Wednesday, May 16, 2012

டர்ட்டி பிக்சரில் கவர்ச்சியாக நடிக்க ரூ 2.5 கோடி சம்பளமா? - மறுக்கிறார் நயன்தாரா!!!

Wednesday,May,16,2012
போன வருஷம் முழுவதும் நயன்தாராவுக்கு பெரிதாக படங்கள் இல்லை. அவர் நடித்த ஒரே படம் தெலுங்கு ஸ்ரீராமராஜ்யம்தான்.

ஆனால் இந்த ஆண்டு நயன்தாராதான் டாப் இடத்தில் இருக்கிறார். இந்திப் பட நடிகைகளுக்கு இணையாக கோடிகளில் சம்பளம்.

இந்தியில் பெரும் வெற்றி பெற்ற தங்கள் டர்ட்டி பிக்சர் படத்தை தமிழில் ஏக்தா கபூர் ரீமேக் செய்கிறார். இந்தப் படத்தில் நயன்தாராதான் நடிக்கப் போவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இந்தப் படத்தில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக இருக்கும் என்பதால், அதற்காக ரூ 2.5 கோடியை சம்பளமாக நயன்தாராவுக்குத் தர ஏக்தா கபூர் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து நயன்தாரா தரப்பில் இதுவரை எதுவும் கூறப்படவில்லை. இப்போது மறுப்பு தெரிவித்துள்ளார்.

"டர்ட்டி பிக்சர் படத்தை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு ரொம்பப் பிடித்த படம். அதில் நடிக்க எனக்கும் ஆர்வமாக உள்ளது. ஆனால் இதுபற்றி யாரும் என்னிடம் பேசவில்லை என்பதுதான் உண்மை. அதற்குள் எனக்கு எவ்வளவு சம்பளம் என்றெல்லாம் செய்தி வெளியானது எப்படி என்றுதான் தெரியவில்லை," என்றார் நயன்தாரா.

பெரிய படங்களில் நடிகைகள் இப்படித்தான் கமிட் ஆகிறார்கள் போலிருக்கிறது

உதயநிதியை தொடர்ந்து விஜய்?!!!

Wednesday,May,16,2012
முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படம் முடிந்ததும் அடுத்ததாக விஜய் நடிக்கப்போகும் படம் எது? என்ற கேள்வி தான் தமிழ் சினிமாவின் தற்போதைய ஹாட் கேள்வியாக உள்ளது. இயக்குனர் கவுதம் மேனனின் யோஹான், மதராசப்பட்டினம் இயக்குனர் விஜய் என சில இயக்குனர்கள் விஜய்யை வைத்து படம் இயக்கபோவதாக அறிவித்துள்ளனர்.

இயக்குனர் விஜய் இதை பற்றி அறிவித்ததோடு சரி அதை பற்றி எவ்வித தகவலும் வெளியிடவில்லை. ஆனால் கவுதம் வாசுதேவ் மேனன் ‘யோஹான் ஜூலை மாதத்திலிருந்து தனது பயணத்தை துவங்குவான்’ எனக் கூறியிருக்கிறார். ஆனால் விஜய் தரப்பிலிருந்து இந்த அறிவிப்பிற்கு எவ்வித ரெஸ்பான்சும் வராததால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் கோடம்பாக்கத்தில் பரப்பாக பேசப்படும் சங்கதி, விஜய் அடுத்ததாக நடிக்கவிருப்பது இயக்குனர் ராஜேஷ் படத்தில் தானாம். சமீபத்தில் ராஜேஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ’ஓ.கே ஓ.கே படம்’ கலெக்‌ஷனை அள்ளியது.

இயக்குனர் ராஜேஷும் விஜய்யும் இணைவதற்கு என்ன காரணம் என்றால் முழுநீள காமெடிப் படத்தில் நடிக்கவேண்டும் என விஜய் சமீபத்தில் கூறியது தானாம். அதற்காகத் தான் விஜய் ஜனவரி மாதம் முதல் தேதிகளை எந்த இயக்குனருக்கும் ஒதுக்கவில்லையாம்.

துப்பாக்கி படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்துவிட்டு கவுதம் வாசுதேவ் மேனன் படத்திலும் ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பாரா என்ற மற்றொரு கேள்வியை முன் வைக்கிறது தமிழ் சினிமா?

கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Wednesday,May,16,2012
சமுத்திரக்கனி இயக்கும் புதிய படத்தில் 2 வேடத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி.

