Wednesday, March 28, 2012

கோட்-சூட்டு போட்டு அட்டகாசமாக இசையமைக்கும் இளையராஜா!!!

Wednesday,March,28,2012
டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன், ஜீவா-சமந்தாவை வைத்து இயக்கி வரும் புதிய படம் "நீ தானே என் பொன் வசந்தம்". அட்டகாசமான லவ் ஸ்டோரியாக உருவாகி வரும் இப்படத்திற்கு இசைஞானி இளையாராஜா இசையமைத்து வருகிறார். வழக்கமாக கவுதம் தன்னுடைய படங்க‌ளுக்கு ஹாரிஸ், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரை வைத்து தான் இசையமைப்பார். ஆனால் இம்முறை முதன்முறையாக இளையராஜாவுடன் கை கோர்த்து உள்ளார். இளையராஜாவின் தீவிர ரசிகரான கவுதம், அவரது இசையமைப்பில் தன்னுடைய படம் இருக்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசைப்பட்டு வந்தார். அது இப்போது தான் நனவாகி இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் இசைகோர்ப்பு லண்டனில் நடந்து வருகிறது. இதற்காக இளையராஜா, கவுதம் மேனன் ஆகி‌யோர் லண்டனில் முகாமிட்டுள்ளனர். எப்பவும் வெண்ணிற ஆடையை மட்டுமே அணியும் இசைஞானி, இப்போது முதன்முறையாக கோட்-சூட்டு எல்லாம் அணிந்து ரொம்பவே வித்தியாசமாக, அதுவும் அமர்களமாக காணப்படுகிறார். எப்பவும் வெள்ளை நிற ஆடையை அணியும் இளையராஜா, இப்‌போது ‌கோட்-சூட்டுடன் வித்தியாசமாக காணப்படுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 3 படத்திற்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு!!!

Wednesday,March,28,2012
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 3 படத்திற்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி இருக்கும் முதல் படம் 3. தன்னுடைய முதல்படத்‌திற்கே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி விட்டார் ஐஸ்வர்யா தனுஷ். இதற்கு முக்கிய காரணம் அப்படத்தில் உள்ள கொலவெறி பாடல் தான். புதுமுகம் அனிருத் இசையமைப்பில், தனுஷே எழுதி, பாடியிருக்கும் இப்பாட்டு வெளியான இதுநாள் வரை கிட்டத்தட்ட 50 மில்லியன் பேர் வரை பார்த்து ரசித்துள்ளனர். மார்ச் 30 முதல் உலகெங்கும் ரிலீஸாக ஆக இருக்கும் 3 படத்தை சமீபத்தில், நடிகர் கமல்ஹாசனுக்கு பிரத்யேமாக திரையிட்டு காட்டியுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ். படத்தை பார்த்து பிரமித்து போன கமல், ஐஸ்வர்யாவின் இயக்கத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்து இருக்கிறார்.

பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் அமீர் அவுட்...!!!

Wednesday,March,28,2012
பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் அமீர் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. மாறாக அவருக்கு பதில் பாரதிராஜாவின் வாரிசான மனோஜ் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் இமயம் பாரதிராஜா தன்னுடைய கனவு படமான அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தை தேனியில் உள்ள தனது சொந்த கிராமத்தில் இயக்கி வருகிறார். "கோ" கார்த்திகா, இனியா ஆகியோருடன் புதுமுகம் லெட்சுமணன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தில் கட்டுவிரியன் எனும் அமீர் கேரக்டருக்கு மட்டும் ஆரம்பத்தில் இருந்தே பஞ்சாயத்து நீடிக்கிறது. முன்னதாக அமீர் கேரக்டரில் பார்த்திபன் தான் நடிப்பதாக இருந்தார். ஆனால் ஏனோ தெரியவில்லை அவர் விலக அமீரை தேர்ந்தெடுத்து போட்டோ சூட் எல்லாம் நடத்தி, அதில் திருப்தியடைந்து படத்தில் பாதி‌ காட்சியையும் படமாக்கி முடித்து விட்டார் பாரதிராஜா.

இந்நிலையில் பெப்சி தொழிலாளர்கள் சம்பள பிரச்னையில் தயாரிப்பாளர்களுக்கும், அமீருக்கு முட்டல் மோதல் இருந்து வருகையில், அந்த மோதல் பாரதிராஜாவிடமும் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அமீர் இப்படத்தில் இருந்து விலக போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இப்போது அமீர், இப்படத்தில் இருந்து விலகியிருப்பது உறுதியாகிவிட்டது. இதனை பாரதிராஜாவே தெரிவித்துள்ளார். மேலும் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் கதையில் செய்யப்பட்ட சில மாற்றங்கள் காரணமாக அமீர் இப்படத்தில் நடிக்கவில்லை என்றும், எனது அடுத்த படத்தில் அமீர் நிச்சயம் இடம்பெறுவார் என்றும் மற்றபடி அமீர் நீக்கத்திற்கான காரணம் பெப்சி தொழிலாளர் சம்பள பிரச்னை இல்லை என்றும் கூறியுள்ளார்.

