய்வத்திருமகள்' படம், ஒசாகா ஆசிய திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது. விஜய் இயக்கத்தில், விக்ரம், அனுஷ்கா, அமலா பால், குழந்தை சாரா ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம் 'தெய்வத்திருமகள்'. இந்தப்படம் ஒரு ஆங்கில படத்தின் தழுவல் என்றாலும் அதை மிக நேர்த்தியாக எடுத்திருந்தார் டைரக்டர் விஜய். அதிலும் குறிப்பாக விக்ரம் மற்றும் குழந்தை சாராவின் நடிப்பு ரொம்ப பிரமாதமாக வந்திருந்ததால் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் இப்படம் ஒசாகா ஆசிய திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது.இதுகுறித்து டைரக்டர் விஜய் கூறுகையில், ஒசாகா ஆசிய திரைப்பட விழாவில், உலக திரைப்பட பிரிவில் 'தெய்வத்திருமகள்' படம் தேர்வாகி இருக்கிறது. மேலும் இப்படம் விருதுக்கான பட்டியலிலும் இடம்பெற்று இருக்கிறது. மார்ச் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடக்கும் இவ்விழாவில் பங்கேற்க நானும், விக்ரமும் செல்கிறோம். 'தெய்வத்திருமகள்' படம் 'காட்ஸ் ஓன் சைல்டு' எனும் பெயரில் ஆங்கில சப் டைட்டிலுடன் திரையிடப்பட இருக்கிறது என்று கூறியுள்ளார். ஏற்கனவே 'தெய்வத்திருமகள்' படம் தென் கொரியாவில் நடந்த பூசன் சர்வதேச திரைப்பட விழாவிலும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. சீயானின் உழைப்பு எப்பயும் வீணாய் போனதே இல்லை. குழந்தை சாராவோடு சேர்ந்து குழந்தையாகவே அசத்தியிருப்பார். தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த இயக்குநருக்கு வாழ்த்துகள்!

ஜப்பானிய மொழியில் ரஜினி படம்!!!

Wednesday,March,14,2012
ரஜினிக்கு ஜப்பானியர்கள் ரசிகர்களாக மாறியுள்ளனர். அங்கு ரசிகர் மன்றமும் துவங்கியுள்ளார்கள். இந்த மன்றத்தில் ஜப்பானியர்களே நிர்வாகிகளாக இருக்கிறார்கள். ரஜினி ரசிகர் மன்றம் மூலம் நலத்திட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். முத்து படம் மூலமே ரஜினிக்கு ஜப்பானியர்கள் ரசிகர்கள் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படம் அங்க வெற்றிகரமாக ஓடியது. தொடர்ந்து படையப்பா, சந்திரமுகி படங்களும் ஜப்பான் மொழி சப்டைட்டிலுடன் அங்கு ரிலீஸ் செய்யப்பட்டன. தற்போது கோச்சடையான் படமும் ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்து வெளியிட இருக்கிறது.

கோச்சடையான் படப்பிடிப்பு லண்டனில் இந்த வாரம் துவங்குகிறது. தீபிகா படுகோனே நாயகியாக நடிக்கிறார். தெலுங்கு, இந்தி மொழியிலும் இதை எடுக்கின்றனர். ஜப்பானில் ரஜினிக்கு உள்ள செல்வாக்கை கருத்தில் கொண்டு ஜப்பான் மொழியிலும் வெளியிடுகின்றனர். இந்த படத்தில் ரஜினி சொந்த குரலில் ஒரு பாடலை பாடுகிறார். வசன நடையில் இப்பாடல் பதிவு செய்யப்படுகிறது.

கவர்ச்சி நடிகை ஸ்வேதா மேனனுக்கு சிறந்த வில்லி விருது!!!

Wednesday,March,14,2012
பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனன். இவர் தமிழில் சினேகிதியே, சாது மிரண்டா, நான் அவனில்லை-2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஸ்வேதா மேனன் தெலுங்கில் ராஜான்னா என்ற படத்தில் நடித்தார். நாகார்ஜூனா, சினேகா போன்றோரும், இதில் நடித்துள்ளனர். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. இதில் நடித்ததற்காக ஸ்வேதா மேனனுக்கு சிறந்த வில்லி விருது கிடைத்துள்ளது.

