Sunday, April 22, 2012

ஹிந்தியில் மெகாஹிட்டான ‘ஹவுஸ்புல்-2’ தமிழில் ரீமேக் ஆகிறது!!!

Sunday, April, 22, 2012
தமிழில் பிரபு, கலாபவன் மணி, அப்பாஸ் இணைந்து நடித்த பந்தா பரமசிவம் படம் இந்தியில் ஹவுஸ்புல்-2 என ரீமேக் ஆகி வெற்றிகரமாக ஓடுகிறது. நூறுகோடி வசூலையும் எட்டி வருகிறது.

இதில் அக்ஷய்குமார், ஜான் ஆபிரகாம், ரிதேஷ் தேஷ்முக், அசின் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது உள்ளனர். இந்த படத்தை மீண்டும் தமிழில் ரீமேக் செய்ய பந்தா பரமசிவம் படத்தில் தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமாரிடம் கதை உரிமை கேட்டு தயாரிப்பாளர்கள் பலர் மொய்க்கின்றனர்.

இதில் நடிக்க விஷால், ஆர்யா, ஜீவா என முன்னணி ஹீரோக்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்.

என்னுடன் ஜோடி சேர ஹீரோயின்கள் மறுப்பதில்லை!!!

Sunday, April, 22, 2012
முன்புபோல் என்னுடன் ஜோடியாக நடிக்க ஹீரோயின்கள் மறுப்பதில்லை என்றார் கருணாஸ். கருணாஸ், ஹீரோவாக நடிக்கும் படம் ‘மச்சான். இது பற்றி அவர் கூறியதாவது: நான் நடிக்க வந்து 10 வருடம் ஆகிறது. இதுவரை விவேக்குடன் சேர்ந்து நடித்ததில்லை. கதையின் நாயகனாக நான் நடிக்கும் ‘மச்சான் படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். 25 வருடம் தமிழ் சினிமாவில் நடித்து ஜனங்களின் கலைஞன் என்ற பட்டப் பெயர் வாங்கி இருக்கும் விவேக் எந்த ஈகோவும் இல்லாமல் நடிக்க ஒப்புக்கொண்டதை பெரிய விஷயமாக கருதுகிறேன். அனிமல் அரசன் என்ற வேடம் ஏற்கிறார்.

நட்பை மையமாக வைத்து நகைச்சுவையுடன் இப்படத்தை எழுதி இயக்கும் ஷக்தி சிதம்பரம், லொள்ளு பாண்டி என்ற நையாண்டி வேடத்தில் நடிக்கிறார். ரமேஷ் அரவிந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‘அம்பாசமுத்திரம் அம்பானி, ‘திண்டுக்கல் சாரதிÕ படத்தில் ஹீரோவாக நான் நடித்தபோது ஜோடியாக நடிக்க பல ஹீரோயின்கள் மறுத்தனர். அந்தநிலை இப்போது மாறிவிட்டது. பல ஹீரோயின்கள் கால்ஷீட் தர முன்வருகிறார்கள். ‘மச்சான் படத்தில் ஷெரீல் பிரிண்டோ ஹீரோயின். குமர குருபரன், வி.மணி தயாரிப்பு. ஸ்ரீகாந்த் தேவா இசை

விக்ரமுடன் இணையும் லட்சுமிராய்!!!

Sunday, April, 22, 2012
யூ டிவி நிறுவனம் தயாரிக்கும் ‘தாண்டவம்’ படத்தை விஜய் இயக்குகிறார். தெய்வத் திருமகள் படத்திற்கு பிறகு விஜய்யும், விக்ரமும் இணையும் படம். இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக அனுஷ்காவும், ‘மதராச பட்டினம்’ படத்தில் நடித்த எமி ஜாக்சனும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு மேலும் ஒரு நாயகியாக லட்சுமிராய் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் அடுத்த வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்காக லட்சுமிராய் 25 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து லட்சுமி ராய் கூறும்போது, கடந்த வருடத்தில் நான் நடித்து வெளியான மங்காத்தா’, ‘காஞ்சனா’ படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தால் தமிழ் சினிமாவில் எனக்கு ஒரு நிலையான இடத்தைக் கொடுத்தது. அதேபோல், இப்படத்திலும் எனது கதாபாத்திரம் பாராட்டும்படி இருக்கும் என நம்புகிறேன் என கூறினார்.

இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டை ஜுலையிலும், படத்தை ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வெளியிடவும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தில் சந்தானம், தம்பி ராமையா, சரண்யா பொன்வண்ணன், சாயாஜி ஷிண்டே, கோட்டா சீனிவாசராவ், டெல்லி கணேஷ் ஆகிய நட்சத்திர பட்டாளமும் நடித்துள்ளனர்.

சில்க் வேடத்தில் நடிக்க நிகிதா மறுப்பு!!!

Sunday, April, 22, 2012
சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க மறுத்து படத்திலிருந்து விலகினார் நிகிதா. கோலிவுட்டில் கலக்கிய சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து ‘தி டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் இந்தி படம் உருவானது. வித்யாபாலன் நடித்தார். அதேபோல் கன்னடத்திலும் சில்க் ஸ்மிதாவை மையமாக வைத்து படம் உருவாகிறது. இப்படத்துக்கும் டர்ட்டி பிக்சர் என்றே தலைப்பிட்டுள்ளனர். இதில் நடிக்க நிகிதா தேர்வானார். ஷூட்டிங்கிற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோது படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் நடிக்கிறார். இதற்காக இவருக்கு ரூ.85 லட்சம் சம்பளம் தரப்படுகிறது.

படத்திலிருந்து விலகியது பற்றி நிகிதா கூறும்போது, ‘Ôகிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் ஏழைப்பெண், வறுமையால் பாதை மாறிப்போகிறாள். பின்னர் சினிமா உலகிற்கு வருவதுபோல் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற கதையில் என்னால் நடிக்க முடியாது. பெரும் தொகை சம்பளமாக பேசப்பட்டாலும் அப்படத்திலிருந்து விலகிவிட்டேன் என்றார். இது பற்றி டைரக்டர் திரிசூல் கூறும்போது, ‘இந்தி படத்தை பார்த்து காப்பி அடிக்கவில்லை. புதிதாக ஸ்கிரிப்ட் எழுதப்பட்டுள்ளது. ஒரு காட்சிகூட இந்தி படத்தில் இருந்தது போல் இருக்காது. இதற்கு யாரிடமும் உரிமை வாங்க தேவையில்லை என்றார்.

கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Sunday, April, 22, 2012
ஜெமினி படத்தில் ஓ போடு... பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடிய ராணி, ஊ ல ல லா படத்தில் ஹீரோ ஜோதி கிருஷ்ணாவின் அம்மாவாக நடித்திருக்கிறார்.

தம்பிக்கு இந்த ஊரு படத்தில் பரத் ஜோடியாக நடித்த மடால்ஷா, மலையாளத்தில் மிதி என பெயர் மாற்றிக்கொண்டு நடிக்கிறார்.

ஆர்யா, அனுஷ்கா இரட்டை வேடங்களில் நடிக்கும் இரண்டாம் உலகம் படத்தின் பெரும்பகுதி கோவாவில் படமானது. இதே படத்தை தெலுங்கில் பிருந்தாவனமலோ நந்தகுமாரடு என்ற பெயரில் இயக்குவதாக டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் செல்வராகவன்.

தென்மேற்கு பருவக்காற்று பட இயக்குனர் சீனு ராமசாமி இயக்கும் நீர் பறவை படத்தில் நந்திதாதாஸ் நடிக்கிறார். அழகி, கன்னத்தில் முத்தமிட்டால் படங்களுக்கு பின் இதில் நடிக்கிறார்.

அட்சய திருதியையொட்டி மகள் ஐஸ்வர்யா வுக்கு பிளாட்டினத்தால¢ ஆன அட்சய பாத்திரம் பரிசளித்து வாழ்த்தினார் லதா ரஜினிகாந்த்.

பிளாட்டினத்தை விரும்பும் வைரம்!!!

