Saturday, April 14, 2012

தெலுங்கு படத்தில் கலாட்டா : தமன்னா நீக்கம்; காஜல் ஒப்பந்தம்!!!

Saturday, April, 14, 2012
தமன்னா நடிக்க இருந்த படத்திலிருந்து திடீரென அவர் நீக்கப்பட்டு, காஜல் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கோலிவுட், பாலிவுட், டோலிவுட்டில் ஹீரோயின்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. சில ஹீரோயின்கள் நடிப்பதாக கூறப்படும் படத்தில் திடீரென்று வேறு ஹீரோயின் ஒப்பந்தம் ஆகிவிடுகிறார். சமீபகாலமாக பல படங்களில் இது நடந்து வருகிறது. டோலிவுட்டில் சுகுமார் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிப்பது யார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. முன்னணி நடிகைகள் பெயர் அடிபட்டுவந்தது. தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டு, திடீரென நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனால் தமன்னா ஏமாற்றம் அடைந்துள்ளார். இதுபற்றி காஜல் கூறும்போது, ‘இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது உற்சாகத்தை அளிக்கிறது. ஏற்கனவே சுகுமார், மகேஷ் பாபு கூட்டணியில் நடித்திருக்கிறேன். இப்படம் சற்று ஸ்பெஷல். வழக்கமான கதாபாத்திரம் கிடையாது. இப்படத்தில் மற்ற ஹீரோயின்களுக்கும் வாய்ப்பு சென்றது பற்றி கேட்கிறார்கள். ஆனால் அதுபற்றி என்னால் யூகிக்க முடியவில்லை. சில வாரங்கள் வெளிநாடுகளில் நடந்த ஷூட்டிங்கில் கலந்துகொண்டேன். பிறகு இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று ஷூட்டிங்கில் பங்கேற்றேன். இதிலேயே பிஸியாக இருந்துவிட்டதால் வேறு எது பற்றியும் எனக்கு தெரியாது. எனக்கு நடிக்க வாய்ப்பு வந்தது ஒப்புக்கொண்டேன். தமிழ், இந்தி படங்களிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறேன் என்றார்.

அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் பிரியங்கா!!!

Saturday, April, 14, 2012
தமிழ் சினிமாவில் விஜய் ஜோடியாக 'தமிழன்' படத்தில் நடித்தவர் பிரியங்கா சோப்ரா. இவர் இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக உள்ளார். புதிதாக நடிக்க உள்ள 'சஞ்சீர்' இந்திப் படத்துக்கு ரூ.9 கோடி சம்பளத்தில் அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதன் மூலம் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்தி முன்னணி நடிகைகளான கத்ரீனா கபூப், கரீனா கபூர், தீபிகா படுகோனே போன்றோர் சராசரியாக ரூ.2 1/2 கோடி முதல் ரூ.4 கோடி வரை சம்பளம் பெறுகின்றனர். பிரியங்காவும் இதுவரை இவர்கள் வாங்கும் சம்பளத்தைதான் பெற்று வந்தார். ஐஸ்வர்யா ராய் தமிழில் வெளியான 'எந்திரன்' படத்தில் ரூ. 5 1/2 கோடி வாங்கியதாக கூறப்பட்டது. 'ஹீரோயின்' படத்தில் நடிக்க கரீனா கபூர் அதிக சம்பளம் வாங்கினார். 'டர்ட்டி பிக்சர்' படத்தில் நடித்த வித்யா பாலனுக்கும் நல்ல மார்க்கெட் உள்ளது. இவர்களையெல்லாம் பிரியங்கா சோப்ரா மிஞ்சிவிட்டார். மார்க்கெட் இருக்கிறவரைக்கும் சம்பாரிச்சா தானே உண்டு

2015 வரை கார்த்தியை நெருங்க முடியாதா?!!!

