Saturday, March 10, 2012

கட்டிப்பிடி கவர்ச்சி நடிகை சத்தமில்லாம அமுங்கிக்கிடந்தாரு: ரொம்ப நாளைக்குப் பிறகு கிளாமரோடு ரஃப் அண்ட் டஃப் வேஷம் ரீஎன்ட்ரி நடிகை!!!

Saturday, March 10, 2012
எங்கேயும் எப்பவும் படத்துக்கு நேஷனல் அவார்டு கிடைக்கும்னு முருக இயக்கம் எதிர்பார்த்தாராம்... எதிர்பார்த்தாராம்... கிடைக்காததால வருத்தமாயிட்டாராம். ரசிகர்கள், விமர்சகர்களோட பாராட்டுன்னு ஏகமா வரவேற்பு கிடைச்சது. ஆனா அதுக்கான பெரிய அடையாளம் எதுவும் கிடைக்காம போயிருச்சேÕன்னு நெருங்கியவங்ககிட்ட வருத்தப்பட்டாராம்... வருத்தப்பட்டாராம்...

பேமிலியோடு சண்டைபோட்டு மறுபடியும் சேர்ந்த கலைக்குடும்ப வாரிசான ‘மாணிக்கÕ ஹீரோயின் திடீர்ன்னு உடல் எடையை குறைக்க¤றாராம்... குறைக்க¤றாராம்... திடுதிப்புனு எதுக்கு இந்த வேலைன்னு கேட்டா, ‘சீக்கரமே பெரிய திரைல ரீஎன்ட்ரி கொடுக்கப்போறேன்Õனு பதில் வருதாம். வில்லி வேஷம் இருந்தாலும் ஓகேன்னு இயக்கங்களுக்கு தூது அனுப்புறாராம்... அனுப்புறாராம்...

கட்டிப்பிடி கவர்ச்சி நடிகை சத்தமில்லாம அமுங்கிக்கிடந்தாரு. ரொம்ப நாளைக்குப் பிறகு கிளாமரோடு ரஃப் அண்ட் டஃப் வேஷம் வந்ததும் கெட்டியா பிடிச்சிட்டாராம். இதுவரைக்கும் நடிகை வாங்கினதுல இந்த படத்துக்குதான் கம்மி சம்பளமாம்... சம்பளமாம்... இருந்தாலும் சான்ஸ் வந்தா போதும்னு நடிக்கிறாராம்... நடிக்கிறாராம்...

கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Saturday, March 10, 2012
* சாரதா ராமநாதன் இயக்கும் ‘புதிய திருப்பங்கள்Õ படத்தில் நந்தா ஜோடியாக நடிக்கும் ஆண்ட்ரியா பத்திரிகை நிருபர் வேடம் ஏற்றுள்ளார்.

* அஜீத் ரசிகையான ஹீரோ யின் பிந்து மாதவிக்கு அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது தீராத ஆசையாம்.

* திட்டமிட்டபடி மார்ச் முதல் வாரத்தில் ‘கோச்சடையான்Õ ஷூட்டிங் தொடங்க முடியாவிட்டாலும் வரும் 25ம் தேதி முதல் ரஜினியை வைத்து லண்டனில் காட்சிகளை படமாக்க எண்ணியுள்ளார் சவுந்தர்யா.

* சிவா, திஷா பாண்டே நடித்த ‘தமிழ்படம்Õ தற்போது தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது.

* Ôமவுன குருÕ படத்தையடுத்து சாந்தகுமார் இயக்கும் படத்தில் கார்த்தி அல்லது ஜீவா நடிக்க பேச்சு நடக்கிறது.

போராடினால் சினிமாவில் ஜெயிக்கலாம்! - விவேக்!!!

Saturday, March 10, 2012
புதுமுகங்களை வைத்து டி.எஸ். திவாகர் இயக்கும் 'கஞ்சா கூட்டம்' படத்தின் பாடல் சி.டி. வெளியிட்டு விழா வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. காமெடி நடிகர் விவேக் இதில் பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட்டு பேசியதாவது:-