Sunday, April, 22, 2012
'ஆவின்பால் பிடிக்காத, குடிக்காத சிறுவர்கள், பெரியவர்கள்கூட அமலா பாலை பிடிக்கும்' எனும் அளவிற்கு ஃபீல்டில் பிஸியாக இருக்கும் அமலா பாலுக்கு மிகவும் பிடித்தது பிளாட்டினம் நகைகள்தானாம்! சென்னை, அண்ணாநகர், 12-வது மெயின்ரேட்டில் அமைந்துள்ள நாதெள்ளா ஜுவல்லரியின் காமா பிளாட்டினம் நகைகள் அறிமுகவிழாவில் கலந்து கொண்டு பிளாட்டினம் நகைகளை அறிமுகம் செய்து வைத்து மீடியாக்களிடம் பேசிய அமலா பால், எனக்கு மிகவும் பிடித்தது பிளாட்டினம் நகைகள்தான். எனக்கும் மட்டுமல்ல, என் வயதை ஒத்த இந்த காலத்து பெண்கள் மிகவும் விரும்புவதும் பிளாட்டினம் நகைகளைத்தான். அதன் வெளிப்பாடாகத்தான் இங்கு, புதிய வகை பிளாட்டினம் நகைகளை அட்சய திருதியை பண்டிகையை முன்னிட்டு அறிமுகம் செய்து வைக்க சம்மதித்தேன். மும்பையில் பிளாட்டினம் நகைகளுக்கு பிரபலமான காமா ஜுவல்லரி, சென்னையில் நாதெள்ளா ஜுவல்லரி மூலம் தங்களது காமா பிளாட்டினம் நகைகளை இந்த அட்சய திருதியை முதல் விற்பனை செய்ய இருப்பது என் மாதிரி பிளாட்டின பிரியைகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். இனி எனது பெரும்பாலான ஷாப்பிங் இந்த நாதெள்ளா ஜுவல்லரியின் காமா பிளாட்டினம் செக்ஷனிலேயே இருக்கும்! என்று பேசிய அமலா, மீடியாக்களின் மைக்குகளிலும் தனித்தனியாக பிளாட்டினம் நகைகள் பற்றி பெருமையாக பெருவாரியாக பேசி சென்றது ஆச்சரியம்! இவ்விழாவிற்கு பிளாட்டினம் நகைகளை அணிந்து வந்திருந்தார் அமலா பால் என்பது கூடுதல் ஆச்சர்யம்! அவருடன் காமா பிளாட்டினம் நகைகள் அறிமுக விழாவில் நாதெள்ளா ஜுவல்லரியின் இயக்குநர் பிரப்பன் குமாரும். காமா ஜுவல்லரியின் இணைய அதிபர் பினாய் கோயங்காவும் உடன் இருந்து நகைகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தனர்

நீங்கள் லக்கினா தமன்னாவை சந்திக்கலாம்!!!

Sunday, April, 22, 2012
ஃபேண்டா கூல்டிரிங்க்ஸ் குடித்தால் நடிகை தமன்னாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். கொக்கோகோலா நிறுவனத்தின் கூல்டிரிங்கான ஃபேண்டாவின் தென்னிந்திய பிராண்டு அம்பாசிடராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார். நடிகை ஜெனிலியா திருமணமாகிப் போனதையடுத்து தான் தமன்னா பிராண்டு அம்பாசிடராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது வாடிக்கையாளர்களைக் கவர ஃபேண்டா புது முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகாவில் விற்கப்படும் ஃபேண்டா பாட்டில்களின் லேபிலுக்குப் பின்னால் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பரிசுகள் அறிவிக்கப்பட்டுருக்கும். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் தமன்னாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஃபேண்டா விளம்பர நிகழ்ச்சிகளில் தமன்னா கலந்துகொள்கிறார். அவர் தனது ரசிகர்களை விளம்பர நிகழ்ச்சிகளுக்கு அழைத்து பேசவிருக்கிறார். தமன்னாவை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அழகிய செல்போன்கள் உள்பட பல பரிசுகளை வெல்லலாம். அப்புறம் என்னங்க... சம்மர்ல.... இதவிட ஒரு கூல் குல்ஃபி கிடைக்குமா..? குடிச்சிட வேண்டியதுதான.....

பிரம்மாண்ட காருக்கு சொந்தக்காரரான ஷங்கர்!!!

Sunday, April, 22, 2012
தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் என்று வர்ணிக்கப்படும் ஷங்கர் ROLLS ROYCE என்ற விலையுர்ந்த பிரம்மாண்ட காருக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். ROLLS ROYCE நிறுவனம் புக் செய்யும் அனைவருக்கும் கார்களை அளிப்பது இல்லை. கார் புக் செய்ய நினைப்பவர்களின் பின்னணி என்ன, என்ன தொழில் செய்கிறார்கள், அவர்களது அந்தஸ்து என்ன என்பதை பொருத்தே அவர்களுக்கு கார்களை அளிப்பார்கள். இந்தியாவில் சில தொழிலதிபர்களும், அமிதாப் பச்சன், அமீர்கான், தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா, சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா உள்ளிட்டவர்கள் இந்த காரை வைத்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் முதன் முறையாக இந்த காரை வாங்கி இருக்கிறார் இயக்குநர் ஷங்கர். TN 09 BQ 0008 என்ற எண் தான் வேண்டும் என்று கேட்டு வாங்கி இருக்கிறார்.