சச்சின் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் பரிசாக பெற்ற த்ரிஷா, அதை பொக்கிஷமாக பாதுகாக்கிறாராம்.

சிம்புவை வைத்து இயக்குவதாக கூறிய ‘வட சென்னைÕ படத்தை இயக்குனர் வெற்றிமாறன் கைவிடவில்லையாம்.

மலையாளத்தில் படங்கள் இல்லாமல் கன்னடத்துக்கு சென்ற பாவனா, மீண்டும் திருவனந்தபுரம் லாட்ஜ் மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

இனி வருடத்துக்கு ஒரு படம் இயக்க முடிவு செய்திருக்கிறாராம் பாலாஜி சக்த¤வேல்.

கோடம்பாக்கம் கோடங்கி : அலறும் டான்ஸ் மாஸ்டர்!!!

Wednesday,May,16,2012
பாலிவுட்ல ரிட்டயர்டு நடிகைகள் படம் இயக்குறாங்களாம்.... நந்தித நடிகையை தொடர்ந்து, இப்போ அந்த ஆசை மனிஷ நடிகைக்கும் வந்திருக்காம். அதுக்கான ஸ்கிரிப்ட் தயாரிக்க ந¤றைய நேரம் செலவிடுறாராம். ஏற்கனவே பெண் இயக்குனருங்க இயக்குன படங்கள டிவிடில பாக்க¤றதோட ந¤றைய வெளிநாட்டு படங்களையும் பாக்குறாராம்... டைரக்ஷன் பண்றதுக்காக இப்போதான் தயாராயிட்டிருக்கேன். கூடிய சீக்கிரமே பெண்களுக்கு ஆதரவான ஒரு படத்தை இயக்குவேன்னு பாக்க¤றவங்ககிட்டயெல்லாம் மனிஷ நடிகை சொல்றாராம். சொந்த சோகக் கதையைத்தான் நடிகை படமாக்கப்போறதா பாலிவுட்ல பேசிக்கிறாங்களாம்...

உச்சநடிகரோட ஆட்டோக்கார கதை படத்தை தாடிக்கார டான்ஸ் மாஸ்டரு இந்தியில உல்டா பண்ணப்போறதா தகவல் வந்துச்சு... இது தெரிஞ்சு, நிறைய பேர் மாஸ்டர்கிட்ட விசாரிச்சாங்களாம்... விசாரிச்சாங்களாம்... மாஸ்டரு அலறிப்போயிட்டாராம். ஒரிஜனல் பட கம்பெனி விசாரிக்கிறதுக்கு முன்னாடி, நாமளே சொல்லிடலாம்னு, Ôஅப்படி எதுவும் ஐடியா இல்லை. அந்த படத்தை உல்டா பண்ணலேÕன்னு மாஸ்டரு விளக்கம் கொடுத்துட்டாராம்...

அங்காடி நடிகை கவர்ச்சிக்கு மாறினதால வாய்ப்புகள் வருதாம்... டோலிவுட்ல தர்ற பேமென்ட்டுக்கு நடிகை டூ பீஸ்ல நடிக்க சம்மதிப்பாருன்னு பேசுறாங்களாம்... காத்துவாக்குல இதை கேள்விப்பட்ட சில டோலிவுட் இயக்குனருங்க அங்காடி நடிகைகிட்ட கால்ஷீட் கேட்டிருக்காங்களாம். இந்த நேரத்துல கிளாமரா என்டர் ஆன டாப் இடத்த பிடிச்சிடலாம்னு ஆசை காட்டுறாங்களாம். காசும், டாப் இடமும் அங்காடி நடிகைக்கு ஆசையை மூட்டிவிட்டிருக்காம்...

அதிக சம்பளத்தில் வாய்ப்பு வந்தும், அஜீத்துக்காக கன்னட படத்தை உதறினார் நயன்தாரா!!!

