Thursday, March 22, 2012

ஜெயம் ரவி படத்திலிருந்து அமலா விலகல்!!!

Thursday, March 22, 2012
ஜெயம் ரவி நடிக்கும் பூலோகம் படத்திலிருந்து விலகினார் அமலா பால்.

வீரசேகரன் என்ற படத்தில் அறிமுகமாகி, சிந்து சமவெளி மூலம் வெளியில் தெரிந்தவர் அமலா. ஆநால் இந்த இரு படங்களைப் பற்றி அவர் பேசுவதில்லை. மைனாவில் அவர் புகழ்பெற்றதால், மைனா நாயகியாகவே தன்னை சொல்லிக் கொள்கிறார்.

காதலில் சொதப்புவது எப்படி’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்திற்கு பிறகு இரண்டு மலையாள படங்களில் நடித்து வருகிறார்

இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்க, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் ‘பூலோகம்’ படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆனார்.

ஆனால் திடீரென இப்போது படத்திலிருந்து விலகிக் கொண்டார் அமலா. அவரிடம் காரணம் கேட்டதற்கு, தனது கால்ஷீட் இல்லாததால் இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார்.

ஏற்கெனவே தனுஷ் படமான 3-ல் நடிக்க ஒப்பந்தமாகி போட்டோ ஷூட் முடிந்த நிலையில் அமலா விலகியது நினைவிருக்கலாம்.

மூன் நடிகையை நிராகரித்த ஹீரோ!!!

Thursday, March 22, 2012
ஐ காட் ஹீரோ புது வீட்டுக்கு குடிபோயிருக்காரு. இதுக்கான விழாவுக்கு தன்னோட நடிச்ச நடிகைகளை மட்டுமில்லாம, தனக்கு தோஸ்தான நடிகைகளையும் கூப்பிட்டாராம்... கூப்பிட்டாராம்... ஆனா மூன் நடிகையை மட்டும் கூப்பிடலையாம். இதுக்கு காரணம், நடிகரோட பேரன்ட்ஸ்தானாம். மூன் நடிகையை கூப்பிடக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டாங்களாம்... போட்டாங்களாம்... நடிகரும் சரின்னு ஒப்புக்கிட்டாராம்... ஒப்புக்கிட்டாராம்...

படத்துக்கு கதை எழுதுறது ரொம்பவே கஷ்டம்னு மில்க் இயக்கம், தன்னோட உதவியாளர்கள்கிட்ட சொல்றாராம்... சொல்றாராம்... இதனால புது படக் கதையை மலையாள புக்லேருந்து எடுத்திருக்காராம். இனிமே வசனத்துக்கு மட்டுமில்லாம, கதைக்கும்
எழுத்தாளர்களை தேடிப் போக இயக்கம் முடிவு எடுத்திருக்காராம்... எடுத்திருக்காராம்...

மணியானவரு படத்துல நடிக்கிறதால இந்திக்கும் போயிடலாம்னு சமந்த நடிகை கணக்கு போட்டிருக்காராம்... போட்டிருக்காராம்... சமீபத்துல மும்பை போனவரு கிளு கிளு போட்டோ ஷூட் நடத்திட்டு வந்தாராம்... வந்தாராம்... பராகான் இயக்குற புது படத்துக்கு ஹீரோயின் தேடுறதை கேள்விப்பட்டு, அந்த போட்டோக்களை பராகான் ஆபீசுக்கு அனுப்பி இருக்காராம்... இருக்காராம்...

மரணப் பள்ளத்தாக்கில் விழுந்த ஹீரோவை காப்பற்றிய சூப்பர் சுப்பராயன்!!!

Thursday, March 22, 2012
படப்பிடிப்பின்போது 4000 அடி ஆழமுள்ள மரணப் பள்ளத்தாக்கில் தவறி விழுந்த ஹீரோவை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் காப்பாற்றினார்.

திருநல்லான் பிலிம்ஸ் தயாரிக்கும் 'என் பெயர் குமாரசாமி' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பின்போது நடைபெற்ற ஓர் அதிர்ச்சிகரமான சம்பவம் படக்குழுவினரை நிலைகுலையச் செய்துள்ளது.

