Tuesday, May 29, 2012

விஜய், அக்ஷய்குமார், பிரபுதேவா பங்கேற்ற 'ரவுடி' பார்ட்டி!!!

Tuesday, ,May, 29, 2012
ரவுடி ரத்தோர் இந்திப் படத்தை இயக்கியுளள பிரபுதேவா நைட் பார்ட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் நடிகர்கள் விஜய், அக்ஷய்குமார், சஞ்சய் கபூர், காமெடியன் விவேக், நடிகை திரிஷா உள்பட பலரும் கலந்து கொண்டு கேக் வெட்டி சாப்பிட்டு கலகலப்பாக்கியுள்ளனர்.

இந்த நள்ளிரவு பார்ட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கானும், கொல்கத்தா அணியின் ஆதரவாளர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டதால் விருந்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

ரவுடி ரத்தோர் படக் குழு சார்பில் தமிழ் மற்றும் இந்தி நடிகர், நடிகைகளுக்கு ஒரு பார்ட்டிய ஏற்பாடு செய்திருந்தார் பிரபுதேவா. இதில் அக்ஷய் குமார், சபீனா கான், சோனாக்ஷி சின்ஹா, ஷாருக் கான், அவரது மனைவி கெளரி, ரித்தேஷ், அவருடய மனைவி ஜெனிலியா, சங்கி பாண்டே, கரீம் மொரானி, சஞ்சய் கபூர், சாஜத் கான், நடிகர்கள் விஜய், விவேக், சுதீப், பிரசன்னா, பிரகாஷ் ராஜ், ஜெயம் ரவி, சுந்தர்.சி, சித்தார், நடிகைகள் திரிஷா, சிம்ரன், சோனியா அகர்வால், சார்மி, சினேகா, குத்து ரம்யா, லட்சுமி மஞ்சு, பிரியா ஆனந்த், பூனம் கெளர், பிரகாஷ் ராஜ் மனைவி போனி வர்மா, இசையமைப்பாளர்கள் தேவி ஸ்ரீ பிரசாத், விஜய் ஆண்டனி, நடிகை சங்கீதா அவருடைய கணவர் கிருஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆடல், பாடல், விருந்து என தடபுடலாக போனதாம் விருந்து. இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் இறுதிப் போட்டியில் தோற்ற அன்று இரவு நடந்த இந்த பார்ட்டி சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. போட்டியில் வென்ற கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கானையும் கொல்கத்தா ஆதரவாளர்களையும் அழைத்து விருந்து வைத்துள்ளார் பிரபுதேவா என்று சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தமிழகம் பிச்சை கேட்கிறது என கமென்ட், சென்னையை விட்டு தன்யா ஓட்டம் :மன்னிப்பும் கேட்டார்!!!

Tuesday, ,May, 29, 2012
தமிழகம் தண்ணீர், மின்சாரத்துக்காக பிச்சை கேட்டது. கொடுத்தோம் என்று கிண்டல் செய்த நடிகை தன்யாவுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்டார். சென்னை வீட்டை காலி செய்துவிட்டு பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார். ‘காதலில் சொதப்புவது எப்படிÕ, ‘7ஆம் அறிவுÕ படங்களில் நடித்திருப்பவர் தன்யா. பெங்களூரை சேர்ந்தவர். சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் இவர் எழுதும்போது, ‘கர்நாடகத்திடம் தமிழகம் தண்ணீர் பிச்சை கேட்டது கொடுத்தோம். மின்சாரம் பிச்சை கேட்டது கொடுத்தோம். ஐபிஎல் போட்டியில் கருணை பிச்சை கேட்டது கொடுத்தோம். தமிழ் திரையுலகினர் வாய்ப்பு பிச்சை கேட்டால் தருவோம்ÕÕ என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த கருத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகினர் மத்தியிலும் கோபத்தை ஏற்படுத்தியது. தன்யாவின் டுவிட்டர் பக்கத்தில் அவரை கடுமையாக விமர்சித்தும், திட்டியும் பலர் பதில் அனுப்பினார்கள். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார் தன்யா. தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். சென்னையில் தோழிகளுடன் தங்கி இருந்த அவர், இப்பிரச்னையால் உடனடியாக அறையை காலி செய்துவிட்டு பெங்களூர் புறப்பட்டு சென்றார். இது பற்றி தன்யா டுவிட்டரில் குறிப்பிட்டபோது, Ô‘எனக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்பை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. எனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கிறேன்ÕÕ என்றார். இப்பிரச்னையை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பதற்கு அவர் முழுக்கு போட்டுள்ளார்.

