Saturday, April 7, 2012

கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Friday, April, 06, 2012
சென்னை::கோ படத்துக்கு பிறகு தமிழில் பட வாய்ப்புகள் எதிர்பார்த்த அஜ்மலுக்கு ஏமாற்றம். ஆனால் டோலிவுட்டில் அதே படம் டப்பிங் ஆகி ரிலீஸ் ஆனதில் ராம் சரண் தேஜா படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம்.

கிளாமராக நடிக்க மறுப்பதாக வரும் கிசுகிசுக்களை யாரும் நம்பாதீர்கள் எனக்கு அமைந்த வாகை சூட வா, மவுன குரு என இரு படங்களிலும் அதுபோல் வாய்ப்பு அமையாததால் நடிக்கவில்லை எனக் கூறும் இனியா, மற்ற ஹீரோயின்களுக்கு போட்டியாக கிளாமராக நடிப்பாராம்.

சிங்கக்குட்டி படத்தில் நடித்த சிவாஜி பேரன் ராம்குமார் கணேசன் அடுத்து புதுமுகங்கள் தேவை என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

தோனி படத்தையடுத்து புதிய படம் இயக்கவுள்ள பிரகாஷ்ராஜ் அதன் ஸ்கிரிப்ட் தயாரிப்பதற்காக பாங்காக் சென்றிருக்கிறார்.

சுந்தர் சி இயக்கும் மசாலா கபே படத்தில் பல காட்சிகளில் தொப்புள் தெரிய கிளாமர் வேடத்தில் நடிக்கிறாராம் களவாணி பட ஹீரோயின் ஓவியா.

தொடர்ந்து ஒரே ஹீரோவுடன் நடிப்பதா? படத்திலிருந்து வெளியேறினார் திவ்யா!!!

Friday, April, 06, 2012
பெங்களூர்::திவ்யாவின் நெருங்கிய தோழி ரூபா ஐயர். இவர் இயக்கும் சந்திரா என்ற கன்னட படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் திவ்யா. ஹீரோவாக பிரேம் நடிக்கிறார். இதையறிந்ததும் திவ்யா பின்வாங்கினார். அப்படத்தில் நடிக்க மறுத்து வெளியேறினார். இதையடுத்து அவருக்கு பதிலாக புதிய ஹீரோயினை தேடிக்கொண்டிருக்கிறார் ரூபா. இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஹீரோவாக பிரேம் நடிப்பதால்தான் திவ்யா வெளியேறியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ‘ஜோதே ஜேதேயல்லிÕ உள்ளிட்ட 2 படங்களில் பிரேமுடன் நடித்திருக்கிறார் திவ்யா. இதில் ஒரு படம் சில்வர் ஜூப்ளி ஓடி வெற்றி பெற்றது. ஆனால் மற்றொரு படம் தோல்வியை தழுவியது. மீண்டும் அதே ஹீரோவுடன் நடித்தால் அதை ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதால் ரூபா படத்திலிருந்து திவ்யா வெளியேறியதாக கூறப்படுகிறது.

பாரதிராஜா படத்தில் இருந்து நடிகை இனியா நீக்கம்!!!

Friday, April, 06, 2012
சென்னை::இயக்குனர் பாரதிராஜா அன்னக்கொடியும் கொடிவீரனும் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் இயக்குனர் அமீர் நாயகனாகவும், கார்த்திகா, இனியா ஆகியோர் நாயகிகளாகவும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அமீரும் இனியாவும் படத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திகாவையும் இன்னொரு நாயகனாக லட்சுமணனையும் வைத்து படப்பிடிப்பை பாரதிராஜா நடத்தி வருகிறார். படத்தில் இருந்து நீக்கியது குறித்து இனியா கூறியதாவது:-

முல்லைப் பெரியாறு மற்றும் பெப்சி தொழிலாளர்கள் போராட்டத்தால் அன்னக்கொடியும், கொடிவீரனும் படப்பிடிப்புக்கு தடங்கல்கள் ஏற்பட்டன. பாரதிராஜாவால் அமீர், கார்த்திகா லட்சுமணன் மற்றும் என்னிடம் இருந்து சேர்ந்தார் போல் கால்ஷீட் பெறுவது கஷ்டமாக இருந்தது.

எனவே அதில் நடிக்க முடியவில்லை. அடுத்த படத்தில் என்னை நடிக்க வைப்பதாக பாரதிராஜா உறுதி அளித்துள்ளார். என்னை, நீக்கியதால் நான் வருத்தப்படவில்லை. அவரது அடுத்த படத்தில் இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

அர்ஜுன் கட்டும் கோவிலில் ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டது: புரோகிதர்கள் விசேஷ பூஜை!!!

