Monday, April 16, 2012

மோகன்லாலின் மகனாக மம்மூட்டி மகன் தல்குவார் சல்மான் நடிக்கிறார்!!!

Monday, April, 16, 2012
போக்கிரி ராஜா’, ‘சீனியர்ஸ்’ ஆகிய மலையாள படங்களை இயக்கியவர் வைஷாக். தற்போது ‘மல்லுசிங்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். மலையாள கமர்சியல் பட இயக்குனரான இவரது அடுத்த படத்தில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோவாகவும், மோகன்லாலின் மகனாகவும் மம்மூட்டி மகன் தல்குவார் சல்மான் நடிக்கிறார். முதலில் மம்மூட்டிதான் இந்தப் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சொந்த மகனுக்கு தந்தையாக நடிக்க, மம்மூட்டி மறுத்துவிட்டதால் அந்த கேரக்டரில் மோகன்லால் நடிக்கிறார். இருவரும் இணையும் இந்தப் படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அடுத்து பிரியதர்ஷன் இயக்கும் படத்திலும் மோகன்லாலும் தல்குவார் சல்மானும் இணைந்து நடிக்கிறார்கள்.

மூன்று ஹீரோக்களை இயக்குவது நட்புதான்: இயக்குனர் வசந்த்!!!

Monday, April, 16, 2012
3 பேர் 3 காதல்’ படத்தில் அர்ஜுன், சேரன், விமல் நடிக்கிறார்கள். வெவ்வேறு காலகட்டத்தை சேர்ந்த ஹீரோக்களை இயக்குவது நட்புதான் என்றார் இயக்குனர் வசந்த். அவர் மேலும் கூறியதாவது: அர்ஜுன், சேரன், விமல் மூன்று பேருமே என் படத்தை விரும்புகிறவர்கள், என்னை விரும்புகிறவர்கள். அதனால் நான் கேட்டதும் சம்மதித்தார்கள். யாருக்கு முக்கியத்துவம், என்ற பேச்சுக்கு இடமில்லை. அவரவர் பங்களிப்பை அவரவர் செய்து கொடுக்கிறார்கள். இனி வரும் காலங்களில் பல ஹீரோக்கள் இணைந்து நடிக்கும் படங்கள் அதிகம் வரும். நானும் அந்த முயற்சியை எடுத்திருக்கிறேன். படம் வெளிவந்த பிறகுதான் இந்த கேரக்டரில் இவர்கள் நடித்ததுதான் சரி என்று தெரியும். மூன்று பேரை நான் இயக்குவதற்கும், என் இயக்கத்தில் அவர்கள் நடிப்பதற்கும் நட்பு மட்டுமே காரணம். என் படத்தில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். இதில் 6 பாடல்கள். நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். சேரன் சம்பந்தப்பட்ட பகுதிகள் படமாக்கப்பட்டு விட்டது. தற்போது அர்ஜுன் சம்பந்தப்பட்டவை படமாக்கப்பட்டு வருகிறது. அடுத்து, விமல் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவி : எஸ்.ஏ.சந்திரசேகரன் 6 மாதம் நீக்கம்!!!

Monday, April, 16, 2012
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து எஸ்.ஏ.சந்திரசேகரனை 6 மாத காலம் நீக்கியிருப்பதாக, அட்ஹாக் கமிட்டி சார்பில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெப்சி தொழிலாளர்களுக்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே புதிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதையடுத்து ஏற்பட்ட மோதலில், தயாரிப்பாளர் சங்கம் இரண்டாக உடைந்தது. எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையில் ஒரு அணியும், ‘அட்ஹாக் கமிட்டி’ என்ற பெயரில் அ.செ.இப்ராகிம் ராவுத்தர் தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில், பெப்சிக்கு ஆதரவாக தீர்மானத்தில் கையெழுத்து போட்டார் என்றும், இதனால் தலைவர் பதவியை எஸ்.ஏ.சந்திரசேகரன் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அட்ஹாக் கமிட்டியினர் போராட்டம் நடத்தினர். ‘ராஜினாமா செய்ய முடியாது’ என்று எஸ்.ஏ.சந்திரசேகரன் தெரிவித்தார். மேலும், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் 20 பேர், யாரிடம் தங்கள் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தனர் என்றும் கேள்வி கேட்டிருந்தார்.
இந்நிலையில் அட்ஹாக் கமிட்டி சார்பில் சென்னை நூறடி சாலையிலுள்ள ஓட்டல் ஒன்றில் நேற்று அவசர பொதுக்குழு கூட்டம் நடந்தது. அ.செ.இப்ராகிம் ராவுத்தர் தலைமை தாங்கினார். அப்போது செயலாளர் கே.முரளிதரனிடம், 19 பேர் தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். அதை முக்தா சீனிவாசன் உட்பட சில மூத்த தயாரிப்பாளர்கள் படித்துப் பார்த்து ஒப்புதல் அளித்தனர். பிறகு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாற்று அணியினர் சார்பில் ஏதாவது பிரச்னை ஏற்படலாம் என்று கருதி, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது. எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் அவரது அணியினரை தாக்கி பலர் ஆவேசமாகப் பேசினர். அப்போது தயாரிப்பாளர்கள் ரிஷிராஜ், தமிழரசன் உட்பட சிலர், எதிர்த்து குரல் கொடுத்தனர். இதையடுத்து அட்ஹாக் கமிட்டியைச் சேர்ந்தவர்கள், அவர்களை வெளியேற்றினர். இதையடுத்து நிருபர்களிடம் பேசிய இருவரும் ‘இங்கு நடப்பது பொதுக்குழு கூட்டமே இல்லை. எங்கள் கருத்துகளைச் சொல்லும் உரிமை மறுக்கப்படுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்’ என்றனர். பிறகு அவர்கள், கூட்டத்தை புறக்கணிப்பதாகச் சொல்லி, வெளியேறினர்.