Wednesday,May,16,2012
அதிக சம்பளத்தில் வந்த கன்னட பட வாய்ப்பை அஜீத்துடன் நடிப்பதற்காக நிராகரித்தார் நயன்தாரா. பிரபுதேவாவுடன் காதல் முறிந்த பிறகு முழு வீச்சில் சின¤மாவில் கவனம் செலுத்துகிறார் நயன்தாரா. தெலுங்கில் 2 படங்களில் நடிக்கும் அவர், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், ஆர்யா, டாப்ஸி நடிக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். இதில் அவர், அஜீத்துக்கு ஜோடி. இப்பட ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதற்க¤டையே கன்னடத்தில் சுதீப் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு வாய்ப்பு வந்தது. ஏற்கனவே உபேந்திராவுடன் சூப்பர் கன்னட படத்தில் நயன்தாரா நடித்தார். அப்படத்துக்காக அவருக்கு ரூ.50 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. கன்னட சினிமாவில் பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஒரே நடிகை என்ற பெருமையும் நயன்தாராவுக்கு கிடைத்தது.

இதையடுத்து இப்போது வாய்ப்பு வந்துள்ள சுதீப் படத்துக்காகவும் நயன்தாராவுக்கு பெரிய தொகையை சம்பளமாக தர தயாரிப்பு நிறுவனம் முன்வந்தது. கால்ஷீட் கூட குறைவான நாட்கள்தான். ஆனால் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் நயன். காரணம், அஜீத் படம். அடுத்த மாதம் முதல் அஜீத் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருப்பதாலும் அடுத்தடுத்த மாதங்களில் அப்பட ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளதாலும் இம்முடிவை எடுத்துள்ளார். இது பற்றி நயன் தரப்பினர் கூறும்போது, கால்ஷீட் பிரச்னை ஏற்படுவதால் சுதீப் படத்தில் நடிக்கவில்லை. சம்பளத்தைவிட கொடுத்த வாக்குறுதிதான் நயன்தாராவுக்கு முக்கியம். அஜீத் படத்தில் குறிப்பிட்ட தேதிகளில் நடிப்பதாக வாக்கு கொடுத்துவிட்டார். அதை மாற்றிக் கொள்ள மாட்டார் என்றனர்.

சென்சார் சொல்லியும் கேட்கவில்லை : குத்துபாட்டை நீக்க இயக்குனர் மறுப்பு!!!

Wednesday,May,16,2012
சென்சார் போர்டு நீக்கச் சொல்லியும் குத்துப்பாட்டை நீக்க மறுத்ததால் படத்துக்கு ‘ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது. அருண்ராஜ், லாவண்யா, பிரியா உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘முத்து பேச்சி. இப்படத்தை இயக்கும் கே.ஜி.சாய்ராம் கூறியதாவது: ஹீரோவுக்கு ஒரு பெண்ணுடன் காதல் மலர்கிறது. அந்த காதலால் ஏற்படும் பின்விளைவுகள் மோதலாக மாறி கலவரமாகிறது. இந்த காதல் வெற்றி பெறுகிறதா என்பதை நட்பை மையமாக வைத்து படம் கூறுகிறது. திருநெல்வேலி, வள்ளியூர், தளவாய்புரம் போன்ற இடங்களில் ஷூட்டிங் நடந்துள்ளது.

இப்படத்தை சென்சாருக்கு போட்டு காட்டியபோது மது குடிப்பதுபோல்வரும் காட்சிகளை நீக்கச் சொன்னார்கள். லாவண்யா நடனம் ஆடிய ‘சரக்கு சரக்கு சரக்குÕ என்ற வரிகளுடன் தொடங்கும் குத்து பாடலை நீக்கினால் ‘யூÕ சர்டிபிகேட் தருவதாக சென்சார் அதிகாரிகள் கூறினர். ரூ.3 லட்சம் செலவில் இப்பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அவர்கள் சொன்ன காட்சிகளை நீக்கினால் கதை வலுவிழந்துவிடும் என்பதால் நீக்க மறுத்துவிட்டேன். இதையடுத்து ‘ஏ சான்றிதழ் கொடுத்தார்கள். தணிக்கை விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் தரமான படங்களில்கூட ஒன்றிரண்டு காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு ‘ஏ சான்று கொடுக்கப்படுகிறது. இது வருத்தமளிக்கிறது

ஷங்கர் படத்தில் பிசி.ஸ்ரீராம்?!!!

Wednesday,May,16,2012
ஷங்கர் தனது அடுத்தப் படத்தின் வேலைகளில் மூழ்கியிருக்கிறார். இனி அவர் மூச்சு விடுவது படப்பிடிப்பு முடிந்த பிறகுதான். இந்தமுறை அவருக்கு கதை, வசன இலாகாக்களில் உதவி செய்கிறவர்கள் இரட்டை எழுத்தாளர்கள் சுபா.