இதனிடையே அமீருக்கு பதிலாக, அந்த கேரக்டரில் தனது வாரிசான மனோஜை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறாராம் பாரதிராஜா. அதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்பதால், அமீரின் கேரக்டரில் யார் நடிக்க போகிறார் என்பது இன்னும் குழப்பமாகவே இருக்கிறது.

மனைவி இயக்கம் திடீர் முடிவு!!!

Wednesday,March,28,2012
புதுஇயக்கங்களுக்கு தஞ்சம் கொடுத்த சூப்பர் தயாரிப்பு இப்ப டோலிவுட்லதான் கவனமா இருக்காராம்... இருக்காராம்.. சமீபத்துல கோலிவுட்ல இயக்கறதுக்கு சான்ஸ் கேட்டு வந்த ஒருத்தருக்கு வாய்ப்பு கொடுக்க முடிவு பண்ணாராம். மறுநாளே அவர் இதுவேணும், அது வேணும்னு அங்கிருந்தவங்ககிட்ட ஆர்டர் போட ஆரம்பிச்சிட்டாராம். இது கேள்விபட்ட தயாரிப்பு புதுசா வந்தவரை அனுப்பிவச்சிட்டு இப்பத்திக்கு டோலிவுட்டே போதும்னு கைய இறுக்கி மூடிட்டாராம்... மூடிட்டாராம்...

ஹஸ்பண்ட் ஹீரோவ இயக்குன ஐஸ்ஸான மனைவி இயக்கம் மீண்டும் அவரை வெச்சி இப்போதைக்கு படம் இயக்கறதில்லைன்னு முடிவு பண்ணிருக்காராம்... இருக்காராம்... ஹிட் ஜோடியாயிட்ட உங்கள வெச்சித்தானே அடுத்தடுத்து தயாரிப்புங்க படம் இயக்க கேப்பாங்கன்னு சொன்னா,‘மறுபடியம் ஒரே முத்திரைல என்னோட படம் இருக்காது. அடுத்த ஸ்கிரிப்ட்ல வேற ஹீரோவ வச்சி வேற ஸ்டைல்ல இயக்கப்போறே’னு பதில் சொல்றாராம். ஹஸ்பண்ட் ஹீரோவும் இப்பத்திக்கு இந்தி படத்துல பிஸியா இருக்கறதால மனைவி முடிவுக்கு ஓ.கே. சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்...

லவ் இயக்கம் எப்பவோ இயக்குன காலேஜ் பட பிளாப்க்கு காரணம் இருக்குன்னு இப்ப சொல்றாராம்... சொல்றாராம்... அந்த படத்தோட ஸ்கிரிப்ட் முதல்ல வேறமாதிரி தயாரிச்சிருந்தேன். படம் முடியறதுக்குள்ள நிஜ சம்பவத்தோட தீர்ப்பு வந்ததால ஸ்கிரிப்ட்ட மாத்த வேண்டியதா போச்சி. அதால நெனச்சபடி எடுக்க முடியலே. பிளாப்புக்கு இதான் ரீசன்னு சொல்றாராம். இத்தனை நாள் சும்மா இருந்துட்டு இப்போ ஏன் இந்த படம் பற்றி இயக்கம் பேசுறாருன்னு கோடம்பாக்கத்துல கேள்வி எழுப்புறாங்களாம்... எழுப்புறாங்களாம்...

கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Wednesday,March,28,2012
* அமிதாப் நடித்த ‘சன்ஜீர்' படத்தின் இந்தி, தெலுங்கு ரீமேக்கில் ராம் சரண் தேஜாவுடன் நடிக்கிறார் பிரகாஷ்ராஜ்.

* புது இயக்குனர் சிவஞானம் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ராதிகா ஏப்ட்.

* அப்பாஸ் மனைவி எரும் அலி நடத்தும் காஸ்டியூம் ஷாப்பிற்கு ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஜெயம் ரவி தங்கள் மனைவியுடன் விசிட் செய்தனர்.

* கவுதம் மேனன் இயக்கும் ‘நீ தானே என் பொன் வசந்தம்' படத்தின் பாடல் கம்போசிங்கை லண்டனில் நடத்துகிறார் இளையராஜா.

* பிரபு சாலமன் இயக்க விக்ரம் பிரபு நடிக்கும் ‘கும்கிÕ படத்துக்கு டி.இமான் இசை அமைக்கிறார்.

பெப்சி - தயாரிப்பாளர் பிரச்னையால் வாய்ப்பை இழந்தார் பிந்து மாதவி!!!

Wednesday,March,28,2012
பெப்சி, தயாரிப்பாளர்கள் மோதலால் படப்பிடிப்புகள் தடைபட்டுள்ளது. இந்நிலையில் இப்பிரச்னையால் ஒப்பந்தமான பட வாய்ப்பை இழந்துள்ளார் பிந்து மாதவி.
'வெப்பம்', 'கழுகு' படங்களில் நடித்திருப்பவர் பிந்து மாதவி. சீனு ராமசாமி இயக்கும் 'நீர் பறவை' படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தமானார். இதன் ஷூட்டிங் இம்மாதம் தொடங்க இருந்தது. ஆனால் சம்பள விவகாரம் தொடர்பாக பெப்சி அமைப்புக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. மே 2ம் தேதி முதல்தான் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கப்பட உள்ளன. இதனால் 'நீர் பறவை' ஷூட்டிங்கை தள்ளிவைக்க படக்குழு முடிவு செய்தது. அந்த நேரத்தில் தெலுங்கு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதால் 'நீர் பறவை' படத்தில் நடிக்க முடியாத சூழல் பிந்து மாதவிக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர் படத்திலிருந்து விலகியுள்ளார். இது பற்றி சீனு ராமசாமி கூறுகையில்,'ஸ்டிரைக் பிரச்னையால் ஷூட்டிங் தள்ளிப்போகிறது. அந்த நேரத்தில் கால்ஷீட்டை மாற்றியமைக்க முடியாத நிலையில் பிந்து மாதவி இருக்கிறார். இதனால் வேறு நடிகையை ஒப்பந்தம் செய்கிறோம்' என்றார். இப்போது பிந்து மாதவிக்கு பத¤லாக 'நீர் பறவை' படத்தில் சுனேனா நடிக்க உள்ளார்.

