Monday, April 2, 2012

குழந்தையை கடத்தி என்னை கொலை செய்யப் போவதாக காதலன் தந்தை மிரட்டுகிறார்: நடிகை அல்போன்சா கமிஷனரிடம் புகார்!!!

Monday, April 02, 2012
நடிகை அல்போன்சாவின் காதலன் வினோத்குமார். கடந்த மாதம் 4-ந் தேதி அல்போன்சாவின் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வினோத்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை பாண்டியன் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் அல்போன்சா மீது புகார் செய்தனர். தற்கொலை குறித்து, விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்த அல்போன்சா பின்னர் அதனை வாபஸ் பெற்றார். நேற்று நிருபர்களை சந்தித்த அவர் யாருக்கும் பயந்து நான் ஓடி ஒளியவில்லை. வினோத்குமாரின் தற்கொலைக்கு நான் காரணம் இல்லை. பெற்றோர் பணம் கேட்டு துன்புறுத்தியதால்தான் வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை நான் சட்டப்படி சந்திப்பேன் என்று கூறினார்.

இந்நிலையில் இன்று மதியம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அல்போன்சா திடீரென வந்தார். அங்கு புகார் மனு ஒன்றை அவர் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

வினோத்குமார் தற்கொலை செய்த அன்று அவரது தந்தை பாண்டியன் மற்றும் உறவினர்கள் என்னை கடுமையாக தாக்கினர். எனது பார்ஸ்போர்ட்டையும் அவர்கள் எரித்து விட்டனர். இதனால் நான் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளேன்.

வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. தற்போது பணம் கேட்டு என்னை மிரட்டும் பாண்டியன் எனது குழந்தையை கடத்தி சென்று விடுவதாக கூறுகிறார். என்னை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டுகிறார். அவதூறான வார்த்தைகளால் என்னை அவர் திட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் அல்போன்சா நிருபர்களிடம் கூறியதாவது:-

காதலன் வினோத்குமாருடன் வாழவேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால் இப்போது எல்லாம் மாறி விட்டது. எனது குழந்தைக்காக நான் வாழ விரும்புகிறேன். வினோத்குமார் தற்கொலை விவகாரத்தில் 3-ம் நபர் ஒருவரின் தலையீடு உள்ளது. எனது பாஸ்போர்ட்டை எரித்தது தொடர்பாகவும், மிரட்டல் விடுத்தது தொடர்பாகவும் இன்று புகார் மனு கொடுத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் சினிமாவுக்கு மரியாதை உண்டு பட விழாவில் நடிகர் சூர்யா பேச்சு!!!

Monday, April 02, 2012
தமிழ் சினிமாவுக்கு எங்கே போனாலும் நல்ல மரியாதை உண்டு என்று பட விழாவில் நடிகர் சூர்யா கூறினார். பி.வி.பி சினிமா நிறுவனம் தயாரிக்கும் படம் நான் ஈ இந்த படத்தில் புதுமுகம் ஞானி நாயகக், சம்மந்தா நாயகி பிரபல தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கி உள்ளார். படத்துக்கு மரகதமணி இசையமைத்திருக்கிறார். படப்பிடிப்பு பெரும் பகுதி முடிந்து விட்டது. இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் கலந்துக் கொண்டு இசை தட்டை வெளியிட்டு நடிகர் சூர்யா பேசியதாவது:- இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி சிறந்த இயக்குனர் தெலுங்கில் பல வெற்றி படங்கள் கொடுத்தவர். தற்போது சினிமா பல மாற்றங்களை ஏற்படுத்தி வித்தியாசமான முறையில் உருவாகி வருகிறது. அந்த வகையில் நான் ஈ படம் இருக்கும் தமிழ் சினிமாவுக்கு எங்கே போனாலும் நல்ல மரியாதை உண்டு. அதை தவறாமல் கொடுக்கிறார்கள். குறிப்பாக தெலுங்கு பக்கம் நம் சினிமா கலைஞர்கள், இயக்குனர்கள் நடிகர்களுக்கு நல்லமரியாதை கொடுக்கிறார்கள். அந்த வகையில் எங்களுக்கு எப்படி அங்கே சிம்மாசனம் கொடுக்கிறீர்களோ அதே போல் உங்களுக்கு இங்கே சிம்மாசனம் உண்டு. அதை திரை உலகமும் தமிழ் ரசிகர்கள் கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் இயக்குனர்கள் பாலா, லிங்குசாமி, சமுத்திரக்கனி, பாலசேகரன், நடிகர் கார்த்தி, படத்தின் நாயதி சமந்தா பட யூனிட்டை சேர்ந்தவர்கள் என பலர் கலந்துக் கொணடனர். இதை தட்டு மற்றும் ட்ரைலரை சூர்யா, பாலா, கார்த்தி சமுத்திரகனி ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

சினிமாவுக்கு முழுக்கா? இறுதிநாள் ஷூட்டிங்கில் கண் கலங்கினார் த்ரிஷா!!!

