Tuesday, March 20, 2012

முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன்!!!

Tuesday, March 20, 2012
விண்மீன்கள்' படத்தில் நடித்துள்ள ஷிகா, நிருபர்களிடம் கூறியதாவது: 'விண்மீன்கள்' படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளேன். இது அழுத்தமான கதை. படம் பார்த்தவர்கள் என் நடிப்பைப் பாராட்டினார்கள். இப்போது 'படம் பார்த்து கதை சொல்', 'வன யுத்தம்' படங்களில் நடித்து வருகிறேன். இந்தப் படத்துக்காக அடர்ந்த காட்டுப் பகுதியில் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. முத்தக்காட்சியில் நடிப்பீர்களா என்கிறார்கள். அதுபோல் நடிக்க விருப்பம் இல்லை. தொடர்ந்து தமிழில் நடிக்க முடிவு செய்துள்ளேன்.

குடும்பங்களுக்குள் நடக்கும் கிரைம், திரில்லர்!

Tuesday, March 20, 2012
கே.எஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் படம், ‘அகராதி’. பிரதீப், பவன், ஓவியா, மோனிகா, அர்ச்சனா நடிக்கிறார்கள். நாகா வெங்கடேஷ் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: ராஜேஷ்குமாரின் ‘இரவு நேர வானவில்‘ என்ற நாவலை தழுவி எடுக்கப்படும் படம் இது. குடும்பங்களுக்குள் நடக்கும் கிரைம், திரில்லர் கதை. நாவலை கமர்சியல் சினிமாவுக்கு ஏற்ப மாற்றி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஸ், திரில்லிங், ரொமான்ஸ், ஆக்ஷன் என அத்தனை அம்சங்களையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் ‘நிலா காயுது நேரம் நல்ல நேரம்...’ பாணியில் பாடலாசிரியர் வாலி, மூட் சாங் எழுதியுள்ளார். இந்த பாடலில் சில வரிகளை நீக்கினால் ‘யு/ஏ‘ சான்றிதழ் தருகிறோம்; நீக்காவிட்டால் ‘ஏ’ தருவோம் என்றார்கள். நீக்க மறுத்து ‘ஏ’ சான்றிதழ் பெற்றிருக்கிறோம். இந்தப் பாடல் பரபரப்பாகப் பேசப்படும்.

தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நடிகர் வினய் நேற்று அவரது பெங்களூரூ வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக செய்திகள்!!!

Tuesday, March 20, 2012
தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நடிகர் வினய் நேற்று அவரது பெங்களூரூ வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக செய்திகள் வெளி வருகின்றன. ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

தனது வீட்டில் பராமத்துப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளி கால் தவறி கீழே விழ, அவரைக் காப்பாற்ற முயற்சித்த வினய்யும் கீழே விழுந்து அடிபட்டதாக தெரிகிறது.

உடனடியாக வினய் பெங்களூரூவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

பில்லா -2 இசை: ரஜினி வந்ததும் வச்சிக்கலாம்:

Tuesday, March 20, 2012
அஜீத் நடிக்கும் பில்லா -2 படத்தின் இசை வெளியீடு எப்போது என்பதில் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை படக்குழுவினர்.

காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினி. அதே நேரம் இந்த நிலைக்கு அவர் எந்த வரையிலும் காரணமல்ல.

படத்தயாரிப்பு தரப்பில், மார்ச் மாத இறுதியில் படத்தின் இசை வெளியீடு நடைபெறும் என முடிவு செய்திருந்தனர். ஆனால், ஏப்ரலில்தான் பாடல் வெளியீடு நடக்கும் என்று தெரிகிறது.

காரணம் முன்பு 'பில்லா' படத்தினைத் துவக்கி வைத்து, பாடல் வெளியிட்டு வாழ்த்திய ரஜினிகாந்த் இப்படத்தின் இசை வெளியீட்டிலும் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார்களாம். ஆனால், ரஜினி தன் 'கோச்சடையான்' படத்திற்காக லண்டன் சென்றுவிட்டார்.

படப்பிடிப்பு முடித்து, சென்னைக்கு ஏப்ரல் மத்தியில் தேதி வருகிறார்.

