Saturday, February 11, 2012

பில்லா 2.டூப் இல்லாமல் ரியலாக நடித்த அஜித்!!!

அஜித், பார்வதி ஒமணக்குட்டன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் பில்லா 2. சக்ரி இயக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மார்ச் மாதம் பாடல் வெளியீட்டு விழா நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். பில்லா 2 படத்தினை எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறார்களாம். ஒவ்வொரு காட்சிக்கும் பல கோடிகளை செலவு செய்து காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அஜித் மற்றும் வில்லன்கள் மோதும் காட்சியை ஜார்ஜியாவில் உள்ள பனிமலையில் படமாக்கி இருக்கிறார் சக்ரி. இது வரை இந்திய சினிமாவில் அப்படி ஒரு சண்டைக்காட்சியை பார்த்து இருக்க முடியாது என்கிறது படக்குழு. அதுபோலவே ஆங்கில படங்களில் வரும் ஹெலிகாப்டர் சண்டைக்காட்சியை போன்று பில்லா 2 படத்திலும் ஒரு சண்டைக்காட்சி இருக்கிறது. அந்த சண்டைக்காட்சிக்கு பல கோடிகளை செலவு செய்து இருக்கிறார்கள். ஹெலிகாப்டர் சண்டைக்காட்சிகளில் ரிஸ்க் இருந்தும் டூப் எல்லாம் வேண்டாம் என்று கூறி விட்டு தானே நடித்து கொடுத்து இருக்கிறார்

நயன்தாராவை ஏமாற்றி விட்டார்கள்: குடும்பத்தினர் புலம்பல்!!!

நயன்தாரா- பிரபு தேவாவுக்கும் இடையேயான காதல் முறிந்து பிரிந்துள்ளனர். பிரபு தேவா திருமணத்துக்கு சம்மதிக்காததால் பிளவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திருமணத்துக்காகவே நயன்தாரா சினிமாவுக்கு முழுக்கு போட்டார். இந்துவாகவும் மதம் மாறினார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிரபுதேவா திருமணத்துக்கு தயாராக இல்லை என்பது அவருக்கு தாமதமாகவே தெரிந்தது. இதையடுத்து அவரை உதறிவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். நாகார்ஜுனா ஜோடியாக தெலுங்கு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அஜித்துடனும் தமிழ் படமொன்றில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் நயன்தாரா குடும்பத்தினர் பிரபு தேவா மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். நயன்தாராவின் ஊரான கேரள மாநிலம் திருவல்லாவில் வசிக்கும் அவரது சித்தி, சித்தப்பா மற்றும் உறவினர்கள் கூறுகையில்,

பிரபு தேவா எங்கள் குடும்பத்து பெண் நயன்தாராவை ஏமாற்றி விட்டார். அவள் நாங்கள் தூக்கி வளர்த்த பெண். இப்படி அவள் நிலைமை ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை. நயன்தாராவுக்கு பிடிவாத குணம் ஜாஸ்தி என்கின்றனர்.அது தவறு. அவள் வெகுளியானவள். முதலில் சிம்புவிடம் ஏமாந்தாள். இப்போது பிரபு தேவாவிடம் ஏமாந்து இருக்கிறாள். சிம்பு வல்லவன் படம் எடுத்த போது பண நெருக்கடி ஏற்பட்டது அப்போது அவருக்கு நயன்தாரா உதவினார். ஆனாலும் சிம்பு ஏமாற்றி விட்டார். அவரை பிரிந்து பிரபு தேவாவிடம் வந்ததும் இனியாவது சந்தோஷமாக இருப்பாள் என்று எதிர்பார்த்தோம். இங்கும் அவள் நிலைமை பரிதாபமாகி உள்ளது. பிரபு தேவாவை நயன்தாரா ரொம்ப நம்பினாள். ரம்லத்தை பிரபு தேவா விவாகரத்து செய்வதற்கு பணம் தந்தது யார் என்பது அவரவர் மனசாட்சிக்கு தெரியும். பிரபு தேவா இயக்கிய எங்கேயும் காதல் படத்துக்காகவும் நயன்தாரா பணம் பறி போனது. அவர்களுக்கு பணம்தான் முக்கியமாக இருந்ததே தவிர நயன்தாராவின் பாசம் அல்ல. நயன்தாரா இனி மேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று சொன்னதுதான் அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்து இருக்கும். எல்லா பணத்தையும் ஏமாற்றி வாங்கிவிட்டனர். இப்போது எதுவும் இல்லை என்று தெரிந்ததும் கழற்றி விட்டு விட்டார்கள். நயன்தாரா சினிமாவை விட்டு வந்தால் எங்கள் குடும்பத்திலேயே நல்ல பையனை பார்த்து திருமணம் செய்து வைக்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில், சினேகா, ஆன்டிரியா!!!

உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமாகும் படம், ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’. ராஜேஷ் இயக்குகிறார். உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். ராஜேஷின் முந்தைய இரு படங்களைப் போலவே காமெடிக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்து வருகின்றனர். இதிலும் ஹீரோவுக்கு நண்பனாக வருகிறார் நகைச்சுவை நடிகர் சந்தானம். இவர்கள் தவிர அழகம்பெருமாள், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் முக்கியமான வேடத்தில் நடித்து வருகின்றனர். சிறப்புத் தோற்றத்தில் ஆர்யா நடிக்கிறார். இதனையடுத்து, படத்தில் சினேகா, அண்ட்ரியா ஆகியோரும் சிறப்புத் தோற்றத்தில் வருகின்றனர்.

கார்த்தி நடிக்கும் புதுப்படத்தின் பெயர் என்ன?

சங்கர் தயாள் இயக்கத்தில் 'சகுனி' படத்தை அடுத்து சுராஜ் இயக்கும் புதிய படமொன்றில் கார்த்தி நடிக்க இருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார்.

பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்போது பெயர் சூட்டியிருக்கிறார்கள். 'மூன்று முகம்' படத்தில் காவல்துறை அதிகாரியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருப்பார். அந்ந கேரக்டரின் பெயரைத்தான் இப்படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.

இன்னும் தெரியவில்லையா?, இப்படத்திற்கு 'அலெக்ஸ் பாண்டியன்' என பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

தனுஷ் நடிக்கும் '3' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் '3' படத்தின் ரிலீஸ் தேதியை தனுஷ் நேற்று அறிவித்தார்.

இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாகவும் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கொலவெறி’ பாடல் உலகளவில் பிரபலமாகியுள்ளது.


அவருடைய டுவிட்டர் இணைய பக்கத்தில் இது குறித்து தெரிவித்திருப்பதாவது:

வரும் மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் '3' திரைப்படம் திரைக்கு வரும். மேலும் இப்படம் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும். ஆங்கில சப்டைட்டிலுடன் அயல்நாடுகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.