Monday, April, 02, 2012
இறுதிநாள் தெலுங்கு ஷூட்டிங்கில் பங்கேற்ற த்ரிஷாவுக்கு பிரியாவிடை கொடுத்தபோது அவர் கண்கலங்கினார். த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது. அவருக்கு வீட்டில் மாப்பிள்ளை தேடுகிறார்கள். தெலுங்கு நடிகரை காதலிக்கிறார் என்றெல்லாம் சமீபகாலமாக கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் ‘தம்முÕ படத்தில் நடித்து வந்தார் த்ரிஷா. இப்படத்தின் கடைசிநாள் ஷூட்டிங் ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்தது. ஷூட்டிங் இறுதி நாளையொட்டி பட குழுவினர் பிரியாவிடை பார்ட்டி கொடுத்தனர். இதில் த்ரிஷா பங்கேற்றார்.

அப்போது அவர் கண் கலங்கினார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘கடைசிநாள் ஷூட்டிங்கில் பிரியாவிடை பார்ட்டி கொடுத்தபோது பட யூனிட்டை பிரியப்போகிறோமே என்று மனதுக்கு வருத்தமாக இருந்தது. இதன் ஷூட்டிங் அவ்வளவு மகிழ்ச்சியாக நடந்தது. எந்த படத்தில் நடித்தாலும் கடைசிநாள் ஷூட்டிங் என்றால் என் இதயம் கனத்துவிடும். யாரிடமிருந்தும் பிரியாவிடை பெறுவதை நான் விரும்புவதில்லை. காரணம் சினிமாவுக்கு முடிவே கிடையாது என்றார். தற்போது த்ரிஷா ஹாங்காங்கில் நடக்கும் ‘சமரன் பட ஷூட்டிங்கில் விஷாலுடன் நடித்து வருகிறார்.

வழக்கமாக ஷூட்டிங்கின் கடைசி நாள் பார்ட்டியில் த்ரிஷா எமோஷன் ஆக மாட்டார். ஆனால் இம்முறை அப்படி நடக்கவில்லை. அவர் கண் கலங்கினார். திருமணத்துக்காக அவர் தயாராகி வருகிறார். அதனால் தெலுங்கில் இது அவரது கடைசி படமாக இருக்கலாம். அதனால் கண் கலங்கியிருப்பார் என பட யூனிட்டை சேர்ந்த ஒருவர் கூறினார்.

15 வருடத்துக்கு பிறகு இந்தியில் ‘பாட்ஷா’!!!

Monday, April, 02, 2012
ரஜினி நடித்த ‘பாட்ஷா’ 15 வருடத்துக்கு பிறகு இந்தியில் டப்பிங் ஆகிறது. ரஜினி நடித்த படம் ‘பாட்ஷா‘. சுரேஷ்கிருஷ்ணா இயக்கம். தேவா இசை. 15 வருடத்துக்கு பிறகு இந்தியில் டப்பிங் ஆகி உள்ளது. இதுகுறித்து சுரேஷ்கிருஷ்ணா கூறியதாவது: 15 வருடத்துக்கு முன்பு அமிதாப்பை வைத்து பாட்ஷா ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டு அவருக்கு திரையிடப்பட்டது. நடிக்க ஒப்புதல் அளித்தார். பிறகு அவர் அரசியலில் ஈடுபாடு காட்டியதால் ரீமேக் செய்வது தாமதமானது. பிறகு அவரே படத்தை டப்பிங் செய்ய யோசனை கூறினார். அது இப்போது நிறைவேறி இருக்கிறது.

தற்போது புதுநெகட்டிவில் கலர் ரெஸ்டோரேஷன் செய்து, 5.1 டிஜிட்டல் ஒலிக்கு இசை மாற்றப்பட்டது. புதிதாக டைட்டில் இசை அமைத்திருக்கிறார் தேவா. வசனம் கோபால்ராம், இன்தீவர். டப்பிங் தயாரிப்பு பிரசாத். டி.வி.நடிகர் ஆதேஷ் கவுதம் ரஜினிக்கு டப்பிங் பேசினார். இம்மாத இறுதியில் 1000 தியேட்டர்களில் உலகம் முழுவதும் ரீ ரிலீஸ் ஆகிறது. இவ்வாறு சுரேஷ் கிருஷ்ணா கூறினார். படத்தின் டிரைலர் நேற்று சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் வெளியிடப்பட்டது. அங்கு திரண்ட ரசிகர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். பிறகு அவர்களுக்கு படம் திரையிடப்பட்டது.