பொதுக்குழு கூட்டம் முடிந்த பின், அட்ஹாக் கமிட்டியினர் தீர்மானங்கள் நிறைவேற்றினர். பின்னர் அ.செ.இப்ராகிம் ராவுத்தர் நிருபர்களிடம் கூறியதாவது: தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் பிரச்னையை சுமூகமாக தீர்த்து வைக்க உதவிய தமிழக முதல்வருக்கும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கும் நன்றி. தயாரிப்பாளர் சங்க நலனுக்கு எதிராக செயல்பட்ட எஸ்.ஏ.சந்திரசேகரன், கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன் ஆகியோரை 6 மாத காலத்திற்கு சங்கத்தை விட்டு நீக்கி வைக்க, அட்ஹாக் கமிட்டி முடிவு செய்துள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக நான் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளேன்.

பெப்சி பேச்சுவார்த்தையை தொடர, அட்ஹாக் கமிட்டிக்கே முழு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. 4 மாத காலத்துக்குள் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க நிதியை நிர்வாகம் செய்யவும், காசோலைகளில் கையெழுத்து போடவும் எனக்கும், கே.முரளிதரனுக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

பிறகு கேயார் பேசுகையில், ‘ 350க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். பெப்சி பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்துவோம். இதற்கு முன் 15 சங்கங்களுக்கான புதிய ஊதிய உயர்வு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற சங்கங்களுக்கான பேச்சுவார்த்தை தொடரும்’’ என்றார். பெப்சியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அட்ஹாக் கமிட்டி சார்பில், அ.செ.இப்ராகிம் ராவுத்தர் தலைமையில் ஏ.வி.எம் முருகன், முக்தா சீனிவாசன், ஏ.வி.எம் சரவணன், கே.ஆர்.ஜி., கேயார், ஆர்.பி.சவுத்ரி, புஷ்பா கந்தசாமி, கே.ராஜன், பஞ்சு அருணாசலம், கே.முரளிதரன், டி.சிவா, ஆர்.கே. செல்வமணி, ஹென்றி, சி.வி.ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், ஏ.எல்.அழகப்பன், ஞானவேல்ராஜா, வி.எம்.செல்வன், வி.சேகர், ஜெமினி ராகவா, சோழா பொன்னுரங்கம், கருணாஸ், பாலாஜி என, 24 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஊனமுற்றோருக்கு நிதி திரட்ட நடிகர், நடிகைகள் ஆடை அலங்கார அணி வகுப்பு!!!

Monday, April, 16, 2012
ஊனமுற்ற குழந்தைகளுக்கு நிதி திரட்ட நடிகர்-நடிகைகளின் ஆடை அலங்கார அணி வகுப்பு நிகழ்ச்சி கிண்டி லீமெரிடியன் ஓட்டலில் நடந்தது. தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியின் மனைவி அனுஷா நெபர்டரி அமைப்பு மூலம் இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

நடிகர்-நடிகைகள் கண்கவரும் உடையுடன் மேடையில் தோன்றினர். மாடல் அழகிகளும் அணி வகுத்தார்கள் நடிகர்கள் ஆர்யா, ஜீவா, சித்தார்த், மகத், ஷர்வானந்த் ஆகியோர் விதவிதமான தோற்றங்களில் தோன்றினர்.

நடிகைகள் பார்வதி ஒமனகுட்டன், டாப்சி, பூஜாஹெக்டே, இந்தி நடிகை நர்கிஸ் ஆகியோர் கவர்ச்சி ஆடைகளில் அணிவகுத்து ரசிகர்கள் கவர்ந்தனர். சோனியா அகர்வாலும் அணி வகுப்பில் பங்கேற்றார். மத்திய மந்திரி மு.க. அழகிரி, தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

'ஓகே ஓகே' ஓபனிங்கால் திக்குமுக்காடிப் போன யூனிட்!!!

