Saturday, January 21, 2012

அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு ரஜினி சேவை செய்ய வேண்டுமா? - லதா ரஜினி!

அரசியலுக்கு வந்தால்தான் ஒருவரால் மக்கள் பணியாற்ற முடியும் என்றில்லை. என் கணவர் ரஜினி ஒரு சிறந்த தேசியவாதியாக மக்கள் பணியை தொடர்வார், என்று லதா ரஜினி கூறினார்.

ஆஷ்ரம் ஆர்ட்ஸ் அகாடமி விருது வழங்கும் விழாவில் கலையுலக சாதனையாளர்களுக்கு ரஜினி விருது, செவாலியே சிவாஜி விருது மற்றும் பீஷ்ம விருதுகளை ரஜினி வழங்கினார். இந்த விழாவில் ரஜினியின் குருநாதர் கே பாலச்சந்தருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ரஜினி விருது வழங்கப்பட்டது.

மறைந்த நடிகர் ஷம்மி கபூர், பழம்பெரும் நடிகை ஆஷா பரேக் ஆகியோருக்கும் ரஜினி விருது வழங்கப்பட்டது.

மூத்த நடிகர் வீரராகவனுக்கு செவாலியே சிவாஜி கணேசன் விருது வழங்கப்பட்டது.

நடிகை எம்என் ராஜம், பழம்பெரும் பாடகர் ஏ எல் ராகவன், கடம் வித்வான் விக்கு விநாயக்ராம், கல்யாண கிருஷ்ண சோமையாஜி, வேணுகோபால் சந்திரசேகர் மற்றும் சினிமா பத்திரிகையாளர் – பிஆர்ஓ பிலிம்நியூஸ் ஆனந்தன் ஆகியோருக்கு பீஷ்மா விருது வழங்கப்பட்டது.

ரஜினியைப் போல யாருமில்லை...

விழாவில் இயக்குநர் கே பாலச்சந்தர் பேசுகையில், "ரஜினியைப் போன்ற குருபக்தி கொண்ட ஒருவரை நான் எங்குமே பார்த்ததில்லை. யாரோடும் ஒப்பிட முடியாத அளவுக்கு உயர்வானர். இந்தியாவின் நிகரற்ற தவப்புதல்வர். திரையுலக சரித்திரத்தையே மாற்றிய சாதனையாளர்.

கல்வித் துறையில் லதா ரஜினி ஆற்றும் பணிகள், இந்த துறைக்காகவே தன்னை அவர் அர்ப்பணித்துக் கொண்டுள்ளதைக் கண்டு நான் பெருமையும் உவகையும் அடைகிறேன்," என்றார்.

ஆஷா பரேக்

பழம்பெரும் பாலிவுட் நடிகை ஆஷா பரேக் கூறுகையில், "இன்று நான் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்துள்ளேன். நான் திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தது ஷம்மி கபூருடன்தான். இன்று அவருடன் எனக்கும் பெருமைக்குரிய ரஜினி விருது கிடைத்திருப்பது நிறைவாக உள்ளது. ரஜினி சிறந்த மனிதர். ஒப்பற்ற கலைஞர். யாரோடும் ஒப்பிட முடியாத தனித்தன்மை மிகுந்தவர். தேசத்தின் இணையற்ற தவப்புதல்வர்," என்றார்.

அரசியலுக்கு வந்தால்தானா...

இந்த விழாவில் லதா ரஜினியின் பேச்சு மிக முக்கியமானதாக அமைந்தது. அவர் பேசுகையில், "இந்தியாவின் மிகச் சிறந்த தேசியவாதி என் கணவர் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமை அடைகிறேன். இதைச் சொல்லும்போதே சிலிர்ப்பாக உள்ளது. நிறைய பேர் என் கணவர் அரசியலுக்கு வருவாரா என்று கேட்கிறார்கள். அரசியலுக்கு வந்துதான் ஒருவர் மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்பதில்லை. என் கணவர் ஒரு தேசியவாதியாக, தேசப்பற்றாளராக இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் தன் சேவைகளைத் தொடர்வார்," என்றார் அவர்.

என் ஆசை நண்பன் படத்தில் நிறைவேறியிருக்கிறது : விஜய் பேட்டி...!

