Thursday, May 31, 2012

'எல்லாத்தையுமா' சொல்லப் போறார் சோனா?!!!

Thursday,May,31,2012
'சும்மா போரடிக்குதுல்ல.. எதையாவது கொளுத்திப் போடலாம்' ரகம் போலிருக்கிறது நடிகை சோனா.

மாதத்துக்கு ஒரு சர்ச்சை என கணக்கு வைத்துக் கொண்டு அவர் சர்ச்சைகளை கிளப்பி வருகிறார்.

எஸ்பிபி சரண் விவகாரத்துக்குப் பிறகு, தன் வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சிகரமான உண்மைகளை சினிமாவாக எடுத்து அனைவரையும் அலற வைக்கப் போவதாக அறிவித்தார்.

அதன் பிறகு இல்லையில்ல.. என் கதையின் ஒரு பகுதியை மட்டும்தான் எடுக்கப் போகிறேன் என்றார்.

இப்போது பட விவகாரத்தை அப்படியே கிடப்பில் போட்டவர், அடுத்து புத்தகம் எழுதப் போவதாக அறிவித்துள்ளார்.

சினிமாவில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை புத்தகத்தில் குறிப்பிடப் போகிறாராம். அதோடு தான் நடத்தும் யுனிக் நிறுவனம், அதற்கு வந்த சோதனைகள் பற்றியும் அதில் எழுதுகிறாராம்.

'கோடம்பாக்கத்துக்கு வந்த சோதனையடா' என கண் சிமிட்டுகிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்!

ரஜினி மகள் ஐஸ்வர்யாவுக்கு அமெரிக்காவில் பாராட்டு!!!

Thursday,May,31,2012
3 படத்தை இயக்கியதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுக்கு அமெரிக்காவில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில், இந்திய திரைப்பட விழா நடந்தது. அந்த விழாவில், ஐஸ்வர்யா இயக்கிய '3' படம் திரையிடப்பட்டது. அதில் கலந்து கொள்வதற்காக, ஐஸ்வர்யா அமெரிக்கா சென்றிருந்தார்.

விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யாவுக்கு பாராட்டுகள் குவிந்தன.

பின்னர், நியூயார்க்கில் உள்ள தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவிலும் ஐஸ்வர்யா தனுஷ் கலந்து கொண்டார்.

தமிழ் சங்கத்தின் தலைவர் பிரகாஷ் எம்.சுவாமி பேசும்போது, ஐஸ்வர்யா தனுசின் எளிமையையும், படைப்பாற்றலையும் பாராட்டினார். ஐஸ்வர்யா தனுஷ், மிக சிறந்த பரத நாட்டிய கலைஞர் என்றும், அதற்காக அவர் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளதையும் குறிப்பிட்டுப் பேசினார்.

விழாவின் இறுதியில், ஐஸ்வர்யா தனுசுக்கு விருதுகள் வழங்கப்பட்டன
.

எனக்கு திருமணம் நடக்கவில்லை: மீரா ஜாஸ்மின்!!!

Thursday,May,31,2012
நடிகை மீரா ஜாஸ்மினுக்கும் மாண்டலின் இசைக் கலைஞர் ராஜேசுக்கும் காதல் மலர்ந்ததாக கிசு கிசு வெளியானது. ராஜேஷ் இசை கச்சேரிகளில் மீரா ஜாஸ்மின் பங்கேற்று வருகிறார். அதுபோல் மீரா ஜாஸ்மின் படப்பிடிப்புகளுக்கும் ராஜேஷ் உடன் போகிறார்.

இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்ததாக செய்தி வெளியானது. தற்போது ஒரே வீட்டில் குடித்தனம் நடத்துவதாகவும் கூறப்பட்டது. திருமணத்துக்கு பிறகு மீரா ஜாஸ்மின் சினிமாவில் நடிப்பதை குறைத்து வருவதாகவும் விரைவில் சினிமாவை விட்டு விலக முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் பரவியது.

இதனை மீரா ஜாஸ்மின் சார்பில் உதவியாளர் ஜெயராமன் மறுத்துள்ளார். மீரா ஜாஸ்மினுக்கு திருமணம் நடக்கவில்லை. அவருக்கு திருமணம் நடக்கும்போது நிச்சயம் உலகத்துக்கு தெரிவிப்பார். திருமணம் பற்றி வெளியாகும் கிசு கிசுக்களை மீரா ஜாஸ்மின் விரும்பவில்லை. தவறாக எதையும் செய்யவில்லை என்பதை அவர் உறுதியாக நம்புகிறார் என்று அவர் கூறினார்.

இந்தியில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் சாதனைப் படைத்த 'கஹானி' தமிழில் ரீமேக் ஆகிறது!!!

Thursday,May,31,2012
இந்தியில் பெரும் வெற்றி பெற்ற கஹானி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இந்தி தொலைக்காட்சி தொடர்கள் தயாரிப்பில் புகழ் பெற்று விளங்கும் என்டிமால் இன்டியா பிரைவேட் லிட் நிறுவனம், நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவன‌த்தோடு இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

சுஜாய் கோஷ் எழுதி இயக்கிய கஹானியில் வித்யாபாலன் கதாநாயகியாக நடித்துள்ளார். பரம்பத்ரா சட்டர்ஜி மற்றும் நஸ்ருதின் சித்திக் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கொல்கத்தாவில் துர்கா பூஜையின்போது காணாமல் போன தனது கனவரை தேடும் பெண்ணாக வித்யாபாலன் நடித்துள்ளார். இந்த தேடலில் சாட்டர்ஜி மற்றும் சித்திக் உதவி செய்கின்றனர்.அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்ட இந்த ப‌டம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது.

இந்த படத்தை தமிழில் இயக்குவதற்காக மூன்று முன்ணணி இயக்குனர்களோடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இரண்டு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் இயக்குனர் மற்றும் கதாநாயகி பெயர் வெளியாகிறது.

நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் தமிழில் நான் அவன் இல்லை,மிஷ்கினின் அஞ்சாதே, பாண்டி, தனுஷின் மாப்பிள்ளை உள்ளிட்ட படங்கள் தயாரித்துள்ளது.

என்னைப்பற்றி வதந்திகள்: நமீதா வருத்தம்!!!


Thursday,May,31,2012
நடிகை நமீதா பற்றி வதந்திகள் பரவி வருகின்றன. லெஸ்பியன் வேடத்தில் நடிக்க அழைத்ததாகவும், அதற்கு அவர் மறுத்து விட்டதாகவும் செய்தி வந்தது. சமீபத்தில் ரசிகர்கள் காரில் பின் தொடர்ந்து நமீதாவை கடத்த முயன்றதாகவும் தகவல் பரவியது.

இதுபற்றி நமீதா அளித்த பேட்டி வருமாறு:-

என்னைப்பற்றி தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. எங்கிருந்து இது போன்ற வதந்திகள் கிளம்புகின்றன என்று தெரியவில்லை. `லெஸ்பியன்' வேடத்தில் நடிக்க யாரும் என்னை அணுகவில்லை. அதுபோன்ற கேரக்டரில் நடிக்க அழைப்பு வந்தால் நான் நடிக்கமாட்டேன். சில பிரச்சினைகளை நமது நாட்டில் வெளிப்படையாக பேசுவது இல்லை.

சில இந்தி இயக்குனர்கள் ஏற்கனவே `லெஸ்பியன்' படங்களை எடுத்துள்ளனர். ஆனால் அந்த படங்கள் தோல்வி அடைந்துவிட்டன. எனவே இதுபோன்ற படங்களில் நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. என் திரையுலக வாழ்க்கையில் சில தவறுகள் செய்து இருக்கிறேன்.

எனவே புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாவதில் அவசரம் காட்டவில்லை என்றார்.

3Dல் வெளியாகும் 'அமெஸிங் ஸ்பைடர் மேன்'!!!

Thursday,May,31,2012
குழந்தைகளின் உலகில் கொடி கட்டிப் பறக்கும் சூப்பற் சக்தி கதாபாத்திரங்களில் முக்கியமானது ஸ்பைடர் மேன். ஸ்பைடர் மேன் சார்ந்த கற்பனைகளில் எத்தனைப் படங்கள் வெளிவந்தாலும் அவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெறுகிறது. இப்போது மற்றொரு அம்சமாக 3Dல் ஸ்பைடர் மேன் படம் வெளியாக இருக்கிறது.