நடிகர்கள் மீது தயாரிப்பாளர்கள் சரமாரி புகார்!!!

Monday, April 02, 2012
பெங்களூர் :கன்னட பட அதிபர்கள், நடிகர்களுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. காண்டம் தவிர நடிகர்கள் எல்லாவற்றையும் கேட்பதாக தயாரிப்பாளர் கூறினார். கன்னட பட தயாரிப்பாளர் முனிரத்னா. நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது நடிகர்களை விமர்சித்தார். ஒரு நடிகரை ஒப்பந்தம் செய்துவிட்டால் அவர்கள் தயாரிப்பாளர்களிடம் சாப்பாடு முதல் போக்குவரத்து செலவு உள்ளிட்ட எல்லாவற்றையுமே கேட்கின்றனர். காண்டம் மட்டும்தான் அவர்கள் கேட்பதில்லை என்றார். இது நடிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கன்னட ஹீரோ யோகி கூறும்போது, எந்த தயாரிப்பாளரிடமும் நானாக சென்று வாய்ப்பு கேட்கவில்லை. அவர்கள்தான் என் வீடு தேடி வந்து கால்ஷீட் கேட்கிறார்கள். என்னை பார்க்க ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எனது நண்பர்கள் வந்தால் அவர்களுக்கான சாப்பாடு பில் நானேதான் செலுத்துகிறேன்.

ஆரம்ப காலங்களில் அவுட்டோர் ஷூட்டிங் சென்றால் தின வாடகை ரூ.150 மட்டுமே உள்ள அறையில்தான் தங்குவேன். இப்போது நான் கேட்காவிட்டாலும் நல்ல ஓட்டல்களில் தங்க வைக்கின்றனர். முனிரத்னத்தின் கருத்து எல்லா நடிகர்களையும் ஒட்டுமொத்தமாக விமர்சித்ததாக கருதவில்லை என்றார். யோகியின் இந்த பதில் மற்றொரு சர்ச்சையை கிளப்பிவிட்டது. தயாரிப்பாளர்கள் அவர்வீடு தேடி கால்ஷீட் கேட்கிறார்கள் என்கிறார். எல்லோரையும் பிச்சைக்காரர்கள் என்று குறிப்பிடுகிறாரா? அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தனர். பின்னர் யோகி கூறும்போது, தயாரிப்பாளர்கள் நினைப்பதுபோல் தவறான கருத்தை தெரிவிக்கவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்கவேண்டியதில்லை என்றார். இந்த மோதலால் கன்னட படவுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'டெல்லி பெல்லி'யில் ஹன்சிகா?! !!!: எல்லா நடிகைகளும் எனக்கு ஒன்றுதான்! - ஆர்யா!!!

Monday, April 02, 2012
இந்தியில் வரவேற்பைப் பெற்ற 'டெல்லி பெல்லி'யின் தமிழ் ரீமேக்கை தயாரிக்க இருக்கிறது யுடிவி நிறுவனம். இப்படத்தில் யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து தயாரிப்பு நிறுவனமான யு.டிவி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. 'டெல்லி பெல்லி' படத்தினை தமிழுக்கு ஏற்றவாறு பல்வேறு மாற்றங்களை செய்து திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குநர் கண்ணன். ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டவர்களை நடிக்க வைக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். படத்தின் நாயகியாக ஹன்சிகாவை அணுகி இருக்கிறது யு.டிவி நிறுவனம். இது குறித்து ஹன்சிகா கூறியதாவது, "டெல்லி பெல்லி படத்தினை நான் பார்த்து இருக்கிறேன். ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு மாற்றங்களை செய்து இருக்கிறார்கள். 'டெல்லி பெல்லி' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க என்னை அணுகி இருக்கிறார்கள். விரைவில் ஒப்பந்தமாகி விடுவேன்" என்று தெரிவித்து இருக்கிறார். பாஸ் (எ) பாஸ்கரன் படத்திலிருந்து ஆர்யா, சந்தானம் காமெடி கூட்டணிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

'டெல்லி பெல்லி'யில் ஹன்சிகா?!!!