Friday, April, 06, 2012
நடிகர் அர்ஜுன் சென்னை அருகே உள்ள கெருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டி வருகிறார். ஒரு ஏக்கர் நில பரப்பில் இந்த கோவில் உருவாகிறது. கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக கர்நாடக மாநிலம் கொய்ராவில் இருந்து ஆஞ்சநேயர் சிலை கொண்டு வரப்பட்டது.

ஒரே கல்லில் இந்த சிலை உருவாக்கப்பட்டது. இதன் உயரம் 28 அடி ஆகும். பீடத்துடன் சேர்த்து 35 அடி உயரம் ஆகும். எடை 140 டன். ஆஞ்சநேயர் சிலையை பீடத்தில் பிரதிஷ்டை செய்யும் விழா இன்று காலை நடந்தது.

புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிலையை பீடத்தில் தூக்கி நிறுத்தி பிரதிஷ்டை செய்தனர். இதில் நடிகர் அர்ஜுன் மற்றும் அவரது மனைவி ஆஷா ராணி இரண்டு மகள்கள் பங்கேற்றனர். அப்பகுதியில் உள்ள ஏராளமான பொது மக்களும் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆஞ்சநேயரை வழிபட்டனர்.

ராமர் உள்ளிட்ட மேலும் பல கடவுள் சிலைகள் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற உள்ளது. ஒரு வருடத்தில் இப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது குறித்து அர்ஜுன் கூறிய தாவது:-

இன்றைய தினம் எனக்கு மிகவும் சந்தோஷமான நாள் ஆகும். ஆஞ்சநேயருக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாக இருந்தது. ஆண்டவன் அருளால் இன்று சிலையை நிறுவி விட்டேன். ஒரு வருடத்தில் அனைத்து பணிகளும் முடிந்து விடும்.

இவ்வாறு அர்ஜுன் கூறினார்.

பெப்சி தொழிலாளர் போராட்டம்: போலீஸ் பாதுகாப்புடன் சினிமா படப்பிடிப்பு!!!

Friday, April, 06, 2012
சென்னை::திரைப்பட தொழிலாளர் சங்கமான பெப்சி சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி வருகிறது. தயாரிப்பாளர்களுக்கும், பெப்சிக்கும் இடையே கடந்த 6 மாதமாக ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைகள் நடந்தன. அரசு சார்பில் தொழிலாளர் நல ஆணையரும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

ஆனாலும் இருதரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. பெப்சிக்கு போட்டியாக புதிய தொழிலாளர் சங்கத்தை துவங்கப்போவதாக தயாரிப்பாளர் சங்கத்தினர் அறிவித்தனர். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடக்கிறது. இந்த நிலையில் பெப்சி தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர்.

வெளியூர் படப்பிடிப்புகளில் உள்ள தொழிலாளர்கள் படப்பிடிப்பை புறக்கணித்து விட்டு உடனடியாக சென்னை திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் பட வேலைகளை அப்படியே போட்டு விட்டு இன்று சென்னை திரும்பினர். லைட்மேன்கள், டிரைவர்கள், ஆர்ட் டைரக்டர்கள், உதவி இயக்குனர்கள், துணை நடிகர்-நடிகைகள், நடன இயக்குனர்கள், டான்சர்கள், ஸ்டண்ட் நடிகர்கள் உள்பட அனைத்து பிரிவினரும் படப்பிடிப்பில் பங்கேற்காமல் சென்னை வந்துவிட்டனர்.

22 படங்களின் படப்பிடிப்புகளை நிறுத்திவிட்டு தொழிலாளர்கள் திரும்பிவிட்டதாக பெப்சி பொருளாளர் அங்கமுத்து சண்முகம் மாலைமலர் நிருபரிடம் தெரிவித்தார். இதற்கிடையில் போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்புகள் நடக்கும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.

படப்பிடிப்புக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்க செயலாளர் பி.எல்.தேனப்பன், முரளிதரன், சிவா, ஞானவேல் ராஜா, சுபாஷ் சந்திரபோஸ், சித்ராலட்சுமணன் ஆகியோர் போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜத்தை சந்தித்து படப்பிடிப்புக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

இதையடுத்து படப்பிடிப்புகளுக்கு இன்று போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. பல்லாவரத்தில் கார்த்தி நடிக்கும் 'அலெக்ஸ் பாண்டியன்' படப்பிடிப்பு போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. இதுபோல் கருணாஸ் தயாரித்து நடிக்கும் 'ரகளபுரம்' படத்தின் படப்பிடிப்பு ரெட்ஹில்ஸ் அருகில் இன்று நடந்தது. அப்படப்பிடிப்புக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு இருந்தது. இதுபோல் சிதார்த் நடிக்கும் 'காட்டு மல்லி' படப்பிடிப்பும் சென்னையில் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. பாரதிராஜா இயக்கும் 'அன்னகொடியும் கொடி வீரனும்' படப்பிடிப்பு தேனியில் போலீஸ் பாதுகாப்போடு நடந்தது.

