Thursday, January 26, 2012

சென்னையில் ரிலீஸ் ஆகாத தமிழ்ப்படம்!!!

சிவாஜி, சுஜாதா ஜோடி சேர்ந்த படம் ‘அந்தமான் காதலி’. முக்தா சீனிவாசன் இயக்கினார். எம்.எஸ்.வியின் இசையில் யேசுதாஸின் குரலில் ஹிட் பாடல்கள் இடம்பெற்ற படம். கவிதா, சுகுமாரி, மனோரமா, தேங்காய் சீனிவாசன் ஆகியோருடன் தெலுங்கு ஹீரோ சந்திரமோகனும் நடித்திருந்தார். ‘பேய் மனைவி’ என்ற நாவலை தழுவி மலையாளத்தில் ‘ரக்ஷகானம்’ என்ற பெயரில் படம் வெளியானது. இதை ஷீலா இயக்கி இருந்தார். இதே படம் தெலுங்கில் கிருஷ்ணா நடிப்பில் ‘தெவுடு கௌ¤ச்சாடு’ என ரிலீஸ் ஆனது. அந்த படம்தான் தமிழில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ பெயரில் உருவானது. துரை இயக்கியிருந்தார். பத்திரிகையாளர் மதிஒளி சண்முகம் திரைக்கதை, வசனங்களை எழுதினார். ரஜினிகாந்த், லதா, விஜயகுமார், பத்மபிரியா, மனோரமா, புஷ்பலதா, சுருளிராஜன், மதிஒளி சண்முகம் நடித்திருந்தனர்.

அரசு திரைப்பட கல்லூரிக்கு தனி மதிப்பு தந்த படம் ‘அவள் அப்படித்தான்’. காரணம், இந்த படம் மூலம்தான் திரைப்பட கல்லூரி மாணவர்களாலும் சாதிக்க முடியும் என தமிழ் சினிமாவில் நிரூபிக்கப்பட்டது. திரைப்பட கல்லூரி மாணவரான சி.ருத்ரைய்யா, கதை மற்றும் வசனங்கள் எழுதி தயாரித்து இயக்கினார். திரைக்கதையை அவருடன் சேர்ந்து வண்ணநிலவன், சோமசுந்தரேஷ்வர் ஆகியோர் எழுதினர். திரைப்பட கல்லூரி மாணவரான நல்லுசாமி ஞானசேகர் ஒளிப்பதிவு செய்திருந்தார். கண்ணதாசனுடன் சேர்ந்து கங்கை அமரன் பாடல்களை எழுதினார். இளையராஜா இசையமைத்தார். கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, சிவச்சந்திரன், குட்டி பத்மினி ஆகியோருடன் கவுரவ வேடத்தில் சரிதா நடித்தார். படம் சிறப்பாக ஓடியது.

எஸ்.ஏ.சந்திரசேகரன் சினிமா உலகிற்கு பிரவேசமானது இந்த ஆண்டு தான் (1978). எஸ்.சி.சேகர் என்ற பெயரில் படத்தை தயாரித்து, எழுதி, இயக்கினார். படத்தின் பெயர் ‘அவள் ஒரு பச்சை குழந்தை’. அவரது மனைவி ஷோபா பின்னணி பாடகியாக இப்படத்தில் அறிமுகமானார். வ¤ஜயகுமார், பவானி நடித்தனர். ரஜினி, ஸ்ரீபிரியா, மனோரமா, கீதா, சுருளிராஜன் நடித்த படம் ‘பைரவி’. பாஸ்கர் இயக்கினார். கதை எழுதி கலைஞானம் தயாரித்தார். சிவகுமார் இரட்டை வேடம் ஏற்ற படம் ‘சிட்டுக் குருவி’. நாயகியாக சுமித்ரா நடித்தார். தேவராஜ் மோகன் தயாரித்து இயக்கினர். திரைக்கதை, வசனங்களை வாலி எழுதினார். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கமல், ரஜினி ஜோடி திரையுலகில் ராஜ¢ஜியம் செய்து கொண்டிருந்தது. யாரை பார்த்தாலும் இந்த ஜோடியை நடிக்க வைக்கவே விரும்பினர். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படங்களும் தொடர்ந்து ஹிட்டானதால் இருவரின் கால்ஷீட்டுக்கு ஏகப்பட்ட டிமாண்ட். டிரெண்டுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்ட இயக்குநர் ஸ்ரீதரும் இவர்களை வைத்து படம் எடுத்தார். அதுதான் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’. இளையராஜா இசையமைத்தார். ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா, கோபாலகிருஷ்ணன், ஒய்.ஜி. பார்த்தசாரதி நடித்தனர். பாலசந்தருடன் கலக்கிக் கொண்டிருந்த ரஜினி, கமல் முதல்முறையாக ஸ்ரீதருடன் சேர்ந்த இப்படம் வெள்ளி விழா கொண்டாடியது.