ஆர்யா ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், படம் பற்றிய தகவல்களைவிட அதிகமாக, அப்பட நாயகிக்கும் ஆர்யாவிற்கும் காதல் என கிசுகிசுக்கள் வரத் தொடங்கி விடும். 'வேட்டை' படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்த அமலா பாலும் இவரும் நெருங்கி பழகி வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆர்யா தன் புது வீட்டில் தனது நண்பர்களுக்கும், CCL-ல் போட்டியில் விளையாடிய சென்னை அணிக்கும் விருந்து அளித்தார். அவ்விருந்தில் அமலா கலந்து கொள்ளவில்லை. பிரபுதேவா பிரிவிற்கு பிறகு எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதை தவிர்த்து வந்த நயன் இதில் கலந்து கொண்டார். உடனே அமலா பாலை உதறிவிட்டு நயனுடன் கூட்டு சேர்ந்து இருக்கிறார் ஆர்யா என கோலிவுட் கிசுகிசுத்தது. இதற்கு அமலா பால், "ஆர்யாவுக்கும் எனக்குமான நட்பு தொடர்கிறது. அவரோடு நான் தொடர்பில்தான் இருக்கிறேன். ஆர்யா வீட்டில் விருந்து நடந்தபோது நான் துபாயில் இருந்தேன். அதனால்தான் அதில் பங்கேற்க முடியவில்லை" என்று தெரிவித்தார். இது குறித்து ஆர்யாவிடம் கேட்ட போது, "என்னுடன் நடிக்கும் நாயகிகள் அனைவருடன் இணைத்து கிசுகிசுக்கள் வருகின்றன. பூஜா தொடங்கி இப்போது அமலா பால் வரை என்னை இணைத்து கிசுகிசு வருகிறது. எனக்கு அனைவருமே நண்பர்கள்தான். நான் மிகவும் ஜாலியான் ஆள். அனைவருமே எனக்கு ஒன்றுதான். ஒருவர் மட்டும் மிகவும் நெருக்கம் என்று என்னால் தனித்தனியாக பிரிக்க முடியாது. என்னுடைய திருமணம் அனைவருக்கும் தெரிந்து தான் நடக்கும்", என்று தெரிவித்து இருக்கிறார். பாஸ்... நச் ஆளுயா நீர்ர்ர்...! ஃபிகர பிக்கப் பண்ணி ட்ராப் பண்றதெல்லாம் உமக்கு கைவந்த கலையாச்சே...!!

வந்தாச்சு லட்சுமி தங்கச்சி!!!

Monday, April, 02, 2012
ஒரு கொடியில் இரு மலர்களாக திரிய ஆரம்பித்திருக்கிறார்கள் லட்சுமி ராயும் அவரது அழகான தங்கச்சியும். (பேரு என்ன தாயீ...) எங்கு போனாலும் இவரையும் அழைத்துக் கொண்டு செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் லட்சுமி. அதுவும் கொஞ்ச நாட்களாகதான் இந்த பழக்கம். எங்க வீட்லேயும்தான் குண்டு பல்ப் இருக்கு என்று காட்டுவதற்காகவே பளிச்சென்று சிலரை அழைத்து வருவார்கள் காலம் போன நடிகைகள் சிலர். பாப்பா நடிக்குமா என்று யாராவது கேட்டால், கையில் ஒரு டிஸ்போசபிள் கர்சீப்பை கொடுத்து 'துடைச்சுக்கோங்க' என்பார்கள். கூடவே, 'ம்ஹும் அவ லண்டன்ல படிக்கிறா' என்று அடிஷனலாக ஒரு புஸ்வாணத்தை கொளுத்தி இன்னும் அழகு சேர்ப்பார்கள். கோடம்பாக்கத்தில் நாள்தோறும் நடக்கும் இந்த கூத்து லட்சுமிராய் விஷயத்திலும் நடப்பது பெரிய விஷயமில்லை. ஆனால் இந்த அழைப்புக்கெல்லாம் சின்னதாக ஒரு புன்னகையை மட்டும் சிந்த விடுகிறார் லட்சுமி ராய்.

காஸ்டியூம்களை திருப்பி அனுப்பிய நடிகை!!!

Monday, April, 02, 2012
அனன ஹீரோயினோட திருமண வாழ்க்கை கேள்விக்குறி ஆயிடுச்சாம்... ஆயிடுச்சாம்... நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு ஏற்கனவே திருமணம் ஆயிடுச்சின்னு அதிர்ச்சி தகவல் தெரிஞ்சபிறகும் அவரைதான் மணப்பேன்னு நடிகை பிடிவாதமா இருந்தாரு. அடிக்க அடிக்க அம்மியும் நகருமுங்கிற மாதிரி, பேமிலி மெம்பர்ஸ் சொல்லி சொல்லி நடிகையோட மனச மாத்திட்டாங்களாம். நடந்தது நடந்ததா இருக்கட்டும். இனி நடிப்புலதான் கவனம்னு நடக்க இருந்த திருமணத்தை ரத்து செய்ய முடிவு பண்ணிட்டாராம்... நடிகை முடிவு பண்ணிட்டாராம்...