ஏறத்தாழ 4000 அடி ஆழமுள்ள மரணப் பள்ளத்தாக்கின் விளிம்பில் நின்று ஹீரோ ராமும், புதுமுகம் யுவாவும் உரையாடுவது போன்ற காட்சி ஒன்றை இயக்குநர் ரதன் சந்திரசேகர், ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனின் உதவியுடன் படமாக்கிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று யாரும் எதிர்பாராவண்ணம் ஹீரோ ராம் அந்த மாபெரும் மலைச் சரிவில் நிலை தடுமாறி விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயண் பாய்ந்து சென்று ராமை பள்ளத்தாக்கில் விழாமல் காப்பாற்றினார். இதனால் நேரவிருந்த ஒரு விபத்து தடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சற்று நேரம் படப்பிடிப்பு தடைபட்டு அங்கு பரபரப்பு நிலவியது. சற்று இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அந்தக் காட்சியில் ராம் துணிச்சலுடன் நடித்து முடித்தார். தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் இதுபோன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று சூப்பர் சுப்பராயன் ஹீரோ ராமுக்கு அறிவுரை கூறினார்.

விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பானுபிரியா முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். பிரபல போஜ்புரி நாயகி அந்தரா பிஸ்வாஸ் நாயகியாக நடிக்க, ராதாரவி, பப்லு, ரிஷா, பாத்திமா பாபு, யோகி தேவராஜ் இவர்களுடன் மலையாள காமெடியன் பைஜு தமிழில் அறிமுகமாகிறார்.

தஷி இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை யுகபாரதி, நெல்லை பாரது, தாணு கார்த்திக், தொல்காப்பியன், சாந்தி தேசிங் ஆகியோர் எழுதுகிறார்கள். ஜீவ சாண்டில்யன் ஒளிப்பதிவு செய்கிறார். வி.டி.விஜயன் படத்தொகுப்பை கவனிக்க, சூப்பற் சுப்பராயண் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார்.

'கொலவெறி' புகழ் '3' மார்ச் 30ல் ரிலீஸ்!!!

Thursday, March 22, 2012
கொலவெறி... என்ற ஒரேயொரு பாடலால் உலகமெங்கும் பிரபலமாகி, பிஸினஸில் எக்கச்சக்க பணத்தையும் தனுஷுக்கு ஏகப்பட்ட வாய்ப்பையும் அள்ளிக் கொட்டிய '3' வரும் மார்ச் 30-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

தனுஷ் - ஸ்ருதி ஹாஸன் நடித்துள்ள இந்தப் படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தயாரித்துள்ளார்.

ரஜினி குடும்பத்துக்கு மிக நெருங்கிய உறவுக்கார இளைஞர் அனிருத் இசையமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தையும் தனுஷே எழுதியுள்ளார்.

கொலவெறி பாடலுக்கு கிடைத்த பெரும் புகழும் வரவேற்பும், தனுஷுக்கு இந்திப் பட உலகில் பெரும் வரவேற்பைக் கொடுத்துள்ளது. அவர் இப்போது ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஒரு இந்திப் படத்தை இயக்குகிறார்.

படத்தின் வெளியீட்டு உரிமை பெரும் விலைக்குப் போயுள்ளது. ரஜினி படங்கள் தவிர வேறு எந்த நடிகர் படத்துக்கும் கிடைக்காத அளவு பிறமொழி உரிமைக்கான விலை 3-க்கு கிடைத்துள்ளது.

சென்னையில் திரையுலகினருக்காக படத்தின் சிறப்புக் காட்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Thursday, March 22, 2012
* கோ வில்லன் அஜ்மல் கருப்பம்பட்டி, வெற்றி செல்வன் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

* சமீபத்தில் கிரிக்கெட் போட்டியை காணச் சென்ற ஸ்ரேயாவை ரசிகர்கள் சுற்றி வளைத்துக்கொண்டனர். உடனே அவரது கையைப்பிடித்து இழுத்து வந்து ரசிகர்களிடமிருந்து மீட்டாராம் இந்தி நடிகர் அக்ஷய் குமார்.

* பெண்களின் உரிமையை மீட்டெடுப்பதற்கான மகளிர் அமைப்பில் இணைந்து போராடப்போகிறாராம் ஜோதிர்மயி.

* வித்யாபாலன் இந்தியில் நடித்துள்ள கஹானி, படத்தை தமிழில் ரீமேக் செய்தால் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் சினேகா.

*தமிழில் ஜாக்கிசான், சல்மான் கானை இணைந்து நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்
.

வட சென்னைக்கு ஆதரவாக உருவாகும் மற்றொரு திரைப்படம்!!!

Thursday, March 22, 2012
தமிழ் சினிமாவில் ரவுடி சப்ஜக்ட் என்றாலே கேமராக்கள் கேட் பண்ணும் இடம் வட சென்னை தான். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் வட சென்னை ரவுடிசம் நிறைந்த இடம் அல்ல என்பதை விளக்கும் வகையிலும் சில திரைப்படங்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் உருவாகும் புதுப்படம் தான் 'பொழுது போக்கு.'

