Sunday, March 4, 2012

வாய்ப்புகளை பறிகொடுத்த நடிகை!!!

Sunday, March 04, 2012
ரிச்ச ஹீரோயினுக்கு லக் ஒர்க் அவுட் ஆகலையாம்... ஆகலையாம்... காத்திருந்து பூத்துப்போனவருக்கு வங்க படம் கைகொடுத்திருக்காம். அதுக்காக ஷூட்டிங் போன இடத்துல பனியும், குளிரும் வாட்டுதாம்... வாட்டுதாம்... பாக்க¤றதுக்கு கிளாமரா இருந்தும் சான்ஸ் வராததுக்கு காரணம் பேர் கோளாறுதான்னு ஜோசியருங்க சொல்றாங்களாம். முதல்ல பேரை பவர்புல்லா மாத்துன்னு கூட இருக்கிறவங்க அட்வைஸ் தர்றாங்களாம். நடிகையும் அதுபற்றி தீவிரமா யோசிக்கிறாராம்... யோசிக்கிறாராம்...

திவ்யமான நடிகைக்கு தமிழ்ல வாய்ப்புகளே வரமாட்டேங¢குதாம். அதுக்கு காரணம், நடிகை அடிக்கடி சர்ச்சையில சிக்குறதுதானாம். அதனால நடிகை இனிமே சண்டை சச்சரவுல சிக்காம ஒதுங்கி இருக்க முடிவு பண்ணியிருக்காராம்... பண்ணியிருக்காராம்... நடிகையோட கோப குணத்தால கன்னடத்துலேயும் 2 பட வாய்ப்புகள் பறிபோயிருச்சாம்... பறிபோயிருச்சாம்...

முருக இயக்கம் தன்னோட பிரதரை ஹீரோ ஆக்குறதுல தீவிரமா இருக்காராம்... இருக்காராம்... பிரதருக்கு டான்ஸ் கிளாஸ், ஃபைட் கிளாசுக்கு எல்லாம் அனுப்புறாராம். பிரதருக்கு ஜோடியா ஹன்சியான நடிகையை நடிக்க வைக்க இயக்கம் முயற்சி பண்ணினாராம். புதுமுகத்துக்கு ஜோடியான்னு ஹன்சி எஸ் ஆயிட்டாராம்... ஆயிட்டாராம்... அதனால அஞ்சலியான நடிகையை ஒப்பந்தம் பண்ணிட்டாராம்... பண்ணிட்டாராம்...

மலையாள தயாரிப்பாளர் மீது நடிகர் சங்கத்தில் ஸ்ரேயா புகார்: வழக்கு தொடரவும் முடிவு!!!

Sunday, March 04, 2012
நடிகை ஸ்ரேயா மலையாள பட அதிபர் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளார்.

நடிகை ஸ்ரேயா நடித்து அண்மையில் வெளிவந்த மலையாள படம் போக்கிரி ராஜா. அதில் மம்மூட்டி, பிருத்விராஜ், ரியாஸ்கான், சரண்ராஜ், காதல் தண்டபாணி, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அண்ணன் தம்பியான மம்முட்டி, பிரித்விராஜில் ஸ்ரேயா தம்பியைக் காதலிக்கிறார். தனது தம்பியின் காதலை சேர்த்து வைக்க அண்ணன் போராடுவது தான் கதை.

இந்த படத்தை தாமஸ் ஆண்டனி என்பவர் தயாரித்துள்ளார். இந்நிலையில் தாமஸ் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஸ்ரேயா புகார் கொடுத்துள்ளார். மேலும் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளார்.

இது குறித்து ஸ்ரேயா கூறியதாவது,

போக்கிரி ராஜா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட போதே அதை வேறு மொழிகளிலும் டப் செய்து வெளியிடக் கூடாது என்று நிபந்தனை விதித்து தான் நடிக்க ஓகே சொன்னேன். அதற்கான ஒப்பந்தத்தில் நானும், தாமஸ் ஆண்டனியும் கையெழுத்திட்டுள்ளோம். இந்நிலையில் ஒப்பந்தத்தை தாமஸ் மீறிவிட்டார். அதனால் அவர் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன்.