பிறந்தநாளன்று துள்ளி விளையாடிய பிரகாஷ்ராஜ்!!!

Wednesday,March,28,2012
நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என்று பன்முகம் கொண்ட பிரகாஷ் ராஜ் தன்னுடைய பிறந்தநாளை ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து கொண்டாடி இருக்கிறார். டைரக்டர் வின்சென்ட் செல்வா இயக்கி வரும் புதியபடம் 'துள்ளி விளையாடு'. இப்படத்தின் நாயகனாக புதுமுகம் யுவராஜ் அறிமுகமாகிறார். இப்படத்தின் முக்கிய கேரக்டரில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் சென்னை அருகேயுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து வருகிறது. நேற்று பிரகாஷ் ராஜுக்கு பிறந்தநாள். அவருடைய பிறந்தநாளை ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாட நினைத்த படக்குழுவினர், பிரகாஷ் ராஜுக்கு தெரியாமல் சஸ்பென்ஸாக கேக் எல்லாம் ஆர்டர் பண்ணி வைத்திருந்தனர். பின்னர் பிரகாஷ் ராஜை அழைத்து கேக் வெட்ட வைத்து, அவருடைய பிறந்தநாளை ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் படக்குழுவினர்.
வாழ்த்துகள் செல்லம்.....!

தோஷம் பிடிக்குமளவுக்கு நடக்கும் தமன்னாபிஷேகம்!!!

Wednesday,March,28,2012
புழலேரி உடைஞ்சா கூட அதுல நாலு ஃபிகர்களை புரட்டி எடுத்து அதையும் ஒரு ஃபுட்டேஜ் ஆக்கிறாலாமா என்ற நினைப்புதான் இருக்கும் கமர்ஷியல் இயக்குநர்களுக்கு. தன் படங்களில் எல்லாம் ஒரு மழைப்பாடல் இருந்தால் அந்த படம் ஹிட் என்று தமன்னா நம்புகிறாரோ இல்லையோ? அவரை வைத்து படம் எடுக்கும் டைரக்டர்கள் நம்புகிறார்கள். இந்த பாடாவதி சென்ட்டிமென்ட் படுத்துகிற பாட்டில், தனது மூக்கு பிரதேசமே 'சிவந்தமண்' ஆகிற அளவுக்கு ஜலதோஷம் பிடித்து திரிகிறார் தமன்னா, அதுவும் ஒவ்வொரு படத்திலும். (யாராவது கர்சீப் கம்பெனிக்காரன் விளம்பரத்தில் நடிக்க கூப்பிடுவான்) 'பையா' படத்தில் அவருக்கு ஒரு மழைப்பாட்டு வைத்திருந்தார் லிங்கு. அந்த படம் மகா மெஹா ஹிட். இந்த சென்டிமென்ட் அப்படியே நாடு விட்டு நாடு ஷிப்ட் ஆகி ஆந்திராவிலும் பரவிவிட்டதாம். அவர் நடிக்கும் எல்லா படத்திலும் லாரி லாரியாக தண்ணீரை அள்ளிவந்து தமன்னாபிஷேகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சென்டிமென்ட் பேத்தல்.. படுத்தியெடுக்கிறாய்ங்கப்பா.....!

டான்ஸ் மாஸ்டர் வீட்டில் பார்ட்டி : வாரம்தோறும் நடிகைகள் சந்திப்பு!!!