Saturday, April, 14, 2012
அடாத பெப்சி வேலை நிறுத்தத்திலும் விடாத மழைபோல நடந்து கொண்டிருக்கும் மாஸ் ஹீரோ படப்பிடிப்புகளில் கார்த்தியின் 'அலெக்ஸ் பாண்டியன்'தான் ரொம்ப ஹாட்! படப்பிடிப்புத் தளத்தில் எப்போதும் பத்து செக்யூரிட்டிகளுக்கு சம்பளம் கொடுத்து வைத்திருந்தார்கள். தற்போது வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்ட பிறகு நேற்று முதல்தான் இந்த சபாரி சூட் மனிதர்களை விலக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் கார்த்தியின் கால்ஷீட்டுக்காக ஆளாய் பறக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்! முக்கியமாக ஏ.வி.எம் நிறுவனம் 'நீங்கள் எங்களுக்கு இன்னும் படம் பண்ணவில்லையே?' என்று நச்சரித்து வருகிறார்களாம் கார்த்திக்கு. அடுத்து கார்த்தியின் கால்ஷீட்டுக்கு இப்போதே பிட்டைப் போட்டு வைத்திருக்கிறாராம் டோலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவரான ராஜமௌலி. இதற்கிடையில் பள்ளி பருவத்தில் இருந்து உயிர் நண்பனாக இருக்கும் வளர்ந்து வரும் தொழில் அதிபர் ஒருவருக்கும் படம் நடித்துக் கொடுக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். கார்த்திக்கு அடுத்து வர இருக்கும் அசத்தலான அரசியல் நையாண்டி ஆக்ஷன் த்ரில்லர் படம் 'சகுனி'! அடுத்து சுராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் 'அலெக்ஸ் பாண்டியன்'. இந்தப் படத்தை தொடர்ந்து காமெடி ஸ்பெஷலிஸ்ட் இயக்குநர் ராஜேஷின் முழுநீள ரொமாண்டிக் காமெடிப் படம். அதைத்தொடர்ந்து ஜெயம் ராஜா இயக்கத்தில் நடிக்கும் அதிரடி ஆக்ஷன் படம். இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடி, 'தோனி' படத்தில் அறிமுகமான ராதிகா ஆப்டே. இதுதவிர தெலுங்கில் நேரடியாக இரண்டு படங்கள் என கார்த்தியின் கால்ஷீட்டை 2015 வரை நெருங்க முடியாது என்கிறார்கள்.

அஜீத்துடன் போட்டியா?: விஜய்!!!

Saturday, April, 14, 2012
ரஜினி, கமல் படங்களுக்குள் போட்டி இருப்பதுபோல் விஜய், அஜீத் இடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. இருவர் படங்களும் ரிலீசாகும்போது அவரவர் ரசிகர்கள் போட்டி போட்டு கொடி தோரணங்கள், கட் அவுட்கள் என அமைத்து அமர்க்களப்படுத்துகின்றனர்.

அஜீத் உங்களுக்கு போட்டியா? என்று விஜய்யிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

அஜீத்தும் நானும் தொடர்பில் இருக்கிறோம். நிறைய விஷயங்கள் பற்றி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கிறோம். அவர் என் வீட்டுக்கு வருவார். நான் அவரது வீட்டுக்கு செல்வது உண்டு. எங்கள் இருவரது குழந்தைகளும் ஒரே பள்ளிக்கு செல்கின்றனர்.

சினிமாவில் எங்களுக்குள் லேசாக நீயா நானா போட்டி இருக்கலாம். திரையுலகில் ஆரோக்கியமான போட்டி இருப்பது நல்லதுதானே. தூள் படத்தில் நடிக்க இயலாமல் போனதற்காக நான் வருத்தப்பட்டது உண்டு. அந்த படத்தின் கதையை இயக்குனர் தரணி என்னிடம் சொன்னார். அதில் நடிக்க வில்லை. படம் பார்த்தபோது சிறப்பாக இருந்தது.

நான் நடிக்கும் துப்பாக்கி படம் சிறப்பாக வந்துள்ளது. அந்த படத்துக்கு பின் 'யோஹன் அத்தியாயம் ஒன்று' என்ற படத்தில் நடிக் கிறேன். கவுதம்மேனன் இயக்குகிறார்.