தமிழ் பேசும் தமிழச்சிகள் 'கஞ்சா கூட்டம்' படத்தில் நாயகிகளாக நடித்திருப்பது சந்தோஷமாக இருக்கு. கதாநாயகர்களும் நம்ம மண்ணுக்காரங்கதான். அவர்களை எல்லோரும் உற்சாகப்படுத்தனும். சின்னதா ஆரம்பிச்ச படங்கள் பெரிய லெவலுக்கு போய் வசூலை கொட்டி இருக்கு. நிறைய செலவு செய்து எடுத்த படங்கள் கீழே விழுந்திருக்கு. எனவே புதுமுகங்கள் நடிச்ச படம்னு எதையும் ஒதுக்க முடியாது. திறமை எங்கிருந்தாலும் வரவேற்பது தமிழன் பண்பு. எந்த மொழி, எந்த இனம் என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல் பாராட்டுவான். முன்பெல்லாம் ஒரு படத்தை 4 தியேட்டரில் திரையிட்டு 100 நாட்கள் ஓட்டுவார்கள். இப்ப ஒரு படத்தை 100 தியேட்டரில் திரையிட்டு 4 நாட்கள் ஓட்டுறாங்க. சினிமா ரேஸ்மாதிரி அது சுத்திக்கிட்டே இருக்கணும். 50-வது நாள் வெள்ளி விழா 100-வது நாள் விழா என்றெல்லாம் போஸ்டர் ஒட்டி கொண்டாடணும் அப்ப தான் சினிமா செழிப்பா இருக்கும். இன்றைக்கு பெரிய ஹீரோக்கள் படங்கள் ஹிட்டாகும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. சிறு பட்ஜெட் படங்கள் வெற்றி பெறாது என்றும் சொல்ல முடியாது. நல்ல கதையும், காமெடியும் இருந்தால் படம் ஜெயிச்சிடும். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி. அதுபோல் இன்னொரு மறைமுக சூப்பர் ஸ்டாரும் இருக்கார். அதுதான் திருவாளர். நகைச்சுவை, காமெடி படத்தில் இருந்தால் கண்டிப்பாக ஹிட்டாகும். சினிமாவில் கஷ்டப்பட்டா நிச்சயம் ஜெயிக்கலாம். (அட! ஆமாங்க.. நம்ம சின்ன கலைவாணர் சொன்னா.. அந்த கடவுளே சொன்ன மாதிரி) ஏ.வி.எம். ஸ்டூடியோ வாசலில் சுற்றிக் கொண்டிருக்கிற உருண்டையை பார்த்து நாம் இந்த ஸ்டூடியோவுக்குள் நுழைய முடியுமா என்று ஏங்கியவர் பாலச்சந்தர். அவர்தான் தாதா சாகேப் பால்கே அவார்டை பெற்றார். எனவே எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தளராமல் தொடர்ந்து போராடினால் சினிமாவில் ஜெயிக்கலாம். விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன் பேசும் போது தியேட்டர்களில் சினிமா டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். அனுபவம் பேசுது... கூட்டமா குறிப்பெடுத்துக்கோங்கப்பா.....!

'3'க்கு அர்த்தம் தெரிஞ்சிருச்சு.....!!!

Saturday, March 10, 2012
'ஒய் திஸ் கொலவெறி டி' பாட்டு பிரபலமானதன் மூலம், அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் '3' படம் மார்ச் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்பாடலை பிடித்தவர்களும், சரி பிடிக்காதவர்களும் சரி ஏதோ ஒரு விதத்தில் இதைப் பற்றி பேசி அதை பிரபலமடையவைத்து விட்டார்கள். இனி படம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.. 3 என்று வெறும் ஒற்றை இலக்கை எண்ணை படத்தின் தலைப்பாக வைத்து விட்டார் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா. இப்படி ஒரு தலைப்பிற்கு பின் என்ன கதை இருக்கும் என்று நாம் மண்டை காய்ந்தது என்னவோ உண்மைதான். அதற்கு சரியான பதில் இப்போது கிடைத்துவிட்டது. ஒரு காதலர்களின் 3 பருவங்களில் ஏற்படும் பல்வேறு பரிணாமங்களை உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துச் சொல்வதுதான் கதையின் கருவாகும். யப்பா.. இதுக்குத்தான் அம்புட்டு அலப்பரை பண்ணாங்களா... தனுஷ்-ஸ்ருதி நடிக்கும் இப்படத்தில் இருவருக்கும் ஏற்படும் காதல், பள்ளிப் பருவத்தில், கல்லூரியில், தற்போது வளர்ந்து பொறுப்பை உணர்ந்த பிறகு என 3 பருவங்களிலும் எந்த வகைகளில் எல்லாம் மாற்றம் பெறுகிறது என்பதை ஐஸ்வர்யா மிக நுணுக்கமாக படம்பிடித்துள்ளார் என்கிறது படக்குழு. ஓவரா காத்தடிச்சா... ட்யூப் தெறிச்சிடும்! புரிஞ்சிக்கிட்டா சரி!!

ஹீரோயின்கள் சிரித்தே காரியம் சாதிப்பார்கள் : தீக்சா சேத் பேட்டி!!!

Saturday, March 10, 2012
ஹீரோயின்கள் சிரித்தே காரியத்தை சாதித்து விடுவார்கள் என்றார் தீக்சா சேத். ‘ராஜபாட்டை’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் தீக்சா சேத். அவர் கூறியதாவது: சினிமாவில் கவனமாக அடி எடுத்து வைக்கிறேன். நல்ல கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கிறேன். பெண்களைப் பொறுத்தவரையில் கவர்ச்சியாலும், பொருத்தமான உடை அணிந்துகொள்வதாலும் எல்லாவற்றையும் சாதிக்கும் திறமை உள்ளது. என்னைப் பொறுத்தவரை குழந்தைத்தனமான குணம், சுதந்திரமான வாழ்க்கையை விரும்புகிறேன். ஹீரோயின்களோ வேறு எந்த பெண்ணுக்குமோ பிளஸ் ஆக இருப்பது புன்னகைதான். அழகான ஒரு சிரிப்பால் எந்த காரியத்தையும் சாதிக்க முடியும். டின்னர்களில் ரிசர்வேஷன் செய்யாமலேகூட ஒரு சிரிப்பின் மூலம் தானாக ரிசர்வேஷன் செய்த இடத்தை கிடைக்க செய்ய முடியும்.