விக்ரம் நடிக்கும் 'தாண்டவம்' படப்பிடிப்பிலும் போலீஸ் குவிக்கப்பட்டு நடத்தப்பட்டது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க செயலாளர் பி.எல். தேனப்பன் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

சினிமா படப்பிடிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறோம். பெப்சி தொழிலாளர்களுக்கு அவர்கள் கேட்ட ஊதியத்தை கொடுத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார் நிர்வாக பொறுப்பில் இருக்கும் சிலர் தங்கள் சுய நலத்துக்காகவும் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்காகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் போக்கு பிடிக்காமல் பெப்சியில் இடம் பெற்றிருந்த பல சங்கங்கள் விலகி எங்களுக்கு ஆதரவாக வந்துள்ளன. பெப்சி உடைந்துவிட்டது. தயாரிப்பாளர்கள் ஏற்கனவே வீட்டை அடமானம் வைத்து படங்கள் எடுத்து கஷ்ட நிலையில் இருக்கின்றனர். பெப்சி தொழிலாளர் போராட்டம் தேவையற்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

பெப்சி தொழிலாளர் ஸ்டிரைக் தொடங்கியது, 35 படங்களின் ஷூட்டிங் முடக்கம்!!!

Friday, April, 06, 2012
சென்னை::சினிமா தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை இன்று தொடங்கினர். இதையடுத்து 35 படங்களின் ஷூட்டிங் தடைபட்டுள்ளது. பல கோடி ரூபாய் முடங்கும் நிலை உருவாகியுள்ளதால் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி), தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இடையே சம்பள பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து இப்பிரச்னையில் தொழிலாளர் நல ஆணையம் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியது. இதன்மூலம் பெப்சியில் உள்ள 23 யூனியன்களில் 15,க்கும் அதிகமான யூனியன் தொழிலாளர்களின் சம்பளம் பற்றி முடிவானது. மற்ற சங்கத்தினருக்கான சம்பளம் நிர்ணயிப்பதில் இழுபறி நிலவியது. இதற்கிடையே, தமிழ் படத்தின் படப்பிடிப்பை பெப்சி சங்கத்தினர் தடுத்து நிறுத்தியதாக கூறி தயாரிப்பாளர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் செய்தனர். ‘இனி புதிதாக தொடங்கவுள்ள தொழிலாளர்கள் சங்கங்களுடன்தான் வேலை செய்வோம் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.

பிரச்னையை தீர்க்க, இருதரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிலாளர்கள் நல ஆணையம் அழைப்பு விடுத்தது. அதில் பெப்சி தரப்பில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையை தயாரிப்பாளர்கள் புறக்கணித்தனர். புதிய தொழிலாளர் அமைப்புடன் சேர்ந்து மே 2,ம் தேதி முதல் ஷூட்டிங் தொடங்கும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். இதனால் சினிமாவை மட்டுமே நம்பியிருக்கும் பெப்சி தொழிலாளர்கள் அதிர்ச்சி யடைந்தனர். தயாரிப்பாளர்கள் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் தொழிலாளர்கள் அனைவரும் ஏப்ரல் 7,ம் தேதி முதல் ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம் என்று பெப்சி அறிவித்தது. தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தைக்கு வராததால் அறிவித்தபடி, காலவரையற்ற வேலை நிறுத்தத்தை பெப்சி இன்று தொடங்கியுள்ளது. இது குறித்து பெப்சி பொதுச் செயலாளர் சிவா கூறும்போது, நாங்கள் வேலை செய்ய தயாராக இருந்தோம். பேச்சுவார்த்தைக்கும் தயாராக இருந்தோம். ஆனால், தயாரிப்பாளர்கள் அதை ஏற்கவில்லை. புதிய அமைப்புடன் வேலை தொடங்குவோம் என்று முதலில் அறிவித்தனர்.

கடந்த 2 நாட்களாக வேறு யாராவது தொழிலாளர் அமைப்பு தொடங்கினால் அவர்களுடன் பணியாற்றுவோம் என்று கூறி வருகின்றனர். இது அவர்களின் தோல்வியையே காட்டுகிறது. தொழிலாளர் ஆணையம் முன்னிலையில் மீண்டும் தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தைக்கு வரும் வரை பெப்சி வேலை நிறுத¢தம் தொடரும். இதனால், 35 படங்களின் ஷூட்டிங் நடக்காது. மேலும் ஷூட்டிங் முடிந்து இறுதிகட்ட பணிகளுக்காக காத்திருக்கும் படங்களும் பாதிக்கும். தயாரிப்பாளர்களின் போக்கு குறித்து அரசின் பார்வைக்கு எடுத்துச் செல்ல உள்ளதாக தொழிலாளர் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார் என்றார். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் டி.சிவா, செயலாளர் கே.முரளிதரன் உள்ளிட்டோர் டிஜிபி ராமானுஜத்தை நேற்று சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் சனிக்கிழமை படப்பிடிப்பு நடத்துவதற்கு எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். ‘போலீஸ் பாதுகாப்புடன் படப் பிடிப்புகள் நடக்கும் என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

கௌதம்-தனுஷ்-அனிருத் கூட்டணியில் புதிய படம்!!!

