Tuesday, January 10, 2012

‌காமெடி வேடத்திற்கு மாறியது ஏன்...? நடிகை ஊர்வசி பதில்!

Tuesday, January 10, 2012

பல படங்களில் ஹீரோயினாக நடித்த நடிகை ஊர்வசி, ‌காமெடி வேடத்தில் அதிகம் கவனம் செலுத்துவது ஏன்...? என்பதற்கு பதில் அளித்துள்ளார். இயக்குநர் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம்மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயாகியாக நடித்துள்ள ஊர்வசி, இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழில் இப்போது பேச்சியக்கா மருமகன் என்ற படத்தில், தருண் கோபிக்கு மாமியராக நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நடந்தது.

விழாவில் பேசிய நடிகை ஊர்வசி, 400க்கும் மேற்பட்ட படங்களில் நான் ஹீரோயினாக நடித்துள்ளேன். பிறகு குணச்சித்திர மற்றும் ‌காமெடி வேடங்களில் நடித்து வருகிறேன். அதிலும் குறிப்பாக காமெடி வேடத்தில் அதிகமாக நடிப்பது ஏன்? என்று பலரும் கேட்கின்றனர். நடிகைகளை ‌பொறுத்த வரை ஹீரோயின் மற்றும் குணச்சித்திர வேடங்களில் தான் அதிகம் நடிக்கின்றனர். காமெடி வேடத்தில் அவ்வளவாக நடிப்பதில்லை. டைரக்டர்களும், கதாசிரியர்களும் பெண்கள் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

காமெடியில், ஆச்சி மனோரமாவுக்கு பிறகு அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. ஆனால் எனக்கு மாயாபஜார், வனஜா கிரிஜா, மகளிர் மட்டும் போன்ற படங்களில் காமெடி வேடத்திற்கு கிடைத்த வரவேற்பு, என்னை மேலும் காமெடி ரோலில் நடிக்க தூண்டியது. அதுபோன்ற நல்ல வேடங்கள் வந்தால் தொடர்ந்து காமெடி வேடத்தில் நடிப்பேன் என்றார்.

லிப் டு லிப் காட்சியில் காஜல்!!

Tuesday, January 10, 2012
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் லிப் டு லிப் காட்சியில் நடித்துள்ளார் காஜல் அகர்வால். ‘நான் மகான் அல்ல’, ‘மாவீரன்’ போன்ற படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தற்போது ‘மாற்றான்’ படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். மகேஷ்பாபுவுடன் ‘பிஸ்னஸ்மேன்’ என்ற படத்தில் நடிக்கிறார். இதில் மகேஷ்பாபு, காஜல் ‘லிப் டு லிப்’ முத்தமிடும் காட்சியில் நடிக்க வேண்டி இருந்தது. இதில் நடிக்க மறுத்துவந்தார் மகேஷ்பாபு. கதைக்கு முக்கிய தேவை என்பதால் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் புரி ஜெகநாத் கூறி வந்தார்.
இதுபற்றி மகேஷ் பாபு தனது மனைவி நம்ரதாவிடம் ஆலோசித்தார். முத்தக்காட்சியில் நடிக்க அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து சமீபத்தில் இக்காட்சியில் மகேஷ்பாபு நடித்தார். இதுபற்றி இயக்குனர் புரி ஜெகநாத் கூறும்போது,‘‘இப்படத்தில் மகேஷ்பாபு, காஜல் அகர்வால் லிப் டு லிப் காட்சி இருக்கிறது. படம் ரிலீஸானதும் அது காட்சிக்கு எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். மேலும் இப்படத்தை சமீபத்தில் மகேஷ்பாபு மனைவி நம்ரதாவுக்கு திரையிட்டு காட்டினேன். அவர் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. மாறாக நன்கு ரசித்துப்பார்த்தார்’’ என்றார்.

கொலவெறிக்கு பதிலளிக்கிறார் அனிருத்: வாசகர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்யலாம்!

Tuesday, January 10, 2012
உலகின் சந்து, பொந்து மூலை முடுக்குகளில் எல்லாம் ஒலி(ளி)த்து கொண்டிருக்கும் ஒரு பாடல் என்றால், அது கொலவெறி தான். முதல் படத்திலேயே, அதுவும் படம் வெளிவருவதற்கு முன்பே ஒரே பாட்டிலேயே உலகம் முழுவதையும் தன் பக்கம் திரும்ப வைத்தவர் கொலவெறி பாடலின் இசையமைப்பாளர் அனிருத். பலர் இப்பாட்டை வரவேற்ற ‌போதிலும், சிலர் இந்தபாட்டை எதிர்த்தும் வருகின்றனர்.

