Saturday, February 25, 2012

நானும் அரசியல்வாதிதான்; தேர்தலில் போட்டியிடுவேன் :நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி!!!

Saturday, February 25, 2012
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார் நடிகர் வடிவேலு. அத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது முதல் நடிகர் வடிவேலும் சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டுவிட்டதாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் சங்கரன்கோவிலில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்வீர்களா? என்று வடிவேலுவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு,‘’வடிவேலுவுக்கு அரசியல் எல்லாம் தேவையா என்று சிலர் கேட்கிறார்கள்.

ஓட்டுப்போடும் அத்தனை பேரும் அரசியல்வாதிகள்தான். ஓட்டுப்போடும் மக்களில் நானும் ஒருவன் என்பதால் நானும் அரசியல்வாதிதான்.என் தாய் சரோஜினி, உடல் நலக்குறைவு காரணமாக மதுரை ஐராவத நல்லூரில் மருத்துவமனையில் உள்ளார்.

அதனால் என்னால் சங்கரன்கோவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடமுடியவில்லதேர்தலில் போட் டியிடுவீர்களா என்று என்னை கேட்கிறார்கள்.

காலமும், சூழ்நிலையும் நிர்ப்பந்திக்கும் போது மக்களை சந்திப்பேன். நான் யாருக்கும் பயந்து ஓடி ஒளிந்து கொள்ளமாட்டேன்.

தீவிர அரசியலில் குதிப்பேன். அரசியலுக்கு நான் வரக்கூடாது என்று சொல்வது அபத்தம். நிச்சயமாக அரசியலுக்கு வந்தே தீருவேன். என்னை யாரும் தடுக்க முடியாது.

திரையுலகம் என்னை ஒதுக்கி ஓரங்கட்டிவிட்டதாக சொல்கிறார்கள். விரைவில் நான் கதாநாயகனாக நடிக்கும் புதுப்பட அறிவிப்பு வெளிவரும்’’ என்று கூறியுள்ளார்.

புலிகளை மையப்படுத்தி உருவாகும் 'ஜாஃப்னா' படத்தில் ஜான் ஆபிரகாம்!!!

Saturday, February 25, 2012
புலிகளை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய இந்திப் படத்தில் நடிக்கிறார் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம்.

இந்தப் படத்துக்கு ஜாஃப்னா (யாழ்ப்பாணம்) என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தை அவரே தயாரிக்கிறார்.

பிரபல இயக்குனர் ஷூஜித் ஸிர்கர் இயக்குகிறார். இந்திய புலனாய்வு அதிகாரியாக இந்தப் படத்தில் நடிக்கிறார் ஜான் ஆபிரகாம்.

இலங்கையின் அரச படைகளுக்கும் புலிகளுக்கும் நடந்த மோதல்கள் மற்றும் இந்திய அமைதி காக்கும் படை 'ஜாஃப்னா' பகுதிகளில் நிறுத்தப்பட்ட போது புலிகளுடன் ஏற்பட்ட மோதல்கள் குறித்தும் இந்தப் படத்தில் காட்சிகளை வைப்பார்கள் எனத் தெரிகிறது.

அப்படி காட்சிகள் இருக்கும்பட்சத்தில் இந்தப் படம் கடும் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும். காரணம், இந்திய அமைதி காக்கும் படைதான் மிகப் பெரிய பாதிப்பை இலங்கை உண்டாக்கி விட்டதாக புலிகள் குற்றம்சாட்டி, போரிடவும் செய்தனர்.

போர் நடந்த பகுதிகளிலேயே இந்தப் படத்தை எடுக்கப் போவதால், அடிக்கடி யாழ்ப்பாண், வன்னிப்பகுதிகளை பார்த்துவிட்டு வருகிறாராம் ஜான்.

3 படத்தில் ரஜினி? - தனுஷ் குடும்பத்தின் பலே டெக்னிக்!!!