ஸ்பைடர் மேன் வரிசையில் குழந்தைகளையும், பெரியவர்களையும் கவர வருகிறது 'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்'. முற்றிலும் 3Dல் வர இருக்கும் இப்படத்தில் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரூ கார்பீல்டு (Andrew Garfeld) நடிக்கிறார். மேலும் இந்த அமெஸிங் ஸ்பைடர் மேன் படத்தில் இந்தி நடிகர் இர்ஃபான் கானும் நடித்திருக்கிறார். வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் இந்தித் திரையுலகில் பளிச்சிட்டு வரும் இர்ஃபான் கான் இப்படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் பளிச்சிடப் போகிறார்.

உயர்நிலைப் பள்ளி மாணவனாக இருக்கும் ஒருவனுக்கு சூப்பர் சக்திகள் வருவதும் வளர்ச்சி பெற்று விஸ்வரூபம் எடுப்பதைப் பற்றிய கதைதான் அமெஸிங் ஸ்பைடர் மேன்.

இப்படம் லாஸ் ஏஞ்சல்ஸில் டிசம்பர் 2010ல் படப்பிடிப்பு தொடங்கியது. அதுவும் 'ரெட் எபிக்' கேமராவுடன் இந்தக் கேமரா பல மாயாஜால தொழில்நுட்பங்ளின் சங்கமம். ஏப்ரல் 2011ல் படப்பிடிப்பு முடித்து படப்பிடிப்புக்கு பிந்தைய மெருகேற்றும் பணிகள் தொடங்கின.

சோனி நிறுவனம் இணையதளம், முன்னோட்டங்கள்.விடியோ கேம் என்று இதற்கான வணிகப்படுத்தல் வேலைகளில் பரபரப்பாக இருக்கிறது.

'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்' இந்தக் கோடைக்கால கொண்டாட்டமாக ஜூனில் வெளிவரவுள்ளது. இதுவும் 3டி பரிமாணத்தில் புதுவித அனுபவமாக இருக்க போகிறது.

கொலம்பியா பிக்சர்ஸின் தயாரிப்பு இது. இப்படம் தமிழ்,தெலுங்கு,இந்தி ஆகிய மூன்று இந்திய மொழிகளில் வெளிவருகிறது. இந்தியா முழுவதும் 1000த்திற்கும் அதிகமான தியேட்டர்களில் விரைவில் வெளிவரவுள்ளது. 100க்கு மேற்ப்பட்ட நாடுகளில் வெளிவர உள்ளது. 'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்' இந்தியாவில் ஜூன் 29 இல் ஒரு வாரம் முன்பே ரிலீஸ் ஆகிறது .மற்ற நாடுகளில் ஜூலை 3 இல் ரிலீஸ் ஆகிறது

கேவி ஆனந்த் இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் ரஜினி?!!!

Thursday,May,31,2012
கோச்சடையான் படம் முடிந்ததும் ரஜினி அடுத்து நடிக்கவிருப்பது ராணாதான் என பலரும் சொல்லிக் கொண்டிருக்க, கடந்த சில தினங்களாக புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.

கே வி ஆனந்த் இயக்கத்தில் அவர் நடிக்க சம்மதித்திருப்பதாகவும், இதற்காக ஆனந்தை அவர் இருமுறை தன் அலுவலகத்துக்கு வரவழைத்து ஆலோசனை செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தன்னைச் சந்தித்த ஆனந்திடம், கோச்சடையான் முடியும் வரை எதையும் வெளிப்படுத்த வேண்டாம். சூழலைப் பொறுத்து சொல்லிக் கொள்ளலாம் என ரஜினி சொன்னதாகவும், ஆனால் தகவல் அறிந்த சிலர் விஷயத்தை கசியவிட்டதால், மீடியாவில் பரபரப்பாகிவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

கே.வி.ஆனந்தும் அவரது ஆஸ்தான எழுத்தாளர்கள் சுபாவும் இணைந்து ரஜினிக்கென ஒரு அதிரடி கதையை தயார் செய்து வருகிறார்களாம்.

ரஜினி – கே.வி.ஆனந்த் கூட்டணித் தகவலை கேள்விப்பட்ட ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தினை எப்படியாவது தங்களது நிறுவனத்தின் மூலம் தயாரிக்க வேண்டும் என்ற முனைப்பு காட்டி வருகிறது.

இன்னொரு பக்கம், தனது ஆஸ்கர் ரவிச்சந்திரனும் இந்தப் படத்தை தனது பேனரில் செய்யுமாறு ஆனந்தை கேட்டு வருகிறாராம்.

ரஜினியே சொல்லும் வரை இவையெல்லாவற்றுக்குமே 'வதந்தி' அந்தஸ்துதான்!

தனுஷ் ஹீரோயின் ப்‌ரியா ஆனந்த்!!!

Thursday,May,31,2012
தனுஷ் தனது சொந்த‌த் தயா‌ரி‌ப்பு நிறுவனம் சார்பில் தயா‌ரிக்கும் முதல் படத்தில் சிவ கார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு எதிர் நீச்சல் என்று தற்காலிகமாக பெயர் வைத்துள்ளனர். வரும் நாட்களில் பெயர் மாற்றப்படலாம்.

இந்தப் படத்தை வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட் செந்தில் இயக்குகிறார். இது அவரது முதல் படம். இசை அனிருத், கேமரா வேல்ரா‌ஜ் என மொத்த டீமும் தயார். ஹீரோயின் யார் என்பது மட்டும் முடிவு செய்யப்படாமல் இருந்தது.

தற்போது 180 உள்ளிட்ட படங்களில் நடித்த ப்‌ரியா ஆனந்தை தனுஷ் தேர்வு செய்திருக்கிறார். விரைவில் படப்‌பிடிப்பு தொடங்க உள்ளது.

அஜீத்தை தனியாவிட்டு லண்டன் பறந்த குடும்பத்தார்!!!

Thursday,May,31,2012
அஜீத் குமார் படப்பிடிப்புகளில் பிசியாக இருப்பதால் அவரை தனியாக விட்டுவிட்டு அவரது குடும்பத்தார் கோடை விடுமுறையைக் கழிக்க லண்டன் சென்றுள்ளனர்.

அஜீத் குமார் ஷூட்டிங்களில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் விஷ்ணுவர்தன் இயக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி ஆகியோருடன் நடிக்கவிருக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங் நாளை மும்பையில் துவங்குகிறது. இதற்கிடையே அவரது குடும்பத்தார் கோடை விடுமுறையைக் கழிக்க லண்டன் செல்ல திட்டமிட்டனர். ஆனால் அஜீத்துக்கு படப்பிடுப்புகள் இருப்பதால் அவர் லண்டன் வருவது கஷ்டம் என்பதை அவரது குடும்பத்தார் உணர்ந்தனர்.

இதையடுத்து அஜீத்தின் மனைவி ஷாலினி, செல்ல மகள் அனோஷ்கா, மாமனார், மைத்துனி ஷாமிலி ஆகியோர் மட்டும் லண்டன் பறந்துவிட்டனர். அவர்கள் எல்லாம் ஜாலியாக லண்டனை சுற்றிப் பார்க்க தல மட்டும் இங்கு தனியாக உள்ளார்.

படப்பிடிப்புகள் இருப்பதால் குடும்பத்தார் வீட்டில் இல்லாதது ஒரு வேளை வித்தியாசமாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவர் நிச்சயம் தனது மகளை மிஸ் பண்ணுவார்.

கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Thursday,May,31,2012
யுவன் படத்தையடுத்து கண்டுபிடி கண்டுபிடி படத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா தேவன் மலையாளத்தில் பாலா ஜோடியாக நடிக்க உள்ளார்.

ராம், தமன்னா நடிக்கும் ‘ஏன் என்றால் காதல் என்பேன் படம் முதல் பிரதி தயாரானவுடன் முதல் காட்சியை தன் குரு இயக்குனர் கதிருக்கு திரையிட எண்ணி உள்ளார் இயக்குனர் கருணாகரன்.

இந்தியில் மாதவன், கங்கனா ரனவத் நடித்த தனு வெட்ஸ் மனு படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக் உரிமை பெறப்பட்டதை தொடர்ந்து மலையாளத்திலும் இப்படத்தை ரீமேக் செய்ய உள்ளனர். இதில் நடிக்கும் நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது.

