Friday, March 16, 2012

மீண்டும் எம்ஜிஆர் - சிவாஜி படங்கள் மோதல்!!!

Friday, March 16, 2012
முன்பெல்லாம் எம்ஜிஆர் - சிவாஜி படங்கள் ரிலீஸாகும்போது தமிழகமே போர்க்கோலம் பூண்டிருக்கும். அப்படியொரு ஆர்வத்துடன் தியேட்டர்கள் முன் திரண்டு நிற்பார்கள் ரசிகர்கள்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் அப்படியொரு காட்சியை இன்று பார்க்க முடிந்தது.

இன்று ஒரே நாளில் எம்ஜிஆரின் குடியிருந்த கோயில் படமும் சிவாஜியின் கர்ணன் படமும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெளியாகின்றன.

எம்ஜிஆர் நடிப்பில் வெளியான குடியிருந்தகோயில், அவரது நடிப்பில் புதிய பரிமாணத்தைக் காட்டிய படம். இரட்டை வேடங்களில் ஜொலிப்பார் எம்ஜிஆர். இந்தப் படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடி ஜெயலலிதா. இருவரின் ஜோடிப் பொருத்தமும் அசத்தலாக இருக்கும்.

அன்றைய நாட்களில் வசூலில் புதிய சாதனைப் படைத்தது குடியிருந்த கோயில்.

சிவாஜியின் கர்ணன் படம் பிரமாண்டமான அரங்க அமைப்பு, சிவாஜி நடிப்புக்காக பெரிதாகப் பேசப்பட்டாலும், அன்றைக்கு வசூலில் பெரிதாகப் போகவில்லை. இந்தப் படத்தால் வந்த நஷ்டத்தை, எம்ஜிஆரை வைத்து ஆயிரத்தில் ஒருவன் படம் எடுத்துதான் ஈடுகட்டினார் இயக்குநரும் தயாரிப்பாளருமான பிஆர் பந்துலு.

சிவாஜியின் ரசிகர்கள் சிலர் ஒன்றிணைந்து கர்ணன் படத்தை டிஜிட்டலில் வெளியிட்டுள்ளனர்.

இன்று படம் வெளியான அரங்குகளில் இரு தரப்பு ரசிகர்களும் வரிசையில் நின்று படத்துக்கு டிக்கெட் வாங்கிப் பார்த்தனர்.

குறிப்பாக உட்லண்ட்ஸ் திரையரங்கில் ஏகக் கூட்டம். கர்ணன் படத்துக்காவது கடந்த ஒரு மாதமாக விளம்பரம் செய்து வந்தார்கள்.

ஆனால் குடியிருந்த கோயிலுக்கோ எந்த விளம்பரமும் இல்லை. நான்கு நாட்களாகத்தான் ஏற்பாடு செய்தனர். ஆனால் உட்லண்ட்ஸ் அரங்கம் நிரம்பி வழிந்தது. எம்.ஜி.ஆரின் கட்அவுட் வைத்து பேனர், கொடி தோரணம் கட்டியிருந்தனர். பட்டாசு வெடி அமர்க்களப்பட்டது.

ராயபுரம் இரா. ஆனந்தன், எல். கலைவாணன், எம்.பூபாலன், முரளி, வெங்கட் உள்ளிட்ட எம்.ஜி.ஆர். ரசிகர்கள் டிக்கெட் எடுக்க கியூவில் நின்றவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

எம்ஜிஆர் எப்போதுமே கிங்குதான்!

சன் டிவி வெளியிட்ட வீடியோ காட்சிகள் போலியானவை!!!