Saturday, April, 07, 2012
தமிழ் திரையுலகினர் தற்போது சந்தித்துக் கொண்டால் '3' படம் எப்படி? என்று தான் தங்களுக்குள் முதல் கேள்வியை கேட்டுக் கொள்கிறார்கள். தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்து இருக்கும் '3' படத்திற்கு இரண்டு விமர்சனங்கள் வர தொடங்கி இருக்கின்றன. இன்னும் சில நாட்கள் சென்றால் படம் எப்படி என்பதற்கான விடை கிடைக்கும். இந்நிலையில் கௌதம் மேனன், தனுஷ் இருவருமே நேற்று சந்தித்து பேசி இருக்கிறார்கள். கௌதம் மேனன் 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தினை இயக்கி வருகிறார் அதனை தொடர்ந்து விஜய்யை வைத்து 'யோஹன்' படத்தினை இயக்க இருக்கிறார். '3' படத்தினை தொடர்ந்து இந்தி படத்திலும், தமிழில் பரத்பாலா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார் தனுஷ். இந்நிலையில், இருவருமே தங்களது முந்தைய ஒப்புக் கொண்ட படங்களை முடித்துவிட்டு இணைந்து படம் பண்ண இருக்கிறார்கள். இப்படத்தின் தயாரிப்பாளர் யார், வேறு யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்த படத்திற்கு ஒருவர் மட்டும் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆம். இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் அனிருத்!

பிரபுதேவா , த்ரிஷா திடீர் நெருக்கம்!!!

Saturday, April, 07, 2012
பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பிரபுதேவாவை கட்டியணைத்து த்ரிஷா வாழ்த்து சொன்னார். கடந்த 3 வருடமாக காதலித்து வந்த பிரபுதேவா, நயன்தாரா திடீரென்று பிரிந்தனர். இதையடுத்து நடிக்காமல் ஒதுங்கி இருந்த நயன்தாரா மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். இந்த நிலையில் கடந்த 3,ம் தேதி பிரபுதேவாவுக்கு பிறந்த நாள். அன்று நெருங்கிய நண்பர்களுக்கு சென்னையில் உள்ள தனது பங்களாவில் விருந்து கொடுத்தார். நெருக்கமான நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த விருந்தில் நடிகை த்ரிஷாவும் நேரில் வந்து இன்ப அதிர்ச்சி தந்தார். அவரை கைகுலுக்கி வரவேற்றார் பிரபுதேவா. இருவரும் கட்டிப்பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

இது அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பின்னர் அங்கிருந்து விடைபெற்றார் த்ரிஷா. பிரபுதேவாவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் த்ரிஷா. இதுபற்றி அவர் கூறும்போது, ‘தெலுங்கில் எனக்கு பெரிய வரவேற்பை பெற்றுத்தந்த ‘நு ஒஸ்தானன்டே நே ஒத்தன்டானா’ என்ற படத்தை பிரபுதேவா அளித்தார். அவருக்கு என்றும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். பிறந்தநாள் விருந்துக்கு நயன்தாராவை அழைக்கவில்லையாம் பிரபுதேவா.

இலங்கை போரில் புதைத்த கண்ணிவெடி வ¤பரீதத்தை கூறும் மிதிவெடி!!!

Saturday, April, 07, 2012
கண்ணி வெடி பயங்கரத்தை மையமாக வைத்து மிதிவெடி படம் உருவாகிறது. இது பற்றி ‘மிதிவெடி பட இயக்குனர் ஆனந்த் மயூர் சீனிவாஸ் கூறியது: இலங்கை போரின்போது குழந்தையுடன் தப்பி வரும் பெண், சிங்கள ராணுவ அதிகாரியிடம் சிக்கிக் கொள்கிறார். அவளிடம் முக்கிய ஆதாரம் ஒன்றை கைப்பற்றுவதற்காக அதிகாரி மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலிருந்து அவள் தப்பிக்கிறாளா என்பதே கதை. ‘வேட்டையாடு விளையாடுÕ படத்தில் நடித்த டேனியல் பாலாஜி ராணுவ அதிகாரியாகவும், தப்பி வரும் பெண்ணாக நீலிமாவும் நடிக்கின்றனர். கருப்பையா ஒளிப்பதிவு. அருணகிரி இசை.

