Sunday, May 27, 2012

'கோ' படத்தில் நடித்த நடிகை காஜலை வெப்சைட்டில் விபசார அழகியாக சித்தரித்த கும்பல்!!!

Sunday, ,May, ,27, 2012
சென்னை::'கோ' படத்தில் பெண் நக்சலைட் தீவிரவாதியாக நடித்திருப்பவர் நடிகை காஜல். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற பெயரும் உண்டு. நகைச்சுவை நடிகர் விவேக்குடன் காமெடி காட்சிகளிலும் நடித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து சினிமா நடிகையானவர். இந்நிலையில் இவரை விபசார அழகியாக சித்தரித்து ஒரு கும்பல் வெப்சைட்டில் காஜலின் போட்டோவை வெளியிட்டுள்ளது.

'அதில், கால் கேர்ள்' என குறிப்பிடப்பட்டு காஜலின் செல்போன் நம்பர் இடம் பெற்றிருந்தது. இதனை பார்த்து பலர் போன் செய்து செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளனர். பலர் காஜலின் செல்போனில் ஆபாசமாகவும் பேசி உள்ளனர்.

இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து அவர் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது செல்போனில் ஒருவர் பேசினார். உங்கள் போட்டோவை வெப்சைட்டில் பார்த்தேன் என்று கூறி அசிங்கமாக பேசினார். எனது செல்போனுக்கு பலர் ஆபாச எஸ்.எம்.எஸ்.களையும் அனுப்பினர். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.

செல்போனில் தொல்லை அதிகரித்ததால் எனது செல்போன் எண்ணை மாற்றும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளேன். இதன் காரணமாக நானும் எனது குடும்பத்தினரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எனவே எனது போட்டோவை வெப்சைட்டில் வெளியிட்டு என்னை அசிங்கப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் காஜல் கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

வில்லங்கமான வேடத்தில் அக்ஷயா!!!

Sunday, ,May, ,27, 2012
சென்னை::பட்டிக்காட்டு மாப்பிள்ளை படத்தில் சந்தோஷ் ஜோடியாக நடிக்கிறார் அக்ஷயா. இப்படம் பற்றி இயக்குனர் ஆர்.எம்.ராஜேந்திரன் கூறியதாவது:
சந்தோஷ், அக்ஷயா காதல் ஜோடி. மனைவியை இழந்து குழந்தையுடன் தவிக்கும் மற்றொருவரிடம் அன்பு காட்டுகிறார் அக்ஷயா. இறந்த மனைவி சாயலில் இருந்ததால் அக்ஷயா மீது அவரும் அன்பு காட்டுகிறார். இதை தவறாக புரிந்துகொள்ளும் சந்தோஷ், அக்ஷயாவுடன் பழகியவரை வெட்டிக் கொல்கிறார். அனாதையான குழந்தைக்காக காதலை தியாகம் செய்கிறார் அக்ஷயா. ‘கலாபக் காதலன் படத்தில் அக்கா கணவரை மணக்க துடிக்கும் நெகடிவ் வேடத்தில் நடித்த அக்ஷயா, மறுபடியும் எதிர்மறையாகவேடத்தில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார் என்கிறார்கள்? நடிப்புக்கு வாய்ப்பு அதிகம் இருப்பதால் ஒப்புக்கொண்டார். பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் நடந்துள்ளது. தயாரிப்பு ஜி.நாகராஜ். இசை சூசன்னா. ஒளிப்பதிவு கே.ஜி.மாதவன்.

இந்தி பாஷா பாட்டு ரிலீஸ்... ரஜினி வாழ்த்து!

Sunday, ,May, ,27, 2012
சென்னை::பாட்ஷா படத்தின் இந்திப் பதிப்பான பாஷாவின் ஆடியோ ரிலீஸ் ஸ்டார் கூட்டத்திற்கு மத்தியில் கோலாகலமாக நடந்தேறியது. இந்த விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை. இருப்பினும் விழா சிறப்பாக நடந்தேற வாழ்த்து தெரிவித்திருந்தார்.