எனவே, இசை வெளியீட்டை அவர் வந்த பிறகு, ஏப்ரல் மாதத்திலேயே வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளார்களாம்.

பிழைக்கத் தெரிஞ்சவங்க!

இயக்குனர் கண்டிஷன் நடிகைக்கு பிரச்னை!!!

Tuesday, March 20, 2012
கோலிவுட்டில் பட்டண பீரியட் படத்துல நடிச்ச எமியான ஹீரோயின் பாலிவுட் பிரதீக ஹீரோவோடு நெருக்கமாயிட்டாருன்னு ஊரெல்லாம் பேச்சா இருக்காம்... இருக்காம்...
ஆனாலும் எங்களுக்குள்ள நட்புதான்னு ரெண்டுபேரும் சொல்றாங்களாம். இதுக்கிடையிலே அவர் பேரை இவரும் இவர் பேரை அவரும் பச்சை குத்திக்கிட்டாங்களாம். இதுவே
ரெண்டுபேருக்கும் என்ன உறவுன்னு காட்டுதுன்னு பாலிவுட்ல கிசுகிசுக்கிறாங்களாம்... கிசுகிசுக்கிறாங்களாம்...

யாரையாவது எனக்கு பதிலா டப்பிங் பேச வையுங்கன்னு டாப் ஹீரோயின் எஸ்கேப் ஆயிட்டிருந்தாராம்... இருந்தாராம்... இப்போ வகையா இயக்கத்துக்கிட்ட மாட்டிக்கிட்டாராம். மத்த மொழியில நடிக்க¤றப்போ டப்பிங் பேச கஷ்டமா இருக்கலாம். ஆனா தெரிஞ்ச மொழியான இந்தியில டப்பிங் பேசுறதுக்கு என்ன குறை. நீங்கதான் பேசணும்னு கண்டிஷன் போட்டாராம்... போட்டாராம்... டப்பிங் பேச தனி பேமென்ட் கிடையாதுன்னு சொன்னதாலதான் நடிகை மறுத்தாராம்... மறுத்தாராம்... இயக்கம் கண்டிஷனா சொன்னதால வேற வழியில்லாம
ஒப்புக்கிட்டாராம்... ஒப்புக்கிட்டாராம்...

கல்யாணமாகி சந்தோஷமா இருந்த ஜெனி நடிகைக்கு திடீர்னு, நில மோசடி வழக்கு ரூபத்துல பிரச்னை வந்திருக்கு. இதனால நடிகை கலங்கிப்போயிட்டாராம்... கலங்கிப்போயிட்டாராம்... கணவர் குலம்தான் நடிகைக்கு தைரியம் கொடுக்கிறாராம். இனிமே எந்த விளம்பரத்துலேயும் நடிக்க மாட்டேன்னு நடிகை முடிவு எடுத்திருக்காராம்... எடுத்திருக்காராம்
...

பூபதி பாண்டியன் இயக்கத்தில் நயன்தாரா!!!

Tuesday, March 20, 2012
நயன்தாரா விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் ஜோடியாக நடிக்கிறார் என்ற செய்தியை ரப்பர் போட்டு அழித்துவிடுங்கள். அந்த புராஜெக்டில் நயன் இதுவரை கையெழுத்திடவில்லை. அதேநேரம் வேறொரு தமிழ்ப் படத்தில் நடிக்க கால்ஷீட் தந்திருக்கிறார்.

மலைக்கோட்டை போன்ற படங்களை இயக்கிய பூபதி பாண்டியன் விஷாலும், விக்ரமும் நட்டாற்றில் விட்டதால் தெலுங்குப் பக்கம் போய் ஹீரோ ஒருவரை பிடித்தார். அவர் கோபிசந்த். இவர் ஜெயம் படத்தில் வில்லனாக நடித்தவர். தெலுங்கில் இப்போது டாப் ஹீரோ.

இவரை வைத்து இயக்கும் படத்தை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் எடுக்கிறார் கோபிசந்த். ஜெய பாலாஜி ரியல் மீடியா என்ற நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில்தான் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டிருக்கிறார். இதுதவிர இரு தெலுங்குப் படங்களுக்கும் அவர் கால்ஷீட் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் காப்பி கல்சர் படம் பார்த்து படம் செய்!!!