உலக அளவில் துப்பாக்கி, குண்டுகளைவிட மிக பயங்கர ஆயுதமாக கருதப்படுவது கண்ணி வெடிகள்தான். 2ம் உலக போரின்போது புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை ஜெர்மனியில் இன்றும் தேடி அகற்றிக் கொண்டிருக்கிறார்கள். வியட்னாம் போரின்போதும், கம்போடியா போரின்போதும் புதைக்கப்பட்ட கண்ணிவெடி களையும் அகற்றும் பணி நடக்கிறது. அதுபோல்தான் இலங்கையிலும் போர் நடந்தபோது இருதரப்பினரும் புதைத்தவற்றில் இன்னும் 10 லட்சம் கண்ணிவெடிகள் அகற்றப்படாமல் புதைந்து கிடக்கிறது. கண்ணிவெடிகளை கண்டுபிடித்து அகற்றுவதற்காக ஓர் அமைப்பு செயல்படுகிறது. ஆனால் இவற்றுக்கான நிதி மற்றும் ஆட்கள் மிக குறைந்த அளவே கிடைக்கிறது. இதையெல்லாம் விளக்கும் விழிப்புணர்வு கதையாக இப்படம் உருவாகி உள்ளது.

கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Saturday, April, 07, 2012
வடசென்னை பற்றிய கதையாக உருவாகும் ‘அமரன் படத்தில் வில்லித்தனம் கலந்த வேடத்தில் நடிக்கிறார் மோனிகா.

எழுத்தாளர் ஜெயமோகன் நாவலை இயக்கும் சுப்பிரமணிய சிவா, அதில் தானே ஹீரோவாக நடிக்க முடிவு செய்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடக்க விழாவுக்கு வந்த அமிதாபை அவர் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு சென்று சந்தித் தார் ரஜினி. அப்போது கோச்சடையான்Õ படம் பற்றி ரஜினியிடம் கேட்டறிந்தாராம் அமிதாப்.

மஸ்கட்டில் ஓய்வு எடுத்துவரும் மாதவன், பாகிஸ் தான் இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறாராம்.

நயன ஹீரோயினோடு நடிக்க மாட்டேன்னு இனிஷியலுக்கு பேர் மாத்திகிட்ட ஹீரோ சொன்னாலும் நடிகைக்கு தூது அனுப்புற வேலை மட்டும் நடந்துகிட்டே இருக்காம்... நடிகரை இயக்குற இயக்குனருங்க நடிகைய சந்திச்சி பெரிய தொகை கொடுக்கறோம்னு ஆசை காட்றாங்களாம். ஆனா நடிகை முடிவு எதுவும் பண்ணாம அமைதி காக்குறாராம்...

புதிய யுக்தியுடன் மிரட்ட வருகிறது 'மிரட்டல்!!!

Saturday, April, 07, 2012
'மதுர', 'அரசாங்கம்' போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஆர்.மாதேஷ் இயக்கும் படம் 'மிரட்டல்'. இதில் வினய், சந்தானம், கஞ்சா கருப்பு, பிரபு, பாண்டியராஜன், பிரதீப் ராவத், மன்சூர் அலிகான், பாஸ்கி, ஷர்மிளா, உமா பத்மநாபன் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. சமீபத்தில் லண்டனில் இப்படத்திற்காக பரபரப்பான காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. முகமூடி அணிந்த கும்பல் ஒன்று நாயகியை விமானத்தில் கடத்திச் செல்வது போன்ற அந்த காட்சியை லண்டன் நகரில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் ஈஸ்ட் லண்டன் பல்கலை கழகம், டவர் பிரிட்ஜ், பக்கிங்காம் பேலஸ் பகுதிகள் மற்றும் உலகிலேயே மிகவும் பிரபலமான ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி விமான நிலையம் மற்றும் லண்டன் சிட்டி விமான நிலைய ஓடுதளம் ஆகியப்பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. மிகவும் பரபரப்பான இந்த காட்சியை மூன்று கேமராக்களுடன், ஹெலிகாப்டரில் ஹாலிவுட் படங்களில் மட்டுமே கையாளப்படும் புதிய யுக்தியுடன் நவீனரக கேமிராவை வைத்து மிக பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்ட விதத்தை பார்த்து அங்கிருந்த படப்பிடிப்பு குழுவினர் வியந்து இயக்குநர் மாதேஷை பாராட்டினார்களாம். இப்படி பரபரப்புக்கும், பொழுது போக்கு அம்சங்களுக்கும் பஞ்சமில்லாமல் உருவாகும் 'மிரட்டல்' படத்திற்கு பிரவீன் மணி இசையமைக்கிறார். கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியிருக்கும் இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

சுந்தர் சி. சந்தானம் - அமைந்தது அட்டகாச கூட்டணி!!!

Saturday, April, 07, 2012
சுந்தர் சி. யின் படங்களிலிருந்து காமெடியை மட்டும் தூக்கிவிட்டால் கலைஞர் தொலைக்காட்சியில் மெகா சீ‌ரியலாக வெளியிடலாம். அவரை காப்பாற்றுவதே காமெடியன்கள்தான். முன்பு கவுண்டமணி. பிறகு வடிவேலு.