Wednesday,March,28,2012
வாரம்தோறும் பிரபல நடிகைகள் தனி பார்ட்டி நடத்தி, தங்கள் வாழ்க்கை ரகசியங்களை விவாதிக்கும் புது டிரெண்ட் கோலிவுட்டில் பரவி உள்ளது. ஹீரோயின்கள் ஒருவரையொருவர் முறைத்துக்கொண்டு விலகிய காலம் மாறி இப்போது வாரம்தோறும் தனி பங்களாவில் சந்தித்து பார்ட்டி கொடுக்கும் நிலை உருவாகி இருக்கிறது. இதுபோல் ஒரு பார்ட்டி, சத்தம் இல்லாமல் சமீபகாலமாக சென்னையில் டான்ஸ் மாஸடர் பிருந்தாவின் பங்களாவில் நடக்கிறது. கடந்த வாரம் நடந்த பார்ட்டியில் குஷ்பு, த்ரிஷா, சுகாசினி, பிரியா ஆனந்த், ஐஸ்வர்யா தனுஷ், நடன இயக்குனர் பிருந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒருவரையொருவர் கட்டி அணைத்து வரவேற்றுக்கொண்டவர்கள், பின்னர் மனம் விட்டு பேசத் தொடங்கினார்கள். தொடர்ந்து அவர்களுக்குள் விளையாட்டு நடத்தி ஜாலியாக பொழுதை கழித்தனர். பின்னர் நடந்த விருந்தில் கலந்துகொண்டனர். இது குறித்து த்ரிஷா கூறும்போது, ‘எனக்கு சில நெருங்கிய தோழிகள் இருக்கிறார்கள். நீண்ட நாட்களாக அவர்களை எனக்கு தெரியும். அவர்களுடன் நேரத்தை செலவழிக்க வேண்டியது மிக அவசியம் என்று கருதுகிறேன். ஏனென்றால் அவர்கள் எனக்கு அவ்வளவு முக்கியமானவர்கள். இந்த சந்திப்பின்போது விருந்து உண்டு ஜாலியாக இருப்போம். ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை எப்படி செல்கிறது என்பதை பகிர்ந்துகொள்வோம். சீனியர் நடிகைகள் அதற்கேற்ப அட்வைஸ் தருவார்கள். ஆனால் சினிமா பற்றி இதில் பேச மாட்டோம்' என்றார்.

ஊட்டியில் ஷூட்டிங்கின்போது மயங்கி விழுந்த ராதிகா ஆப்தே!!!

Wednesday, March 28, 2012
அசப்பில் பார்த்தால் ஐஸ்வர்யா ராயின் க்ளோனிங் மாதிரி தெரியும் தோனி ஹீரோயின் ராதிகா ஆப்தேவுக்கு இப்போது தமிழில் ஏகப்பட்ட வாய்ப்புகள்.

அதில் ஒன்று வெற்றிச் செல்வன். இந்தப் படத்தில் அஜ்மலுக்கு ஜோடியாக நடிக்கிறார் ராதிகா ஆப்தே.

‘வெற்றிசெல்வன்’ படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து வருகிறது. இதில் நாயகனாக நடிக்கும் அஜ்மல் மற்றும் ராதிகா ஆப்தே நடிக்கும் காட்சிகளை படத்தின் இயக்குனர் ருத்ரன் படமாக்கிக் கொண்டிருந்தார்.

நள்ளிரவு 2 மணி வரை படப்பிடிப்பு நடந்தது. அப்போது ஊட்டியில் கடும் குளிர் நிலவியதால் ராதிகா ஆப்தே நடுங்கினார். அவருக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சியானார்கள். டாக்டரை அழைத்து வந்து முதல் உதவி சிகிச்சை அளித்தார்கள்.

இதையடுத்து படப்பிடிப்பு சில மணி நேரங்கள் ரத்து செய்யப்பட்டது. பின்னர் நினைவு திரும்பி சகஜ நிலைக்கு வந்த ராதிகா ஆப்தே கூறும்போது, ஊட்டியில் இவ்வளவு குளிர் இருக்கும் என நினைக்கவில்லை. இரவு படப்பிடிப்பில் இன்னும் அதிக பனி பெய்ததால் தாக்குப்பிடிக்க முடியாமல் மயங்கி விழுந்து விட்டேன்," என்றார்.

ஏங்க ருத்ரன்... அழகான பெண்களை இப்படியா வாட்டுவது!

விந்தியா விவாகரத்து வழக்கு செம்டம்பருக்கு தள்ளி வைப்பு!!!

Wednesday, March 28, 2012
விவாகரத்து கோரி விந்தியா தாக்கல் செய்த வழக்கு வரும் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை பானுபிரியாவின் தம்பி கோபி என்கிற கோபால கிருஷ்ணனை நடிகை விந்தியா திருமணம் செய்தார்.

திருமணமாகி சில மாதங்களில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி மனுதாக்கல் செய்தனர். பல மாதங்கள் அந்த வழக்கு நிலுவையில் இருந்தது.

இந்த நிலையில் பரஸ்பரம் 2 பேரும் பிரிந்து செல்ல முடிவு செய்து, அதற்கான புதிய மனுவை சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இணைந்து தாக்கல் செய்தனர். ஒருவரை ஒருவர் சுமுகமாக பிரிந்து செல்ல இருப்பதால், தங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று அதில் கோரியுள்ளனர்.

இந்த மனுவை சென்னை குடும்பநல முதன்மை நீதிமன்ற நீதிபதி ராஜா சொக்கலிங்கம் விசாரித்தார். பரஸ்பரம் பிரிந்து செல்லக்கோரும் வழக்கு என்பதால், விசாரணையை வரும் 6மாதங்கள் கழித்து செப்டம்பர் 26-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

ஆச்சி வீட்டுக்கு வந்திட்டாங்க...!

