Saturday, February 18, 2012

இயக்குனர் கோபம் நடிகை புதுடெக்னிக் : நயன்தாரா!!!

Saturday, February 18, 2012
கபடி நடிகர் நடிக்கும் சீனுவான இயக்குனரின் ஷூட்டிங் தள்ளிப்போகுதாம்... போகுதாம்... நடிகர் எங்கோ விழுந்து அடிபட்டு வீட்டில் வார கணக்கில ஓய்வில் இருக்கிறாராம். ஷூட்டிங் தள்ளிப்போறதுக்கு இதான் காரணம். ஸ்டிரைக்கிலே இருக்கிற இன்டஸ்ரில எப்ப வேணும்னாலும் ஷூட்டிங் தொடங்கலாம். ஆனா நடிகர் இப்படி அடிபட்டு படுத்துட்டாரு. அவர் மேலே எனக்கு கோபம்னு பிரண்ட்ஸுங்க கிட்ட இயக்குனர் சொல்லி வருத்தப்படுறாராம்.. வருத்தப்படுறாராம்...

உடும்பான விலங்கை வெச்சி படம் எடுத்த இயக்கம் தனியார் கல்விக்காரங்களை தாறுமாறா தாக்கி இருக்காராம்... இருக்காராம்... ‘யாராவது கேஸ் போட்டு பிரச்னையாக்கிட்டா என்ன பண்ணுவீங்க’னு இயக்கத்துக்கிட்ட கேட்டா சிரிக்கிறாராம். ‘ஏன் சிரிக்கிறீங்க’னு கேட்டா, ‘அவங்களபத்தி நெறய புள்ளிவிவரம் வச்சிருக்கேன். கேஸுன்னு வந்துச்சுனா அந்த புள்ளி விவரத்த பகிரங்கமா வெளியிடுவே’னு பதில் சொல்றாராம்.. சொல்றாராம்..

தமிழ்ல ஒரு படத்துல மட்டுமே நடிச்ச மல்லுவுட் ரீமாவான கல்லுங்க நடிகை அப்செட்ல இருக்காராம்.., இருக்காராம்.., அணை விஷயத்துல அவர் சொந்த ஊருக்கு வக்காலத்து வாங்கினதால கோலிவுட் இயக்கங்க கோபத்துல இருக்காங்களாம். நடிகைய தங்கள் படத்துக்கு ஒப்பந்தம் பண்ண நெனச்ச இயக்கங்களும் இப்ப வேற நடிகைய தேடுறாங்களாம். விஷயத்த கேள்விபட்ட நடிகை புதுடெக்னிக்கா இதையே சாக்கா சொல்லி மல்லுவுட்ல சான்ஸ் பிடிக்கிறாராம்... பிடிக்கிறாராம்...

ஹன்ஸிகாவை சுற்றி வளைத்து கோவை ரசிகர்கள் 'கசமுசா'!!

Saturday, February 18, 2012
கோவையில் ஆயிரக்கணக்கான ரசிகர்களிடம் சிக்கிக் கொண்டார் நடிகை ஹன்ஸிகா. அவரை தொட்டுப்பார்க்க ரசிகர்கள் பலர் முண்டியடித்ததால் கைகளிலும், இடுப்பிலும் லேசான சிராய்ப்பு ஏற்பட்டு அவதிக்குள்ளானார்.

நேற்று கோவை நகருக்கு வந்திருந்தார் ஹன்ஸிகா. அப்போது அவரைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடிவிட்டனர். அவரை மிக அருகில் பார்க்கவும், தொட்டுப் பார்க்கவும் முண்டியடித்தனர்.

இதனால் திணறிப் போனார் ஹன்ஸிகா. பலர் அவரைக் கிள்ளினர். வேகமாக அவரைப் பிடித்து இழுத்ததால் அவர் உடலில் பல இடங்களில் சிராய்ப்பு ஏற்பட்டது.

இதனால் அலறித் துடித்த ஹன்ஸிகாவை பக்கத்திலிருந்த போலீசார் வந்து மீட்டனர்.

இதுகுறித்து ஹன்ஸிகா கூறுகையில், "ரசிகர்கள் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டனர். நல்ல வேளை போலீசார் வந்து மீட்டனர். நிச்சயம் இனி செக்யூரிட்டியை பலப்படுத்தினால்தான் வெளியில் செல்ல முடியும்," என்றார்.