கடும் போட்டியில் த்ரி-நயன்!!!

Sunday, April, 22, 2012
நாயகர்களுக்கு இடையே போட்டி நடப்பது போலவே நாயகிகளுக்கு இடையே போட்டி துவங்கி இருக்கிறது. த்ரிஷா - நயன்தாரா இடையே தற்போது கடும் போட்டி நிலவுவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அதற்கு முன் ஒரு சின்ன ப்ளாஷ்பேக்... விஜய் நடித்த 'குருவி' படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் நயன்தாரா. ஆனால் அப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்து வெளியானது. அப்போது தான் இருவருக்கும் இடையே கடும் போட்டி ஆரம்பமானது. நயன்தாரா - பிரபுதேவா இடையேயான காதல் பிரிவிற்கு பிறகு பிரபுதேவா அளித்த விருந்து ஒன்றில் பிரபுதேவாவுடன் த்ரிஷா இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையங்களில் வெளியானது. சில மாதங்களாக திரைப்பட நடிப்பை நிறுத்தியிருந்த நயன்தாரா, தற்போது படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்ததால் தமிழ் மற்றும் தெலுங்கில் வாய்ப்புகள் குவிகின்றன. முதலில் கோபிசந்த் நடிக்கும் படத்தில் ஒப்பந்தமானவர், அடுத்ததாக ராணா நடிக்க இருக்கும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராணா - த்ரிஷா இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதனால் கதை என்ன என்று கேட்காமல் உடனே ஒகே என்று கூறிவிட்டாராம் நயன். த்ரிஷா ஒப்பந்தமாகி இருந்த ஒரு விளம்பரத்திற்கு தற்போது நயன் ஒப்பந்தமாகி இருக்கிறார். யம்மாடியோவ்! குடும்பிய பிடிக்காம விட்டாங்களே.....

ஹன்சிகா சம்பளம் ரூ.75 லட்சமாக உயர்வு!!!

Sunday, April, 22, 2012
தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஹன்சிகா மோட்வானி, ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், விஜய்யுடன் வேலாயுதம் படங்களில் நடித்தார். உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம் தற்போது ரிலீசாகி ஒடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்துக்கு பின் தமிழில் ஹன்சிகா மார்க்கெட் ஏறியுள்ளது. புதுப்பட வாய்ப்புகள் குவிகின்றன. இதனால் சம்பளத்தை உயர்த்தியுள்ளார். இதுவரை ஒரு படத்துக்கு ரூ.45 லட்சம் வாங்கினார். தற்போது அதனை ரூ.75 லட்சமாக உயர்த்தியுள்ளார்.

சிம்பு ஜோடியாக வேட்டை மன்னன் படத்தில் நடித்து வருகிறார். சிங்கம், படத்தின் இரண்டாம் பாகம் சிங்கம்-2 என்ற பெயரில் தயாராகிறது. இதில் சூர்யா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தியில் இருந்து தமிழில் ரீமேக் ஆகும் டெல்லி பெல்லி படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படங்களுக்கு பின் சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்துவார் என கூறப்படுகிறது. இவரை தமிழ் திரையுலகினர் குஷ்பு என அழைக்கின்றனர். குஷ்பு இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.

கரீனாவுக்கு இணையா வந்துட்டேன் - அசின் அலட்டல்!!!

Sunday, April, 22, 2012
அசின் இந்தியில் 'கஜினி' படம் மூலம் அறிமுகமானார். அப்படம் வெற்றிகரமாக ஓடியது. முதல் படத்திலேயே முன்னணி இடத்துக்கு உயர்ந்தார். இந்தியில் ஏற்கனவே கரீனா கபூர் முதல் இடத்தில் உள்ளார். அவர் நடித்து ரிலீசான '3 இடியட்ஸ்', 'பாடிகார்ட்', 'ரா ஒன்' படங்கள் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் குவித்தன. எனவே முதல் இடத்தை தொடர்ந்து அவர் தக்க வைத்து வருகிறார். அசின் நடித்த 'லண்டன் ட்ரீம்ஸ்' படம் தோல்வி அடைந்ததால் அவர் மார்க்கெட் சரிந்தது. ஆனால் அவரது ரெடி படமும், சமீபத்தில் ரிலீசான 'ஹவுஸ்புல் 2' படமும் ஹிட்டாயின. ரெடி வசூல் ரூ. 100 கோடியை தாண்டியது. 'ஹவுஸ்புல்' படம் கடந்த 5-ந்தேதி வெளியானது. இதுவரை ரூ. 80 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது. இப்படமும் ரூ. 100 கோடி வசூலை தாண்டும் என்கின்றனர். இதுகுறித்து அசின் கூறும்போது, இந்தியில் நான் ஏற்கனவே நடித்த இரு படங்கள் ரூ. 100 கோடி வசூல் ஈட்டின. 'ஹவுஸ்புல்' படமும் ரூ. 100 கோடி வசூலை நெருங்குகிறது. எனவே நானும் இந்தியில் நம்பர் 1 நடிகையாகி விட்டேன். கரீனா கபூருக்கு இணையாக என் படங்களும் வசூல் குவிக்கின்றன என்றார்.