Saturday, February 25, 2012
தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவரும் படத்து வைக்கப்பட்டு '3' என்ற தலைப்புக்கு அர்த்தம் என்ன என்ற 'ஆராய்ச்சி' ஆரம்பமாகிவிட்டது.

கொலைவெறி என்ற பாடல் மூலம் உலகம் முழுக்க பேசப்படும் படமாகிவிட்ட, 3-ல் தனுஷ் - ஸ்ருதி ஜோடியாக நடித்துள்ளனர்.

படத்தில் முக்கியமான ஒரு பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி தோன்றுவார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் பின்னர் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யாவே அதை மறுத்திருந்தார்.

இப்போது படம் முடிந்து வெளியீட்டு உரிமை பேரங்கள் நடக்கும் நிலையில் மீண்டும் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார் என்ற செய்திகள் மீண்டும் கிளம்பியுள்ளன.

இந்த முறை செய்தியை யாரும் மறுக்கவில்லை. மாறாக படத்தின் தயாரிப்பாளரான கஸ்தூரி ராஜா, படத்தில் இடம்பெற்றுள்ள 3வது முக்கிய நடிகர் குறித்து எதுவும் சொல்ல மாட்டோம். அது சஸ்பென்ஸ் என்று கூறியுள்ளார்.

நல்ல பிஸினெஸ் டெக்னிக் சாரே... ரஜினியே உங்ககிட்ட ட்யூஷன் கத்துக்கணும் போங்க!

என் படத்தில் இனி தனுஷ் கிடையாது : கஸ்தூரிராஜா பேட்டி!!!

Saturday, February 25, 2012
தனுஷை வைத்து இனி படம் இயக்க மாட்டேன்’ என்றார் கஸ்தூரி ராஜா. இதுகுறித்து அவர் கூறியதாவது: என் மருமகள் ஐஸ்வர்யா தனுஷ் ‘3’ படம் மூலம் இயக்குனர் ஆகி இருக்கிறார். இப்படத்தை நான் தயாரிக்கிறேன். அவரது கணவரும் எனது மகனுமான தனுஷ் நடிக்கிறார். உதவி இயக்குனராக ஐஸ்வர்யா பணியாற்றி இருக்கிறார். அந்த அனுபவம் இப்படத்தில் தெரிகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் மார்ச் மாதம் படம் வெளியாகிறது. இந்தியில் 600 பிரின்ட் போடப்படுகிறது. தமிழில் 300 முதல் 400 பிரின்ட் போடப்படும். ‘3’ என்றால் என்ன என்கிறார்கள். தனுஷ், ஸ்ருதிஹாசன் இருபாத்திரம் 3வது கதாபாத்திரம் யார் என்பதுதான் 3க்கு அர்த்தம். இந்த படத்தில் ரஜினி நடிக்கவில்லை. என் இயக்கத்தில் ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் தனுஷை ஹீரோவாக அறிமுகப்படுத்தினேன், அதேபோல் என் பேனரில் செல்வராகவனை இயக்குனராக அறிமுகப்படுத்தினேன். இப்போது ஐஸ்வர்யாவை அறிமுகப்படுத்தி உள்ளேன். புதுமுகங்களை வைத்துத்தான் நான் படம் இயக்குகிறேன். அந்த வகையில் இனி தனுஷை வைத்து இயக்க மாட்டேன். புதுமுகங்களை வைத்து அசுரகுலம் என்ற படம் இயக்குகிறேன். அடுத்து மலையாளத்தில் ஒரு படம் இயக்க உள்ளேன். தமிழ் கலைஞர்கள் உலகப் புகழ்பெற்றாலும் அவரை பாராட்டும் எண்ணம்மட்டும் இங்கு வருவதில்லை. தனுஷ் பாடிய ‘ஒய் திஸ் கொலைவெறி’ பாடலுக்கு உலகம் முழுவதும் பாராட்டு கிடைக்கிறது. ஆனால் தமிழ் கலைஞனான அவனை இங்குள்ளவர்கள் பாராட்டாதது வருத்தம் அளிக்கிறது.