ரஜினி படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தார். சிவாஜியுடன் சேர்ந்து அவர் நடித்த படம் ‘ஜஸ்டிஸ் கோபிநாத்’. கே.ஆர்.விஜயா, சுமித்ராவும் நடித்திருந்தனர். யோகானந¢த் இயக்கினார். ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலை இயக்கிய பீம்சிங், மீண்டும் அவரது நாவலான ‘கருணையினால் அல்ல’ நாவலை தழுவி உருவாக்கிய படம் ‘கருணை உள்ளம்’. ஸ்ரீகாந்த், கே.ஆர்.விஜயா, சுகுமாரி, விஜயகுமார், சோ நடித்தனர். பழம்பெரும் தயாரிப்பாளர் ஆர்.கல்யாணராமன் தயாரித்த படம் ‘கவிராஜ காளமேகம்’. ஜி.ஆர்.நாதன் இயக்கம். டி.எம். சவுந்தரராஜன் ஹீரோ. நிர்மலா, மனோகர் நடித்தனர். படம் வியாபாரம் ஆகாததால் சென்னையில் ரிலீஸ் ஆகவில்லை. ராதிகா அறிமுகமான படம் ‘கிழக்கே போகும் ரயில்’. பாரதிராஜாவுக்கு மீண்டும் பெரிய அளவில் பெயரை பெற்றுத் தந்த படம் இது. புதுமுகம் சுதாகர் ஜோடியாக ராதிகா நடித்தார். பாக்யராஜ், கவுண்டமணி மற்றும் பலருடன் உஷா ராஜேந்தர் நடித்தார். Ôசவேரே வாலி காடிÕ பெயரில் இந்தியிலும் வெளியானது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது.

என்னிடம் எல்லாமே ப்ளஸ் தான்: ‌ஹன்சிகா மோத்வானி!!!

2011ம் ஆண்டில் மாப்பிள்ளை படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு புதிய வரவாக வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்தார். தமிழில் நடித்தது 3 படங்கள் தான் என்றாலும் அம்மணிக்கு ஏகப்பட்ட வரவேற்பு. அழகான முகமும், அம்சமான உடல் அமைப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் சின்ன குஷ்பு என்ற பட்டத்துடம் வலம் வந்து கொண்டிருக்கும் ஹன்சிகா, தன்னை பற்றி நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார். அவற்றின் தொகுப்பு இதோ...

நிஜ பெயர் : ஹன்சிகா மோத்வானி

சினிமா பெயர் : ஹன்சிகா மோத்வானி

பிறந்தது : மும்பை

படித்தது : பொலிட்டிகல் சயின்ஸ் (லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம்)

முதல்படம் : தேஷ்முத்ரு (தெலுங்கு)

முதல் படம் வெளியூர் சூட்டிங் : ஜெர்மனி (ஆப்கே சரூர்- இந்தி படம்)

மறக்கமுடியாத நபர் : அம்மா

அதிகமுறை பார்த்த படம் : சத்மா

அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை : ஓ காட்

பிடித்த உணவு : இட்லி, தோசை

தவிர்க்க விரும்பும் உணவு : சீஸ், ஆயில் ஃபுட்

போக விரும்பிய வேலை : எப்பவுமே நடிகையாவது தான் (சின்ன வயசுல ஹிருத்திக் கூட நடிச்சிருக்கேன்)

பிடித்த கலர்/உடை : ரெட், வொயிட் - சல்வார்

எதைப்பார்த்தால் பொறாமை வரும் : எப்பவும், எதைப் பார்த்தாலும் வராது

பயப்படும் ‌‌ஒரே விஷயம் : ‌கோழி

எந்த விஷயத்தில் அதிக ஆசை : ஷீ மற்றும் பேக்

வெளிப்படையாக பேசி, மற்றவர்களிடம் மாட்டிக்கொண்ட அனுபவம் : ரொம்ப அமைதியான பொன்னு நான் - அப்படியெல்லாம் லூஸ் டாக் விடமாட்டேன்.

