Friday, March 23, 2012

உலக நாயகன் கமலுடன், பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் ஜாக்கி சான் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர்!!!

Friday, March 23, 2012
தமிழகத்தில் ஜாக்கி சானின் படங்களை வாங்கி விநியோகிக்கும் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் அடுத்த படத்தில் உலக நாயகன் கமலுடன், பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் ஜாக்கி சான் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர்.

ஏற்கனவே ஜாக்கி சான் நடித்து வெற்றி பெற்ற ஒரு படத்தைத் தழுவி எடுக்கப்படும் இப்படத்திற்கு தலைவன் இருக்கிறான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கமல் தான் ஹீரோவாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சல்மான் கானும், ஜாக்கி சானும் நடிக்கின்றனர்.

கமலஹாசன் நடித்து ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்த தசாவதாரம் படத்தின் இசையை ஜாக்கி சான்தான் வெளியிட்டார் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

வெகு நாட்களுக்குப் பிறகு தற்போது சினிமாவில் முகம் காட்ட உள்ளார்-அரவிந்த் சாமி!!!

Friday, March 23, 2012
தளபதி, ரோஜா, மின்சாரக் கனவு படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை குறிப்பாக பெண்களைக் கவர்ந்த நடிகர் அரவிந்த் சாமி சில காலத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி சொந்த தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

வெகு நாட்களுக்குப் பிறகு தற்போது சினிமாவில் முகம் காட்ட உள்ளார் அரவிந்த் சாமி. இவர் மறு அறிமுகமாக உள்ள படம் கடல். மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் கார்த்தியின் மகன் கௌதம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் பின்னணி இசை குறித்து ஏர்.ஆர். ரஹ்மானும், மணி ரத்னமும் திருச்செந்தூரில் (கடல் பகுதி) சந்தித்து பேசி 2 டிராக்குகளையும் ஓகே செய்துள்ளனர். இந்த இரண்டு பாடல்களில் ஒன்றிற்கு மதன் கார்கேவும், மற்றொன்றிற்கு வைரமுத்துவும் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.

மீனவர்களின் வாழ்க்கை முறையை பதிவு செய்யும் படமாக இது அமையும் என்று படத்தின் தலைப்பே கூறுகிறது.

வித்யாபாலன் போல் என்னால் கவர்ச்சி காட்ட முடியாது: அசின்!!!

Friday, March 23, 2012
வித்யாபாலன் போல் என்னால் கவர்ச்சியாக நடிக்க முடியாது’ என்றார் அசின்.இதுகுறித்து அவர் கூறியதாவது:
நான் எப்போதும் பாதுகாப்பான நிலையை விரும்புகிறேன். அதை கவனத்தில் கொண்டுதான் ஒன்றுக்கும் அதிகமான ஹீரோயின் நடிக்கும் படங்களில் நடிக்கிறேன். மற்ற நடிகைகளுடன் நடிக்கும்போது எனது தொழில் பாதிக்காது. ஏனென்றால் எனக்கு யாருடனும் ஈகோ கிடையாது. அதனால்தான் இந்தியில் வாய்ப்பு கிடைத்தபோது நடிக்க ஒப்புக்கொண்டேன். நடிகைகள் ஒருபோதும் ஒத்துப்போகமாட்டார்கள் என்ற எண்ணம் நிலவுகிறது. என்னுடன் நடித்தவர்கள் இன்னும் நட்பாகவே இருக்கிறார்கள். மற்ற நடிகைகளுடன் இணைந்து நடிப்பதில் எனக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால் அது கதாபாத்திரத்தை பொறுத்தது. படம் பார்ப்பவர்களுக்கு சந்தோஷத்தை தருவதாக என் பாத்திரம் அமைய வேண்டும் என்பது முக்கியம்.

