Friday, April 27, 2012

பட வாய்ப்புகளை இழந்தது ஏன்? வடிவேலு விளக்கம்!!!

Friday, April, 27, 2012
பட வாய்ப்புகளை இழந்தது ஏன் என்றதற்கு பதில் அளித்தார் வடிவேலு. காமெடியில் தனக்கென தனிபாணி வகுத்து நடித்து வந்தார் வடிவேலு. கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது நிறைய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து சினிமாவில் அவருக்கு இடைவெளி ஏற்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் வடிவேலு. சிம்புதேவன் இயக்கிய ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ என்ற படத்தில் அவர் இரட்டை வேடம் ஏற்று நடித்திருந்தார். அப்படம் ரூ.4 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. வெற்றிகரமாக ஓடி ரூ.16 கோடி வரை சம்பாதித்தது. 18ம் நூற்றாண்டையொட்டிய காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்கள்போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் 2ம் பாகம் உருவாகிறது. சமீபத்தில் வடிவேலுவை சந்தித்த சிம்புதேவன் 2ம் பாக கதையை அவரிடம் கூறினார். அது பிடித்திருந்ததை அடுத்து நடிக்க ஒப்புக்கொண்டார்.

இதுபற்றி வடிவேலு கூறும்போது, ‘‘சிம்புதேவன் கூறிய ‘இம்சை அரசன்’ படத்தின் 2ம் பாக கதை பிடித்திருந்தது. முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தில் அதிகபட்சமாக நகைச்சுவை காட்சிகள் சேர்த்திருக்கிறார். இதுபற்றி இருவரும் பேசி வருகிறோம். ஷூட்டிங் பற்றி விரைவில் முடிவு செய்யப்படும். சமீபகாலமாக படங்களில் நடிக்காமல் இடைவெளிவிட்டிருந்தேன். நிறைய படங்களில் நடிக்க முடியாமல் போனது. அதுபற்றி கவலை இல்லை. இந்த வருடம் முழுவதும் பிஸியாகவே இருக்கிறேன். இடைவெளி எடுத்துக்கொண்ட நேரத்தில் என் குடும்பத்தினருடன் பொழுதை கழித்தேன்’’ என்றார்.

41 வயதில் காதல் காட்சியா? கிண்டல் செய்யாதீர்கள் : அஜீத் மனம் திறந்த பேட்டி!

Friday, April, 27, 2012
41 வயதில் காதல் காட்சிகளில் நடிப்பதா? கிண்டல் செய்யாதீர்கள் என்று கூறினார் அஜீத்.நடிகர் அஜீத் அளித்த பேட்டியில் கூறியதாவது:பில்லா 2 பற்றி கேட்கிறார்கள். படம் ரிலீஸ் ஆவதற்கு முன் அதுபற்றி நான் பேசுவது சரியாக இருக்காது. படம் பார்ப்பவர்கள்தான் அதை முடிவு செய்ய வேண்டும். இதில், ‘டூப் போடாமல் சண்டை போட்ட அனுபவம் எப்படி? என்கிறார்கள். தொழில் ரீதியான நடிகர் என்ற முறையில் எனது வேலையை செய்தேன். இக்காட்சிகளின் போது எனது பாதுகாப்புக்காக பட யூனிட் அதிக கவனம் எடுத்துக் கொண்டது. குறிப்பாக ஜெர்மனியை சேர்ந்த ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டீபன் ரிச்டாருக்கு எனது நன்றி. நம் நாட்டின் எல்லையில் எல்லா துன்பங்களையும் தாங்கி கொண்டு நமது பாதுகாப்புக்காக ஆயுதம் ஏந்தி நிற்கும் ராணுவத்தினர்தான் நிஜமான ஹீரோக்கள். அவர்களுடன் ஒப்பிடும்போது நான் எந்த சாதனையும் செய்து விடவில்லை.

எனது படங்களை தேர்வு செய்யும் போது தயாரிப்பாளர், இயக்குனர், எனக்கும் இடையே உள்ள புரிதல் மிக முக்கியம். 5 நிமிடங்கள் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் 50 நாட்கள் ஒன்றாக வேலை பார்க்க முடியாது. ஒரு ஸ்கிரிப்டை தேர்வு செய்வது கடினம். ஏனென்றால் சிறப்பாக கதை சொல்கிறவர் சில சமயம் சிறந்த இயக்குனராக இல்லாமல் போவதற்கு வாய்ப்புள்ளது. எனக்கு 41 வயது ஆகிவிட்டது. இனிமேல் காதல் காட்சிகளில் ரொமான்ஸ் செய்து கொண்டு நடிக்க முடியாது. அது கிண்டலுக்கு இடம் கொடுத்து விடும். என் மனைவி ஷாலினி உறுதியான மனம் படைத்தவர். எப்போதாவது சில சமயம் சினிமா பற்றி பேசிக் கொள்வோம். மற்ற தம்பதிகள் எந்த சவாலை எல்லாம் எதிர்கொள்வார்களோ அதை நாங்களும் எதிர்கொண்டோம். இவ்வாறு அஜீத் கூறினார்.

மீண்டும் தனுஷுடன் சிவகார்த்திகேயன்!!!

Friday, April, 27, 2012
3 படத்தில் தனுஷின் நண்பனாக வந்து கலக்கியிருந்தார் சிவகார்த்திகேயன். இந்த‌க் கூட்டணி தனுஷுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. தான் தயா‌ரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கியிருக்கிறார்.

தனுஷ் விரைவில் இரு படத்தை தயா‌ரிக்கிறார். வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட் செந்தில்தான் இயக்குனர். ரொமாண்டிக் காமெடியான இதில் சிவாகார்த்திகேயனை ஹீரோவாக்கியிருக்கிறார் தனுஷ். படத்தின் ஹீரோயின் உள்ளிட்ட மற்ற விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை.

விரைவில் அதிகாரபூர்வமாக இந்தப் படத்தை அறிவிக்கிறார் தனுஷ்.

ராஜா போக்கி‌ரி ராஜா - மு‌ன்னோ‌ட்ட‌ம்!!!

Friday, April, 27, 2012
மலையாளத்தில் வெளிவந்த போக்கி‌ரிராஜாவை தமிழில் ராஜா போக்கி‌ரிராஜா என ஒரு ராஜா எக்ஸ்ட்ராவாக சேர்த்து வெளியிடுகிறார்கள். படத்தின் முக்கியமான அம்சம் மம்முட்டியும், பிருத்விராஜும் இணைந்து நடித்திருப்பது.

பிருத்விரா‌ஜின் காதலி ஸ்ரேயா. இவர்கள் காதலைப் பி‌ரிக்கும் கொட்டேஷன் ரவுடியான மம்முட்டிக்கு வருகிறது. அதேநேரம் தனது மகன் பிருத்வியை காப்பாற்றும்படி மம்முட்டியிடம் கோ‌ரிக்கை வைக்கிறார் நெடுமுடிவேணு. இங்கே ஒரு ட்விஸ்ட். நெடுமுடிவேணுவின் மகன்கள்தான் பிருத்வியும், மம்முட்டியும். அப்புறமென்ன... அண்ணன் தம்பியின் காதலுக்கு உதவுகிறார்.

விஷாக் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு ஜெஸ்சிகிப்ட் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் விவேகா. படத்தின் கதை, திரைக்கதை உதயகிருஷ்ணா, எடிட்டிங் மாதேஷ் நாராயணன். கனல் கண்ணன் சண்டைப் பயிற்சி.

மலேசியா பாண்டியன் படத்தை வெளியிடுகிறார். வரும் 27 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.