ஐட்டம் நடிகைகளுக்கே ஷாக் கொடுத்த அஞ்சலி- ஓவியாவின் கிளுகிளு கவர்ச்சி!!!

Sunday, April, 22, 2012
அட நாம் பார்ப்பது நிஜம்தானா... என்று நம்ப முடியாமல் பார்க்க வேண்டியிருந்தது, கலகலப்பு படத்தின் கவர்ச்சி வழியும் அந்த பாடல் காட்சியை.

இதுவரை குடும்ப குத்து விளக்காகத் திகழ்ந்த அஞ்சலியும் ஓவியாவும் ஒரு கவர்ச்சிக் கண்காட்சியே நடத்தியிருந்தனர்.

சுந்தர் சி. இயக்கியுள்ள இந்தப் படத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஒவியா, சந்தானம் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழாவில்தான் அந்த அம்சமான பாடலைக் காணும் 'பாக்கியம்' கிடைத்தது செய்தியாளர்களுக்கு. பாடலில் குத்துங்க எஜமான் குத்துங்க என்றெல்லாம் வரிகளை எழுதி கதிகலங்க வைத்திருந்தனர்.

விழாவில் அஞ்சலியிடம் இந்தக் கவர்ச்சிப் புரட்சி பற்றிக் கேட்டபோது, "ஏதோ நான்தான் கவர்ச்சியா நடிச்ச மாதிரி கேட்காதீங்க. மீனா காலத்தில் இருந்தே கவர்ச்சி இருக்கிறது. அழகாக காட்டுவதுதான் கவர்ச்சி. எனக்கு படத்தில் நல்ல ரோல்.. ஒரு பாடல் காட்சியில் அது போல் நடிக்க வேண்டிய இருந்ததால் நடித்தேன். அது தவறல்ல. இது வித்தியாசமான கல கலப்பான படம். நான் கலர்புல் நாயகியாக வருகிறேன்," என்றார்.

ஓவியாவிடம் உங்களுக்கும் விமலுக்கு செம கெமிஸ்ட்ரி என்கிறார்களே, என்றால், "அதெல்லாம் ஒண்ணுமில்ல. இந்தப் படத்துல விமல் இருந்தாலும் அவருக்கு நான் ஜோடி இல்லையே. எனக்கும் சிவாவுக்கும்தான் கெமிஸ்டரி," என்றார்.

சிவாவோ, "இல்லையில்லை... அஞ்சலிக்கும் ஒவியாவுக்கும்தான் கெமிஸ்ட்ரி... அவங்கதான் ரகசியமா அடிக்கடி பேசிக்கிட்டே இருந்தாங்க," என்று கலாய்த்தார்.

இயக்குனர் சுந்தர் சி. கூறும்போது, "ஒரு பாடல் காட்சியில் ரொம்ப கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று அஞ்சலியிடமும், ஓவியாவிடமும் கேட்டேன். அவர்கள் சம்மதித்தனர். அதற்கான உடைகளை கூட அவர்களே தயார் செய்தார்கள். ஒவ்வொருத்தரும் கதையை உருவாக்கும் போது கேரக்டர்களுக்கு அந்தந்த நடிகர்களை கற்பனை செய்து வைத்திருப்பார்கள்.

இந்த படத்துக்கு நான் யாரெல்லாம் நடிக்க வேண்டும் என்று கதையை உருவாக்கிய போது நினைத்தேனோ அவர்களெல்லாம் கிடைத்தனர். சிறு கேரக்டரில் நடித்தவர்கள் கூட சிறப்பாக நடித்துள்ளனர்," என்றார்.

நடிகர்கள் விமல், சிவா, நடிகை ஓவியா, இசையமைப்பாளர் விஜய் எபிநேசர், ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில்குமார், யுடிவி தனஞ்செயன் உள்பட பலரும் பங்கேற்றனர்.