சைவ இயக்கம் எகிறும் பிஸ்னஸ்!!!

துள்ற யூத் படம் எடுத்த இயக்கம் திடீர்ன்னு மல்லுவுட் படம் இயக்கப்போறதா சொல்றாராம்... சொல்றாராம்... யூத் படம்னாலே சகட்டு மேனிக்கு ஜிவ்வான கிக் சீன் வெக்கறவரு மலையாள படம் எடுத்தா எப்படி இருக்கும்னு இப்பவே சப்புகொட்ட ஆரம்பிச்சிட்டாங்களாம்... யாரும் ரொம்ப கற்பனை பண்ணிக்காதீங்க நான் இயக்கப்போறது பேமலி சென்டிமென்ட் படம்தானு இயக்கம் சொல்றாராம். திடீர்ன்னு ஏன் இயக்கம் இப்படி சைவமா மாறிட்டாருன்னு கேக்கறாங்களாம்... கேக்கறாங்களாம்...

சூப்பர் ஹீரோவோ கோச்சு... படத்துக்கு நடிகர்கள் பட்டியல் நீள்றாப்ள பட்ஜெட்டும் நீண்டுகிட்டே போகுதாம்... போகுதாம்... படத்துக்கு எத்தன ‘சி’ செலவாகும்னு பட்ஜெட் போடப் போட படத்தோட பிஸ்னஸும் ‘சி’ கணக்குல எகிறிட்டே போகுதாம்... பலபேர் போட்டில குதிச்சதால யாருக்கு படத்த தர்றதுன்னு தெரியாம திணறிட்டிருக்காங்களாம். யார் டாப் ரேங்க்ல கேக்கறாங்களோ அவங்கள பிக்ஸ் பண்ணுங்க. இதுல பிரண்ட்ஸ், பாவம்ல்லாம் பாக்காதீங்கனு பைனான்ஸ் டிபார்ட்மென்ட் அட்வைஸ் கொடுத்திருக்காம்...அட்வைஸ் கொடுத்திருக்காம்...

டோலிவுட் மோகனான வில்லன் ஆக்டரோட மகன் நடிக்கற படத்துக்கு ‘என்’ என்ற எழுத்துல ஆரம்பிக்கற செல் கம்பெனி பேர் வச்சாங்களாம்... வச்சாங்களாம்... போஸ்டர் எல்லாம் ரெடிபண்ணி ஆடியோ ரிலீஸுக்கு தயாரானப்ப திடீர்னு டைட்டிலுக்கு செல் கம்பெனி எதிர்ப்பு தெரிவிச்சிடுச்சாம். சண்டை போடறதவிட ஒதுங்கறதே மேலுன்னு முடிவு பண்ண தயாரிப்பு படத்தோட பேற ‘என்’ ல தொடங்கனாலும் வேற தொனில உச்சரிக்க மாதிரி மாத்திட்டாங்களாம்... மாத்திட்டாங்களாம்...
Saturday, February 25, 2012
ரசிகர்களின் சில்மிஷத்தில் இருந்து தப்பிக்க, கோலிவுட் ஹீரோயின்கள் தனியார் செக்யூரிட்டிகளை வாடகைக்கு அமர்த்தி கொள்வது பேஷன் ஆகி வருகிறது.பெரும்பாலான ஹீரோக் கள் ரசிகர்களின் அன்புத்தொல்லையில் சிக்கும்போது தப்பி வெளியேறிவிடுகின்றனர். ஹீரோயின்களால் அது சாத்தியமில்லை. பொது நிகழ்ச்சிக்கு வரும் ஹீரோயின்களிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் வாங்குவதுபோல் நெருங்கி இடுப்பை கிள்ளுவது, கைகுலுக்குவது போன்ற சில்மிஷங்களில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் தெலுங்கு பட ஷூட்டிங்கின்போது ஸ்ரேயாவின் இடுப்பை ஒரு ரசிகர் கிள்ளி சில்மிஷத்தில் ஈடுபட்டார். அதேபோல் கோவையில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற ஹன்சிகாவை ரசிகர்கள் சூழந்துகொண்டனர். அவரை போலீசார் மீட்டனர். இதுபோன்ற இக்கட்டான வேளையில் தங்களை காத்துக்கொள்ள ஹீரோயின்கள் தனியார் செக்யூரிட்டிகளை வாடகைக்கு அமர்த்திக்கொள்கின்றனர். பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது நமீதா, செக்யூரிட்டி வளையத்துக்குள் நடந்தபடி வருவார். அவரை ரசிகர்கள் நெருங்கவோ, சில்மிஷம் செய்யவோ முடியாது. இதுபற்றி நமீதா கூறும்போது,‘‘பொது இடங்களில் ரசிகர்களின் சில்மிஷத்தில் இருந்து தற்காத்து கொள்ள தனியார் செக்யூரிட்டிகள் அவசிய தேவையாகிறது. இதற்காக ரூ.20 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். அதுவொன்றும் பெரிய கட்டணமில்லை’’ என்றார். ஹன்சிகாவிடம் கேட்டபோது,‘‘ரசிகர்கள் என்றால் பிரியமான ஹீரோயின்களை நெருக்கத்தில் பார்க்க ஆர்வம் காட்டுவார்கள். அதில் தப்பில்லை. அதிலிருந்து மீள்வதற்கு போலீசை நாடலாம். தனியார் செக்யூரிட்டி வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. நம்முடைய ரகசியங்களை வெளியிடுபவர்கள் அவர்களாகத்தான் இருப்பார்கள்’’ என்றார்.