Friday, March 16, 2012
சென்னை.மார்ச்.16 - தன்னையும் -நடிகை ரஞ்சிதாவையும் இணைத்து சன் டிவி, நக்கீரன் வெளியிட்ட வீடியோ பட காட்சிகள் போலியானவை சித்தரிக்கப்பட்டவை என்பதை அமெரிக்க புலனாய்வு பிரிவுக்கு இணையான தடவியல் நிபுணர்கள் 4 பேர் சோதனையிட்டு உறுதிபடுத்தி உள்ளனர் என்று நித்தியானந்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சாமி நித்தியானந்தா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.மூன்று விஷயங்களுக்காக செய்தியாளர்களை சந்திக்கிறேன்.கடந்தமுறை செய்தியாளர்களை சந்தித்தபோது லெனின் கருப்பன் தலைமறைவாக இருந்ததால் அவரைப்பற்றி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசில் சரணடைந்ததால் ஆதாரங்களை திரட்டி வெளியிடுகிறோம்.முதலில் வீடியோ முற்றிலும் பொய் என்று எஃப்.பி.ஐ(அமெரிக்கா உளவு பிரிவு) லேப் டெக்னீஷியன் 4 கைதேர்ந்த நிபுணர்கள் மூலமாக ரிப்போர்ட் தயார் செய்து அறிக்கை வந்துள்ளது.60 காரணங்களை வெளியிட்டு சித்தரிக்கப்பட்டது என்று ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.அதுமட்டுமல்ல அவர்கள் 4 பேரும் இந்திய நீதிமன்றத்தில் சாட்சியம் சொல்லவும் தயாராக இருக்கிறார்கள்.இந்திய சட்டப்படி அமெரிக்க எக்ஸ்பர்ட் சாட்சியம் ஏற்று கொள்ள தயாராக இருப்பது முக்கிய அம்சம். சன் டிவி பிரபலமான டிவி இதன் வெளியிடப்பட்ட காட்சிகளை நிபுணர்கள் எடுத்து சோதித்துள்ளனர் வீடியோ உண்மைகள் காட்சிகள் இயற்கையானது அல்ல அவதூறு செய்யும் வகையில் வெட்டியும் ஒட்டியும் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கூறி உள்ளனர் நான்கு பேரின் நடைமுறைகளும் அமெரிக்க புலனாய்வு தரத்துக்கு இணையானது.58 ஆண்டுகள் அனுபவம் உடையவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் தேசிய பாரன்ஸிக் நிறுவனத்தில் பணிபுரிந்த நிபுணர் ஒருவர் ஆவார். அவர்கள் அளித்த அறிக்கையில் சில விஷயங்களை டெக்னிக்கல் சைடில் காட்சிகளை வெட்டியும் ஒட்டப்பட்டுள்ளதாக லேயர்கள் எப்படி இணையாமல் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இந்திய தடவியல் துறை அறிக்கை எவ்வாறு மோசமானது என்பதை வரிக்கு வரி விமர்சித்துள்ளனர்.காட்சிகளை ஒளிபரப்ப கூடாது என்று நீதிமன்றம் வலியுறுத்தியும் மாற்றி மாற்றி ஒளிபரப்பினார்கள். 2ஜி விவகாரமான சுவாமிஜி படத்தை போட்டு ஜனங்களை திசைமாற்று. நாட்டை கொள்ளை அடித்துவிட்டு அதன்மூலம் சிக்கல் ஏற்பட்டால் உடனே திசைதிருப்ப சாமியின் ஆசிரமங்களை அடித்து உடை என்ற முறையில் செயல்பட்டனர். கலாநிதிமாறன் என்ற தனிப்பட்ட மனிதனின் விருப்பத்திற்கு சன் டிவி என்ற நிறுவனத்தின் நம்பக தன்மை கெடுக்கப்படுகிறது. இவர்கள் மீது 32 நாடுகளில் வழக்கு தொடுக்க உள்ளேன். சன் டிவிக்கு பிரச்சனை வந்தால் தீனி போட நானா கிடைத்தேன். இரண்டாவதாக பிரசன்னா போலீஸ் விசாரணையில் பல விசயங்களை ஒத்துகொண்டார். நாங்கள் மறந்து போன சில விஷயங்களை பிரசன்னா வெளியிட்டார். ஐயப்பன் பணம் பிடுங்கியதை ஒப்பு கொண்டார் அந்த நேரம் யார் யார் இருந்தனர் என்பதையும் கூறியுள்ளார்.சக்சேனாவும் பல விஷயங்களை ஒத்து கொண்டுள்ளார். இப்போது லெனின் கைதாகி உள்ளார் லெனின் கருப்பனுக்கு எஃப்.பி.ஐ யில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இன்னொரு பெண்ணுக்கும் கள்ள தொடர்பு உள்ளதை நிரூபிக்க ஆதாரம் கொடுக்கப்பட்டுள்ளது. லெனின் கருப்பன் காந்தப்படுக்கை வழக்கில் தொடர்புடையவர். அவர் ஆசிரமத்திற்கு வந்த பிறகு அவருக்கு வேண்டியப்பட்ட பலரை பல வேலைகளில் அமர்த்தியுள்ளார் அதற்கான ஆதாரங்களை ஒப்படைத்துள்ளோம். அவர்கள் பணம் கேட்டு மிரட்டியதை என்னுடைய பர்செனல் செகரட்டரி செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார். ரூ35 கோடி கேட்டு மிரட்டினார்கள். முதலில் 200 கோடிகேட்டு மிரட்டினார்கள் பின்னர் 60 கோடியாக குறைத்தார்கள் நாங்கள் ஒத்து கொள்ளவில்லை.கலாநிதி மாறன் தயாநிதிமாறன் மேல் அமலாக்கப்பிரிவு வழக்கு தொடர்ந்துள்ளது.அமலாக்கப்பிரிவு தொடர்ந்த 80 சதவித வழக்குகளில் தண்டனை பெற்றுதந்துள்ளனர். கலாநிதிமாறனுக்கும் கோபாலுக்கும் சொல்வது நீங்கள் என்மேல் போட்டது காமெடி வழக்கு இனிமேல் தான் இருக்குது ரியல் வழக்கு. மாறன் தி.மு.க மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம் மூலம் எங்கள் மீது 20 வழக்குகள் போட்டார் எதுவும் நிற்கவில்லை.எனது துணியை கூட புலித்தோல் என்று வழக்குபோட்டு இப்போது வழக்கை முடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். மொத்தம் நூறு வழக்குகள் போட்டார்கள் சாமியார்கள் என்றால் கிள்ளு கீரையா? அட்டுளியத்திற்கும் ஒரு அளவில்லையா பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதா இவர்கள் இழைத்த கொடுமை தமிழ்நாட்டில் உள்ள எல்லா விஐபிக்களும் இவர்கள் ரத்தத்தை உறிஞ்சி போட்ட எலும்பு கூடுகள் தான்.தற்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பிறகு எவ்வித அரசியல் குறுக்கீடு இல்லாமல் வழக்கு நடந்துவருகிறது.லெனின் கருப்பன் மீது வழக்கு தொடரந்துள்ளோம் இந்த வழக்கில் சன் டிவி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதனால் மானநஷ்ட வழக்கு கட்டாயம் போடுவேன். இவர்கள் அபரிக்க முயற்சித்த நிலம் எங்களுக்கு சொந்தமானது என்று போன வாரம் தீர்ப்பு வந்துள்ளது. சன் டிவி, தினகரன், நக்கீரன் கோபால், காமராஜ் மீது வருங்காலத்தில் மானநஷ்ட வழக்கு போடுவோம் இவ்வாறு பிரேமானந்தா கூறினார்.


