Sunday, May 6, 2012

ஹன்சிகாவுக்கு சிம்பு சிபாரிசு : கோடம்பாக்கத்தில் பரபரப்பு!!!

Sunday, May, 06, 2012
சிம்பு சிபாரிசால் அவரது புதிய படத்திலும் ஜோடியாக நடிக்கிறார் ஹன்சிகா. இருவரையும் இணைத்து கிசுகிசு கிளம்பியுள்ளதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேட்டை மன்னன் படத்தில் சிம்பு ஜோடியாக நடித்து வருகிறார் ஹன்சிகா. இப்படம் மூலம் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். இந்நிலையில் வாலு படத்தில் மீண்டும் ஹன்சிகாவே ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று சிம்பு கூறி வந்தார். தற்போது அவர் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இப்படத்தின் முன்னோட்ட காட்சிகளுக்காக நேரம் ஒதுக்கி ஹன்சிகா நடித்துக்கொடுத்தார். இதுபற்றி ஹன்சிகா கூறும்போது,‘‘சிம்புவுடன் நடிக்கும் அடுத்த படத்துக்கான முன்னோட்ட காட்சியில் நடிப்பதற்காக சென்னையில் தங்கி இருக்கிறேன்.

இருவரும் விதவிதமான காஸ்ட்யூம்களில் ஜோடியாக தோன்றும் போட்டோ ஷூட் நடந்தது. ஆனால் இப்படத்தின் ஷூட்டிங் ஒன்றிரண்டு மாதத்துக்கு பிறகுதான் தொடங்குகிறது’’ என்றார்.
‘வாலு’ படத்தை புது இயக்குனர் விஜய் இயக்குகிறார். சந்தானம், கணேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். தமன் இசை அமைக்கிறார். ஒரே ஜோடியை ரிபீட் செய்யாமல், ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு ஹீரோயினுடன் நடிக்க வேண்டும் என சிம்பு முடிவு எடுத்திருந்தார். ஆனால் அந்த முடிவை அவரே கைவிடும் வகையில் ஹன்சிகாவுடன் மீண்டும் நடிக்கிறார். இருவருக்கும் இடையே நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளது. எனவேதான் ஹன்சிகாவுக்கு சிம்பு சிபாரிசு செய்துள்ளதாக கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்துள்ளது.

மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த வில்லன் நடிகர்!!!

Sunday, May, 06, 2012
மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தார் வில்லன் நடிகர் லால். தமிழில் பல்வேறு படங்களில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார் லால். தற்போது மலையாள படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஒசிமுரி என்ற படத்தில் 4 வேடங்களில் நடிக்கிறார். தன்னை யாரும் அடையாளம் கண்டுவிடாதபடி மாறுபட்ட கெட்டப்பில் நடிக்கிறார். வெவ்வேறு தோற்றம் என்பதால் மாறுபட்ட விக் பயன்படுத்துகிறார். இதற்காக தலையை வழுக்கையாக்கியதுடன், அடர்த்தியான தாடியை நீக்கி புதிய தோற்றத்துக்கு மாறிவிட்டார். இதற்கிடையில் மணிரத்னம் இயக்கும் கடல் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. தாடியுடன் ஒரிஜினல் தோற்றத்தில் மாதக்கணக்கில் கால்ஷீட் கேட்டிருந்தார் மணிரத்னம்.

ஆனால் மீசை, தாடி இல்லாமல் மலையாள படத்தில் நடிப்பதால் ஒரிஜினல் தாடியுடன் மாதக்கணக்கில் நடிக்க கால்ஷீட் தர முடியாது என்று கூறிவிட்டார் லால். நடிப்பு, இயக்கம், ஸ்கிரிப்ட் எழுதுதல், தயாரிப்பு என பல பொறுப்புகளை ஏற்கும் லாலிடம், ‘இவற்றில் எளிதான வேலை எது என்றபோது, ஒரு நடிகர் என்றால் அவருக்கு ஒரு கவலைதான். புதிய படத்தில் தொடக்க நாட்களில் யூனிட்டுடன் பழகுவதற்கு நேரம் தேவைப்படும். பழகியபின் அதுதான் ரொம்பவும் வசதியான வேலை. மற்ற வேலைகளில் பொறுப்பு அதிகம்Õ என்றார்.