தமிழில் நடிக்க மறுத்ததில்லை. ‘காவலனு’க்கு பிறகு எனக்கு நல்ல கேரக்டர் அமையவில்லை. ‘டாப்சி, காஜல் அகர்வால் போன்றவர்கள் இந்தியில் அறிமுகமானதால் போட்டியா?’ என்கிறார்கள். தினமும் நிறையபேர் இந்தியில் அறிமுகமாகிறார்கள். ஆனால் குறிப்பிட்ட நட்சத்திரங்களுக்கு யாரும் போட்டி கிடையாது. எல்லோரும் திறமையானவர்கள். யாரும் யாருக்கும் போட்டி கிடையாது. ‘டர்ட்டி பிக்சரில் வித்யா பாலன் கவர்ச்சியாக நடித்ததுபோல் நடிப்பீர்களா?’ என்கிறார்கள். அதுபோல் என்னால் கவர்ச்சியாகவும், துணிச்சலாகவும் நடிக்க முடியாது. அப்படிப்பட்ட பாத்திரங்கள் எனக்கு பொருந்தாது.இவ்வாறு அசின் கூறினார்.

மோகன்லால் படத்திலிருந்து பிரகாஷ்ரா‌ஜ் நீக்கம்!!!

Friday, March 23, 2012
பிரகாஷ்ரா‌ஜ் பாண்டிப்படா படத்தின் மூலம் மலையாளத்திலும் பிரபலம். சமீபத்தில் வெளிவந்த அன்வர் படத்திலும் கலக்கியிருந்தார். ஆனாலும் மலையாள சினிமாவின் கறார் ஷெட்யூல் இந்த வில்லனுக்கு எப்போதுமே அலர்‌ஜி.

ரஞ்சித் இயக்கும் ஸ்பி‌ரிட் படத்தில் பிரகாஷ்ரா‌ஜ் நடிப்பதாக இருந்தது. மோகன்லால் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்திலிருந்து திடீரென பிரகாஷ்ரா‌ஜ் தூக்கப்பட்டிருக்கிறார். அவருக்குப் பதில் சங்கர் ராமகிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பிரகாஷ்ரா‌ஜின் திடீர் நீக்கத்துக்கான காரணம் தெ‌ரியவில்லை.

மோசடி புகார்- கந்தா படத் தயாரிப்பாளர் கைது!!!

Friday, March 23, 2012
ஒரே வீட்டை இருவருக்கு விற்ற மோசடியில் கந்தா படத் தயாரிப்பாளர் பழனிவேல் கைது செய்யப்பட்டார்.

சாலிகிராமம் வேலாயுதம் காலனியில் வசித்து வருபவர் சினிமா தயாரிப்பாளர் பழனிவேல். கரண் நடித்துள்ள 'கந்தா' படத்தை தயாரித்துள்ளார்.

விருகம்பாக்கம் சண்முகசுந்தரம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் உள்ள 835 சதுர அடி வீட்டை ஆர்.கே. பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்திடமிருந்து விலைக்கு வாங்கினார்.

பின்னர் இந்த வீட்டை விற்பனை செய்ய ராஜகோபால் என்பவருக்கு பொது அதிகாரம் கொடுத்தார். இதன் அடிப்படையில் அந்த வீட்டை கணேசன் என்பவருக்கு விற்றார் விற்றார் ராஜகோபால்.

ஆனால் இதன் பிறகு அதே வீட்டை பழனிவேல், ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த சிவரஞ்சன் என்பவருக்கு ரூ. 33 லட்சத்து 40 ஆயிரத்துக்கு விற்பனை செய்தார்.

மேலும் இந்த வீட்டின் ஆவணங்களை சென்னை சென்ட்ரல் வங்கியில் வைத்து ரூ. 18 லட்சம் பணத்தையும் பழனிவேல் கடனாக வாங்கியுள்ளார்.