Tuesday, March 20, 2012
சென்றமுறை எழுதிய காப்பி கல்சருக்கு எதிர்வினை படித்து நெகிழ்ந்து போனோம். பிறகென்ன... வருஷம் முதற்கொண்டு தெ‌ளிவாக எழுதியிருந்தும் தமிழன் காப்பி அடிக்க மாட்டாண்டா ரேஞ்சில் ப‌‌ரிந்து பேசியிருந்தார்கள். இந்த வெள்ளை மனசு இருக்கிறவரை நம்மாட்கள் கொள்ளை அடிக்க தயங்க மாட்டார்கள்.

சென்றமுறை கொஞ்சம் பழைய படத்தைப் பார்த்தோம். இதில் புதிய படம். புதுசு என்றால் இன்னும் திரைக்கே வராத படம்.

இதுபோன்ற காப்பிகளுக்கு இயக்குனரை மட்டும் குறை சொல்ல முடியாது. நமக்குத் தெ‌ரிந்த திறமையான அசோஸியேட் இயக்குனர் இரண்டு ஸ்கி‌ரிப்டுகள் வைத்திருந்தார். அதில் ஒன்று தயா‌ரிப்பாளருக்கு பிடித்திருந்தது. ஆபிஸ் போடுவதுவரை வந்துவிட்டார்கள். நண்பருக்கு கெட்ட நேரம். தயா‌ரிப்பாளர் நண்பர்களுடன் வெளிநாட்டு த்‌ரில்லர் ஒன்றை பார்த்திருக்கிறார். ரகளையான மேக்கிங். உடனே நண்பருக்கு போன் பறந்திருக்கிறது. உங்க ஸ்கி‌ரிப்டை ஓரமா வைங்க, நான் சொல்ற படத்தை தமிழுக்கு ஏத்த மாதி‌ரி மாத்துங்க என்றிருக்கிறார்.

நண்பர் 12 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். வயது நாற்பதை தொடுகிறது. குடும்பம் உண்டு. நியாயவான் என்று வீம்பு பிடிப்பாரா இல்லை டிவிடி பார்த்து ஸ்கி‌ரிப்ட் தயார் செய்வாரா? ச‌ரி, நம்ம விஷயத்துக்கு வருவோம்.

பொதுவாக ஒரு படம் வெளிவந்த பிறகுதான் எந்தப் படத்தின் காப்பி என்பது தெ‌ரியும். கும்பலாக டிவிடி பார்த்து படம் செய்வதால் படப்பிடிப்புக்கு கிளம்பும் முன்பே எதிலிருந்து சுடுகிறார்கள் என்பது இப்போதெல்லாம் தெ‌ரிந்துவிடுகிறது. அப்படி தெ‌ரிய வந்த ஒரு படம், படம் பார்த்து கதை சொல்.

ஏபிஎம் புரொடக் ஷன் தயா‌ரித்திருக்கும் இந்தப் படத்தை பெஞ்சமின் பிரபு என்பவர் இயக்கியிருக்கிறார். படத்தைப் பற்றி ஆஹா ஓஹோவென இப்போதே பேசத் துவங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்தின் கதையை கொ‌ரியன் படமொன்றிலிருந்து உருவியிருக்கிறார்கள்.

தென்கொ‌ரியாவின் பிரபல இயக்குனர் Andrew Lau 2006 ல் இயக்கிய படம் டெய்ஸி. அதற்கு முன்னால் இன்‌ஸ்பெர்னல் அஃபையர்; சீ‌ரிஸை இயக்கினார். இதை அடிப்படையாக வைத்துதான் மார்ட்டின் ஸ்கார்சஸி டிபார்டட் படத்தை இயக்கி சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது பெற்றார்.