பிசின் நடிகைகிட்ட முன்னெல்லாம் ஷூட்டிங்ல காஸ்டியூம் கொடுத்து போடச்சொன்னா மறுப்பு சொல்லாம போடுவாராம்... போடுவாராம்... இப்போ காஸ்டியூம் போடச் சொல்லி கொடுத்தா கேள்வி கேக்க¤றாராம். லேட்டஸ்ட் ஸ்டைலுக்கு ஏத்த மாதிரி தைச்சிருக்கா, தன்னோட உடல்வாகுக்கு பொருந்துமான்னு ஆராய்ச்சி பண்றாராம். சமீபத்துல பாலிவுட் ஷூட்டிங்ல தனக்கு கொடுத்த பல காஸ்டியூமை திருப்பி அனுப்பிட்டாராம்... அனுப்பிட்டாராம்... பிசின் பட காஸ்டியூம் டிசைனரு மண்டை குழம்பி அலையுறாராம்... அலையுறாராம்...

ஜெயமான சூர்ய நடிகரு வருத்தத்துல இருக்காராம்... இருக்காராம்... எந்த நடிகரும் முயலாத அளவுக்கு ஹீரோ, வில்லன், காமெடியன்னு மாறுபட்ட வேஷங்கள்ல மலையாளத்துல நடிச்சும் வரவேற்பு கிடைக்கலே. அதனாலதான் வருத்தமாம்... வருத்தமாம்... கோடம்பாக்கமும் கைகொடுக்கலயேன்னு நெருங்கியவங்ககிட்ட புலம்புறாராம்... புலம்புறாராம்...

முதலையிடமிருந்து தப்பிய 'சோக்காலி'!!!

Monday, April, 02, 2012
யுனைடெட் ஸ்டார் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் நாவரசன், ஜி.தேவராஜ் இணைந்து தயாரிக்கும் படம் 'சோக்காலி'. இப்படத்தில் சைதன்யா ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக சுவாசிகா நடிக்கிறார். மற்றொரு ஹீரோவாக ஜெய்ராமும் அவருக்கு ஜோடியாக ரீத்து என்பவரும் நடிக்கிறார். இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் சோனா நடிக்கிறார். இவர்களுடன் கராத்தே ராஜா, மோகன்ராம், விஜய் கிருஷ்ணராஜ், மீரா கிருஷ்ணன், சிட்டிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சேலம் அருகிலுள்ள பரமத்திவேலூர் என்ற ஊரில் நடைபெற்றது. மூன்று ஆறுகள் ஒன்று சேரும் கூடுதுறை என்ற இடத்தில் உள்ள ஆற்றை படகில் கடந்து அங்கிருந்த மணல் திட்டின் மீது படப்பிடிப்பை நடத்தினார்கள். ஆற்றைக்கடந்து மணல் திட்டுக்குப் போகும்போதே ஊர்க்காரர் ஒருவர் முதலைகள் இருப்பதை சொல்லி எச்சரித்திருக்கிறார். சைதன்யா-சுவாசிகாவை வைத்து காதல் காட்சியை படமாக்கிக் கொண்டிருக்கும் போதே, 20 அடி தூரத்தில் நீரில் ஏதோ மிதப்பது போல தெரிய, பிறகு தான் அது முதலை என்று தெரிந்திருக்கிறது. என்ன செய்வது, எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் தவியாய் தவித்த படக்குழுவினருக்கு, அந்த ஊரைச்சேர்ந்தவர் கையில் உள்ள பிஸ்கட்டை எல்லாம் வெகு தூரத்தில் வீசி எறியுங்கள் முதலை அதை நோக்கிப் போகும் போது நீங்கள் கிளம்பி விடுங்கள் என்று கூறியிருக்கிறார். அதன்படியே செய்து முதலையிடம் இருந்து படக்குழுவினர் தப்பித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஏ.சரணா. இவர் திரைப்படக் கல்லூரி மாணவர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை நா.முத்துக்குமார், நாவரசன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

கான்களை நம்பி என் படம் இல்லை - கமல்ஹாசன்!!!

Monday, April 02, 2012
கமல்ஹாசனின் அடுத்த படத்தில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் மற்றும் பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் ஆகியோர் நடிக்க போவதாக வந்த செய்தியை கமல்ஹாசன் மறுத்துள்ளார். தற்போது கமல்ஹாசன் தன்னுடைய விஸ்வரூபம் படத்தின் இறுதிகட்ட சூட்டிங்கில் இருக்கிறார். இதற்கு அடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்திய ஆகிய 3 ‌மொழியிலும் உருவாக இருக்கும் அமர் ஹாய் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் கதை ஊழலை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறது.