வில்லத்தனத்தில் அபாரமாக நடித்து இருந்ததாக தெலுங்கு திரையுலகினர் பாராட்டி இந்த விருதை அளித்துள்ளனர். ஸ்வேதாமேனன் ரதிநிர் வேதம் மலையாள படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளார். இப் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு விரைவில் ரிலீசாக உள்ளது.

ஒரே பாணி’யில் நடிகர் விமல்!!!

Wednesday,March,14,2012
பசங்க’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் விமலின் சினிமா பயணம் தொடர்ந்து முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.

பசங்க’ படத்தையடுத்து அவர் நடித்த ‘களவாணி’, ‘வாகை சூடவா’, ‘எத்தன்’ ஆகிய படங்களில் இவரின் நகைச்சுவை நடிப்பு அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது என்றால் அது மிகையல்ல.

இந்நிலையில் விமல் மீண்டும் தன்னுடைய நகைச்சுவை பயணத்தை தொடர்கிறார்.

தற்போது நகைச்சுவை இயக்கத்துக்கு பேர்போன இயக்குனர் சுந்தர்.சி. இயக்கும் ‘மசாலா கபே’, ‘தமிழ் படம்’ எடுத்த அமுதன் இயக்கும் ‘ரெண்டாவது படம்’, வசந்த் இயக்கும் ‘மூன்று பேர் மூன்று காதல்’ ஆகிய படங்களில் நடிக்கிறார்.

இம்மூன்று படங்களுமே நகைச்சுவையை மையமாக வைத்து உருவாகி வரும் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை சாமியார் ஆசிரமத்தில் அமலா பால்!!!

Wednesday,March,14,2012
அதென்னமோ... சாமியார்கள், ஆசிரமம் போன்றவற்றின் மீது நடிகைகளுக்கு அலாதி ஈடுபாடு.

கிட்டத்தட்ட எல்லா நடிகைகளுமே ஏதாவதொரு காலகட்டத்தில் ஆசிரமத்துக்குப் போய் சாமியார்களுடன் போஸ் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

சமீபத்தில் கோவையில் உள்ள ஈஷா ஆசிரமத்துக்குப் போய் நீண்ட நேரம் இருந்துவிட்டு வந்தாராம் அமலா பால்.

இந்த ஆசிரமத்துக்குப் போய் வந்த பிறகு அந்த அனுபவம் குறித்துதான் அனைவரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து அமலா கூறுகையில், "ஈஷா ஆசிரமத்துக்குப் போய் நீண்ட நேரம் அங்கேயே செலவழித்தேன். அது ஒரு சுகமான அனுபவம். அந்த இடமும் சுற்றுப் புறமும் என் மனதை விட்டு நீங்க வில்லை. அந்த இடத்தை நான் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்.

இனி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஆசிரமத்துக்குப் போவேன்," என்றார்.

இதற்கு முன் ரீமா சென், ஸ்ரேயா, சோனியா அகர்வால் போன்ற நடிகைகள் இந்த ஆசிரமத்துக்கு வந்து 'ஸ்தலப் பெருமை' பாடியது நினைவிருக்கலாம்.

என் கையாலேயே சாப்பிட்டுவிட்டு, என் மீதே கொலைப்பழி போடுகிறார்களே: அல்போன்சா!!!

Wednesday,March,14,2012
வினோத் குமாரின் பெற்றோர் என் கையால் சாப்பிட்டுவிட்டு என் மீதே கொலைப்பழி சுமத்துவது வேதனையாக உள்ளது என்று நடிகை அல்போன்சா தெரிவித்துள்ளார்.

கவர்ச்சி நடிகை அல்போன்சாவின் காதலர் வினோத் குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அல்போன்சாவும் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது வீடு திரும்பியுள்ளார்.