மோகன்லால் நடிக்கும் மலை யாள படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் இயக்குனர் சமுத்திரக்கனி.

தி டர்ட்டி பிக்சர்ஸ் பட ஹீரோ யின் வித்யாபாலன் சேலை கட்டுவதற்காக பிறவி எடுத்திருப்பதாக சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

அப்பாசின் பிறந்த நாளையொட்டி அவருக்கு நட்சத்திர ஓட்டலில் விருந்தளித்த சினிமா காஸ்டியூமரும் அவரது மனைவியுமான எரும் அலி, டூவிலர் ஒன்றையும் பரிசளித்தார்.

பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘வழக்கு எண் 18/9Õ படத்தை ரஜினிக்கு பிரத்யேகமாக திரையிட்டார் தயாரிப்பாளர் லிங்குசாமி.

விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் சமந்தா.

கடல் படத்தில் நடிக்கும் லட்சுமி மன்சு ‘மறந்தேன் மன்னித்தேன்Õ, ‘வருவான் தலைவன்Õ ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். இவர், விரைவில் ஐதராபாத்தில் நடக்க உள்ள கால்பந்தாட்ட போட்டியின் விளம்பர தூதராகிறார்.

படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் ஸ்ருதி ஹாசன், இசை அமைப்பாளர் பொறுப்பை மறக்க மாட்டாரம். நேரம் அமையும்போது இசை அமைப்பாளராகவும் மாறுவாராம்.

கண்ணதாசன் மனைவி மரணம்

Thursday,May,31,2012
மறைந்த கவியரசு கண்ணதாசனின் மனைவி பொன்னம்மாள் ஆச்சி (வயது 79). இவர் தன் குடும்பத்தோடு கோடம்பாக்கத்தில் (ஏ.ஆர்.ரகுமான் வீட்டின் அருகே) சுப்பராயன் நகரில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களாக உடல் நலிவுற்ற இவர் நேற்று காலை 11 மணியளவில் திடீர் மரணம் அடைந்தார். இவருக்கு கண்மணி சுப்பு, கலைவாணன் கண்ணதாசன், கண்ணதாசன் ராமசாமி, வெங்கடாசலம் என்ற நான்கு மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேன்மொழி காத்தப்பன், விசாலாட்சி பழனியப்பன் ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.

(இதில் கலைவாணன் கண்ணதாசன் ஏற்கனவே காலமாகிவிட்டார்). இவரின் உடல் தகனம் நாளை போரூரில் உள்ள மின் மயானத்தில் நடக்கிறது.ஏராளமான திரையுலகினர் அவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

என்னை விரட்ட யாராலும் முடியாது : ஹரிப்பிரியா கோபம்!!!

Thursday,May,31,2012
திரையுலகை விட்டு என்னை யாராலும் விரட்ட முடியாது என்றார் ஹரிப்பிரியா. ‘முரண்’. ‘வல்லக்கோட்டை’ படத்தில் நடித்திருப்பவர் ஹரிப்பிரியா. கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் விஜயேந்திராவுடன் நெருக்கமாக இருப்பதாகவும், அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்றும் சமீபத்தில் தகவல் வெளியானது. இதையறிந்து கோபம் அடைந்த ஹரிப்பிரியா அதை மறுத்தார்.
இந்நிலையில் மலையாளத்தில் அவர் நடித்திருக்கும் பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க திருவனந்தபுரம் சென்றார். அவரிடம் விஜயேந்திராவுடனான தொடர்பு பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:

கர்நாடக திரையுலகில் என் மீது பொறாமையுடன் இருக்கும் ஒருசிலர்தான் இப்படி வதந்தி கிளப்புகிறார்கள். அங்கு எனக்கென ஒரு இடத்தை பிடித்து வருவதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. 4 மொழிகளிலும் நான் நடிக்கிறேன். இதுவும் அவர்களுக்கு பிடிக்கவில்லை. திரையுலகில் இருந்து என்னை விரட்ட யாராலும் முடியாது. மற்ற மொழிகளில் எனக்கு கிடைக்கும் ஊக்கத்தைவிட கூடுதலான ஊக்கத்தை மலையாள ரசிகர்கள் தருகிறார்கள். என்னைப்பற்றிய வதந்திகள் படங்கள் ஹிட் ஆகும்போது தன்னால் மறைந்துவிடும். கன்னடத்தில் ‘ஸ்ரீநகர் கிட்டி’ என்ற படம் விரைவில் வருகிறது. சிக்கலான நேரத்தில் என் நண்பர்களும், குடும்பத்தினரும் உறுதுணையாக இருக்கிறார்கள். அதுதான் எனக்கு பலம். இவ்வாறு ஹரிப்பிரியா கூறினார்.

Wednesday, May 30, 2012

விஷாலுடன் ஜோடி; கார்த்திகா மறுப்பு!!!

Wednesday,May,30,2012
நடிப்பதற்கான முக்கியத்துவத்தை குறைத்து வெறும் கிளாமர் வேடமாக மாற்றியதுடன், 2 ஹீரோயின் கதையாக மாற்றியதாலும் விஷால் படத்தில் ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார் கார்த்திகா. சுந்தர்.சி. இயக்கும் படம் ‘மத கஜ ராஜா’ (எம்ஜிஆர்). நகைச்சுவை கதை அம்சத்துடன் கூடிய இப்படத்தில் விஷால் 3 வேடத்தில் நடிப்பதாக இருந்தது. ஹீரோயினாக கார்த்திகா நடிக்கவிருந்தார். இந்நிலையில் படத்தில் நடிக்க மறுத்து கார்த்திகா வெளியேறிவிட்டார். இதுபற்றி அவர் கூறும்போது, மத கஜ ராஜா படத்துக்கு முதலில் ஒரு கதை சொல்லப்பட்டது. பின்னர் ஸ்கிரிப்ட் புதிதாக மாற்றப்பட்டது. அதை கேட்டபோது ஷாக் ஆனேன். எனது கதாபாத்திரம் வெறும் கிளாமர் வேடமாக மாற்றப்பட்டிருந்தது. முதலில் விஷால் மூன்று வேடத்தில் நடிப்பதாக இருந்தது. அதுவும் மாற்றப்பட்டதுடன் இரண்டு ஹீரோயின்கள் கதையாகவும் மாறி இருக்கிறது. எனவே இப்படத்தில் நடிக்கவில்லை. எதிர்காலத்தில் சுந்தர்.சி இயக்கும் மற்றொரு படத்தில் நடிப்பேன் என்றார். முதலில் இப்படத்தில் ஹன்சிகா ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்னையால் அவர் வெளியேறினார். அவருக்கு பதிலாகத்தான் கார்த்திகா நடிக்க பேசப்பட்டது. இப்போது அவரும் வெளியேறி விட்டதால் வரலட்சுமி ஹீரோயினாக நடிப்பார் என்று தெரிகிறது.

நயன்தாரா வாய்ப்பு பாவனாவுக்கு போனது!!!

Wednesday,May,30,2012
நயன்தாரா பட வாய்ப்பு பாவனாவுக்கு போனது. சுதீப் நடிக்கும் கன்னட படம் ‘பச்சன்’. இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். இதையடுத்து படவேலைகளை முடுக்கிவிட்டார் இயக்குனர் சஷாங்க். இந்நிலையில் இப்படத்துக்கு கால்ஷீட் ஒதுக்குவதில் நயன்தாராவுக்கு பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து படத்திலிருந்து வெளியேறினார். திடீரென்று நயன்தாரா வெளியேறியதால் ஷூட்டிங் தொடங்குவதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து புதிய ஹீரோயினாக பாவனா தேர்வு செய்யப்பட்டார். பருல் மற்றும் தீபா சன்னிதி என மேலும் 2 ஹீரோயின்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதுபற்றி இயக்குனர் கூறும்போது, தமிழில் அஜீத் படத்திற்கு நயன்தாரா தனது கால்ஷீட் கொடுத்திருப்பதால் இப்படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. இதனால்தான் அவர் படத்திலிருந்து வெளியேறினார். தற்போது பாவனா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். படத்தில் முக்கிய கதாபாத்திரம் என்பதால் ஹீரோயின் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தினோம். இவரைத்தவிர வேறு ஹீரோயினை இந்த வேடத்துக்கு பொருத்திப்பார்க்க முடியவில்லை. பாவனா எங்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்வார். ஏற்கனவே விஷ்ணுவர்த்தனா என்ற படத்தில் சுதீப், பாவனா இணைந்து நடித்திருக்கின்றனர். வெற்றி ஜோடி மீண்டும் இணைவது பிளஸ். இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்கு ஒத்துப்போகும் என்றார்.