விக்ரம் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். யூக செய்திதானே தவிர இதுவரை அதிகார‌ப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. ஸ்கி‌ரிப்ட் முழுமையடைந்த பிறகே ஹீரோயின் வேட்டை. இந்நிலையில் இரு கூடுதல் தகவல்கள் இந்தப் படத்தை சுற்றுகின்றன.

ஒன்று படத்துக்கு ஷங்கர் தேர்தல் என்ற பெயரை தேர்வு செய்திருக்கிறாராம். இரண்டு, கேமராமேன் அனேகமாக பி.சி.ஸ்ரீராமாக இருக்கலாம். ஹீரோ விக்ரம் என்ற தகவலுடன் இதனையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

சச்சின் தெண்டுல்கரை எனக்கு பிடிக்கும் -திரிஷா!!!

Wednesday,May,16,2012
.பி.எல். கிரிக்கெட் ஜுரம் நாடு முழுவதும் பரவியுள்ளது. நடிகர்-நடிகைகளையும் அதுவிட்டு வைக்கவில்லை. படப்பிடிப்பு இடைவேளையில் நண்பர்களுக்கு போன் போட்டு ஸ்கோர் கேட்ட வண்ணம் உள்ளனர்.

நடிகை திரிஷாவோ தெண்டுல்கர் கிரிக்கெட் பேட் ஒன்று திடீரென தனக்கு கிடைத்ததாக மகிழ்ச்சியில் குதிக்கிறார். தனியார் நிறுவனம் ஒன்று முக்கிய பிரமுகர்களுக்கு சச்சின் தெண்டுல்கர் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டை அனுப்பியுள்ளது. திரிஷாவுக்கும் அந்த பேட் வந்துள்ளது. இது குறித்து திரிஷா கூறியதாவது:-

சச்சின் தெண்டுல்கர் விளம்பர தூதராக உள்ள நிறுவனம் ஒன்று அவர் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டை வாங்கி முக்கிய வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ளது. எனக்கும் வந்துள்ளது. இது மறக்க முடியாத பரிசு.

நான் கிரிக்கெட் ரசிகை அல்ல. ஆனால் சச்சின் தெண்டுல்கரை எனக்கு பிடிக்கும். அவர் அற்புதமான மனிதர். நாகரீகம் தெரிந்தவர். சில பிரபலங்களை நமக்கு பிடிக்கும். ஏன் என்று சொல்ல தெரியாது. அதுபோல் சச்சின் மேல் எனக்கு பற்று உள்ளது.

ஸ்ருதிஹாசன் - கடைசியாக கிடைத்த வெற்றி!!!

Wednesday,May,16,2012
ஸ்ருதிஹாசன் குறுகிய காலத்தில் இந்தி, தெலுங்கு, தமிழ் என மும்மொழிகளில் நடித்துவிட்டார். ஆனால் வெற்றி என்ற மூன்றெழுத்து மட்டும் அவருக்கு எட்டமாகவே இருந்தது. 7 ஆம் அறிவு, 3 கூட பெ‌ரிய வெற்றி என்று சொல்ல முடியாது.

இந்த விளம்பர வெற்றிகளைத் தாண்டி நிஜமான முதல் வெற்றியை தெலுங்கில் அறுவடை செய்திருக்கிறார் ஸ்ருதி.

பவன் க‌ல்யாணுடன் இவர் நடித்த கப்பர் சிங் வெளியா‌கியு‌ள்ளது. இதில் ஸ்ருதிக்கு சின்ன ரோல்தான். ஆனாலும் இவர்தான் ஹீரோயின். இந்தப் படம் ஆந்திராவில் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது கொமரம் புலி, பன்சா என்று அடுத்தடுத்து பஞ்சரான பவன் கல்யாணின் மார்க்கெட்டை இந்தப் படம் தூக்கி நிறுத்தியிருக்கிறது.

கப்பர் சிங் இந்தியில் வெளியான டபாங்கின் ‌ரீமேக். இப்படம் தமிழில் ஒஸ்தி என்ற பெய‌ரில் ‌ரீமேக் செய்யப்பட்டு தோல்வியடைந்தது. இதில் நடித்த ‌ரிச்சா முடிந்தவரை சொதப்பியிருந்தார். அதே நேரம் ஸ்ருதிஹாசன் தெலுங்கில் நிறைவாக செய்திருப்பதாக பாராட்டுகள் குவிகின்றன.