இந்நிலையில் தினமலர் இணையளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், கொலவெறி பாட்டை இவ்வளவு பெரிய ஹிட்டாக்கிய ரசிகர்களுக்கு நன்‌றியை தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து நல்ல நல்ல பாட்டுகள் கொடுக்க தான் முயற்சி பண்ணுவதாகவும் தெரிவித்தார். மேலும் இப்பாட்டு தொடர்பான எந்த விதமான கேள்விக்கும் தான் பதிலளிக்க தயாராக இருப்பதாக அனிருத் கூறியுள்ளார். ஆகையால் வாசகர்களாகிய நீங்கள் இப்பாட்டு தொடர்பான உங்களுடைய கருத்துக்கள், கேள்விகளை நீங்கள் இங்கு பகிர்ந்து கொள்ளலாம். இதற்கு அனிருத் விரைவில் பதிலளிக்க உள்ளார்.

அஜித் ஜோடியாக அமலாபால்...?!

Tuesday, January 10, 2012
மைனா, தெய்வத்திருமகள் என தொடர் படங்களின் வெற்றியால் தமிழ், தெலுங்கு என எந்த பக்கம் திரும்பினாலும் தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், நடிகர்கள் என அனைவரின் கால்களும் அமலா பாலின் வீட்டை நோக்கி தான் படையெடுக்கிறதாம். இதனால் மற்ற நடிகைகள் மத்தியில் அமலா பால் மீது சிறு பொறாமை உள்ளது. இந்நிலையில் அவர் மீதுள்ள பொறாமை மேலும் அதிகரித்துள்ளதாம். இதற்கு என்ன காரணமாம்? விசாரித்து பார்த்ததில், நடிகர் அஜித் பில்லா-2 படத்தை அடுத்து விஷ்ணுவர்தன் டைரக்ஷ்னில் ஒரு படத்தில் நடிக்க போகிறார். இதில் அஜித்துக்கு ஜோடி அமலாபால் தானாம். இன்னும் ஓரிரு மாதங்களில் இப்படத்தின் சூட்டிங் ஆரம்பமாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

நண்பர்களும் 40 திருடர்களும் ..கமல்ஹாசனும், கிரேஸி மோகனும்!

Tuesday, January 10, 2012
மீண்டும் கமல்ஹாசனும், கிரேஸி மோகனும் இணைவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மைக்கேல் மதன காமராஜன் முதல் ஏகப்பட்ட படங்களில் இணைந்து காமெடியில் கலக்கியவர்கள் கமல்ஹாசனும், கிரேஸி மோகனும். நாடக நடிகராக மட்டுமே இருந்து வந்த கிரேஸி மோகனுக்கு மைக்கேல் மதன காமராஜன் மூலம் திரையுலகில் பெரிய மேடை அமைத்துக் கொடுத்தவர் கமல் - அதற்கு முன்பே சில படங்களில் கிரேஸி மோகன் வசனம் எழுதியிருந்தபோதும் மைக்கேல் மதன காமராஜன்தான் அவருக்குப் பெரிய பிரேக்கைக் கொடுத்த படமாகும்.

அதன் பின்னர் இருவரும் இணைந்த படங்கள் எல்லாம் அதிரி புதிரி அதிரடி காமெடிக் கலாட்டாக்களாக அமைந்தன. இருவரும் இணைந்து கொடுத்த படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள்.

பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம், தெனாலி, அவ்வை சண்முகி, இந்திரன் சந்திரன், சதி லீலாவதி, மகளிர் மட்டும் அபூர்வ சகோதரர்கள் என இந்த வரிசை சற்றே நீளமானது. கடைசியாக இவர்கள் கொடுத்த அதிரடி காமெடிப் படம் வசூல் ராஜா எம்பிபிஎஸ். தசாவதாரத்திலும் கிரேஸியின் பங்கு இருந்தது.

இந்த நிலையில் மீண்டும் ஒரு அதிரடியான காமெடிப் படத்தில் நடிக்க கமல்ஹாசன் விருப்பமாக உள்ளாராம். இதையடுத்து அவருடன் கிரேஸி மோகன் கை கோர்க்கவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இந்தப் படத்தை நடிகர் பிரபு தனது சிவாஜி புரடக்ஷன்ஸ் மூலம் தயாரிப்பார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கமல், பிரபு, கிரேஸி மோகன் இணைந்திருந்தனர்.

தற்போது நண்பர்களும் 40 திருடர்களும் என்ற தலைப்பில் ஒரு கதையை தயாராக வைத்துள்ளார் கிரேஸி. இந்தப் படத்தை பிரபு தயாரிக்கவுள்ளார். இதில் நாயகனாக நடிக்கப் போவது கமல் என்கிறார்கள்.