அஜீத் பிறந்த நாளில் பில்லா 2 வெளியாகாது!!!

Saturday, March 10, 2012
அஜீத்தின் பில்லா 2 படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் வரும் ஏப்ரல் இறுதியில் அல்லது அஜீத் பிறந்த மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திரையுலகில் நடந்த பெப்சி வேலை நிறுத்தம் காரணமாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பாதிக்கப்பட்டன.

இதனால் மீண்டும் தள்ளிப் போகிறது பில்லா 2 பட ரிலீஸ். இந்தப் படம் வரும் மே இரண்டாவது வாரத்தில்தான் வெளியாகும் என அதன் தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் தெரிவித்துள்ளார்.

சக்ரி டோலட்டி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் வரும் ஏப்ரல் 25-ல் வெளியாகும் எனத் தெரிகிறது.

பில்லா படத்தில் டானாக வரும் ஹீரோ, அதற்கு முன் எப்படி இருந்தான், அவனது பின்னணி என்ன என்பதை விவரிக்கும் கதை இது.

அஜீத்- நயன்தாரா நடித்த பில்லா படம் வெற்றிகரமாக ஓடியது. இதையடுத்து, அதன் இரண்டாம் பாகம் பில்லா-2 என்ற பெயரில் தயாராகி வருகிறது. பார்வதி ஓமன குட்டன் நாயகியாக நடிக்கிறார். சக்ரி டோலட்டி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த இரு மாதங்களாக விறுவிறுப்பாக நடக்கிறது.

தற்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 13-ந்தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். பின்னர் ஏப்ரல் 27-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து ரிலீஸ் தேதி மே 1 என மாற்றப்பட்டது. அஜீத் பிறந்த நாள் என்பதால் அன்றைய தினம் படத்தை ரிலீஸ் செய்வது பொருத்தமாக இருக்கும் என படக்குழுவினர் கருதினர்.

ஆனால் பெப்சி தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் டப்பிங், கிராபிக்ஸ், ரீ ரிக்கார்டிங் போன்ற வேலைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மே 2-வது வாரத்தில் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

படம் தணிக்கை செய்யப்பட்ட பிறகு ஷாம், காஜல் அகர்வால் நடித்த படங்களின் காட்சிகள் திடீர் மாற்றம்!!!

Saturday, March 10, 2012
படம் தணிக்கை செய்யப்பட்ட பிறகு ஷாம், காஜல் அகர்வால் நடித்த படங்களின் காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டன. ரவிதேஜா, ஷாம், காஜல் அகர் வால், டாப்ஸி நடித்த படம் ‘வீராÕ. தெலுங்கில் ‘வீரய்யா‘ என்ற பெயரில் வெளியானது. ரமேஷ்வர்மா இயக்கி இருக்கிறார். போலீஸ் அதிகாரியான ஷாமை கொல்வதற்கு ஒரு கூட்டம் அலைகிறது. அவர்களிடமிருந்து ஷாமை பாதுகாப்பதற்கான அதிகாரியாக வருகிறார் ரவிதேஜா. திடீரென்று ஷாமை கொல்ல வரும் கூட்டத்திடமிருந்து காப்பாற்றுகிறார் ரவி தேஜா. போலீஸ் பணியில் இருக்கும் ரவிதேஜா பொய்சொல்லி அந்த பணிக்கு வந்தது பிறகு தெரிகிறது. அவர் ஏன் பொய் சொன்னார்? ஷாமை காப்பாற்றியது ஏன்? என்று கதை செல்கிறது. ‘Ôஇப்படம் தெலுங்கில் 2 மணி 50 நிமிடம் நீளத்துக்கு படமாக்கப்பட்டிருந்தது. தமிழுக்கு 40 நிமிட காட்சிகள் கட் செய்யப்பட்டதுடன் திரைக்கதையை மாற்றி அமைப்பதற்காக காட்சிகளை முன்னும் பின்னுமாக மாற்றினோம். தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு அப்படத்தை எப்படி மாற்ற முடியும் என்கிறார்கள். படத்தில் புதிய காட்சிகள் எதுவும் இணைக்கப்படவில்லை. ஏற்கனவே ஒப்புதல் அளித்த காட்சிகளைத்தான் மாற்றி அமைத்திருக்கிறோம். முதன்முறையாக காஜல் அகர்வால் இப்படத்தில் நடிப்பதற்கு பெரிய தொகை சம்பளமாக பெற்றார்ÕÕ என்றார் பட வசனகர்த்தா ராஜராஜா.

கைவிடப்பட்ட கமல் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார்!!!

