Thursday, February 23, 2012

கமலுடன் நடிச்சா எனக்கு வயசாயிடுச்சின்னு அர்த்தமா? - சீறும் த்ரிஷா!!!

Thursday, February 23, 2012
கமல்ஹாஸனின் மன்மத அம்பு படத்தில் நடித்ததால் தன்னை வயதான நடிகை என்று நினைப்பது தவறு என்கிறார் த்ரிஷா.

வயது முதிர்ந்த நடிகர்களுடன் நடித்துவிட்டதால் திரிஷாவுடன் ஜோடி சேர இளம் நடிகர்கள் மறுபப்தாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து த்ரிஷாவிடம் கேட்டபோது, பொரிந்து தள்ளிவிட்டார். அவர் கூறுகையில், "நடிகர், நடிகைளுக்கு வயது என்பது பிரச்சினையே இல்லை. நான் வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லா ஹீரோக்களுடனும் நடிக்கிறேன். நடிகைகள் கவனிக்க வேண்டியது கதையும், கேரக்டரும்தான். இரண்டும் சிறப்பாக அமைந்தால் யாருடன் வேண்டுமானாலும் நடிக்கலாம்.

50 வயதை தாண்டிய கமல், சிரஞ்சீவி, நாகார்ஜுனா போன்றோருக்கு ஜோடியாக நடித்துள்ளேன். இதை வைத்து என்னை வயதான நடிகையாக பார்ப்பது தவறு.

அஜீத், பவன் கல்யாண், ரவிதேஜா போன்ற 40 வயதுக்கும் மேற்பட்ட நடிகர்களுடனும் விஜய், பிரபாஸ், மகேஷ்பாபு போன்ற 30 வயதுக்கும் மேற்பட்ட நடிகர்களுடனும் நடித்து உள்ளேன்.

அத்துடன் சிம்பு, ஜூனியர் என்.டி.ஆர். போன்ற 20 வயதுக்கு மேற்பட்ட இளம் ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்துள்ளேன். இளம் வயதினருடன்தான் நடிப்பேன். மூத்தவர்களுடன் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் நிபந்தனைகள் விதிப்பது இல்லை. அப்படி நிபந்தனை விதித்திருந்தால் நல்ல படங்களை இழந்திருப்பேன்.

சீனியர்களுடன் நடித்த நடிகைகளை வயதான நடிகையாக பார்ப்பது தவறு," என்றார்.

மார்ச் 5-ம் தேதி ஒரு கல் ஒரு கண்ணாடி இசை!!!

Thursday, February 23, 2012
உதயநிதி ஸ்டாலின் - ஹன்ஸிகா - சந்தானம் நடிப்பில், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பைக் கிளறியுள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் இசை வரும் மார்ச் 5-ம் தேதி வெளியாகிறது.

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தைத் தந்த ராஜேஷின் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வரும் இந்தப் படத்துக்காக தயாரிக்கப்பட்ட ட்ரெயிலர் ஏற்கெனவே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த ட்ரெயிலரில் சந்தானத்தின், "வாலிப வயோதிக அன்பர்களே..." டயலாக்கை கேட்ட உடனே குபுக்கென்று சிரிக்கிறார்கள் மக்கள்.

ஐந்து பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. ராஜேஷ் இயக்கிய இரு படங்களுக்கும் யுவன்தான் இசையமைத்தார். இப்போது முதல்முறையாக ஹாரிஸ் வந்திருக்கிறார்.

டாப்ஸி ஷூட்டிங்கில் ரகளை படப்பிடிப்பு ரத்து!!!

Thursday, February 23, 2012
டாப்ஸி நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பில் ரகளை ஏற்பட்டதால் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது. ரவிதேஜா, டாப்ஸி நடிக்கும் தெலுங்கு படம், 'தருவு'. சிவகுமார் இயக்குகிறார். இதன் ஷுட்டிங் கடந்த சில நாட்களாக ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகம் அருகே நடந்தது. வழக்கம் போல் இன்றும் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் செட் போட்டு ஷூட்டிங் நடந்து கொண்டிருந் தது. அப்போது அங்கு வந்த தனித்தெலுங்கானா ஆதரவாளர்கள் கோஷம் போட்டப்படி, செட்டுக்குள் புகுந்தனர். கற்களால் அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தினர். இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

படத்திற்கு தேவைப்பட்டால் தெருவில் நிர்வாணமாகவும் ஓடுவேன்: மாதவன்!!!

Thursday, February 23, 2012
படத்திற்கு தேவைப்பட்டால் தெரிவில் நிர்வாணமாகவும் ஓடுவேன் என்று நடிகர் மாதவன் தெரிவி்த்துள்ளார்.

நடிகர் மாதவன், பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவுடன் சேர்ந்து ஜோடி பிரேக்கர்ஸ் என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். அந்த படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இந்த படம் குறித்து மாதவன் கூறியதாவது,

ஜோடி பிரேக்கர்ஸ் படத்தில் எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரம் மிகவும் பிடித்துள்ளது. நல்ல பையனாக நடித்து, நடித்து போர் அடித்துவிட்டது. அதனால் இந்த படத்தில் எனது கேரக்டர் சுவாரஸ்யமாக உள்ளது. செய்யும் தொழிலே தெய்வம் என்று நினைப்பவன் நான். படத்திற்கு தேவைப்பட்டால் தெருவில் நிர்வாணமாகக் கூட ஓடுவேன்.