இதற்கிடையே அல்போன்சா தனது பெற்றோருடன் சேர்ந்து வினோத் குமாரை கொலை செய்ததாக அவரது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து அல்போன்சா செய்தியாளர்களிடம் கூறியதாவது,

வினோத்குமார் ஒரு தோழி மூலமாக எனக்கு அறிமுகமானார். அடிக்கடி வீட்டுக்கு வந்து போனார். செல்போன் எண்ணை வாங்கி பேசினார். என்னை உயிருக்கு உயிராய் காதலித்தார். அவர் தான் முதலில் காதலை சொன்னார். நான் ஏற்கனவே திருமணமானவள் என்று சொன்னேன். அதற்கு அவர் நீ வாழாவெட்டியாக இருப்பது எனக்கு தெரியும். நான் உன்னை மணந்து கொள்கிறேன் என்றார்.

எனது தங்கைக்கு திருமணம் முடிந்ததும் உன்னை மணக்கிறேன் என்றார். ஒரு கட்டத்தில் அவர் என் வீட்டிலேயே தங்கிவி்ட்டார். அதன் பின்னர் அவரது தாயும், தந்தையும் ஒரு நாள் என் வீட்டுக்கு வந்தனர். இது தான் உங்கள் மருமகள் என்று என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். நான் அவர்களுக்கு எனது கையால் சமைத்து போட்டேன்.

வினோத் குமாரின் தம்பியும் என் வீட்டில் தங்கியுள்ளார்.

நான் துபாய் கலை விழாவுக்கு சென்றிருந்தபோது வினோத் குமார் தான் என் மகளை பார்த்துக் கொண்டார். தினமும் அவளை பள்ளிக்கு அழைத்துச் சென்றார். நான் திரும்பி வந்ததும் சந்தோஷமாகத் தான் இருந்தோம். அப்போது அவர் வீ்ட்டில் இருந்து போன் வந்தது. எடுத்துப் பேசிய அவர் டென்ஷன் ஆனார். பாத்ரூம் போவதாக சொல்லிவிட்டு சென்றவரை நீண்ட நேரமாகக் காணவில்லை என்று தேடிப் போனேன். ஆனால் அவர் பாத்ரூமிலேயே இல்லை.

எனது மகளின் படுக்கையறையில் தூக்கில் தொங்கினார். அதைப் பார்த்து அலறினேன். உடனே கத்தியை எடுத்து வந்து கயிற்றை அறுத்து அவரது உடலை கீழே இறக்கினேன். ஆனால் அவரது பெற்றோரோ பாவி என் மகனை கொன்றுவிட்டாயே என்று என்னை திட்டியதால் விரக்தியில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.

முதல் கணவரை விவகாரத்து செய்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நான் வினோத் குமாரிடம் சொல்லியி்ருந்தேன். நான் துபாய் சென்றபோது எனது முதல் கணவரை சந்தித்தாக வந்த தகவல்கள் பொய்யானது. நான் அவரை சந்திக்கவுமில்லை, சந்திக்கவும் மாட்டேன்.

வினோத் குமார் பெற்றோர் என் கையால் சாப்பிட்டுவிட்டு என் மீதே கொலைப் பழி சும்ததுவதி வேதனையாக உள்ளது. நான் எந்த தவறும் செய்யாதவள் என்றார்.

ஒரே மாதிரி வேணாம்.. போரடிச்சிடும்! - இனியா!!!

Wednesday,March,14,2012
மாதிரி வேடங்களில் நடித்தாலும், இழுத்துப் போர்த்திக் கொண்டு வந்தாலும் சினிமாவில் போரடித்துவிடும் என்று கூறியுள்ளார் நடிகை இனியா.

பாடகசாலை என்ற படத்தில் அறிமுகமானவர் இனியா. வாகை சூடவா படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்து பாராட்டுக்களை பெற்றார். மௌன குரு படத்திலும் நல்ல பெயர்.

ஆனால் இரண்டிலுமே இவர் குடும்பப் பாங்காக நடித்திருந்தார். அடுத்து நடிக்கும் பாரதிராஜா படத்திலும் கிராமத்துப் பெண் வேடம்தான் இவருக்கு.