இனி 'பார்ட்டி டான்ஸ்' தெரியவில்லை என யாரும் ஒதுக்க முடியாது - அசின்!!!

Wednesday,May,30,2012
பாலிவுட்டில் தாக்குப் பிடிக்க வேண்டுமானால் பாலிவுட் கலாச்சாரத்துக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இது நடிகைகளுக்கு பால பாடம்.

பின் மாலை நேர விருந்துகள், விருந்து முடிந்ததும் நடனங்கள் போன்ற அனைத்து விஷயங்களுக்கும் ஒத்துப் போனால்தான் அங்கே குப்பை கொட்ட முடியும்.

இங்கிருந்து போன நடிகைகள் அனைவருமே அத்தனைக்கும் தயாராகத்தான் போகிறார்கள். அசினும் அப்படிப் போனவர்தான். ஆரம்பத்தில் தன்னுடன் பெற்றோரையும் வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் இதனை பாலிவுட் நடிகர்கள், இயக்குநர்கள் விரும்பவில்லை என்று தெரிந்ததும் தனி ப்ளாட் எடுத்தார்.

அடுத்து மாலை நேர விருந்துகளில் பங்கேற்க மறுத்து வந்தவர், லண்டன் ட்ரீம்ஸ் படுதோல்வியைத் தழுவியதும், அந்த பிடிவாதத்தையும் தளர்த்திக் கொண்டார்.

இப்போது மாலை நேர விருந்துக்குப் பிந்தைய நடனங்களில் பங்கேற்கவும் தயாராகி வருகிறார்.

இதற்காக நட்சத்திர ஓட்டல்களில் ஆடும் வால்ட்ஷ் என்ற நடனத்தையும் அசின் கற்க துவங்கியுள்ளார். மேற்கத்திய நடனத்தையும், கிராமிய நடனத்தையும் வைத்து இந்த வகை நடனம் உருவாக்கப்பட்டு உள்ளது. இது சினிமாவுக்கானதல்ல. நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் விருந்துகளில் ஆண்களும், பெண்களும் இணைந்து ஆடுவது.

"இந்த நடனம் தெரியாததால்தான் என்னை பலரும் தனிமைப்படுத்தினர். இனி என்னை யாரும் ஒதுக்க முடியாது," என தன் தோழிகளிடம் சொல்லி வருகிறாராம்!

சிக்கென்ற ஸ்விம் சூட்டில் பத்திரிகைக்கு தீபிகா கொடுத்த போஸ்

Wednesday,May,30,2012
ஏற்கெனவே ஒரு சிவப்பு ஸ்விம் சூட்டில் தீபிகா படுகோன் கொடுத்த போஸ் பாலிவுட்டில் ஏற்படுத்திய பரபரப்பு ஓயும் முன்பே, மேலும் ஒரு பரபரப்பு...

வோக் என்ற பிரபல பேஷன் பத்திரிகை அட்டைப்படத்துக்காக, இன்னும் படுகவர்ச்சி நீச்சல் உடையில் அவர் தோன்றியுள்ளார்.

கறுப்பு - ஆரஞ்சு - பிங்க் நிற நீச்சல் உடையில், உடலின் அழகுகளும் வளைவுகளும் அப்பட்டமாகத் தெரிய அவர் நிற்பது போன்ற இந்த ஸ்டில், அவர் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் காக்டெயில் படத்திலும் இடம்பெறுகிறதாம்.

இதுகுறித்து தீபிகா அடித்துள்ள கமெண்ட்: "நான் தவறான செயல் எதையும் செய்யவில்லை. இது நிர்வாணமும் அல்ல. அழகை ரசிக்காமல் யாரும் கண்ணை மூடிக் கொள்ளப் போகிறார்களா என்ன!"

இந்த ஸ்டில் கிளப்பிய பரபரப்பு படத்தின் பப்ளிசிட்டிக்கு ரொம்பவே உதவியுள்ளதாம்.

தமிழில் ரஜினிக்கு ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்து வருகிறார் தீபிகா படுகோன்.

தமிழ் சினிமா நட்சத்திரங்களின் கார்கள்-சிறப்பு பார்வை!!!

Wednesday,May,30,2012
பொதுவாக சினிமா நட்சத்திரங்களுக்கு ஆடம்பர ஐட்டங்கள் மீது ஆர்வம் அதிகம். குறிப்பாக, கார்கள் விஷயத்தில் அவர்களது ஆடம்பர எண்ணம் பளிச்சிடும். பாலிவுட் நட்சத்திரங்கள்தான் தங்கள் அந்தஸ்தை வெளிப்படுத்த கோடிகளை கொட்டி கார்களை வாங்குவர். அந்த 'டிரென்ட்' காற்று தமிழ் சினிமாவிலும் வீசத் துவங்கியுள்ளது.

அண்மையில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கி இயக்குனர் ஷங்கர் பரபரப்பை ஏற்படுத்தினார். பதிவு செலவு உட்பட ரூ.3 கோடியை தாண்டிய அந்த கார் அவரது பிரம்மாண்ட எண்ணத்தின் உச்சத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.

தமி்ழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் பிஎம்டபிள்யூ சொகுசு காரை வைத்துள்ளார்.

ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி வாங்கிய சந்தானம்:

காமடி நடிகராக கலக்கி வரும் 'நண்பேண்டா' சந்தானம் சமீபத்தில் ரூ.85 லட்சம் கொடுத்து ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி வாங்கியிருக்கிறார். பதிவு செலவு மற்றும் இறக்குமதி வரியை சேர்க்கும்போது இந்த காரின் விலை ஒரு கோடியை தாண்டும்.

தமிழில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் சூர்யா இருவரும் ஆடி நிறுவனத்தின் சொகுசு கார்களை வைத்திருக்கின்றனர். அடுத்து 'தல' அஜீத். இவர் முதனமுதலாக வாங்கியது சிவப்பு நிற மாருதி 800 கார்.

அதன் பின்னர் அவர் தொடர்ந்து வாங்கிய அனைத்துமே வெள்ளை நிற கார்கள்தான். கார் பந்தய வீரரான அஜீத் எளிமை விரும்பியும் கூட. தற்போது மாருதி ஸ்விப்ட் காரை பயன்படுத்தி வருகிறார்.

சிலம்பரசன் மற்றும் தனுஷ் ஆகியோர் பிஎம்டபிள்யூ கார் வைத்திருக்கின்றனர். சரத்குமார்-ராதிகா தம்பதியர் பிஎம்டபிள்யூ கார் வைத்திருக்கின்றனர். முன்னணி நடிகையான த்ரிஷா ரூ.1.25 லட்சம் மதிப்புடைய மெர்சிடிஸ் பென்ஸ் கார் வைத்திருக்கிறார்.

கார் பரிசு கலாச்சாரம்:

பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் தனது படங்கள் வெற்றியடைந்தால், அதில் முக்கிய பங்கு வகித்தவர்கலுக்கு விலை மதிப்புமிக்க கார்களை வாங்கி பரிசாக அளிப்பார். அந்த கலாச்சாரம் தற்போது தமிழ் சினிமாவிலும் பரவியுள்ளது.

'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தை இயக்கிய விஜய் ரூ.87 லட்சத்துக்கு பிஎம்டபிள்யூ கார் வாங்கியிருக்கிறார். அந்த படத்தின் ஹீரோவும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின்தான் இந்த காரை விஜய்க்கு பரிசாக கொடுத்ததாக கூறப்படுகிறது.

'இனி நீ தமிழில் பாடக்கூடாது... பாடகர் கிருஷ் மீது பாய்ந்த பிரேம்ஜி!!!

Wednesday,May,30,2012
ஐபிஎல் இன்னும் என்னென்ன சண்டையை 'வலித்து'க் கொண்டு வருமோ... இந்த முறை இரு கோலிவுட் நட்சத்திரங்கள் மோதிக் கொண்டுள்ளனர்.

