Monday, March 5, 2012

தடை சம்பவத்தால் எதையும் எதிர்க்க துணிந்தேன் : நிகிதா!!!

Monday, March 5, 2012
சென்னை::தர்ஷன் விவகாரத்தில் நடிக்க தடை விதிக்கப்பட்ட பின் எதையும் எதிர்கொள்ள துணிச்சல் வந்துவிட்டது என்றார் நடிகை நிகிதா. கன்னட நடிகர் தர்ஷனுக்கும் அவரது மனைவிக்கும் சில மாதங்களுக்கு முன் பிரச்னை ஏற்பட்டது. தர்ஷனுடன் ஹீரோயின் நிகிதா தொடர்பு வைத்திருப்பதுதான் கணவன், மனைவிக்குள் பிரச்னை ஏற்பட காரணம் என்று கூறப்பட்டது. இதையடுத்து கன்னட தயாரிப்பாளர்கள் சங்கம் நிகிதாவுக்கு கன்னட படத்தில் நடிக்க தடை விதித்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவத்துக்கு பிறகு நிகிதா பிரபலம் ஆனார். தமிழில் Ôமுரண்Õ படத்தில் நடித்த அவர் தற்போது கார்த்தி நடிக்கும் ‘அலெக்ஸ் பாண்டியன்Õ படத்தில் நடிக்கிறார். நிகிதா கூறியதாவது: செய்யாத தவறுக்காக நான் தண்டிக்கப்பட்டேன். இது என்னை துணிச்சல்மிக்கவளாக மாற்றிவிட்டது. எந்த பிரச்னையையும் இனி தைரியமாக எதிர்கொள்வேன். கன்னட பட தயாரிப்பாளர்கள் சங்கம் என் மீது வலுக்கட்டாயமாக எடுத்த முடிவால் தேசிய அளவில் மீடியாக்களின் கவனத்தை கவர்ந்துவிட்டேன். திரையுலகம் எனது நடிப்பு திறனை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்திருக்கிறது.

ஷூட்டிங்கில் இருக்கும்போது எப்போதும் நடிப்பின் மீதே கவனமாக இருப்பேன். 200 சதவீதம் எனது ரோலை நிறைவு செய்ய முயல்வேன். மற்ற எந்த விஷயத்திலும் ஈடுபாடு காட்ட மாட்டேன். ஏற்கனவே நடந்தவற்றை பற்றி மீண்டும் ஆராய்ந்துகொண்டிருப்பதில் அர்த்தமில்லை. எதிர்காலத்தை பற்றித்தான் இனி யோசிப்பேன். இவ்வாறு நிகிதா கூறினார்.

சிரஞ்சீவி மகன் ஜோடியாக நடிக்க தீபிகா தயக்கம்!

Monday, March 05, 2012
மும்பை::சிரஞ்சீவி மகனுக்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோன் தயக்கம் காட்டி உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடிக்கிறார் பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோன். இந்நிலையில் அமிதாப்பச்சன், ஜெயா பச்சன் ஜோடியாக நடித்த சன்ஜீர் படத்தை இந்தி, தெலுங்கில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதில் அமிதாப்பச்சன் ஏற்று நடித்த ஆவேசமான போலீஸ்காரர் வேடத்தை ராம் சரண் தேஜா ஏற்று நடிக்க உள்ளார். அமிதாப் ஜோடியாக ஜெயா பச்சன் நடித்தார். அந்த வேடத்தில் தீபிகா படுகோனை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் ராம் சரணுடன் தீபிகா நடிக்க தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதுபற்றி தீபிகா தரப்பில் கூறும்போது, ‘நிறைய தென்னிந்திய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. ஆனால் தமிழில் கோச்சடையான் படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்க மட்டுமே ஒப்புக்கொண்டிருக்கிறார். மேலும் இந்த மாதம் முதல் ஜவானி திவானி மற்றும் மணாலி ஆகிய படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்கிறார் என்றனர். ராம் சரண் இந்திக்கு புதியவர். புதுமுகத்துடன் நடிப்பதா என தீபிகா தயக்கம் காட்டுவதாலேயே அப்படத்தில் நடிப்பது பற்றி பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

12 இடம் வேண்டாம் என்றுவிட்டு 1 இடத்திற்காக அலைகிறார் வைகோ : நடிகர் செந்தில் தாக்கு!