இந்த மாதிரி வேடங்களைத்தான் அவர் விரும்புகிறாரா என்று கேட்டபோது, "அப்படியெல்லாம் யாராவது தவறாக நினைத்துக் கொள்ளப் போகிறார்கள். நானே சொல்ல வேண்டும் என்று இருந்தேன். நல்லவேளை கேட்டுட்டீங்க. நான் எல்லா மாதிரியான வேடங்களிலும் நடிக்க விரும்புகிறேன்.

சமீபத்தில் கவர்ச்சி உடைகளில் வெளியான என்னுடைய புகைப்படங்களை பார்த்து நிறைய பேர் இனியா கவர்ச்சி வேடத்திற்கு தயாராகிவிட்டார் என கூறுகின்றனர்.

ஒரே மாதிரியான கிராமத்து கதாபாத்திரத்தில் நடிப்பதால் மக்களுக்கு அது சீக்கிரமாகவே போராடித்துவிடும். மேலும் அது மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பதால் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று அர்த்தமல்ல. தேவைப்பட்டால் கண்டிப்பாக கவர்ச்சி வேடத்தில் நடிக்க நான் தயார்," என்றார்.

கோலிவுட் படைப்பாளிகளே, மைன்ட்ல வச்சிக்கங்க!

பேச்சை மாற்றிய நடிகை நழுவிய இயக்கம்!!!

Wednesday,March,14,2012
பொருத்தமானவரை பாத்தவுடன் லவ் பண்ணுவேன்னு மூணுஷா நடிகை சமீபத்துல தடாலடி அறிவிப்பை வெளியிட்டாராம்... வெளியிட்டாராம்... இதனால அவருக்கு படங்கள் வர்ற எண்ணிக்கை குறைஞ்சிடுச்சாம். Ôநீ ஏன் இப்படியெல்லாம் பேசுறேÕன்னு நெருக்கமானவங்க அட்வைஸ் பண்ண¤னதைய டுத்து, இப்போ மாத்தி பேசுறாராம். Ôநடிப்புலதான் என் கவனம். கல்யாணமெல்லாம் 2 வருஷம் கழிச்சிதான்Õனு உட்டாலங்கடி பேட்டி தர்றாராம்... தர்றாராம்...

சென்ன பட்டண இயக்கம், அடுத்து இயக்குற படத்தோட ஷூட்டிங்கை பெரும்பாலும் யுஎஸ்ல வைக்கணும்னு தயாரிப்புகிட்ட சொன்னாராம்... சொன்னாராம்... அவரோ, Ôபட்ஜெட் எகிறிடும் தாங்காது. ஷூட்டிங்க சிங்கப்பூரு, மலேசியாவுல நடத்துற மாதிரி பிளானை மாத்துங்கÕன்னு சொல்லிட்டாராம். கஜகர்ணம் போட்டும் தயாரிப்பு பிடிவாதமா மறுத்துட்டாராம். வேறவழியில்லாம இப்போ லொகேஷனை மாத்தி ஷூட்டிங் நடத்துறதுக்கு புதுசா இடம் தேடுறாராம்... தேடுறாராம்...

பிரமாண்ட இயக்கம் திரும்ப படம் தயாரிக்க பயப்படுறாராம்... பயப்படுறாராம்... பட வாய்ப்பு தர்றேன்னு சில அசோசியேட¢களுக்கு சொல்லி இருந்தாராம். அவங்ககிட்ட, Ôபடம் தயாரிக்கிறது டவுட்டுதான். வேற தயாரிப்பை பார்த்துக்குங்கÕன்னு நைசா சொல்லி நழுவியிருக்காராம்... நழுவியிருக்காராம்...

தயாரிப்புக்கு தடைபோட்ட இயக்குனர்!!!

Wednesday,March,14,2012
மிஸ்ஸான கின் இயக்கம் முகத்தை மூடுற படத்தை எடுக்கிறாரு. இதுல ஜீவ ஹீரோவுடைய சூப்பர் மேன் கெட்டப்பை ரகசியமா வச்சிருக்காராம்... வச்சிருக்காராம்... இது பற்றி வெளியில சொல்லக்கூடாதுன்னு பட யூனிட்டுக்கு உத்தரவு போட்டிருக்காராம். இதை இப்போதே வெளியிட்டா நல்ல விளம்பரமா இருக்குமேன்னு தயாரிப்பு தரப்பு சொன்னதாம்... சொன்னதாம்... ஆனா, இயக்கம் தயாரிப்புக்கே தடை போட்டுட்டாராம்... போட்டுட்டாராம்...