ஐயப்பன் மூலம் சக்சேனா நக்கீரன் கோபால்- காமராஜ் மிரட்டினர் - நடிகை ரஞ்சிதா

தன்னிடம் தொடர்பு கொண்ட ஐயப்பன் மூலம் சக்சேனாவும், நக்கீரன் கோபாலும், காமராஜும் பேசி பணம் கேட்டு மிரட்டியதாக நடிகை ரஞ்சிதா கூறினார்.

மேலும் சக்சேனா அவ்வளவு பணம் ரஞ்சிதாவிடம் இருக்காது. அவரது ஆரீகனைசேஷனில் பேசி வாங்கி தர சொல்லுங்கள் என்று தனது ஆடிட்டரிடம் சொல்லி அனுப்பியதாக ரஞ்சிதா கூறினார். பேட்டி முழுவதும் ரஞ்சிதா இறுக்கமாகவே காணப்பட்டார்.

மு.க.ஸ்டாலின் சமாதான தூது - நித்தியானந்தா பேட்டி

நித்தியானந்தா தனது பேட்டியில், அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரம் வந்தபோது என் பக்தர் ஒருவர் மூலம் சுவாமிஜியிடம் தங்களுக்கும் இந்த விவகாரங்களுக்கும் சம்பந்தமில்லை. கலைஞர் டி.வி.யில் இந்த காட்சிகள் ஒளிபரப்பாகாது. இதை சுவாமிஜியிடம் நான் சொன்னதாக கூறுங்கள் என்று ஸ்டாலின் சொல்லி அனுப்பியதாக நித்தியானந்தர் தெரிவித்தார்.