ஹீரோக்களை கட்டிப்பிடித்து நடிப்பது போர் : ரீமா தடாலடி!!!

Saturday, April, 14, 2012
ஹீரோக்களை கட்டிப்பிடித்து நடிப்பது போர் அடித்துவிட்டது. இனி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன் என்கிறார் ரீமா கல்லிங்கல். யுவன் யுவதி படத்தில் நடித்தவர் ரீமா கல்லிங்கல். மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். காதல், ஆக்ஷன் கதை கொண்ட படங்களில் நடித்து வந்த இவர், தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார். ‘இந்தியன் ரூபி என்ற படத்தில் டாக்டர் வேடத்தில் நடித்தார். அடுத்து ‘நித்ரா என்ற படத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவரின் மனைவியாக நடித்தார். இதையடுத்து ‘22 பிமேல் கோட்டயம் என்ற படத்தில் சவாலான வேடத்தில் நடிக்கிறாராம். இது பற்றி அவர் கூறும்போது, ‘ஹீரோக்களை கட்டிப்பிடித்து டூயட் பாடுவது போர் அடித்துவிட்டது. 22... படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறேன். என்னை சுற்றியே கதை நகர்கிறது. இதை பெரிய பொறுப்பாக உணர்கிறேன். எல்லோருடைய எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் வகையில் எனது நடிப்பை சிறப்பாக வழங்குவேன் என்றார்.

முதல் நாள் முதல் ஷோ பார்க்கும் ரஜினி ரசிகை நான்! - த்ரிஷா பெருமிதம்!!!

Saturday, April, 14, 2012
முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் தீவிர ரஜினி ரசிகை நான். இப்போதும் அவரப் படத்தை அதே மனநிலையில்தான் பார்க்கிறேன், என்று கூறியுள்ளார் நடிகை த்ரிஷா.

த்ரிஷா இப்போது இரு தமிழ்ப் படங்களில் நடிக்கிறார். விஷாலுடன் சமரன் மற்றும் என்றென்றும் புன்னகை ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார்.

தெலுங்கில் அவரது புதிய படம் தம்மு வெளியாகிறது. இதையொட்டி அவர் கூறுகையில், "உலகிலேயே எனக்கு பிடித்த இடம் சென்னைதான். சென்னை எனது தாய் வீடு. இங்கு நான் விரும்பாத இடங்களே கிடையாது. குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலை. அதில் பயணப்படும் போது சொர்க்கத்தில் இருப்பதுபோல் ஒரு பீலிங் இருக்கும். அங்குதான் எனக்கு பிடித்தமான ரிசார்ட்கள் உள்ளன. அடிக்கடி அந்த சாலையில் பயணிப்பதை விரும்புவேன்.

நான் வளரும்போது தமிழ் சினிமாவை அதிகம் தெரியாது. மாடலிங்கில் ஈடுபட்ட பிறகுதான் திரையுலகுக்கு நெருக்கமானேன்.

திரையுலகுக்கு வருவதற்கு முன்னால் சினிமாவில் எனக்கு தெரிந்த மூன்று பேர் ரஜினி, கமல், மணிரத்னம் மட்டும்தான். வீட்டிலும் அவர்களின் படங்களை பார்க்கத்தான் அனுமதிப்பார்கள்.

அதிலும் முதல் நாள் ரஜினி படங்களை பார்த்த அனுபவங்கள் மறக்க முடியாதவை. இப்போது நடிகையாகி விட்டதால் முன்பு மாதிரி முதல் ஷோவில் ரஜினி படங்களை பார்க்க முடியாது. ஆனால் அதற்கும் முன்பே ப்ரிவியூ ஷோ பார்ப்பேன். ஆனால் நான் எங்கே அவர் படத்தைப் பார்த்தாலும் ஒரு ரஜினி ரசிகருக்கு இருக்கும் உணர்வுகளுடனேயே அவரது படங்களைப் பார்க்கிறேன்.

ரஜினியை அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா என உலகம் முழுவதும் தெரியும். அவர் இங்கு வசிப்பதால் சென்னையையும் வெளிநாட்டினர் தெரிந்து வைத்துள்ளனர்.