சனி பகவான் கோவில் வாசலில் ஷகீலாவை வைத்து ஷூட்டிங்-பக்தர்கள் டென்ஷன்!!!

Sunday, May, 06, 2012
திருநள்ளாரில் உள்ள புகழ் பெற்ற சனி பகவான் கோவில் வாசலை அடைத்தபடி பயங்கர கவர்ச்சி நடிகை ஷகீலாவை வைத்து ஷூட்டிங் நடத்தியதால் மக்கள் கடும் எரிச்சலடைந்தனர்.

பொது இடங்களில் மக்கள் அதிகம் செல்லும் இடங்களில், குறிப்பாக ஆன்மீகத் தலங்களில் சினிமாக்காரர்கள் செய்யும் அட்டாகசத்திற்கு அளவே இல்லாமல் போய் விட்டது.

கோவில்களில் படப்பிடிப்பு என்ற பெயரில் அவர்கள் நடந்து கொள்வது கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகங்களை சுழிக்க வைப்பதாக உள்ளது. இந்த நிலையில் திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் ஷகீலாவை வைத்து நடந்த படப்பிடிப்பால் மக்கள் கடுப்பாகி விட்டனர்.

ரவி என்பவர் தானே ஹீரோவாக நடித்து, இயக்கி உண்மை என்ற பெயரில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கை திருநள்ளார் கோவில் நளன் குளம், கோவில் ராஜகோபுரம் உள்ளிட்ட இடங்களில் வைத்திருந்தனர்.

கோவில் வாசலை கிட்டத்தட்ட முக்கால்வாசி அடைத்தபடி படப்பிடிப்பை நடத்தினர். அதில் கவர்ச்சி நடிகை ஷகீலா, காமெடியன்கள் வையாபுரி, போண்டா மணி, அல்வா வாசு, பாண்டு உள்ளிட்டோர் கலந்து கொண்டு காமெடி செய்வதாக காட்சி.

இதனால் பக்தர்களால் கோவிலுக்குள்ளே போகவும் முடியவில்லை, உள்ளிருந்து வெளியேறவும் முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர். ஷகீலாவை யாரும் எதுவும் செய்து விடாமல் தடுக்கும் வகையில், படப்பிடிப்புக் குழுவினர் வேறு ஏகப்பட்ட பந்தாக்களைச் செய்தபடி இருந்தனர்.

போலீஸாரின் முழு பாதுகாப்புடன் ஷூட்டிங் தொடர்ந்ததால் மக்கள் கடும் அதிருப்தியைடந்தனர்.

பரதேசியில் பூஜா இல்லை, தன்ஷிகாவாம்!!!

Sunday, May, 06, 2012
பாலாவின் பரதேசி படத்தில் இருந்து நடிகை பூஜா நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அரவாண் புகழ் தன்ஷிகா நடிக்கிறார்.

இயக்குனர் பாலா இயக்கும் பரதேசி படத்தில் பூஜா தான் நாயகி என்று அறிவிப்பு வெளியானது. நீண்ட நாட்களாக கோலிவுட்டில் காணாமல் போன பூஜா இதன் மூலம் மறுபிரவேசம் செய்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. இந்நிலையில் அந்த படத்தில் இருந்து பூஜா நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் அரவாண் புகழ் தன்ஷிகா நடிக்கிறாராம்.

படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பூஜா கூறுகையில்,

நான் வேறொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். அந்த பட ஷூட்டிங்கிற்காக ஆஸ்திரேலியா செல்கிறேன். கால்ஷீட் பிரச்சனையால் தான் பாலா படத்தில் நடிக்க முடியவில்லை என்றார்.