வீடியோவை ஆராய்ந்த நிபுணர்கள் விபரம்

1. எட்வர்ட் ஜோ: ஆடியோ வீடியோ தடய அறிவியல் துறை நிபுணர் நீதிமன்ற எக்ஸ்பர்ட். 27 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்.

2. பிரயன் நியூமீஸ்டர் : தடயவியல் துறை எக்ஸ்பர்ட் 31 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்.

3. டேவிட் நோடோவிட்ஸ்: லாஸ் ஏஞ்சல்ஸ் சுப்பீரியர் பாரன்ஸிக் சையின்டிஸ்ட்.

4. ஜோ யூனோவிட்ஸ் 58 ஆண்டுகள் தடயவியல் துறையில் அனுபவம் பெற்ற நிபுணர்.

கமலுடன் டேட்டிங் செல்ல தயார் ஷீகா அதிரடி!

Friday, March 16, 2012
சென்னை::பாலிவுட் ஹீரோயின்கள்போல் டேட்டிங் செல்லத் தயார். ஆனால், நடிகர் யார் என்பது முக்கியம்’ என்கிறார் நடிகை ஷீகா. ‘கொல கொலயா முந்திரிக்கா’, ‘விண்மீன்கள்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ஷீகா. அவர் கூறியதாவது கன்னடத்தில் ‘காலிபட்டா’ படம் மூலம் அறிமுகமானேன். இதையடுத்து 5 படங்களில் நடித்தேன். தமிழில் ‘கொல கொலயா முந்திரிக்கா’ படத்தில் அறிமுகமானேன். பிறப்பிலேயே மூளை பாதிப்படைந்த குழந்தைகளை பற்றிய கதையான ‘விண்மீன்கள்’ படத்தில் மாற்று திறனாளி குழந்தைக்கு தாயாக நடித்தேன். அம்மா, அண்ணி வேடத்தில் நடிக்க சில நடிகைகள் தயங்குகின்றனர். எந்த வேடத்திலும் நடிக்க ஹீரோயின்களுக்கு துணிச்சல் வரவேண்டும். ரிஸ்க் எடுக்காமல் எதையும் அடைய முடியாது. மனித வளம் பற்றிய பட்டமேற்படிப்பு படித்திருக்கிறேன். சினிமாவில் நடிக்க வருவதை எனது பெற்றோர் விரும்பவில்லை. ஆனாலும், நான் ஏற்று நடித்த வேடங்களை பார்த்த பிறகுதான் ஒப்புக்கொண்டனர். பாலிவுட் நடிகைகள் ஹீரோக்களுடன் டேட்டிங் போவதுபற்றி கேட்கிறார்கள். அது அவரவர் இஷ்டம். டேட்டிங் போவதில் தவறில்லை. ஆனால், யாருடன் போகிறோம் என்பது முக்கியம். ஷாருக்கான், கமல் இவர்களில் யார் அழைத்தால் டேட்டிங் செல்வீர்களா என்று கேட்கிறார்கள். கமலுடன் டேட்டிங் போக தயார். அதுபோல் ரஜினி சார் படத்தில் வாய்ப்பு வந்தால் கதை கேட்காமல் நடிப்பேன். இவ்வாறு ஷீகா கூறினார்.

கந்தா படத்தில் வடிவேலு, சிங்கமுத்து நிலஅபகரிப்பு காட்சிகள்?- விவேக் பதில்!!!

Friday, March 16, 2012
கரண் நடித்துள்ள புதிய படம் கந்தா. பாபு விஸ்வநாத் இயக்கியுள்ளார். இதில் காமெடி வேடத்தில் விவேக் நடித்துள்ளார். நில அபகரிப்புகளை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது.

பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியரின் நிலத்தை அபகரித்துள்ளவர்களுடன் கதாநாயகன் மோதுவதுபோல் கதை சித்தரிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் வடிவேலு, சிங்கமுத்துவின் நில அபகரிப்பு சர்ச்சைகளும் காட்சிபடுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

வடிவேலு மீது கோர்ட்டில் நில அபகரிப்பு வழக்கும் தொடரப்பட்டது. இருவரையும் விவேக் கேலி செய்வதுபோல் காட்சிகள் வைத்திருப்பதாகவும் தெரிகிறது.