டெய்ஸியின் நாயகி Hye - young ஒரு ஆர்டிஸ்ட். ஒருவ‌‌ரின் முகத்தை அப்படியே வரையக் கூடியவள். ஆம்ஸ்டர்டாமிலுள்ள சதுக்கத்தில் பணத்துக்காக ஆட்களை வரைபவள். ஒருமுறை படம் வரைவதற்காக அழகான புற்கள் நிறைந்த மலைச் ச‌ரிவுக்கு வருகையில் நாயகன் Park Yi அவளை பார்க்கிறான். ஒரு ஓடையை அவள் கடக்கையில் தவறுதலாக அதில் விழுந்து விடுகிறாள். தொலைவிலிருந்து இதனைப் பா‌ர்க்கும் பார்க் யி ஓடி வருகிறான். அவனையோ அவன் நீ‌ரில் அடித்துச் சென்ற பையை எடுத்ததையோ பார்க்காமல் அவள் அங்கிருந்து சென்று விடுகிறாள். மறுநாள் அதே ஓடைக்கு அவள் வரும் போது ஓடையின் நடுவே பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருப்பதை பார்க்கிறாள்.

யுவன் ஷங்கர் ராஜாவை தொடர்ந்து செல்வராகவன் படத்திலிருந்து ஜி.வி.பிரகாஷ் நீக்கம்!!!

Tuesday, March 20, 2012
யுவன் ஷங்கர் ராஜாவை தொடர்ந்து செல்வராகவன் படத்திலிருந்து ஜி.வி.ப¤ரகாஷும் நீக்கப்பட்டுள்ளார். செல்வராகவன் இயக்கும் படங்களுக்கு தொடர்ந்து யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வந்தார். இந்நிலையில் Ôஆயிரத்தில் ஒருவன்Õ படத்தை இயக்கியபோது, அதிலிருந்து யுவன் ஷங்கர் ராஜாவை நீக்கினார் செல்வராகவன். இனி சேர்ந்து படம் பண்ணுவதில்லை என இருவரும் முடிவு செய்தனர். இதற்கு, இருவருக்கும் இடையே பணப் பிரச்னை ஏற்பட்டதுதான் காரணம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து Ôஆயிரத்தில் ஒருவன்Õ படத்தில் ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தார். இனி தனது படங்களில் பிரகாஷ்தான் பணியாற்றுவார் என செல்வராகவன் தெரிவித்தார். தொடர்ந்து, Ôமயக்கம் என்னÕ படத்துக்கும் பிரகாஷ் இசையமைத்தார். இதையடுத்து ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் Ôஇரண்டாம் உலகம்Õ படத்தை ஆரம்பித்தார் செல்வராகவன். இதிலும் இசையமைக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் இப்போது திடீரென பிரகாஷ் நீக்கப்பட்டு, ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். செல்வராகவன் விரும்பிய மெட்டுகள் கிடைக்காததால் அவர் இசையமைப்பாளரை மாற்றிவிட்டதாக கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது. இதற்கிடையை டுவிட்டரில், ÔÔஹாரிஸ் இசையில் கார்த்திக் பாடிய பாடல் பதிவு செய்யப்பட்டது. வைரமுத்து பாடலை எழுதியிருக்கிறார். சூப்பர் மெலடியாக இந்த பாடல் உருவாகியுள்ளதுÕÕ என குறிப்பிட்டுள்ளார் செல்வராகவன்.

அழகுக்காக ஆண்டுக்கு ரூ 72 லட்சம் செலவழிக்கும் 43 வயது நடிகை!!!

Tuesday, March 20, 2012
பிரபல ஆலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன் தன் அழகைப் பாதுகாக்க மட்டும் ஆண்டுக்கு ரூ 72 லட்சம் செலவழிக்கிறாராம்.

43 வயதாகும் ஜெனிபர் அனிஸ்டன் இபபோதும் கூட ரசிகர்களின் விருப்ப நாயகியாக உலா வருகிறார். இதுமட்டுமின்றி உணர்ச்சியை தூண்டும் கவர்ச்சிகரமான பெண் (Hottest woman of all time) என்ற பட்டத்தையும் அவர் சமீபத்தில் பெற்றார்.

அவரது அழகு மற்றும் கவர்ச்சியின் ரகசியம் என்ன என்பதற்கு ஷைன் இணையதளம் விடையளித்துள்ளது.

இவர் அழகு மருத்துவத்துக்கு மட்டும் ஆண்டுதோறும் சுமார் ரூ.72 லட்சம் (90 ஆயிரம் பவுண்ட்) செலவு செய்கிறாராம். கிட்டத்தட்ட தினமும் அதற்காக ரூ.20 ஆயிரம் ஒதுக்குகிறார். யோகா பயிற்சிக்கு ரூ.48 ஆயிரமும், கூந்தல் அலங்காரத்துக்கு ரூ.46 ஆயிரமும் செலவு செய்கிறாராம்.