அவர்கள் பிரபல நடிகர் பிரேம்ஜி மற்றும் பாடகர் கிரிஷ்.

சென்னையை தோற்கடித்து கொல்கத்தா அணி கோப்பையை வென்றதையடுத்து, இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா வீட்டில் ஒரு பார்ட்டி நடந்தது. விடிய விடிய நடந்த இந்த மது விருந்தில் கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாரூக்கான், அவர் மனைவி கவுரி, நடிகர் அக்ஷய் குமார், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழ் சினிமா பாடகரும் நடிகை சங்கீதாவின் கணவருமான கிரிஷும் இதில் கலந்து கொண்டு, விருந்துக்கு வந்தவர்களுடன் போஸ் கொடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.

இதைப் பார்த்ததும் கோபமடைந்த பிரேம்ஜி, "சென்னை அணியை தோற்கடித்த கொல்கத்தா அணி ஓனர்கூட விருந்தில் கலந்து கொண்டது சரியா... இனி நீ தமிழில் பாடக்கூடாது. போய் கொல்கத்தால பாடித்தான் பிழைக்கணும்," என ட்வீட் செய்தார்.

உடனே கிரிஷ், "டேய்... அது பிரபு தேவா கொடுத்த விருந்துடா... நான் அவர்கூட தான் போட்டோ எடுத்துக்கிட்டேன். அந்த விருந்துக்கு ஷாரூக் வந்திருந்தார் அவ்வளவுதான்," என பதில் கூறியிருந்தார்.

பிரேம்ஜியும் கிரிஷும் நண்பர்களும்கூட. எனவே இந்த ட்விட்டர் சண்டை பற்றிக் கேட்டதற்கு, "எங்களுக்குள் சண்டை எதுவும் இல்லை. பிரேம்ஜியின் கமெண்டை நான் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை," என்றார்.

பிரேம்ஜி கூறுகையில், "சும்மா வாய் சண்டைதான். ஐபிஎல் வேற முடிஞ்சிடுச்சா.. ஒரே போர்.. அதான் கிரிஷை கலாய்ச்சேன்," என்றார் தன் பாணியில்...

Tuesday, May 29, 2012

விஜய், அக்ஷய்குமார், பிரபுதேவா பங்கேற்ற 'ரவுடி' பார்ட்டி!!!

Tuesday, ,May, 29, 2012
ரவுடி ரத்தோர் இந்திப் படத்தை இயக்கியுளள பிரபுதேவா நைட் பார்ட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் நடிகர்கள் விஜய், அக்ஷய்குமார், சஞ்சய் கபூர், காமெடியன் விவேக், நடிகை திரிஷா உள்பட பலரும் கலந்து கொண்டு கேக் வெட்டி சாப்பிட்டு கலகலப்பாக்கியுள்ளனர்.

இந்த நள்ளிரவு பார்ட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கானும், கொல்கத்தா அணியின் ஆதரவாளர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டதால் விருந்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

ரவுடி ரத்தோர் படக் குழு சார்பில் தமிழ் மற்றும் இந்தி நடிகர், நடிகைகளுக்கு ஒரு பார்ட்டிய ஏற்பாடு செய்திருந்தார் பிரபுதேவா. இதில் அக்ஷய் குமார், சபீனா கான், சோனாக்ஷி சின்ஹா, ஷாருக் கான், அவரது மனைவி கெளரி, ரித்தேஷ், அவருடய மனைவி ஜெனிலியா, சங்கி பாண்டே, கரீம் மொரானி, சஞ்சய் கபூர், சாஜத் கான், நடிகர்கள் விஜய், விவேக், சுதீப், பிரசன்னா, பிரகாஷ் ராஜ், ஜெயம் ரவி, சுந்தர்.சி, சித்தார், நடிகைகள் திரிஷா, சிம்ரன், சோனியா அகர்வால், சார்மி, சினேகா, குத்து ரம்யா, லட்சுமி மஞ்சு, பிரியா ஆனந்த், பூனம் கெளர், பிரகாஷ் ராஜ் மனைவி போனி வர்மா, இசையமைப்பாளர்கள் தேவி ஸ்ரீ பிரசாத், விஜய் ஆண்டனி, நடிகை சங்கீதா அவருடைய கணவர் கிருஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆடல், பாடல், விருந்து என தடபுடலாக போனதாம் விருந்து. இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் இறுதிப் போட்டியில் தோற்ற அன்று இரவு நடந்த இந்த பார்ட்டி சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. போட்டியில் வென்ற கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கானையும் கொல்கத்தா ஆதரவாளர்களையும் அழைத்து விருந்து வைத்துள்ளார் பிரபுதேவா என்று சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தமிழகம் பிச்சை கேட்கிறது என கமென்ட், சென்னையை விட்டு தன்யா ஓட்டம் :மன்னிப்பும் கேட்டார்!!!

Tuesday, ,May, 29, 2012
தமிழகம் தண்ணீர், மின்சாரத்துக்காக பிச்சை கேட்டது. கொடுத்தோம் என்று கிண்டல் செய்த நடிகை தன்யாவுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்டார். சென்னை வீட்டை காலி செய்துவிட்டு பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார். ‘காதலில் சொதப்புவது எப்படிÕ, ‘7ஆம் அறிவுÕ படங்களில் நடித்திருப்பவர் தன்யா. பெங்களூரை சேர்ந்தவர். சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் இவர் எழுதும்போது, ‘கர்நாடகத்திடம் தமிழகம் தண்ணீர் பிச்சை கேட்டது கொடுத்தோம். மின்சாரம் பிச்சை கேட்டது கொடுத்தோம். ஐபிஎல் போட்டியில் கருணை பிச்சை கேட்டது கொடுத்தோம். தமிழ் திரையுலகினர் வாய்ப்பு பிச்சை கேட்டால் தருவோம்ÕÕ என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த கருத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகினர் மத்தியிலும் கோபத்தை ஏற்படுத்தியது. தன்யாவின் டுவிட்டர் பக்கத்தில் அவரை கடுமையாக விமர்சித்தும், திட்டியும் பலர் பதில் அனுப்பினார்கள். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார் தன்யா. தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். சென்னையில் தோழிகளுடன் தங்கி இருந்த அவர், இப்பிரச்னையால் உடனடியாக அறையை காலி செய்துவிட்டு பெங்களூர் புறப்பட்டு சென்றார். இது பற்றி தன்யா டுவிட்டரில் குறிப்பிட்டபோது, Ô‘எனக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்பை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. எனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கிறேன்ÕÕ என்றார். இப்பிரச்னையை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பதற்கு அவர் முழுக்கு போட்டுள்ளார்.

பிச்சை கேட்கும் தமிழகம்... நடிகை கமென்ட்டுக்கு எதிர்ப்பு!!!

முதலில் தண்ணீர் பிசசை கேட்டார்கள், பிறகு மின்சாரம். அதையெல்லாம் கொடுத்தோம். இப்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் கருணை பிச்சை கேட்டார்கள். அதையும் கொடுத்தோம் என ஏளனமாக தமிழகத்தை பற்றி கமென்ட் அடித்திருக்கிறார் நடிகை தன்யா.
காதலில் சொதப்புவது எப்படி, 7ஆம் அறிவு உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் தன்யா. பெங்களூரை சேர்ந்தவர். தமிழ் சினிமா மூலம்தான் நடிகையாக இவர் அறிமுகமானார். இவர் இணையதளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் தமிழகத்தை சாடியிருப்பதால் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இணையதளத்தில் அவர் கூறியிருப்பதாவது:

டியர் சென்னை... நீங்கள் குடிக்க தண்ணீர் பிச்சை கேட்டீர்கள். நாங்கள் கொடுத்தோம். மின்சாரம் பிச்சை கேட்டீர்கள். அதையும் நாங்கள் கொடுத்தோம். ட்வென்ட்டி 20 கிரிக்கெட் போட்டியில் ‘பிளே ஆப் போட்டிக்கு போவதற்கும் எங்களது கருணை தேவைப்பட்டது. விட்டுக்கொடுத்தோம். நீங்கள் (தமிழ் திரையுலகினர்) சினிமா வாய்ப்பையும் பிச்சை கேட்டால் அதையும் தருவோம். இவ்வாறு தன்யா கூறியிருக்கிறார்.
கிண்டல் செய்வது போல், திமிர் பிடித்த இவரது கமென்ட் தமிழ் திரையுலம், சினிமா ரசிகர்களை மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களையும் கோபத்தில் ஆழ்த்தி உள்ளது. சிலரின் தூண்டுதல் பேரில் தன்யா இதுபோல் கூறியிருக்கிறார். தன்யாவின் பேச்சுக்கு தமிழகத்தில் சினிமா மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

விவேக் தொடங்கிய பசுமை கலாம்' திட்டம் மூலம் தமிழ்நாட்டில் 13 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை: கடலூரில் அப்துல்கலாம் நிறைவு செய்கிறார்!!!