Saturday, March 10, 2012
கைவிடப்பட்ட கமல் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். ‘ஒய் திஸ் கொல வெறிடிÕ பாடல் தனுஷுக்கு பாலிவுட்டிலும் படங்களை பெற்றுத் தருகிறது. ‘ராஞ்சாÕ என்ற இந்தி படத்தில் நடித்து வரும் தனுஷ், அடுத்து தமிழ், இந்தியில் தயாராக உள்ள புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். கேரளாவில் பிரசித்திபெற்ற மார்ஷல் ஆர்ட்ஸ் சண்டை கலைகள் பிற்காலத்தில் ஜப்பானில் பிரபலமானது. இதை மையமாக வைத்து எம்.டி.வாசுதேவன் நாயர், ஜெயமோகன் ஆகியோர் எழுதியுள்ள கதைக்கு ‘19 ஸ்டெப்ஸ்Õ என்று பெயரிடப்பட்டுள்ளது. பரத்பாலா இயக்குகிறார். ஏற்கனவே இப்படத்தை கமல் நடிப்பில் தயாரிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அது தொடங்கவில்லை. இந்த படத்தில்தான் தற்போது தனுஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதை இந்தியில் அஜய் தேவ்கனை வைத்து உருவாக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்தியிலும் தனுஷே நடிப்பார் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தனுஷ் ஜோடியாக அசின் நடிக்க பேச்சு நடக்கிறது.

நடிகர் ஷாரூக்கானின் உறவினர்தான் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவர்!!!

Saturday, March 10, 2012
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.ன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லெப். ஜெனரல் ஜாஹிர்-உல் இஸ்லாமின் உறவினர்தான் நடிகர் ஷாரூக்கான் என்ற சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.

நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தின் தளபதிகளில் ஒருவர் ஷா நவாஸ் கான். தற்போதைய ஐ.எஸ்.ஐ. தலைவரான ஜாஹிர்-உல்- இஸ்லாமின் தந்தை அப்போது பாகிஸ்தான் ராணுவத்தில் பிரிகேடியராக பணிபுரிந்தார். இருவரும் தூரத்து உறவினர்கள்.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் ஷாநவாஸ் கானின் மகன்களில் ஒருவருடன் ஷாநவாஸ் இந்தியாவுக்கு வந்துவிட்டார். மற்றொருவர் பாகிஸ்தானிலேயே தங்கிவிட்டார்.

ஷாரூக்கானுக்கு இதில் எங்கே லிங்க் வருகிறது என்கிறீர்களா?

ஷாநவாஸ்கானின் வளர்ப்பு மகள்தான் ஷாரூக்கான் மகன் என்று அவரது சுயசரிதையை சொல்லுகிற பல இணையதளங்களில் இடம்பிடித்திருக்கின்றன.

அப்ப பாகிஸ்தான் உளவு அமைப்பு தலைவரும் ஷாரூக்கானின் தூரத்து சொந்தம்தானே...

கோச்சடையான் படப்பிடிப்பு மார்ச் 15-ல் ஆரம்பம்!!!

Saturday, March 10, 2012
கோச்சடையான் படத்தின் படப்பிடிப்பு வரும் 15-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

ரஜினி நடிக்கும் 'கோச்சாடையான்' பட வேலைகளில் மும்முரமாக உள்ளது படக்குழு.

சமீபத்தில் இந்தப் படத்துக்கு வீட்டிலேயே பூஜை போடப்பட்டு, ரஜினியை மேக்கப் சேரில் அமர வைத்து விதவிதமாக படங்கள் எடுத்தனர். தனியாக போட்டோ ஷூட்டும் நடத்தப் பட்டது.

வருகிற 15-ந்தேதி படப்பிடிப்பு துவங்குகிறது. வடபழனி ஏ.வி.எம். ஸ்டுடியோவில் உள்ள பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி படப்பிடிப்பை ஆரம்பிக்கின்றனர். அன்றைய தினம் ரஜினியும் படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனேயும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

பின்னர் படக் குழுவினர் லண்டன் புறப்பட்டுச் செல்கின்றனர். அங்கு மூன்று வாரம் முகாமிட்டு படப்பிடிப்பை நடத்துகிறார்கள். ஹாலிவுட் ஸ்டண்ட் நிபுணர்களை வைத்து ரஜினியின் சண்டை காட்சிகளை படமாக்குகின்றனர்.

இப்படத்தில் முன்னணி நடிகர், நடிகைகள் பலர் நடிக்கின்றனர். கிராபிக்ஸ் மூலம் நாகேசின் நகைச்சுவை காட்சிகளும் படமாவதாகக் கூறப்படுகிறது.

3 டி அனிமேஷனில், Performance capturing உத்தியில் தயாராகும் இப்படத்தில், சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஆதி, ருக்மணி, நாசர் உள்பட ஏராளமானோர் நடிக்கின்றனர். சௌந்தர்யா இப்படத்தை இயக்குகிறார். கதை திரைக்கதை வசனம் எழுதி கே.எஸ். ரவிக்குமார் டைரக்ஷன் மேற்பார்வை செய்கிறார்.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த ஆண்டிலேயே படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

சினிமா காதலில் விழுந்தேன் பட டைரக்டர் நண்பருடன் கைது!!!