Monday, March 05, 2012
சென்னை::சங்கரன்கோவில் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக நடிகை குயிலி, நகைச்சுவை நடிகர் செந்தில் ஆகியோர் நேற்று பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தனர்.

சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது. அ.தி.மு.க. வேட்பாளர் முத்துசெல்விக்கு ஆதரவு கேட்டு இளையரசனேந்தல் பிர்கா பகுதியில் தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவருடன் சினிமா நடிகர்கள் செந்தில், ஜெய சூரியகாந்த், நடிகை குயிலி, சினிமா படத்தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர், டைரக்டர் லியாகத் அலிகான் ஆகியோரும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

கிராமங்களுக்கு மினி லோடு ஆட்டோவில் வீதிவீதியாக சென்று பொதுமக்களிடம் ஓட்டுகள் சேகரித்தனர்.

பிரச்சாரத்தின் போது நடிகர் செந்தில், ’’தி.மு.க. ஆட்சி செய்தபோது மக்களை பற்றி சிந்திக்கவில்லை. ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்களாகிய நீங்கள் தான் குடும்பம். எப்போதும் உங்களுக்கு நன்மைகள் செய்யும் நோக்கத்துடன் இருப்பார்.

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது.

அப்போது மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக் கப்பட்டது. அதன்பிறகு வந்த தி.மு.க. ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டினால் தான் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள மின்வெட்டு பிரச்சினையை முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் தீர்த்து வைப்பார்.

தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து துறை உள்பட அனைத்து துறைகளிலும் கடனாக்கி சென்று விட்டனர். டெல்லியில் சோனியா காந்தியைத்தான் நம்பி தி.மு.க இருக்கிறது.

தமிழகத்தில் குஷ்புவை நம்பித்தான் தி.மு.க. உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வைகோவுக்கு 12 இடங்கள் கொடுப்பதாக ஜெயலலிதா கூறினார். ஆனால் அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார்.

தற்போது ஒரு இடத்துக்காக வெளியே அலைந்து கொண்டு இருக்கிறார். அ.தி.மு.க. வேட்பாளர் முத்துசெல்வியை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள். அவர் கிராமத்தில் உள்ள குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பார்’’ என்று பேசினார்.

நடிகை அல்போன்சாவின் காதலர் தற்கொலை- தற்கொலைக்கு அல்போன்சா முயற்சி:

Monday, March 05, 2012
சென்னை::கடந்த சில வருடங்களாக முன்னாள் கவர்ச்சி நடிகை அல்போன்சாவுடன் குடும்பம் நடத்தி வந்த அவரது காதலர் வினோத் குமார் திடீரென தற்கொலை செய்து கொண்டு விட்டார். அவரை அல்போன்சா தரப்பினர் அடித்தே கொன்று விட்டதாக வினோத்குமாரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் அல்போன்சாவும் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாட்ஷா படம் மூலம் குத்தாட்ட நடிகையாக அறிமுகமானவர் அல்போன்சா. தொடர்ந்து பல படங்களில் டான்ஸ் ஆடியுள்ளார். பின்னர் இவர் நடனத்தை நிறுத்தி விட்டார். தான் காதலித்து வந்த வினோத்குமாருடன் என்பவருடன் சேர்ந்து சென்னை விருகம்பாக்கத்தில் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு விருகம்பாக்கம் வீட்டில் வினோத்குமார் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டு விட்டார். அல்போன்சாவுடன் ஏற்பட்ட தகராறில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதேசமயம், வினோத்குமார் அடித்துக்கொல்லப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டதும் அல்போன்சாவும் ஏராளமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அல்போன்சாவின் காதலர் தற்கொலை,அல்போன்சாவின் தற்கொலை முயற்சி ஆகியவற்றால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அல்போன்சாவின் உடன் பிறந்த தம்பிதான் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் என்பது நினைவிருக்கலாம்.