ஏற்கெனவே சென்னையில் இதே அனுபவத்துக்குள்ளானார் ஹன்ஸிகா என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Saturday, February 18, 2012
* குழந்தையை உடனிருந்து கவனிக்கும் ஐஸ்வர்யாராய்க்கு சாப்பிடக்கூட டைனிங் டேபிள் போக நேரமில்லாமல் தனது அறையிலேயே அடைந்து கிடக்கிறாராம்.
* ‘பையா’ படத்தையடுத்து கார்த்தியுடன் நடிக்கிறார் மிலின்த் சோமன்.
* வெங்கட்பிரபு இயக்க சூர்யா நடிக்கும் படத்தில் டாப்ஸி நடிக்கவில்லையாம்.
* 3 தெலுங்கு படம், ‘கடல்’, ‘நீ தானே என் பொன்வசந்தம்’ என 5 படங்களில் நடிக்கும் சமந்தா இனி அடுத்த ஆண்டுதான் புதுபடம் ஒப்புக்கொள்வாராம்.
* அர்ஜுன் கன்னடத்தில் நடிக்கும் ‘பிரசாத்’ படம் தமிழ், தெலுங்கில் டப்பிங் ஆக உள்ளது.

திருமணமா... எனக்கா... என்ன விளையாடறீங்களா?! - தமன்னா ஆவேசம்!!!

Saturday, February 18, 2012
நான் இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டியிருக்கு. இந்த நேரத்தில் தேவையில்லாமல் எனக்கு திருமணம் என்றெல்லாம் எழுதலாமா என்று சூடாகக் கேட்டுள்ளார் தமன்னா.

தமன்னாவுக்கும் இன்னொரு நடிகருக்கும் காதல் என்றும், தமன்னா திருமணத்துக்குத் தயாராவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.

அவர் தற்போது தெலுங்கில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் வந்த தமிழ்ப்பட வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இந்த நிலையில், அஜய் தேவ்கனுடன் நடிக்க வந்த வாய்ப்பையும் உதறியிருக்கிறார் தமன்னா. எனவே திருமண செய்தியில் எதுவும் உண்மை இருக்குமோ என்ற கேள்வியை அவரிடமே கேட்டனர் நிருபர்கள்.

இதற்கு பதிலளித்த தமன்னா, "தெலுங்கில் மூன்று படங்களை நான் முடிக்க வேண்டி உள்ளது. மூன்றுமே பெரிய படங்கள். அதனால்தான் வேறு வாய்ப்புகளில் கவனம் செலுத்தவில்லை. அடுத்து நான் தமிழில் ஒரு படம் ஒப்புக்கொள்ளவிருக்கிறேன். அதனால்தான் இந்திப் பட வாய்ப்பையே வேண்டாம் என்று கூறிவிட்டேன்.

அடிக்கடி என் திருமணம் எப்போது என மீடியா கேட்டு வருகிறது. என் திருமணத்தில் இவ்வளவு அக்கறை காட்டுவதற்கு நன்றி. ஆனால் நான் சின்னப் பொண்ணு. இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டியுள்ளது. இந்த நேரத்தில் திருமணம் பற்றி எழுத ஒன்றுமே இல்லையே," என்றார்.

சக நடிகரை பாராட்டிய திவ்யா பல்டி முதல்நாள் பாசம் மறுநாள் டோஸ்!

Saturday, February 18, 2012
சக நடிகர் யாஷை பாராட்டிய திவ்யா இன்று சரமாரியாக தாக்கினார். பாய்பிரண்டுக்கு பிடிக்காததால் அவர் பல்டி அடித்தாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் நடித்த குட்டி ராதிகா கன்னடத்தில் தயாரித்த படம் ‘லக்கி’. இதில் யாஷ், திவ்யா ஜோடி. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி பெங்களூரில் சமீபத்தில் நடந்தது. இந்த விழாவுக்கு பிறகு தன்னுடன் நடித்த ஹீரோ யாஷைபற்றி ஆஹா, ஒஹோவென்று திவ்யா புகழ்ந்தார். ‘நடிப்புக்காக தன்னை அர்ப்பணம் செய்துகொள்பவர், சாப்பிடுவதைகூட மறந்து நடிப்பவர். அவரைப்போல் ஒரு நடிகரை பார்த்ததில்லை’ என்று டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்திருந்தார். இந்த தகவல் பத்திரிகைகளில் வெளியானது. இதையடுத்து கிசு கிசு கிளம்பியது. ஏற்கனவே தொழில் அதிபர் ரபேல் என்பவருடன் நெருக்கமான நட்புடன் இருக்கிறார் திவ்யா. இதை ரபேலி டம் போட்டுக்கொடுத்து விடுவார்களோ என்று திவ்யா பயப்படுகிறாராம்.