'டேம் 999' படம் அரசியல் கதை என்பது தெரியாமல் நடித்துவிட்டேன்: வினய் வருத்தம்!!!

Wednesday,May,16,2012
முல்லை பெரியாறு அணை உடைவது போன்று கேரள இயக்குனர் சோஹன் ராய் எடுத்து கடந்த வருடம் ரிலீஸ் செய்த ‘டேம் 999’ படத்துக்கு தமிழகமெங்கும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தமிழக அரசு இப்படத்துக்கு தடை விதித்தது.

இதில் வினய் கதாநாயகனாக நடித்து இருந்தார். இவர் ஏற்கனவே தமிழில் ‘உன்னாலே உன்னாலே’, ‘ஜெயம் கொண்டான்’, ‘மோதி விளையாடு’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது மாதேஷ் இயக்கும் ‘மிரட்டல்’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

மிரட்டல் படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்த வினய்யிடம் தமிழர்களுக்கு எதிரான ‘டேம் 999’ படத்தில் நடித்தது ஏன் என்று நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த வினய் கூறியதாவது:-

‘டேம் 999’ படத்தில் நடித்தது பற்றி தமிழ் மக்களிடம் விளக்கமா சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அந்த படத்தின் கதையை என்னிடம் சொல்லி நடிக்க கேட்டனர். அதில் உள்ள அரசியல் எனக்கு அப்போது தெரியவில்லை. ஒரு படத்தக்கான கதை என்ற ரீதியில் தான் அதை பார்த்தேன். ஒரு நடிகனாக மட்டுமே அதில் நடித்தேன். அதன் பின்புலத்தில் உள்ள விஷயங்கள் சர்ச்சைகள் எதுவும் எனக்கு தெரியாது.

தமிழில் ஏற்கனவே முன்று படங்களில் நடித்து விட்டேன். இங்குள்ள ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டுள்ளனர். முன்று வருடத்துக்கு பின் மிரட்டல் படம் வருகிறது. இப்படத்தின் கதையை இயக்குனர் மாதேஷ் சொன்னபோது ரொம்ப பிடித்தது. நடிகக் சம்மதித்தேன். ஒவ்வொரு சீனையும் கவனமாக ரொம்ப மெனக்கெட்டு எடுத்துள்ளார்.

காதல், குடும்ப சென்டி மெண்ட், காமெடி ஆக்ஷன், எல்லாம் படத்தில் இருக்கிறது. சிவாஜி இல்லத்தில் இதன் படப்பிடிப்பு நடந்தபோது பிரபு குடும்பத்தினர் எனக்கு விருந்து அளித்தது மறக்க முடியாத அனுபவம் சிவாஜி ஓர் சகாப்தம் அவர் அறையை சுற்றி காண்பித்தார்கள். பிரபுவை போல் நல்ல மனிதரை காண்பது அபூர்வம்.

என்று கூறினார்.

அஜித்தை பின்பற்றி புரட்சித் தளபதி பட்டத்தை உதறிய விஷால்!!!

Wednesday,May,16,2012
அஜித்தை ரசிகர்கள் அல்டிமேட் ஸ்டார் என அழைத்து வந்தனர். அவரது படங்களில் அஜித் பெயருக்கு முன்னால் இப்பட்ட பெயர் பயன்படுத்தப்பட்டது. போஸ்டர்களிலும் அல்டிமேட் ஸ்டார் அஜித் என்றே குறிப்பிடப்பட்டன.

ஆனால் அஜித் திடீரென்று அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டப்பெயரை பயன்படுத் தக்கூடாது என தடை விதித்து விட்டார். இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடமும் படங்களில் அதை பயன்படுத்த வேண்டாம் என்று கூறிவிட்டார். இதையடுத்து வெறும் அஜித் என்ற பெயரே இடம் பெற்று வருகிறது.

அவரது வழியில் விஷாலும் புரட்சித் தளபதி என்ற பட்டத்தை திடீரென உதறிவிட்டார். சமீபத்தில் ரிலீசான அவரது படங்களின் டைட்டில்களில் புரட்சித் தளபதி விஷால் என்றே குறிப்பிடப்பட்டன. ரசிகர்களும் புரட்சித்தளபதி என போஸ்டர்கள் ஒட்டினர். ரசிகர்கள் அந்த பட்டத்தை சூட்டியதாக விஷால் கூறினார்.

