Wednesday, May 23, 2012

நான் அதிர்ஷ்டக்காரி இல்லையா? ஸ்ருதி கோபம்!!!

Wednesday,May, 23, 2012
ஒரு படம் ஹிட் ஆகாததால் நான் அதிர்ஷ்டக்காரி இல்லை என்பதா என்று ஆவேசப்படுகிறார் ஸ்ருதி ஹாசன். நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியதாவது: கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை என்னை ‘அன்லக்கி’ (அதிர்ஷ்டம் இல்லாதவள்) என்று எழுதி வந்தார்கள். தெலுங்கில் நான் நடித்துள்ள ‘கப்பர் சிங்’ படம் சூப்பர் ஹிட் ஆகி உள்ளது. இப்போது அதிர்ஷ்டம் உள்ளவள் என்று எழுதுகிறார்கள். இந்தியில் நான் நடித்த படம் ஹிட் ஆகவில்லை என்பதால் அதிர்ஷ்டமில்லாதவள் என்றவர்களே இப்போது மாற்றி கூறுவது சந்தோஷம். வீட்டில் சிறுமியாக இருந்தபோதே அப்பா நடித்த படங்களின் வெற்றி, தோல்விகளை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு படமும் என்னை பொறுத்தவரை அனுபவம்தான். இதுவரை நான் நடித்த படங்கள் எல்லாமே நல்ல படங்கள்தான். அதில் ஏற்று நடித்த வேடங்களை எண்ணி பெருமைப்படுகிறேன். ‘ஓ மை பிரண்ட்’, ‘3’, ‘7ம் அறிவு’ ஆகிய படங்களில் வலுவான, சுதந்திரமான கதாபாத்திரங்கள். எந்த வேடமாக இருந்தாலும் 100 சதவீத நடிப்பை தருகிறேன். ஆனால் முடிவில் என்ன வருகிறது என்பதற்கு நான் பொறுப்பல்ல.

‘எந்த படத்தில் நடிப்பது என்பதை அப்பா, அம்மாவிடம் கேட்டு முடிவு செய்கிறீர்களா’ என்று கேட்கிறார்கள். முதலில் நான் கதை கேட்பேன். அதில் நடிப்பதா, வேண்டாமா என்று சந்தேகம் எழுந்தால் மட்டுமே பெற்றோரிடம் அறிவுரை கேட்பேன். கமல்ஹாசன், சரிகா மகள் என்பதால் எனக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நான் பூர்த்தி செய்ய வேண்டும். அதுதான் என் வேலை. இன்னும்கூட சினிமாவிலும், இசையிலும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்.

கலைஞர், கமல் கலந்து கொள்ளும் புத்தக வெளியீட்டு விழா!!!


Wednesday,May, 23, 2012
வைரமுத்து மூன்றாம் உலகப்போர் என்ற பெய‌ரில் வார இதழில் தொடர் எழுதி வருகிறார். இதனை புத்தகமாக அடுத்த மாதம் சென்னையில் வெளியிடுகிறார்கள்.

தண்ணீர்‌‌ப் பிரச்சனையை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் இந்த தண்ணீர் காவியத்தை கருணாநிதி வெளியிட கமல்ஹாசன் பெற்றுக் கொள்கிறார். புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளும் இன்னொருவர் எழுத்தாளர் ஜெயகாந்தன்.

இதேபோல் இளையராஜாவின் பால் நிலாப் பாதை என்ற புத்தகமும் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது. இளையராஜாவின் புத்தகத்தை பல வருடங்களுக்கு முன் வெளியிட்ட போது கமலும், ர‌ஜினியும் கலந்து கொண்டனர். இந்தமுறை கமல் கலந்து கொள்கிறார். ஜூன் 4 இந்த புத்தக வெளியீடு நடக்கயிருக்கிறது.

‌‌ரீமேக் செய்யப்படும் அக்னி நட்சத்திரம்!!!

Wednesday,May, 23, 2012
இந்த கோடைக்கேற்ற ஹாட் நியூஸ். மணிரத்னத்தின் அக்னி நட்சத்திரம் விரைவில் ‌ரீமேக் செய்யப்பட உள்ளது.

புதிதாக கதை செய்து ‌ரிஸ்க் எடுப்பதைவிட ஏற்கனவே வெற்றிபெற்ற கதையை ‌ரீமேக் செய்வதையே தயா‌ரிப்பாளர்கள் விரும்புகிறார்கள். அதிரடி படமாக இருந்தால் படத்தை அறிவிக்கும் போதே அபி‌ரிதமான விளம்பரமும் கிடைக்கும்.