Monday, April, 16, 2012
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படம் தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பையும் மீறி ஓடிக்கொண்டிருப்பதில் உதயநிதி வட்டாரம் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது. அஜித், விஜய், சூர்யா படங்களுக்கு இருக்கும் ஓபனிங் உள்ளது என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ரஜினி படத்தின் ஓபனிங் இருந்தது கண்டு 'ஓகே ஓகே' யூனிட்டே சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறது. அந்த அளவுக்கு இந்தப் படம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. ஏ, பி, சி ஆகிய அனைத்து சென்டர்களையும் இப்படம் தன்வசம் இழுத்துள்ளது. போட்ட பணம் வந்தாலே போதும் என்று இருந்தவர்களுக்கு பன்மடங்கு லாபத்தை கொடுக்கும் என்பது தெரிந்தால் மகிழ்ச்சியில்லாமலா இருக்கும்?

ராதிகா சுற்றிவளைப்பு : ஷூட்டிங்கில் பரபரப்பு!!!

Monday, April, 16, 2012
அஜ்மல், ராதிகா ஆப்தே நடிக்கும் படம், ‘வெற்றிச்செல்வன்’. இதன் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்தது. அப்போது திடீரென்று சிலர் ரகளையில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியானது. இதுபற்றி படத்தின் இயக்குனர் ருத்ரனிடம் கேட்டபோது கூறியதாவது: சம்பவம் உண்மைதான். காஷ்மீரில் இருந்து தெகல்காம் செல்லும் வழியில் மலர்த்தோட்டம் ஒன்றில் ராதிகா ஆப்தே நடித்த காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தோம். அந்த பகுதியில் கடந்த சில வருடங்களாக ஷூட்டிங் நடக்கவில்லையாம். இதனால் வேடிக்கைப் பார்க்கக் கூட்டம் கூடியது. திடீரென்று வந்த சிலர், ‘நாங்கள் காஷ்மீரிகள். நீங்கள் எப்படி இங்கு ஷூட்டிங் நடத்தலாம்’ என்று கேட்டு ராதிகா ஆப்தேவை சுற்றிவளைத்து கெரோ செய்தனர். இதில் அவர் நடுங்கி விட்டார். எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பிறகு லோக்கல் புரொடக்ஷன் மானேஜர் ஒருவர், சமாதானம் பேசியும் கேட்காததால் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டி வந்தது. இதையடுத்து வேறொரு இடத்தில் ஷூட்டிங் நடத்திவிட்டு திரும்பினோம்.

டாப்- 50 பட்டியலில் ரஜினி!!!

Monday, April, 16, 2012
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் செல்வாக்கும் உயர்மதிப்பும் கொண்ட மிக முக்கியமான மனிதர்களை பட்டியலிடுவது இந்தியா டுடே பத்திரிகையின் வழக்கம். இந்த ஆண்டும் அப்படியொரு பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம்பெற்றுள்ளார். இத்தனைக்கும் கடந்த இரு ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் ரிலீஸாகவில்லை. உடல்நலக் குறைவு, 'ராணா' தள்ளிப்போனது என பிரச்சினைகள் இருந்தாலும் மக்கள் செல்வாக்கு, ரசிகர்களின் அபிமானம், வரவிருக்கும் 'கோச்சடையான்' மீதான எதிர்ப்பார்ப்பு போன்றவற்றால், அவரே செய்திகளின் நாயகனாகத் திகழ்கிறார். இந்தியா டுடே கடந்த வாரம் வெளியிட்டுள்ள அந்த டாப்- 50 பட்டியலில், அன்னா ஹசாரே, ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, அமிதாப் பச்சன், ஏ.ஆர். ரஹ்மான், யுவ்நாடார், சச்சின் டெண்டுல்கர், அஜீம் பிரேம்ஜி என பல பிரபலங்கள் இடம் பிடித்திருகிறார்கள். 'தென்னாட்டு சுல்தான்' என்ற தலைப்பில், ரஜினியின் செல்வாக்கு நிலைக்கான எட்டு காரணங்களை இந்தியா டுடே பட்டியல் இட்டு இருக்கிறது. அந்த காரணங்கள் இவைதான்...

61 வயது கொண்ட ரஜினிகாந்த் ஒரு தென்னாட்டு சுல்தான்!

1. சல்மான்கான் போன்ற சூப்பர் ஸ்டாருக்கு பாலிவுட் பட்டம் சூட்ட எண்ணியபோது, அவர்கள் தந்த பெயர் 'வடக்கின் ரஜினிகாந்த்'

2. நோயுற்று மே 2011-ம் தேதி சிங்கப்பூர் மருத்துவமனையில் அவர் இருந்தபோது, தமிழகத்தின் இதயத் துடிப்பு நின்றுபோனது போலிருந்தது.

3. 'கோச்சடையான்' எனும் இந்தியாவின் முதலாவது தொழில்நுட்ப மோசன் கேப்சரிங் சினிமாவில் நடிக்கிறார்.