அமர் ஹாய் படம் குறித்து கமல் கூறுகையில், இந்தபடத்திற்கு ஏற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. ஆனால் இதற்கு கான்கள் பொருத்தமானவர்கள் அல்ல. அப்படியே ஒரு வேடம் இருந்தால் அதற்கு சைப் மற்றும் தான் பொருந்துவார். ஆனால் அவரிடம் இதுப்பற்றி இன்னும் பேசவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய அடுத்த படத்தில் ஜாக்கி சான் மற்றும் சல்மான் கான் ஆகியோர் நடிக்க போவதாக வந்த செய்தியையும் கமல் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சென்னையில் நடந்த தசாவதாரம் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் தான் ஜாக்கி சானை நான் சந்தித்தேன். தயாரிப்பாளர் தான் எங்கள் இருவரையும் வைத்து படம் பண்ண ஆசைப்படுகிறார். ஆனால் எனக்கு ஜாக்கி சான், டாம் குரூஸ் ஆகியோருடன் சேர்ந்து நடிக்க விருப்பம் இல்லை. அதேபோல் பாலிவுட் நடிகர்கள் கான்களுடன் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. அவர்களை நம்பி என்னுடைய படம் இல்லை. என்னுடைய படங்களுக்கு என்று ஒரு தனித்துவம் இருக்கிறது. அப்படியே என்னுடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் அது ஒருவருக்கு தான். அவர் இந்தி நடிகர் திலீப் குமார் மட்டும் தான் என்று கூறியுள்ளார்.

அழகோ, அழகு... பேரழகு.. தமன்னா முகத்தை சிவக்க வைத்த சிரஞ்சீவி!!!

Monday, April 02, 2012
நடிகை தமன்னாவின் அழகைப் பற்றி புகழ்ந்து பேசி அவரை முகம் சிவக்க வைத்துவிட்டாராம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவும், தமன்னாவும் நடித்துள்ள ரட்சா படத்தின் இசை வெளியீ்ட்டு விழா அண்மையில் நடந்தது. விழாவிற்கு வந்திருந்த சிரஞ்சீவி தமன்னாவின் அழகை சகட்டுமேனிக்கு புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அப்போது அவர் பேசியதாவது,

ஆஹா, தமன்னா இவ்வளவு அழகாக இருக்கிறார்களே. அவர்களைப் பார்க்கையில் எனது 150வது படத்தை உடனே துவங்கி அவரையே எனக்கு ஜோடியாக போட்டுவிடலாம் போலிருக்கிறதே. என்ன என் மகனுக்கு அவர் ஜோடியாக நடித்துள்ளதால் நான் அவருடன் நடிக்க முடியாது என்று வருத்தமாக கூறியுள்ளார்.

இப்படி சிரஞ்சீவி புகழ்ந்து தள்ள தமன்னாவுக்கோ வெட்கத்தில் முகம் சிவந்து விட்டதாம். மேலும் தமன்னாவுக்கும் மழைக்கும் அவ்வளவு பொருத்தமாக உள்ளது. அவர் நடிக்கும் படங்களில் ஒரு பாட்டிலாவது வெள்ளை நிற ஆடையைக் கொடுத்து மழையில் கிளுகிளுவென நனையவிடுகிறார்கள். அப்படி அவர் ஆட்டம் போட்ட அடடா, மழைடா அடைமழைடா பாடல் இன்னும் பலருக்கு பிடித்த பாடலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமன்னாவின் தெலுங்குக் காட்டில் அடை மழைதான் போல, நனையட்டும், நல்லா நனையட்டும்...!

நயன்தாரா பேட்டியால் பிரபுதேவா அதிர்ச்சி!!

Monday, April 02, 2012
காதலித்தபோது 100 சதவீதம் உண்மையாக இருந்தேன். ஆனால் பிரபுதேவா அப்படி இல்லை என்ற தொனியில் நயன்தாரா நேற்று பரபரப்பு பேட்டி அளித்தார். இதனால் பிரபுதேவா அதிர்ச்சி அடைந்துள்ளார். பதிலுக்கு அவரும் இது பற்றி பேச முடிவு செய்துள்ளாராம். பிரபுதேவா-நயன்தாரா கடந்த 2 வருடத்துக்கும் மேலாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து மனைவி ரமலத்திடமிருந்து பிரபுதேவா முறைப்படி விவாகரத்து பெற்றார். கிறிஸ்தவ மதத்திலிருந்து நயன்தாரா இந்து மதத்துக்கு மாறினார்.