துபாய் கலை நிகழ்ச்சிக்கு போய் வந்ததால் அல்போன்சா- காதலர் இடையே தகராறு?


துபாயில் நடந்த கலை நிகழ்ச்சிக்குப் போய் விட்டு நள்ளிரவுக்கு மேல் வந்த பிறகுதான் அல்போன்சாவுக்கும், அவரது காதலருக்கும் இடையே மோதல் மூண்டு அது தற்கொலையில் முடிந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் பிசியான குத்தாட்ட நடிகையாக வலம் வந்தவர் அல்போன்சா. ஏகப்பட்ட படங்களில் தனி பாட்டுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். பின்னர் படிப்படியாக இவர் தனது ஆட்டத்தைக் குறைத்துக் கொண்டார்.

இவரும் கல்பாக்கத்தைச் சேர்ந்தவருமான வினோத்குமாரும் காதலித்து வந்தனர். வினோத்குமாரும் சினிமாவில் நடனம் ஆடி வந்தவர்தான். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்தி வந்துள்ளனர். விருகம்பாக்கத்தில் வசித்து வந்தனர்.

அல்போன்சா அடிக்கடி துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு கலை நிகழ்ச்சிகளுக்குப் போவது வழக்கம் என்று கூறப்படுகிறது. அப்படித்தான் தற்போதும் அவர் துபாய்க்கு கலை நிகழ்ச்சிக்காக போயிருந்தார். நள்ளிரவு வாக்கில்தான் அவர் நேற்று வீடு திரும்பினார். வீடு திரும்பியதுமே அவருக்கும், வினோத்குமாருக்கும் இடையே மோதல் மூண்டதாக தெரிகிறது.

அதன் பிறகுதான் வினோத்குமாரின் மரணம் நேர்ந்துள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், வினோத்குமாரின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அல்போன்சாவிடம் விசாரணை நடத்த அவர்கள் திட்டமிட்டனர். ஆனால் அதற்குள் அல்போன்சா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டதாக தகவல் வந்தது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றனர். இதனால் அல்போன்சாவிடம் உடனடியாக விசாரணை நடத்த முடியாத நிலை போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது.

அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதால் அவர் தேறி வந்த பிறகுதான் விசாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை விசாரித்தால்தான் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தெரிய வரும் என்கிறார்கள்.

இன்று முதல் உதயநிதியின் ஓகே ஓகே இசை-ட்ரெயிலர்!!!

Monday, March 05, 2012
உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக ஹீரோவாக அறிமுகாகும் ஒரு கல் ஒரு கண்ணாடி (ஓகேஓகே) படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் இன்று மாலை வெளியாகிறது.

நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இவற்றை வெளியிடுகிறார்கள்.

குறுகிய காலத்தில் பெரிய நட்சத்திர தயாரிப்பாளராக உருவெடுத்த உதயநிதி, தான் தயாரித்த ஆதவன் படத்தில் ஒரு காட்சியில் நடித்தார்.

அதைத் தொடர்ந்து, அவரை ஹீரோவாக வைத்து படம் இயக்கினார் ராஜாஷ் எம். சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களின் இயக்குநர் இவர். அந்தப் படத்தை உதயநிதிதான் வெளியிட்டார்.

ஒரு கல் ஒரு கண்ணாடியின் தயாரிப்பும் உதயநிதிதான். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். இதில் சந்தானத்தின் காமெடி பிரதானமாக பேசப்படுகிறது. ஏற்கெனவே வெளியான ஒரு ட்ரெயிலர் ரசிகர்களிடம் பிரமாதமான வரவேற்பைப் பெற்றுள்ளது.