இந்த விவரங்கள் தெரிய வந்த பிறகு, வீட்டை வாங்கிய சிவரஞ்சன் போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராதிகா மேற்பார்வையில் நில மோசடி பிரிவு உதவி கமிஷனர் ஜேசுராஜன், இன்ஸ்பெக்டர் விமலன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணையில் தயாரிப்பாளர் பழனிவேல் மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். சைதாப்பேட்டை 11-வது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பழனிவேல் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடரும் அமலா பாலின் ஆட்டம்!!!

Friday, March 23, 2012
ந‌ரிக்கு நாட்டாமை கிடைத்தால் கிடைக்கு இரண்டு ஆடு பிடிக்கும். அப்படிதான் இருக்கிறது அமலா பாலின் அலட்டல். கேரளாவில் சாதாரண குடும்பத்தில் பிறந்த இவரை மலையாள சினிமா துணை நடிகை அளவுக்கே ம‌ரியாதை செய்தது. அறிமுகமான நீலத்தாமராவில் மிக்சிறிய வேடம். தமிழில் வீரசேகரன், சிந்துசமவெளி என ஓடாத இரு படங்கள்.

FILEஅமலா பாலின் ஜாதகத்தை திருத்திய எழுதியது மைனா. அதன் பிறகு விக்ரம் இவரது திறமைக்கு மீறிய வாய்ப்பை அளித்து அமலா பாலின் அகந்தையை ஊட்டி வளர்த்தார். அதன் பிறகு இவர் காட்டியதெல்லாம் இங்கிலாந்து இளவரசி செய்யத் தயங்கும் கூத்துகள். இரண்டு சேனல்களுக்கு மட்டுமே பேட்டி தருவேன், படத்தின் புரமோஷனுக்கு வர மாட்டேன் என்று இவர் காட்டும் அலட்டல் அகந்தையின் உச்சம். தெலுங்கில் படங்கள் வர ஆரம்பித்ததால் ஒப்புக் கொண்ட தமிழ்ப் படங்களை உதற ஆரம்பித்திருக்கிறார். முக்கியமாக ஜெயம் ரவி நடிக்கும் படம்.

ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயா‌ரிப்பில் ஜெயம் ரவி நடிக்கும் பூலோகம் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்ட அமலா பால் தற்போது கால்ஷீட் பிரச்சனை முடியாது என்று கை வி‌ரித்திருக்கிறார். விஜய், அ‌‌ஜீத், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் மட்டுமே அமலா பால் இனி நடிப்பார், அதனால்தான் இந்த முடிவு என அவ‌ரின் அல்லக்கைகள் அடித்துவிடுகிறார்கள்.

ராஜ்கிரணின் உத்சவமூர்த்தி!!!

Friday, March 23, 2012
'என் ராசாவின் மனசிலே' படத்தில் ஆட்டு நல்லி எலும்பை அனாயாசமாக கடித்து மெல்லும் ராஜ்கிரணில் ஆரம்பித்து 'நந்தா'வில் புதுக்கோட்டை அரச வாரிசாக நடித்து பாராட்டுகளை அள்ளிக்கொண்டது வரை ராஜ்கிரண் இந்த 60 வயதிலும் ஆக்ஷன் ஹீரோதான்! அதேபோல இப்போதும் ராஜ்கிரணின் சம்பளம் குறையவே இல்லை. ஆண்டுக்கு ஒரு படத்தில் நடித்தாலும், கதையும் சம்பளமும் திருப்தியாக இருக்க வேண்டும் என்பது அவரது கோட்பாடு. 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' படத்தை இயக்கிய ராஜ்கிருஷ்ணா முதன் முதலாக இயக்கிய படம்தான் 'பகடை'. இதில் ராஜ்கிரண்தான் ஹீரோ. சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில், அந்தப் படத்தை தொடர முடியாமல் போனது தயாரிப்பாளரால். வேறு வழியில்லாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்ட 'பகடை', மீண்டும் ராஜ்கிருஷ்ணாவின் முயற்சியால் வளரப் போகிறது. முன்பு பேசிய அதே சம்பளத்தை அதிகப்படுத்தாமல் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் ராஜ்கிரண். கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, படத்தின் பெயரையும் உத்சவமூர்த்தி என்று வைத்திருக்கிறார்களாம். தெலுங்கிலும் ராஜ்கிரணுக்கு ஒரு ரசிகர் கூட்டம் இருப்பதால் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் படத்தை எடுக்க இருக்கிறார்கள். ராஜ்கிரண் என்றாலே கதாபாத்திரத்தோடு ஐக்கியமாகி விடும் அசத்தல் நடிகர். இந்தப் படம் அவருக்கு 50-வது படம் என்பதால் நிச்சயமாக ஒரு அதிரடியை எதிர்பார்க்கலாம்! பின்ன என்ன.. சந்தோஷமா பகடைய உருட்டுங்க.......