போக்கிரி ராஜா படத்தை தமிழ் உள்பட வேறு எந்த மொழியிலும் டப் செய்து வெளியிட தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் தீர்மானித்திருக்கிறேன் என்றார்.

ஜெயம் ரவியைக் 'காதலிப்பாரா' நயன்தாரா!!!

Sunday, March 04, 2012
ஜெயம் ரவியை வைத்து சமுத்திரகனி இயக்கும் படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

பிரபு தேவாவைத் தி்ருமணம் செய்து கொள்வதற்காக மதம் மாறி, சினிமாவைவிட்டு ஒதுங்கியிருந்த நடிகை நயன்தாரா, இப்போது பிரபுதேவாவுடன் டூ விட்டு விட்டதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து மீண்டும் நடிப்புக் கடலில் குதித்துள்ளார் நயனதாரா.

தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அஜீத்தின் பில்லா 2 படத்தில் கெஸ்ட் ரோலில் வந்து போவார் என்று கூறப்படுகின்றது. சிம்பு கூட மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடப்பதாகவும் பேச்சு அடிபட்டது.

இந்நிலையில் சமுத்திரகனியின் படத்தில் நயனை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. சமுத்திரகனி தற்போது கன்னட படம் ஒன்றை இயக்கி வருகிறார். அதை முடித்த பிறகு தமிழில் ஜெயம் ரவியை வைத்து ஒரு படம் இயக்குகிறார். இதில் ரவிக்கு ஜோடியாக திரையுலகிற்கு மறுபிரவேசம் செய்துள்ள நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

முதன்முறையாக ரவி, நயன்தாரா ஜோடி சேரவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கியிருந்த நயன் மீண்டும் நடிக்க வந்ததையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன. வெள்ளித்திரையில் மீண்டும் நயனைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாய் உள்ளனர்.

சும்மாவா, ஒரு கோடி வாங்கிய ஒய்யாரமான ஹீரோயினாச்சே, மறுபடியும் நடிக்க வந்தால் விடுவார்களா என்ன...!

எனக்கு கிடைத்த மாதிரி எல்லாருக்கும் கிடைக்காது: கார்த்திகா!!!

Sunday, March 04, 2012
கோ படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ராதாவின் மகள் கார்த்திகா தற்போது தமிழில் கிராமத்து பெண்ணாகவும், தெலுங்கில் அல்ட்ரா மாடர்ன் பெண்ணாகவும் கலந்து கட்டி நடித்துக் கொண்டிருக்கிறார்.

கோ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் முன்னாள் நாயகி ராதாவின் மூத்த மகள் கார்த்திகா. முதல் படமே அவருக்கு முத்திரையைப் பதித்து விட்டதால் ஏக டிமாண்ட் ஏற்பட்டது. இருப்பினும் நல்ல கதைக்காக அம்மாவும், மகளும் காத்திருந்தனர்.

அப்படி வந்ததுதான் பாரதிராஜாவின் அன்னக்கொடியும், கொடி வீரனும்.அம்மா ராதாவை இயக்கிய நானே, மகள் கார்த்திகாவையும் இயக்குகிறேன் என்று பாரதிராஜாவே பெருமையாக கூறியுள்ளார். இப்படத்தில் கிராமத்து நாயகியாக நடிக்கிறார் கார்த்திகா. தனது அம்மாவுக்கு பெயர் வாங்கித் தந்த முதல் மரியாதை போல இப்படமும் தனக்குப் பெரும் பெயர் பெற்றுத் தரும் என்பது கார்த்திகாவின் நம்பிக்கை. படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் தான் அன்னக்கொடி.

தமிழில் இப்படி கிராமத்துப் பெண்ணாக வலம் வரப் போகும் கார்த்திகா, தெலுங்கில் தம்மு என்ற படத்தில் அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

ஒரே நேரத்தில் கிராமத்து பெண்ணாகவும், அல்ட்ரா மாடர்ன் பெண்ணாகவும் நடிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடாது. நான் தமிழில் பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் அன்னக்கொடியாக நடித்துள்ளேன். அதில் அன்னக்கொடியின் மழலைப்பருவம், பதின், மங்கை மற்றும் முதிர் பருவம் என்று 4 விதமான கதாபாத்திரங்களில் வாழ்ந்துள்ளேன்.

