Saturday, May 12, 2012

ரஜினியின் பாட்ஷா பாணியில் இந்தியில் புதுப் படம்- டைரக்டர் பிரபுதேவா?!!!

Saturday, May, 12, 2012
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து தமிழில் ஹிட் ஆன பாட்ஷா படத்தைப் போலவே இந்தியில் ஒரு புதுப் படம் உருவாகவிருக்கிறதாம். அஜய் தேவ்கன் நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தை பிரபுதேவா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பாட்ஷா குறித்து சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. தமிழ் சினிமா வரலாற்றில் அதற்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. இப்படத்தின் பாணியில் இப்போது இந்தியில் ஒரு படம் உருவாகவிருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.

கிட்டத்தட்ட பாட்ஷா பட பாணியிலேயே, அதன் கதையைத் தழுவியே இந்தக் கதை உருவாக்கப்படவிருக்கிறதாம். அஜய் தேவ்கன் நாயகனாக நடிக்கவுள்ளார். பிரபுதேவா இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போதுதான் அக்ஷய் குமாரை வைத்து ரெளடி ரத்தோர் படத்தை முடித்துள்ளார் பிரபுதேவா. அடுத்து அஜய் தேவ்கனுடன் இணையவுள்ளார் பிரபுதேவா.

பாட்ஷா படத்தின் காப்பி என்று சொல்ல முடியாது என்றாலும் கூட பாட்ஷா படத்தின் சில அம்சங்களை வைத்து கதை பின்னப்பட்டு வருவதாக தெரிகிறது. இதுகுறித்து பிரபுதேவா தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் தேவ்கனுடன் இணையவிருப்பதை மட்டும் பிரபுதேவா உறுதி செய்துள்ளார்.

சோலோவாகக் களமிறங்கும் காமெடி கலகலப்பு!!!

Saturday, May, 12, 2012
இந்த ஒரே ஒரு படம்தான் ரிலீஸ். அது சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு.

கோடைக்கேத்த ஜாலி ரைடு என்ற 'பஞ்ச்'சுடன் வரும் இந்த காமெடி திருவிழாவில், அஞ்சலி - ஓவியாவின் கவர்ச்சி ஏற்கெனவே கோடம்பாக்கத்தின் பரபரப்புப் பேச்சாகி, படத்தின் விற்பனையை ஹாட்டாக்கிவிட்டது.

விமல், மிர்ச்சி சிவா, சந்தானம் என காமெடி ஹீரோக்கள் வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளனர்.

இந்தப் படத்துக்குப் போட்டியே இல்லை இப்போதைக்கு. 5 வாரங்களுக்கு முன் வெளியான ஓகே ஓகேதான் கலகலப்பால் கொஞ்சம் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. 255 அரங்குகளில் கலகலப்பு ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்தப் படம் தவிர, தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த கப்பர் சிங் 14 அரங்குகளில் வெளியாகிறது. இந்தி டபாங் ரீமேக் இது.

ஜானி டெப் நடித்துள்ள டார்க் ஷேடோஸும் இன்றுதான் ரிலீஸ். இந்தப் படத்துக்கு ரிசர்வேஷனில் நல்ல ரெஸ்பான்ஸாம்!

கமல்ஹாஸனின் விஸ்வரூபம் ஜூன் 29-ல் ரிலீஸ்?!!!

Saturday, May, 12, 2012
ஜூன் மாதம் கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்தின் ஆடியோ வெளியாகக்கூடும் என்று நேற்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இப்போது விஸ்வரூபத்தின் ரிலீஸ் தேதியே வெளியாகிவிட்டது.

இந்தப் படத்தை ஜூன் 29-ம்தேதி வெளியிட கமல்ஹாஸன் திட்டமிட்டிருப்பதாகவும், புரமோஷன் பணிகளை அடுத்த வாரத்திலிருந்து அவர் தொடங்கக் கூடும் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

கமல்ஹாஸனின் ராஜ்கமல் இன்டர்நேஷனலும், பிவிபி சினிமாஸும் இணைந்து தயாரித்துள்ள படம் விஸ்வரூபம்.

தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் இல்லாத முதல் பிரதி கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுவிட்டது.

இப்போது இறுதிக்கட்டப் பணிகளை முடிக்கும் தறுவாயில் உள்ள கமல், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வேலைகளுக்காக அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார். அங்கேயே பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஓஸ்போர்னேவுக்கு படத்தை போட்டுக் காட்டிவிட்டு சென்னை வரும் கமல், உடனடியாக புரமோஷனை ஆரம்பிக்கிறார். ஜூன் முதல் வாரத்தில் பாடல்களையும் வெளியிட உள்ளாராம்.

விஸ்வரூபத்தை எழுதி இயக்கியிருப்பவரும் கமல்ஹாஸன்தான். வைரமுத்துவுடன் இணைந்து படத்துக்கு பாடல்களையும் எழுதியுள்ளார்.

நேற்று இல்லை நாளை இல்லே... எப்பவும் இளையராஜா!!!

Saturday, May, 12, 2012
இளையராஜா ஒரு படத்துக்கு இசையமைக்கிறார் என்றாலே அந்தப் படம் குறித்து தனி மரியாதை வந்துவிடும். பாடல்கள் குறித்தும் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும்.

இது எழுபதுகளில் தொடங்கி தொன்னூறுகளின் இறுவரை தொடர்ந்தது. இடையில் சில வருடங்கள் ராஜா தமிழ்ப் படங்களில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அப்போது அவர் மகன் யுவன் ஷங்கர் ராஜா அந்தக் குறையைத் தீர்த்தார்.

இப்போது மீண்டும் முழு வீச்சில் களமிறங்கிவிட்டார் இசைஞானி. கவுதம் மேனனுடன் இணைந்து அவர் பணியாற்றும் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் இசை குறித்துதான் இன்றைக்கு இன்டஸ்ட்ரியில் பெரிய அளவு பேச்சு.

இந்தப் படத்தின் இசைக்கு சோனி உள்ளிட்ட ஆடியோ கம்பெனிகள் இதுவரை இல்லாத அளவு ரூ 2 கோடிக்கு மேல் விலைபேசப்பட்டு வருகிறது. இருந்தாலும் இன்னும் எந்த நிறுவனத்துக்கும் ஆடியோவை விற்கவில்லை கவுதம் மேனன். அநேகமாக ரூ 2.50 கோடிக்கு இந்தப் படத்தின் ஆடியோ விற்பனை செய்யப்படும் எனத் தெரிகிறது.

கவுதம் மேனன் - ரஹ்மான் கூட்டணியில் வந்த விண்ணைத் தாண்டி வருவாயா பட ஆடியோ ரூ 1.75 கோடிக்கு விற்பனையானது. இதைவிட முக்கால் கோடி அதிக விலைக்கு நீதானே என் பொன்வசந்தம் விற்பனையாகவிருக்கிறது.