விஷால் நடிக்கும் சமர் படத்தை தயா‌ரித்துவரும் நிறுவனம் மணிரத்னத்தின் அக்னி நட்சத்திரத்தை ‌ரீமேக் செய்யும் முயற்சியில் உள்ளது. இரு ஹீரோ சப்ஜெக்டான இதற்கு முன்னணி ஹீரோக்களின் கால்ஷீட்டை கேட்க உத்தேசித்துள்ளனர். அதேபோல் திறமையான இயக்குனர்களுக்கும் வலை வீசியுள்ளது இந்த நிறுவனம். இன்னும் சில வாரங்களில் முறையான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்!!!

Wednesday,May, 23, 2012
6. ஸ்ரீ ராமரா‌ஜ்‌ஜியம்
தெலுங்கிலிருந்து தமிழில் டப் செய்யப்பட்டிருக்கும் இந்த‌ப் புராண படம் முதல் மூன்று தினங்களில் 1.4 லட்சங்களை வசூலித்துள்ளது. மிகச் சுமாரான வசூல்.

5. ஸ்ரீதர்
இதுவும் டப்பிங் படம். அதே தெலுங்கிலிருந்து தமிழுக்கு. சித்தார்த், ஹன்சிகா, ஸ்ருதி என தெ‌‌ரிந்த முகங்கள். காதல் கதை என்பதால் 2.4 லட்சங்களை இப்படம் வசூலித்திருக்கிறது.

4. ராட்டினம்
கௌதம் போன்ற பிரபல இயக்குனர்களால் பாராட்டப்பட்ட படம். மினிமம் பட்ஜெட் படங்களில் இப்படம் ஓரளவு தேறியிருக்கிறது. இதுவும் முந்தைய இரு படங்களைப் போல சென்ற வாரம் வெளியாகி, முதல் மூன்று தினங்களில் 22 லட்சங்களை வசூலித்திருக்கிறது. தெ‌ரிந்த முகங்கள் எதுவுமின்றி இவ்வளவு கலெக்சனை எட்டியிருப்பது ஆரோக்கியமான விஷயம்.

3. ஒரு கல் ஒரு கண்ணாடி
ஒருவழியாக முதலிடத்திலிருந்து மூன்றாவது இடத்துக்கு சறுக்கியிருக்கிறது ஓகே ஓகே. இதுவரை சென்னையில் இப்படம் 16 கோடிகளை வா‌ரியெடுத்திருக்கிறது. எந்திரனுக்குப் பிறகு இதுதான் அதிக வசூல். சென்ற வார இறுதியில் 30 லட்சங்களை வசூலித்திருப்பதால் மொத்த சென்னை வசூல் 20 கோடியை எட்ட வாய்ப்புள்ளது.

2. வழக்கு எண் 18/9
நல்ல படங்கள் வசூலில் நல்ல பொசிஷனில் இருப்பது தமிழ் சினிமாவின் ஆரோக்கியத்துக்கு நல்லது. வழக்கு எண் அப்படியொரு ஆரோக்கியமான நிகழ்வு. இப்படம் சென்ற வார இறுதியில் 40.8 லட்சங்களை வசூலித்துள்ளது. இதன் மொத்த சென்னை வசூல் சென்ற வார இறுதி வரை 2.76 கோடி.

1. கலகலப்பு
சுந்தர் சி-யின் கலகலப்பு வசூலில் பட்டையை கிளப்புகிறது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 84 லட்சங்கள். இதுவரை சென்னையில் மட்டும் 2.35 கோடியை வசூலித்திருக்கிறது.

சொதப்புற படத்துக்கு பாராட்டு மீண்டும் உல்டா கதை!!!