Tuesday, ,May, 29, 2012
நடிகர் விவேக் தொடங்கிய `பசுமை கலாம்' திட்டம் மூலம் தமிழ்நாட்டில் 13 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. திட்டத்தை கடலூரில் ஜுன் மாதம் 7-ந் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நிறைவு செய்கிறார்.

10 லட்சம் மரக்கன்றுகள்

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அத்தியந்த சீடரான நடிகர் விவேக், வழக்கமாக சந்திப்பது போல அப்துல்கலாமை சந்தித்து பேசினார். அப்போது, அப்துல்கலாம், ``நாட்டில் மரக்கன்றுகள் நடுவதின் அவசியத்தை பற்றி, ஏன் உங்கள் படத்தில் கூறக்கூடாது'' என்று கேட்டார். அதற்கு நடிகர் விவேக், ``அய்யா எனது படங்களில் அதை செய்து கொண்டுதான் இருக்கிறேன். நீங்கள் உத்தரவிட்டால் ஒரு இயக்கமாக தொடங்கி இந்த பணியை செய்வேன்'' என்று கூறினார்.

அதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த அப்துல்கலாம், ``உடனடியாக தமிழ்நாட்டில் இந்தப்பணியை தொடங்குங்கள் என்றார். எத்தனை மரக்கன்றுகள் நடுவீர்கள்'' என்றும் கேட்டார். அதற்கு அவர், 10 லட்சம் மரக்கன்று நடுவேன் என்றார். இதைக்கேட்டு அப்துல்கலாமும் மலைக்கவில்லை. நிச்சயம் இவரால் முடியும் என்று நம்பினார்.

பணம்-பரிசு வேண்டாம்

10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கு, `பசுமை கலாம்' திட்டம் என்று நடிகர் விவேக் பெயர் வைத்தார். முதல் மரக்கன்று, பள்ளி மாணவர்களால் நடப்பட வேண்டும் என்று, திருச்சியில் உள்ள மாணவர்களால் மரக்கன்று நடப்பட்டது. அதனைத்தொடர்ந்து இந்த திட்டத்திற்கு பலர் ஆதரவு கொடுத்தனர்.

அதன்பின்னர், நடிகர் விவேக் கலந்துகொள்ளும் விழாக்களில், ``எனக்கு பணமோ, பரிசோ வேண்டாம். அதற்கு பதிலாக மரக்கன்றுகளை நடுங்கள்'' என்று வேண்டுகோள் விடுத்தார். அப்படி பெறப்பட்ட மரக்கன்றுகளை கொண்டு, இந்த திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.

அதாவது, முதலில் நடுவதாக குறிக்கப்பட்டது 10 லட்சம் மரக்கன்றுகள். ஆனால், இதுவரை நட்டு முடிக்கப்பட்டது 13 லட்சம் மரக்கன்றுகள்.

இந்த `பசுமை கலாம்' திட்டத்தின் நிறைவு விழா, ஜுன் மாதம் 13-ந்தேதி கடலூரில் உள்ள கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதுகுறித்து நடிகர் விவேக் கூறியதாவது:-

சிந்தையில் உதித்த திட்டம்

இந்த திட்டத்தை அப்துல்கலாம் தொடங்கிவைத்தார். அனைவரும் ஆதரவு தந்தனர். என்னையே அறியாமல் அதிகம் பிடிப்பு ஏற்பட்டுவிட்டது. 13 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது, எனது முயற்சியின் முதல் கட்டம்தான். தொடர்ந்து பல லட்சம் மரக்கன்று நடுவது எனது சிந்தையில் உதித்த திட்டம். மத்திய, மாநில அரசுகள் மர வளத்தை பெருக்குவதற்கு பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

நமது இதிகாசங்களில் ராமருக்கு பாலம் கட்ட அணில் உதவியது என்று இருக்கிறது. அதுபோல், அரசு மேற்கொள்ளும் மரவளம் பெருக்கும் மாபெரும் பணிக்கு, இந்த விவேக் அணில் போல தனது பணியை தொடர்ந்து செய்வேன்.

இவ்வாறு நடிகர் விவேக் கூறினார்.

என் 'பிரா'வை எரிக்க வேண்டும் போல இருக்கிறது... சோனம் கபூர் ஆவேசம்!!!

Tuesday, ,May, 29, 2012
இந்தி நடிகை சோனம் கபூர் சற்றே கோபமாக இருக்கிறார். எல்லாம், பாலிவுட் படங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதால் வந்த கோபமாம்.

கேன்ஸ் பட விழாவுக்காக வந்துள்ள சோனம் கபூர் அங்கு அளித்த ஒரு பேட்டியின்போது பாலிவுட் படங்களில் பெண்களை சித்தரிப்பது மிகவும் அவமானகரமானதாக இருக்கிறது. மிகவும் ஆபாசமாகவும், செக்ஸ் பொம்மைகள் போலவும் பெண்களை சித்தரித்துக் காட்டுகிறார்கள்.

உடலைக் காட்டும் காட்சிகளை வலியக்க திணிக்கிறார்கள். நான் ஒரு பெண்ணியவாதி. பாலிவுட்டில் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதைப் பார்க்கும்போது கோபமாக வருகிறது. எனது பிராவை தீவைத்து எரிக்க வேண்டும் போல இருக்கிறது. அதைத்தானே படங்களில் அதிகம் காட்டுகிறார்கள் என்றார்.

அவரை கூலாக்க, குத்துப்பாட்டு குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த சோனம், குத்துப்பாட்டு என்பது சினிமாவில் தவிர்க்க முடியாத விஷயமாகி விட்டது. அதைப் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அதிலும் ஆபாசத்தைத்தான் கலக்கிறார்கள். என்னால் குத்துப்பாட்டுக்கு ஆட முடியாது. ஆடவும் விருப்பமில்லை, ஆடவும் மாட்டேன் என்றார்

சென்னைக்குத்தாம்பா ஆதரவு கொடுத்தேன்... திரிஷா புலம்பல்!!!

Tuesday, ,May, 29, 2012
ஐபிஎல் இறுதிப் போட்டியில் நான் சென்னை சூப்பர் கிங்ஸுக்குத்தான் ஆதரவு கொடுத்தேன் என்று பதறியடித்துப் போய்க் கூறியுள்ளார் திரிஷா.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்தது. சென்னை அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதின. இதில் கொல்கத்தா வெற்றி பெற்றது.

போட்டியைக் காண பல திரைப்பட பிரபலங்கள் குவிந்திருந்தனர். கொல்கத்தாவுக்கு ஆதரவு தெரிவித்து ஜெனிலியா, பாடகி உஷா உதுப் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

அதேபோல சென்னை அணிக்கு ஜெயம் ரவி, உமா ரியாஸ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். நம்ம திரிஷாவையும் ஸ்டேடியத்தில் காண முடிந்தது.

ஆனால் அவர் கொல்கத்தா ரசிகர்கள் மத்தியில் உட்கார்ந்திருந்தார. இதனால் அவர் கொல்கத்தாவுக்கு ஆதரவாக இருந்துள்ளதாக பேச்சு வெடித்தது. கொல்கத்தா வேறு வெற்றி பெற்றதால் திரிஷா மீது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் திரிஷா மீது காட்டமாகியுள்ளனர். டிவிட்டர் மூலமும், பிளாக்குள் மூலமும் திரிஷாவைத் திட்டித் தீர்த்து வருகின்றனராம்.

இது திரிஷாவின் காதுகளுக்குப் போய் அவர் களேபரமாகி விட்டார். நான் எப்போதுமே சென்னையின் ரசிகைதான். நேற்றும் கூட சென்னைக்குத்தான் ஆதரவு கொடுத்தேன். எனது நெருங்கிய தோழி சபீனா கான் அங்கிருந்ததால் அவர் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். மற்றபடி நான் கொல்கத்தாவையெல்லாம் ஆதரிக்கவி்ல்லை, சாமி. தயவு செய்து விட்டுடுங்க என்று புலம்பியுள்ளார்.