இதுகுறித்து விவேக்கிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கந்தா படத்தில் ரியல் எஸ்டேட் பிரச்சினையை வைத்து காமெடி செய்து இருப்பது உண்மைதான். ஆனால் வடிவேலு, சிங்கமுத்து தகராறுக்கு முன்பே இப்படம் முடிந்துவிட்டது. காமெடி சீன்கள் படமான பிறகே இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அவர்களுக்கும் படத்தில் இடம் பெறும் காமெடிக்கும் சம்பந்தம் இல்லை. இதை வடிவேலுவிடமும் விளக்கி விட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இயக்குனர் பாபு கே.விஸ்வநாத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

படத்தில் விவேக் நிலங்களை விலைக்கு வாங்குபவராகவும் அவரிடம் மற்றவரின் நிலங்களை ஏமாற்றி விற்கும் டுபாக்கூர் புரோக்கராக செல்முருகனும், நடித்துள்ளனர். இவை வடிவேலு, சிங்கமுத்து நில பிரச்சினை போன்று இருக்கலாம். ஆனால் யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டுவதுபோல் காமெடியை எடுக்கவில்லை. போலீசின் என்கவுண்டரே படத்தின் பிரதான கதையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கர்ணன், குடியிருந்தகோயில் இன்று ரிலீஸ்: தியேட்டர்களில் திரண்ட எம்.ஜி.ஆர்.-சிவாஜி ரசிகர்கள்!!!

Friday, March 16, 2012
சிவாஜியின் ‘கர்ணன்’ படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நவீனபடுத்தப்பட்டு சென்னையில் இன்று ரிலீசானது. சத்யம், எஸ்கேப், சாந்தி, சங்கம், அபிராமி, பி.வி.ஆர். உள்ளிட்ட பல தியேட்டர்களில் திரையிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சிவாஜி படத்துக்கு போட்டியாக எம்.ஜி.ஆரின் ‘குடியிருந்த கோயில்’ படம் ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் தியேட்டரில் இன்று திரையிடப்பட்டது. எம்.ஜி.ஆர். சிவாஜி ரசிகர்கள் காலையிலேயே தியேட்டர்களில் திரண்டார்கள்.

கர்ணன் படம் திரையிட்ட தியேட்டர்களில் சிவாஜி ரசிகர்கள், பேனர் கொடி தோரணம் கட்டினார்கள். சிவாஜியின் கட்அவுட்களும் வைத்தார்கள். சாந்தி தியேட்டரில் ஒரு ரசிகர் நாவில் சூடம் கொளுத்தி வழிபட்டார். படம் பார்க்க வந்தவர்களுக்கு இனிப்புகளும் வழங்கினார்.

எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அதற்கு போட்டியாக குடியிருந்த கோயில் படம் ரிலீசான உட்லண்ட்ஸ் தியேட்டரில் எம்.ஜி.ஆரின் கட்அவுட் வைத்து பேனர், கொடி தோரணம் கட்டினர். பட்டாசுகளும் வெடித்தார்கள்.

ராயபுரம் இரா. ஆனந்தன், எல். கலைவாணன், எம்.பூபாலன், முரளி, வெங்கட் உள்ளிட்ட எம்.ஜி.ஆர். ரசிகர்கள் டிக்கெட் எடுக்க கியூவில் நின்றவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

'கந்தா' படத்துக்கு தடை - சென்னை நீதிமன்றம் உத்தரவு!!!

Friday, March 16, 2012
நடிகர் கரண் நடித்த 'கந்தா' படத்தை வெளியிட சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த நீதிமன்றத்தில் மோகன்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "நடிகர் கரண் நடிப்பில் 'கந்தா' என்ற சினிமா படத்தை வி.பி. பிலிம்ஸ் உரிமையாளர் பழனிவேல், அவரது மனைவி கல்பனா பழனிவேல் ஆகியோர் தயாரித்துள்ளனர். படத்தை பாபு விஸ்வநாத் இயக்கியுள்ளார்.