தன்னை வித்தியாசமாக பார்க்க வேண்டும் என்ற ஆசை, நண்பன் படம் மூலம் நிறைவேறி இருக்கிறது என்று விஜய் கூறியுள்ளார். நடிகர் விஜய்க்கு இந்தாண்டு துவக்கமே சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. அவரது நண்பன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், வசூலையும் பெற்றுள்ளது. இதனால் ரொம்பவே உற்சாகத்தில் இருக்கிறார் விஜய். அந்த உற்சாகத்தோடு சென்னையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 3-இடியட்ஸ் படம் என்னை ரொம்பவே கவர்ந்து விட்டது. அதனால் அந்தபடத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். அதற்கேற்றாறு போல டைரக்டர், தயாரிப்பாளர் என அனைத்தும் அமைந்ததால் நண்பன் படத்தில் நடித்தேன். படமும் நன்றாக வந்துள்ளது. எல்லா தியேட்டர்களிலும் நல்ல வசூல் என்று செய்திகள் வருகிறது. இதை கேட்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.

பொதுவாக என்னுடைய படத்தில் பஞ்ச் டயலாக்குகளை திணிக்க விரும்ப மாட்டேன். அதேசமயம் சீன்களுக்கு தேவைப்பட்டால் மட்டுமே பேசுவேன். அதேபோல் என்னுடைய படத்தில் அதிரடி காட்சிகளும் இருக்கும். அதில் ஒரு வகையான ஹீ‌ரோயிசம் தெரியும். ஆனால் நண்பன் படம் அப்படியில்லை. பஞ்ச் டயலாக் கிடையாது, அதிரடி கிடையாது. அது ஒரு வித்தியாசமான கேரக்டர். என்னை வித்யாசமாக பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாளா ஆசைப்பட்டேன். அது நண்பன் படம் மூலம் நிறைவேறியிருக்கிறது என்றார்.

மேலும் அவர் பேசுகையில், என்னை எனது அப்பா டாக்டராக்க ஆசைப்பட்டார். ஆனால் எனக்கோ நடிப்பில் தான் ஆர்வம் இருந்தது. அதனால் சினிமாவுக்கு வந்துவிட்டேன். அதேபோல் ஒவ்வொரு பெற்றோரும் அவர்களது பிள்ளைகள் எந்த துறையில் ஆர்வம் காட்டுகிறார்களோ, அதில் அவர்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

பிப்ரவரி 3ம்தேதி ஜெனிலியா-ரித்தேஷ் திருமணம்!!!

நடிகை ஜெனிலியாவுக்கும், அவரது காதலர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் வருகிற பிப்ரவரி 3ம்தேதி திருமணம் நடைபெற உள்ளது. ஜெனிலியாவும், ரித்தேசும் காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்ததையடுத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் இவர்களது திருமணம் வருகிற பிப்ரவரி 3ம்தேதி மும்பையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் திருமணத்திற்கு முன்னதாக வரும் 31ம்தேதி நிச்சயதார்த்த சடங்குகள் நடைபெற உள்ளன.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிப்ரவரி 4ம்தேதி நடைபெறுகிறது. இந்த மங்களகரமான நிகழ்ச்சியில் இந்தி, தமிழ், தெலுங்கு திரையுலக நட்சத்திரங்கள், பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். திருமணத்துக்கு பின் ஜெனிலியா சினிமாவில் நடிக்கமாட்டார் எனத் தெரிகிறது. அவர் சினிமாவில் நடிப்பதை மணமகனின் தந்தையும், மத்திய அமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக் விரும்பவில்லை என்பதால் இந்த முடிவை ஜெனிலியா எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போதைக்கு ‘நோ’ திருமணம்: காஜல் அகர்வால்!!!

திருமணம் செய்துகொள்ளும் நிலையில் நான் இல்லை’ என்றார், காஜல் அகர்வால். மேலும் அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு நான் நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடியது. சில படங்கள் தோல்வி அடைந்தது. நான் நடிக்கும் எல்லா படமும் வெற்றிபெறும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. அப்படி எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். தெலுங்கு படத்தில் மகேஷ்பாபுவுடன் முத்தக்காட்சியில் நடித்தது பற்றி கேட்கிறார்கள். இக்காட்சியை ஆபாசம் இல்லாமல் பூரி ஜெகன்நாத் இயக்கினார். ரசிகர்களும் அதை ஏற்றுக்கொண்டனர். முத்தக்காட்சியை தவிர எத்தனையோ காட்சிகள் படத்தில் இருக்கிறது. அதுபற்றிக் கேட்காமல், முத்தம் பற்றியே கேட்பது ஏன்? கதைக்கு அவசியம் என்பதால்தான் அப்படி நடித்தேன். நான் ‘நிர்வாண போஸ்’ கொடுத்ததாக வந்த செய்திக்கு, தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்கிறார்கள். இதை நான் பலமாக மறுத்திருக்கிறேன். பொய்யான அச்செய்திக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து, விஷயத்தைப் பெரிதாக்க விரும்பவில்லை. அதனால் அமைதியாகி விட்டேன். இந்தியில் ‘சிங்கம்Õ ரிலீசுக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது. தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வருவதால் ஏற்க முடியவில்லை. தெலுங்கு ஹீரோ பிரபாசுடன் எனக்கு காதல் என்று எழுதுகிறார்கள். திருமணம் ஆகாதவர்கள் இரண்டு பேர் பழகினால், உடனே அவர்கள் காதலிக்கிறார்கள் என்று அர்த்தமா? அவர் எனக்கு நல்ல நண்பர், அவ்வளவுதான். தற்போது திருமணம் செய்துகொள்ளும் நிலையில் நான் இல்லை. அதற்கான நேரம் வரும். அப்போது திருமணம் செய்வேன்.