இன்று (மார்ச் 5) இப்படத்தின் இசை வெளியீடு சத்யம் அரங்கில் நடக்கிறது. இதில் நடிகர் சூர்யாவும், அவரது தம்பி கார்த்தியும் கலந்துகொண்டு, பாடல் சிடியையும், டிரைலரையும் வெளியிடுகின்றனர்.

பெண்கள் வளர்ச்சித் திட்டம் குறித்து ஐ.நா. சபை கூட்டத்தில் பேசும் குஷ்பு: 14ல் நைரோபி பயணம்!!!

Monday, March 05, 2012
சென்னை::நடிகை குஷ்பு பெண்கள் வளர்ச்சித் திட்டம் குறித்து நைரோபியில் நடக்கும் ஐ.நா. சபை கூட்டத்தில் பேசுகிறார். இதற்காக அவர் வரும் 14ம் தேதி சென்னையில் இருந்து நைரோபி செல்கிறார்.

ஐ.நா. சபையின் இளைஞர் அமைப்பு சார்பில் கென்யா தலைநகர் நைரோபியில் கூட்டம் ஒன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 16,17 ஆகிய 2 தேதிகளில் நடக்கும் இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர். இந்த கூட்டத்தில் இளைஞர்கள் நலன் பற்றி ஆலோசிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் நடிகை குஷ்பு கலந்து கொண்டு இளைஞர்களின் வளர்ச்சி என்ற தலைப்பில் பேசுகிறார். அதற்கான உரையையும் அவர் தயார் செய்துள்ளார். அவர் தனது உரையில் பெண்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசுவார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் வரும் 14ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் நைரோபி செல்கிறார்.

காஜல் அகர்வால் பொருத்தமான ஜோடி - சூர்யா!!!

Monday, March 05, 2012
சூர்யாவும், காஜல் அகர்வாலும் மாற்றான் படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. கோடையில் ரிலீஸ் செய்யதிட்டமிட்டுள்ளார். ஆந்திராவில் சூர்யா படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் இதனை “டூப்ளிக்கேட்” என்ற பெயரில் தெலுங்கிலும் ரிலீஸ் செய்கின்றனர்.

தெலுங்கில் சூர்யாவே சொந்த குரலில் டப்பிங் பேசுகிறார். ஆந்திராவில் “மாற்றான்” படம் பெரும் தொகைக்கு விற்பனையாகியுள்ளது. தெலுங்கில் “மாற்றான்” படம் வெளியாவது குறித்து ஐதராபாத்தில் சூர்யா, காஜல் அகர்வால், கே.வி.ஆனந்த் ஆகியோர் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.

சூர்யா கூறும்போது, “கே.வி.ஆனந்த், இயக்கத்தில் நான் இரண்டாவது முறை நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் மேல் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். காஜல் அகர்வால் எனக்கு பொருத்தமான ஜோடியாக உள்ளார். இப்படம் பெரிய வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

இந்தியன் காப்பி கல்சர் - ஓர் அறிமுகம்!!!

Monday, March 05, 2012
இப்போது எந்தப் படத்தைப் பற்றிப் பேசினாலு‌ம், அந்தப் படமா...? அது ஹாலிவுட் படத்தோட காப்பியாச்சே என்று கூறுவது சகஜமாகிவிட்டது. வரப் போகிற படத்தின் புகைப்படத்தை வைத்து, மச்சான் இது தான்சானியா படத்தோட காப்பியில்ல என்று டீக்கடையில் பேசிக் கொள்வதைப் பார்த்தால் கிலியாகிறது. தியேட்டரில் படம் பார்க்க வருவதில் பாதி பே‌ர், எந்தப் படத்தோட காப்பி இது என்று பார்க்க வருவதாகதான் தோன்றுகிறது. சந்தேகமாக இருப்பவர்கள் இணையத்தில் எழுதுகிறவர்களின் பிளாக்குகளை பார்த்துக் கொள்ளவும்.