படத் தயாரிப்பதற்காக என்னிடம் ரூ.25 லட்சத்தை 2009-ம் ஆண்டு வாங்கினார்கள். கடனை திருப்பிச் செலுத்துவதற்காக 2 `செக்'குகள் கொடுத்தார். அதை வங்கியில் செலுத்தினேன். ஆனால் அது காசாகவில்லை. அவர்களது கணக்கில் பணம் இல்லை என்று அந்த 'செக்'குகள் திரும்பி வந்துவிட்டன.

இதையடுத்து பழனிவேலுவிடம் பணத்தைக் கேட்டேன். அப்போது அவர் உத்தரவாத பத்திரத்தை எழுதிக் கொடுத்தார். ரூ.25 லட்சம் கடனை, 'கந்தா' படம் வெளியிடுவதற்கு முன்பு தந்துவிடுவேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் எனக்கு பணத்தை திருப்பித்தராத நிலையிலேயே படத்தை வெளியிட பழனிவேலு முயற்சிக்கிறார். இதற்கு தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இடைக்காலத் தடை

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பால்ராஜ் விசாரித்தார். ஆவணங்களின் அடிப்படையில் மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் இருப்பதாகத் தெரிவதால், 'கந்தா' படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்படுவதாக அவர் உத்தரவிட்டார்.

மேலும், வழக்கு விசாரணையை மார்ச் 19-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

வனிதா மீண்டும் நடிக்க வருகிறார்: கஷ்டங்கள் தைரியத்தை கொடுத்துள்ளது: மீண்டும் சினிமா பிரவேசம் -வனிதா!!!

Friday, March 16, 2012
வனிதா மீண்டும் நடிக்க வருகிறார். ஏற்கனவே சொந்த வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தார். முதல் கணவரை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்தார்.

முதல் கணவருடன் வாழ்ந்த குழந்தையை மீட்க போலீஸ், கோர்ட் என போனார். குழந்தை தன்னுடன் வர மறுத்ததால் இரண்டாம் கணவரை பிரிந்தார். தற்போது குழந்தைக்காக மீண்டும் முதல் கணவருடனேயே சேர்ந்துள்ளார். தற்போது உடல் எடை குறைத்து ஒல்லியாக தெரிகிறார். சினிமாவில் நடிக்க கதைகள் கேட்டு வருகிறார்.

மீண்டும் நடிப்பது குறித்து வனிதா கூறியதாவது:-

குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டதாலும் சொந்த பிரச்சினைகளாலும் 11 வருடங்களாக சினிமா பற்றி சிந்திக்கவில்லை. இப்போது மீண்டும் சவாலான வேடங்களில் நடிக்க முடிவெடுத்து சினிமாவுக்கு வருகிறேன். கதைகள் கேட்கிறேன். விரைவில் புதுப்படத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவேன்.

ஆறு மாதங்களாக கடும் உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்து உள்ளேன். அறுவை சிகிச்சை செய்து உடல் எடையை குறைக்கவில்லை. நான் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் மூலம் மனதளவில் தைரியத்தை பெற்றுள்ளேன். இப்போது என் குழந்தைகளே எனது வாழ்க்கை என்று ஆகிவிட்டது.

நடிகை அனுராதாவுக்கு கொலை மிரட்டல் - கமிஷனரிடம் புகார்!!!

Friday, March 16, 2012
கொடுக்க வேண்டிய பணத்தைக் கேட்டதால் கொன்றுவிடுவதாக மிரட்டல் வருகிறது என சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடிகை அனுராதா புகார் தெரிவித்துள்ளார்.

சிவாஜி, கமல்ஹாசன், ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் முன்னாள் கவர்ச்சி நடிகை அனுராதா. தற்போது டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கிறார்.

நேற்று காலை அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த அவர் ஒரு புகார் மனு தந்தார். அதில், தனது மகன் மோட்டார் சைக்கிளை ரூ.75 ஆயிரத்துக்கு விலை பேசி விற்றுவிட்டதாகவும், அதில் ரூ.37 ஆயிரம் தந்துவிட்டதாகவும், மீதி பணத்தை தராமல் மோட்டார் சைக்கிளை வாங்கியவர் கொலை மிரட்டல் விடுவதாகவும், தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அனுராதாவை மிரட்டும் நபர் சென்னை கொத்தவால் சாவடி பகுதியில் வசிப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் அனுராதா கொடுத்த மனு மீது, உரிய நடவடிக்கை எடுக்கும்படி துறைமுகம் உதவி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

லாரன்ஸை தம்பி வினோ விரைவில் ஹீரோவாக்குகிறார்

Friday, March 16, 2012
தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பதை அண்ணனுடையான் படைக்கு அஞ்சான் என்று மாற்றலாம்.