சமீர நடிகையை இந்தி பட உலகம் கண்டுக்கிறதே இல்லையாம்... இல்லையாம்... தமிழ்லேயும் வாய்ப்பு இல்லாததால நடிகைக்கு வருத்தமாம். இதனால மல்லுவுட்ல சான்ஸ் பிடிக்க மெனக்கெடுறாராம். லால் நடிகர்கிட்ட அன்பா பேசி, நேரடியாவே வாய்ப்பு வலை வீசினாராம்... வீசினாராம்... நடிகரும் சில தயாரிப்புங்ககிட்ட நடிகையை பற்றி சிபாரிசு பண்ணியிருக்காராம்... பண்ணியிருக்காராம்...

சிம்பல் படத்தை எடுத்த அனீஸான பெண் இயக்குனரு, திரும்ப படம் எடுக்க முயற்சி செஞ்சாரு. அவரோடு சில படங்களுக்காக பாலிவுட் கம்பெனி ஒப்பந்தம் போட்டுச்சி. சிம்பல் அவுட் ஆனதால, கம்பெனி ஜகா வாங்கியிருச்சு... வாங்கியிருச்சு... தனக்கு தெரிஞ்ச சில நடிகர்கள்கிட்ட இயக்கம், கால்ஷீட் கேட்கவும் முயற்சி பண்ணினாராம். ஆனா நடிகருங்ககிட்டேயிருந்து சாதகமான பதில் வரலையாம்... வரலையாம்... இதனால தன்னோட பழைய ஒர்க¢கான காஸ்டியூம் டிசைனுக்கே திரும்பலாமான்னு இயக்கம் யோசிக்கிறாராம்... யோசிக்கிறாராம்...

பாம்புக்கு கிஸ் கொடுத்தது பற்றி கமென்ட் மல்லிகா ஷெராவத்துடன் இந்தி நடிகர் இம்ரான் ஹாஷ்மி மீண்டும் மோதல்!!!

Wednesday,March,14,2012
மல்லிகா ஷெராவத்துக்கும் பாலிவுட் ஹீரோ இம்ரான் ஹாஷ்மிக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேட்டி அளித்த இம்ரான் ஹாஷ்மி, ‘மர்டர்Õ இந்தி படத்தில் தன்னுடன் நடித்த மல்லிகா ஷெராவத்துக்கு முத்த காட்சியில் நடிக்க தெரியவில்லை என்று விமர்சித்திருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இம்ரானின் பேட்டியை அறிந்து கோபம் அடைந்த மல்லிகா, ‘Ôஇம்ரானுடன் முத்தக்காட்சியில் நடித்ததை காட்டிலும் Ôஹிஸ்ஸ்Õ படத்தில் பாம்புக்கு முத்தம் கொடுத்து நடித்ததுதான¢ நன்றாக இருந்தது. இம்ரானைவிட முத்தக்காட்சியில் நடிப்பதற்கு பாம்பு தான் சிறந்ததுÕÕ என்றார். இந்த மோதலுக்கு பிறகு அமைதியாக இருந்த இருவரும் தற்போது மீண்டும் மோதலுக்கு தயாராகி இருக்கிறார்கள். பாம்புக்கு முத்தமிட்டதை புகழ்ந்திருந்த மல்லிகாவுக்கு தற்போது பதிலடி கொடுத்திருக்கார் இம்ரான். ‘பாம்புக்கு முத்தம் கொடுத்தவர், அடுத்து பாம்பாட்டிக்கு முத்தம் கொடுத்து நடிக்கட் டும். இது இன்னும் நன்றாக இருக்கும்Õ என்று மீண்டும் மல்லிகாவை வம்புக்கு இழுத்திருக்கிறார் இம்ரான். இருவருக்கும் படங்கள் இல்லாததால் பப்ளிசிட்டிக்காக இப்படி யோசித்து யோசித்து தாக்கிக் கொள்கிறார்கள் என பாலிவுட் வட்டாரம் கூறுகிறது.