இணைய எழுத்தாளர்களின் இந்த உண்மை விளம்பி செயல்பாடு சிலரை கடுமையாக பாதித்திருக்கிறது. மணிரத்னத்தின் நாயகன் காட்பாதரின் காப்‌‌பி, ஆய்தஎழுத்து அமெரோஸ் பெரோஸின் காப்பி என்று கண்டமேனிக்கு எழுதினால் யாருக்கு கோபம் வராது? சுஹாசினி இப்படிப்பட்டவர்களை திட்டி தீர்த்திருக்கிறார். எத்தனை டிவிடிகளைப் பார்த்து தேர்ந்தெடுத்திருப்பார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த காப்பி கண்டுபிடிப்பு இப்போது ஒரு நோயாகிவிட்டது. பேரரசின் தருமபுரியில் கூட உலக சினிமாவின் சாயல் தென்படுகிறதா என்று லென்ஸ் வைத்து பார்க்கிறார்கள். சமீபத்தில் வந்த கோ படத்தில் அரசியல்வாதியாக வரும் அஜ்மல் ஜீவாவை ஏமாற்றிவிடுவார். கமலின் சத்யா படத்திலும்கூட அரசியல்வாதி கிட்டி கமலை ஏமாற்றுவார். உடனே சத்யாதாண்டா கோ என்று அடித்துவிட்டார்கள். எந்தப் படமாக இருந்தாலும் தங்களுடைய விமர்சன கோணிப் பையில் அடைத்துவிட வேண்டும். அப்படி ஒரு வெறி.

இந்த கோணிப்பை இப்போது அடுத்தக்கட்டத்தை எட்டியிருக்கிறது. அதாவது காப்பி அடித்து படமெடுக்கலாமா? அப்படி எடுத்தால் அது தவறா? இல்லை, காப்பி அடித்துவிட்டு அது பற்றி சொல்லாமல் கம்மென்றிருந்துவிடுவது தவறா? நந்தலாலா, தெய்வத்திருமகள் விஷயத்தில் இதுதான் நடந்தது. நந்தலாலா கிகுஜிரோவின் காப்‌பி, தெய்வத்திருமகள் ஐயம் சாமின் காப்‌பி. இதை எடுத்தவர்கள் அதுபற்றி மூச்சே விடவில்லை. இது தேசத்துரோகம் என்று ஒரு கோஷ்டி. இதிலென்ன துரோகம்... உலக சினிமா பார்க்காதவங்க எத்தனை பேர் இருக்காங்க, அவங்களுக்கு இது யூஸ் ஆகுமே என்று இன்னொரு கோஷ்டி. காப்பி தப்பில்லை, ஆனா எந்தப் படத்தோட காப்பிங்கிறதை நேர்மையா சொல்லிடணும் என்ற நேர்மை விளம்பிகள் இன்னொரு பக்கம்.

இந்த கோஷ்டி சண்டையிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது. எந்தப் படம் அல்லது எந்தக் காட்சி எந்தப் படத்திலிருந்து சுடப்பட்டது என்பதை அறிய அனைவரும் ஆவலாக இருக்கிறார்கள். அந்த ஆவலை பூர்த்தி செய்யதான் இந்த காப்பி கல்சர். ( உஷ்...ஒருவழியா தலைப்புக்குவிளக்கம் கொடுத்தாச்சி).

முதலில் விஜய் படத்திலிருந்து தொடங்கலாம்.

விஜய்க்கு ஸ்டெடியான மார்க்கெட்டை உருவாக்கித் தந்த முதல் படம் பூவே உனக்காக. இந்தப் படத்தின் முக்கியமான நகைச்சுவை காட்சி மலையாளப் படமொன்றிலிருந்து உருவப்பட்டது. முதலில் மலையாளப் படத்தைப் பார்ப்போம்.