வட சென்னை என்றால் ரவுடியிசம், அராஜகம் என்கிற எண்ணத்தை மாற்றும் வகையில் அங்கு வாழும் நான்கு இளைஞர்களின் கலகலப்பான எதார்த்தமான வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக 'பொழுது போக்கு' வளர்கிறது.

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தை, புதுமுக இயக்குநர் ஏ.சரவணகுமார் இயக்குகிறார். கே.எஸ்.கோபி ஒளிப்பதிவு செய்கிறார். ஹார் மோனி இசையமைக்கிறார்.

இப்படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெறுகிறது. இரண்டு பாடல்கள் சென்னையிலும், மூன்று பாடல்களை வெளிநாட்டிலும் படமாக்க திட்டமிட்டிருக்கின்றனர். சென்னை, வட சென்னை, தரமணி, புதுப்பேட்டை மற்றும் கோவா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கும் 'பொழுது போக்கு' படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இப்படத்தின் துவக்க விழா இன்று (மார்ச் 22) பூஜையுடன் சென்னை, ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

இசை அமைப்பாளர்கள் இடையே போட்டியால் ஒதுங்கிவிட்டேன் பாடகர் மனோ!!!

Thursday, March 22, 2012
இசை அமைப்பாளர்களுக்கிடையே போட்டி அதிகமாகிவிட்டதால் இசை அமைப்பாளர் ஆகாமல் ஒதுங்கிவிட்டேன் என்றார் பாடகர் மனோ.
இது பற்றி அவர் கூறியதாவது:

எனக்கு பாடகராக வாய்ப்பு தந்தது எம்.எஸ்.விஸ்வநாதனும், இளையராஜாவும்தான். இசை அமைப்பதற்கு இன்று போட்டி அதிகரித்துவிட்டது. சொந்த செலவில் வந்து ஒரு பாடலுக்கு இசை அமைத்து கொடுத்துவிட்டு போங்கள் என சொல்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள். அதனால்தான் தெலுங்கு இசை அமைப்பாளர் சக்ரவர்த்தியிடம் இசை உதவியாளராக பணியாற்றியும் நான் இசை அமைக்காமல் ஒதுங்கிவிட்டேன்.

என் மகன் ஷகிர். பாடும் திறமை இருந்தாலும் நடிப்பில் ஆர்வம் அதிகம். ‘நாங்கÕ படத்தில் வில்லன் வேடத்தில் இயக்குனர் செல்வா அறிமுகப்படுத்தினார். ஹீரோ ஆக வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. வில்லன், குணசித்ர வேடம் என எந்த வாய்ப்பு வந்தாலும் நடிப்பதாக முடிவு செய்திருக்கிறார். பழைய நடிகர்கள்போல் அவரே பாடி அவரே நடிக்கவும் பயிற்சி பெற்றிருக்கிறார். எதிர்காலத்தில் அவரை வைத்து படம் தயாரிப்பேன்.

தயாரிப்பாளர் மீது புகார் ஸ்ரேயா திடீர் பல்டி!!!

Thursday, March 22, 2012
தான் நடித்த தெலுங்கு படத்தை தமிழில் ரிலீஸ் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று புகார் கொடுத்த ஸ்ரேயா திடீரென அந்த புகாரை வாபஸ் பெற்றார்.
மலையாளத்தில் ஸ்ரேயா நடித்த போக்கரி ராஜா படத்தை தமிழில் ‘ராஜா போக்கிரி ராஜா என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து ரிலீஸ் செய்ய உரிமை பெற்றார் தயாரிப்பாளர் பாண்டியன். ரிலீஸுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த வேளையில் தயாரிப்பாளருக்கு ஸ்ரேயா எதிர்ப்பு தெரிவித்தார். ‘மலையாளத்தில் நான் நடித்த படத்தை வேறு மொழியில் ரிலீஸ் செய்யக்கூடாது என்று ஒப்பந்தம் போட்டுத்தான் நடித்தேன். ஆனால் என் அனுமதி இல்லாமல் அப்படத்தை தமிழில் பாண்டியன் என்பவர் ரிலீஸ் செய்கிறார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று நடிகர் சங்கத்தில் புகார் செய்தார் ஸ்ரேயா.