அதே சமயம் தெலுங்கில் தம்மு என்ற படத்தில் அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக நடிக்கிறேன் என்றார். தம்மு படத்தில் நம்ம ஊர் திரிஷாதான் நாயகி என்பது தெரியும்தானே.

எப்படி நடிச்சால் என்ன, ரசிக்கும்படி நடிச்சா சரிதான்...!

முன்னணி நடிகையாவதற்கு அவசரப்படவில்லை: மோனிகா!!!

Sunday, March 04, 2012
நானும் ஒரு நாள் முன்னணி நடிகையாவேன் என்று மோனிகா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நடிகை மோனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது நாயகியாகியாக நடித்து வருபவர். நிறையப் படங்களில் நடித்து விட்டாலும் கூட இன்னும் முன்னுக்கு வராமல் இருக்கிறார். இத்தனை காலமாக நடிக்கிறீர்கள், ஏன் இன்னும் முன்னணி நடிகையாகாமல் இருக்கிறீர்கள். எதற்காக இந்தத் தாமதம் என்று கேட்டால் நிதானமாக பதிலளிக்கிறார் மோனிகா.

சினிமாவில் எனக்கு பிறகு நடிக்க வந்தவர்கள் எல்லாம் நல்ல இடத்தில் உள்ளனர். நானும் ஒரு நாள் முன்னணி நடிகையாவேன். தற்போது தமிழில் சின்னதாக ஒரு கேப் விழுந்து போச்சு. நான் கதாபாத்திரங்களைத் தேடிப்பிடித்து நடிப்பது தான் அதற்கு காரணம். நான் நடித்த அகராதி படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.

இதையடுத்து கூத்துக்காரப் பசங்க மற்றும் கன்னிகாபுரம் ஆகிய படங்களில் நடிக்கிறேன். இரண்டு படங்களிலுமே எனக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது என்றார்.

ரஜினியால் 'உயிர் பிழைத்த' தனுஷ்!!!

Sunday, March 04, 2012
3 படத்தின் கிளைமாக்ஸில் தனுஷ் இறப்பது போன்று படமாக்கப்பட்டதை ஐஸ்வர்யா மாற்றியமைத்துள்ளாராம்.

ரஜினிகாந்தின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா 3 படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். தான் எடுக்கும் முதல் படத்தில் கணவர் தனுஷை ஹீரோவாக போட்டு, ஸ்ருதி ஹாசனை ஹீரோயினாக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷ் எழுதி, பாடிய ஒய் திஸ் கொலவெறி, கொலவெறி டி பாடல் உலகப் புகழ்பெற்றுள்ளது.

இப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷ் இறந்துபோவது போல் ஐஸ்வர்யா காட்சியமைத்திருந்தார். படத்தைப் பார்த்த ரஜினி, படம் நன்றாக இருப்பதாக கூறியுள்ளார். அதேசமயம், படத்தின் கிளைமாக்ஸ் சோகமாக இருப்பதை அவர் விரும்பவில்லை. அதை மாற்றி சந்தோஷமாக முடிவது போல் எடுக்கலாமே என்று ஐடியா கொடுத்தார்.

சூப்பர் ஸ்டார் பேச்சுக்கு மறு பேச்சு உண்டா என்ன. இதையடுத்து தற்போது படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றி தனுஷ் உயிருடன் இருப்பது போன்று மாற்றி விட்டாராம் ஐஸ்வர்யா.

ரசிகர்களும் சோகமான முடிவை விரும்பமாட்டார்கள் என்பதால் அவர் கிளைமாக்ஸை சந்தோஷமாக மாற்றியுள்ளார் என்று கூறப்படுகின்றது. இந்த படம் இந்த மாத இறுதியில் ரிலீஸ் ஆகிறது.

கோலிவுட்டின் 'கனவுக் கன்னி' ஹன்சிகா!!!

