Thursday, April 12, 2012

சாக்கு போக்கு இயக்கம் ஷாக் கொடுத்த ஹீரோயின்!!!

Thursday, April 12, 2012
சிவா காட் ஆடும் டான்ஸ் பேர்ல படம் எடுக்கற விஜயமான இயக்கம் ஹாலிவுட் பூமியிலயும், சிவப்பு கொடி நாட்டுலயும் ஷூட்டிங் நடத்த முடிவு பண்ணாராம்... பண்ணாராம்... முதல்ல ஓ.கே. சொன்ன தயாரிப்பு, திடீர்னு ஹாலிவுட் பூமிக்கு போக வேணாம்னு சொல்லிட்டாங்களாம். எடுக்கற காட்சிய சிவப்பு கொடி நாட்டுலய எடுத்துருங்க. இன்னொரு கன்ட்ரிக்கு போய் எடுத்தா பட்ஜெட் எகிறிடும்னு கறாரா சொல்லிட்டாங்களாம். இதுபத்தி இயக்கத்துகிட்ட கேட்டா ஹாலிவுட் பூமிக்கு போகாததுக்கு காரணம் விசா கெடக்காததுதான்னு சாக்குபோக்கு சொல்றாராம்... சொல்றாராம்... மாசக்கணக்குல ஸ்டிரைக் நடந்ததை சாதகமா பயன்படுத்திக்கலாம்னு உதவி இயக்கங்க நம்பனாங்களாம்... நம்பனாங்களாம்... ஷூட்டிங் இல்லாம வீட்ல இருக்க ஹீரோக்கள பாத்து சூப்பர் கதை இருக்கு சொல்ல வரட்டுமான்னு பர்மிஷன் கேட்டப்ப எல்லா ஹீரோக்களுமே எஸ்ஸாயிட்டாங்களாம்... சம்மர் லீவுல ஷூட்டிங் வெச்சிடுவாங்க. அதால பேமலியோட இப்பவே பாரின் போறோம். வந்தப்பறம் கேக்கறேன்னு சொல்லிட்டாங்களாம். கால்ஷீட் வாங்கிடலாம்னு குஷியா இருந்த உதவி இயக்கங்க ஏமாற்றத்துல சோர்ந்து போயிட்டாங்களாம்... போயிட்டாங்களாம்... மர்மமாக இறந்துபோன திவ்யமான பாரதி ஹீரோயினுடைய லைப் ஹிஸ்ட்ரிய படமாக்குற இயக்கம், அதே சாயல்ல இருக்கற ஓல்டு ரம்ப ஹீரோயின ஒப்பந்தம் பண்ண முடிவு பண்ணாராம்... பண்ணாராம்... ஒரு வழியா தேடி கண்டுபிடிச்சி பேசப்போன இயக்கத்துக்கு ஷாக்காம். ஸ்லிம்மா இருந்தவரு இப்ப பெருத்து போயிருக்காராம். இதால வேற ஹீரோயின இயக்கம் தேடுறாராம்... தேடுறாராம்...

தனுஷ் மீது ராக்கி சாவந்த் பாய்ச்சல்!!!

Thursday, April 12, 2012
ஜோடி போட்டு நடனம் ஆடாததால் தனுஷ் மீது பாய்ந்துள்ளார் பாலிவுட் ஹீரோயின் ராக்கி சாவந்த். பாலிவுட்டில் அவ்வப்போது பிரச்னைகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்துபவர் ராக்கி சாவந்த். இவர் மும்பை நிகழ்ச்சியொன்றில் தனுஷுடன் மேடையில் தோன்றி ‘ஒய் திஸ் கொல வெறி டி’ பாட்டுக்கு நடனம் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. முதலில் நடனம் ஆட ஒப்புக்கொண்ட தனுஷ் திடீரென்று ஆட மறுத்துவிட்டார். விழாவுக்கும் செல்லவில்லை. இதனால் ராக்கி சாவந்த் கோபம் அடைந்தார். தனுஷுடன் இணைந்து ஆடவேண்டும் என்ற கூறியதால்தான் ஒப்புக்கொண் டேன். இதற்காக பலமுறை ஒத்திகையில் ஈடுபட்டேன். இவ்வளவு கஷ்டமும் இப்போது வீண் ஆகிவிட்டது. அவர் வராமல் ஏமாற்றி விட்டார் என்று கூறி தனுஷை திட்டி தீர்த்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தனுஷிடம் கேட்டபோது, ‘3’ படம் ரிலீசுக்காக நான் சென்னையில் இருக்க வேண்டி இருந்தது. எனவேதான் ராக்கி சாவந்த் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என்றார். ஆனால் தனுஷ் இந்நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கு வேறு காரணம் கூறப்படுகிறது. ‘3’ படத்தில் நடித்தபோது ஸ்ருதி ஹாசனுடன் காதல் மலர்ந்தது என்றும், அவருடன் நெருக்கமாக இருக்கிறார் என்றும் வதந்தி பரவியது. இதனால் பிரச்னை ஏற்பட்டது. ஏற்கனவே சர்ச்சையில் சிக்கி இருந்த தனுஷ் வீணாக மற்றொரு சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ‘ராக்கி சாவந்துடன் சேர்ந்து ஆடினால் புதிய பிரச்னையில் சிக்கிக்கொள்வீர்கள்’ என்று மேனேஜர் எச்சரித்ததால் அவருடன் ஆடுவதை தனுஷ் தவிர்த்தார் என்று கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் சூர்யா... உறுதியானது!!!