துளசிதாஸ் இயக்கத்தில் 1994 ல் வெளிவந்த படம் மலப்புறம் ஹாஜி மகனாய ஜோஷி. இந்தப் படத்தில் முகே‌ஷ், சித்திக் இருவரும் நண்பர்கள். முகேஷ் இந்து, சித்திக் முஸ்ஸிம். சித்திக்கின் தந்தைக்கு, தனது மகன் தனது நண்பனின் பள்ளியில் வாத்தியாராக வேண்டும் என்று ஆசை. அந்த பள்ளி அவர்கள் ஊரிலிருந்து நெடுந்தொலைவில் உள்ளது. சித்திக்கிற்கோ வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்று ஆசை. தந்தைக்கும் மகனுக்குமான இந்த கருத்து வேறுபாடு முற்றும் போது சித்திக் செய்யும் ஒரு கோல்மால்தான் கதை.

சித்திக்கின் தந்தையின் நண்பர் சித்திக்கை சின்ன வயதில் பார்த்திருக்கிறார், வளர்ந்த பிறகு பார்த்ததில்லை. அதனால் தனக்குப் பதில் முகேஷை அந்த வேலைக்கு அனுப்பிவிட்டு அவர் வெளிநாடு செல்ல மும்பைக்கு செல்வார். இப்போது முகேஷ் சித்திக்கின் பெயரில் வாத்தியாராக வேலை பார்ப்பார். அதாவது முஸ்லிமாக. இந்நிலையில் முகேஷின் ஊரிலுள்ள பெண் ஒருத்தி அவர் தற்போது வேலைப் பார்க்கும் ஊருக்கு திருமணமாகி வருவாள். அவளை திருமணம் செய்திருப்பது ஒரு ராணுவ வீரன். தவிர்க்க முடியாத ஒரு சந்தர்ப்பத்தில் முகேஷ் தன்னைப் பற்றிய உண்மையை அந்தப் பெண்ணிடம் கூறுவார். இதனை தொலைவிலிருந்து அப்பெண்ணின் கணவன் பார்ப்பான். அதே நேரம் முகேஷுடன் வேலை பார்க்கும் முஸ்லிமான ஜெகதி இந்த ரகசியத்தை ஒட்டுக் கேட்பார். முகேஷ் ஜெகதியின் பரம விரோதி. முகேஷைப் பற்றிய உண்மையை அப்பள்ளியின் தாளாளர் ஹாஜியாரிடம் சொல்ல ஜெகதி ஓடுவார். அவரைத் தடுக்க பின்னாலேயே ஓடுவார் முகேஷ். அதேநேர‌ம், தனது மனைவிக்கு‌‌ம், முகேஷுக்கும் தொடர்பு இருப்பதாக கருதும் அப்பெண்ணின் கணவன் துப்பாக்கியுடன் முகேஷை சுட பின்னாலேயே ஓடுவான். இந்த ரேஸில் அவன் சுடும் குண்டு ஜெகதியின் தொண்டையில் செருகிக் கொள்ளும்.

இப்போது ஜெகதியால் பேச முடியாது. மருத்துவமனையில் பேப்பரில் விஷயத்தை எழுதி நர்ஸிடம் கொடுக்க முயலும் போது முகேஷு‌ம், சித்திக்கும் அதனை பிடுங்‌‌கி, நர்ஸை பற்றி தவறாக எழுதியிருப்பதாகப் போட்டுக் கொடுப்பார்கள்.