ஹாஹாஹா...

இந்த செய்தியை இணையதளத்தில் படித்ததும் சிரித்து மகிழ்ந்தாராம் ஜெனிபர்.

அழகைப் பராமரிப்பது சாதாரண விஷயமல்ல. அது ஒரு கலை. அதை ரசித்து செய்கிறேன். அதனால் என்னால் இப்படி இருக்க முடிகிறது. ஆனால் இந்த மாதம் இதில் குறிப்பிட்டுள்ள அளவுக்கு செலவழிக்கவில்லை', என்று பதிலளித்துள்ளார் ஜெனிபர்.

மாற்றானுக்காக ரஷ்ய மொழி கற்கும் காஜல்!!!

Tuesday, March 20, 2012
சூர்யா, காஜல் அகர்வால் நடிக்கும் படம், 'மாற்றான்'. கே.வி.ஆனந்த் இயக்கும் இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. இதன் ஷூட்டிங் ரஷ்யாவில் ஒரு மாதம் நடந்தது. படத்தின் முக்கிய காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் இங்கு படமானது. இதையடுத்து, ரஷ்ய மொழியை தீவிரமாக கற்று வருகிறார் காஜல் அகர்வால். படத்திற்கு இந்த மொழி அதிகம் தேவைப்படுவதால் இந்த மொழியை தீவிரமாக கற்று வருகிறார். மேலும் ரஷ்யாவின் ஷாப்பிங் செல்லும்போது மொழி தெரியாததால் மிகுந்த சிரமப்படுவதை தவிர்ப்பதற்காகவும் ரஷ்ய மொழியின் சில முக்கிய வார்த்தைகளை தனது டைரியில் குறிப்பெடுத்து வைத்துள்ளதாகவும் அவரது உதவியாளர் கூறினார். பெரும்பாலான நடிகைகள் தமிழ்ல நடிச்சுதான் கல்லா கட்றாங்க.. ஆனா, தமிழ் மொழிய மட்டும் கத்துக்கணும்னு நெனக்கவே மாட்டாங்க.. நீங்க எப்டி? கத்துக்கலைன்னா மொதல்ல தமிழ கத்துக்கிற வழிய பாருங்க.........

பாவனா படத்துக்கு திடீர் சிக்கல் கோர்ட்டில் வழக்கு!!!

Tuesday, March 20, 2012
இந்தியிலிருந்து காப்பி அடித்த படத்தில் நடித்ததாக பாவனா நடித்த படம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாலிவுட்டில் வெற்றிகரமாக ஓடிய படம் ‘நோ என்ட்ரிÕ. சல்மான் கான், அனீல் கபூர், பிபாஷா பாசு, லாரா தத்தா, செலினா ஜெட்லி நடித்த படம். இப்படத்தை மலையாளத்தில் Ôஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்Õ என்ற பெயரில் காப்பி அடித்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் ஜெயராம், ஜெயசூர்யா, பாவனா, சம்விருதா, ரீமா கல்லிங்கல் நடித்துள்ளனர். Ôநோ என்ட்ரிÕ கதைப்படி சல்மான், அனீல்கபூர் இருவரும் திருமணம் ஆனவர்கள். பிபாஷா பாசு கால்கேர்ள். அவரை தேடி போகின்றனர். இதனால் இருவருக்கும் வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை இருவரும் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை காமெடியாக சொல்கிறது படம். இதே பாணியில் Ôஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்Õ கதையும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்படம் பற்றி மும்பை தயாரிப்பாளருக்கு தகவல் போனது. இதையடுத்து அவர் தன் படத்தை அனுமதி இல்லாமல் காப்பி அடித்ததாக மலையாள தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் இதுபற்றி மலையாள தயாரிப்பாளர் தரப்பில் கூறும்போது, ‘எந்த படத்தையும் பார்த்து காப்பி அடிக்கவில்லை. தமிழில் வெளியான Ôசார்லி சாப்ளின்Õ படத்தை பார்த்த பாதிப்பில் இக்கதை உருவானதுÕ என்று குறிப்பிட்டுள்ளார். விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கிடையில் Ôஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்Õ படக் குழு, கோவாவில் ஷூட்டிங் நடத்தி வருகிறது.