ரீமா கல்யாணத்தில் ஸ்ரேயா ஐட்டம் டான்ஸ்!!!

Wednesday,March,14,2012
ரீமா சென் கல்யாணத்தில் தமிழ் நடிகை ஸ்ரேயா நடனமாடினர். நடிகைகள் சோனியா அகர்வால் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

கடந்த மார்ச் 11-ம் தேதி ரீமா சென்னுக்கும் - ஹோட்டல் அதிபர் ஷிவ் கரன் சிங்குக்கும் திருமணம் நடந்தது.

இதில் பங்கேற்க ரீமா சென்னின் நெருங்கிய தோழிகள் ஸ்ரேயா, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் டெல்லிக்குச் சென்றிருந்தனர்.

வட இந்திய திருமணங்களில் ஆட்டம் பாட்டு என பொழுதுபோக்கு அமர்க்களப்படும். அதிலும் இது ஒரு பிரபல நடிகையின் திருமணம் என்பதால் பல கலைஞர்களும் வந்திருந்தனர்.

திருமண நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடிகை ஸ்ரேயா சரணின் நடனம் இடம்பெற்றது. சிக்னி சமேலி எனும் இந்திப் பாட்டுக்கு அவர் நடனம் ஆடினார். வந்திருந்த நடிகைகள், நடிகர்கள் உள்ளிட்டோர் அனைவரும் தங்கள் இடத்திலிருந்தபடியே உற்சாகத்துடன் ஆடினர்.

நடிகை சோனியா அகர்வாலும் உற்சாகமாக ஆடினார். இதுகுறித்து ஸ்ரேயா கூறுகையில், "ரீமா எனது பெஸ்ட் பிரண்ட். 10 வருடங்களாக நாங்கள் பழகி வருகிறோம். அவரது திருமணத்தில் இதுபோல ஒரு நடனத்தை பரிசாகத் தர விரும்பினேன்," என்றார்.

மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்க நிபந்தனைகள் போட்டதால் திவ்யா நீக்கம்!!!

Wednesday,March,14,2012
மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்கும் படத்துக்கு அதிக சம்பளத்துடன் ஏகப்பட்ட நிபந்தனைகள் போட்டதால் திவ்யா நீக்கப்பட்டார். மலையாளத்தில் மம்மூட்டி நடிக்கும் Ôதப்பனாÕ. இப்படத்துக்கு ஹீரோயினாக நடிக்க பலரிடம் பேசப்பட்டது. கால்ஷீட் பிரச்னையால் சில நடிகைகள் மறுத்துவ¤ட்டனர். தமிழ், கன்னட படங்களில் நடித்து வரும் திவ்யாவிடம் கேட்டபோது, நடிக்க ஒப்புக்கொண்டார். இதனால் அவரிடம் கால்ஷீட் வாங்குவது சம்பந்தமான முதல் கட்ட பேச்சுவார்த்தையை படக்குழு முடித்தது. அதன் பின் சம்பளம் தொடர்பாக பேசப்பட்டபோதுதான் தயாரிப்பாளருக்கு திவ்யா அடுத்தடுத்து அதிர்ச்சிகளை தந்தார். தயாரிப்பாளர் சொன்ன தொகையை விட 2 மடங்கு அதிகமாக சம்பளம் கேட்டாராம் திவ்யா. அத்துடன் எந்த ஊரில் ஷூட்டிங் நடத்தினாலும் பைவ் ஸ்டார் ஓட்டல்களில் தங்க வைக்க வேண்டும். கேரவன் வேண்டும், உதவியாளர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் பேட்டா, தனி மேக்கப் மேன் என திவ்யாவின் நிபந்தனைகள் பட்டியல் நீண்டு கொண்டே சென்றதாம். இதனால் தயாரிப்பாளர் மிலன் ஜலீல், திவ்யாவை படத்திலிருந்து நீக்க¤விடலாம் என கூற, இயக்குனரும் சம்மதித்துவிட்டார். இதையடுத்து சமீரா ரெட்டியிடம் படக்குழு பேசியிருக்கிறார்கள். அவரும் அதிக சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. இறுதியில¢ தெலுங்கில் மார்க்கெட் இழந்த சார்மியை தேர்வு செய்துள்ளனர்.