இந்தக் காட்சியை விக்ரமன் அப்படியே சுட்டு பூவே உனக்காக படத்தில் வைத்திருப்பார். விஜய் அந்த வீட்டின் வாரிசு அல்ல என்பதையு‌‌ம், அவர் அங்கு வந்ததற்கான காரணத்தையும் சங்கீதாவிடம் சொல்வதை ஒருவன் மறைந்திருந்து கேட்பான். அதை சொல்ல அவன் ஓடும் போது கத்தி எறிந்து விளையாடுகிறவனின் கத்தி அவன் தொண்டையில் செருகிக் கொள்ளும். அவனால் பேச முடியாமல் போகும். ச‌ரி, விக்ரமனும் துளசிதாஸைப் போல் யோசித்திருப்பார் என்ற நினைத்தா‌ல், மருத்துவமனை லட்டர் காட்சியும் அடுத்து அப்படியே வரு‌ம்‌, ஈயடிச்சான் காப்பி. மலப்புறம் ஹாஜி மகனாய ஜோஷி 1994 ல் வெளியானது. பூவே உனக்காக 1996.

ஒட்டு மொத்தப் படத்தை காப்பி அடிப்பது போல இப்படி ஒட்டுப் போடும் காப்பியும் உண்டு. இதில் இன்னொரு விசேஷம் மலப்புறம் ஹா‌‌ஜி படத்தை முறைப்படி உரிமை வாங்கி ராமன் அப்துல்லா என்ற பெய‌ரில் பாலுமகேந்திரா தமிழில் இயக்கினார். அப்படத்தில் இந்த துப்பாக்கி சேஸிங் காட்சியை நீங்கள் பார்க்கலாம்.

இது ஒரு சின்ன சாம்பிள். இது போல் ஒரேயொரு காட்சியை சுட்டது, பல படங்களிலிருந்து ஒவ்வொரு காட்சியாக உருவியது, ஒட்டு மொத்தமாக சுட்டது என பலவகைகளை அடுத்தடுத்துப் பார்க்கலாம்.
இந்தியன் காப்பி படங்கள்!

கோச்சடையான் படப்பிடிப்புக்காக இம்மாதம் ர‌ஜினி லண்டன் செல்கிறார்!!!

Monday, March 05, 2012
கோச்சடையான் மோஷன் கேப்சர் டெக்னால‌ஜியில் உருவாகிறது. இதனால் நீங்கள் லொகேஷனுக்கு செல்லத் தேவையில்லை. அழுவது முதல் எதி‌ரி மீது பாய்வது வரை எல்லாவற்றையும் ஸ்டுடியோவில் செய்தால் போதும். உங்கள் ‌ரியாக்சனை கேப்சர் செய்து உங்களைப் போல் உருவாக்கியிருக்கும் அனமேஷன் உருவத்தில் அதனை ஏற்றிவிடுவார்கள். திரையில் பார்க்கும் போது எல்லாமே நிஜம் போலிருக்கும்.

கோச்சடையான் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இம்மாதம் படப்பிடிப்பை தொடங்கு முடிவு செய்துள்ளனர். அதற்காக ர‌ஜினி லண்டன் செல்கிறார். இதனை ர‌ஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தெ‌ரிவித்தார்.

'மை டியர் மம்மி'க்காக 'காலேஜ் கேர்ள்' ஆக மாறும் ஊர்வசி!!!

Monday, March 05, 2012
நடிகை ஊர்வசி மலையாளத்தில் நடிக்கும் புதிய படம் ஒன்றில் கல்லூரி மாணவியாக நடிக்கிறாராம்.

கதாநாயகி, காமெடி நடிகை, குணச்சித்திர நடிகை என சகலத்திலும் அதிரிபுதிரியாக பெயர் வாங்கியவர் ஊர்வசி. தற்போது அம்மா வேடங்களிலும், காமெடி கலந்த கதாபாத்திரங்களிலும் கலக்கி்க கொண்டிருக்கும் ஊர்வசி, பேச்சியக்கா மருமகன் என்ற படத்தில் படு வெயிட்டான கேரக்டரில் நடித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மை டியர் மம்மி என்ற பெயரில் மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை இயக்கப் போவது மகாதேவன். தீபு ரமணன் தயாரிக்கிறார்.