Sunday, March 04, 2012
சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ்ச் சங்கம் ஒன்று கோலிவுட்டின் கனவுக் கன்னி என்ற பட்டத்தை நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு வழங்கி கௌரவித்துள்ளது.

பார்க்க 'குண்டான பார்பி டால்' போல இருக்கும் ஹன்சிகா, நடிக்க வந்தபோதே பெரும் கவர்ச்சிப் பிரளயத்தை ஏற்படுத்தியவர். 'குட்டி குஷ்பு' என்றும் திரையுலககினர் இவரைக் கொண்டாடவே, கூடுதல் மவுசாகிப் போனது.

கடந்த ஆண்டு தனுஷுடன் மாப்பிள்ளை, இளைய தளபதி விஜயுடன் வேலாயுதம் மற்றும் ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல் என அடுத்தடுத்து மூன்று முக்கிய நடிகர்களுடன் ஜோடி போட்டார். டான்ஸ், நடிப்பு ஆகியவற்றில் பெரிய அளவில் இவர் இல்லை என்ற போதிலும், அடுத்த குஷ்பு என்று வர்ணிக்கப்படுவதால் அவருக்கு உச்சி குளிர்ந்து போயுள்ளது. முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்ததால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தையும் வாலன்டியராக வாங்கி விட்டார்.

தற்போது தயாரிப்பாளராக இருந்து, ஹீரோவாக புரமோட் ஆகி விட்ட உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் நடித்துள்ளார். அது தான் அவருக்கு இந்த ஆண்டில் வெளிவரும் முதல் படம். அதையடுத்து சூர்யாவுடன் சேர்ந்து சிங்கம் 2, சிம்புவின் வேட்டை மன்னன் ஆகிய படங்கள் வெளிவருகின்றன. கருப்பு மின்னல் விஷாலை வைத்து சுந்தர் சி எடுக்கும் படத்திலும் ஹன்சிகா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த ஆண்டு 3 படங்களில் நடித்து தமி்ழ் ரசிகர்களை குஷிபடுத்திய ஹன்சிகாவுக்கு 2011ம் ஆண்டின் கோலிவுட்டின் கனவுக் கன்னி என்ற பட்டத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ் சங்கம் ஒன்று வழங்கியுள்ளது. இதனால் குஷியாகியுள்ள ஹன்சிகா இந்த ஆண்டும் அந்த பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள நினைக்கிறார்.

இந்த விருதை வாங்கி வருவதற்காக சிங்கப்பூரில் தற்போது முகாமிட்டுள்ள ஹன்சிகா இதுகுறித்துக் கூறுகையில், விழாவில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் வந்துள்ளேன். கோலிவுட்டின் கனவுக் கன்னி என்று என்னை அழைப்பது பெருமையாக இருக்கிறது என்றார்.

சீன பயிற்சியாளரிடம் குங்பூ கராத்தே கற்கிறார் அனுஷ்கா!!!

Sunday, March 04, 2012
புதிய படத்துக்காக சீன பயிற்சியாளரிடம் குங்பூ, கராத்தே பயிற்சி பெறுகிறார் அனுஷ்கா. செல்வராகவன் இயக்கும் படம் ‘இரண்டாம் உலகம்Õ. ஆர்யா ஹீரோ. நகரத்துபெண், மலைவாழ் பெண் என மாறுபட்ட இரு வேடங்களில் அனுஷ்கா நடிக்கிறார். மலைவாழ் பெண் வேடத்தில் வரும் அனுஷ்காவுக்கு கராத்தே, குங்பூ கலைகளில் தேர்ச்சி பெற்றவர் போன்ற பாத்திரம் அமைந்துள்ளது. இதையடுத்து அதற்கான பயிற்சி பெறுகிறார். சீன படங்களில் சண்டை பயிற்சி அளித்த ஸ்டன்ட் மாஸ்டர் இதற்காக வரவழைக்கப்படுகிறார். ஏற்கனவே தெலுங்கில் ‘பில்லாÕ படத்துக்காக அனுஷ்கா இத்தகைய பயிற்சி பெற்றிருக்கிறார். மேலும் ‘அருந்ததிÕ படத்தில் வில்லன் நடிகர் சோனு சூட்டுடன் சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறார். Ôபஞ்சமுகிÕ படத்தில் இரட்டை வேடத்தில் ஏற்கனவே அனுஷ்கா நடித்திருந்தாலும் இந்த படத்தில் அவரது வேடத்தை புதுமையாக சித்தரிக்க முடிவு செய்து செல்வராகவன் சரித்திர பின்னணியையும் இக்கதையில் இணைத்திருக்கிறார். இதன் ஷூட்டிங் அமெரிக்காவில் நடத்த லொகேஷன் தேர்வு நடக்கிறது. ÔÔகதைப்படி பீரியட் படமாக இது தெரிந்தாலும் ஆனால் அத்தகைய படமாக இது இருக்காது. ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரமாண்ட முறையில் படமாகிறதுÕÕ என Ôஇரண்டாம் உலகம்Õ யூனிட் தெரிவித்தது.