Wednesday, March 28, 2012
முழங்கால் வலி பிரச்சினைக்காக மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்று வந்த நடிகை மனோரமா, நேற்று வீடு திரும்பினார். நடிகை மனோரமாவுக்கு ஏற்கனவே முழங்கால் வலி காரணமாக, அவருடைய 2 கால்களிலும் அறுவை சிகிச்சை நடந்தது. பின்னர் அவர் காளஹஸ்தி சென்றபோது, ஓட்டலில் இருந்த குளியல் அறையில் தவறி விழுந்தார். அதில், அவருடைய தலையில் அடிபட்டது. இதற்காக, அவருடைய தலையில் 'ஆபரேஷன்' நடைபெற்ற து. ஆபரேஷனுக்குப் பின், அவர் குணம் அடைந்தார். இந்த நிலையில், அவருக்கு மீண்டும் முழங்கால் வலி ஏற்பட்டது. சிகிச்சைக்காக சில நாட்களுக்கு முன்பு மனோரமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 8 நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றபின், நேற்று அவர் வீடு திரும்பினார். நல்லா ரெஸ்ட் எடுங்க ஆச்சி.....

கடலன்னை கருணை கிடைத்ததா பாக்யராஜுக்கு?!!!

Wednesday, March 28, 2012
இராம நாராயணன், பேரரசு போன்றவர்களிடம் பணியாற்றிய வீ.ஜே.ஜெகநாதன் இயக்கும் படம் 'இவனும் பணக்காரன்'. 'அப்பாவி' படத்தில் கௌதம் என்ற பெயரில் நடித்து பெயர் வாங்கிய ஹீரோ இப்படத்திற்காக சிதேஷ் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டு நடிக்க, அவருக்கு ஜோடியாக கனியா நடிக்கிறார். படத்தின் இரண்டாவது பாதியில் நாயகன் என்கிற அளவிற்கு முக்கியத்துவப் பாத்திரத்தில் கே.பாக்யராஜ் நடிக்கிறார். கே.பாக்யராஜை வைத்து வேதாரண்யத்தில் படப்பிடிப்பை நடுக்கடலில் நடத்திக் கொண்டிருந்தார் இயக்குநர். ஒரு படகிலிருந்து குதித்து நீந்தி இன்னொரு படகில் பாக்யராஜ் ஏறும் காட்சி அது. அதற்குத் தயார் நிலையில் இருந்தபோது ஒரு விசைப்படகு விரைந்து வந்து கொண்டிருந்தது. அதிலிருந்த மீனவர்கள் கத்திக் கொண்டிருந்தார்கள். நான்கு மீனவர்கள் நீச்சலடித்து வந்து, 'சிங்கள இராணுவம் எங்களைத் துரத்தி வருகிறது, நீங்கள் ஷூட்டிங் நடத்தினால் மீனவர்கள் என்று உங்களையும் சுட்டுவிடுவார்கள்' என்று எச்சரிக்கைத் தந்தனர். தலை தப்பினால் போதும் என்று ஷூட்டிங்கை பேக்கப் செய்து வேகமாகப் பயணம் செய்து கரையேறினார்கள். 'அன்று நாங்கள் பிழைத்தது கடலன்னை மற்றும் கடவுளின் கருணை என்று நெகிழ்வுடன் கூறுகிறார் இயக்குநர்.

நாகப்பட்டினம் ரோட்டில் ஒரு ரவுடி கும்பல் நாயகன் சிதேஷை துரத்திக் கொல்ல வர அவர் தப்பிப்பதற்காக பாலத்திலிருந்து குதித்து கடலில் விழுந்து விடுகிறார். உப்பளம் அருகே கடலில் ஒதுங்கிய சிதேஷை மருத்துவம் படிக்கும் நாயகி கனியா காப்பாற்றி வைத்தியம் செய்கிறார். குணமான சிதேஷை அனுப்ப முயன்ற கனியாவின் அப்பாவைப் பார்த்தவுடன் சுயநினைவு மறந்தவர் போல் நடித்து அங்கேயே தங்குகின்றார் நாயகன். பிறகு என்ன என்பது பரபரக்கும் க்ளைமாக்ஸ்" என்கிறார் கதைப்பற்றி கூறும் இயக்குநர் வி.ஜே.ஜெகநாதன். ஏமாற்றத்தில் இருக்கும் கனியாவை சிதேஷ் எப்படி சமாதானப்படுத்தினார், அவர் யார்? ஏன் பொய் சொல்லி தங்கினார்? அவர்கள் எப்படி அவனை ஏற்றுக் கொண்டார்கள் என்பது மீதிக்கதை. இந்த படத்தில் சிதேஷ், கனியா, கே.பாக்யராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, மனோபாலா, ரமேஷ் கண்ணா, ரவிமரியா, 'சங்கர் குரு' ராஜா, பாரதிகண்ணன், எஸ்.எஸ்.ஸ்டேன்லி, ரேகா, ஸ்ரீரஞ்சனி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இசை: ஸ்ரீகாந்த் தேவா. ஒளிப்பதிவு: கே.சி.ரமேஷ். எடிட்டிங்: சுரேஷ் அர்ஸ். கலை: சீனு. நடனம்: சிவசங்கர், எஸ்.எல்.பாலாஜி, பாப்பி, ஏ.ஆர்.ஜெகன். சண்டைப்பயிற்சி: தளபதி தினேஷ். பாடல்கள்: வாலி, நா.முத்துக்குமார். வசனம்: பேரரசு. கதை, திரைக்கதை, இயக்கம்: வீ.ஜே.ஜெகநாதன். தயாரிப்பு: எம்.சீனிவாசன். ஜே.ஜே.ஸ்வீட் என்டர்டெய்ன்மெண்ட் பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேதாரண்யம், வேளாங்கன்னி, கோடியக்கரை, நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் நடைபெற்றிருக்கிறது. விரைவில் திரைக்கு வர விறுவிறுப்பாக தயாராகி வருகிறது 'இவனும் பணக்காரன்'. யம்மாடியோவ்.... அசுரனுக்கிட்டயிருந்து தப்பிச்சிருக்கீங்க... இப்ப புரிஞ்சிருக்குமே மீனவர்களின் கஷ்டம். நித்தம் நித்தம் உயிருக்கு போறாடும் இவுங்களுக்காக என்ன செய்ய போறீங்க சார்..?