ஆனால் பிரபுதேவா படங்கள் இயக்குவதில் பிஸியாக இருந்தார். திருமண நாளை எதிர்நோக்கி நயன்தாரா படங்களில் நடிப்பதை படிப்படியாக குறைத்துக்கொண்டார். ஸ்ரீராமராஜ்யம் என்ற தெலுங்கு படத்தில் சீதை வேடத்தில் நடித்தார். அதன் பிறகு புதிய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. திருமணத்துக்காக காத்திருந்த வேளையில் அவ்வப்போது காதல் ஜோடிக்கு இடையே சிறுசிறு மோதல்கள் ஏற்பட்டது. இந்நிலையில் நடிகை ஹன்சிகாவுடன் பிரபுதேவா தொடர்பு வைத்திருக்கிறார் என்ற கிசுகிசுவும் நயன்தாராவுக்கு கோபத்தை உண்டாக்கியது.

இதற்கிடையில் பிரபுதேவா தனது முதல் மனைவியின் குழந்தைகளுடன் பாசமாக பழகிவந்தார். நயன்தாராவுக்கு தெரியாமல் அவர்களை ஷாப்பிங் அழைத்து செல்வது, வெளிநாடுகளுக்கு டூர் செல்வது என்று சந்தோஷமாக இருந்தார். இதுவும் நயனை கோபப்படுத்தியது. மேலும் திருமணம் செய்துகொள்ளாமல் லிவிங் டுகெதர் என்ற மேற்கத்திய பாணியில் சேர்ந்து வாழலாம் என்று பிரபுதேவா யோசனை கூறினாராம். அதை நயன்தாரா ஏற்கவில்லை.

விரைவில் திருமண தேதி அறிவிப்பார் என்று காத்திருந்த நயன்தாராவுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து பிரபுதேவாவை பிரிந்தார். இந்நிலையில், காதலில் நான் 100 சதவீதம் உண்மையாக இருந்தேன். ஆனால் அவர் (பிரபுதேவா)அப்படி இல்லை என்ற தொனியில் நேற்று பேட்டி அளித்தார். இது பிரபுதேவாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம். எனவே நயனுக்கு பதிலடி தரும் வகையில், இதற்கு பதிலளிக்க விரைவில் வாய் திறக்க உள்ளாராம் பிரபுதேவா.

சம்பாதிக்க அல்ல, கைத்தட்டல் வாங்கத்தான் சினிமாவுக்கு வந்தேன் - பிரகாஷ்ராஜ்!!!

Monday, April 02, 2012
நான் சினிமாவில் நடிக்க வந்தது சம்பாதிக்க அல்ல, பெயர் புகழ் கைத்தட்டலுக்காகவே என்றார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

பிரகாஷ்ராஜுக்கு ஹைதராபாத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது. பிரபல இயக்குனர் தாசரி நாராயணராவ், சிரஞ்சீவி சகோதரர் நாகாபாபு ஆகியோர் தலைமை வகித்தனர்.

பிரகாஷ்ராஜுக்கு நடிகர்கள் சித்தார்த், சுனில் ஆகியோர் இணைந்து நினைவு பரிசு வழங்கினர்.

விழாவில் தாசரி நாராயணராவ் பேசும்போது, ''பிரகாஷ்ராஜின் டூயட் படத்தில் இருந்து அனைத்து படங்களையும் பார்த்துள்ளேன். இயக்குனர் பாலச்சந்தர் விலைமதிக்க முடியாத மாணிக்கத்தை திரையுலகுக்கு அளித்து உள்ளார். எந்த வேடம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்து முடிப்பவர் பிரகாஷ்ராஜ்'' என்று பாராட்டினார்.

பிரகாஷ் ராஜ் தனது ஏற்புரையில், "நான் பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை. ஒருநாள் கல்லூரி விழாவில் நாடகம் ஒன்றில் நடித்தேன். என் நடிப்பை பார்த்து எல்லோரும் கைத்தட்டினார்கள். அந்த கைத்தட்டல்தான் இன்று என்னை நடிகனாக்கி விட்டது.

இன்றும் நான் கைத்தட்டல் பெறவே நடித்து வருகிறேன். சம்பாதிக்க அல்ல. நாளை என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால் என்ன நடக்க கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். என்னை நடிகனாக அறிமுகப்படுத்திய இயக்குனர் பாலச்சந்தருக்கு நன்றிகடன் செலுத்த எனது வாழ்நாள் போதாது. அதேபோல தெலுங்கில் 5 இயக்குனர்களுக்கு நான் கடமைப்பட்டு உள்ளேன். கிருஷ்ணவம்சி, பூரி ஜெகன்நாத், திரிவிக்ரம், குணசேகர், விநாயக் ஆகியோர் பசியுடன் வந்த எனக்கு தீனி போட்டார்கள்.