இந்நிலையில் தயாரிப்பாளர் பாண்டியன், ஸ்ரேயாவை நேரில் சந்தித்து பேசினார். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து தான் அளித்த புகாரை வாபஸ் பெற ஸ்ரேயா முடிவு செய்துள்ளார்.
இது குறித்து தயாரிப்பாளர் கூறும்போது, ‘கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஸ்ரேயா மற்றும் அவரது பெற்றோருடன் பேசினேன். அப்போது அவர் நடித்த படத்தை ரிலீஸ் செய்வது பற்றியும், அதில் ஏற்பட்ட குறைபாடுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. மேலும் திட்டமிட்டபடி படம் ரிலீஸ் செய்யாவிட்டால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதை அவரிடம் கூறினேன். அதை அவர்கள் புரிந்துகொண்டனர். இதையடுத்து என் மீது தந்த புகாரை வாபஸ் பெறுவதாக ஒப்புக்கொண்டார். இப்படத்தை விரைவில் சென்சாருக்கு திரையிட்டு, பின் இம்மாதம் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறேன் என்றார்.

தயாரிப்பாளர்-பெப்சி தகராறினால் தள்ளிப்போன படங்கள்!!!

Thursday, March 22, 2012
சினிமா தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு போராடி வருகிறார்கள். வேலை நிறுத்தம், உண்ணாவிரதங்களை நடத்தினர். இதையடுத்து அரசு தொழிலாளர் நல ஆணையம் இதில் தலையிட்டு தயாரிப்பாளர்களுக்கும் பெப்சி தொழிலாளர்களுக்கும் இடையே சம்பள நிர்ணய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சம்பளத்தை கூட்டி தராத தயாரிப்பாளர்கள் படங்களில் தொழிலாளர்கள் பணியாற்ற மறுப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. சில தயாரிப்பாளர்கள் ஊதியத்தை அதிகரித்து கொடுக்க முன்வந்தனர். அவர்கள் படங்கள் முடங்காமல் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கிறது. தயாரிப்பாளர்கள் பெப்சி தொழிலாளர்கள் மோதலால் நிறைய படங்கள் முடங்கி உள்ளன. இதனால் நடிகர், நடிகைகள் தவிப்பாகி இருக்கிறார்கள். சமீபத்தில் கார்த்தியின் 'அலெக்ஸ் பாண்டியன்', விதார்த் நடிக்கும் 'காட்டு மல்லி' படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. இவர்கள் தகராறினால் நிறைய படங்களின் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போய் உள்ளது. தனுஷின் '3' படம் கடந்த பொங்கலுக்கே ரிலீசாவதாக இருந்தது. பெப்சி போராட்டத்தால் டப்பிங், ரீ ரிக்கார்டிங் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. தற்போது வருகிற 30-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகியுள்ள 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படம் காதலர் தினத்தில் ரிலீசாவதாக இருந்தது. தற்போது அப்படம் ஏப்ரல் 6-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அஜித்தின் 'பில்லா 2' படம் தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 13-ல் ரிலீசாவதாக இருந்தது. பெப்சி போராட்டத்தால் மே மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. சூர்யாவின் 'மாற்றான்' படம் ஏப்ரலில் ரிலீசாக இருந்தது. அப்படத்தை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர். கார்த்தியின் 'சகுனி' படம் பொங்கலுக்கு வர இருந்தது. அதை ஏப்ரல் 13-ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். ரஜினியின் 'கோச்சடையான்' படத்தை சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்டு 15-ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். அப்படம் தற்போது தீபாவளிக்கு தள்ளிப் போகிறது. கமலின் 'விஸ்வரூபம்' படம் மே மாதம் வருவதாக இருந்தது. தற்போது அது ஜூலைக்கு தள்ளிப்போகிறது. வேதாளம் முருங்கை மரம் ஏறியிருக்கு.. எப்ப இறங்கும்னு தெரியல....

பிரிவுக்கு காரணம் என்ன? திருப்பதி கோயிலில் நயன்தாரா உருக்கம்: பக்தர்களுடன் வரிசையில் நின்று திருப்பதி கோவிலில் வழிபாடு!!!

Thursday, March 22, 2012
நடிகை நயன்தாரா-பிரபுதேவாவை தீவிரமாக காதலித்தார். அவரை திருமணம் செய்வதற்காகவே சினிமாவுக்கு முழுக்கு போட்டார். கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார். திருமணத்துக்கு நாள் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் கருத்து வேறுபாடுகளால் பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் இடையேயான காதல் முறிந்தது.

இதனால் மீண்டும் சினிமாவில் நடிக்க நயன்தாரா முடிவு செய்தார். சில புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்து உள்ளார்.இந்த நிலையில் நயன்தாரா நேற்று குடும்பத்தினருடன் திருப்பதி வந்தார்.