முதல்நாள் யாஷ் மீது காட்டிய பாசத்துக்கு எதிராக மறுநாள் டுவிட்டர் பக்கத்தில் டோஸ் விட ஆரம்பித்திருக்கிறார் திவ்யா. Òதொலைக்காட்சியில் யாஷைபற்றி தனிப்பட்ட முறையில் நான் சொல்லும் கருத்துக்களை ஒளிபரப்பக்கூடாது என்று தடைவிதிக்கிறார். மேலும் பட போஸ்டர்களில் என் பெயர் (திவ்யா) இடம் பெறக்கூடாது என்று தகராறு செய்திருக்கிறார். இதனால் தயாரிப்பாளர்கள் என் பெயரை நீக்குகிறார்கள். படத்திற்கான விளம்பர டிசைனில்கூட என் பெயர் இடம்பெறக்கூடாது என்று டிசைனரிடம் யாஷ் வற்புறுத்தி இருக்கிறார். நான் அவரை பாராட்டியதற்கு எனக்கு நல்ல பலன். அவருக்கு நான் பரிந்து பேசியது முட்டாள்தனமானது என்பதை தெரிந்து கொண்டேன். இதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். இதற்கு என்ன பதில் கிடைக்கப்போகிறது என்பதை அவர் விரைவில் தெரிந்துகொள்வார்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் சாண்டல்வுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'விஸ்வரூப'த்தை பற்றிய சூடான தகவல்கள்!

Saturday, February 18, 2012
இந்திய திரையுலகில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் படம் 'விஸ்வரூபம்'. கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார் ஆகியோர் நடிக்க, கமல் இயக்கி வருகிறார். ஷங்கர்-இஷான் லாய் இசையமைத்து வருகிறார்கள்.

இதோ விஸ்வரூபத்தை பற்றிய சில சூடான தகவல்கள்:

* விஸ்வரூபம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கதை.

* இதுவரை கமல் நடித்த படங்கள் எல்லாவற்றையும் விட அதிக பொருட்செலவில் தயாராகும் படம் 'விஸ்வரூபம்'.

* ஜோர்டான் நாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு BLACK HAWK, COBRA, CHINOOK ஆகிய ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

* அமெரிக்க ராணுவப்படையை படம் பிடிக்க அனுமதி இல்லாததால், இப்படத்தில் துணை நடிகர்களை வைத்து நகலாக அமெரிக்க ராணுவப்படையை தயார் செய்திருக்கிறார்கள்.

* நியூயார்க் நகரில் ஒரு தெருவில் காட்சி எடுக்க வேண்டும் என்றால் அத்தெருவையே மூடிவிட்டு அனுமதி அளிப்பார்கள். அங்கு நடந்து செல்லும் ஆட்கள்கூட படப்பிடிப்பு ஆட்களாக தான் இருக்க வேண்டும். அப்படி படப்பிடிப்பிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒரு பிரம்மாண்டமான கார் சேஸ் காட்சியை படமாக்கி இருக்கிறார்கள்.

* கமல் இப்படத்தில் கதக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் பாத்திரத்தில் நடிக்கிறார். பிரபல கதக் நடனக் கலைஞர் பிர்ஜு மகராஜ் நடனம் அமைக்க, கமல் படத்தில் கதக் நடனம் ஆடி இருக்கிறார்.

* வைரமுத்து எழுதி கொடுத்த ஒரு பாடல் கமல் மனதை கவர்ந்து விட, இத்தாலியில் உள்ள Mount Etna எரிமலைக் குழம்பில் செய்த பேனா ஒன்றை பரிசாக கொடுத்து இருக்கிறார். படமும் எரிமலையா வெடிக்கப் போகுதுனு சொல்லுங்க......

'மருதநாயகத்தில் ரஜினி'; உண்மையல்ல: நிகில்!