இந்த நிலையில் திடீரென புரட்சித் தளபதி என்ற பட்டத்தை தனது பெயரில் இருந்து நீக்கிவிட்டார். சமீபத்தில் அவர் நடிக்கும் சமர் படம் பற்றி போஸ்டர்களும் விளம்பரங்களும் வெளியாயின. அவற்றில் புரட்சித் தளபதி இடம் பெறவில்லை. வெறும் விஷால் என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது.

சன் டிவியில் மதுரை முத்து-தேவதர்ஷினியின் புதிய காமெடி நிகழ்ச்சி!!!

Wednesday,May,16,2012
விஜய் டிவி யின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொடங்கி சில வருடங்கள் சன் டிவியின் அசத்தப்போவது நிகழ்ச்சியில் அசத்திய நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து. திடீர் விபத்தினால் சில மாதங்கள் ஓய்வில் இருந்த முத்து சன் டிவியில் புதிய நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் களம் இறங்கியுள்ளார்.

மதுரை முத்து உடன் இணைந்து காமெடியில் கலக்குபவர் தேவதர்ஷினி. ஞாயிறுதோறும் காலையில் ஒளிபரப்பாகும் இந்த காமெடி நிகழ்ச்சியில் போலீஸ் கான்ஸ்டபில் வேடத்தில் தேவதர்ஷினியும், திருடனாக மதுரை முத்துவும் சேர்ந்து காமெடி செய்ய முயற்சி செய்தனர்.

இதேபோல நிகழ்ச்சி சில பல வருடங்களுக்கு முன்பு நம்மநேரம் என்ற பெயரில் ஒளிபரப்பானது போல நினைவுக்கு வருகிறது. எது எப்படியோ காலை நேரத்தில் நிகழ்ச்சிக்குப் பஞ்சம் வந்தால் என்ன செய்வது பழைய நிகழ்ச்சியின் கருவை எடுத்து புதிய நடிகர்களை நடிக்க வைத்து தூசு தட்டி புதுசு போல ரெடி செய்து ஒளிபரப்பவேண்டியதுதானே.

சினிமாவிலேயே பழைய திரைப்படங்களை ரீமேக் செய்யும்போது தொலைக்காட்சியில் பழைய நிகழ்ச்சிகளை ரீமேக் செய்யக்கூடாதா என்ன? என்று யாரோ கேட்பது காதில் விழுகிறது.

ஞாயிறுக்கிழமை காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த கலக்கல் காமெடி நகைச்சுவை பிரியர்களுக்கு ஏற்ற நிகழ்ச்சி என்கின்றனர் இதனை பார்த்து ரசித்த காமெடி பிரியர்கள்.

பார்த்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்.

'இந்தியில் பாஷா? நோ நோ...' - பிரபு தேவா!!!

Wednesday,May,16,2012
வதந்திகளுக்கு ரொம்ப இஷ்டமானவர்களில் பிரபு தேவாவும் ஒருவர். தினசரி அவரைச் சுற்றி ஏதாவது ஒரு வதந்தி வந்து கொண்டே இருக்கும்.

அந்த வகையில் கடந்த இரு தினங்களாக அவர் பாஷா படத்த இந்தியில் இயக்கப் போவதாகவும் அதில் அஜய் தேவ்கன் நடிக்கப் போவதாகவும் தெய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இதுகுறித்து பிரபு தேவாவிடமே கேட்டபோது, "எங்கிருந்துதான் இந்த மாதிரி செய்திகள் வருகின்றனவோ தெரியவில்லையே... ரஜினி சார் நடித்த பாட்ஷா ஒரு க்ளாசிக் படம். இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

அந்தப் படத்தை ரீமேக் செய்வதெல்லாம் முடியாத விஷயம். அந்த அழகு, நம்பகத்தன்மை எதுவுமே ரீமேக்கில் இருக்காது. நான் அஜய் தேவ்கனை வைத்து படம் பண்ணுவது உண்மைதான். ஆனால் அதன் கதை வேறு," என்றார்.

இதற்கிடையே, ஜூன் 7-ம் தேதி சிங்கப்பூரில் நடக்கும் ஐஃபா விழாவின் துவக்க நாளில் பிரபு தேவா நடனமாடப் போகிறாராம். உடன் ஆடப் போகிறவர் சோனாக்ஷி சின்ஹா!