இது உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால் உறுதியான பதில் ஏதும் வரவில்லை. கமல் தரப்பிலோ அப்படியெல்லாம் ஐடியா இல்லை என்கிறார்கள். ஆனால் மூவரும் இணைவது உறுதி என்று இன்னொரு தகவல் கூறுகிறது.

தற்போது கமல்ஹாசன் தனது நடிப்பு மற்றும் இயக்கத்தில் விஸ்வரூபம் படத்தில் படு பிசியாக இருக்கிறார். இந்த பிசி ஷெட்யூலுக்கு மத்தியிலும் சமீபத்தில் கிரேஸி மோகனின் சாக்லேட் கிருஷ்ணா நாடகத்தின் 400வது ஷோவுக்கு வந்திருந்தார். இதை வைத்து கமல்ஹாசனும், கிரேஸியும் இணைவது என்று தகவல்கள் பரவுகின்றன.

எப்படி இருந்தால் என்ன, ரசித்துப் படம் கொடுக்க கிரேஸி மோகனும், கமல்ஹாசனும் தயார் என்றால் வெடித்துச் சிரிக்க ரசிகர்களும் தயார்தான்...!

சிம்பு, ஜீவா இனி 'நண்பேண்டா.'...!

சிம்புவும், ஜீவாவும் தங்களது மோதல் பூசலை கைவிட்டு விட்டதாக தெரிகிறது. இருவரும் ட்விட்டர் மூலம் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

திரையுலகில் வழக்கமாக நடிகைகளுக்கு இடையேதான் முட்டல் மோதல் அதிகம் இருக்கும். ஆனால் சமீப காலமாக நடிகர்களுக்குள்ளும் இது அதிகரித்துள்ளது. விஜய் அஜீத் மோதல், தனுஷ் சிம்பு மோதல் நாடறிந்த ஒன்று.

இந்த வரிசையில் சமீபத்தில் வெடித்த மோதல் சிம்பு- ஜீவா இடையிலானது. கே.வி.ஆனந்த் இயக்கிய கோ படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தவர் சிம்பு. சில பல காரணங்களுக்காக அது ரத்தாகி, ஜீவா ஹீரோவானார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகவே, சிம்பவுக்கு டென்ஷனாகி விட்டது.

இதையடுத்து அவருக்கும் ஜீவாவுக்கும் இடையே மோதல் மூண்டது. இருவரும் தனித் தனியே ஒருவரை ஒருவர் விமர்சித்து வந்தனர். இந்த மோதலில் ஜீவாவுக்கு எதிரான நிலையை எடுத்தார் நடிகர் ஜெய். இவர் சிம்புவுக்கு தோஸ்த் என்பதால் இந்த ஸ்டாண்ட்.

இந்த நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் பாராட்டித் தள்ளியுள்ளனர் ட்விட்டர் மூலம்.

சிம்பு தனது ட்விட்டரில் எழுதியுள்ள லேட்டஸ்ட் செய்தியில், நண்பன் பட டிரெய்லர் பார்த்தேன். அதில் ஜீவாவின் நடிப்பு பிரமாதம். தோற்றமும் சிறப்பாக உள்ளது. படததில் சிறப்பாக நடித்ததற்காகவும், பிறந்த நாள் வாழ்த்துகளையும் ஜீவாவுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து ஜீவா தேங்ஸ் சொல்லி சிம்புவுக்குப் பதிலளித்துள்ளார். அதில், பாராட்டுக்கு நன்றி, விரைவில் சந்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ஜீவா.

அப்படீன்னா, இரண்டு பேரும் இனி 'நண்பேன்டா'வா...?

நத்தம் கோர்ட்டில் நடிகை குஷ்பு ஆஜர்!

Tuesday, January 10, 2012
நத்தம்:தேர்தல் பிரசாரத்தின்போது பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை குஷ்பு இன்று காலை நத்தம் கோர்ட்டில் ஆஜரானார். சட்டசபைத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் விஜயனை ஆதரித்து கடந்த ஆண்டு மார்ச் 27ம் தேதி நத்தம் ரவுண்டானா அருகே நடிகை குஷ்பு பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகக் கூறி நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இன்று ஆஜராகும்படி நடிகை குஷ்புக்கு நத்தம் முன்சீப் கோர்ட் ஏற்கெனவே சம்மன் அனுப்பியி ருந்தது. அதன்பேரில் இன்று காலை 10.15 மணிக்கு நடிகை குஷ்பு நத்தம் முன்சீப் கோர்ட்டில் ஆஜரானார். இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.