ஆர்யாவின் புதுமனை புகுவிழாவில், நடிகை நயன்தாரா!!!

Tuesday, March 20, 2012
நடிகர் ஆர்யாவின் புதுமனை புகுவிழாவில், நடிகை நயன்தாரா கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றினார். ஆர்யாவுக்கு சென்னை அண்ணாநகரில் ஏற்கனவே சொந்தமாக வீடு இருக்கிறது. அதில், அவர் தனது தாயார் மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார். இப்போது அவர், சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில், 2 ஆயிரம் சதுர அடியில் ஒரு வீடு வாங்கியிருக்கிறார். புதுமனை புகுவிழாவை அவர் ஆடம்பரம் இல்லாமல், எளிமையாக நடத்தினார். நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்து இருந்தார். இந்த விழாவுக்கு ஆர்யாவினால் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தவர், நடிகை நயன்தாரா. இவர்தான் புதுமனை புகுவிழாவில் குத்துவிளக்கேற்றினார். பிரபுதேவாவை பிரிந்தபின் நயன்தாரா சென்னை வருவது, இது இரண்டாவது முறை. இதற்கு முன்பு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் தானே புயல் நிவாரண நிதி வழங்குவதற்காக சென்னை வந்தார். அதன்பிறகு அவர் ஆர்யா வீட்டின் புதுமனை புகுவிழாவுக்காக இப்போது சென்னை வந்திருக்கிறார். நடிகர் விஷால், பட அதிபரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் ஆர்யாவின் புதுமனை புகுவிழாவுக்கு வந்திருந்தார்கள். விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு ஆர்யா விருந்து கொடுத்தார். அடடே... குடும்ப குத்துவிளக்கே குத்துவிளக்கேத்துச்சாம்... கொடுமடா!

காதல் ஜோடிகளுக்காக 'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' ஸ்பெஷல் ஷோ!!!

Tuesday, March 20, 2012
ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற புதிய படம், 50 காதல் ஜோடிகளுக்கு சிறப்புக் காட்சியாக போட்டுக் காட்டப்பட்டது.

படத்துக்கு ஒரு வித்தியாசமான விளம்பரமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

சேரனின் உதவி இயக்குநராக பணியாற்றிய ஷண்முகராஜ் எழுதி இயக்கியுள்ள படம் இது. மொத்தம் 71 புதுமுகங்கள் நடிக்கின்றனர். இவர்களுக்கு 372 நாட்கள் நடிப்புப் பயிற்சி கொடுத்த இயக்குநர், முழுக் காட்சிகளையும் முதலில் ஒரு ஹேண்டி கேமில் பதிவு செய்து படமாக்கி, அதை வைத்துக் கொண்டு, தனியாக சினிமாவுக்கென்று ஒரு ஷூட்டிங் நடத்தினார்.

இதனால் காட்சிகள் நினைத்த மாதிரியே வெகு நேர்த்தியாக வந்ததாம்.

'உங்க காதல் ஜெயிக்க, 5 டி (T)யை பாலோ பண்ணுங்க... கண்டிப்பா சக்ஸஸ்தான்' என்று இந்தப் படத்துக்காக விளம்பரம் செய்யப்பட்டதால், அந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள காதலர்கள் எக்கச்சக்க ஆர்வம் காட்டினார்களாம்.

எனவே, ஒரு வித்தியாச முயற்சியாக, படத்தையே காதலர்களுக்கு சிறப்புக் காட்சியாக போட்டுக் காட்ட முடிவு செய்தார் இயக்குநர்.

அதன் படி தமிழகம் முழுவதிலுமிருந்து தன்னைத் தொடர்பு கொண்டவர்களில் 50 காதல் ஜோடிகளை தேர்ந்தெடுத்து, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் சிறப்புக் காட்சியாக ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழியை திரையிட்டுக் காட்டினர்.

படம் பார்த்த ஜோடிகள் அனைவரும் திருப்தியும் பாராட்டும் தெரிவித்ததோடு, காதல் ஜெயிக்க என்ன பண்ணனும் என்ற ரகசியம் தெரிஞ்சிடுச்சி என்றனர் உற்சாகத்துடன்!