'கொலவெறி' நஷ்டத்தை ஈடுகட்ட தனுஷ்-ஐஸ்வர்யா சம்மதம்!!!

Sunday, April 22, 2012
'3' பட நஷ்டத்திற்கு அதற்கு ஈடு தர தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா சம்மதம் தெரிவித்துள்ளனர். ஐஸ்வர்யா, தனது கணவர் தனுஷை ஹீரோவாக்கி டைரக்டர் அவதாரம் எடுத்த படம் '3'. இப்படத்தில் தனுஷ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து இருந்தார். படம் வெளிவருவதற்கு முன்பே, இப்படத்தில் இடம்பெற்ற 'கொலவெறி' பாடல் உலகம் முழுக்க பிரபலமானது. இதனால் '3' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உண்டானது. ஆனால் படம் வெளியாகி சரியாக போகவில்லை என்பது அனைவரின் கருத்து. இதனால் இப்படத்தை வெளியிட்ட சிலருக்கு பெருத்த நஷ்டம். அதிலும் குறிப்பாக தெலுங்கில் இப்படத்தை கோடி கணக்கில் வாங்கி வெளியிட்ட தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான நட்டி குமாருக்கு பலத்த நஷ்டம். இதனால் நஷ்ட ஈடு கேட்டு இருந்தார் நட்டி குமார். இதற்கு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நஷ்ட ஈடு தர சம்மதம் சொல்லியுள்ளனர். இதுகுறித்து நட்டி குமார் கூறியுள்ளதாவது, தனுஷின் முந்தைய படங்களை காட்டிலும் '3' படத்தை கோடி கணக்கில் வாங்கி வெளியிட்டேன். ஆனால் படம் சரியாக போகாததால் எனக்கு 80 சதவீதம் நஷ்டம். சினிமாவில் நஷ்டம் என்பது இயல்பு தான். ஆனால் '3' படத்தின் நஷ்டம் ஈடு செய்ய முடியாதது. '3' படத்தை குறைந்த செலவில் தான் தயாரித்தார்கள். ஆனால் 'கொலவெறி' பாட்டை வைத்து எக்கச்சக்க பணத்திற்கு விற்றுவிட்டார்கள். எனக்கு ஏற்பட்ட நஷ்டம் தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜவை தொடர்பு கொண்டேன், ஆனால் முடியவில்லை. அதேசமயம் நஷ்டம் தொடர்பாக தனுஷும், ஐஸ்வர்யாவும் ஈடுகட்டுகிறோம் என்று கூறியுள்ளனர். அவர்கள் இப்படி கூறியது ஆறுதலாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

வீட்டை வாங்கிக்கொண்டு ஏமாற்றினார்: நடிகர் சந்தானம் மீது ரூ.10 லட்சம் மோசடி புகார்!!!

Sunday, April, 22, 2012
சென்னை உத்தண்டியை சேர்ந்தவர் ரவிக்கிஷன்(வயது 42). ஐஸ் கம்பெனி நடத்தி வரும் இவர், சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை நேற்று சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

எனது பெயரில் விருகம்பாக்கம் தாங்கல் உள்வாய் தெருவில் பங்களா வீடு ஒன்று இருந்தது. நடிகர் சந்தானம் என்னையும், என் தந்தையையும் மிரட்டி ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள சொத்தை ரூ.1 கோடியே 85 லட்சத்திற்கு பேசி 10-3-2010 அன்று கட்டாய பதிவு செய்து கொண்டார்.

ஆனால், பேசிய பணத்தை தராமல், ரூ.1 கோடியே 75 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு, மீதியுள்ள ரூ.10 லட்சம் பணத்தை பிறகு தருவதாக நடிகர் சந்தானம் கூறினார்.

முதலில், ரூ.2 1/2 லட்சத்திற்கான செக்கை என்னிடம் கொடுத்தார். ஆனால், பணம் இல்லாமல் செக் திரும்பிவந்தது. மீதியுள்ள ரூ.7 1/2 லட்சம் பணத்தை கேட்டபோதும், பணத்தை தரமுடியாது என்று கூறிவிட்டார்.

தொடர்ந்து பணம் கேட்டு வந்ததற்கு, இதற்கு மேல் ஒன்றும் தர முடியாது என்றும், மீறி கேட்டால் கொலை செய்து விடுவேன் என்றும் நடிகர் சந்தானம் கூறினார்.

மேலும், வீட்டில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் தூக்கி சென்றுவிட்டார். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.