Sunday, February 12, 2012

ரஜினியின் கோச்சடையான் புதிய ஸ்டில்லை வெளியிட்டார் சௌந்தர்யா!!!

Sunday, February 12, 2012
கோச்சடையான் படத்தில் ரஜினியின் புதிய ஸ்டில்லை இன்று வெளியிட்டுள்ளார் ரஜினியின் மகளும் படத்தின் இயக்குநருமான சௌந்தர்யா ரஜினி.

இந்த ஸ்டில்லில் வில்லேந்தி நிற்கிறார் ரஜினி. இது முழுக்க பர்பார்மென்ஸ் கேப்சரிங் எனும் முறையில் டிசைன் செய்யப்பட்ட ஸ்டில் ஆகும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை படத்தின் முதல் டிசைனை வெளியிட்டனர். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. முதல் ஸ்டில் ஒரிஜினல் ரஜினியைக் கண்முன் நிறுத்தியது.

இப்போது வெளியாகியுள்ள ஸ்டில்லில் உள்ள ரஜினி அனிமேஷன் என்பது தெளிவாகத் தெரிகிறது.

கோச்சடையானில் சரத்குமார், நாஸர், ஜாக்கி ஷெராப், ருக்மினி உள்பட பலர் நடிக்கின்றனர். தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார்.

ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிப்பதில் பெருமை! - சரத்குமார்!!!

Sunday, February 12, 2012
சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையானில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சரத் குமார்.

கோச்சடையானில் தனக்கு அடுத்த முக்கியத்துவம் மிக்க வேடத்தை சரத்துக்கு கொடுத்திருக்கிறார்.

நேற்று நடந்த பிரஸ் மீட்டில் இதுபற்றி சரத்குமார் கூறுகையில், "சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையானில் நான் நடிப்பது பெருமையாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே ரஜினி என்னிடம் ஒரு கதை பற்றி விவாதித்தார். மிக அருமையான கதை அது. ஆனால் அந்தப் படம் எடுக்கப்படவில்லை. ஆனால் கதை இன்னும் என் மனசில் அப்படியே இருக்கிறது.

இப்போது மீண்டும் கோச்சடையான் மூலம் அவருடன் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. அவர் இந்த நாட்டின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார். அவருடன் நடிப்பது மகிழ்ச்சியான விஷயம்," என்றார்.

தொடர்ந்து படம் தயாரிக்க சித்தார்த் முடிவு!!!

Sunday, February 12, 2012
காதலில் சொதப்புவது எப்படி?' மூலம் இணை தயாரிப்பாளரான சித்தார்த், தொடர்ந்து படம் தயாரிக்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, "இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறேன். 'காதலில் சொதப்புவது எப்படி?'க்கு பிறகு தொடர்ந்து படம் தயாரிக்க முடிவு செய்துள்ளேன். இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. படம் இயக்குவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. அது பெரிய பொறுப்பு. நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.

தமிழ் படத்தில் நடிக்க பிருத்விராஜ் மறுப்பு!

Sunday, February 12, 2012
தமிழ் படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டபோது பிருத்விராஜ் மறுத்துவிட்டார்.
அபியும் நானும்’, ‘மொழி’, ‘சத்தம் போடாதே’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்திருப்பவர் பிருத்விராஜ். மலையாள திரையுலகில் முன்னணி நடிகர். மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான படம் ‘டிராபிக்’. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் இயக்குனர் ராஜேஷ் பிள்ளை.
இவர் கூறியதாவது:
டிராபிக்’ என்ற படத்தை தமிழில் ரீமேக் படமாக தயாரிக்கிறார் ராதிகா சரத். ரம்யா நம்பீசன் ஹீரோயினாக நடிக்கிறார். பிருத்விராஜ் தமிழ் படங்களிலும் நடித்திருப்பதால், ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக இருப்பார். அவரையே ஹீரோவாக போடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அவரிடம் கால்ஷீட் கேட்டேன். பிஸியாக இருப்பதாக கூறி மறுத்துவிட்டார். இதனால் வேறு ஹீரோவை தேடிக்கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு ராஜேஷ் பிள்ளை கூறினார்.
இதுபற்றி பிருத்திவிராஜ் தரப்பில் கூறும்போது,‘‘இந்தி படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இதுதவிர மலையாளத்தில் 6 படங்கள் நடித்து வருகிறார். இதனால் தமிழ் படங்களில் நடிக்க கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. தமிழில் இப்படம் உள்ளிட்ட பலர் கால்ஷீட் கேட்டிருந்தனர். அதற்கு நேரம் ஒதுக்கினால் கால்ஷீட் குழப்பம் ஏற்படும் என்பதால் வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார்’’ என்றனர்.