Saturday, March 10, 2012
படம் தயாரிக்க ரூ.67 லட்சம் பணத்தை தயாரிப்பாளரிடம் வாங்கி மோசடி செய்த சன்பிக்சர்ஸ் காதலில் விழுந்தேன் பட டைரக்டர் பி.வி.பிரசாத் மற்றும் அவருடன் கூட்டுசேர்ந்து படதயாரிப்பாளரை ஏமாற்றிய மற்றொரு டைரக்டர் மாசி மற்றும் தீ படத்தை டைரக்ட் செய்த கிச்சா என்பவரும் மத்திய குற்றப்பிரிவு போலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் இதுபற்றிய விபரம் வருமாறு; கோலங்கள், சித்தி, அண்ணாமலை, சொர்க்கம் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் தமிழ்குமரன். இவர் கடந்த 2009 ம் ஆண்டு சொந்தமாக திரைப்படம் தயாரிக்க எண்ணி சன் பிக்சர்ஸ் காதலில் விழுந்தேன் படத்தை இயக்கிய டைரக்டர் பி.வி.பிரசாத் என்பவரை தனது படத்தை இயக்கும் படி அமர்த்தியுள்ளார். அதன் படி ஒப்பந்தம் போடப்பட்டு முதல்கட்டமாக தமிழ்குமரன் பி.வி.பிரசாத் வசம் ரூ.67 லட்சத்தை முன்பணமாக கொடுத்துள்ளார். தனது படத்திற்கு காதலில் விழுந்தேன் கதாநாயகன் நகுலை கதாநாயகனாக போடும்படி கேட்டுள்ளார். அதற்க்கு ஒத்துகொண்டு பணத்தை வாங்கிய டைரக்டர் பிரசாத் படத்தை எடுக்காமல் இழுத்தடித்துள்ளார் இதுப்பற்றி தயாரிப்பாளர் கேட்ட பொழுதெல்லாம் சரியான பதில் அளிக்காமல் நழுவியுள்ளார். ஒருக்கட்டத்தில் தனது நண்பரும் மாசி, தீ படத்தை இயக்கியவருமான கிச்சா என்பவரை காட்டி இனி இவர்தான் உங்கள் படத்தை இயக்குவார் என்று கூரியுள்ளார்.ஆனால் கிச்சாவும் காலம் கடத்தியுள்ளார்.

இதுபற்றி தயாரிப்பாளர் தமிழ்குமரன் படம் பதிவு செய்யும் லேபில் விசாரித்தபோது படத்தை தமிழ்குமரன் பெயரில் பதிவு செய்யாமல் பிரசாத் பெயரில் பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி கேட்டு தனது பணத்தை தமிழ்குமரன் திரும்ப கேட்டபோது ரூ.50 லட்சத்திற்க்கு செக் கொடுத்துள்ளனர். பிறகு அதையும் போடவேண்டாம் என்று கேட்டுள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த தயரிப்பாளர் கமிஷ்னர் திரிபாதியிடம் இதுப்பற்றி புகார் அளித்துள்ளார். புகாரை விசாரிக்க திரிபாதி உத்தரவிட்டதன் பேரில் மத்திய குற்றபிரிவு போலிசார் நேற்று இருவரையும் கைது செய்து சைதப்பேட்டை 11வது திமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் சிறையில் அடைத்தனர். பி.வி.பிரசாத்திடமிருந்து அவர் பயன் படுத்திய இன்னொவர் காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

சங்கரன்கோவில் தொகுதியில் நடிகை குஷ்பு பிரசார கூட்டத்தில் திடீர் சலசலப்பு: பா.ஜனதா தொண்டர்கள் எதிர்த்து கோஷமிட்டனர்!!!

Saturday, March 10, 2012
சங்கரன்கோவில்::சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஜவகர் சூரியகுமாரை ஆதரித்து நடிகை குஷ்பு நேற்று பிரசாரம் தொடங்கினார்.

பிரசார வேனில் நின்றபடி மாலை 6.30 மணி அளவில் தேவர்குளம் மெயின்ரோட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். பிரசாரத்தில் நடிகை குஷ்பு பேசியதாவது:

20 ஆண்டுகளுக்கு முன்பு சங்கரன்கோவில் பகுதிக்கு சினிமா சூட்டிங்கிற்காக வந்தேன். அதன் பிறகு இப்போதுதான் சங்கரன்கோவில் பகுதிக்கு வந்து இருக்கிறேன். நான் சினிமா நடிகை என்ற முறையில் பிரசாரத்துக்கு வரவில்லை. தி.மு.க. தொண்டர்களில் ஒருத்தியாக உங்களிடம் வந்து உள்ளேன்.

தமிழக அரசியலில் பொதுத்தேர்தலின் போது, மக்கள் அலை எந்தப்பக்கம் சாய்கிறதோ, ஒட்டு மொத்தமாக ஒரு கட்சியை தேர்ந்து எடுத்துவிடுவார்கள். ஆனால் இடைத்தேர்தல் என்பது மிகமுக்கியமானது. ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும் வகையில், இடைத்தேர்தலில் தகுதியான வேட்பாளரை மக்கள் தேர்ந்து எடுப்பார்கள்.