தமிழில் வெளியான பாட்ஷா சூப்பர் ஹிட் திரைப்படம் தற்போது பாஷா என்ற பெயரில் இந்தியில் ரிலீஸாகிறது. இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முன்பு அஜய் தேவ்கன் விருப்பம் தெரிவித்திருந்தார். இருப்பினும் இது தற்போது நேரடியாக இந்தியில் டப் ஆகியுள்ளது. இப்படத்தை டிஜிட்டல் முறையில் சீர்திருத்தி பத்ரகாளி ரமேஷ், நரேந்திர சிங் ஆகியோர் இந்தியில் வெளியிடுகின்றனர்.

இப்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில்நடந்தது. இசைத் தட்டுக்களை இசையமைப்பாளர் மான்டி சர்மா வெளியிட அதை நடிகர் பாயல் ரோஹத்தி பெற்றுக் கொண்டார். இதில் ஏராளமான இந்தி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இப்படத்தை டிஜிட்டல் முறையில் சீரமைத்து வெளியிடுகின்றனர். டைட்டில் கார்டு முதல் அனைத்தையும் சரி செய்து நவீன முறையில் மாற்றியுள்ளனர். 5.1 டிஜிட்டல் ஆடியோ முறையில் ஒலி, ஒளியமைப்பு சரி செய்யப்பட்டுள்ளது. தமிழில் இசையமைத்த தேவாவே இந்திப் படத்தின் இசையையும் கவனித்துள்ளார்.

விழாவில் ரஜினி வரலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் ரஜினி வரவில்லை. மாறாக அவரது வாழ்த்துச் செய்தி வந்திருந்தது. மே மாத இறுதியில் படத்தை திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனராம்.

திடீர் குண்டானது பற்றி ஜஸ்வர்யா ராய் விளக்கம்!!!

Sunday, ,May, ,27, 2012
மும்பை::உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்த பிறகு அவர் உடல் எடை கூடியது. சமீபத்தில் கேன்ஸ் பட விழாவில் நவநாகரீக உடை அணிந்து பருமனான உடலுடன் போட்டோவுக்கு போஸ் தந்தார். அந்த படத்தை பார்த்து இது ஐஸ்வர்யா ராயா என்று பலர் முணுமுணுத்தனர்.
இது குறித்து ஐஸ்வர்யாவிடம் கேட்டபோது, ‘என்றைக்குமே எனது இயற்கை தோற்றத்தை மறைத்தது கிடையாது. உணவு வகையிலும் எந்த கட்டுப்பாடும் கடைபிடிக்கவில்லை. குழந்தை பிறந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன். எனக்கு பிடித்த உணவை எப்போதும்போல் விரும்பி சாப்பிடுகிறேன். இப்போதைய தோற்றமும் இயற்கையானதுதான். அதை மறைக்க விரும்பவில்லை என்றார்.
ஐஸ்வர்யாவின் தோற்றம் பற்றி பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா கூறும்போது, ‘ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் பட விழாவுக்கு வந்தபோது தனது புன்னகையாலும், தன்னம்பிக்கையான பேச்சாலும் பலரது இதயத்தை கொள்ளை கொண்டார். சற்று பூசினாற்போன்ற அவரது தோற்றம்கூட வசிகரமாகவே இருக்கிறது என்றார். உடற்பயிற்சி ஆலோசகர் சாயா மெமாயா கூறும்போது, ‘உடல் தோற்றத்தை தாண்டி அவர் எல்லோர் மனதிலும் நிறைந்திருக்கிறார். போட்டோவுக்கு அவரது உருவம் ஒத்துப்போகாமல் இருக்கலாம். ஆனால் தன்னம்பிக்கையான பெண் என்பதற்கு என்றுமே அவர்தான் வழிகாட்டி. மற்றவர்களின் கருத்தை நடிகைகள் ஏற்க வேண்டிய அவசியமில்லை. தங்களுக்கு பிடித்ததைத்தான் அவர்கள் கடைபிடிக்க வேண்டும். அதைத்தான் ஐஸ்வர்யா செய்து வருகிறார் என்றார்.