சினிமா தியேட்டரில் அமலாபால் கண்ணீர்!!!

Saturday, February 25, 2012
சினிமா தியேட்டருக்கு சென்ற அமலாபால் கண்ணீர்விட்டார். இதுபற்றி அவர் கூறியதாவது: ‘மைனா’ படத்தில் நடித்தபோது ஏற்பட்ட உணர்வு இப்போது லவ் ஃபெயிலியர் (காதல் தோல்வி) என்ற தெலுங்கு படத்தில் நடித்தபோது ஏற்பட்டிருக்கிறது. தமிழில் ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. ஐதராபாத்தில் உள்ள தியேட்டருக்கு சமீபத்தில் பட குழுவினருடன் சென்று படம் பார்த்தேன். படம் முடிந்ததும் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி ‘பார்வதி வி லவ் யு’ என்றார்கள். அதைக்கண்டு என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. ‘லவ் ஃபெயிலியர்’ என்ற தலைப்பும், படமும் என் மனதில் இடம்பிடித்திருக்கிறது. பார்வதி என்று நான் ஏற்றிருக்கும் பாத்திரம் ஒவ்வொருவரும் தனது பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்ணை பார்ப்பதுபோல் உணர்வதாக கூறுகிறார்கள். தோல்வி என்ற வார்த்தை என் சினிமா வாழ்க்கையில் வெற்றி என்ற இனிப்பை கொடுத்திருக்கிறது. இவ்வாறு அமலா பால் கூறினார்.

ரஜினிக்கு ஜோடி யார்? தீபிகா-கேத்ரினா லடாய்!