ஈகோ தகராறில் வடிவேலு சுந்தர் சி.யை வம்படியாக விலக்கிய பிறகு விவேக்கை பயன்படுத்தினார் சுந்தர் சி. அதன் பிறகு பிடித்தது சனி. காமெடி என்ற பெய‌ரில் விவேக் செய்த மிமிக்கி‌ரியில் படங்கள் பப்படமாயின. விவேக் இல்லாதிருந்தால் படம் மேலும் நாலு நாள் ஓடியிருக்கும் என்றானது நிலைமை.

காமெடியன் இல்லாத கையறு நிலையில் மசாலா கஃபேயில் ஆப்டாக அமைந்தார் நற்தானம். கவுண்டமணியை நினைவுப்படுத்தும் இவ‌ரின் கவுண்டர் டயலாக்குகள் சுந்தர் சி. க்கு அட்டகாசமாக செட்டாக சந்தானத்தை தனது ஆஸ்தான காமெடியனாக அறிவித்திருக்கிறார். மசாலா கஃபே யின் முக்கிய அயிட்டமே இவர்தான். அஞ்சலியின் முறைமாமனாக வந்து இவர் தருகிற அலப்பறைக்கே படம் அம்பது நானை தாண்டிவிடும் என்கிறார்கள். படம் நெடுக இவர் அடிக்கும் பன்ச் டயலாக்குகள் வேறு ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

எப்படியோ ஈகோ வடிவேலிடமிருந்தும், மிமிக்கி‌ரி விவேக்கிடமிருந்தும் விடுதலை கிடைத்திருக்கிறது சுந்தர் சி. க்கு. வாழ்க சந்தானம்.

ஹீரோயின் தேர்வில் தலையிட மாட்டேன் : தனுஷ் பேட்டி!!!

Saturday, April, 07, 2012
ஹீரோயின் தேர்வு விஷயத்தில் தலையிட மாட்டேன் என்றார் தனுஷ். இது பற்றி தனுஷ் கூறியதாவது: என்னையும் ஸ்ருதிஹாசனையும் இணைத்து இன்னும் கிசுகிசு எழுதுகிறார்கள். அதற்கு எப்போதோ பதில் சொல்லிவிட்டேன். அதுபற்றி மறுபடியும் பேசுவது நேரத்தை வீணடிப்பதாகும். அதற்கு பதிலாக அடுத்து நடிக்க உள்ள படங்களைப் பற்றி பேசுவது பொருத்தமாக இருக்கும். இப்போது அடுத்த படத்தின் ஷூட்டிங்கில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டேன். அடுத்து பரத்பாலா இயக்கும் படத்தில் நடிக்கிறேன். இந்த பட வாய்ப்பு அமைந்தது எதிர்பாராமல் நடந்தது. தேசிய விருது வாங்குவதற்காக டெல்லி சென்றேன். அங்குதான் பரத்பாலாவை சந்தித்தேன். இருவரும் முதலில் சாதாரணமாகத்தான் பேசிக்கொண்டிருந்தோம்.

இருவரும் இணைந்து பணியாற்றலாம் என முடிவு செய்தோம். பின்னர் Ô3Õ பட ஆடியோ மிக்ஸிங்கிற்காக மும்பை சென்றேன். அப்போது மறுபடியும் இருவரும் சந்தித்தோம். என்னிடம் ஒரு வரி கதை சொன்னார். பிடித்திருந்தது. அதை முழு ஸ்கிரிப்டாக எழுதும்படி கூறினேன். இப்படித்தான் இருவரும் இப்படத்தில் இணைந்தோம். இப்படத்தில் ‘பூÕ பட ஹீரோயின் பார்வதி நடிக்கிறாரா? என்கிறார்கள். இது எனக்கே ஒரு தகவல் தான். கேரக்டர் தவிர வேறு எந்த விஷயத்திலும் நான் தலையிடுவது கிடையாது. எந்த நடிகை பொருத்தமாக இருப்பார் என்பதை ஸ்கிரிப்ட் அடிப்படையில் இயக்குனர்தான் முடிவு செய்வார். இப்படத்தின் ஷூட்டிங் நமீபியாவில் இம்மாத
இறுதியில் நடக்க உள்ளது.

நடிப்புக்கு மட்டுந்தான் மசாலா; தயாரிப்புக்கு இல்ல! - பிரகாஷ்ராஜின் டெக்னிக்!!!