ஆக்ஷனுக்கு குட்பை சொன்னது ஏன்? 58 வயசாச்சு; எலும்பு முறிஞ்சா தாங்காது: ஜாக்கிசான் பேட்டி!!!

Sunday, ,May, ,27, 2012
கேன்ஸ்::ஐம்பத்து எட்டு வயதாகிவிட்டது. இனி ஆக்ஷன் காட்சியில் நடித்து எலும்புகள் முறிந்தால் உடம்பு தாங்காது என்கிறார் ஜாக்கிசான். அதனால் ஆக்ஷன் படத்துக்கு குட்பை சொல்ல அவர் முடிவெடுத்துள்ளார். சமீபத்தில் ஜாக்கிசான் அளித்த ஒரு பேட்டியில், ‘இனிமேல் சண்டை காட்சிகளில் நடிக்க மாட்டேன். ‘சைனீஸ் ஸோடியக்தான் நான் நடிக்கும் கடைசி ஆக்ஷன் படம் என்று கூறி இருந்தார். இந்நிலையில் பிரான்சில் இரண்டு தினங்களுக்கு முன் நடந்த கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் அவர் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் ஆக்ஷன் படத்துக்கு முழுக்கு போட்டது பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்தபோது, ‘சைனீஸ் ஸோடியக் தான் நான் நடிக்கும் கடைசி ஆக்ஷன் படம். எனக்கு 58 வயதாகிவிட்டது. இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் ஸ்டன்ட் காட்சிகளில் நடித்துக்கொண்டிருக்க முடியும். எலும்புகள் முறிந்தால் உடல் தாங்காது என்றார். ஜாக்கிசானின் இந்த முடிவு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜாக்கிசானின் அதிரடி ஸ்டன்ட் காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது ஒருபுறம் இருந்தாலும் இதுவரை நடித்த ஆபத்தான பல ஸ்டன்ட் காட்சிகள் அவரது உயிரையே குடிக்கும் அளவுக்கு விபத்துகளை ஏற்படுத்தியிருக்கிறது. படங்களில் நடிக்கும்போது சந்தித்த விபத்துகளில் கிட்டதட்ட அவரது உடலில் உள்ள எல்லா எலும்புகளிலும் முறிவு ஏற்பட்டுள்ளது. மாத கணக்கில் சிகிச்சைக்கு பிறகே அவர் குணம் அடைந்திருக்கிறார். 1995ம் ஆண்டு அவர் நடித்த ‘ஆர்மர் ஆப் காட் என்ற படம் ரிலீஸ் ஆனபோது அவரது உடலில் ஏற்பட்ட எலும்பு முறிவு பற்றி ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் ஜாக்கியின் உடலில் எங்கெல்லாம் எலும்பு முறிவு ஏற்பட்டது என்பதுபற்றி படம் வரைந்து பாகங்கள் குறிக்கப்பட்டிருந¢தது. ‘ஆர்மர் ஆப் காட் படத்தில் உயரமான இடத்திலிருந்து குதிக்கும் காட்சியில் மரத்தை பிடிக்க வேண்டும். காட்சிப்படி, அவர் குதித்தபோது மரத்தை பிடிக்க தவறவிட்டார். அவரது தலை நேராக தரையில் மோதியது. இதில் அவரது மண்டை உடைந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார். ‘ஹூ ஆம் ஐ, ‘சூப்பர் காப், ‘வின்னர்ஸ் அண்ட் சின்னர், ‘போலீஸ் ஸ்டோரி, ‘புராஜெக்ட் ஏ என அவர் நடித்த ஆக்ஷன் படங்கள் புகழ்பெற்றவை.