பாலாவின் நான் கடவுள் படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது வாங்கினார் பூஜா. அதன் பிறகு கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த துரோகி படத்தில் கௌரவ வேடத்தில் வந்த பூஜாவை அடுத்து பார்க்கவே முடியவில்லை. இனி எப்பொழுது தான் கோலிவுட்டுக்கு வருவாரோ தெரியவில்லை.

'குனிஞ்சி நிமிர்ந்த'ததை க்ளிக்கியவருக்கு குத்துவிட்ட நடிகை!!!

Sunday, May, 06, 2012
கொஞ்சம் ;அரோகன்டான' நடிகை என்றுதான் அம்மணிக்கு பெயர். குணத்தில் மட்டுமல்ல, ஒன்றாக இருக்கும் குடும்பத்தைப் பிரிப்பதிலும் நடிகையின் மூர்க்கம் கோடம்பாக்கம் அறிந்தததுதான்.

மிக சமீபத்தில் அண்மையில் ஒரு பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருக்கிறார் இந்த நடிகை. ஏடாகூடமான உடையில், எக்கச்சக்க கவர்ச்சி ததும்ப வந்திருந்தாராம்.

அவர் ஒவ்வொரு முறை குனிந்து நிமிரும்போதும் புகைப்படக்காரர்கள் வேறு பக்கம் பார்க்கும்படி இருந்ததாம் நிலைமை. அவர் எதையும் கண்டு கொள்ளாமல், மீண்டும் மீண்டும் குனிந்து நிமிர, எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு க்ளிக் அடித்திருக்கிறார் போட்டோகிராபர்.

அவ்வளவுதான். கோபத்தின் உச்சிக்கே போய்விட்ட நடிகை, போட்டோகிராபரை அருகில் அழைத்து பளார் விட்டாராம். கடுமையாக அவரை எச்சரித்ததோடு, அந்த போட்டோக்களையும் அழித்துவிட்டாராம்.

கன்னத்தைத் தடவிக் கொண்டே, கேமராவைக் கொடுக்கும்போது நடிகை குனிந்து நிமிர்ந்ததை கடைசியாகப் பார்த்தபடி வெளியேறினாராம் போட்டோகிராபர்!

இவன நிறுத்த சொல்லு! - கொதிக்கிறார் விஜய் படத்தின் இயக்குனர்!!!

Sunday, May, 06, 2012
கடந்த மே-1 ஆம் தேதி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. ‘துப்பாக்கி’ திரைப்படத்தின் இந்த விளம்பர போஸ்டரில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி பெரிய அளவிலும், முதன்மையாகவும் இடம்பெற்றுள்ளது.

பசுமை தாயகத்தின் மாநில செயளாலர் சௌமியா அன்புமணி இது போன்ற காட்சிகளை படத்திலிருந்து நீக்கி நீதிமன்றம் வகுத்துள்ள அரசாணைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்நிலையில் மற்றொரு சமூக ஆர்வலரான வி.செல்வகுமார் நேற்று (04-05-12) சென்னை கமிஷனர் அலுவகத்தில் அளித்துள்ள புகாரில் ”துப்பாக்கி படத்தின் விளம்பரத்தில் இந்திய புகையிலை எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக விஜய் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருப்பதால் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், விளம்பரத்தில் நடித்த நடிகர், மேலும் விளம்பர போஸ்டரை உருவாக்க உதவியாக இருந்தவர்கள் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியும், அந்த போஸ்டர்களை பொது இடங்களில் இருந்து நீக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

துப்பாக்கி படத்தின் மீது மேலும் மேலும் வழக்குகள் போடப்படுவதால் டென்ஷனான துப்பாக்கி படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு இந்தி திரைப்படத்தின் விளம்பர போஸ்டரை டுவிட்டரில் போட்டு “இவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்” என்று டுவீட்டியிருக்கிறார். அந்த ஃபோட்டோவில் ஒருவர் மற்றொருவரை கொலை செய்வது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.