இந்தி படத்தில் நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக சோனம் கபூர்!!!

Sunday, March 04, 2012
இந்தி படத்தில் நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடிக்க உள்ளார். ஐஸ்வர்யா இயக்கும் ‘3Õ படத்தில் கொலவெறி பாடல் மூலம் பிரபலம் ஆனதால் முதன்முறையாக இந்தி படத்தில் நடிக்கிறார் தனுஷ். ‘ராஞ்ஜாÕ என்ற இப்படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்குகிறார். காசியை பின்னணியாக கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக்கதையில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடந்து வந்தது. தற்போது சோனம்கபூர் நடிக்க முடிவாகி உள்ளது. இவர் பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள். மணிரத்னம், தயாரிப்பாளர் டி.ராமநாயுடு போன்றவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் அனில் கபூர். தந்தையை போல தானும் தென்னிந்திய படவுலகத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது சோனம் கபூரின்ஆசை. அது தனுஷுடன் ஜோடியாக நடிப்பதன் மூலம் நிறைவேறி இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஆனாலும் ஏற்கனவே 2 இந்தி படங்களில் சோனம் கபூர் நடித்து வருகிறார். இதனால் தனுஷ் படத்துக்கு கால்ஷீட் தருவதில் பிரச்னை எழுமா என்ற பேச்சும் இருக்கிறது. ஆனால் இந்த வாய்ப்பை நழுவவிட சோனம் கபூருக்கு விருப்பம் இல்லாததால் மற்ற தயாரிப்பாளர்களுடன் பேசி இப்படத்துக்கு கால்ஷீட் ஒதுக்குவார் என்று கூறப்படுகிறது.

சினேகாவின் கடைசி படம்?.

Sunday, March 04, 2012
பிரசன்னா, சினேகா காதல் ஜோடி விரைவில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் புதிய படங்களை ஒப்புக்கொள்ளாமல் இருந்த சினேகா தற்போது ‘ஹரிதாஸ் என்ற படத்தில் நடிக்கிறார். குமாரவேலன் இப்படத்தை இயக்க உள்ளார். ஹீரோவாக, வில்லன் நடிகர் கிஷோர் நடிக்கிறார். இவர்களுடன் 8 வயது சிறுவன் ஒருவன் நடிக்க உள்ளான். ஏற்கனவே கோச்சடையான்Õ படத்தில் ரஜினியின் தங்கை வேடத்தில் நடிக்க இருந்த சினேகா அப்படத்திலிருந்து திடீரென்று விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹரிதாஸ் தான் சினேகாவின் கடைசி படமாக இருக்கும் என¢றும் திருமணத்துக்கு பின் அவர் நடிப்புக்கு முழுக்கு போடு வார் என்றும் கூறப்படுகிறது.

எல்.ஆர்.ஈஸ்வரி பாடலுக்கு ஹீரோயின் தேடுகிறார்கள்!!!