ரூ.80 லட்சம் கேட்கும் காஜல் அகர்வால்!!!

Sunday, February 12, 2012
தமிழ், தெலுங்கு என இருமொழி திரையுலகிலும் முக்கிய நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், தனது சம்பளத்தை ரூ.80 லட்சமாக உயர்த்தி விட்டாராம். தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் நாயகியாக வலம் வந்த அவர் சமீபகாலமாக, தமிழ்சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்களுக்கு தூது விடும் காஜல் அகர்வால் புதுப்பட வாய்ப்பு தரும்படி கேட்டு வருகிறாராம்.

அம்மணியின் கோரிக்கையை ஏற்று பேச்சு கொடுத்த தயாரிப்பாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கிறார்களாம். ஏனாம்...! தெலுங்கு திரையுலம் தனக்கு ரூ.80 லட்சம் சம்பளம் கொடுக்க தயாராக இருக்கிறது. அதே அளவு சம்பளம் கொடுத்தால் நடிக்க தயாராக இருக்கிறேன், என்று கூறி வருகிறாராம் காஜல்.

போலீஸ் பாதுகாப்புடன் பூர்ணா பட ஷூட்டிங்!!!

Sunday, February 12, 2012
போலீஸ் பாதுகாப்புடன் பூர்ணா பட ஷூட்டிங் நடந்தது. வித்தகன், துரோகி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூர்ணா. இவர் நடிக்கும் புதியபடம் ‘கருவாச்சி.’ இப்பட ஷூட்டிங் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது என்றார் இயக்குனர்
கருவாச்சி’ பட இயக்குனர் ஏ.ஆர்.சிவா கூறியதாவது:
ஜாதி, பணம், ஈகோ என காதலுக்கு பல தடைகளை மையமாக வைத்து கதைகள் வந்திருக்கிறது. காதலுக்கு தடையாக காமம் இருக்கிறது என்பதுதான் இப்பட கரு. காமம் வென்றதா? காதல் வென்றதா? என்பது கிளைமாக்ஸ். இதை கேட்கும்போது விரசமான படமோ என எண்ணத்தோன்றும். ஆனால் இது முழுக்க குடும்ப பின்னணியில் உருவாகிறது. அகில் ஹீரோ. பூர்ணா ஹீரோயின். அஜெயன் வில்லன்.
இப்படத்தின் கதையை ரம்ஜான் மாதத்தில் பூர்ணாவிடம் சொன்னேன். நோன்பு முடித்துவிட்டு இரவு 10.30க்கு கதை கேட்க தொடங்கியவர் அதிகாலை 3 மணிவரை கேட்டார். உடனே நடிக்க ஒப்புதல் தந்தார். சேலம் பின்னணியில் கதை நடக்கிறது. சமீபத்தில் அங்குள்ள கண்ணன்குறிச்சி பஸ்நிலையம் அருகே ஷூட்டிங் நடந்தபோது 2 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் கூடி விட்டனர். அசம்பாவிதம் எதுவும் நடக்கக்கூடாது என்பதற்காக போலீஸ் பாதுகாப்பு கேட்டிருந்தோம். அவர்கள் பாதுகாப்புடன் ஷூட்டிங் நடந்தது. ஜெயஸ்ரீ தயாரிப்பு. ஜோஸ்வா ஸ்ரீதர் இசை.