4. இவரது வயது ஏறிக்கொண்டிருக்க, இவரது கதாநாயகிகளின் வயது குறைந்துகொண்டே பேகிறது. கோச்சடையானில் இவரது கதாநாயகி தீபிகா படுகோனின் வயது இருபத்து ஆறுதான்.

5. எந்திரனின் வெற்றி, சூப்பர் ஸ்டாரைப் பற்றிய புதிய ஐபாட் மென்பொருளை அறிமுகப்படுத்த ஆப்பிளுக்கு உணர்த்தியது.

6. 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு வந்து கோச்சடையானுக்காகப் பாடினார்.

7. ரஜினியின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாறு அவரது 62-வது பிறந்த நாளான 12.12.12 அன்று வெளியிடப்படும். ஆசிரியர்: நமன் ராமச்சந்திரன்.

8. கோச்சடையானின் தெலுங்கி தியேட்டர் உரிமை ரூ 30 கோடிக்கு விற்பனையானது

விஷால் மூன்று வேடங்களில்: ஜோடியாக கார்த்திகா!!!

Monday, April 16, 2012


விமல், அஞ்சலி, சிவா, ஓவியா நடிக்கும் ‘மசாலா கபே’ படத்தை இயக்கி முடித்துள்ள சுந்தர்.சி, அடுத்து விஷால் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதில் விஷால் மூன்று வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க பல ஹீரோயின்களிடம் பேசி வந்தனர். இப்போது ‘கோ’ கார்த்திகா ஒப்பந்தமாகியுள்ளார். இம்மாத இறுதியில் ஷூட்டிங் தொடங்கும் என்று தெரிகிறது. காமெடியுடன் கூடிய காதல் என்று படக்குழு தெரிவித்தது.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் பாடினேனா? சமந்தா!!!

Monday, April 16, 2012
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படம், ‘நீதானே என் பொன்வசந்தம்‘. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் தமிழில் ஜீவாவும் தெலுங்கில் நானியும் ஹீரோவாக நடிக்கின்றனர். ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் சமந்தா ஒரு பாடலை பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாயின. இதுபற்றி சமந்தாவிடம் கேட்டபோது, ‘’இளையராஜா இசையில் பாடும் வாய்ப்பு கிடைத்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை’’ என்று கூறியுள்ளார். தற்போது, மணிரத்னம் இயக்கும் ‘கடல்’ மற்றும் சித்தார்த் நடிக்கும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.

பெண்கள் குழந்தை பெறும் மெஷின் அல்ல!

Monday, April 16, 2012
பெண்கள் குழந்தை பெறும் மெஷின் அல்ல என்றார் காஜல் அகர்வால். அவர் கூறியதாவது: 10 வருடங்களுக்கு முன்பு பெண்கள், பொருளாதாரத்தில் முக்கிய இடம் வகித்ததில்லை. கல்யாணம் செய்துகொள்வது, மெஷின¢ போல் குழந்தைகளை பெற்றுக்கொள்வது என்ற நடைமுறையில்தான் இருந்தது. நல்லவேளையாக அந்த நிலை மாறி இருக்கிறது. சமுதாயத்தில் பெண் களுக்கு சம உரிமை வழங்கப்படுகிறது. எந்தவொரு பெண் ணுக்கும் தனது கனவை நனவாக்கும் சுதந்திரமான வாய்ப்பு அமைந்திருக்கிறது. அந்த வாய்ப்பு எனக்கும் அமைந்திருக்கிறது. என் தொழிலையும், வாழ்க்கையையும் சந்தோஷமாக அனுபவிக்கிறேன். ஒவ்வொரு பெண்ணும் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சுதந்திரமாக வாழ்வதற்கான தகுதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் அது உங்களை சமுதாயத்தில் உயரமான இடத்துக்கு அழைத்துச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

இயக்குநரின் 'செல்லம்' தமன்னா!!!

Monday, April 16, 2012
ஏனென்றால் காதல் என்பேன்... - இது தமிழ் சினிமாவின் செல்லமாக இருந்து இப்போது தெலுங்கு சினிமா செல்லமாகிவிட்ட தமன்னாவின் புதிய படம்

தமிழ் - தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்துக்காக ஞாயிற்றுக்கிழமை பிரஸ் மீட் வைத்திருந்தார் நிகில் முருகன்.

ரொம்ப நாளாக சென்னைப் பக்கமே எட்டிப் பார்க்காத தமன்னா நேற்று கிரீன் பார்க்கில் 'தரிசனம்' தந்தார். கொளுத்தும் கோடையில் காஷ்மீரிலிருந்து வந்த ஐஸ் மாதிரி ஜில்லென்றிருந்தார்.

ஆள் மட்டுமல்ல, பேச்சும் செ ஜில்... முழுக்க முழுக்க தமிழில் அவர் பேச, போட்டோகிராபர்களை விட நிருபர்கள்தான் வைத்த கண் வாங்காமல் அவரைப் பார்த்துக் கொண்டே இருந்தனர்.