நன்றி சொல்ல விரும்பும் நபர் : கடவுள்

நினைவில் இருக்கும் பள்ளி ஆசிரியர் : லூலா (கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக முதல்வர்)

பயன்படுத்தும் சோப்பு : அம்மா ஸ்கின் டாக்டரா இருப்பதால, எந்த சோப்பும் பயன்படுத்துவது இல்லை. கடலைமாவு மட்டும் தான்.

அதிக உடைகள் வாங்கும் இடம் : பாரீஸ் - லண்டன்

உணவு பழக்கம் தினமும் : காலை - காய்கறி மற்றும் முட்டை வெள்ளை கரு, மதியம் - ரொட்டி - பருப்பு, இரவு - காய்கறி சூப், சாலட்

ஆண்களின் பழக்கம் கற்றுக்‌ கொள்ள விரும்புவது : ஒன்னும் இல்லை

உணர்ச்சி வசப்பட்டால் : நான் நல்லா படம் வரைவேன்

உங்க ப்ளஸ் : என்னிடம் எல்லாமே ப்ளஸ் தான், நல்லா சமைப்பேன், மரியாதையா நடப்பேன், எல்லோரையும் நேசிப்பேன்

உங்க மைனஸ் : ஒன்னும் இல்லை

பிடிவாதம் : ரொம்ப சாப்ட் நான், எந்த கெட்ட பழக்கமும் என்கிட்ட இல்லை

மறக்க முடியாத சம்பவம்/வருஷம் : 2002-ஆனால் அது ரொம்ப பர்சனல்

ஊழலை கையில் எடுக்கிறார் கமல்ஹாசன்!!!

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன், ஊழலை மையப்படுத்தி ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார். தற்போது நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தில் படு பிஸியாக இருக்கிறார். ரூ.100 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழியில் உருவாகி வரும் இப்படத்தில் கமல் ஜோடியாக பூஜா குமார் நடிக்கிறார். கமலே இயக்கி, நடித்து தயாரிக்கும் இப்படத்தின் சூட்டிங் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், தன்னுடைய அடுத்தபடத்திற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் கமல்.

விஸ்வரூபம் படத்திற்கு அடுத்தபடியாக தற்போது நாட்டில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள ஊழலை மையப்படுத்தி ஒரு படத்தை எடுக்கவுள்ளார் கமல். தமிழ் மற்றும் இந்தியில் உருவாக இருக்கும் இப்படத்தை கமலே இயக்கி, நடிக்க உள்ளார். இந்தியில் உருவாகும் படத்திற்கு "அமர் ஹெயின்" என்று பெயர் வைத்துள்ளார்.

இதுகுறித்து கமல் கூறுகையில், இந்தபடத்திற்கான கதையை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தயார் பண்ணிவிட்டேன். ஆனால் அப்போது அந்த படத்தை எடுக்க போதிய தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. இப்போது அதற்கான நேரம் கூடி வந்துள்ளது. விஸ்வரூபம் படத்தை முடித்த பின்னர் இப்படத்தை எடுக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார்.

இதனிடையே விஸ்வரூபம் படத்தின் பெரும்பகுதி சூட்டிங்கை கமல் முடித்துவிட்டாராம். இதனால் படத்தை மே மாதம் வெளியிட கமல் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இனி சொந்த குரலிலேயே...! த்ரிஷா அதிரடி முடிவு!!

நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஆகிவிட்டது. சென்னையிலேயே பிறந்து, வளர்ந்த அம்மணி, சமீபத்தில் வெளிவந்த மங்காத்தா படத்தில் தான் சொந்த குரலில் பேசினார். இதில் கிடைத்த நல்ல வரவேற்பு இனி சொந்த குரலிலேயே பேச முடிவெடுத்து இருக்கிறார் த்ரிஷா. இதுகுறித்து அவர் கூறியதாவது, மங்காத்தா படத்தில் வெங்கட் பிரபு என்னை சொந்த குரலில் பேச வைத்தார். படத்தில் என்னுடைய டயலாக் கொஞ்சம் தான் என்றாலும், அதனை சிறப்பாக செய்தேன். வெங்கட்பிரபு கூட பாராட்டினார். மேலும் உங்கள் குரல் தான் நன்றாக இருக்கிறதே, ஏன் நீங்கள் சொந்த குரலில் பேசக்கூடாது என்று கேட்டார். அப்போது முதல் இனி சொந்த குரலில் பேச வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதன்படி இப்போது விஷாலுடன் நடித்து வரும் சமரன் படத்திலும் சொந்த குரலிலேயே பேசி வருகிறேன்.

சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த பாடிகார்ட் படம் தனக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. இதனால் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. தனக்கு கிடைத்த நல்ல வேடமாக பாடிகார்ட் படத்தை கருதுகிறேன். இந்தபடம் மூலம் நிறைய பேர், பழம்பெரும் நடிகை சாவித்திரி, மறைந்த நடிகை சவுந்தர்யா போன்றோருடன் என்னை ஒப்பிட்டு பாராட்டுகின்றனர். இதை பெரிய கவுரவமாக கருதுகிறேன். அதேசமயம் அவர்கள் இருவரும் திரையுலகில் சகாப்தமாக வாழ்ந்தவர்கள். எனவே அவர்களோடு என்னை ஒப்பிட்டு பேசுவதை நான் ஏற்கவில்லை என்று கூறியுள்ளார்.

சிம்ரன், ஜோதிகா மாதிரி ஆக சமீரா ரெட்டி ஆசை!

கிளாமரைத் தாண்டி சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று சமீரா ரெட்டி கூறினார். இதுபற்றி அவர் கூறியதாவது: இந்தியில் நடித்துள்ள ‘தேஜ்’ படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அனில்கபூர், அஜய்தேவ்கனுடன் நடித்துள்ளேன். இதில் ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்துள்ளேன். இந்தப் படத்திலும் ‘வேட்டை’ படத்திலும் மாறி மாறி நடித்தேன். முதல் நாள் மாடர்ன் டிரெஸ் என்றால் மறுநாள் ‘வேட்டை’க்காக பாவாடை, தாவணியில் நடித்தது வித்தியாசமாக இருந்தது. இந்தியை விட தென்னிந்திய படங்களில் நடிப்பதை முக்கியமாக கருதுகிறேன். தமிழ், தெலுங்கில் நடித்துவிட்டேன். கன்னடப் படங்களில் நடிக்கவில்லை. இப்போது கதைகள் கேட்டு வருகிறேன். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். சிம்ரன், ஜோதிகா பெயர்கள் கிளாமரைத் தாண்டி நடிப்புக்காகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. அவர்களைப் போல ஆகவேண்டும் என நினைக்கிறேன். இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.

மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள 'நண்பன்' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து ஷங்கரின் அடுத்த பட அறிவிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. நண்பன் படத்துக்கு பிறகு, சிறிது காலம் குடும்பத்துடன் ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ள ஷங்கர், கல்பாத்தி எஸ் அகோரம் நிறுவனத்திற்கு ஒரு படம் பண்ணி தர ஒப்புக்கொண்டுள்ளார். படத்திற்கு யார் ஹீரோ என்பது குறித்து எந்த ஒரு தகவலையும், தயாரிப்பு நிறுவனமோ (அ) ஷங்கரோ சொல்லவில்லை. தற்போது இந்த தகவல் கசிய தொடங்கியுள்ளது. ஆக்ஷன் + த்ரில்லர் கலந்த இந்த படத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் பெயர், இசையமைப்பாளர், ஹீரோயின் குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. ஏற்கனவே ஷங்கர்-விக்ரம் கூட்டணியில் வெளிவந்த அந்நியன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.