பொதுவாக உயர் அதிகாரிகளுக்கு தங்கள் துறைகளைப் பற்றி தெரிந்து கொள்ள குறைந்தது ஒரு மாதமாவது ஆகும். அவர்கள் மக்களுக்கான நலத்திட்டங்களை தீட்டுவதற்கு குறைந்தது 6 மாதமாவது செலவிட வேண்டும். ஆனால், 6 நாட்களுக்கு ஒருமுறை அதிகாரிகளை மாற்றுகிறார்கள்.

தேர்தல் வாக்குறுதியில் மாணவர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் வழங்குவோம் என்று தெரிவித்தார்கள். இதுவரை வழங்கியதாக தெரியவில்லை. காரணம் கேட்டால் தானே புயல் ஏற்பட்டதால் வழங்க முடியவில்லை என்கிறார்கள்.

தி.மு.க. ஆட்சியில் எந்த ஒரு காரணத்தையும் குறிப்பிடாமல், அறிவித்தப்படி அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி உள்ளோம். சமீபத்தில் கூடங்குளம் பிரச்சினைக்காக அமைச்சரவை கூட்டப்பட்டதாக சொன்னார்கள். ஆனால் அந்த கூட்டத்தில் கூடங்குளம் விவகாரம் பற்றி பேசவில்லை, சங்கரன்கோவில் தொகுதியை பற்றித்தான் அனைவரும் பேசி உள்ளார்கள்.

இவ்வாறு நடிகை குஷ்பு பேசினார்.

பின்னர் சங்கரன்கோவில் தேரடி திடலில் பிரசாரம் செய்ய இரவு 8 மணி அளவில் குஷ்பு அங்கு வந்தார். அவரை பின்தொடர்ந்து சில கார்களும் வந்தன. அப்போது அங்கு பாரதீய ஜனதா கட்சி தலைவர் இல.கணேசன், பா.ஜனதா வேட்பாளர் முருகனை ஆதரித்து அங்கு பேசிக்கொண்டு இருந்தார். திரளானவர்கள் திரண்டு இருந்தனர்.

இந்த நிலையில், நடிகை குஷ்பு அங்கு பேசத் தொடங்கினார். ஒரே இடத்தில் 2 பிரசாரங்கள் நடந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. நடிகை குஷ்பு பேசத் தொடங்கியதும் இல.கணேசன் பேச்சை நிறுத்திக் கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பா.ஜனதா கட்சியினர் குஷ்புவை கண்டித்தும், அவரது பிரசாரத்துக்கு அனுமதி அளித்த போலீசாரை கண்டித்தும் கோஷமிட்டனர்.

இருந்தாலும் குஷ்பு தொடர்ந்து பேசினார். பின்னர் அங்கு பிரசாரத்தை முடித்துவிட்டு கழுகுமலை ரோட்டில் அடுத்த கட்ட பிரசாரத்துக்கு குஷ்பு சென்றார். இதைத் தொடர்ந்து இல.கணேசனும் அங்கிருந்து ராஜபாளையம் ரோடு வழியாக பிரசாரத்துக்கு புறப்பட்டார்.

இதனால் தேரடி திடல் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தோல்வி பயத்தில் அதிமுக அரசு - குஷ்பு விளாசல்!!!

சங்கரன் கோயில்: தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் 32 அமைச்சர்களைக் களமிறக்கியுள்ளது அதிமுக அரசு. இதுதான் இவர்களின் சாதனை, என்றார் நடிகை குஷ்பு.

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஜவஹர் சூர்யகுமாரை ஆதரித்து நடிகை குஷ்பு நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக தென்மண்டல திமுக அமைப்புச் செயலாளரும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியை அவர் சந்தித்தார்.

அதிமுக அரசுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால் 32 அமைச்சர்கள் சங்கரன்கோவிலில் முற்றுகையிட்டுள்ளனர் என்று தனது பேச்சில் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "அதிமுக அரசு பதவியேற்று 10 மாதங்கள் ஆகியும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாமல் திமுகவினரை பழிவாங்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளது.

சங்கரன்கோவில் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவித்த நாளிலிருந்தே, அதிமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. மக்களுக்கு எதுவுமே செய்யவில்லையே. தமிழக மக்கள் புத்திசாலிகளாச்சே. நாம இதுவரைக்கும் எதுவுமே செய்யவில்லையே என்ற பயம். இதனால் தான் அதிமுக அமைச்சர்கள் 32 பேர் சங்கரன்கோவிலில் முற்றுகையிட்டுள்ளனர்.

இதுதான் அதிமுகவின் ஒரே சாதனை. இந்த சாதனையைச் செய்ய யாராலும் முடியாது," என்றார் கிண்டலாக!

நடிகை ரீமா சென் - ஷிவ்கரன் சிங் திருமணம் நாளை டெல்லியில் நடக்கிறது!!!