விடுங்கப்பா, விடுங்கப்பா...

தமிழில் அறிமுகமாகும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகன்!!!

Tuesday, ,May, 29, 2012
மலையாள திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் மம்மூட்டி தமிழிலும் சில நல்லப் படங்களில் நடித்து பெயர் வாங்கியவர். இவரது மகன் துல்கர் சல்மான் தற்போது தமிழில் அறிமுகமாக உள்ளார்.

விளம்பரப் பட இயக்குநர்களான ஜேடி அன்ட் ஜெர்ரி ஆகியோர் உல்லாசம் படம் எடுத்து பெயர் பெற்றவர்கள். உல்லாசம் படத்தில் அஜீத்தையும், விக்ரமையும் இயக்கி ஒரு சிறந்த பொழுதுபோக்குப் படத்தை கொடுத்தார்கள். இவர்கள் மீண்டும் ஒரு திரைப்படம் இயக்க உள்ளனர். இப்படத்தில்தான் தான் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கிறார்.

படப்பிடிப்புகளைத் துவக்குவதற்கான பணிகளில் தயாரிப்பு வட்டம் ஈடுபட்டுள்ளனர். ஜுலை மாதத்தில் படப்பிடிப்பை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. துல்கர் சல்மான் ஏற்கனவே மலையாளப் படத்தில் அறிமுகமாகிவிட்டார்.

Monday, May 28, 2012

பாய் பிரெண்டுடன் பட விழாவுக்கு வந்த ஸ்ரேயா!!!

Monday, ,May, 28, 2012
பல நடிகர்களுடன் சேர்த்து கிசு கிசுக்கப்பட்ட ஸ்ரேயா, யாருடனும் காதல் இல்லை என கூறி வந்தார். இந்நிலையில் அவரது நிஜ காதலருடன் பட விழாவுக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீபா மேத்தாவின் ‘மிட்நைட்ஸ் சில்ரன்Õ படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரேயா. இதற்கிடையில் கன்னட படமொன்றில் நடிக்கிறார். சமீபத்தில் பிரான்சில் நடந்த கேன்ஸ் பட விழாவுக்கு தனது பாய்பிரெண்ட் ராகுல் அகர்வாலுடன் சென்றார். இது பற்றி ஸ்ரேயா கூறியதாவது:
கேன்ஸ் பட விழாவில் கலந்துகொண்டேன். அற்புதமான அனுபவம். முழுமையான ஓய்வு எடுத்துக்கொண்டே பங்கேற்றேன்.

இங்கு திரையிடப்பட்ட ஏராளமான படங்களை ரசித்துப் பார்த்தேன். உலகம் முழுவதிலும் இருந்த பிரபல நடிகர், நடிகைகள் வந்திருந்தனர். அவர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. யார், யாரை சந்தித்தேன் என்பதை சொல்ல முடியாவிட்டாலும் இதுவொரு அருமையான சந்தர்ப்பமாக எனக்கு அமைந்தது. மறக்க முடியாது. எத்தனையோ படங்களை பார்த்தாலும் அனுராக் கஷ்யப்பின் ‘கேங்ஸ் ஆப் வசெப்பூர் என்னை கவர்ந்தது.

இந்திய படங்கள் வித்தியாசமான ஒரு பாதையில் பயணிக்கிறது என்பதற்கு ஒரு உதாரணமாக அமைந்திருந்தது. எனது நண்பர்கள் பலரை சந்தித்து அவர்களுடன் பொழுதை கழித்தேன். ஜில்லென குளிர் வீசும் சூழலுடன் கூடிய இந்த இடம் என் மனதை கவர்ந்துவிட்டது. இவ்வாறு ஸ்ரேயா கூறினார். ராகுல் அகர்வால் பற்றி கேட்டதற்கு பதில் எதுவும் கூற மறுத்துவிட்டார் ஸ்ரேயா. முதல்முறையாக காதலருடன் பொது இடத்துக்கு வந்ததால் ஸ்ரேயா காதலை பற்றித்தான் சினிமா வட்டாரத்தில் பேச்சாக உள்ளது.

பாலிவுட்டைக் கலக்க கர்நாடகத்திலிருந்து பாயும் இன்னொரு அழகு நதி - நிதி!!!

Monday, ,May, 28, 2012
ஐஸ்வர்யா ராய், ஷில்பா ஷெட்டி, தீபிகா படுகோன் ஆகியோரைத் தொடர்ந்து இன்னொரு அழகிய நடிகை பாலிவுட்டுக்குப் படையெடுத்துள்ளார். ஐஸ்வர்யா, ஷில்பாவைப் போல இவரும் பாலிவுட்டை கலக்குவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

ஐஸ்வர்யா ராய், ஷில்பா ஷெட்டி, தீபிகா படுகோன் ஆகியோர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பாலிவுட்டை எந்த அளவுக்கு தங்கள் பக்கம் திருப்பினார்கள் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதிலும் ஐஸ்வர்யாவின் ஆதிக்கம் இன்றளவும் கூட பாலிவுட்டில் அழுத்தமான முத்திரையாகவே இருக்கிறது.

இந்த நிலையில் இன்னொரு அழகிய கர்நாடக நடிகை பாலிவுட்டுக்குக் கிளம்பியுள்ளார். அவரது பெயர் நிதி சுப்பையா. ஓ மை காட் என்ற படத்தில் நிதி நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இவர் குறித்து அறிந்து பரவசப்பட்டுப் போன தூம் படப் புகழ் சஞ்சய் காத்வி தனது அடுத்த படத்திற்கு நிதியை புக் செய்து விட்டாராம்.

மும்பையில் முகாமிட்டு நடித்து வரும் நிதி, தனது பாலிவுட் வாழ்ககை படு ஜாலியாக இருப்பதாக கூறுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், தொடர்ந்து நான்காவது மாதமாக மும்பையில் தங்கியிருக்கிறேன். மும்பையின் அதி வேக வாழ்க்கை என்னைக் கவர்ந்துள்ளது. சரியான திசையில் நானும் போய்க் கொண்டிருக்கிறேன் என்கிறார்.

தற்போது ஆஜ் கஸாப் லவ் என்ற படத்தில் அர்ஜூன் ராம்பாலுடன் இணைந்து நடித்து வரும் நிதி, அர்ஜூன் குறித்து புளகாங்கிதப்பட்டு பேசுகிறார். அவர் ரொம்ப ஹாட், அவரைப் பார்த்தாலே பேச்சு வர மாட்டேன் என்கிறது என்கிறார்.

இந்தியில் நடித்தாலும் கன்னடத்தில் நடிப்பதையும் கைவிடவில்லையாம் நிதி. அங்கு அவர் நடித்த அன்னா பாண்ட் படம் ஹிட்டாகியுள்ளதாம்.

அதேசமயம், இந்தியில் பெரிய ரவுண்டு வர ஆர்வமாக இருப்பதாக கூறும் நிதி, அதுவரை பிற மொழிப் படங்களில் நடிப்பதை ஒத்திவைக்க தீர்மானித்திருப்பதாகவும் கூறுகிறார்.

அப்படீன்னா, நிதி தமிழுக்கு வர கொஞ்சம் லேட்டாகும் போலிருக்கே...

மே 31ஆம் தேதி சகுனி ஆடியோ ரிலிஸ்!!!

Monday, ,May, 28, 2012
தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து, கோலிவுட்டின் வசூல ஹீரோக்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் கார்த்தியின் அடுத்தப் படமான 'சகுனி' அஜீத் படத்திற்கு நிகராக வியாபாரம் ஆகியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. விறுவிறுப்பான கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் கார்த்தியின் இப்படமும் ரசிகர்களிடையே ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அறிமுக இயக்குநர் சங்கர் தயாள், இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை இந்திய மொழிகளில், எந்த மொழியிகளிலும் எடுக்ககூடிய அளவுக்கு அமைந்திருக்கிறதாம். ஜி.வி. பிரகாஷ் குமார், இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைக்கும் அளவுக்கு இனியமையான பாடல்களாக வந்திருக்கிறதாம். அதை ரசிகர்கள் கேட்பதற்கு இன்னும் சில நாட்கள் பொருத்திருக்க வேண்டும். ஆம், சகுனியின் பாடல் வெளியீட்டு விழா வரும் மே 31ஆம் தேதியன்று சென்னையில் நடைபெறுகிறது.