Sunday, March 04, 2012
எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடலுக்கு நடனம் ஆட ஹீரோயின் தேடுகிறோம் என்றார் அருண் விஜய். நீண்ட வருடங்களுக்கு பிறகு ‘ஒஸ்திÕ படத்தில் பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி ஒரு பாடல் பாடினார். இதையடுத்து அருண் விஜய் நடிக்கும் ‘தடையற தாக்கÕ படத்திற்காக பாடல் பாடினார். இது பற்றி அருண் விஜய் கூறியதாவது: Ôமலை மலைÕ, Ôமாஞ்சா வேலுÕக்கு பிறகு நடிக்கும் படம் ‘தடையற தாக்கÕ. இதில் டிராவல்ஸ் நடத்துபவராக நடிக்கிறேன். வம்பு தும்புக்கு செல்லாமல் ஒதுங்கிச் செல்லும்போது, எதிர்பாராத சம்பவம் நடக்கிறது. அதன்பிறகு அவன் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பது கதை. இடது கை பழக்கம் உள்ளவனாக நடிப்பதற்காக பல நாட்கள் பயிற்சி செய்தேன். மம்தா மோகன்தாஸ், ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயின்கள். 7 அடி உயர கருப்பு நிற மனிதன் காந்தி, வம்சி கிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்தது. மகிழ் திருமேனி இயக்கம். சுகுமார் ஒளிப்பதிவு. தமன் இசை. இப்படத்துக்காக எல்.ஆர்.ஈஸ்வரி குத்துப்பாடல் பாடினார். அவருடன் இணைந்து நானும் பாடினேன். இப்பாடலுக்கு தற்போதுள்ள முன்னணி ஹீரோயின் ஒருவர் ஆட உள்ளார். அதுபற்றி பேச்சு நடக்கிறது. இவ்வாறு அருண் விஜய் கூறினார்.

முத்தத்திற்கு 'அந்த' காட்சிகள் பரவாயில்லை: பிபாஷா!!!

Sunday, March 04, 2012
முத்தக் காட்சிகளில் நடிப்பதைவிட நெருக்கமான காட்சிகளில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டுகிறாராம் பாலிவுட் 'கவர்ச்சிப் பிசாசு' பிபாஷா பாசு.

முத்தம் கொடுக்கப் பயமாக இருப்பதாக கூறும் அவர் அதற்கு அந்தரங்கமான, நெருக்கமான காட்சிகளில் நடித்து விட்டுப் போய் விடலாம் என்று காரணம் கூறுகிறார்.

பிபாஷாவும், இந்தி நடிகர் ஜான் ஆபிரகாமும் 9 ஆண்டுகளாக விழுந்து விழுந்து காதலித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு உடைந்து பிரிந்து விட்டனர். பிரிவுக்குப் பின்னர் ஜான் குறித்து அவர் கூறுகையில், ஜானுக்கு வயதாகிறது அதனால் அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ளட்டும் என்று பிப்ஸ் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவரை வயதில் குறைவானவரை டேட் செய்கிறார் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்துக் கேட்டதற்கு, என்னை விட 7 வயது பெரியவரை பல ஆண்டுகளாக காதலித்தேன். அப்படி இருக்கையில் வயதில் சிறியவரைக் டேட் செய்யக் கூடாதா என்கிறார். ரொ்ம்ப லாஜிக்கான பேச்சுதான்.

இதற்கிடையே, பிபாஷாவுக்கு மாதவனின் கேரக்டர் ரொம்ப பிடித்துவிட்டது. அதனால் அவரைப் போன்ற குணாதிசயங்கள் உள்ள ஒருவரை தனக்கு பரிந்துரைக்கும்படி மாதவனிடமே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் என்று வந்து விட்டால் சிறிசாவது, பெரிசாவது...!

இசை வெளியீட்டு விழாவில் சூர்யா - கார்த்தி!!!

Sunday, March 04, 2012
சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் படங்களை இயங்கிய ராஜேஷ் உதயநிதி ஸ்டாலினை கதாநாயகனாக ஆக்கியுள்ள படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோட்வானி நடிக்கிறார். இதில் சந்தானமும் காமெடியில் கலக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு நாளை நடைபெறவிருக்கிறது. இதில் நடிகர் சூர்யாவும், அவரது தம்பி கார்த்தியும் கலந்துகொண்டு, பாடல் சிடியையும், டிரைலரையும் வெளியிடப்போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விஜய் நடித்து வரும் துப்பாக்கி. இப்படத்தில் விஜய்-ன் தம்பியாக நடிக்க நடிகர் ஜெய்!!!