இந்தியா பற்றி அவ்வளவாக தெரியாத பலர் ரஜினியை நன்றாக தெரிந்து வைத்துள்ளனர். வெளிநாடுகளில் நம்மிடம் அவர் பெயரைச் சொல்லி, அவர் வசிக்கும் ஊரிலிருந்து வருகிறீர்களா என்று கேட்கும்போது உண்மையிலேயே பெருமையாக இருக்கும்.

எனக்கு தமிழ் ரசிகர்களை மிகப் பிடிக்கும். அவர்கள் தலையில் மட்டமான எந்த விஷயத்தையும் திணிக்க முடியாது. நல்ல படங்களை மட்டுமே பார்க்கின்றனர். திறமையிருந்தால் புதுமுக நடிகர்களையும் ஊக்கப்படுத்துகின்றனர்.

காரணமிருந்தால் தவிர, ஹீரோக்களைப் பாராட்டுவதில்லை. தெலுங்கு மொழியில் இதைப் பார்க்க முடியாது. அங்கே ஹீரோக்களை அப்படி துதிக்கிறார்கள்!," என்றார்.

ஒருகல் ஒரு கண்ணாடி... - விமர்சனம்!!!

Saturday, April, 14, 2012
நடிப்பு: உதயநிதி ஸ்டாலின், சந்தானம், ஹன்ஸிகா, சரண்யா

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

எழுத்து - இயக்கம்: ராஜேஷ் எம்

தயாரிப்பு - ரெட் ஜெயன்ட்

உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் எடுத்திருக்கிற முதல் வெற்றிப் படம் என்ற பெருமையை இந்த ஒரு கல் ஒரு கண்ணாடிக்குத் தரலாம்.

அழகான பெண்ணைக் கண்டதும் காதல், அதற்கு நண்பனின் உதவி, காதலில் பிரிவு, இறுதியில் ஒரு புதிய ஹீரோ உதவியுடன் கூடல் என்ற ராஜேஷ் பாணி சிம்பிள் கதை. ஆனால் ஒரு இடத்தில் கூட, அடுத்த சீன் என்ன என்று 'பாஸ்ட் பார்வர்டு' கேட்காத அளவுக்கு, ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்து ரசிக்க வைத்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்!

இரண்டரை மணி நேரம் எப்படிப் போனதென்றே தெரியாத வேகமும் சுவாரஸ்யமும் கொண்ட திரைக்கதையும், கலகலப்பான வசனங்களும்தான் இந்தப் படத்தின் முதுகெலும்பு.

குறிப்பாக சந்தானம். மனிதர் திரையில் அசத்தலாக அறிமுகமாகும்போது ஆரம்பிக்கும் சிரிப்பலை, கடைசி வரை நிற்காமல் தொடர்கிறது. அவரைப் பொறுத்தவரை இன்னும் இரண்டு டஜன் படங்களுக்குத் தாங்கும் இந்த ஓகே ஓகே.

ஹீரோ என்ற வகையில், இன்றைய அலட்டல் பார்ட்டிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் 200 மடங்கு பெட்டர்!

மிக சாதாரணமாக அறிமுகமாகி, காமெடியனால் வாறப்படும் அளவுக்கு இயல்பான நாயகனாக உதயநிதி மனதைக் கவர்கிறார். முதல் படத்துக்கே உரிய சின்னச் சின்ன தயக்கங்கள் அவரிடம் இருந்தாலும், அதுவே அவரை எதார்த்த நாயகனாகக் காட்ட உதவுகிறது. தனக்கு அந்நியமான நடனத்தைக் கூட முடிந்தவரை கெடுக்காமல் ஆடியிருக்கிறார். ஹன்ஸிகாவுடனான காதல் காட்சிகளிலும் இயல்பான நெருக்கத்தைக் காட்டி, தன்னை ஒரு வெற்றிகரமான தமிழ் நாயகனாக பதிவு செய்திருக்கிறார் உதயநிதி. வெல்கம்!