"நான் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து இறங்கியதுமே என் மீது ஜில்லென்று ஒரு காற்று வீசியது. அந்த காற்றில் அன்பு மிதந்து வந்தது. தமிழ்நாட்டில் நிறைய பேர் என் மீது அன்பாக இருக்கிறார்கள். அந்த அன்புதான் என்னை முதலில் வரவேற்றது," என தமன்னா ஆரம்பிக்க, விசிலடிக்காத குறைதான்!

தமன்னா பேச்சில் 'அன்பு' தொடர்ந்தது...

"பையா படத்தின் பாடல்கள் வெளியீட்டுக்கு வந்தபோதும், அந்த அன்பு என்னை தழுவியது. இப்போதும் அதே அன்பு என்னைத் தழுவுகிறது.

நான் நன்றாக தமிழ் பேசுவதற்கு இயக்குநர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், கருணாகரன் ஆகிய மூன்று பேரும்தான் காரணம். கருணாகரன் என்னை, 'செல்லம்' என்றுதான் அழைப்பார். அந்த 'செல்லம்' என்ற வார்த்தையில், அத்தனை அன்பு இருக்கும்.

இந்த படத்தின் கதாநாயகன் ராமிடம், கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. நான் கற்றுக்கொண்டேன்,'' என்றார்.

படத்தின் கதாநாயகன் ராம், இயக்குநர்கள் லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ், பாலாஜி சக்திவேல், சசி, சரவணன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, கருணாகரன், பட அதிபர்கள் ரவி கிஷோர், தனஞ்செயன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி, ஒளிப்பதிவாளர் ஆன்ட்ரோ ஆகியோரும் பேசினார்கள்.

நிகழ்ச்சியை, நிகில் முருகன் தொகுத்து வழங்கினார்.

யாரோ ஒரு டிவி தொகுப்பாளினி கெக்கே பிக்கேவென சிரித்தபடி, தமிழை மென்று துப்பி நிகழ்ச்சியைத் தொகுப்பதைவிட, நிகில் தொகுப்பது மி்க சிறப்பாக உள்ளது. இதை தயவு செய்து தொடருங்கள் நிகில்!

பாலாவுக்கு பூஜா புகழாரம்!!!

Monday, April, 16, 2012
டைரக்டர் பாலா ஒரு கண்டிப்பான அப்பா மாதிரி, என்று நடிகை பூஜா கூறியுள்ளார். பாலா இயக்கத்தில் உருவான 'நான் கடவுள்' படத்தில் நடித்து நல்ல பெயரை பெற்றவர் நடிகை பூஜா. சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாததால் திரையுலகை விட்டு ஒதுங்கி இருக்கிறார். இந்நிலையில் மீண்டும் பாலா படத்தில் பூஜா நடிக்க உள்ளார். இதுபற்றி நடிகை பூஜா அளித்துள்ள பேட்டியில், பாலா சார் படத்தில் நடிப்பதற்கு பொறுமை வேண்டும். அவரைப் பொருத்தவரை ஒரு கண்டிப்பான அப்பா மாதிரி. பரீட்சை நேரத்தில்தான் மிரட்டுவார். மற்ற நேரங்களில் அவரே சாக்லெட், ஐஸ்கிரீமெல்லாம் வாங்கிக் கொடுப்பார், என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்திருக்கும் பூஜா, தமிழ் சினிமா என்னை கைகழுவி விட்டது என்று சொல்ல முடியாது. நான் சொந்த வீடு கட்டி சந்தோஷமா இருக்கிறேன் என்றால் அதற்கு முழு காரணமும் தமிழ் படங்கள்தான். அந்த நன்றியை நான் எப்போதும் நினைத்து கொண்டிருப்பேன். சினிமாவில் அதிர்ஷ்டமும் வேண்டும். அப்போதுதான் முதலிடத்திற்கு போக முடியும், என்று கூறியிருக்கிறார்.

அஜித் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும்.. ஒவ்வொரு நிமிஷமும்..!

Monday, April 16, 2012
அஜித் நடிப்பில் ஒரு படம் வெளிவருகிறது என்றாலே அதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். 'பில்லா' படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் 'பில்லா 2' படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்போ ஏராளம். 'பில்லா 2' படத்தினை தயாரிப்பு நிறுவனம் முழுவீச்சில் விளம்பரப்படுத்த தொடங்கியுள்ளது. 'பில்லா 2' படத்தின் பிரத்யேக படங்களை வெளியிட்டு இருக்கிறது. இதுவரை, எந்த ஒரு அஜித் படத்திற்கும் இல்லாத அளவிற்கு பெரும் தொகை கொடுத்து வாங்கி இருக்கிறது சோனி நிறுவனம். இப்படத்தின் இசையை இம்மாத இறுதியில் வெளியிட இருக்கிறார்கள். இப்படத்தில் 6 பாடல்களுடன் ஒரு ப்ரொமோ பாடலும் இருக்கிறது. 'பில்லா 2' படத்தின் TEASER ஏப்ரல் 13-ம் தேதி இணையத்தில் வெளியாகும் என்று அறிவித்தார்கள். இணையத்தில் நேற்று (ஏப்ரல் 13) வெளியிடப்பட்ட TEASER அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. குறிப்பாக TEASER-ல் அஜித் பேசும் "என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா" என்று வசனம் வரவேற்பை பெற்று இருக்கிறது. மே 1 அஜித் பிறந்த நாள் அன்று தியேட்டரில் 'பில்லா 2' படத்தின் டிரெய்லர் வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