Saturday, February 25, 2012
ரஜினிக்கு ஜோடியாக முதலில் என்னைத்தான் அழைத்தார்கள் என்று தீபிகா, கேத்ரினா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க முதலில் கேத்ரினா கைப்பிடம் இயக்குனர் சவுந்தர்யா கால்ஷீட் கேட்டார். அதில் பிரச்னை ஏற்பட்டதால் தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தங்களுக்கு அளித்த கால்ஷீட்டை ரத்துசெய்துவிட்டு ரஜினி படத்துக்கு கால்ஷீட் தந்துவிட்டதாக பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் தீபிகா மீது புகார் அளித்தார். இப்பிரச்னை சுமூகமாக முடிக்க பேச்சு நடக்கிறது. இந்நிலையில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க முதலில் யாருக்கு அழைப்பு வந்தது என்பதில் கேத்ரினா-தீபிகாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ‘ரஜினி ஜோடியாக நடிக்க சவுந்தர்யா என்னிடம்தான் முதலில் பேசினார். ஷாருக்கான் படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருந்ததால் நடிக்க முடியாமல்போனது. அதன் பிறகுதான் அந்த வாய்ப்பு தீபிகாவுக்கு சென்றது’ என்று கேத்ரினா கைப் கூறி இருக்கிறார்.

தன்னை மட்டம்தட்டுவதுபோல் பேசிய கேத்ரினாவுக்கு தீபிகா சூடான பதில் அளித்துள்ளார், ‘கேத்ரினாவுக்கு முன்னதாகவே ராணா படத்தில் ரஜினி ஜோடியாக என்னைத்தான் ஒப்பந்தம் செய்தனர். இப்போதும் நான்தான் ரஜினிக்கு ஜோடி’ என்றார். இவர்களின் மோதலுக்கு காரணம் பாலிவுட் இளம் ஹீரோ ரன்பீர்கபூர்தான் என்று கூறப்படுகிறது. இவருடன் நெருக்கமாக பழகிவந்தார் தீபிகா. திடீரென்று கேத்ரினாவுடன், ரன்பீர் நெருக்கமானதை தொடர்ந்து அவரைவிட்டு தீபிகா விலகினார். இந்நிலையில் மீண்டும் தீபிகா, ரன்பீருக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டிருக்கிறது. ரன்பீருக்கு பிடித்தமானவர்கள் யார் என்பதை நிரூபிக்கும் போட்டியின் முதல் கட்டமாகவே இரு ஹீரோயின்கள் மத்தியிலும் ரஜினி பட ஜோடி விவாகாரம் வெடித்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘நோ’ அம்மா வேஷம்: மேக்னா ராஜ் கறார்!

Saturday, February 25, 2012
மேக்னா ராஜ் கூறியதாவது: ‘காதல் சொல்ல வந்தேன்’, ‘உயர்திரு 420’ படத்துக்கு பிறகு சரத்குமாருடன் நான் நடித்துள்ள ‘நரசிம்மன் ஐபிஎஸ்’ என்ற படம் வெளியாகிறது. இது மலையாளத்தில் ‘அச்சன்டே ஆண்மக்கள்’ என்ற பெயரில் உருவானது. கோவை போலீஸ் அதிகாரியாக சரத் நடிக்கிறார். டிஜிபி மகளாக கல்லூரி மாணவி வேடம் ஏற்கிறேன். கல்லூரியில் படிக்கும்போதே சரத்குமாரை காதலிக்கிறேன். பெரியவர்கள் சம்மதத்துடன் திருமணம் நடக்கிறது. அதன்பிறகு எங்கள் வாழ்க்கை எப்படி அமைகிறது என்பது கதை. 2 வயது குழந்தைக்கு தாயாக வேடம் ஏற்றிருக்கிறேன். ‘அம்மா வேடத்தில் நடிக்கிறீர்களே’ என்கிறார்கள். நடிகை என்றால் எல்லா பாத்திரத்திலும் தன்னை நிரூபிக்க வேண்டும். இதில் நடிப்புக்கு அதிக வாய்ப்பு உள்ளது. 2 வயது குழந்தைக்குத்தான் தாயாக நடிக்கிறேன். எந்த ஹீரோயினுக்கும் அம்மாவாக நடிக்கவில்லை, அப்படி நடிக்கவும் மாட்டேன். ஏனென்றால் நானே ஹீரோயின்தான். இப்படத்தை சந்திரசேகர் இயக்கி இருக்கிறார். ஜாஸிகிப்ட் இசை. அடுத்து ‘நந்தா நந்திதா’ வெளியாக உள்ளது.