Thursday, April 12, 2012
'மாற்றான்' படத்தினைத் தொடர்ந்து சூர்யா யார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது கேள்விக்குறியாக இருந்தது. இப்போது ஆச்சர்யக்குறியாக மாறியுள்ளது. 'மாற்றான்' படத்தினை முடித்தவுடன் ஷங்கர் இயக்க இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன் படங்களைத் தொடர்ந்து சூர்யா நடிக்க இருக்கும் படமும் ஒரு அரசியல் சார்ந்த கதையாம். ஹரி இயக்கத்தில் நடிக்க ஒதுக்கி இருந்த தேதிகளை அப்படியே ஷங்கர் இயக்க இருக்கும் படத்திற்கு ஒதுக்கி இருக்கிறார் சூர்யா. படத்தின் வசனப் பகுதிகளை சுரேஷ் மற்றும் பாலா (சுபா) இருவருமே எழுதி முடித்து விட்டார்களாம். அனைத்துமே தயாராக இருப்பதால், சூர்யாவின் தேதிகளுக்காக தான் ஷங்கர் காத்திருக்கிறாராம். முதலில் இக்கதைக்கு விக்ரமைத் தான் தேர்வு செய்தாராம் ஷங்கர். ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மார்க்கெட்டையும் கணக்கில் கொண்டு சூர்யாவை தேர்ந்தெடுத்து இருக்கிறாராம். எம்புட்டு ஹீரோ வந்தாலும் இந்த 'ஊழல்' வில்லனை மட்டும் ஒழிக்கவே முடியலையே!

50 ஆண்டு சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!!!

Thursday, April 12, 2012
தனது 50 ஆண்டு சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக விளம்பரங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் கமல்ஹாஸன்.

நடிகர், நடிகைகள் பலர் நடிக்க வந்த ஒரு சில ஆண்டுகளில் விளம்பர படங்களில் நடித்து பெரும் வருவாய் பார்த்து வருகின்றனர். ஆனால் தமிழ் நடிகர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மற்றும் கமலஹாசன் மட்டும் எந்த விளம்பர படங்களையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தனர்.

தாங்கள் இத்தகைய விளம்பரங்களில் நடிப்பதால், ரசிகர்களை தவறாக திசை திருப்பவது போலாகிவிடும் என்ற காரணத்தால் இத்தகைய முடிவை மேற்கொண்டிருந்தனர்.

கமல் தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டு விளம்பர படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். 50 ஆண்டுகளாக கமல் சினிமாவில் இருக்கிறார். இதுவரை அவர் விளம்பரங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது முதல் தடவையாக விளம்பர படங்களில் நடிக்க மும்பை நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த நிறுவனம் மூலம் எற்கனவே இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், ஷாருக்கான, கரீனாகபூர், பிரியங்கா சோப்ரா போன்றோர் விளம்பர படங்களில் நடித்துள்ளனர்.

சினிமா வாழ்க்கையில் முதல் தடவையாக இந்த முயற்சியில் இறங்குவதாக கமல் தெரிவித்துள்ளார். சமூக சேவையில் அக்கறையுள்ள விளம்பர படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடிக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

அல்லயன்ஸ் மீடியா என்ற நிறுவனம்தான் கமலை வைத்து விளம்பரங்களை எடுக்கப் போகிறது. இந்த நிறுவனம்தான் அமிதாப், ஷாரூக், சாயிப் அலிகான், கரீனா என பல பிரபலங்களையும் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3 படத்தை தெலுங்கில் வெளியிட்டு பெரும் நஷ்டம் அடைந்தேன்- தயாரிப்பாளர் புகார்!!!

Thursday, April 12, 2012
தனுஷ் நடிப்பில், ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான 3 படத்தை தெலுங்கில் பெரும் விலை கொடுத்து வாங்கி வெளியிட்ட தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் நட்டி குமார் புகார் தெரிவித்துள்ளார்.

தனுஷ்-ஸ்ருதி ஜோடியாக நடித்த 3 படம் ரிலீசாகி ஒடிக்கொண்டிருக்கிறது. தமிழில் பிரமாதமான ஓபனிங் இருந்தாலும், கலவையான விமர்சனங்கள் காரணமாக இரண்டாவது வாரம் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது.