விஜய் சீக்கிரம் முடிச்சா.. 'யோஹன்' ஆரம்பிச்சிடலாம்! - கௌதம் மேனன்!!!

Monday, April 16, 2012
துப்பாக்கி' படத்தினை அடுத்து விஜய் கால்ஷீட் யாருக்கு என்பது கோலிவுட்டின் விடைதெரியாத கேள்வியாக இருந்தது. 'துப்பாக்கி' படத்தினை முடித்து விட்டு கௌதம் மேனன் இயக்கத்தில் 'யோஹன்' படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். 'யோஹன்' படம் குறித்து இயக்குநர் கௌதம் மேனன் கூறியது, 'யோஹன்' ஸ்கிரிப்ட் ரெடியா இருக்கு. முருகதாஸ்கூட விஜய் 'துப்பாக்கி' முடிச்சிட்டா, 'யோஹன்' ஆரம்பிச்சிடலாம். இந்தப் படத்துல விஜய் மட்டும்தான் தமிழ் முகம். ஹீரோயின் ஒரு இந்தியனா இருப்பாங்க. மத்த நடிகர், நடிகை எல்லாருமே வெளிநாட்டினர்தான். தமிழ் படம்தான். ஆனா, இங்கிலீஷ் சப்-டைட்டிலோட உலகம் முழுக்க எங்கேயும் வெளியிடும் தரம் இருக்கும். ரஹ்மான் இசை. 'யோஹன்'ங்கிற இந்த கேரக்டரை எஸ்டாபிளிஷ் பண்ணிட்டா ஜேம்ஸ் பாண்ட் படம் மாதிரி அத்தியாயம் 1, 2-னு அடுத்தடுத்து பண்ணலாம்" என்று தெரிவித்து இருக்கிறார்.

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி திருமணம்!!!

Monday, April 16, 2012
பிரபல ஆலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி (36). இவர் ஆலிவுட் நடிகர் பிராட் பிட் (48) என்பவரை கடந்த 7 வருடங்களாக காதலித்து வருகிறார். இந்த ஜோடி திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வருகின்றனர். 6 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவர்களது குழந்தைகள் விரும்பினர். அதை தொடர்ந்து காதலர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

அதை தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது பிவெர்லி கில்ஸ் பகுதியைச் சேர்ந்த நகை வடிவமைப்பாளர் ராபர்ட் புரோகாப் தயாரித்த வைர மோதிரத்தை ஏஞ்சலினா ஜோலிக்கு அணிவித்தார். அதன் மதிப்பு ரூ.1 கோடியே 25 லட்சமாகும்.

திருமணம் நடைபெறும் தகவலை பிராட் பிட் செய்தி தொடர்பாளர் சினிதியா பெட்-டான்டே உறுதி செய்தார். திருமணம் எப்போது? எங்கு நடைபெறும் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.

ஏஞ்சலினா ஜோலி- பிராட்பிட் திருமணம் குறித்து அவர்களின் குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சட்டம் ஒரு இருட்டறை’யில் இரு நாயகிகள்!!!

Monday, April 16, 2012
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ‘சட்டம் ஒரு இருட்டறை’ 1981-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தில் விஜயகாந்த் பூர்ணிமா தேவி ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தை தற்போது ரீமேக் செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளனர். எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிக்க மட்டுமே உள்ளார். அவருடைய உதவி இயக்குனரான ரமேஷ் இயக்குகிறார்.

பிரபல நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்திற்காக இரு நாயகிகளை தேர்வு செய்துள்ளனர்.

அதில், ‘கோ’ படத்தில் நடித்த கார்த்திகா ஒரு நாயகியாகவும், ‘கோவா’ ‘கோ’ படங்களில் நடித்த ‘பியா’ மற்றொரு நாயகியாகவும் தேர்வாகியுள்ளனர். இருவரும் ‘கோ’ படத்திற்கு பிறகு சேர்ந்து நடிக்கின்றனர்.

இப்படத்தின் நாயகன், நாயகி, கதாபாத்திரங்களின் தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் ஓரிரு மாதங்களில் படப்பிடிப்புகளை துவங்க இருக்கின்றனர்.