Saturday, April, 07, 2012
கதாநாயகர்களுக்கு ஈடாக வில்லன் நடிகர்களில் சிலர் மட்டுமே அதிகம் ரசிக்கப்படுகின்றனர். திரையில் வில்லன் வசனம் பேசும் காட்சிகளுக்கும் பலமாக கைதட்டி ஆரவாரம் செய்வார்கள் ரசிகர்கள். ரஜினிகாந்த், சத்யராஜ் போன்றோர் முதலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்தனர். பின்னர் மக்களின் ஆதரவுடன் கதாநாயகனாக உயர்ந்தனர். ரகுவரன் வில்லனாக நடித்தாலும், பின்னர் குணசித்திர வேடங்களில் வெளுத்து வாங்கினார். ரஜினி, சத்யராஜ், ரகுவரனுக்குப் பிறகு, வில்லனாக நடித்தவர்களில் வரவேற்பைப் பெற்றவர் பிரகாஷ் ராஜ். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் இந்தியாவின் பல முன்னணி கதாநாயகர்களுடன் மோதுவதில் (திரையில் தான்!) பிரகாஷ் ராஜ் எப்போதும் பிஸி. நல்ல கதையம்சம் உள்ள படங்களின் மீது ஆர்வம் கொண்டு, தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவங்கினார். தான் நடிப்பது கமர்ஷியல் மசாலா படங்கள் தான் என்றாலும், தான் தயாரிக்கும் படங்களில் மசாலாத்தனங்கள் குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்வார். (மசாலா இல்லைன்னா தமிழ்சினிமாவே இல்லையே..) 'டூயட் மூவில்' என்ற பேனரில் படங்களைத் தயாரிக்கும் பிரகாஷ் ராஜ் 'அழகிய தீயே', 'மொழி', 'பயணம்', போன்ற படங்களை தயாரித்தார். தான் தயாரித்த 'அபியும் நானும்' படத்தின் கன்னட ரீமேக்கை தானே இயக்கினார். பின்னர், தமிழில் 'தோனி' படத்தை இயக்கினார். இப்போது, இயக்குநராக தன் அடுத்த படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். கமர்ஷியல் படங்களின் படப்பிடிப்பிற்கு நடுவே, தன் படத்திற்கான எழுத்துப் பணிகளில் மும்முரமாக இருக்கிறார். சீக்கிரமே அடுத்த படம் குறித்த அறிவிப்பு வரும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

கேரளா செல்கிறது 'கோச்சடையான்' குழு!!!

Saturday, April, 07, 2012
அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக கேரளா செல்கிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கோச்சடையான்' குழு. முதல் கட்டமாக லண்டனில் மூன்று வாரங்கள் தங்கி படப்பிடிப்பு நடத்தினர். இதில் ரஜினி, சரத்குமார், ஜாக்கி ஷெராப், நாசர், ஷோபனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்காக கேரளாவில் படப்பிடிப்பு நடக்கும் இடங்களை தேர்வு செய்துள்ளனர் 'கோச்சடையான்' குழுவினர். பிரமாண்ட அரண்மனை செட்கள் அமைத்து படப்பிடிப்பு நடத்த உள்ளார்களாம். இதில் ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் என தெரிகிறது. இந்த மாதம் படத்தின் தொழில்நுட்ப ரீதியிலான பணிகள் சென்னையில் நடக்கும் என்றும், மகள் திருமணம் முடிந்ததும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் ரவிக்குமார் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் மொத்தம் 5 பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெறுகின்றன. அவற்றில் நான்கு பாடல்களை இப்போது முடித்துக் கொடுத்துவிட்டாராம் இசைப்புயல்!

'3' படத்தில் இருந்து கொல வெறி பாட்டை நீக்க திட்டமிட்டோம்: ஐஸ்வர்யா தனுஷ்!!!

Saturday, April, 07, 2012
திரையுலக அனுபவம் குடும்ப வாழ்க்கை போன்றவை குறித்து ஐஸ்வர்யா அளித்த பேட்டி வருமாறு:-

சவுந்தர்யாவையும் என்னையும் சிறு வயதில் இருந்தே வீட்டில் ஆச்சாரமாக வளர்த்தனர். சினிமாவுக்கு போககூட அனுமதிக்கவில்லை. பழைய படங்களைத்தான் வீட்டில் பார்க்க முடிந்தது.

நாங்கள் இருவரும் வெளியில் பிரிமியர் ஷோவுக்கு போய் பார்த்த முதல் படம் ‘தளபதி’. எங்கள் தந்தை ரஜினி வீட்டில் நல்ல அப்பாவாக இருந்தார். சூப்பர் ஸ்டாராக அவர் நடந்து கொண்டதே இல்லை. அப்பா-மகள் என்ற பந்தத்தை மீறி நண்பர்களாகவே பார்த்தார்.

பதினைந்து வயதில் பரத நாட்டியம் கற்றேன். அதுதான் என் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்தது. நான் இயக்குனரானேன். சவுந்தர்யா டிஜிட்டல் பக்கம் போய்விட்டார்.