இப்படம் ஆந்திராவில் தெலுங்கில் டப்பிங் செய்தும் வெளியிடப்பட்டது. இதன் தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கி ரிலீஸ் செய்த ஆந்திர தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான நட்டி குமார் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பான புகார் அளித்துள்ளார்.

இந்த நஷ்டத்துக்கு காரணம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாதான் என அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "தனுஷ்-ஸ்ருதி நடித்த 3 படத்தின் தெலுங்கு உரிமையை ரூ.4.3கோடிக்கு வாங்கினேன். ஆந்திராவில் தனுசுக்கு உள்ள மார்க்கெட் ரூ.10 லட்சம்தான். இவ்வளவு பெரிய தொகை கொடுத்து படத்தை வாங்குகிறாயே என்று பலரும் என்னை கண்டித்தனர்.

ரஜினி குடும்பத்தினர் மீது இருந்த நம்பிக்கையில் படத்தை வாங்கினேன். ஐஸ்வர்யா இயக்கி இருந்ததால் நல்ல வரவேற்பு இருக்கும் என்று கருதினேன். 3 படத்தை ஆந்திராவில் விளம்பரபடுத்துவதற்காக ஏப்ரல் 1-ந்தேதி ஹைதராபாத் வருவதாக தனுஷும், ஐஸ்வர்யாவும் என்னிடம் உறுதி அளித்தனர். ஆனால் அதன்படி அவர்கள் வரவில்லை.

படத்தின் சிறப்பு காட்சிக்கு வருவதாக சொல்லியும் வரவில்லை. இருவரும் என்னை ஏமாற்றி விட்டனர். ஆந்திராவில் இந்த படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. இதனால் எனக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது," என்றார்.

அன்று நயன்தாரா நேற்று த்‌ரிஷா - என்னப்பா நடக்குதிங்கே!!!

Thursday, April 12, 2012
நயன்தாராவும், த்‌ரிஷாவும் இல்லையென்றால் பத்தி‌ரிகைக்காரர்கள் என்னவாகியிருப்பார்கள்? நினைக்கவே பயமாக இருக்கிறது. நயன்தாராவின் காதலிலும், அவரது காதல் பி‌ரிவிலும்தான் கடந்த ஒரு வருடத்தை குதூகலமாக்கின பத்தி‌ரிகைகள். த்‌ரிஷா பற்றி சொல்லத் தேவையில்லை. கடற்கரைச் சாலையில் நள்ளிரவில் டான்ஸ் ஆடினார், ஹோட்டல் குளியலறையில் குளித்தார், விஷாலுக்கும் த்‌ரிஷாவுக்கும் காதல்... ஓ, எத்தனை எத்தனை தலைப்புச் செய்திகள். நியாயமாக இவர்கள் இருவருக்கும் பத்தி‌ரிகைகள் பாராட்டுவிழா எடுத்து லாபத்தில் பங்கு தந்திருக்க வேண்டும்.

ச‌ரி, விஷயத்துக்கு வருவோம்.

நயன்தாரா ஸ்ரீ ராமரா‌ஜ்‌ஜியம் படத்தின் இறுதி நாளன்று இயக்குனர் மற்றும் ஹீரோ பாலகிருஷ்ணா ஆகியோ‌ரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். அத்துடன் பி‌ரிவுத் துயர் தாங்காமல் அழவும் செய்தார். அந்த அழுகைக்கு காரணம் இருந்தது. விரைவில் பிரபுதேவாவை திருமணம் செய்ய இருந்ததால் ஸ்ரீ ராமரா‌ஜ்‌ஜியத்துடன் நடிப்பை துறக்க அப்போது அவர் முடிவு செய்திருந்தான். வாழ்க்கையின் கடைசி நாள் படப்பிடிப்பு என்பதால் அவரை மீறி வந்துவிட்டது அழுகை.

நயன்தாராவை தம்மு படப்பிடிப்பில் ‌ரிப்பீட் செய்தார் த்‌ரிஷா. இவர் ஒருவரையும் காதலிப்பதாக‌த் தெ‌ரியவில்லை. தம்மு இவ‌ரின் கடைசிப் படமும் அல்ல. பிறகு ஏன் அழுகை? ஆசி?

த்‌ரிஷாவும் திருமணம் செய்து செட்டிலாகப் போகிறார் என்று தெலுங்கு ஊடகங்கள் ஊகச் செய்தி வெளியிட்டுள்ளன. திருமணம் கன்ஃபார்ம் என்றிருந்த நயன்தாராவே காதலை உதறி நடிப்புக்கு திரும்பியிருக்கிறார். த்‌ரிஷாவாவது இப்போதைக்கு நடிப்பை விடுவதாவது.

எப்போ பாரு இவங்களுக்கு இதே பொழப்பா போச்சு.