கோச்சடையானில் மேலும் 4 பிரபலங்கள்!!!

Monday, April 16, 2012
'கோச்சடையான்' படத்துக்கு 4 பாலிவுட் நடன இயக்குநர்கள் நடனம் அமைக்கிறார்கள் என்றார் இயக்குநர் சவுந்தர்யா. ரஜினிகாந்த் நடிக்கும் 'கோச்சடையான்' ஷூட்டிங் சமீபத்தில் லண்டனில் தொடங்கியது. இதில் சரத்குமார், ஆதி, தீபிகா படுகோன், ஷோபனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். மோஷன் கேப்சர் முறையில் இதன் ஷூட்டிங்கை சவுந்தர்யா படமாக்கி வருகிறார். இப்படத்தின் ஸ்டார் அந்தஸ்து நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. பிரபல நடிகர்கள் பலர் நடிப்பதுபோல் பிரபல டான்ஸ் மாஸ்டர்களும் இதில் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். சரோஜ் கான், ராஜு சுந்தரம், சின்னி பிரகாஷ், ஷோபி ஆகியோர் நடனம் அமைக்கின்றனர். இதுபற்றி சவுந்தர்யா கூறும்போது, 'சரோஜ் கான், சின்னி பிரகாஷ், ராஜு சுந்தரம், ஷோபி ஆகிய பிரபலமான 4 நடன மாஸ்டர்களுடன் பணியாற்றுவது வியப்பும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. அதற்காக கடவுளுக்கு நன்றி' என்றார்.

அஜித்துக்கும், எனக்கும் நீயா - நானா...? போட்டி நடக்கும்: விஜய்!!!

Monday, April 16, 2012
சினிமாவில் தான் அஜித்தும், நானும் நீயா-நானா...? என்று போட்டி போடுவோம் மற்றபடி நாங்கள், நல்ல நண்பர்கள் என்று கூறியுள்ளார் நடிகர் விஜய். பல்வேறு தடைகளை கடந்து இன்று, தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வளர்ந்து இருக்கும் நடிகர் விஜய், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, பொதுவாக எல்லா ஹீரோக்களும் ரொமான்ட்டிக்கில் இருந்து அதிரடிக்கு மாறுவார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் அப்படியே மாறியிருக்கிறது. எனது சினிமா கேரியரில் இடைப்பட்ட காலத்தில் தான் ரொமான்ட்டிக் ரோலில் நடித்து, இப்போது ஆக்ஷன் ஹீரோவாக மாறியிருக்கிறேன். எனக்கு காமெடி கலந்த ரொமான்ஸ் காட்சியில் தான் நடிக்க ஆசை, ஆனால் இன்றைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து கமர்ஷியலில் நடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்றார். மேலும் சினிமாவில் தனக்கு யார் போட்டி என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த விஜய், ரஜினி-கமல் ஆகியோரைத் தொடர்ந்து எனக்கும், அஜித்துக்கும் போட்டி என்று பலரும் கூறுகிறார்கள். சினிமாவை பொறுத்த வரைக்கும் அஜித்துக்கும், எனக்கும் நீயா - நானா...? என்று போட்டி நடக்கும், மற்றபடி நானும் அஜித்தும் நல்ல நண்பர்கள். நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து கொள்வோம். நான் அவருடைய வீட்டிற்கும், அவர் என்னுடைய வீட்டிற்கும் வருவது உண்டு. எங்களைப் போலவே எங்கள் இருவரது குழந்தைகளும் நல்ல நண்பர்களாய் இருக்கிறார்கள். சினிமாவில் ஆரோக்கியமான போட்டி இருப்பது நல்லது தானே. தற்போது முருகதாஸின் 'துப்பாக்கி'யில் நடித்து வருகிறேன். அருமையான ஆக்ஷன் கலந்த த்ரில்லர் கதை. முருகதாஸ் ரொம்ப திறமையானவர், அவர் ஒரு குட்டி மணிரத்னம். அதேபோல் படத்தின் நாயகி காஜல் அகர்வாலும் நல்ல பொருத்தம். வில்லனாக வித்யூத் ஜமால் நடித்துள்ளார். அவரை வில்லன் என்று சொல்லுவதை விட, ஹீரோ என்றே சொல்லலாம். 'துப்பாக்கி' படத்திற்கு அடுத்தப்படியாக கௌதம் மேனனின், 'யோஹன் அத்தியாயம் ஒன்று' படத்திலும், அதற்கு அடுத்து விஜய் டைரக்ஷனில் ஒரு படத்திலும் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஸ்டாலின் கூட்டத்தை திசை திருப்ப ‘ஒரு கல் கண்ணாடி’ தியேட்டரில் ரெய்ட்!!!

Monday, April 16, 2012
மதுரையில் திமுக இளைஞரணி நேர்காணல் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது.