மெய்யாலுமாவா?!

கோபிசந்த் நடிக்கும் புதிய தமிழ்ப் படம் - ஹீரோயின் நயன்தாரா!!!

Tuesday, March 20, 2012
கோபிசந்த் நாயகனாக நடிக்கும் புதிய தமிழ்ப் படத்தில் அவருக்கு ஜோடியாகிறார் நயன்தாரா.

ஜெயம் படத்தில் அதிரடி வில்லனாக வந்தவர் கோபிசந்த். பின்னர் தெலுங்கில் ஹீரோவாக பிஸியாகிவிட்டார்.

இப்போது பூபதி பாண்டியன் இயக்கத்தில் அவர் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்தப் படம் தமிழில் நேரடிப் படமாகும். தெலுங்கிலும் வெளியாகிறது.

தனுஷ் நடித்த உத்தமபுத்திரன், தரணி இயக்கிய ஒஸ்தி, விரைவில் வெளியாகவுள்ள விஷாலின் சமரன் போன்ற படங்களைத் தயாரித்த ஜெய்பாலாஜி ரியல் மீடியா நிறுவனம் இந்தப் புதிய படத்தைத் தயாரிக்கிறது.

தேவதையைக் கண்டேன், மலைக்கோட்டை, திருவிளையாடல் என வெற்றிப் படங்களை இயக்கிய பூபதி பாண்டியன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

எகிப்து, சீனா, துருக்கி போன்ற நாடுகளின் வித்தியாசமான லொகேஷன்களில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடக்க உள்ளது.

விக்ரமின் 'தெய்வத்திருமகள்' படத்துக்கு ஒசாகா திரைப்பட விழாவில் விருது!!!

Tuesday, March 20, 2012
ஜப்பானில் நடந்த ஒசாகா திரைப்பட விழாவில், விக்ரம் நடித்த தெய்வத் திருமகள் படத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

விக்ரம் நடித்து, விஜய் அழகப்பன் இயக்கத்தில் வெளிவந்த படம், 'தெய்வத்திருமகள். 5 வயது மனநிலையில் உள்ள ஒரு இளைஞனையும், அவனுடைய பெண் குழந்தையையும் பற்றிய படம் இது.

விக்ரமுடன் அனுஷ்கா, அமலாபால், சந்தானம், பேபி சாரா ஆகியோரும் நடித்து இருந்தார்கள். யுடிவி நிறுவனத்துடன் இணைந்து மோகன் நடராஜன் தயாரித்திருந்தார். இந்த படம் ஏற்கெனவே சில திரைப்பட விழாக்களில் பங்கேற்றுள்ளது.

சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற ஒசாகா திரைப்பட விழா விருது விழாவிலும் இந்தப் படம் பங்கேற்றது. ஆசியாவின் மிக முக்கிய திரைப்பட விழாக்களில் ஒன்றாக ஓசாகா விழா பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்பட விழாவில், 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன. இதில் விக்ரமின் 'தெய்வத்திருமகள்' படம், 'God's own Child' என்ற பெயரில் ஆங்கில சப்-டைட்டிலுடன் திரையிடப்பட்டது.

இந்தப் படத்துக்கு கிராண்ட் பிரிக்ஸ் சிறந்த படம் மற்றும் சிறந்த பொழுதுபோக்கு படம் ஆகிய 2 விருதுகள் அளிக்கப்பட்டன.

விழாவில் நடிகர் விக்ரம், டைரக்டர் விஜய் அழகப்பன் ஆகிய இருவரும் கலந்துகொண்டு, விருதுகளை பெற்றுக்கொண்டார்கள்.

"கர்ணனுக்கு' போட்டியாய் களமிறங்கிய "குடியிருந்தகோவில்' : ஓயவில்லை யுத்தம்!!!

Tuesday, March 20, 2012
சிவாஜியின், "கர்ணன்' படத்திற்கு போட்டியாக, "குடியிருந்த கோவில்' படத்தை மறு வெளியீடு செய்ய வைத்து, சென்னையில் நேற்று திருவிழா கொண்டாடினர் எம்.ஜி.ஆர்., ரசிகர்கள்.