ஏழு மலையான் கோவிலில் நயன் தாரா வழிபட்டார். நெற்றியில் சந்தனம், குங்கும பொட்டு வைத்திருந்த நயன்தாரா வைகுண்டவாசல் வழியாக கோவிலுக்குள் சென்றார். பக்தர்களுடன் பக்தராக வரிசையில் நின்றார்.
சுமார் 30 நிமிடம் வரிசையில் காத்து இருந்தார்.

நயன்தாராவை பார்த்ததும் பக்தர்கள் மகிழ்ச்சியாக ஆரவாரம் செய்தனர். சிலர் அவருடன் கைகுலுக்கினர். அவர்களுடன் நயன்தாரா சிரித்து பேசினார். மூலஸ் தானத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுக்கு இடையே நயன்தாரா ஏழுமலையானை பயபக்தியுடன் தரிசித்தார்.பின்னர் உண்டியலில் காணிக்கை செலுத்தினார்.

திருப்பதி கோவிலுக்கு வந்தது குறித்து நயன்தாரா கூறியதாவது:-

நான் முதன்முறையாக ஏழுமலை தரிசனம் செய்கிறேன். அவரின் அருளும், ஆசியும் பெற வந்தேன். இது எனக்கு மனநிறைவையும், சந்தோஷத்தையும் தருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரிடம், பிரபுதேவாவுடன் உங்கள் காதல் முறிந்தது ஏன்? என்று நிருபர்கள் கேட்டனர்.

நடிகர் பிரபுதேவாவுடன் பிரிவுக்கு காரணம் என்ன என நிருபர்கள் கேட்டபோது, நடிகை நயன்தாரா கண் கலங்கினார்.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நடிகை நயன்தாரா நேற்று வந்தார். ரூ.300க்கான சிறப்பு தரிசன டிக்கெட்டில் சுவாமியை தரிசனம் செய்தார்.
தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், நீண்ட நாட்களுக்கு பிறகு சாமியை தரிசனம் செய்தது மனதுக்கு சந்தோஷமாக உள்ளது. மனதில் இருந்த பாரம் எல்லாம் நீங்கியது போல் உணர்கிறேன் என்றார்.

பிரபுதேவாவுக்கும், உங்களுக்கும் இடையே விரிசல் ஏற்பட காரணம் என்ன என நிருபர்கள் கேட்டபோது, கோயிலில் இந்த மாதிரி கேள்வியை கேட்காதீர்கள் என்று கூறி கண் கலங்கினார்.
அவருடன் வந்த உதவியாளர் கூறுகையில், சிவன் கோயிலில் பிரபுதேவாவும், பெருமாள் கோயிலில் நயன்தாராவும் தரிசனம் செய்யுமாறு ஜோசியர்கள் அறிவுறுத்தியிருந்தனர். அதனால் இருவருக்கும் நல்லது நடக்கும் என்று கூறியிருந்தனர். அதன்படி இருவரும் தரிசனம் செய்துள்ளனர் என்றார்.

இந்த தகவலால் பிரபுதேவா நயன்தாரா பிரிந்துவிட்டனர் என்ற பரபரப்புக்கு தற்போது முடிவு கிடைத்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். அதே நேரம், பிரபுதேவாவுடன் திருமணத்துக்கு தயாரானபோது படங்களே ஒப்புக்கொள்ளாமல் சின¤மாவுக்கு முழுக்கு போட இருந்தார் நயன்தாரா. ஆனால் இப்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் 4 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர்கள் பிரிந்துவிட்டது உண்மைதான் என திரையுலகினர் கூறுகின்றனர்.

பாலிவுட்டில் ஒருத்தியாகிவிட்டேன்: அசின் அலட்டல்!!!

Thursday, March 22, 2012
இப்போதைக்கு தமிழ் சினிமாவுக்கு திரும்பும் ஐடியாவே இல்லை என்கிறார் நடிகை அசின். கோலிவுட்டில் முன்னணியிலிருந்து, பாலிவுட்டுக்குப் போய் ஒரே படத்தில் உச்சத்துக்குப் போய், அடுத்த படத்தில் விழுந்தவர் அசின். பாலிவுட் புறக்கணித்ததால் மீண்டும் தமிழில் விஜய்யுடன் நடித்தார். ஆனால் மீண்டும் பாலிவுட் வாய்ப்புகள் வரத் தொடங்கியதும், தமிழில் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "முன்பு நான் பாலிவுட்டுக்கு அந்நியமாக இருந்தேன். அதனால்தான் சரியான இடம் கிடைக்கவில்லை. இப்போது நான் பாலிவுட்டில் ஒருத்தியாகிவிட்டேன். அந்த மொழியும், உடையும், ஸ்டைலும், கலாச்சாரமும் இப்போது எனக்குப் பழகிவிட்டது. இனி அடுத்தடுத்த இந்திப் படங்களில் நானே சொந்த குரலில் பேச உள்ளேன். படங்களும் கணிசமாக கைவசம் உள்ளன. இன்றைய தேதிக்கு நான்கு பெரிய படங்களில் நடிக்கிறேன். தமிழில் நடிக்கக் கூடாது என்றில்லை... ஆனால் பாலிவுட்டில் செட்டிலாகி இருக்கிறேன். அங்கு என் இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டு, நல்ல கதைகள் கிடைத்தால் மட்டும் தமிழில் பண்ண யோசிப்பேன்," என்றார். பத்தோட பதினொன்னா இருக்கிறதுல என்ன பீத்தல் வேண்டி கிடக்கு.....?

