Monday, March 12, 2012

மாமியாருக்காக ஐநா பயணத்தை ரத்து செய்தார் குஷ்பு!!!

Monday, March 12, 2012
மாமியாருக்கு ஏற்பட்டுள்ள உடல் நலக்குறைவு காரணைமாக தனது ஐ.நா பயணத்தை நடிகை குஷ்பு ரத்து செய்துள்ளார்.

நைரோபியில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் உரையாற்ற நடிகை குஷ்புவுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மகளிர் முன்னேற்றம் என்ற தலைப்பில் அவர் உரையாற்றவிருந்தார்.

தற்போது தனது மாமியாருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஐ.நா பயணத்தை ரத்து செய்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த மாநாட்டுக்காகவே சங்கரன்கோயில் பிரச்சாரத்தை அவசர அவசரமாக முடித்து சென்னை திரும்பினார் குஷ்பு.

இதுகுறித்து குஷ்பு கூறுகையில், "என் குடும்ப சூழ்நிலை காரணமாக ஐ.நா. மாநாட்டுக்கு செல்ல முடியவில்லை. எனது மாமியாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு வருகிற 15-ந் தேதி வாக்கில் இதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

கடந்த சனிக்கிழமை ஆஞ்சியோகிராம் நடந்துள்ளது. எனக்கு குடும்ப பொறுப்புகள்தான் முதலில். மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

மாமியார் உடல் நலக்குறைவாக இருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் ஐ.நா. சபை மாநாட்டுக்கு செல்வது என்பது இயலாத காரியம். மாநாட்டில் பங்கேற்க இயலாத நிலை குறித்து ஏற்கனவே ஐ.நா. சபைக்கு கடிதம் அனுப்பி விட்டேன்.

ஐ.நா. மாநாட்டில் பங்கேற்க எதிர்காலத்தில் வாய்ப்பு கிட்டலாம். ஆனால் மாமியாருக்கு உதவியாக அவர் பக்கத்தில் இருப்பதுதான் இப்போது எனக்கு முக்கியம்’’ என்று கூறியுள்ளார்.

அமெரிக்க விழாவில் கலந்து கொள்ள வடிவேலு ரூ 25 லட்சம் கேட்டதால் ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சி!!!

Monday, March 12, 2012
அமெரிக்காவில் நடக்கவிருக்கும் தமிழ்ச் சங்க விழாவில் கலந்து கொள்ள நடிகர் வடிவேலு ரூ 25 லட்சம் கேட்டதால், விழா ஏற்பாட்டாளர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி திரும்பிவிட்டார்களாம்.

கடந்த தேர்தலில் திமுகவை ஆதரித்து வடிவேலு பேசிய பேச்சு, அவரை இப்போது ஒரேயடியாக உட்கார வைத்துவிட்டது.

சினி வாய்ப்புகள் குறைந்தன. நில ஆக்கிரமிப்புகள் சர்ச்சைகள், வழக்குகள், மன உளைச்சல் என காமெடி நடிகரின் வாழ்க்கை சோகமாகிப் போனது.

கவிஞர் வைரமுத்து சமீபத்தில் ஒரு விழாவில் பேசும் போது வடிவேலுவை மிகச் சிறந்த காமெடி நடிகர் என்றும் அவரை திரையுலகினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

ஆனாலும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதற்கிடையில் அமெரிக்காவில் தமிழ்ச் சங்கம் நடத்தும் விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு வடிவேலுக்கு அழைப்பு வந்தது.

சினிமாவில் அவர் பிசியாக இருந்த போதும் இது போன்ற அழைப்புகள் வந்தன. ஆனால் அவர் போகவில்லை. தற்போது கைவசம் படங்கள் இல்லாததால் தமிழ் சங்க விழாவுக்கு வர வடிவேலு ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து விழா ஏற்பாடுகளை அமெரிக்க தமிழர்கள் தடபுடலாக செய்து வந்தனர். ஆனால் திடீரென்று அமெரிக்க தமிழ் சங்க விழாவில் பங்கேற்க தனக்கு ரூ.25 லட்சம் தர வேண்டும் என்று வடிவேலு நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. இதனால் தமிழ் சங்கத்தினர் ஷாக்காகி விட்டார்களாம்.

இதுகுறித்து அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யும் ஒருவர் கூறுகையில், "வடிவேலு ரூ.25 லட்சம் கேட்பார் என்று எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு பணத்தை கொடுத்து வடிவேலுவை விழாவுக்கு அழைத்து வர யாருக்கும் விருப்பமோ அவசியமோ இல்லை. எனவே வடிவேலு இல்லாமலேயே விழாவை நடத்த முடிவு செய்துவிட்டோம்," என்றார்.

இதுகுறித்து விவரமறிய வடிவேலுவைத் தொடர்புகொண்ட போது, 'அப்புறமா பேசுங்க, அண்ணன் பிஸியா இருக்காரு' என்ற பதில்தான் வந்தது!!

கார் விபத்தில் படு காயமடைந்து சிகிச்சைப் பெற்று வரும் மலையாள நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார் கோமா நிலைக்குப் போய்விட்டதால் உறவினர்களும் ரசிகர்களும் கவலையில்!

Monday, March 12, 2012
கார் விபத்தில் படு காயமடைந்து சிகிச்சைப் பெற்று வரும் மலையாள நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார் கோமா நிலைக்குப் போய்விட்டதால், அவரது உறவினர்களும் ரசிகர்களும் பெரும் கவலையில் உள்ளனர்.