செல்வராகவன்-கீதாஞ்சலி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது!!!

டைரக்டர் செல்வராகவன்-கீதாஞ்சலி தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களை இயக்கியிருப்பவர் செல்வராகவன். இவர் முதலில் நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்தார். அதன் பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பை அடுத்து இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த கையோடு, கீதாஞ்சலி என்ற உதவி இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் செல்வராகவன். இவர்களது திருமணம் கடந்த ஆண்டு சென்னையில் நடந்தது. இந்நிலையில் கீதாஞ்சலி கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பமாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று (20ம்தேதி) மாலை 5.25 மணிக்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த செல்வராகவன், அங்குள்ளவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். பிரசவத்திற்கு பிறகு தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆங்கில ஆல்பத்தில் ஆடுகிறார் அக்ஷயா!!!

கலாபக் காதலன்’, ‘உளியின் ஓசை’ படங்களில் நடித்துள்ள அக்ஷயா, தற்போது ஆங்கில ஆல்பம் ஒன்றில் ஆடுகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழில் 2 படங்களிலும், தெலுங்கில் ‘நாக்கண்டு ஒக்கரு’ படத்திலும் நடிக்கிறேன். என் நண்பர்கள் தயாரிக்கும் ‘ஜி-அருளஸ்’ என்ற ஆங்கில ஆல்பத்தில் ஆடியிருக்கிறேன். இது வெற்றிபெற்றால், தொடர்ந்து நண்பர்களுடன் இணைந்து தமிழிலும் ஆல்பம் தயாரிப்பேன். எனக்கு பாய் பிரண்டுகள் அதிகம். இதனால், நான் யாரையோ காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொண்டதாகவும் அடிக்கடி செய்திகள் வருகிறது. யாரையும் நான் காதலிக்கவில்லை என்பதே உண்மை. காதலையும், கல்யாணத்தையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போது சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்.

மல்டி ஸ்டார் படம் தவறு இல்லை!!!

ஒரே படத்தில், பல ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பது தவறு இல்லை’ என்றார் ஸ்ரீகாந்த். மேலும் அவர் கூறியதாவது: ‘ரோஜாக்கூட்டம்’, ‘ஏப்ரல் மாதத்தில்’, ‘பார்த்திபன் கனவு’ படங்களில் பார்த்த மென்மையான ஸ்ரீகாந்தை மீண்டும் பார்க்க வைத்த படம், ‘நண்பன்’. தெலுங்கிலும் ‘டப்’ ஆகிறது. தமிழில் இனி நான் நடிக்கும் படத்தை ரொம்ப கவனமாகத் தேர்வு செய்யும்படி ஷங்கர் அறிவுரை சொன்னார். அதை கடைபிடிக்கிறேன். வெற்றிகரமான படத்தில் இருக்கும்போது மட்டுமே அப்படத்தில் நடித்தவர்கள் கவனிக்கப்படுகிறார்கள். அந்தவகையில், ‘நண்பன்’ எனக்கு திருப்புமுனைப் படமாக அமைந்துள்ளது. ஒரே படத்தில் பல ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கும்போது, நடிப்பில் ஆரோக்கியமான போட்டி ஏற்படுகிறது. தவிர, மற்ற ஹீரோக்களின் ரசிகர்களும் படத்தைப் பார்த்து நடிப்பை பாராட்டுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, படத்தில் எனது கேரக்டருக்கு சம முக்கியத்துவம் அளிக்கப்பட்டால், எத்தனை ஹீரோக்களுடனும் இணைந்து நடிக்கத் தயாராக இருக்கிறேன். இப்படி நடிப்பது ரசிகர்களுக்கும் பரவச அனுபவமாக இருக்கும். மல்டி ஸ்டார் படம் ஒன்றும் தவறு இல்லை. தமிழில் ‘பாகன்’ படத்தில் ஜனனி அய்யருடன் நடிக்கிறேன். மலையாளத்தில் பிருத்விராஜின் வேண்டுகோளுக்காக, அவர் ஹீரோவாக நடிக்கும் ‘ஹீரோ’ படத்தில், நடிகர் ஸ்ரீகாந்தாகவே கவுரவ வேடத்தில் வருகிறேன். தெலுங்கில் ‘நிப்பு’ படத்தில் ரவிதேஜாவுடன் சேர்ந்து நடிக்கிறேன். எனக்கு ஜோடி, பாவனா.