சித்தார்த்தை விட்டு பிரிந்துவிட்டேனா? ஸ்ருதி ஹாசன் பேட்டி!!!

Thursday, March 22, 2012
சித்தார்த்தை விட்டு பிரிந்துவிட்டதாக கூறப்படுவது பற்றி ஸ்ருதி ஹாசன் பதிலளித்தார்.
ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் ஸ்ருதிஹாசன் நடிக்கும் படம் 3. இதில் நடித்தபோது தனுஷுக்கும், ஸ்ருதி ஹாசனுக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக தகவல் பரவியது. அதேபோல் பாய்ஸ் பட ஹீரோ சித்தார்த்துடன் ஸ்ருதி ஹாசன் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்பட்டது. இப்போது அவர்கள் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் ஐதராபாத்தில் 3 தெலுங்கு பதிப்பின் பாடல் கேசட் வெளியீட்டு விழா நடந்தது. இதன்பின் நிருபர்களிடம் ஸ்ருதி கூறியது

3 படத்தில் எனது வேடம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாத்திரமாகவே மாறிவிட்டேன். இது எனக்கு சவாலாக அமைந்தது. இதற்கு முன்பு எந்த எல்லைக்குட்பட்டு நடித்துக்கொண்டிருந்தேனோ அந்த எல்லைகளை தாண்டிய நடிப்பை தரவேண்டி இருந்தது. அது எனக்கு சந்தோஷம்.இப்படத்தில் நடித்தபோது தனுஷுக்கும் எனக்கும் காதல் ஏற்பட்டதாக வதந்திகள் பரவியது. தனுஷ் எனக்கு நல்ல நண்பர். அடக்கமானவர். அவருடன் என்னை இணைத்து வந்த வதந்திகள் எல்லாமே தவறானவை. சித்தார்த்தை விட்டு நான் பிரிந்து விட்டதாக சொல்கிறார்கள். எனக்கும் சித்தார்த்துக்கும் எந்த உறவும் கிடையாது. என்னைப்போல் அவரும் நடிகர். அவ்வளவுதான்.

விடிய விடிய நிர்வாண காட்சி படப்பிடிப்பு: இரவு முழுவதும் நடித்தேன்: காதல் சரண்யா!!!

Thursday, March 22, 2012
காதல்' சரண்யா மழைக்காலம்' என்ற புதிய படத்தில் நடித்து வந்தார். ஓவிய கல்லூரியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை இது. புதுமுகம் ஸ்ரீராம் கதாநாயகனாகவும், காதல்' சரண்யா கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள். எஸ்.தீபன் டைரக்டு செய்திருக்கிறார்.

சமுதாயத்துக்கு தேவையான நல்ல கருத்துக்களை கூறும் படம் என்று கூறி, தணிக்கை குழுவினர், இந்த படத்துக்கு யு' சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள்.

கதைப்படி, காதல்' சரண்யா ஓவிய கல்லூரியில் நிர்வாண போஸ்' கொடுப்பது போலவும், அதை கதாநாயகன் ஓவியமாக வரைவது போலவும் ஒரு காட்சி இடம் பெறுகிறது.

இந்த காட்சி, தத்ரூபமாக அமைய வேண்டும் என்று டைரக்டர் தீபன் விரும்பினார். அதை, காதல்' சரண்யாவிடம் எடுத்து சொன்னார். அதற்கு, சரண்யாவும் சம்மதித்தார். அதன்படி, அவர் நடித்த நிர்வாண காட்சி, மிக தத்ரூபமாக படமாக்கப்பட்டது.

நிர்வாண காட்சியில் நடித்தது பற்றி, காதல்' சரண்யா சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

படத்தின் கதைக்கு அந்த நிர்வாண காட்சி அத்தியாவசியமானது என்று டைரக்டர் தீபன் என்னிடம் கூறினார். இதற்காக, ரூ.36 ஆயிரம் செலவில், ஸ்கின் டிரெஸ்' (தோல் போன்ற உடை) தயார் செய்யப்பட்டது. அதை அணிந்து கொண்டு துணிச்சலாக நடித்தேன்.