ஐம்பது வயசாயிடுச்சி... இனி வேணாம்! - தீபா!!!

Wednesday,March,14,2012
எனக்கு ஐம்பது வயதாகிவிட்டது. இனி நடிப்பு வேணாம்னு ஒதுங்கிட்டேன். என் மகன், பேரப்பிள்ளைகளை நடிக்க வைப்பேன், என்கிறார் முன்னாள் நடிகை தீபா.

ரஜினியுடன் ஜானி, பாக்யராஜுடன் முந்தானை முடிச்சு உள்பட ஏராளமான படங்களில் கலக்கியவர் தீபா. தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழி படங்களில் கவர்ச்சி நாயகியாகவும், ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் வலம் வந்தவர். பார்க்க இப்போதும் அதே களையான முகத்தோடு இருந்தாலும், இப்போது பாட்டியாகிவிட்டார்.

தீபாவின் கணவர் ரெஜாய் கல்லூரி பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்று விட்டார். தீபா-ரெஜாய் தம்பதிக்கு ஒரே ஒரு மகன் மட்டும் இருக்கிறார். அவர் கேரளாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மானேஜராக இருக்கிறார். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. மனைவி பெயர், ரஞ்சனி. இவர்களுக்கு ஒரு வயதில் ரீஹான் என்ற மகனும் இருக்கிறான்.

சமீபத்தில் சென்னை வந்திருந்த தீபா, தனது மலரும் நினைவுகளில் மூழ்கிவிட்டார். அவர் கூறுகையில், "எனக்கு இப்போது 50 வயசாகிடுச்சி. ஆனால் நான் இன்னும் இளமையாகவும், அழகாகவும் இருப்பதாக எல்லோரும் பாராட்டுகிறார்கள். அது கடவுளோட கிருபை.

'அந்தரங்கம்' படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானேன். கடைசியாக நான் நடித்த தமிழ் படம், `முந்தானை முடிச்சு.' அதன்பிறகு குடும்பத்தை கவனிக்க வேண்டியிருந்ததால், நடிப்பதை நிறுத்திட்டேன்.

'வேணாம்.. போதும்'

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கல்லூர் என்ற இடத்தில், கணவர் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறேன். இப்போதும் எனக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. எனக்கு குடும்பம் முக்கியம். அதனால் இனிமேல் நடிக்க மாட்டேன். ஜனங்கள் என்னை இன்னும் ஞாபகம் வைத்திருப்பதற்காக நன்றி.

என் மகனுக்கு நடிப்பதில் ஆர்வம் இருக்கிறது. அவனை சினிமாவில் அறிமுகம் செய்ய முடிவு செய்திருக்கிறேன். மகனைப்போல் பேரனையும் சினிமாவில் நடிக்க வைக்க நான் ஆசைப்படுகிறேன். நான் நடிகை ஆனதற்காக ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை. பெருமைப்படுகிறேன்.

பைபிள் பிரசாரம்

இப்போது நடிக்கவில்லை என்றாலும், தியேட்டர்களுக்குப்போய் நிறைய சினிமா பார்க்கிறேன். அங்காடித்தெரு, நாடோடிகள் ஆகிய இரண்டு தமிழ் படங்களையும் சமீபத்தில் பார்த்து ரசித்தேன். என் காலத்து நடிகைகளுடன் தொடர்பில் இருக்கிறேன்.

தினமும் நான் 'பைபிள்' படிக்கிறேன். தியானம் செய்கிறேன். பைபிள் பிரசாரம் செய்து வருகிறேன். மிக சிறந்த சமூக சேவகியாக வரவேண்டும் என்று எனக்கு ஆசை," என்றார்.

கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Wednesday,March,14,2012
* டிஜிட்டல் வடிவில் புதுப்பிக்கப்பட்ட சிவாஜி நடித்த ‘கர்ணன்Õ படம், விரைவில் திரைக்கு வருகிறது.