சொந்தப்படத்துக்கு ஓகே சொன்ன ஷங்கர்!!!

Wednesday, March 28, 2012
பட்ஜெட்டில் துண்டு விழுந்தால் கூட பரவாயில்லை. 'குண்டு' விழுந்தால் என்னாவது? அப்படி ஒரு அதிர்ச்சியான குண்டடிக்கு ஆளாகி தனது அலுவலகத்திற்கு பூட்டு போட்டவர்தான் பிரபல இயக்குநர் ஷங்கர். 'வெயில்', 'ஈரம்' தவிர இவர் தயாரித்த மற்ற படங்கள் எல்லாமே ஷங்கரின் உள் பாக்கெட்டையும் சேர்த்து காலி பண்ணியது. அதிலும் பிரபல இயக்குநர் ஒருவரை நடிக்க வைத்து இவர் தயாரித்த படத்தில் பெருத்த பிரச்சினையை சந்தித்தாராம் ஷங்கர். திடீரென்று அந்த கரகரக் குரல்காரர் ஒரு கோடி சம்பளம் கேட்க, நயன்தாராவை டூ பீஸ்ல நடிக்க வச்சாலே இவ்வளவு கேட்க மாட்டாரே என்று குழம்பிப் போனார் ஷங்கர். இருந்தாலும் கேட்பவர் இமயமாச்சே... கொடுக்காமலிருந்தால் குரு துரோகத்திற்கு ஒப்பாகிவிடும் என்பதாலேயே பைசா குறையாமல் அழுது வைத்தார். படக்கம்பெனியை அவர் மூட இந்த ஒரு விஷயம் போதுமானதாக இருந்தது. அதன்பின் எந்த இயக்குநராவது சொந்தப்படம் எடுக்கிறார் என்று குருவியார் பதில்களில் படிக்க நேர்ந்தால் கூட கண்ணை மூடி 'கடவுளே... அவரை காப்பாற்றுமப்பா காப்பாற்றும்' என்று பலம் கொண்ட மட்டும் ஜெபிக்கிற அளவுக்கு நிலைகுலைந்து போவார். இரும்புக்கோட்டையின் கதவை எறும்புகள் தட்டிய மாதிரி அதன்பின் ஷங்கரை தட்டி தட்டி ஓய்ந்து போன புது இயக்குநர்கள் பலர், அந்த தெரு வழியே கூட இப்போது நடப்பதில்லை. இந்த நேரத்தில்தான் ஒரு புது இயக்குநர் ஷங்கரிடம் கதை சொல்லி, அவரது பிடிவாதத்தின் மீது கோடாலியை போட்டிருக்கிறார். 'இதுவரைக்கும் வேணாம்னு ஒதுங்கியிருந்தேன். உங்க கதை திரும்பவும் என்னை சொந்தப்படம் எடுக்க சொல்லுது. நம்பிக்கையோட இருங்க. நல்ல செய்தி வரும்' என்று அனுப்பி வைத்திருக்கிறார். அந்த நல்ல செய்தியை அறிவிக்க இன்னும் நாலைந்து மாதங்களாவது ஆகும் போல தெரிகிறது. சுருட்டி வச்ச திரைய தூசி தட்டுங்க....

'பில்லா-2' ட்ராக் ரெடி!!!

Wednesday, March 28, 2012
'பில்லா-2' பாடல் வெளியீடு எப்போனு ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கிடையில் 'பில்லா-2'ல் இடம்பெறும் அனைத்து டிராக்குகளையும் மாஸ்டரிங் செய்துவிட்ட யுவன்ஷங்கர் ராஜா, அவற்றை அஜித்துக்கு கேட்கக் கொடுத்திருக்கிறார். மொத்தமுள்ள 6 டிராக்குகளில் ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்டிருக்கும் சேஸ் காட்சிகளுக்கு யுவன் இசையமைத்து உள்ள பின்னணி இசையை கேட்டு வியந்து போய் பாராட்டியிருக்கிறாராம் அஜித்! 'பில்லா-2'ல் இடம்பெரும் 6 டிராக்குகளின் பட்டியல் இதோ....

1. பில்லா தீம் பாடல் - பாடியவர் ராகுல் நம்பியார்

2. தோட்டா போல் - பாடியவர்கள் ஷங்கர் மகாதேவன், நேஹா பாஸ்

3. உன் பொன்மேனி ஐயிட்டம் பாடல் - பாடியவர்கள் கார்த்திக், ஸ்ரேயா கோஷல், யுவன்

4. புதிய நிழல் - பாடியவர்கள் ஷங்கர் மகாதேவன், ராகுல் நம்பியார், தன்விஷா

5. தி ஃபைனல் சேஸ் - பாடியிருப்பவர்கள் தன்விஷா, சுசித்திரா

6. டான் டான் - பாடியவர் க்ரிஷ்

புதிய நிழல்.... வெயில் எப்புடி..?