படத்தில், 180 வினாடிகள் (3 நிமிடங்கள்) வருகிற இந்த காட்சிக்காக, ஒரு நாள் இரவு முழுவதும் நடித்தேன். இரவு 7 மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு, விடிய விடிய நடந்தது. அதிகாலை 5 மணிக்கு படப்பிடிப்பு முடிந்தது.

ஸ்கின் டிரெஸ்' அணிந்திருந்ததால், எனக்கு எந்த பயமோ, நடுக்கமோ ஏற்படவில்லை. அந்த காட்சியை ரகசியமாக படம் பிடிக்கவில்லை. டைரக்டர், ஒளிப்பதிவாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அத்தனை பேரும் உடன் இருந்தார்கள்.

எப்படி உட்கார வேண்டும், எப்படி போஸ்' கொடுக்க வேண்டும் என்று டைரக்டர் எனக்கு சொல்லிக்கொடுத்தார். அவர் சொன்னபடி நடித்தேன். ஆபாசம் இல்லாமல், அறுவறுப்பு இல்லாமல் அந்த காட்சி படமாக்கப்பட்டது. அதனால்தான் மழைக்காலம்' படத்துக்கு தணிக்கை குழுவினர், யு' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

இந்த படத்தில் இருந்து காதல்' சரண்யா என்ற பெயரை, சரண்யா நாக்' என்று மாற்றிக்கொண்டேன். நாக்' என்பது, என் குடும்ப பெயர்.'' இவ்வாறு சரண்யா நாக் கூறினார்.

எதிர்காலத்தில் என்ன நடக்கும்? அரசியல் சஸ்பென்ஸ் வைக்கிறார் விஜய்?!!!

Thursday, March 22, 2012
மும்பையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் விஜய் வார இதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அவரது மக்கள் இயக்கம் பற்றியும் மற்றும் எதிர்கால அரசியல் வருகை பற்றியும் கூறியுள்ளார்.

அந்த பேட்டியில் விஜய் “ என்னுடைய ரசிகர் மன்றத்தை அப்பா மக்கள் இயக்கமாக மாற்றியமைத்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் தானே புயல் வந்த போது மக்கள் இயக்கத்து சகோதரர்கள் மக்களுக்கு செய்த நற்பணிகள் பற்றி அனைவருக்கும் தெரியும். தென் மாவட்டத்தில் இருக்கும் இயக்கத்தினரை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சந்தித்து பேசி வருகிறேன்.

மக்கள் இயக்கத்தை வலிமைப் படுத்தும் முயற்சியில் இருக்கிறோம். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. உடனே எதிர்காலத்தில் அரசியலுக்கு வரப் போவதாக இந்த பதிலை வைத்து நீங்களே யூகம் பண்ணி எழுதிடாதீங்க்ணா.இப்போதைக்கு அரசியல் பற்றி எதுவும் பேச வேண்டாம் ப்ளீஸ்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் “நான் இயக்குனர் சொல்வதைத் தான் செய்கிறேன். நான் எதிலும் தலையிடுவதில்லை. புராஜெக்டுக்கு போவதற்கு முன்பே என்ன பண்ணலாம், எப்படி பண்ணலாம் என பேசிவிட்டு தான் செல்வோம். ரசிகர்கள் எதிர்பார்க்கும் தலைவரின் ஆக்‌ஷன் ஹீரோவாக நடிக்கவே விரும்பிகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

சூர்யாவின் ஒரு கோடி நிகழ்ச்சியில் அஜித்தும்! விஜய்யும்!!!

Thursday, March 22, 2012
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8 மணிக்கு ”நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” என்ற தலைப்பில் நடிகர் சூர்யா நடத்தும் ஒரு கோடிக்கான கேம் ஷோ ஒன்று ஒளிபரப்பாகிறது.

இதில் அவ்வளவு எளிதில் விடை கண்டுபிடிக்க முடியாத அறிவுப்பூர்வமான(!) பல கேள்விகள் தினமும் கேட்கப்படுகின்றன. சூர்யா ஒரு நடிகன் என்பதை ஒதுக்கிவிட்டு அனைத்து ரசிகர்களும் இந்த நிகழ்ச்சியை ரசித்து பார்க்கின்றனர். நிகழ்ச்சியில் மற்ற நடிகர்களைப் பற்றிய கேள்விகள் வரும் போது சூர்யாவிடம் அவர்களை பற்றி பேச மக்கள் சிறு தயக்கம் காட்டுகின்றனர்.