தனுசுக்கும், எனக்கும் வேகவேகமாக திருமணம் நடந்து முடிந்து விட்டது. நாங்கள் இருவரும் முதல் தடவையாக சந்தித்து பேசியதில் இருந்து ஆறு மாதத்தில் திருமணம் செய்து கொண்டோம். தனுசுக்கு வயது குறைவு என்று அவரது பெற்றோர் யோசித்தனர். எனது பெற்றோர் அவசரப்படுறீயா? என்று மட்டும் கேட்டனர். பிறகு எங்கள் இஷ்டப்படி திருமணத்தை முடித்து வைத்தனர்.

நானும் தனுசும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுக்கிறோம். எங்களின் விருப்பு வெறுப்புகளும் ஒரே மாதிரி இருக்கிறது. இதுவே எங்கள் திருமண வாழ்க்கையை சந்தோஷமாக நகர்த்தி செல்கிறது.

ஒரு நடிகரின் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதை என் அம்மாவிடம் இருந்து கற்றுக் கொண்டேன். நடிகர் மனைவிக்கு பொறுமை அவசியம். ‘3’ படத்தை எடுக்க தனுஷ் ரொம்ப உதவியாக இருந்தார். ஸ்ருதியும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

கொலவெறி‘ பாடல் இண்டர்நெட்டில் லீக் ஆனதும் அந்த பாடலை படத்தில் இருந்து நீக்கிவிட முடிவு செய்தேன். இன்னொரு ‘டியூன்’ போட்டு வேறு பாடலை தயார் செய்யும்படி இசையமைப்பாளரிடம் கூறினேன். அந்த பாட்டை அகற்றுவது சென்டிமெண்டாக சரியாக இருக்காது என்று பலரும் சொன்னதால் அதை படத்தில் வைத்தோம்.

இவ்வாறு ஐஸ்வர்யா கூறினார்.

தனுஷுடன் இணையும் பார்வதி மேனன்!!!

Saturday, April, 07, 2012
தனுஷ் - பார்வதி மேனன் ஜோடியாக நடிக்கும் படத்தை புதிய இயக்குநர் பாரத் பாலா இயக்க உள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் பல்வேறு மொழிகளில் தயாராக உள்ளது.

இவ்வளவும், சரி பார்வதி மேனன் யார் என்று நீங்கள் கேட்கலாம்.. ஸ்ரீகாந்த் நடித்து வெளியான பூ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தேசிய விருது பெற்ற நடிகைதான் பார்வதி மேனன். ஆமாம்.. புதிய இயக்குநர் பாரத் பாலா பற்றி எதுவுமே சொல்லவில்லையே என்று அடுத்த கேள்வி நீங்கள் கேட்பதற்குள் நாங்களே சொல்லி விடுகிறோம்.

1997ம் ஆண்டு இந்தியாவின் 50வது சுதந்திரத் தின விழாக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில் ஏ.ஆர். ரஹ்மான் பாடி வெளியான வந்தேமாதரம் பாடலை இயக்கியவர்தான் இந்த பாரத் பாலா.

அறிமுகங்கள் முடிந்துவிட்டதா. இப்போது விஷயத்திற்கு வரலாம்.

இந்த படக்குழுவினருடன் பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று தனுஷ் கூற, இப்படத்தில் உங்கள் கதாநாயகி பற்றி என்ன கூறு விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, இப்படத்தில் கதாநாயகியாக யார் நடிக்க வேண்டும் என்பது இயக்குநரின் விருப்பம். அவரது வேலையில் நான் தலையிட விரும்ப மாட்டேன் என்றார் பளிச்சென்று.

மம்முட்டியுடன் மோதலா?: பிரியாமணி பதில்!!!

Saturday, April, 07, 2012
மம்முட்டிக்கும் பிரியா மணிக்கும் பனிப்போர் நடப்பதாக கேரள திரையுலகில் கிசு கிசு பரவியுள்ளது.

மம்முட்டி நடிக்கும் `தப்பன்னா' படத்தில் பிரியாமணியை நாயகியாக ஒப்பந்தம் செய்து இருந்தனர். ஆனால் சமீபத்தில் ரிலீசான பிரியாமணி படமான `பிரஞ்சியத்தன்' தோல்வி அடைந்தது. இதனால் பிரியா மணி மார்க்கெட் சரிந்தது. இதையடுத்து பிரியா மணியை படத்தில் இருந்து தூக்கும் படி மம்முட்டி கூறிவிட்டாராம்.

அவர் வற்புறுத்தல்படி பிரியாமணியை நீக்கி விட்டு வேறு நாயகியை தேர்வு செய்துள்ளனர் என்று கூறப்பட்டது. இதுகுறித்து பிரியாமணியிடம் கேட்டபோது மறுத்தார். மம்முட்டிக்கும், எனக்கும் எந்த மோதலும் இல்லை. இருவரும் நல்ல நட்புடன் இருக்கிறோம். அவர் படத்தில் என்னை ஒப்பந்தம் செய்து விட்டு நீக்கி விட்டதாக வெளியான செய்திகள் வதந்திதான். அந்த படத்தில் நடிக்கும்படி என்னிடம் அணுகவில்லை என்றார்.