விபத்தில் சிக்குவோருக்கு உதவ மோகன்லால் புதிய ஏற்பாடு!!!

Wednesday, March 28, 2012
விபத்தில் சிக்குபவர்கள், நோயாளிகளுக்கு உதவ நடிகர் மோகன்லால் புதிய ஏற்பாடு ஒன்றினைச் செய்துள்ளார்.

இதற்காகவே இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ள மோகன்லால், தொண்டு நிறுவனங்கள் சிலவற்றோடும் இதற்காக கைகோர்த்துள்ளார்.

இந்தியாவில் எந்த மூலையில் இருப்பவர்களுக்கு ரத்தம் வேண்டுமாமானாலும் மோகன்லாலின் இந்த வெப்சைட் மூலம் தொடர்பு கொள்ளலாம். எஸ்.எம்.எஸ்., இ-மெயில், டெலிபோன் மூலமும் தொடர்பு கொள்ளலாம். கட்டணம் கிடையாது. ரத்தம் கொடுக்க விரும்புபவர்களும் இப்படி தொடர்பு கொள்ளலாம்.

இந்த இணையதள முகவரி
www.jipmer-edu.in ஆகும்.

இதுகுறித்து மோகன்லால் கூறுகையில், "ரத்ததானத்துக்கு உதவும்படி எனக்கு பல வருடங்களாக எஸ்.எம்.எஸ்.கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே அவசரமாக ரத்தம் தேவைப்படுவோருக்கு உதவும் வகையில் இந்த வெப்சைட்டை துவங்கி உள்ளேன்," என்றார்.

விருந்தில் புறக்கணிப்பு: ஆர்யாவுடன் மோதலா? அமலாபால் விளக்கம்!!!

Wednesday,March,28,2012
ஆர்யா, அமலாபால் நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்தி பரவியுள்ளது. ஆர்யா புது வீட்டில் குடியேறியதற்காக நெருங்கிய நண்பர்களை அழைத்து விருந்து கொடுத்தார். இதில் நயன்தாரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆனால் அமலாபாலை அழைக்காமல் ஒதுக்கி விட்டதாகவும் கூறப்பட்டது.

ஆர்யாவும் அமலாபாலும் வேட்டை படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவரும் நெருக்கமான நண்பர்களானார்கள். ஒருவரையொருவர் புகழ்ந்தும் பேசி வந்தனர். மீண்டும் இருவரும் ஜோடியாக நடிக்கப் போவதாகவும் கிசு கிசுக்கள் பரவின.

இந்த நிலையில்தான் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. தனது புதுப்படங்களுக்கு அமலாபாலுக்கு பதில் நயன்தாராவை ஜோடியாக்கும்படி நிர்ப்பந்திக்கிறாராம்.

இதுபற்றி அமலாபாலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

எனக்கும் ஆர்யாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தி எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. யாரோ இந்த தவறான செய்தியை பரப்பி உள்ளனர். ஆர்யாவுக்கும் எனக்கும் நட்பு தொடர்கிறது. அவரோடு நான் தொடர்பில்தான் இருக்கிறேன். ஆர்யா வீட்டில் விருந்து நடந்தபோது நான் துபாயில் இருந்தேன். அதனால்தான் அதில் பங்கேற்க முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

'பில்லா-2'-க்கு முன் மீண்டும் பில்லா!!!

Wednesday,March,28,2012
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மெகா ஹிட்டான படம் 'பில்லா'. இப்படத்தை கடந்த 2007-ம் வருடம் தமிழில் ரீமேக் செய்தனர். அதில் அஜித், நயன்தாரா ஆகியோர் நடித்தனர். இப்படமும் மெகா ஹிட்டானது. இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கினார். இதையடுத்து, இப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யும்படி ரசிகர்கள் வற்புறுத்தினர். இதையடுத்து 'பில்லா' படத்தை மீண்டும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. சிவாஜியின் 'கர்ணன்', 'ஆரண்யகாண்டம்', 'முப்பொழுதும் உன் கற்பனைகள்', 'வெங்காயம்' படங்கள் மீண்டும் ரிலீஸ் ஆன நிலையில் தற்போது 'பில்லா'வும் இணைந்துள்ளது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அஜித் நடிப்பில் சக்ரி டோலட்டி இயக்கும் 'பில்லா-2' படமும் படப்பிடிப்பு முடிந்து விரைவில் வெளிவரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல டெக்னிக்தான்... இனி அம்புட்டு பேரும்ல இத ஃபாலோ பண்ணுவாங்க...

கிசுகிசுவில் இருந்து தப்பிக்க மனைவியை அழைத்து செல்லும் கார்த்தி!!!