Wednesday,May, 23, 2012
பிரகாச ஹீரோ, காட்டன் வீர ஹீரோ, ஸ்டன்ட் கோழி ஹீரோன்னு கோலிவுட் ஹீரோக்கள் டோலிவுட்ல இடம் பிடிக்க¤ற வேலைல மும்முரமா இருக்காங்களாம்... சோலோவா கோதாவுல குதிச்சிருக்கிற இந்த ஹீரோக்களுக்கு போட்டியா இனிஷியலுக்கு பேர் மாறின ஹீரோ களத்துல குதிச்சிருக்காராம். அதுக்கு சப்போர்ட்டா இருக்க¤றதுக்காக டோலிவுட் ஹீரோக்களை பிரெண்ட்ஸ் பிடிக்கறதுலேயும் வேகமா இருக்காராம். சமீபத்துல மன்சூ ஹீரோ பார்ட்டில கலந்துகிட்ட நடிகரு, தொடர்ச்சியா லவ்ல சொதப்புற படத்தை பாராட்டி சித்து ஹீரோவுக்கு மெசேஜ¢ அனுப்பி இருக்காராம்...

இந்தி காமெடி படங்களை உல்டா பண்ணி கலகலன்னு படம் எடுத்தாரு இன்ஷியலு இயக¢கம். இதே பாணில அடுத்த படத்தையும் இயக்க முடிவு எடுத்திருக்கிறாராம். அதுக்காக நிறைய டிவிடிகளை வாங்கி பாக்குறாராம்... ஆனா, இந்த முறை இந்தி காமெடி படங்கள் கிடையாதாம். பிரெஞ்சு காமெடி படங்களை பாக்குறாராம்...

தீக்ஸ ஹீரோயினுக்கு கோலிவுட்ல பெரிய எதிர்பார்ப்பு இருந்துச்சாம்... ஆனா எதிர்பார்த்தபடி வாய்ப்பு வராததால மனசொடிஞ்சிட்டாராம். கோலிவுட் ஹீரோக்களுக்கு உயரம் குறைஞ்ச ஹீரோயின்கள்தான் பிடிக்குது. அதுதான் தீக்ஸ ஹீரோயினுக்கு மைனஸாம். உயரமா வளர்ந்தது என்னோட மிஸ்டேக் இல்லையேன்னு தோழிங்ககிட்ட நடிகை புலம்புறாராம்...

ஆந்திர முதல்வர் மிரட்டலால் பயந்தேன்: பி.வாசு தகவல்!!!

Wednesday,May, 23, 2012
பிறமொழி ஹீரோக்கள் தமிழில் கதை கேட்பதால் தமிழ் இயக்குனர்கள் பிறமொழியில் ஜெயிக்க முடிகிறது என்றார் பி.வாசு. நடிகர் மோகன்பாபு மகள் லட்சுமி மன்சு. தமிழ், தெலுங்கு இருமொழியில் ‘வருவான் தலைவன் என்ற படத்தை தயாரிக்கிறார். முதன்முறையாக இப்படம் மூலம் என்.டி.பாலகிருஷ்ணா தமிழில் அறிமுகமாகிறார். மனோஜ் மன்சு, தீக்ஷா சேத் ஜோடி. சேகர் ராஜா இயக்குகிறார். இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் பி.வாசு பேசியதாவது: தெலுங்கில் என்.டி.பாலகிருஷ்ணாவை இயக்க எண்ணி அப்போது ஆந்திர முதல்வராக இருந்த என்.டி.ராமராவிடம் கதை சொல்லச் சென்றேன். ஆங்கிலம், தெலுங்கில் கதை சொல்ல வராது தமிழில் சொல்கிறேன் என்றேன். ‘ஆந்திரா முதல்வரிடம் தமிழில் கதை சொல்கிறேன் என்கிறாயே என்ன தைரியம் உனக்கு என்றார். பயந்துவிட்டேன்.

பிறகு சிரித்தபடி, ‘நான் 40 வருடம் தமிழ்நாட்டு தண்ணி குடித்து வளர்ந்தவன். எனக்கு தமிழ் தெரியும். தமிழிலேயே சொல். அடுத்த முறை சொல்லும்போது தெலுங்கில் சொல்ல வேண்டும் என்றார். ராமராவ், நாகேஸ்வரராவ், ராஜ்குமார், மம்மூட்டி என 4 மொழி நடிகர்களுமே தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்கள். அவர்களது பிள்ளைகளும் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். அதனால்தான் அவர்களை எளிதாக அணுக முடிகிறது. தமிழிலேயே கதை சொல்லி அவர்களிடம் கால்ஷீட் பெற்று தமிழ் இயக்குனர்கள் பிற மொழிகளில் வெற்றி பெற முடிகிறது. இவ்வாறு பி.வாசு கூறினார். என்.டி.பாலகிருஷ்ணா, சிம்பு, மனோஜ் மன்சு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.