Saturday, March 10, 2012
தனது நீண்ட நாள் காதலர் ஓட்டல் அதிபர் ஸிவ் கரன்சிங்கை நாளை மணக்கிறார் பிரபல நடிகை ரீமா சென்.

மின்னலே படம் மூலம் தமிழில் அறிமுகமாக முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் ரீமா சென். கொல்கத்தாவை சேர்ந்த இவர், தெலுங்கு, வங்காளம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன்தான் கடைசிப் படம். ராஜபாட்டையில் ஒரு பாட்டுக்கு ஆடிவிட்டுபப் போனார்.

வாய்ப்புகள் பெரிதாக இல்லாத நிலையில், ரீமாசென்னுக்கும், ஷிவ் கரன்சிங்குக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஷிவ்கரன்சிங் டெல்லியில் ஓட்டல்கள் மற்றும் 'பார்' நடத்தி வருகிறார். கடந்த 2 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர்.

இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, பெற்றோர் சம்மதத்துடன் மோதிரம் மாற்றி நிச்சயம் கொண்டனர்.

நிச்சயம் செய்தபடி, ரீமாசென்னுக்கும், ஷிவ் கரன்சிங்குக்கும் டெல்லியில், ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு திருமணம் நடக்கிறது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், மற்றும் நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள்.

ரீமாசென்னின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நடிகர் ராம்ஜி, நடிகை சோனியா அகர்வால் உள்ளிட்ட தமிழ் பல திரையுலக பிரமுகர்கள் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்கள்.

திருமணத்துக்குப் பிறகு நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று முன்பே ரீமா சென் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

காமெடிதான் தமிழ் சினிமாவின் இரண்டாவது சூப்பர் ஸ்டார்! - விவேக்!!!

Saturday, March 10, 2012
தமிழ் சினிமாவில் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இரண்டாவது சூப்பர் ஸ்டார் காமெடிதான் என்றார் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்.

காவேரி பிக்சர்ஸ் மற்றும் விஜயா பிலிம்ஸ் சார்பில் விஜயகுமாரி, டி.கே.குமரன், பாலாஜி பெரியசாமி ஆகிய மூவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'கஞ்சா கூட்டம்'. கஞ்சாவால் இளைஞர்கள் அழிவதை தடுக்கும் நோக்கில் உருவாகியுள்ள படம் இது. டி.எஸ்.திவாகர் இயக்கியிருக்கிறார்.

யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமலேயே திவாகர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்துக்கு இசையும் இவர்தான்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேப்பில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விவேக், கலந்துகொண்டு இசை குறுந்தகடை வெளியிட்டார்.

தனது பேச்சின்போது, "முன்பெல்லாம் ஒரு படம் நான்கு திரையரங்குகளில் வெளியாகி நூறு நாட்கள் ஓடும். இன்று நூறு திரையரங்குகளில் வெளியாகி நான்கு நாட்கள் ஓடுகின்றன. எப்போ ரிலீசாகுது, எப்போ தூக்கப்படுதுன்னே தெரியவில்லை.

பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் கட்டாயம் வெற்றி பெறும் என்பது நிச்சயமில்லை. அதேபோல சின்ன படங்கள் தோல்வி அடையும் என்பதும் கிடையாது. படங்களை சின்ன பட்ஜெட்டில்தான் தயாரிக்க வேண்டும். அப்போதுதான் நஷ்டம் வந்தாலும் தாங்க முடியும்.

படத்தின் தலைப்பைப் பார்த்தாலே இதில் நல்ல காமெடி இருக்கும் என்று தெரிகிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் ஒன்று நல்ல கதையாக இருக்க வேண்டும். இரண்டாவதாக படத்தில் நல்ல காமெடி காட்சிகள் இருக்க வேண்டும்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான். இரண்டாவதாக ஒரு சூப்பர் ஸ்டார் இருக்கிறார். அதுதான் காமெடி. ரசிகர்களை சிரிக்க வைக்கும் அளவுக்கு பிரமாதமான காமெடி இருந்தாலே போதும் ஒரு படம் பிழைத்துகொள்ளும். கஞ்சா கூட்டம் பிழைச்சுக்கும்னு நம்பறேன்," என்றார்.

ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்ட அஜீத் விரைவில் புதிய இயக்கம்: அஜீத் அதிரடி முடிவு!!!