செல்வராகவன் என்ற அண்ணனால் ஏற்றம் பெற்றவர் தனுஷ், ஜெயம் ரவிக்கு அண்ணன் ராஜா, முருகதாஸும், பூபதி பாண்டியனும் விரைவில் தங்கள் தம்பிகளை அறிமுகப்படுத்தயிருக்கிறார்கள். இந்த நீண்ட பட்டியலில் புதிதாக சேர்கிறார் ராகவா லாரன்ஸ்.

இவரும் தனது தம்பி வினோ லாரன்ஸை விரைவில் ஹீரோவாக்குகிறார். முன்னோட்டமாக முனி 3-ல் தம்பியை ஒரு பாடலுக்கு ஆடவிடப் போகிறாராம்.

பாசக்கார அண்ணன்கள்.

21 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி பாடிய பாட்டு - ஏ ஆர் ரஹ்மான் பதிவு செய்தார்!!!

Friday, March 16, 2012
21 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையில் பின்னணி பாடினார். இந்த முறை கோச்சடையான் படத்துக்காக அவர் பாடினார்.

1991-ம் ஆண்டு மன்னன் படத்தில் அடிக்குது குளிரு... என்ற பாடலை எஸ் ஜானகியுடன் இணைந்து பாடினார் ரஜினி. அந்தப் பாடலுக்கு இசை இளையராஜா.

இத்தனை ஆண்டுகளில் பல முறை அவரை பாடுமாறு பல இசையமைப்பாளர்கள் வற்புறுத்தியும் சம்மதிக்காமல் இருந்தார் ரஜினி. இப்போது மீண்டும் ரஜினி தனது அடுத்த படமான கோச்சடையானுக்காகப் பாடியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை நடந்த இந்தப் பாடல் பதிவின்போது இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், பாடலை எழுதிய கவிஞர் வைரமுத்து, இயக்குநர் சௌந்தர்யா ஆகியோர் உடனிருந்தனர்.

மிக மகிழ்ச்சியுடன் இந்தப் பாடலை அவர் பாடிக் கொடுத்ததாக இசையமைப்பாளர் ரஹ்மான் தெரிவித்தார்...

கோச்சடையான் பல வகையிலும் சிறப்பான படமாக வரவேண்டும் என்பதற்காக இந்தப் படத்தில் ரஜினியை பாடச் சொல்லி ரஹ்மான் மற்றும் சௌந்தர்யா குழுவினர் கேட்க, அவரும் உற்சாகமாக ஒப்புக் கொண்டாராம்.

வெறும் அனிமேஷனா…

இந்தப் படம் வெறும் அனிமேஷன்தானா… ஆயிரம்தான் தொழில்நுட்ப திறமை காட்டினாலும், ரஜினியை இத்தனை நாட்களாகப் படங்களில் பார்த்த மாதிரி அனுபவம் கிடைக்குமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அவர்களுக்காக…

ரஜினியின் முத்து படத்தை எப்படி ரசித்தீர்களோ… படையப்பாவை எப்படி ரசித்தீர்களோ, அந்த அனுபவத்தை தரவே நாங்கள் முழு முயற்சி எடுத்து வருகிறோம். நீங்கள் திரையில் பார்க்கப் போவது வெறும் அனிமேஷன் அல்ல. நிஜ ரஜினிதான். அத்தனை காட்சிகளையும் அவர்தான் செய்யப் போகிறார். அவதார் பார்த்தபோது, ஹ்யூமனாய்ட், ஹ்யூமன் வித்தியாசம் எப்படி தெரியாமல் போனதோ, அப்படியொரு உணர்வு இந்தப் படத்தில் கிடைக்கும்”, என்கிறார் படத்தின் கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம் மேற்பார்வைக்குப் பொறுப்பாளரான கே எஸ் ரவிக்குமார்.