* டோலிவுட் ஹீரோ அல்லு அர்ஜுனுக்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகமாம். இதனால் மல்லுவுட் நடிகர்களை ஓரம்கட்டிவிட்டு, கேரளா கம்பெனி ஒன்று அல்லுவை அழைத்து சென்று பங்ஷன் நடத்த உள்ளதாம்.

* Ôமாற்றான்Õ படத்தை இயக்கியபடி, ரஜினியை வைத்து இயக்கும் படத்துக்கான கதை விவாதத்திலும் பங்கேற்று வருகிறார் கே.வி ஆனந்த்.

* யுவராஜ் சிங்குடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட பாலிவுட் நடிகை அக்ஷரா கவுடா, தெலுங்கு படமொன்றில் மகேஷ்பாபு ஜோடியாக நடிக்கிறார்.

* விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த மலையாள காமெடி நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார் படிப்படியாக குணம் அடைந்து வருகிறார். ஆனாலும் அவருக்கு செயற்கை சுவாசம் தருவது இன்னும் சில நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

* Ôமுதல்வர் மகாத்மாÕ படம் வரும் 30ம் தேதி ரிலீசாகிறது. அனுபம் கேர் நடித்திருப்பதால் இப்படம் இந்தியில்
டப்பிங் ஆகிறது.

* அஜீத், விஜய் நண்பராக பல படங்களில் நடித்துள்ள ஸ்ரீமன், ‘சமரன்Õ படத்தில் தாய்லாந்தில் வசிக்கும் இந்தியராக நடிக்கிறார். இதற்காக அந்நாட்டு மொழியை பேச கற்றுக்கொண்டாராம்.

* இயக்குனர் ஜனநாதன், தான் சந்திக்கும் புதுமுக இயக்குனர்களை உடனடியாக இயக்குனர்கள் சங்கத்தில் உறுப்பினராக்கி, அதன் மூலம் கிடைக்கும் பலன்களை அடைய வேண்டும் என்று வலியுறுத்துகிறாராம்.

* Ôவேலாயுதம்Õ படத்தை தொடர்ந்து அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் உருவாக்குவதில் பிஸியாக இருக்கிறார் இயக்குனர் ராஜா.

* அமெரிக்காவில் நடக்கும் சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்க வந்த அழைப்பை முதலில் ஏற்றுக்கொண்ட குஷ்பு, பின்னர் அதில் பங்கேற்க முடியாதது பற்றி மெயிலில் தகவல் தெரிவித்தார். அதை அந்த அமைப்பு ஏற்றுக்கொண்டதாம்.

* பாலிவுட்டில் வெவ்வேறு படங்களில் ரன்பீர் கபூருடன் ஜோடியாக நடித்த இலியானா, நர்கீஸ் நெருங்கிய தோழிகளாகிவிட்டார்களாம்.

பில்லா 2 - மெகா விலைக்கு வாங்கியது சன்!!!

Wednesday,March,14,2012
அஜீத் நடிக்கும் பில்லா 2 படத்தின் தொலைக்காட்சி உரிமையை பெரிய விலைக்கு வாங்கியுள்ளது சன் டிவி என செய்திகள் வெளியாகியுள்ளன.

அஜீத் - பார்வதி ஓமனக்குட்டன் நடிப்பில், சக்ரி டோலெட்டி இயக்கியுள்ள பில்லா 2 படம் வரும் கோடையில் வெளியாகிறது.

இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது. இதுவரை அஜீத் படம் எதுவும் இந்த அளவு விலை போனதில்லை என்று கூறும் வகையில், ரூ 6.25 கோடிக்கு இந்தப் படம் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் உலக வெளியீட்டு உரிமை, இந்திய வெளியீட்டு உரிமைகளைப் பெற முன்னணி நிறுவனங்கள் போட்டியிடுகின்றனவாம். யாருக்கு இந்த உரிமை தரப்படும் என்பது இரண்டொரு நாளில் தெரியும்.

ஏற்கெனவே வெளியாகி வெற்றி பெற்ற பில்லா படத்தின் முன் பாகமாக பில்லா 2 எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.