Saturday, March 10, 2012
சென்னை::ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்ட அஜீத் விரைவில் புதிய இயக்கம் தொடங்க திட்டமிட்டுள்ளார். ரசிகர்களால் ‘தல’ என்று பட்டப்பெயருடன் அழைக்கப்படுகிறார் அஜீத். கடந்த பிறந்த தினத்தின்போது தன் பெயரில் இயங்கி வந்த ரசிகர் மன்றங்களை அதிரடியாக கலைத்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் தொடர் ந்து மன்றங்களை நடத்தி வந்தனர். மன்றங்களை கலைத்தபிறகு ரிலீஸ் ஆன ‘மங்காத்தா’ படம் வெற்றிகரமாக ஓடியது. இதற்கிடையில் மன்றங்கள் மூலம் ஏழை மாணவ, மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவிகள் தொடர்ந்து வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் அஜீத்திடம் உதவிகேட்டு அடிக்கடி ரசிகர் மன்றங்கள் சார்பில் பலர் கடிதம் அனுப்பி வருகின்றனர். உண்மையிலேயே உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்று அஜீத் எண்ணி உள்ளாராம். அதற்காக அரசியல் தொடர்பில்லாத ஒரு இயக்கத்தை தொடங்க அஜீத் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடுவார் என்றும், அப்போது அதன் செயல்பாடுகள் பற்றியும் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. ‘பில்லா 2’ படத்தில் அஜீத் பிஸியாக இருப்பதால் அதன் ஷூட்டிங் முடிந்த பிறகு அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

ஹீரோ- ஹீரோயின் இல்லாத படம்!!!

Saturday, March 10, 2012
சென்னை;;கல்யாண சீன் எடுப்பதற்காக 46 நாள் தினமும் 2 ஆயிரம் பேருக்கு கல்யாண விருந்துபோட்டது பட குழு. இதுபற்றி ‘கண்டுபிடி கண்டுபிடி’ பட இயக்குனர் ராம் சுப்பாராமன் கூறியதாவது: தேனி பக்கத்தில் கல்யாண வீட்டில் நடந்த ஒரு அதிர்ச்சியான சம்பவத்தை மையமாக வைத்து இக்கதையை உருவாக்கினேன். கல்யாண வீட்டில் காலையில் தொடங்கி மதியம் வரை நடக்கும் சம்பவங்களில் முழுகதையும் முடிந்துவிடும். இதில் ஹீரோ, ஹீரோயின் என்று யாரும் கிடையாது. காதலும் கிடையாது. யதார்த்தமான கதாபாத்திரங்களாக தருண் சத்ரியா, முரளி, ஐஸ்வர்யா தேவன் நடித்துள்ளனர். போலீஸ் அதிகாரியாக சீமான் நடிக்கிறார். இக்கதையில் ஒரு சஸ்பென்ஸும் இருக்கிறது. ஒரு கல்யாணம் எப்படி நடக்க வேண்டும், எப்படி நடக்கக்கூடாது என்பதற்கு கிளைமாக்ஸ் விடை சொல்லும்.
இதன் ஷூட்டிங் தேனி, கம்பத்துக்கு இடையே உள்ள உத்தமபாளைய கல்யாண மண்டபத்தில் நடந்தது. தேனியில் வாழும் 120 பேர்களுக்கு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்ததோடு துணை நடிகர், நடிகைகள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர் நடித்துள்ளனர். கல்யாண சீனிலே தொடங்கி அதிலேயே கதை முடிவதால் எல்லோருக்கும் ஒருமுறை மட்டுமே காஸ்டியூம் தேவைப்பட்டது. 46 நாட்கள் ஷூட்டிங் நடந்தது. 46 நாள் கல்யாணம் நடத்தியதுபோல் தினமும் கல்யாண விருந்து பரிமாறப்பட்டது. இதன் ஷூட்டிங் முடிந்தது. ஒளிப்பதிவு சுகுமார். தயாரிப்பு கல்கி யுவா, சாம் சிவராஜ். இயக்குனர்கள் அகத்தியன், பிரபு சாலமன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அவர்கள் சாயலில் இப்படம் இருக்காது.

விஜய் தயாரிப்பில் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம்!!!

Saturday, March 10, 2012

சென்னை;;விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. துப்பாக்கி படத்தை பற்றிய செய்திகளை எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் விஜய் எடுத்திருக்கும் புதிய அவதாரத்தை பற்றிய செய்தி தான் வெளிவந்துள்ளது.

விஜய் சினிமாவில் நடிகர் என்ற ஒரு கதாபாத்திரத்தோடு தயாரிப்பாளர் என்ற புதிய கதாபாத்திரத்தையும் இணைத்துக் கொண்டார். நடிகர் பிரபுவின் மகன் விகரம் தான் விஜய் தயாரிக்கும் படத்தின் ஹீரோ. இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு “கில்லி பிலிம்ஸ்” என பெயர் வைத்துள்ளார்.

விஜய்யின் தந்தை தயாரித்த சில படங்கள் ஓடாத போது “வீட்லயே இருங்க பா” என்று கூறிக் கொண்டிருந்த விஜய் திடீரென இந்த முடிவெடுத்திருப்பதற்கு காரணம் விஜய் தயாரிப்பது ரீமேக் படம். ரீமேக் செய்வது விஜய் தந்தை இயக்கிய “சட்டம் ஒரு இருட்டறை” என்ற படத்தை தான்.

இந்த படம் அடைந்த மெகா வெற்றியின் மூலம் படத்தின் ஹீரோவான விஜயகாந்த் முன்னணி ஹீரோவாக மாறினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் விக்ரமுக்கு இதே வெற்றி கிடைக்குமா? என பொருத்திருந்து பார்ப்போம் என்கின்றனர் ரசிகர்கள்...