அது போதுங்க!

தமன்னாவின் ”ரச்சா” தமிழில் “ரகளை” !!!

Friday, March 16, 2012
தமன்னா ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்தும் வகையில் தமன்னா நடித்த தெலுங்கு படம் 'ரச்சா' தமிழில் டப்பிங் செய்து வெளியிடவிருக்கிறது.

இதில் சிரஞ்சீவியின் மகனான தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் இப்படத்தை ஆர்.பி.சௌத்ரியின் 'சூப்பர் ஹூட் பில்ம்ஸ்' தயாரிக்கிறது. ஏற்கனவே ராம் சரண் நடித்த ’மகதீரா’ தெலுங்கு படம் தமிழில் டப் செய்து 'மாவீரன்' என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

இப்படத்தை தமிழில் “ரகளை” என்ற பெயரில் வெளியாகிறது. இதில் பார்த்திபன் மற்றும் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகின்றனர். தற்போது தமன்னா தமிழில் 'ஏன் என்றால் காதல் என்பேன்' என்ற படத்தில் ராமுடன் நடித்து வருகிறார். மேலும் தமன்னா தனுஷ்டன் இணைந்து நடித்த 'வேங்கை' படமே தமிழில் அவர் நடித்த கடைசி படமாகும். வேங்கைக்கு பின் தமன்னா ரசிகர்களுக்கு காட்சியளிக்கும் படம் இதுவே.

5 கதாநாயகிகளுடன் உருவாகும் புதிய படம்!!!

Friday, March 16, 2012
5 கதாநாயகிகளுடன் உருவாகும் “நிஜம் நிழலாகிறது” என்ற படத்தை செந்தில்நாதன் டைரக்‌ஷன் செய்கிறார்.

நகரில் நிஜத்தில் நடக்கும் கொலை சம்பவங்களை மையப்படுத்தி கதை உருவாகிவருகிறது. இதில் முக்கிய விஷயமாக 5 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். மேலும் திகில் – மர்மம் கலந்த படமாக தயாராகிறது. புளோரா, மும்பை அழகி மீனாட்சி, காஜல், சான்ட்ரா ஆகிய நான்கு பேருடன் இன்னொரு பிரபல கதாநாயாகியும் நடிக்கவிருக்கிறார்.

ஹீரோவாக அறிமுகமாகும் அருள்ராஜ், படத்தின் இசைப் பணியையும் பார்க்கிறார். சித்ரா லட்சுமணன், பஞ்சு சுப்பு, ஜெகன், சசிகுமார் ஆகிய 4 பேர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ஜி. கனகராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிறார் செந்தில்நாதன்.

படப்பிடிப்பு வருகிற 26-ந் தேதி ஊட்டியில் தொடங்குகிறது. பாடல் காட்சிகள் தாய்லாந்தில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

புதிய கூட்டணியில் ரஜினி, ஜாக்கிசான், சூர்யா, இயக்குனர் ஷங்கர்!!!

Friday, March 16, 2012
முன்னணி இயக்குனர் ஷங்கர் 'நண்பன்' படத்தின் வெற்றிக்கு பின் அடுத்த படம் பற்றிய ஆலோசனையில் இருக்கிறார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் படைப்பில் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் புதிய படம் தயாராகிறது.

இப்படத்திற்காக முதலில் நடிகர் விக்ரம் நடிப்பதாக தகவல் இருந்தது. ஆனால் சில காரணங்களால் விக்ரமிற்கு பதிலாக நடிகர் சூர்யா நடிக்கவிருக்கிறார் என்று புதிய தகவல் வந்துள்ளன.

மேலும், இந்த படத்தில் விஷேசம் என்னவென்றால்..? ஆசியாவின் முன்னணி ஹாலிவுட் நடிகர் ஜாக்கிஜான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இதை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவ தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். மொத்தத்தில் ஆசியா சூப்பர் ஸ்டார் ஜாக்கிஜானும், தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் இணைந்து சூர்யாவின் படத்தில் நடிக்கின்றனர்.

ரஜினி, ஜாக்கிசான், சூர்யா, இயக்குனர் ஷங்கர் ஆகியோர் ஒரே கூட்டணியில் இணைவதால், இப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.