வருகிற வாய்ப்புகளை மறுப்பதில்லை! - த்ரிஷா!!!

Wednesday,May,16,2012
கன்னித்தீவு கதை மாதிரி ஆகிவிட்டது, த்ரிஷா கல்யாண செய்திகளும்... ஒரு நாள் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று வந்தால், அடுத்த நாள் புதுப்படத்தில் த்ரிஷா ஒப்பந்தம் என செய்தி வெளியாவது வழக்கமாகிவிட்டது.

'இதான் கடைசி, அப்புறம் போயிடுவேன்.. வாய்ப்பு கிடைக்காது.. உங்க படத்துக்கு ஒப்பந்தம் பண்ணிக்குங்க' என்று போக்குக் காட்டி வாய்ப்பு பெறும் டெக்னிக்கா இது என்றும் தெரியவில்லை!

போகட்டும்... தமிழில் இன்னும் இரு புதிய படங்களில் த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார் என்பதுதான் செய்தி.

தெலுங்கில் மேலும் இரு படங்கள் அவர் கைவசம் வந்துள்ளனவாம். இவை போக, விஷாலுடன் சமரில் நடித்துக் கொண்டிருக்கிறார். ரவிதேஜாவுடன் ஒரு படம் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது.

கோடியைத் தாண்டி சம்பளம்... இன்றைய தேதிக்கு அவர் பிஸியோ பிஸி.

"சினிமாவில் வாய்ப்புகள் வரும்போதே பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். அந்த வகையில் இப்போது பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறேன். எந்த நல்ல வாய்ப்பையும் மறுப்பதில்லை. காரணம் எனக்கும் நடிப்பு இன்னும் அலுக்கவே இல்லை. எனவே கல்யாணத்துக்கு இது சரியான நேரமாக எனக்குத் தெரியவில்லை.

எனக்காகப் பிறந்தவர் நிச்சயம் கொஞ்ச நாள் காத்திருக்கத்தான் வேண்டும்," என்கிறார்.

நல்ல ப்ளான்!

கோடையை கொண்டாடும் ஜெயா டிவியின் "சவால்"!!!

Wednesday,May,16,2012
கேம் ஷோ என்றாலே அது ஸ்டூடியோவுக்குள் மட்டும்தான் என்று இருந்த ட்ரெண்டை மாற்றி வெளியிடங்களிலும் வெற்றிகரமாக நடத்த முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் பிருத்விராஜ். ஜெயா டிவியில் கடந்த 13 வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் "சவால்'' நிகழ்ச்சி பலதரப்பட்ட மக்களை கவர்ந்துள்ளது.

கோடையை கொண்டாடும் விதமாக மே மாதம் முழுவதும் இந்நிகழ்ச்சி `வி.ஜி.பி. யுனிவர்சல் கிங்டம்' அரங்கில் நடைபெற்று வருகிறது.

நடிகர் பிருத்விராஜ் கலக்கலாக தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி, பல சவால்களை பலதரப்பட்டவர்களுக்கும் கொடுத்து வெற்றிவாகை சூடி வருகிறது. கோடை சிறப்பு நிகழ்ச்சியில் தமிழர்கள் மட்டுமின்றி அண்டை மாநில மக்களும் வெளிநாட்டினரும் சவாலை ஏற்க முன்வந்து வெற்றி பெற்றனர்.

சிறுவர் முதல் பெரிய வர் வரை அனைவரும் ஆர்வமாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு சாதனைகளை செய்தனர்.

இந்நிகழ்ச்சி வரும் ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிவருகிறது.

துபாயில் நமீதா பங்கேற்கும் நம்பிக்கை ஸ்வரங்கள்!!!

Wednesday,May,16,2012
துபாய்::அமீரக தமிழ்ச் சங்கம் நடத்தும் நம்பிக்கை ஸ்வரங்கள் 2012 வரும் 24ம் தேதி துபாயில் நடக்கிறது.

அமீரகத் தமிழ் சங்கம் கடந்த 2010ல் இருந்து ஆண்டு தோறும் மாற்றுத்திறனாளிகளுக்காக நம்பிக்கை ஸ்வரங்கள் என்ற கலை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி வரும் மே மாதம் 24ம் தேதி மாலை 7 மணிக்கு துபாயில் உள்ள இந்தியனை ஹை ஸ்கூலில் உள்ள ஷேக் ராஷித் அரங்கில் நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் கோலிவுட் நடிகை நமீதா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மாற்றுத்திறனாளிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் சூப்பர் சிங்கர்ஸ் அஜேஷ், சந்தோஷ், சத்ய பிரகாஷ், பூஜா, பிரசன்னா, பார்வையற்ற திருமதி சுசீலா ஆகியோர் இன்னிசை நிகழ்ச்சியும், மானாட மயிலாட கோகுல்நாத்தின் வெரைட்டி நிகழ்ச்சியும் நடக்கிறது.