ஆதரவு கொடுத்திட்டாரு கார்த்திக்... இனி அதிமுகவுக்கு அமோக வெற்றிதான்!!!

தேர்தல் என்ற சீரியஸான நாடகத்தில் அவ்வப்போது சில சிரிப்பு கேரக்டர்கள் எட்டிப் பார்த்து காணாமல் போகும்.

அந்தக் கேரக்டர்களில் ஒருவராகிவிட்டார் நடிகர் கார்த்திக். சும்மா நடிகர்னா கோவிச்சுக்குவார்... நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர்!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு முதலில் ஆதரவு தெரிவித்து, அவர்கள் சீட் எதுவும் தராததால், 'கூட்டணியை' முறித்துக் கொண்டு வெளியில் வந்தவர் கார்த்திக்.

பின்னர் சில தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். அவர்கள் என்ன ஆனார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. கார்த்திக்குக்காவது தெரியுமா தெரியவில்லை.

இந்த நிலையில் வரும் சங்கரன் கோயில் நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கப் போவதாக கார்த்திக் கட்சி அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து கார்த்திக் பிரச்சாரம் செய்யப் போகிறாராம்.

இதுகுறித்து கார்த்திக் கட்சியின் மாநிலத் தலைவர் பாலமுருகன் கூறுகையில், "சங்கரன்கோவில் தொகுதியில் நாடாளும் மக்கள் கட்சிக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. இந்த தொகுதியில் தனித்து போட்டியிட்டபோதே நாங்கள் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றோம். கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது அ.தி.மு.க.வை ஆதரித்தோம். அதேபோல் சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் முத்துச்செல்வியை வெற்றிபெற செய்யவேண்டும் என்று எங்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

அதன்படி அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றிக்காக நாங்கள் பாடுபடுவோம். அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக கார்த்திக் பிரசாரம் செய்வார். அவரது பிரசாரதேதி தேர்தல்தேதி அறிவித்தபிறகு தெரிவிக்கப்படும். அடுத்த பொதுத்தேர்தலின்போது சங்கரன்கோவில் தொகுதியை பொதுத்தொகுதியாக மாற்றவேண்டும் என்று வலியுறுத்துவோம்," என்றார்.

கோச்சடையானில் ரஜினியுடன் ஷோபனா!!!

சிவா, தளபதி படங்களில் ரஜினியின் ஜோடியாகி ரசிகர்களைக் கவர்ந்தவர், நடிகை ஷோபனா. தேசிய விருதுபெற்ற நடிகை. பின்னாளில் பரத நாட்டியமே போதும் என சினிமாவிலிருந்து ஒதுங்கிக் கொண்டார்.

இப்போது மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் ஷோபனா, கோச்சடையானில்.

இந்தப் படத்தில் ஏற்கெனவே பல முக்கிய நட்சத்திரங்கள் ஒப்பந்தமாகியுள்ளனர். பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்த நிலையில் உள்ள கத்ரீனா கைஃப் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

தமிழ் நடிகை சினேகா ரஜினியின் தங்கையாக வருகிறார். ஆதியும், ப்ருத்விராஜும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மோகன்பாபுவின் மகளும், நடிகை-மற்றும் தயாரிப்பாளருமான லட்சுமி மஞ்சு ஒரு முக்கிய வேடம் ஏற்றுள்ளார்.

இந்த நட்சத்திரங்களுடன் புதிதாக இணைந்திருப்பவர் ஷோபனா.

படத்துக்கு ஏற்கெனவே ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க ஆரம்பித்துவிட்டார். கே எஸ் ரவிக்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குநர் மேற்பார்வை செய்ய, சௌந்தர்யா இயக்கும் படம் இது!