அதர்வாவின் அதிரடி ஆரம்பம்...!!!

Sunday, February 12, 2012
தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்களில் கல்லூரி மாணவனாகவே நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் காலம் சென்ற நடிகர் முரளி. அவரது மகன் அதர்வா பாணா காத்தாடி படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே அப்பாவை போலவே இயல்பான நடிப்பால் அனைவராலும் பாராட்டு பெற்றார். இவர் இப்போது அமலாபாலுடன் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் ஐ.டி., ‌வேலை பார்ப்பவராக நடித்துள்ளார். தஞ்சை, பெங்களூர், சென்னை, அமெரிக்கா என்று பல ஊர்களில் இதுவரை காணாத இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளார் டைரக்டர் எல்ரெட் குமார். முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்திற்காகவே தனது உடலை ரொம்பவே மெருகேற்றி இருக்கிறார் அதர்வா. அதிலும் குறிப்பாக சண்டைக்காட்சிகளில் ரொம்பவே ரிஸ்க் எடுத்திருக்கிறார்.

படத்தில் ஒவ்வொரு காட்சியையும் ரொம்பவே வித்தியாசமாக எடுத்திருக்கிறாராம் டைரக்டர். சண்டைக்காட்சிகளில் கூட ஒரு புதிய முயற்சியாக, ஹிப் ஆப் என்று சொல்லப்படும் டான்ஸ் மூலம் சண்டைக்காட்சியை அமைத்துள்ளனராம். இதற்காகவே கிட்டத்தட்ட 3மாத பயிற்சி எடுத்தாராம் அதர்வா. நிச்சயம் இந்தபடம் தன்னுடைய கேரியரில் திருப்புமுனையாக அமையும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார் அதர்வா. முப்‌பொழுதும் உன் கற்பனைகள் வருகிற 17ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கு அடுத்து பாலாவின் இயக்கத்தில் எரியும் தணல் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் அதர்வா.

பாலா படத்தில் நடிப்பது பற்றி கேட்டால், ஆரம்பத்தில் பாலா சார் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தாலே எனக்கு ஒருவித பயம் உண்டாகிவிடும். கொஞ்சம் டென்சனும் இருக்கும். அப்புறம் போக போக பழகிடுச்சு. எல்லாத்தையும் ப்ளான் பண்ணி தான் அவர் சூட்டிங்கிற்கே வருவார் என்கிறார் ரொம்பவே அடக்கமாய்.

சரி! அதர்வா அடுத்த ரவுண்டுக்கு அதிரடியாய் தயாராகிறார்...!

50 லட்சம் அட்வான்ஸ் திருப்பி தர முடியாது இலியானா பிடிவாதம்!!!

Sunday, February 12, 2012
தயாரிப்பாளரிடம் வாங்கிய ரூ.50 லட்சம் அட்வான்ஸ் திருப்பி தர மாட்டேன் என்றார் இலியானா.
கடந்த ஆண்டில் விக்ரம் படத்தில் நடிப்பதற்காக தயாரிப்பாளர் மோகன் நடராஜனிடம் ரூ.50 லட்சம் அட்வான்ஸ் வாங்கி இருந்தார் இலியானா. பின்னர்

இப்படம் கைவிடப்பட்டது. இதையடுத்து படத்திற்காக கொடுத்த அட்வான்ஸை திருப்பி தர வேண்டும் என்று இலியானா மீது தயாரிப்பாளர்கள்

சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டது.இதுகுறித்து இலியானா தரப்பில் கூறும்போது, ‘‘ஒப்பந்தப்படி இலியானா நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார்.

ஆனால் அதை தயாரிப்பாளர் பயன்படுத்திக்கொள்ளவில்லை. விதிகளின்படி அட்வான்ஸ் பணத்தை திருப்பி தர வேண்டிய அவசியம் இல்லை.