பிச்சை கேட்கும் தமிழகம்... நடிகை கமென்ட்டுக்கு எதிர்ப்பு!!!

முதலில் தண்ணீர் பிசசை கேட்டார்கள், பிறகு மின்சாரம். அதையெல்லாம் கொடுத்தோம். இப்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் கருணை பிச்சை கேட்டார்கள். அதையும் கொடுத்தோம் என ஏளனமாக தமிழகத்தை பற்றி கமென்ட் அடித்திருக்கிறார் நடிகை தன்யா.
காதலில் சொதப்புவது எப்படி, 7ஆம் அறிவு உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் தன்யா. பெங்களூரை சேர்ந்தவர். தமிழ் சினிமா மூலம்தான் நடிகையாக இவர் அறிமுகமானார். இவர் இணையதளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் தமிழகத்தை சாடியிருப்பதால் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இணையதளத்தில் அவர் கூறியிருப்பதாவது:

டியர் சென்னை... நீங்கள் குடிக்க தண்ணீர் பிச்சை கேட்டீர்கள். நாங்கள் கொடுத்தோம். மின்சாரம் பிச்சை கேட்டீர்கள். அதையும் நாங்கள் கொடுத்தோம். ட்வென்ட்டி 20 கிரிக்கெட் போட்டியில் ‘பிளே ஆப் போட்டிக்கு போவதற்கும் எங்களது கருணை தேவைப்பட்டது. விட்டுக்கொடுத்தோம். நீங்கள் (தமிழ் திரையுலகினர்) சினிமா வாய்ப்பையும் பிச்சை கேட்டால் அதையும் தருவோம். இவ்வாறு தன்யா கூறியிருக்கிறார்.
கிண்டல் செய்வது போல், திமிர் பிடித்த இவரது கமென்ட் தமிழ் திரையுலம், சினிமா ரசிகர்களை மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களையும் கோபத்தில் ஆழ்த்தி உள்ளது. சிலரின் தூண்டுதல் பேரில் தன்யா இதுபோல் கூறியிருக்கிறார். தன்யாவின் பேச்சுக்கு தமிழகத்தில் சினிமா மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

விவேக் தொடங்கிய பசுமை கலாம்' திட்டம் மூலம் தமிழ்நாட்டில் 13 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை: கடலூரில் அப்துல்கலாம் நிறைவு செய்கிறார்!!!

Tuesday, ,May, 29, 2012
நடிகர் விவேக் தொடங்கிய `பசுமை கலாம்' திட்டம் மூலம் தமிழ்நாட்டில் 13 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. திட்டத்தை கடலூரில் ஜுன் மாதம் 7-ந் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நிறைவு செய்கிறார்.

10 லட்சம் மரக்கன்றுகள்

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அத்தியந்த சீடரான நடிகர் விவேக், வழக்கமாக சந்திப்பது போல அப்துல்கலாமை சந்தித்து பேசினார். அப்போது, அப்துல்கலாம், ``நாட்டில் மரக்கன்றுகள் நடுவதின் அவசியத்தை பற்றி, ஏன் உங்கள் படத்தில் கூறக்கூடாது'' என்று கேட்டார். அதற்கு நடிகர் விவேக், ``அய்யா எனது படங்களில் அதை செய்து கொண்டுதான் இருக்கிறேன். நீங்கள் உத்தரவிட்டால் ஒரு இயக்கமாக தொடங்கி இந்த பணியை செய்வேன்'' என்று கூறினார்.

அதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த அப்துல்கலாம், ``உடனடியாக தமிழ்நாட்டில் இந்தப்பணியை தொடங்குங்கள் என்றார். எத்தனை மரக்கன்றுகள் நடுவீர்கள்'' என்றும் கேட்டார். அதற்கு அவர், 10 லட்சம் மரக்கன்று நடுவேன் என்றார். இதைக்கேட்டு அப்துல்கலாமும் மலைக்கவில்லை. நிச்சயம் இவரால் முடியும் என்று நம்பினார்.

பணம்-பரிசு வேண்டாம்

10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கு, `பசுமை கலாம்' திட்டம் என்று நடிகர் விவேக் பெயர் வைத்தார். முதல் மரக்கன்று, பள்ளி மாணவர்களால் நடப்பட வேண்டும் என்று, திருச்சியில் உள்ள மாணவர்களால் மரக்கன்று நடப்பட்டது. அதனைத்தொடர்ந்து இந்த திட்டத்திற்கு பலர் ஆதரவு கொடுத்தனர்.

அதன்பின்னர், நடிகர் விவேக் கலந்துகொள்ளும் விழாக்களில், ``எனக்கு பணமோ, பரிசோ வேண்டாம். அதற்கு பதிலாக மரக்கன்றுகளை நடுங்கள்'' என்று வேண்டுகோள் விடுத்தார். அப்படி பெறப்பட்ட மரக்கன்றுகளை கொண்டு, இந்த திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.

அதாவது, முதலில் நடுவதாக குறிக்கப்பட்டது 10 லட்சம் மரக்கன்றுகள். ஆனால், இதுவரை நட்டு முடிக்கப்பட்டது 13 லட்சம் மரக்கன்றுகள்.

இந்த `பசுமை கலாம்' திட்டத்தின் நிறைவு விழா, ஜுன் மாதம் 13-ந்தேதி கடலூரில் உள்ள கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதுகுறித்து நடிகர் விவேக் கூறியதாவது:-

சிந்தையில் உதித்த திட்டம்

இந்த திட்டத்தை அப்துல்கலாம் தொடங்கிவைத்தார். அனைவரும் ஆதரவு தந்தனர். என்னையே அறியாமல் அதிகம் பிடிப்பு ஏற்பட்டுவிட்டது. 13 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது, எனது முயற்சியின் முதல் கட்டம்தான். தொடர்ந்து பல லட்சம் மரக்கன்று நடுவது எனது சிந்தையில் உதித்த திட்டம். மத்திய, மாநில அரசுகள் மர வளத்தை பெருக்குவதற்கு பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

நமது இதிகாசங்களில் ராமருக்கு பாலம் கட்ட அணில் உதவியது என்று இருக்கிறது. அதுபோல், அரசு மேற்கொள்ளும் மரவளம் பெருக்கும் மாபெரும் பணிக்கு, இந்த விவேக் அணில் போல தனது பணியை தொடர்ந்து செய்வேன்.

இவ்வாறு நடிகர் விவேக் கூறினார்.

என் 'பிரா'வை எரிக்க வேண்டும் போல இருக்கிறது... சோனம் கபூர் ஆவேசம்!!!

Tuesday, ,May, 29, 2012
இந்தி நடிகை சோனம் கபூர் சற்றே கோபமாக இருக்கிறார். எல்லாம், பாலிவுட் படங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதால் வந்த கோபமாம்.

கேன்ஸ் பட விழாவுக்காக வந்துள்ள சோனம் கபூர் அங்கு அளித்த ஒரு பேட்டியின்போது பாலிவுட் படங்களில் பெண்களை சித்தரிப்பது மிகவும் அவமானகரமானதாக இருக்கிறது. மிகவும் ஆபாசமாகவும், செக்ஸ் பொம்மைகள் போலவும் பெண்களை சித்தரித்துக் காட்டுகிறார்கள்.

உடலைக் காட்டும் காட்சிகளை வலியக்க திணிக்கிறார்கள். நான் ஒரு பெண்ணியவாதி. பாலிவுட்டில் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதைப் பார்க்கும்போது கோபமாக வருகிறது. எனது பிராவை தீவைத்து எரிக்க வேண்டும் போல இருக்கிறது. அதைத்தானே படங்களில் அதிகம் காட்டுகிறார்கள் என்றார்.