அவர்களுக்கும் வாழ்நாள் முழுக்க கடன்பட்டுள்ளேன்," என்றார் பிரகாஷ்ராஜ்
.

எனக்கு 'மீடியா கூச்சம்' அதிகம்: என்னைப் பொறுத்தவரை, அமிதாப்பச்சன் ஒருவர் மட்டும்தான் சூப்பர் ஸ்டார்: ரஜினி!!!

Monday, April 02, 2012
எனக்கு 'மீடியா கூச்சம்' அதிகம்: என்னைப் பொறுத்தவரை, அமிதாப்பச்சன் ஒருவர் மட்டும்தான் சூப்பர் ஸ்டார்: ரஜினி!

மீடியாவில் இயல்பாக பேசும் பழக்கம் எனக்கு இல்லை. மீடியா கூச்சம் அதிகம், என்று கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

கோச்சடையான் படத்துக்காக இரு தினங்களுக்கு முன் லண்டனில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ரஜினி. அவருடன் சௌந்தர்யாவும் ஏ ஆர் ரஹ்மானும் இருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, செய்தியாளர்களின் அத்தனை கேள்விகளுக்கும் ரொம்ப சரளமாக பதிலளித்தார் ரஜினி.

ஆனால் பேட்டியின்போது 'அடிப்படையில் நான் ரொம்ப Media shy person!' என்று குறிப்பிட்டார்.

இந்த பேட்டியின்போது கோச்சடையான் குறித்து ரசிகர்களுக்கு ரஜினி தந்த உத்தரவாதம், 'நிச்சயம் இந்தப் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தும். குழந்தைகள் பெரியவர்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். சர்வதேச தரத்தில் இருக்கும்,' என்பதுதான்.

இந்தப் படம் வரும் தீபாவளிக்கு (நவம்பர் 13) நிச்சயம் வெளியாகிவிடும் என்றார் ரஜினி.

அவர் கூறுகையில், "நான் இப்போது 90 சதவீதம்... ஏன் முழுமையாகவே நன்றாக இருக்கிறேன். என் ரசிகர்களின் பிரார்த்தனைகள், வேண்டுதல்களுக்கு நன்றி

இந்தப் படத்தில் நான் பாடியது அல்லது பேசியது ஒரு புதிய அனுபவம். ரசிகர்களுக்கு வித்தியாசமான பாடலாக அமையும்.

எனக்கு லண்டன் நகரை எப்போதுமே ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி வர விரும்பும் நகரங்களில் ஒன்று. 25 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் டாக்டர் முரளியுடன் படப்பிடிப்புக்கு வந்தபோதே, இங்கு ஒரு வீடு வாங்க விரும்பினேன். ஆனால் பின்னர் அதைப் பற்றி யோசிக்கவே இல்லை. இனி வாங்குவேன்," என்றார்.

சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பற்றிய கேள்விக்கு, என்னைப் பொறுத்தவரை அமிதாப்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் என்றும், அவருடன் ஒரு படம் இணைந்து நடிக்கும் திட்டமிருப்பதாகவும் தெரிவித்தார் ரஜினி....

"ஒவ்வொரு படத்தையுமே எனது முதல் படமாக கருதி நடிப்பதாகவும்'' அவர் தெரிவித்தார். உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததை குறிப்பிட்ட ரஜினிகாந்த், தற்போது 90 சதவீதம் குணம் அடைந்துவிட்டதாகவும், தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் கூறினார்.

"கோச்சடையான் படம் குழந்தைகளை மட்டுமின்றி, அனைத்து தரப்பினரையும் கவரும் படமாக அமையும். வருகிற நவம்பர் மாதம் 13ந் தேதி தீபாவளிக்கு இந்த படம் வெளிவரும்'' என்று ரஜினி கூறினார்.

21 வருடங்களுக்குப்பின் ரஜினிகாந்த் தனது சொந்தக்குரலில் இந்த படத்தில் ஒரு பாடலை பாடுகிறார். அதுபற்றி குறிப்பிட்ட அவர், இந்த படத்தில் பாடியது புதிய அனுபவமாக இருந்ததாகவும், இந்த பாடல் வித்தியாசமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

பேட்டியின்போது ரஜினியுடன் இருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், "இந்த படத்தில் இசைக்கு முக்கிய பங்கு உள்ளது. இரண்டு பாடல்களுக்கு இசையமைத்துவிட்டோம். மேலும் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்து வருகிறோம்'' என்று தெரிவித்தார்.