'மாற்றானின்' 'கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா'!!!

Friday, March 23, 2012
'அயன்' கூட்டணி மீண்டும் இணைந்து வெளியாக இருக்கும் படம் 'மாற்றான்'. இப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. படம் ஆரம்பிக்கும் போது வெளியான போஸ்டர் தவிர, எந்த ஒரு புகைப்படம் கூட வெளியாகாமல் பாதுகாத்து வருகிறது படக்குழு. '7ம் அறிவு' படத்திற்குப் பிறகு இப்படத்திற்கு தொடர்ச்சியாக 8 மாதங்கள் தேதிகள் ஒதுக்கி, கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. 'கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா' என்ற விவேகா வரிகளில் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு மெலடி பாடலை 'மாற்றான்' படத்திற்காக சமீபத்தில் தயார் செய்து இருக்கிறார். படத்தின் எடிட்டர் ஆண்டனி தனது டிவிட்டர் இணையத்தில் "மாற்றான் படம் இங்கே ஒரு டிவிஸ்ட், அங்கே ஒரு டிவிஸ்ட் என்று ஒரே டிவிஸ்ட்டா போகுது படம்.. இடைவேளையில் சீட்டை விட்டு எந்திரிக்க மாட்டீர்கள் அங்கேயும் இருக்கிறது ஒரு டிவிஸ்ட்" என்று தெரிவித்து இருக்கிறார். ஒருவேளை தியேட்டர் சீட்ல ஃபெவிகால் தடவி வெச்சிருப்பாங்களோ?! திருப்பம் திருப்பம்னு திரைக்கதைய திசை திருப்பிடாதீங்க......

லண்டனில் இசை கோர்க்கும் இளையராஜா!!!

Friday, March 23, 2012
நீதானே என் பொன்வசந்தம் படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளுக்காக லண்டன் சென்றுள்ளார் இசைஞானி இளையராஜா.

கவுதம் மேனன் இயக்கும் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் பாடல்கள் மற்றும் இசை பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துவிட்ட இளையராஜா, அவற்றை லண்டனில் மாஸ்டரிங் செய்கிறார். இதற்காக அவர் நேற்று லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள ஏஞ்சல் ஸ்டுடியோவில், ஹங்கேரி இசைக் குழுவினருடன் இணைந்து இசைப் பணிகளை மேற்கொள்கிறார்.

ஒரு வாரம் வரை அங்கே தங்கியிருந்து படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளையும் முடிக்கிறார். படத்தின் இயக்குநர் கவுதம் மேனனும் உடன் சென்றுள்ளார்.

ரஜினி, அஜீத் மீது பொய்புகார் கொடுத்தவர் இப்போது எங்கள் மீதும் கொடுத்திருக்கிறார் - தாணு!!!

Friday, March 23, 2012
ரஜினி, கமல் போன்றவர்கள் மீது முன்பு பொய் புகார் கொடுத்தது போலவே, இப்போது எங்கள் மீதும் கொடுத்திருக்கிறார் ஜாகுவார் தங்கம் என தயாரிப்பாளர் சங்க நிர்வாகி கலைப்புலி தாணு கூறியுள்ளார்.