Sunday, March 04, 2012
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் துப்பாக்கி. இப்படத்தில் விஜய்-ன் தம்பியாக நடிக்க நடிகர் ஜெய் ஒப்பந்தமாகியுள்ளராம். இந்த கேரக்டரில் நடிப்பதற்கு நடிகர் ஜெய்-யிடம் இயக்குனர் அணுகியபோது, இப்படத்தில் நடிக்க உடனே ஒப்புக் கொண்டாராம்.

இவர் ஏற்கனவே பகவதி படத்தில் விஜய்-ன் தம்பியாக நடித்துள்ளார். இப்போது மீண்டும் இணைந்துள்ளனர்.

மொழி, இனம் காக்க குரல் கொடுங்கள் இயக்குனர் பாரதிராஜா அழைப்பு!!!

Sunday, March 04, 2012
விருதுநகர்:""இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது ,நாம் வாய் மூடிய ஊமையாக இருந்து விட்டோம். இனியாவது நாம் ,தமிழ் மொழி, இனம் காக்க நாம் குரம் கொடுக்க வேண்டும்,'' என, இயக்குனர் பாரதிராஜா கூறினார்.விருதுநகர் வி.வி.வி. பெண்கள் கல்லூரியில் நடந்த 50 வது ஆண்டு விழா, நிறுவனர் விழாவில் அவர் பேசியதாவது: இன்டர்நெட், கணினியில் வளர்ச்சியடைந்திருந்தாலும், கல்லூரி வாசல் முதல் ஆடிட்டோரியம் வரை கோலங்கள் வரையப்பட்டிருப்பதை பார்க்கும் போது ,எம் தமிழ் பெண்கள் கலாசாரத்தை மறக்க வில்லை என்பதை காணமுடிகிறது .

எல்லோருக்கும் எல்லா சக்தியையும் ஆண்டவன் கொடுத்துள்ளான். அதை வேண்டிய நேரத்தில் பயன்படுத்த வேண்டும். பிள்ளையை பெற்றெடுக்கும் பெண்ணாக மட்டுமில்லாமல், நீ செல்ல வேண்டிய துறையை தேர்ந்தெடுக்க வேண்டும். வாழ்க்கையும், வகுப்பறையும் படியுங்கள் வெற்றி பெறலாம். ஒன்று கிடைக்கவில்லையா மற்றொன்றை தேடு, நிச்சயம் கிடைக்கும். மண் ,மொழி, கலாசாரம், இனம், தாய், தந்தை, குருவை மனதில் வைத்தாலே ,நீ உலகம் முழுக்க சுற்றி வரலாம். இலங்கையில் இரண்டு லட்சம் தமிழ் மக்களை கொன்று குவித்தபோது ,தமிழர்களாகிய நாம், வாய் மூடிய ஊமையாகவும், கண் மூடிய குருடர்களாகவும் இருந்து விட்டோம். நம் மொழி, இனத்தை பாதுகாக்க வேண்டுமானால், தமிழர்களாகிய நாம் குரல் கொடுக்க வேண்டும், என்றார். கல்லூரி செயலாளர் மதன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் செல்வ மீனாட்சி, இணைச் செயலர் இனிமை,அசோக் சக்கரவர்த்தி கலந்து கொண்டனர். மாணவி சுந்தரவள்ளி நன்றி கூறினார்.

விஜய்யின் 'துப்பாக்கி'யில் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!!!