அவரை கூலாக்க, குத்துப்பாட்டு குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த சோனம், குத்துப்பாட்டு என்பது சினிமாவில் தவிர்க்க முடியாத விஷயமாகி விட்டது. அதைப் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அதிலும் ஆபாசத்தைத்தான் கலக்கிறார்கள். என்னால் குத்துப்பாட்டுக்கு ஆட முடியாது. ஆடவும் விருப்பமில்லை, ஆடவும் மாட்டேன் என்றார்

சென்னைக்குத்தாம்பா ஆதரவு கொடுத்தேன்... திரிஷா புலம்பல்!!!

Tuesday, ,May, 29, 2012
ஐபிஎல் இறுதிப் போட்டியில் நான் சென்னை சூப்பர் கிங்ஸுக்குத்தான் ஆதரவு கொடுத்தேன் என்று பதறியடித்துப் போய்க் கூறியுள்ளார் திரிஷா.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்தது. சென்னை அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதின. இதில் கொல்கத்தா வெற்றி பெற்றது.

போட்டியைக் காண பல திரைப்பட பிரபலங்கள் குவிந்திருந்தனர். கொல்கத்தாவுக்கு ஆதரவு தெரிவித்து ஜெனிலியா, பாடகி உஷா உதுப் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

அதேபோல சென்னை அணிக்கு ஜெயம் ரவி, உமா ரியாஸ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். நம்ம திரிஷாவையும் ஸ்டேடியத்தில் காண முடிந்தது.

ஆனால் அவர் கொல்கத்தா ரசிகர்கள் மத்தியில் உட்கார்ந்திருந்தார. இதனால் அவர் கொல்கத்தாவுக்கு ஆதரவாக இருந்துள்ளதாக பேச்சு வெடித்தது. கொல்கத்தா வேறு வெற்றி பெற்றதால் திரிஷா மீது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் திரிஷா மீது காட்டமாகியுள்ளனர். டிவிட்டர் மூலமும், பிளாக்குள் மூலமும் திரிஷாவைத் திட்டித் தீர்த்து வருகின்றனராம்.

இது திரிஷாவின் காதுகளுக்குப் போய் அவர் களேபரமாகி விட்டார். நான் எப்போதுமே சென்னையின் ரசிகைதான். நேற்றும் கூட சென்னைக்குத்தான் ஆதரவு கொடுத்தேன். எனது நெருங்கிய தோழி சபீனா கான் அங்கிருந்ததால் அவர் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். மற்றபடி நான் கொல்கத்தாவையெல்லாம் ஆதரிக்கவி்ல்லை, சாமி. தயவு செய்து விட்டுடுங்க என்று புலம்பியுள்ளார்.

விடுங்கப்பா, விடுங்கப்பா...

தமிழில் அறிமுகமாகும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகன்!!!

Tuesday, ,May, 29, 2012
மலையாள திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் மம்மூட்டி தமிழிலும் சில நல்லப் படங்களில் நடித்து பெயர் வாங்கியவர். இவரது மகன் துல்கர் சல்மான் தற்போது தமிழில் அறிமுகமாக உள்ளார்.

விளம்பரப் பட இயக்குநர்களான ஜேடி அன்ட் ஜெர்ரி ஆகியோர் உல்லாசம் படம் எடுத்து பெயர் பெற்றவர்கள். உல்லாசம் படத்தில் அஜீத்தையும், விக்ரமையும் இயக்கி ஒரு சிறந்த பொழுதுபோக்குப் படத்தை கொடுத்தார்கள். இவர்கள் மீண்டும் ஒரு திரைப்படம் இயக்க உள்ளனர். இப்படத்தில்தான் தான் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கிறார்.

படப்பிடிப்புகளைத் துவக்குவதற்கான பணிகளில் தயாரிப்பு வட்டம் ஈடுபட்டுள்ளனர். ஜுலை மாதத்தில் படப்பிடிப்பை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. துல்கர் சல்மான் ஏற்கனவே மலையாளப் படத்தில் அறிமுகமாகிவிட்டார்.