நிகழ்ச்சிகளை இப்படிக்கு ரோஸ் தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் வரும் 17,18 ஆகிய தேதிகள் வழங்கப்படும். நுழைவுச் சீட்டுக்கு http://www.uaetamilsangam.com/upcomingevent.asp என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

த்ரிஷாவின் அன்னையர் தின வருத்தம்!!!

Wednesday,May,16,2012
த்ரிஷாவின் அம்மா உமா, த்ரிஷாவுக்கு அம்மா என்று சொல்லுவதை விட அவரது நெருங்கிய தோழி என்றே சொல்லலாம். அந்தளவுக்கு இருவரும் தோழிகள் போல பழகுவார்கள். த்ரிஷா தனது அம்மா மீது அவ்வளவு உயிராக இருப்பவர். தான் இந்தளவுக்கு வளர்ந்ததற்கு காரணமே தனது தாய் தான் என்று அடிக்கடி கூறுவார். அப்படி தனது அம்மா மீது பேரன்பு கொண்ட த்ரிஷாவுக்கு அன்னையர் தினத்தன்று ஒரு சிறு வருத்தம். அதாவது அன்னையர் தினத்தன்று தனது தாயுடன் நேரத்தை செலவழிக்க முடியவில்லையே என்பது தான். அன்றைய தினம் மைசூரில் ஒரு விளம்பர படத்திற்கான சூட்டிங் இருந்ததால் அவரால் தனது தாயுடன் நேரத்தை செலவழிக்க முடியவில்லையாம். இருந்தும் தனது தாயை போனில் அழைத்து அன்னையர் தின வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். மேலும் தனது வலைதளத்திலும் ஐ லவ் யு மாம், ஹேப்பி மதர்ஸ் டே என்று வாழ்த்து மழை பொழிந்துள்ளார்.

பெண் இயக்குனரை குறைத்து மதிப்பிடுவதா? நடிகை கோபம்!!!

Wednesday,May,16,2012
பெண் இயக்குனர்களை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். ‘யுத்தம் செய்Õ படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் மொட்டை அடித்து நடித்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன். அவர் ‘ஆரோஹணம் என்ற படத்தை இயக்குகிறார். அவர் கூறியதாவது:
திடீரென்று காணாமல் போகும் அம்மாவை தேடி அலைகிறான் மகன். அவரை கண்டுபிடித்து அழைத்து வந்தானா என்பதுதான் கதை கரு. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. இந்த சம்பவம் என் கண்முன் நடந்தது. ஆனால் ஒருநாளில் முடிந்த சம்பவம் அல்ல. பல வருடம் கண்ட காட்சிகளை படமாக்கி இருக்கிறேன். ஒரே நாளில் நடப்பதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அம்மா வேடத்தில் சரிதாவின் சகோதரி விஜி நடித்திருக்கிறார். மகனாக விரேஷ், மகளாக ஜெகெஹனி நடிக்கின்றனர். சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு. கே இசை. இதன் ஷூட்டிங் 20 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டது.
பெண் இயக்குனர்களால் கமர்ஷியல் படங்கள் எடுக்க முடியாது என்று குறைத்து மதிப்பிடுகிறார்கள். அது தவறான கருத்து. எத்தனையோ பெண் இயக்குனர்கள் கமர்ஷியல் படங்கள் இயக்கி இருக்கிறார்கள். ஸ்கிரிப்ட் எழுதுவதை கமல்ஹாசன் நடத்திய பயிற்சி கூடத்தில்தான் கற்றேன். ஒரு ஸ்கிரிப்ட்டை எத்தனை விதமாக மாற்றலாம் என்பதை அவர் சொல்லிக்கொடுத்தார். அந்த அனுபவத்தில்தான் இப்படத்தை உருவாக்கி இருக்கிறேன். ஆரோஹணம் படமே நெத்தியடியான கமர்ஷியல் படமாக இருக்கும். இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறேன்.