ஜோடி பிரேக்கர்ஸ் படத்தில் வரும் முத்தக் காட்சிகளில் நடிக்க எனக்கு கஷ்டமாக இல்லை என்றார். அதற்கு மாதவனின் மனைவி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

ஆண்டுக்கொரு படம் நடித்தால் போதும் என்று நினைத்து தனது கொள்கையில் உறுதியாக இருப்பவர் மாதவன். இப்படி வருடத்திற்கு ஒரு படம் நடித்தால் குடும்பத்தை எப்படி ஓட்டுவது என்று அவரிடம் கேட்டதற்கு, எனக்கு பணக் கஷ்டம் எதுவும் கிடையாது. விளம்பரப் படங்களில் நடிப்பதால் அதன் மூலம் எனக்கு நல்ல வருமானம் வருகிறது என்றார்.

சிவாஜி, எம்.ஜி.ஆர் தலைப்புகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்!!!

Thursday, February 23, 2012
சிவாஜி கணேசன் நடிப்பில் 1964-ல் ரிலீசான படம், 'கர்ணன்'. மறைந்த பி.ஆர்.பந்துலு இயக்கியிருந்தார். இந்தப்படத்தை நவீன தொழில்நுட்பங்களுடன் புதுப்பித்து, திவ்யா பிலிம்ஸ் சாந்தி சொக்கலிங்கம் வெளியிடுகிறார். இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. சிவாஜி மகன் ராம்குமார் வெளியிட, எல்.சுரேஷ் பெற்றார். நிகழ்ச்சியை ஒய்.ஜி.மகேந்திரனுடன் தொகுத்து வழங்கிய சேரன் பேசியதாவது: நடிகர் திலகத்தின் சாயல் இல்லாமல் இங்கே யாரும் நடிக்க முடியாது. 48 வருடங்களுக்கு முன் வந்த 'கர்ணன்', பிரமாண்டங்களின் உச்சம். அன்றைக்கு சினிமாவை மட்டுமே நேசித்தவர்கள் சேர்ந்து உருவாக்கிய படம் என்பதால்தான், இன்றும் காலத்தைக் கடந்து நிற்கிறது. இந்த வரிசையில் 'புதிய பறவை', 'தெய்வ மகன்', 'உத்தம புத்திரன்', 'தில்லானா மோகனாம்பாள்' படங்களையும் புதுப்பித்து, வருங்கால சந்ததியினருக்கு சிவாஜியின் சாதனைகளை சொல்ல வேண்டும். சிவாஜி மகன் ராம்குமாரிடம் கோரிக்கை வைக்கிறேன். இனி சிவாஜி படங்களின் தலைப்புகளை, வேறு யாரும் வைக்க அனுமதிக்கக் கூடாது. அதுபோல், எம்.ஜி.ஆர் பட தலைப்புகளை மீண்டும் வைக்கவும் அனுமதிக்கக் கூடாது என்பதை, சினிமா துறையினருக்கு வேண்டுகோளாக வைக்கிறேன்.
இவ்வாறு சேரன் பேசினார். விழாவில், கமலா தியேட்டர் வி.என்.சிதம்பரம், விநியோகஸ்தர் சங்க தலைவர் டி.ஏ.அருள்பதி, கலைப்புலி ஜி.சேகரன், வி.சி.குகநாதன், துஷ்யந்த் உட்பட பலர் பங்கேற்றனர். மதுவந்தி அருண் நன்றி கூறினார்.

வாளமீன் பாடலில் நடித்த இளம் காமெடியன் முத்துராஜா மரணம்!

Thursday, February 23, 2012
மிஷ்கினின், "சித்திரம் பேசுதடி" படத்தில் வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும்... பாடல் மூலம் பிரபலமானவர்கள் 3 பேர். ஒருவர் மாளவிகா, இன்னொருவர் அந்தப்பாட்டை பாடிய கானா உலகநாதன், மற்றொருவர் கானா உலகநாதன் பாடும்போது அவருக்கு மைக் பிடித்து வருபவர். அவர் பெயர் முத்துராஜா. அந்தபாட்டு மூலம் பிரபலமான முத்துராஜா தொடர்ந்து களவாணி உள்ளிட்ட பல்வேறு படங்களில் காமெடிகளில் கலக்கி வந்தார். சமீபத்தில் தான் அவருக்கு திருமணம் ஆனது. திருமணம் முடிந்து, மனைவியுடன் தேனி மாவட்டம், காமயக் கவுண்டம்பட்டியில் தங்கி இருந்தார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வீட்டு மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்துள்ளார். அப்போது தவறி விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டு கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். இதனையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலை மோசமாகவே, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. மறைந்த முத்துராஜாவின் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரில் நடக்கிறது.