முந்தைய மூன்று படங்களை விட, இதில் ஹன்ஸிகா எவ்வளவோ பரவாயில்லை. பெரிதாக நடிக்கத் தேவையில்லாத பாத்திரம் என்றாலும், தன் தோற்றம் மற்றும் உடல்மொழியால் மனதைக் கவர்கிறார். இந்த ஆண்டு டாப் இடத்தைப் பிடிக்க இந்தப் படம் ஹன்ஸிகாவுக்கு உதவும்.

உதயநிதியின் அம்மாவாக வரும் சரண்யா கலக்கியிருக்கிறார். வழக்கமாக கண்ணீர் சிந்தும் அவர், இந்த பார்வையாளர்கள் கண்ணில் நீர்வரும் அளவு கலகலக்க வைக்கிறார். நல்ல மாறுதல். அவர் கணவராக வரும் அழகம் பெருமாளும் ஓகே.

ஷாயாஜி ஷிண்டேவை காமெடி போலீசாக்கிவிட்டார்கள்.

ராஜேஷ் படத்துக்கே உரிய கவுரவ நடிகர்களாக ஆர்யா, சினேகா மற்றும் ஆன்ட்ரியா. மூவரின் வருகையுமே படத்தை இன்னும் கலகலப்பாக்குகிறது.

குறையென்று சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை. இதுபோன்ற படங்களில் குறைதேடிக் கொண்டிருந்தால், படத்தை ரசிக்க முடியாது.

ஹாரிஸ் ஜெயராஜ் இந்த முறையும் தனது முந்தைய மெட்டுகளை உல்டா பண்ணியிருக்கிறார். ஆனாலும் கேட்கும்படி உள்ளன பாடல்கள். குறிப்பாக அழகே அழகே, வேணாம் மச்சான்...

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு, எடிட்டிங் அனைத்தும் படத்துக்கு தேவையான அளவு கச்சிதமாக உள்ளன.

வித்தியாசம், பரீட்சார்த்தம் என்ற பெயரில் எங்கும் முகம் சுளிக்காமல், சுவாரஸ்யம் குறையாமல் பார்க்கும்படியாக ஒரு படத்தைக் கொடுத்த இயக்குநர் ராஜேஷ் ஹாட்ரிக் அடித்திருக்கிறார்.

ஒருமுறை என்ன... ஒன்ஸ்மோர் பார்க்கலாம்!

-ஷங்கர்

பிசுபிசுத்த வேட்டை!!!

Saturday, April, 14, 2012
வேட்டை வெளியான நேரம் படத்தைவிட வேட்டையை இந்தியில் ‌ரீமேக் செய்வதைப் பற்றிதான் அதிகம் பேசினார் லிங்குசாமி. வேட்டையின் தயா‌ரிப்பாளர் படத்தைப் பார்த்து வியந்து பாராட்டியதாகவும், இந்தியில் படத்தை எடுத்தால் நடிக்க அங்குள்ள ஹீரோக்கள் வ‌ரிசையில் நிற்பதாகவும் பில்டப் ஏற்றப்பட்டது.

இதுவொரு விளம்பர யுக்தி. ஒரு படம் வெளிவரும் முன்பே அதே இயக்குனருடன் ஹீரோ மீண்டும் இணைகிறார் என்று செய்தி வெளியிடுவது போலதான் இதுவும். இந்திக்காரர்கள் க்யூ நிற்கிறார்கள் என்றால் அப்படி என்ன படம் என்கிற ஆவல் வருமல்லவா.

ஆரம்ப ஜோருக்குப் பிறகு இந்தி ‌ரீமேக் பற்றி லிங்குசாமி வாய் திறப்பதில்லை. வசூலாகாத மூன்றாம் தர கமர்ஷியல் படத்தை யார்தான் விரும்புவார்கள். இங்குள்ள ஹீரோக்கள் கால்ஷீட் தருவார்களா என்பதே சந்தேகம். இதில் வானம் கீறி வைகுண்டம் போவதெப்படி.

சைலண்டாக அடுத்து யாரைப் போடலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார் லிங்கு.