சினிமா ஸ்டன்ட் மாஸ்டரான ஜாகுவார் தங்கம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஒரு பரபரப்பு புகார் அளித்தார்.

அதில், ‘தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், கலைப்புலி தாணு ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், துப்பாக்கியால்தான் பேசுவோம் என்று எச்சரித்ததாகவும்' குற்றம் சாட்டி, நடவடிக்கை கோரினார்.

இதுகுறித்து, தி.நகர் துணை கமிஷனர் அசோக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

இதையடுத்து, எஸ்.ஏ.சந்திரசேகரன் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலை சந்தித்தார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், "19-ம் தேதி ஆந்திரா கிளப்பில் நடந்த தயாரிப்பாளர் சங்க சிறப்பு கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். கூட்டம் முடிந்து வெளியே வரும்போது வடிவேலு என்பவர் என்னை வழி மறித்தார். சட்டையை பிடித்து இழுத்து தகாத முறையில் நடந்து கொண்டார். இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளோம்.

இந்நிலையில், கொலை மிரட்டல் விடுத்ததாக ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் என் மீது பொய்யான புகார் கொடுத்துள்ளார். இது குறித்து விளக் கம் அளிக்க கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தேன்," என்றார்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கூறுகையில், "ஜாகுவார் தங்கம் எங்கள் மீது கொடுத்திருப்பது பொய்யான புகார். இவர் எங்கள் மீதுமட்டுமா இப்படி புகார் கொடுத்திருக்கிறார்... ஏற்கனவே நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி, தம்பி அஜித் போன்றவர்கள் மீதும் பொய்யான புகார் கொடுத்தவர். இது பொய்யான புகார்தான் என்பதற்கு டிவிடி ஆதாரம் ஒன்றையும் கொடுத்துள்ளோம். பெப்சி அமைப்பை சேர்ந்தவர்களே ஜாகுவார் தங்கம் மீது அதிருப்தியில்தான் இருக்காங்க," என்றார்.

ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி டீமை வாழ்த்திய கமல்!!!

Friday, March 23, 2012
ஒரு படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கும் முன் அதற்கான முன் ஒத்திகை அவசியம் என்று வலியுறுத்தி வருபவர் கமல் ஹாசன். தனது படங்களுக்கு பெரும்பாலும் இந்த ஒத்திகை முறையையே அவர் கடைப் பிடிக்கிறார்.

திரையுலகில் ஒரு பிரிவினர், இந்த விஷயத்தில் கமலை வழிகாட்டியாகக் கொண்டு, இதே முறையை பின்பற்ற ஆரம்பித்துள்ளனர்.

அந்த வகையில், இந்த வாரம் வெளியாகும் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி படமும் சரியான முன் ஒத்திகையுடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகும்.

இந்தப் படத்தின் நடிகர்கள் அனைவரும் புதுமுகங்கள். இவர்களுக்கு 372 நாட்கள் பயிற்சி கொடுத்து, பின்னர் படப்பிடிப்புக்குக் கிளம்பினார் இயக்குநர் ஷண்முகராஜன்.

இதனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்க முடிந்ததாம். சமீபத்தில் படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல்களை கமல்ஹாஸனுக்கு போட்டுக் காட்டினார் இயக்குநர் ஷண்முகராஜன்.

படப்பிடிப்பு நடத்திய விதம், ஒத்திகை குறித்தெல்லாம் கமல்ஹாஸனிடம் அவர் எடுத்துக் கூற, கமலும் மகிழ்ச்சியுடன் படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.

"கமல் சார்தான் எங்களுக்கு முன்னோடி. அவரது யோசனைப்படி செயல்பட்டது எனக்கு மிகுந்த பயனை அளித்தது. இதை அவரிடமே கூறியபோது, மிகவும் சந்தோஷப்பட்டார்," என்றார்.