ஆனால் சூர்யா சாதாரணமாக அவர்களை பற்றி பேசுகிறார். அஜித், விஜய் ஆகியோரைப் பற்றி சூர்யா இந்நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். “ திருமணத்திற்குப் பிறகு புதுமணத் தம்பதிகள் கொண்டாடும் முதல் தீபாவளிக்கு பெயர் என்ன?” என்று சூர்யா கேட்ட போது நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தலை தீபாவளி என்பதை தல தீபாவளி என்று மாற்றி(எப்புடியெல்லாம் ட்விஸ்ட் பண்ணுறாங்க பாருங்க) ”உங்க முன்னாடி எப்படி தல பற்றி பேசுவது” என்று கேட்டார்.

அதற்கு சூர்யா “ஓ நீங்க அப்படி வர்றீங்களா. தல எப்பவுமே தல தாங்க” என்று கூறினார். மற்றொரு நாள் நடந்த நிகழ்ச்சியில் ”நண்பன் திரைபடத்தில் வரும் பிரபலமான ஆங்கில வசனம் எது?” என்று கேட்டார். நண்பன் படம் விஜய் நடித்த படம் என்பதால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர் சூர்யாவிடம் “விஜய் நல்லவரா? கெட்டவரா?” என்று கேட்டார்.

அந்த கேள்விக்கு சூர்யா “அவர் ஏன் கெட்டவரா இருக்கனும். அவரது படங்களை பார்த்து நான் பிரம்மித்துள்ளேன். கல்லூரியிலிருந்தே அவரது வளர்ச்சியை பார்த்துக் கொண்டிருப்பவன் நான். எனது ”அகரம் பவுண்டேஷனு”க்காக ஒரு குறும்படத்தில் நடிக்க அவருக்கு போன் செய்து கேட்ட போது ”அதுக்கென்ன மாமா பன்னிடலாம் மாமா” என்று கூறினார்.

அவருடைய காமெடியும், தன்னம்பிக்கையும் தான் அவரிடம் எனக்கு பிடித்தது” என்று பதிலளித்தார். அதன் பின் அந்த கேள்விக்கு மிகவும் யோசித்து(!) சரியான பதில் சொல்லப்பட்டது.

தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது கொலை மிரட்டல் புகார்!!!

Thursday, March 22, 2012
சினிமா சண்டை பயிற்சியாளரான, ஜாக்குவார் தங்கம் (52) தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராகவும் உள்ளார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் நேற்று ஒரு புகார் அளித்தார். அதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஜாக்குவார் தங்கம் கூறியுள்ளார்.

கடந்த திங்கள் அன்று தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர கூட்டம் தியாகராய நகரில் நடந்தது. அதில், அண்டை மாநிலங்களில் இருப்பது போல தமிழ்நாடு திரைப்படத் துறைக்கும் தனியாக தொழிலாளர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தீர்மானத்தை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அப்போது, பேசிய ஜாக்குவார் தங்கம், ’நான் இந்தியா என்ற படத்தை தயாரிக்கிறேன். கார்த்தி நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பையும் நிறுத்தி விட்டீர்கள். ஆனால், சிலர் தயாரிக்கும் படத்தின் சூட்டிங் மட்டும் நடந்து கொண்டிருக்கிறது. எங்கள் சூட்டிங்கை மட்டும் ஏன் அனுமதிக்கவில்லை’ என்று கேட்டுள்ளார்.

எதிர்த்து கேள்வி கேட்டதால் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் தேனப்பன் ஆகியோர் என்னை பார்த்து கேவலமாக திட்டினர். மேலும் துப்பாக்கி படத்தை பற்றி பேசினால், நாங்கள் துப்பாகியால்தான் பேசுவோம் எனக் கூறி மிரட்டி அடிக்க பாய்ந்தனர். கலைப்புலி சேகரன், ராதாகிருஷ்ணன், சுப்பையா, ராகவா, பாலாஜி ஆகியோர் என்னை காப்பாற்றினர். எஸ்.ஏ. சந்திரசேகரன் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அதைத் தொடர்ந்து, மர்ம போன் மிரட்டல்கள் வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என ஜாக்குவார் தங்கம் தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.

இதுகுறித்து, உரிய விசாரணை நடத்துமாறு தி.நகர் துணை கமிஷனர் அசோக் குமாருக்கு, கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்பதாலேயே தீர்மானம் பற்றி எஸ்.ஏ.சி வெளிப்படையாக அறிவிக்கவில்லை என தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.