Wednesday,March,28,2012
நடிகைகளுடன் கிசு கிசு பிரச்னை எதிலும் சிக்காமல் இருக்க மனைவியை கையோடு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்து செல்கிறார் கார்த்தி. இது பற்றி அவர் கூறியதாவது: திருமணத்துக்கு பிறகு வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்கிறார்கள். எந்த மாற்றமும், குழப்பமும் ஏற்படாமல் இருக்க எளிமையான ஒரு வழியை வைத்திருக்கிறேன். எனது எல்லா ஷூட்டிங்கிற்கும் கையோடு என் மனைவியையும் அழைத்துச் சென்றுவிடுகிறேன். அதனால் மனைவியை பிரிந்திருக்கும் நேரம் என்பது குறைவுதான். இதனால் தேவையில்லாத கிசு கிசுவிலும் சிக்க வாய்ப்பே இல்லை. சமீபத்தில் ‘சகுனிÕ படத்துக்காக போலந்து நாட்டுக்கு சென்றேன். அங்கு கடும் குளிர் நிலவுவதாக முதலிலேயே கூறிவிட்டார்கள். எனவே அங்கு அழைத்து சென்று குளிரில் அவரை வாட்ட வேண்டாம் என்று எண்ணி உடன் அழைத்துச் செல்லவில்லை. மற்றபடி எந்நேரமும் அவர் என்னை சுற்றியே இருக்கிறார்.

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சினேகா:போலீசார் விரட்டியடித்தனர்!!!

Wednesday,March,28,2012
நாகர்கோவிலில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சினேகா கலந்து கொண்டார். இதையறிந்த ரசிகர்கள் காலை முதலே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் திரண்டனர். இதனால் அண்ணா பஸ் நிலைய சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்தநிலையில் நிகழ்ச்சி முடிந்து சினேகா வெளியே வரும் போது அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர்.சிலர் சினேகாவுடன் கை குலுக்க ஆசைப்பட்டு அவரை நெருங்கினர்.

ஒரு கட்டத்தில் சினேகா ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து பாதுகாப்புக்குநின்ற போலீசார் அவர்களை விரட்டியடித்து சினேகாவை மீட்டு அனுப்பி வைத்தனர்.

பள்ளி செல்வதை நிறுத்தாதீர்:நடிகை சினேகா அறிவுரை!!!

தமிழக அரசின் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கோவை அருகே தடாகம் பகுதியில் ஜியோன் உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. ஜியோன் தொண்டு நிறுவனத்தினர் குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை மீட்டு உண்டு உறைவிட பள்ளியில் சேர்த்து சமுதாய தொண்டாற்றி வருகிறார்கள்.

தற்போது இந்த பள்ளியில் 6 முதல் 14 வயது நிரம்பிய 50 மாணவ-மாணவிகள் தங்கி உணவு உண்டு படித்து வருகிறார்கள். மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.

விழாவில் நடிகை சினேகா கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அவர் கூறியதாவது:-

பள்ளி செல்லா குழந்தைகளின் கல்வி தரம் உயர வேண்டும், பள்ளி செல்வதை இடையில் நிறுத்தக்கூடாது. பெற்றோர் கல்வி கற்பதை நிறுத்தி விட்டு குழந்தைகளை தொழிலுக்கு அனுப்ப கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி முருகேசன், ஸ்ரீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்!!!சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்!!!

Wednesday,March,28,2012
5. அம்புலி
அம்புலிக்கு இது ஆறாவது வாரம். இதற்குப் பிறகு வெளியான ஒரு டஜன் படங்களை பின்னுக்குத் தள்ளி இன்னும் டாப் 5-க்குள் இடம் பிடித்துள்ளது. ஆஹா ஓஹோ என்று புகழப்பட்ட ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழியால் டாப் 5-க்குள் இடம் பிடிக்க முடியவில்லை என்பது முக்கியமானது. அம்புலி சென்னையில் இதுவரை 75 லட்சங்களை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 2.9 லட்சங்கள்.

4. மாசி
ஆக்சன் கிங்கின் மாசி அதன் மோசமான மேக்கிங்கிற்கான பலனை பாக்ஸ் ஆஃபிஸில் எதிர்கொண்டிருக்கிறது. இப்படம் இதுவரை 26 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 4 லட்சங்கள்.

3. அரவான்
மூன்று வாரங்கள் முடிவில் வசந்தபாலனின் அரவான் 2.04 கோடியை வசூலித்துள்ளது. படத்தின் பட்ஜெட், உழைப்புடன் ஒப்பிடுகையில் இது யானைப் பசிக்கு சோளாப்பொ‌ரி. சென்ற வார இறுதியில் இப்படம் 7.2 லட்சங்களை வசூலித்துள்ளது.

2. காதலில் சொதப்புவது எப்படி
ஐந்து வாரங்கள் முடிவில் இப்படம் 3.27 கோடிகளை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 8.09 லட்சங்கள்.

1. கழுகு
இம்மாதத்தின் சர்ப்ரைஸ் கழுகு. தொடர்ந்து இரண்டாவது வாரமும் பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ரசிகர்களுக்கு அவ்வளவாகப் பிடிக்காத படம் என்று பெயரெடுத்த கழுகு எப்படி பாக்ஸ் ஆபிஸி‌ல் உயரப் பறக்கிறது என்பது ஆச்ச‌ரியம். இதுவரை 55 லட்சங்களை வசூலித்திருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் 19.2 லட்சங்களை வசூலித்துள்ளது..