தமிழக திரையுலகில் அசைக்க முடியாத மன்னர்களாய் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் வாழ்ந்து மறைந்தவர்கள். இவர்களுக்கு மாற்று இல்லை என்கிற அளவுக்கு, திரையுலக வரலாற்றில் வசூல் சாதனை படைத்ததோடு, தமிழக ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்தவர்கள் இந்த இருவர்.இவர்களின் மறைவிற்கு முன்பும், பின்பும் எத்தனையோ நடிகர்கள் அறிமுகமாகி, குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றாலும், இவர்களின் சாதனையை முறியடிக்க முடியவில்லை; உயரத்தை தொடவில்லை. தமிழக திரையரங்குகள் பலவற்றை இப்போதும், எம்.ஜி.ஆரும், சிவாஜியும் அலங்கரித்த வண்ணம் இருக்கின்றனர்.

இன்றும் வசூல் மன்னர்கள்:நல்ல பழக்கங்களை மட்டுமே கொண்ட கதாநாயகனாக திரையில் வாழ்ந்த எம்.ஜி.ஆரும், பல சரித்திர புருஷர்களை, தேசத் தலைவர்களை நம் கண் முன் நிறுத்திய சிவாஜியும் இன்றும் வசூல் மன்னர்களாகவே தொடர்கின்றனர். அர்த்தமில்லாத இன்றைய திரைப்படங்கள் பலவற்றைப் பார்த்து வெறுத்துப்போன, சினிமா ரசிகர்கள், இவர்களின் படங்களை இன்றும் ஆராதித்து வருகின்றனர்.அதன் எதிரொலியாக, இவர்கள் நடித்து, "ஹிட்' அடித்த படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், 1960ம் ஆண்டு வெளியான சிவாஜி நடித்த, "கர்ணன்' திரைப்படம் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு, கடந்த 16ம்தேதி வெளியானது.சென்னையில் பிரபல திரையரங்குகளான சத்யம், அபிராபி உள்ளிட்டவற்றிலும் திரையிடப்பட்டு, "ஹவுஸ்புல்' காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறான் கர்ணன். ஏற்கனவே, "உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி மன்னன்' போன்ற படங்களை மறு வெளியீடு செய்த, "திவ்யா பிலிம்ஸ்' நிறுவனத்தினரே கர்ணனையும் மறு வெளியீடு செய்துள்ளனர்.

ஓயவில்லை யுத்தம்: தமிழ் திரையுலகின் இரு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆர்., - சிவாஜியின் ரசிகர்களுக்குள் அப்போது இருந்த ஆர்வம், போட்டி இப்போதும் குறையவில்லை. சிவாஜியின், "கர்ணன்' படத்திற்கு கிடைத்த வரவேற்பும், செய்யப்பட்ட விளம்பரங்களும் எம்.ஜிஆர்., ரசிகர்களை சூடேற்ற, உடனே சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா இணைந்து நடித்த, "குடியிருந்த கோவில்' திரைப்படத்தை திரையிடவைத்து, திருவிழா கொண்டாடினர்.படம் திரையிடப்பட்ட நேற்று மாலை, தியேட்டர் வளாகம் முழுக்க எம்.ஜி.ஆர்., பக்தர்களின் பேனர்களும், கட்-அவுட்களுமாக நிரம்பி வழிந்தன. புதிய ரிலீஸ் படம் போல் உற்சாகம் பொங்க, தியேட்டரில் குவிந்த ரசிகர்கள், எம்.ஜி.ஆரின் கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

பால், பழம், பன்னீர் என்று விதவிதமான அபிஷேகங்கள் ஒருபுறம் நடக்க, மறுபுறம் ரசிர்கர்களும், ரசிகைகளும் குத்தாட்டம் போட்டு குஷியாகினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அ.தி.மு.க.,வில் எந்த பொறுப்பும் இல்லாத, எம்.ஜி.ஆரின் பக்தர்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.எம்.ஜி.ஆர்., ரசிகர்களின் இந்த கொண்டாட்ட விவகாரம் சிவாஜி ரசிகர்களுக்கும் கசிய, அவர்களும் நேற்று மாலை சிவாஜியின் கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் நடத்தியது ஹைலைட்.