இதுகுறித்து ஏற்கனவே தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர் கொடுத்த புகார் தள்ளுபடி செய்யப்பட்டது. அவர்கள் முறைப்படி ஒப்பந்தத்தை

பரிசீலனை செய்த பிறகே இந்த நடவடிக்கை எடுத்தனர். இலியானா மீது சட்ட ரீதியாக மோகன் நடராஜன் நடவடிக்கை எடுக்க நினைத்திருந்தால்

நீண்ட நாட்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டும். இலியானா நடித்துள்ள தமிழ்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் அவரது

பெயரை கெடுக்க இந்த புகார் தரப்பட்டிருக்கிறது’’ என்றார்.

தமிழ்சினிமாவை விட்டு விலகியது ஏன்? தமன்னா பதில்!!!

Sunday, February 12, 2012
தமிழ் சினிமாவை விட்டு விலகியது ஏன் என்ற கேள்விக்கு நடிகை தமன்னா பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக, ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. ஏனோ சில காரணங்களால் தமிழ் சினிமாவில் நடிக்காமல் விலகியிருக்கிறார். இந்த விலகலுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், தமன்னா வாயில் இருந்து எந்தவொரு காரணமும் சொல்லப்படவில்லை.

இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருப்பதற்கான காரணத்தை தெரிவித்திருக்கிறார். அதில், எனக்கு படங்களின் எண்ணிக்கை முக்கியமில்லை. தரமான படங்களாக இருக்க வேண்டும். எந்த மொழியாக இருந்தால் என்ன...? சில நடிகைகள் ஒரே நேரத்தில் ஏழெட்டு படங்களில் நடிக்கின்றனர். அதில் எனக்கு உடன்பாடில்லை. அந்த நடிகைகளை போல் நான் இருக்கமாட்டேன். நிறைய படங்களில் ஒரே நேரத்தில் நடிப்பது பயன் தராது என கருதுகிறேன். தமிழ் படங்களை நான் ஒதுக்கவில்லை. நல்ல கதை, நம்பிக்கையான இயக்குனர்களுக்காக காத்திருக்கிறேன், என்றார்.

நயன்தாரா - பிரபுதேவா பிரிவு ஏன்?

Sunday, February 12, 2012
நயன்தாரா, பிரபுதேவா திடீர் பிரிவுக்கு காரணம் பற்றி புதிய தகவல் கிடைத்துள்ளது.
கோலிவுட் காதல் ஜோடிகள் பிரபுதேவா-நயன்தாரா விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்ற எதிர்பார்த்த நிலையில் அவர்கள் காதல்

வாழ்க்கையில் புயலடித்தது. ஆண்டுக்கணக்கில் ஜோடியாக வலம் வந்தவர்கள் சமீபகாலமாக எங்கும் தலைகாட்டுவதில்லை. மேலும் நடிப்புக்கு

முழுக்கு போட்டுவிட்டார் என்று நயன்தாராவை பற்றி திரையுலகினர் எண்ணியிருந்த நிலையில் திடீரென்று தெலுங்கு படத்தில் நடிக்க

ஒப்புக்கொண்டிருக்கிறார். தமிழிலும் அஜீத் ஜோடியாக நடிக்க உள்ளார். இதையடுத்து இந்த காதல் ஜோடி பிரிந்துவிட்டது என்று கூறப்படுகிறது.

மனைவி ரமலத்திடம் சட்டப்படி விவாகரத்து பெற்ற பின்னும் குழந்தைகளுடன் பிரபுதேவா அன்பாக பழகுவது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை என்று

தெரிகிறது. இதுதவிர மற்றொரு புதுகாரணம் இப்போது கூறப்படுகிறது. பிரபுதேவாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு பணத் தேவை ஏற்பட்டது. அப்போது

நயன்தாரா குறிப்பிட்ட தொகையை அவருக்கு வழங்கினார். அந்த பணத்தை பிரிந்துசென்ற மனைவி ரமலத்தின் ஜீவனாம்சம் தொடர்பான தேவைக்கு

பயன்படுத்திக்கொண்டாராம். பிரச்னையிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளவே தன்னிடம் வாங்கிய பணத்தை பிரபுதேவா பயன்படுத்திக்கொண்ட

செயல் நயன்தாரா மனதை புண்படுத்திவிட்டதாம். மேலும் தன்னை மணப்பதில் காட்டிய ஆர்வம் பிரபுதேவாவிடம் படிப்படியாக குறைந்ததுடன்

அதைவிட அதிகமாக பாசத்தை குழந்தைகள் மீது காட்டுவதும் நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை என்று நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

காளஹஸ்தி கோயிலில் பிரபுதேவா பரிகார பூஜை!_பிரபுதேவாவின் இசை ஆல்பம் பெயர் "போருடா"!