படத்தில் கல்லூரி மாணவியாக நடிக்கப் போகிறாராம் ஊர்வசி. அதுதான் சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது. என்ன மாதிரியான கதைக்களம் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கதையைச் சொன்னதுமே ஊர்வசி ஒத்துக் கொண்டு விட்டாராம்.

நாங்களும் தான் ஆவலாக உள்ளோம்...!

தீரா தாகம் இருந்தால் தான் ஜெயிக்க முடியும்: ஸ்ருதி!!!

Monday, March 05, 2012
என்னை அனைவருமே கமல ஹாசனின் மகளாகத் தான் பார்க்கின்றனர். அதை மாற்றவே முயற்சி செய்து வருகின்றேன் என்று ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

கமலின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் ஏழாம் அறிவில் சூர்யா ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். தற்போது அவரும், தனுஷும் நடித்துள்ள 3 படம் இந்த மாதம் ரிலீஸ் ஆகிறது. அவர் என்ன தான் நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பல்வேறு பரிமாணங்களில் ஜொலித்தாலும் அனைவரும் அவரை கமலின் மகளாகத் தான் பார்க்கிறார்களாம். இது தான் அவருக்குப் பிடிக்கவில்லை.

இது குறித்து ஸ்ருதி கூறியதாவது,

அனைவருமே என்னை கமல் மகளாகத் தான் பார்க்கிறார்கள். அதை மாற்றத் தான் நான் முயற்சி செய்து வருகிறேன். கமல் மகளாக இருந்ததால் எனக்கு எளிதில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை தக்க வைத்துக் கொள்ள திறமை வேண்டும். திறமை இல்லையென்றால் திரையுலகில் நிலைத்து நிற்க முடியாது. அனைவரும் என்னை ஒரு நடிகையாக பார்க்க வேண்டும்.

சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்றால் எதிலும் திருப்தியடையக் கூடாது. அடுத்து அடுத்து என்று தீராத தாகம் இருந்து கொண்டிருக்க வேண்டும் என்றார்.

கலைஞானியின் மகளாச்சே, இப்போதே ஞானத்துடன் பேசக் கற்றுக்கொண்டிருக்கிறார்...

'இரண்டாம் உலகத்தில்' சிக்ஸ் பேக் ஆர்யா!!!

Monday, March 05, 2012
ஒரு படத்திலாவது சிக்ஸ் பேக் வைத்து நடிக்க வேண்டும் என்று தமிழ் சினிமா துறை சங்கங்கள் ஏதோ சட்டம் வைத்திருப்பது போல சமீபகாலமாக சிக்ஸ் பேக்குகளை தங்களது உடம்பில் உருவாக்கி முறுக்கி கொண்டு ஒரு காட்சியில் நின்று காட்டுகிறார்கள் நம்ம ஹீரோக்கள். சூர்யாவில் தொடங்கிய இந்த சிக்ஸ் பேக் விஷால், சிம்பு என நீண்டுகொண்டுயிருக்க, ஒரு கட்டத்தில் சில அறிமுக ஹீரோக்கள் மருத்துவத்தின் மூலம் செயற்கையான சிக்ஸ் பேக்கை வைக்க, சிக்ஸ் பேக் வைக்கும் ஹீரோவை காமெடி நடிகராக பார்க்க தொடங்கினார்கள் ரசிகர்கள். இதன் மூலம் ஒரு வழியாக சிக்ஸ் பேக்குக்கு விடை கொடுத்த தமிழ் சினிமா ஹீரோக்கள், மறுபடியும் சிக்ஸ் பேக்குக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். இந்த சிக்ஸ் பேக் ஹீரோக்களின் பட்டியலில் புதிதாக இடம்பிடித்திருக்கிறார் ஆர்யா. செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் 'இரண்டாம் உலகம்' படத்திற்காக சிக்ஸ் பேக்கை உருவாக்கியிருகிறாராம் ஆர்யா.