மலையாள திரைஉலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெகதிஸ்ரீகுமார், இரு தினங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்கு காரில் சென்ற போது,

டிரைவர் அனில்குமாரும் பலத்த காயம் அடைந்தார். அவர்களை அக்கம் பக்கத்தினர் சேர்ந்து கோழிக்கோட்டில் உள்ள மிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜெகதிஸ்ரீகுமாருக்கு டாக்டர்கள் அவசர சிகிச்சை அளித்தனர். மேலும் வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசமும் அளிக்கப்பட்டது. அவரது உடல் நிலையை கண்காணித்து வந்த டாக்டர்கள் அவருக்கு அவசரமாக நேற்று அறுவைச் சிகிச்சை செய்யத் தீர்மானித்தனர். ஆனால் நேற்று இரவு வரை அவருக்கு சுயநினைவு திரும்பவில்லை.

இதனால் ஜெகதிஸ்ரீகுமாருக்கு மேற்கொள்ள வேண்டிய அறுவைச் சிகிச்சையை டாக்டர்கள் தள்ளி வைத்தனர்.

இது பற்றி மிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் கூறும் போது, ஜெகதிஸ்ரீகுமாரின் உடல் நிலை அதே நிலையில்தான் உள்ளது. அவருக்கு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இன்னும் முழுமையாக அபாய கட்டத்தை தாண்டவில்லை. 24 மணி நேரமும் அவர் டாக்டர்களின் கண்காணிப்பில்தான் உள்ளார்," என்றனர்.

ஜெகதியின் உடல்நிலை மலையாளத் திரையுலகினரையும், அவரது ரசிகர்களையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

டுவிட்டர், பேஸ்புக்கில் இருப்பது நான் இல்லை! - காஜல் காட்டம்!!!

Monday, March 12, 2012
நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் இன்டர் நெட்டில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வளைத் தளங்களை பயன்படுத்துகின்றனர். தங்களை பற்றிய விவரங்கள், போட்டோக்கள் போன்றவற்றை அவற்றில் போட்டு வைத்து ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுடன் தொடர்பு வைத்து கருத்து பரிமாறிக் கொள்கிறார்கள். இதனை சில சமூக விரோத கும்பல் மோசடியாகவும் பயன்படுத்துகின்றனர். நடிகர், நடிகைகள் பெயரில் போலி அக்கவுண்ட் துவங்கி ரசிகர்களுடன் அவர்கள் பேசுவது போல் தொடர்பு வைத்துள்ளார்கள். பல நடிகைகள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது காஜல் அகர்வால் பெயரிலும் டுவிட்டரில் மோசடி நடக்கிறது. காஜல் அகர்வால் படங்களை அதில் போட்டு வைத்து ரசிகர்களுடன் காஜல் அகர்வால் பேசுவது போல் மோசடி கும்பல் பேசி வருகின்றனர். ஆபாச கேள்விகளுக்கு பதில் சொல்வது போன்றும் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அதை உண்மை என்று நம்பி தொடர்பு வைத்துள்ளனர். பிரபல இந்தி நடிகர் நில்நிதின் முகேஷும் இது போல் தொடர்பு கொண்டு ஏமாந்துள்ளார். இது குறித்து காஜல் அகர்வால் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதும் ஆவேசம் அடைந்தார். அவர் கூறியதாவது:- டுவிட்டர், பேஸ் புக் போன்ற சமூக வளைத்தளங்களில் நான் இல்லை. ஆனால் எனது பெயரை போலியாக பயன்படுத்தி மோசடி நடிக்கிறது. மோசடி நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன். அவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம். நடிப்பில வளர்ச்சி இருக்கோ இல்லையோ.. இந்த மாதிரி விஷயங்களில் அம்ணி வளர்ச்சி நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமா வளர்ந்துகிட்டே இருக்கு. யாருக்கு தெரியும்?

மெழுகுச் சிலையை ரசித்த பளிங்குச் சிலை!!!

Monday, March 12, 2012
லண்டன் மியூசியத்தில் பாலிவுட்டின் முன்னாள் கனவு கன்னி மாதுரி தீட்சித்தின் மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது. சிலையை பார்த்த மாதுரி, என்னை நானே பார்ப்பதாக கூறியிருக்கிறார். லண்டனில் உள்ள மேடாம் துஷாட்ஸ் மியூசியத்தில், உலகில் உள்ள பிரபலங்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாலிவுட்டின் அமிதாப் பச்சன், ஷாரூக்கான், ஹிருத்திக்ரோஷன், ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர் ஆகியோருக்கு சிலை நிறுவப்பட்டுள்ள நிலையில் 6-வது பாலிவுட் ஸ்டாராக மாதுரியின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. சிலை திறப்பு விழாவிற்கு தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் லண்டன் சென்றிருந்தார் மாதுரி. சிலை திறப்புக்கு பின்னர் பேசிய மாதுரி தீட்சித், என்னை நானே பார்க்கிறேன். இந்த சிலை அச்சு அசலாக என்னைப்போன்று உள்ளது. உலகில் உள்ள பிரபலங்களின் சிலையோடு எனது சிலையும் இருப்பது பெருமையாக இருக்கிறது. இந்த சிலையை வடிவமைத்தவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் என்று கூறியுள்ளார். உருகிடாதீங்க....!