Saturday, February 18, 2012
'மருதநாயகம்' படத்தில் ரஜினி நடிக்கப்போவதாக மும்பை பத்திரிகை வெளியிட்ட செய்தியில் உண்மையில்லை என்று அவரது பி.ஆர்.ஓ. தெரிவித்துள்ளார். நடிகர் கமலஹாசன் 1997-ல் 'மருதநாயகம்' என்ற படத்தை தொடங்கினார். இங்கிலாந்து ராணி எலிசபெத் இதன் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. பின்னர் நிதி நெருக்கடி காரணமாக பட வேலைகள் நிறுத்தப்பட்டன. இப்படம் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த போர் வீரன் முகம்மது யூசுப் கானை பற்றிய கதை. பிரமாண்ட சரித்திர அரங்குகள், போர் வீரர்கள் உடைகள் என இதற்கு ரூ. 150 கோடி செலவாகும் என்பதாலும், அந்த அளவு பணம் செலவிட யாரும் தயாராக இல்லாததாலும் படத்தை நிறுத்தி வைத்தார் கமல். தற்போது மீண்டும் 'மருதநாயகம்' படப்பிடிப்பை துவங்கப் போவதாகவும் இதில் ரஜினிக்குப் பொருத்தமான முக்கிய கேரக்டர் உள்ளதாகவும் கமல் மும்பையில் நேற்று முன்தினம் பேட்டி அளித்திருந்தார். இதனை மும்பையின் முன்னணிப் பத்திரிகையான மும்பை மிரர் செய்தியாக வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று மாலை இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து ட்விட் செய்திருந்தார், கமலின் பிஆர்ஓ நிகில் முருகன். அதில், "மருதநாயகம் படப்பிடிப்பை துவங்கப் போவதாகவும் ரஜினியும் அதில் நடிப்பார் என்றும் கமல் மும்பையில் பேட்டியளித்ததாக வெளியான செய்தி உண்மையல்ல. எப்போதோ கொடுத்த பேட்டியை இப்போது புதிதாக வெளியிட்டுள்ளனர். கமல் தற்போது 'விஸ்வரூபம்' படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இப்படம் முடிந்ததும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் 'தலைவன் இருக்கின்றான்' என்ற படத்தில் நடிக்க உள்ளார்," என்றார். மருதநாயகத்த மறந்திடக் கூடாதுனு யாரோ பொரளிய கௌப்பிவிட்ருப்பாய்ங்க போல.....

5 படங்கள் இன்று வெளியானது!!!

Saturday, February 18, 2012
இந்த வெள்ளிக்கிழமையும் கோலிவுட் ரொம்ப பிஸி. காரணம் 5 புதிய படங்கள் திரையைத் தொடுகின்றன. போனவாரம் 6 படங்கள் வெளியாகின. ஒவ்வொன்றும் ஒரு விதமான படம். இதில் 'தோனி'க்கு நல்ல பெயர். இந்த வாரம் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்', 'காதலில் சொதப்புவது எப்படி', 'உடும்பன்', 'காட்டுப்புலி' மற்றும் 'அம்புலி' என 5 படங்கள். இவற்றில் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. அதர்வா-அமலா பால் நடித்துள்ள இந்தப் படம் ஒரு வித்தியாசமான த்ரில்லர் என்கிறார்கள். ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்க, எல்ரெட் குமார் தயாரித்து இயக்கியுள்ளார். 'காதலில் சொதப்புவது எப்படி' படம் தமிழ் - தெலுங்கில் வெளியாகிறது. நடிகர் சித்தார்த் இந்தப் படம் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். இதிலும் ஹீரோயின் அமலா பால்தான். சில நெருக்கடிகளைத் தாண்டி 'உடும்பன்' படம் வெளியாகிறது. உடும்பை வைத்து படம் எடுத்திருக்கிறார்கள். அர்ஜுன் நடிப்பில் வரும் 'காட்டுப் புலி'யும் ஆக்ஷன் த்ரில்லர்தான். 'அம்புலி' ஒரு 3 டி படம். மனோஜ் நைட் ஷியாமளனின் வில்லேஜ் மாதிரி. இவற்றோடு, கௌதம் மேனனின் 'ஏக் தீவானா தா' (விண்ணைத்தாண்டி வருவாயா)வும் வெளியாகிறது. சென்னையில் மட்டும் 11 அரங்குகளில் இந்தப் படம் ரிலீஸ்! ஆங்கிலப்படம் 'தி வுமன் இன் பிளாக்', ரவி தேஜாவின் தெலுங்குப் படம் 'நிப்பு' போன்றவையும் இன்றுதான் ரிலீஸ். எம்புட்டு மழை கொட்டுனாலும் சிப்பிக்குள் விழும் துளி எதுன்னுதான் பார்த்திடுவோம்.....