Sunday, February 12, 2012
காளஹஸ்தி கோயிலில் பிரபுதேவா ராகு-கேது பரிகார பூஜைகள் செய்து வழிபட்டார். யார் என்ன சொன்னாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தங்களது காதலில் உறுதியாய் இருந்தனர் பிரபுதேவா-நயன்தாரா ஜோடி. கல்யாணம் பண்ணாமலேயே சிறந்த தம்பதிகள் பட்டம் எல்லாம் வாங்கி, இந்த உலகத்தையே வலம் இந்த காதல் பறவைகள் இப்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நயன்தாரா மீண்டும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். பிரபுதேவாவோ, தன்னுடைய இந்தி படங்களில் பிஸியாக இருக்கிறார்.

இந்நிலையில் பிரபுதேவா நேற்று ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள சிவன் கோயிலுக்கு வந்தார். அங்கு அவருக்கு கோயில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரபுதேவா, ராகு-கேது பரிகார பூஜையில் கலந்து கொண்டு சுமார் 1 மணி நேரம் பூஜை செய்தார். பின்னர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் மற்றும் ஞானபூங்கோதை அம்மையாரை தரிசனம் செய்தார்.

பரிகார பூஜைகள் எல்லாம் முடித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரபுதேவா, தற்போது இந்தியில் ரவுடி ரத்தோர் படத்தை இயக்கி வருகிறேன். இப்படம் ஜூன் மாதம் ரிலீசாக இருக்கிறது. அதற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறேன் என்றார். நயன்தாரா உடனான பிரிவு குறித்து கேட்டபோது, சாரி நோ கமெண்ட்ஸ். நான் கோயிலுக்கு வந்துள்ளேன். இப்போது அதைப்பற்றி பேச விரும்பவில்லை என்று கூறிவிட்டு வேகமாக காரில் புறப்பட்டு சென்றார்.

பிரபுதேவாவின் இசை ஆல்பம் பெயர் "போருடா"!

நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா, தான் உருவாக்கியிருக்கும் இசை ஆல்பத்திற்கு போருடா என்று பெயரிட்டுள்ளார். கிட்டத்தட்ட எல்லா வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகியிருக்கும் இந்த இசை ஆல்பத்தை, முதலில் காதலர் தினத்தன்றுதான் வெளியிடுவதாக திட்டமிட்டிருந்தார் பிரபுதேவா. ஆனால் இப்போது அந்த முடிவை மாற்றி விட்டாராம். வியாபாரம் கருதி, வேறு ஒரு தேதியில் பெரிய அளவில் வெளியிடுமாறு நண்பர்கள் ஆலோசனை கூறியதையடுத்து தேதி மாற்றப்பட்டுள்ளது.

முதல் மனைவி ரம்லத் விவாகரத்து, நயன்தாராவுடனான காதல் முறிவு என அடுத்தடுத்து தன்னைப்பற்றி செய்திகள் வெளியாகிக் கொண்டே இருந்தபோதிலும், தனது இசை ஆல்பம் பணியை எந்தவித கவனச்சிதறலும் இல்லாமல் முடித்து விட்டார் பிரபுதேவா. தனது சொந்த வாழ்க்கையின் அனுபவங்களை பிரதிபலிக்கும் வகையில் இசை ஆல்பத்திற்கு போருடா என்று பெயரிட்டிருப்பது கூடுதல் தகவல்.

சிம்பு-தனுஷ் நேரடி மோதல்!!!