Sunday, March 04, 2012
விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். காஜல் அகர்வால், ஜெயராம், வித்யூத் ஜம்வால், சத்யன் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்து வருகிறார் விஜய். இப்படத்திற்காக தற்போது ஆக்ஷன் காட்சிகளை மும்பையில் படமாக்கி வருகிறார்கள். இச்சண்டை காட்சிக்காக புதுவிதமாக நிறைய விஷயங்களை கையாண்டு வருகிறாராம் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். கௌதம் மேனன், இயக்குநர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் மூவரின் படங்கள் என்றாலே படத்தின் எடிட்டர் ஆண்டனியாக தான் இருக்கும். ஆனால் '7ஆம் அறிவு' படத்தின் எடிட்டிங்கின் போது ஏ.ஆர்.முருகதாஸூக்கும் ஆண்டனிக்கும் இடையே சிறு பிரச்சினையாம். ஆகையால் 'துப்பாக்கி' படத்தின் எடிட்டராக பணியாற்ற ஸ்ரீகர் பிரசாத்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார் முருகதாஸ். மணிரத்னம் இயக்கிய 'அலைபாயுதே', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'ஆய்த எழுத்து', 'ராவணன்' உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர் ஸ்ரீகர் பிரசாத். 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தின் சிறந்த எடிட்டிங்கிற்காக தேசிய விருதினை வென்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் படத்திற்கு நயன்தாரா போட்ட நிபந்தனை!!!

Sunday, March 04, 2012
வருகிற ஏப்ரல் மாதம் முழுக்க சென்னையிலிருக்கும் பிரபல ஓட்டல் ஒன்றில் ரூம் போட்டிருக்கிறாராம் நயன்தாரா. இங்கிருந்து கொண்டுதான் எல்லாவற்றையும் ஆபரேட் செய்யப் போகிறார் அவர். அஜித் நடிக்கும் புதிய படத்தில் நயன்தாரா கமிட் ஆகிவிட்டார் என்ற தகவலிலும் உண்மையில்லையாம். ஐயய்யோ... அப்புறம்? இந்த படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவை அணுகிய தயாரிப்பு தரப்பிடம் நயன்தாரா போட்ட ஒரே நிபந்தனை இதுதான். அஜித்துடன் நடிக்க எனக்கு விருப்பம்தான். அதற்காக நீங்க கேட்கிற தேதியை அப்படியே மாதக்கணக்கில் என்னால கொடுக்க முடியாது. அவர் இந்த படத்திற்காக என்ன தேதி கொடுத்திருக்கிறார் என்று முதலில் சொல்லுங்க. அதுக்கேற்ற மாதிரி என் தேதிகளை ஒதுக்குகிறேன் என்றாராம். அலசி பிழிந்து கொண்டிருக்கிறார்கள். தேதிகள் திருப்தியானால் மட்டுமே அஜித் படத்தில் நடிப்பார் நயன்தாரா. அடேங்கப்பா.... ஓரமா கெடந்த ஒட்டடைக்குச்சி ஓவராத்தான் அலம்புது.....

திருப்பதியில் ஸ்ருதி; ரசிகர்கள் முற்றுகை!!!

Sunday, March 04, 2012
கமல் மகளும், நடிகையுமான ஸ்ருதி நேற்று திருப்பதி கோவிலுக்கு சென்றார். அங்கு பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். நெய்வேத்தியம் செய்தும் வழிபட்டார். கோவிலுக்குள் ஸ்ருதியை பார்த்ததும் ரசிகர்கள் முண்டியடித்தனர். கைகளை அசைத்து கூச்சலும் எழுப்பினார்கள். ஸ்ருதி அவர்களிடம் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். சாமி கும்பிடும் இடத்தில் ஆரவாரம் செய்யக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். வழிபாடு முடிந்து வெளியே வந்து காரில் ஏறச் சென்ற போதும் ரசிகர்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் கோவிலில் அமைதியை கடைபிடிக்கும்படி கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் திருச்சானூரில் உள்ள பத்மாவதி சன்னதிக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அங்கிருந்து காளகஸ்தி கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். காளகஸ்தி வந்து இறங்கிய ஸ்ருதியை கண்டதும் ரசிகர்கள் சுற்றி முற்றுகையிட்டார்கள். பக்தர்களும் முண்டியடித்து பார்த்தார்கள். அவர்களிடம் அமைதியாக இருக்கும்படி சைகையால் கேட்டுக் கொண்டு கோவிலுக்குள் சென்றார். அங்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்து சாமியை வழிபட்டார். வழிபாடு முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். சாந்தஸ்வரூபி.....!