இக் கூட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில் திமுக பிரமுகருக்கு சொந்தமான ‘தமிழ் ஜெயா’ தியேட்டருக்குள் தல்லாகுளம் போலீசார், துணை கமிஷ்னர் திருநாவுக்கரசு தலைமையில் உள்ளே நுழைந்தனர்.

அங்கு ஸ்டாலின் மகன் உதயநிதி தயாரித்து, நடித்துள்ள ‘ஒரு கல் கண்ணாடி’ படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

டிக்கெட் விலை அதிகமாக வைத்து விற்பனை செய்வதாக கூறி தியேட்டரில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். பின்னர் தியேட்டரில் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாயை போலீசார் எடுத்துச் சென்றனர்.

மேலும், தியேட்டர் ஊழியர்கள் 7 பேரையும் கைது செய்தனர். மதுரையில் ஸ்டாலின் கூட்டத்தை திசை திருப்பவே போலீசார் இந்த செயலில் ஈடுபட்டதாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

16 நாட்களில் எட்டுப் பாடல்கள் - கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!!!

Monday, April 16, 2012
நடுநிசி நாய்களுக்குப் பிறகு சிதைந்துபோன கவுதம் மேனன் இமேஜ், நீதானே என் பொன்வசந்தம் பட அறிவிப்பு, இளையராஜா இசை என்றெல்லாம் அறிவிப்புகள் வந்த பிறகு, கம்பீரத்துக்கு திரும்பியிருக்கிறது.

சமீபத்தில் எந்தப் படப் பாடல்களுக்கும் இல்லாத எதிர்ப்பார்ப்பு நீதானே என் பொன்வசந்தம் படத்துக்கு உருவாகியுள்ளது.

சரி, இளையராஜா அப்படி என்னதான் இந்தப் படத்தில் விசேஷமாக செய்திருக்கிறார்...

சமீபத்திய தனது பேட்டியொன்றில் இப்படிச் சொல்லியிருந்தார் கவுதம்:

‘‘ஒவ்வொரு படம் தொடங்கும்போதும் ‘இதுக்கு ராஜா சார்தான் மியூஸிக்’னு யோசிப்பேன். ஆனா, அமையாது. இந்தப் படத்துக்கு கண்டிப்பா அவர்கிட்ட கேட்கலாம்னு தைரியம் வந்துச்சு. அவரைச் சந்திக்க அப்பாயின்மென்ட் வாங்கும்போதுகூட என்ன விஷயம் பேசப்போறேன்னு சொல்லவே இல்லை.

‘நான் ஒரு படம் பண்றேன். ஏற்கெனவே 50 சதவிகிதம் ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. இதுதான் கதை. இந்த மாதிரி மியூஸிக் வேணும்’னு சொல்லி, ஷூட் பண்ணின போர்ஷனைப் போட்டுக் காட்டினேன். எல்லாத்தையும் உள்வாங்கிட்டு பிரமாதமான டியூன்கள் தந்தார். ஒரே நாள்தான்... எனக்குத் திக்குமுக்காடிடுச்சு! ‘சார்... என்னால இவ்வளவு விஷயங்களையும் மனசுல ஏத்திக்க முடியலை. மீதியை நாளைக்கு வெச்சுக்கலாம்’னு சொன்னேன்.

‘ஒரு விஷயம் நல்லா நடக்கும்போது பிரேக் பண்ணாதீங்க’ன்னார்.

‘சார்... நீங்க கொட்றீங்க. என்னால முடியலை’னு சொல்லிச் சமாளிச்சேன். ‘இளையராஜா ஒரு பாடலை உருவாக்கும்போது, நாம கூட இருக்கிறதே பெரிய கொடுப்பினை’னு என்கிட்ட ஒரு ஸ்டார் நடிகர் சொன்னார். அது நூத்துக்கு நூறு உண்மை!

‘உங்க மெலடி எனக்கு வேணும். புது சவுண்ட், புது ட்ரீட்மென்ட்ல தரணும்’னு போய் நின்னேன். எல்லா பாட்டுக்கும் ஹார்மோனியத்தில் டியூன் போட்டு அதுக்கு நா.முத்துக்குமாரை வரிகள் எழுத வைச்சு, எந்த இசைக் கருவிகளின் ஒலிக்கோர்ப்பும் இல்லாம பாடவெச்சு பதிவு பண்ணோம். அந்தக் குரலை மட்டும் லண்டன் எடுத்துட்டுப் போய் ஹங்கேரியில் இருந்து வரவைச்ச சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா மூலம் பதிவு பண்ணோம்.

படத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள். ஒரு பாட்டுக்கு இரண்டு நாள்னு கிட்டத்தட்ட 16 நாள்ல மொத்த ஒலிப்பதிவும் முடிஞ்சிருச்சு. மூணு வாரத்துல எல்லா பாடல்களும் ஷூட்டிங்கிற்கு ரெடி. இதுவும் ஒரு புது அனுபவம்தான்!’’

எட்டுப் பாட்டும் சூப்பர் ஹிட்டாகட்டும்!