மறைமுகமாக தாக்கி பேசிக்கொண்டிருந்த சிம்பு-தனுஷ் நேரடியாக மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சினிமாவில் தொழில்போட்டி சகஜம். இப்போதெல்லாம் அது நேரடி மோதலாக மாறி வருகிறது. சமீபத்தில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் பற்றி பட இயக்குனர் சிரிஸ் குந்தர் டுவிட்டரில் விமர்சனம் செய்து கருத்து தெரிவித்திருந்தார். இதனால் கோபம் அடைந்த ஷாருக் பட வெற்றி விழா ஒன்றில் அவரை தாக்கினார். இதுபாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்படியொரு பரபரப்பு கே £லிவுட்டில் ஏற்பட்டிருக்கிறது.
சிம்பு, தனுஷ் இடையே தொழில்போட்டி இருக்கிறது. இந்த மோதல் தற்போது நேரடியாக வெளிப்பட்டிருக்கிறது. ‘கொலை வெறிடி’ பாடலை தொடர்ந்து ‘சச்சின் ஆந்த்தம்’ என்ற இசை ஆல்பத்தை தனுஷ் தயாரித்துள்ளார். முன்னதாக ‘லவ் ஆந்த்தம்’ என்ற இசை ஆல்பத்தை சிம்பு உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். ‘சச்சின் ஆந்த்தம்’ பாடல் யு டியூபில் வெளியிடப்பட்டது. பின்னர் காப்பிரைட் காரணமாக நீக்கப்பட்டது. இதுபற்றி சிம்பு கமென்ட் அடித்ததாக யாரோ தனுஷுடம் புகார் கூறி இருக்கிறார்கள். உடனே தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில்,‘சிலரது துயரம் மற்றவர்களுக்கு சிரிப்பு. மனிதாபிமானம் இல்லாத அவர்களின் தன்மையை பார்க்கும்போது எனக்கும் சிரிப்புதான் வருகிறது. இதுதான் லவ். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்’ என்று கிண்டலாக குறிப்பிட்டிருந்தார். தனுஷ் சட்ட ரீதியாக எடுத்த நடவடிக்கை காரணமாக ‘சச்சின் ஆந்த்தம்’ மீண்டும் யு டியூபில் சேர்க்கப்பட்டது.
இதற்கிடையில் அமெரிக்காவில் ‘லவ் ஆந்த்தம்’ பணியில் பிஸியாக இருக்கும் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தனுஷுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். ‘காப்பி அடிக்கறதுல சைனாவ விட பயங்கரமா இருக்காங்களே’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ‘லவ் ஆந்த்தம்’ ஆல்பத்தை சிம்பு முதலில் தயாரித்ததை தனுஷ், ‘சச்சின் ஆந்த்தம்’ என்ற பெயரில் காப்பி அடித்ததாக சிம்பு தரப்பு தெரிவிக்கிறது. ஆனால் தனுஷ் விடாப்பிடியாக டுவிட்டரில் பதில் அளித்திருக்கிறார். ‘சச்சின் ஆந்த்தம் ஆல்பத்தை நான் எந்த சம்பளமும் வாங்காமல் செய்து தருகிறேன். தயாரிப்பு மற்றும் ஆடியோ, வீடியோவுக்கு மட்டுமே குறிப்பிட்ட பான நிறுவனம் செலவு செய்திருக்கிறது. உங்களுடைய பிரார்த்தனைக்கு நன்றி’ என்று பதில் தெரிவித்தார்.
உடனே சிம்பு டுவிட்டர் பக்கத்தில் அளித்த பதிலில்,‘இந்த உலகில் யாருமே எதிரிகள் கிடையாது. வெற்றிதான் உங்களை உலகத்துக்கு அறிமுகப்படுத்துகிறது. ஆனால் தோல்வியை உலகுக்கு நீதான் அறிமுகப்படுத்துகிறாய்’ என்று குறிப்பிடிருக்கிறார். இதையடுத்து தனுஷ், சிம்பு தரப்பினரிடையே புகைச்சல் கிளம்பி உள்ளது.