பிரகாஷ்ராஜ், சந்தானம், ராதிகா, ரோஜா உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் தமிழில் மட்டும் இன்றி தெலுங்கிலும் நல்ல விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது. ரஜினி, சூர்யா படங்களை அடுத்து மூன்றாவது இடத்தில் கார்த்தி, தன்னை நிலைநிறுத்தியுள்ளார். பல கோடி ரூபாய் விலை கொடுத்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பை ஸ்ரீ சாய் கணேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது.

பள்ளி மாணவியாக நடிக்கும் ஹன்சிகா!!!

Monday, ,May, 28, 2012
தற்போதைய தமிழ் சினிமாவின் கனவு கண்ணியான ஹன்சிகா, மெகா வாட்ஸ் பல்பு போல பளபளப்பாக இருந்தாலும், நாளுக்கு நாள் கூடிகொண்டேப் போகும் அவருடைய உடல் எடை அவரை ஆண்ட்டி ரேன்ஞ்சிக்கு கொண்டுபோனது. சற்று உசாரான ஹன்சிகா, சுதாரித்து கொண்டு தனது உடல் எடையை குறைக்க கடினமான உடற்பயிற்சி மேற்கொண்டிருக்கிறார்.

இந்த உடல் எடை விவகாரமாக அவர் சமீபத்தில் அமெரிக்க சென்று வந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இப்படி தனது உடல் எடையை குறைப்பதில் ஹன்சிகா, தீவிரம் காட்டுவதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. 'சிங்கம் 2' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் ஹன்சிகா, அதில் பள்ளி மாணவியாக நடிக்கிறாராம்.

தற்போது உள்ள உடல் எடையுடன் நடித்தால் அவர், பள்ளி ஆசிரியர் போலதான் இருப்பார். அதனால் தான் இந்த எடை குறைப்பு போராட்டம். உடல் எடையை குறைப்பதில் தீவிரம் காட்டி வரும் ஹன்சிகா, தற்போது சற்று எடை குறைத்து ஸ்லிம்மாக இருக்கிறாராம்.

பிரபுதேவா வியந்து பாராட்டிய 'அடுத்த பிரபுதேவா'!!!

Monday, ,May, 28, ,2012
பிரபுதேவாவின் நடனத்திற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சினிமாவில் இன்றைக்கு நடன இயக்குநர்களாக பிரபலமானவர்கள் அனைவருமே பிரபுதேவாவிடம் பணிபுரிந்தவர்கள்தான்.

பிரபுதேவாவை சிறப்பிக்கும் விதமாக விஜய் டிவியில் ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நிகழ்ச்சி கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பானது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியின் சீசன் 2 மறுபடியும் தொடங்கியுள்ளது. பல்வேறு சுற்றுக்களைக் கடந்து முக்கிய கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக நடன இயக்குநர்கள் ஸ்ரீதர், காயத்ரி ரகுராம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியின் நாயகன் பிரபுதேவா பங்கேற்றது போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. நடனப்போட்டியில் வில்லாக வளைந்து நடனமாடியவர்களைக் கண்டு பிரபுதேவாவே ஒரு கணம் வியந்துதான் போனார். என்னால் கூட இந்த மாதிரி ஸ்டெப்ஸ் போட முடியாது என்று பிரபுதேவா கூறியது அவரது தன்னடக்கத்தை காட்டியது.

அப்பாவிடம் நடனம் கற்று நடன இயக்குநராக உயர்ந்து இன்றைக்கு மிகப்பெரிய இயக்குநராக பெயர் பெற்றிருந்தாலும் நடனம்தான் தன் வாழ்க்கையை உயர்த்தியது என்பதை இன்றைக்கும் பெருமையோடு ஒத்துக்கொள்கிறார் பிரபுதேவா.

ஞாயிறுக்கிழமை என்றாலே சினிமாதான் ஒளிபரப்பவேண்டும் என்ற ட்ரெண்டை மாற்றி நிகழ்ச்சியின் மூலமும் ரசிகர்களை கவரமுடியும் என்று மீண்டும் நிரூபித்துள்ளது விஜய் டிவி.

அது சரி. பிரபு தேவாவின் பெயரில் வரும் நிகழ்ச்சி என்பதற்காக நிகழ்ச்சியின் தொகுப்பாளினி பிரபுதேவாவை அடிக்கடி புகழ்வது கொஞ்சம் ஓவராக இல்லை?

விஷ்ணுவின் ப்ளான்! அஜீத்துக்கும் அதுவே விருப்பம்!!!

Monday, ,May, 28, 2012
அஜீத் நடித்துள்ள பில்லா-2 ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. ஜூன் மாதம் 15-ம் தேதி பில்லா-2ரிலீஸாகிறது. இந்த வருடம் அஜீத் 3 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதால் பில்லா-2 ஷூட்டிங் முடிந்த சில நாட்களிலேயே அடுத்ததாக விஷ்ணுவர்தன் படத்திற்கு தயாராகிவிட்டார் அஜித்.

மே 30-ம் தேதி முதல் விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி என முன்னணி நட்சத்திரங்கள் இதில் இணைகிறார்கள். மேலும் சிறப்பு அம்சமாக தெலுங்கு நடிகர்களை கௌரவ வேடத்தில் நடிக்க வைக்கப் போகிறாராம் இயக்குனர்.

கௌரவ வேடத்தில் நடிக்க தெலுங்கு திரைஉலகின் முன்னனி நடிகர்களான நாகார்ஜுனா, ரவி தேஜா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். அஜீத்தின் மங்காத்தா படம் தெலுங்கிலும் வெளியாகி பிரபலமானது. இந்தப் படத்தையும் தெலுங்கில் வெளியிட ப்ளான் இருக்கிறதாம். அதனால் தான் தெலுங்கு நடிகரை நடிக்க வைத்து ஒரே கல்லில் இரண்டு மாங்கா அடிக்க ஆசைப்படுகிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.

அஜீத்தும் அதையே தான் விரும்புகிறாராம்.அரவிந்த் சாமி, பிருத்திவிராஜ் ஆகியோரிடமும் கால்ஷீட் கேட்டதாகத் தெரிகிறது. அரவிந்த்சாமி மணிரத்னம் இயக்கும் கடல் படத்தில் நடித்துக்
கொண்டிருப்பதால், அந்த படம் முடிந்த பிறகு விஷ்ணுவர்தன் படத்திற்கு கால்ஷீட் தருவதாக கூறியுள்ளாராம்.

இந்த படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா தான் இசை. பில்லா, ஏகன், மங்காத்தா, பில்லா-2 என தொடர்ந்து அஜீத் நடித்த படங்களுக்கும் யுவன் ஷங்கர் ராஜா தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.

அசின் வருகை! மீண்டும் சர்ச்சை!!!

Monday, ,May, 28, ,2012
இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்திற்கு யார் ஹீரோ? என்ற கேள்விக்கு இருந்த பரபரப்பு விலகி, ஷங்கர் படத்தில் ஹீரோயினாக நடிக்க கால்ஷீட் கேட்கப்பட்டுள்ள நடிகை நடிக்கக் கூடாது என்ற எதிர்ப்பு எழுந்துவிட்டது.

ஷங்கர் இயக்கத்தில் விகரம் ஹீரோவாக நடிக்கவிருக்கும் படத்திற்கு ’தேர்தல்’ என பெயர் சூட்டியுள்ளார்களாம். இதற்கு முன் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ படம் மெகா ஹிட். ஹீரோ காம்பினேஷன் திருப்தி அளித்ததும் ஹீரோயின் தேர்வுக்காக தேடிய ஷங்கருக்கு பாலிவுட்டில் நல்ல மார்கெட்டுடன் இருக்கும் அசின் தான் தெரிந்திருக்கிறார் போல.

விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க அசினிடம் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறதாம். ஆனால் தமிழ் படத்தில் அசினை நடிக்க வைக்கக் கூடாது என ஷங்கரிடம் இந்து மக்கள் கட்சி சார்பில் எச்சரிக்கையும் வேண்டுகோளும் விடப்பட்டுள்ளதாம்.

அசின் விஜய்யுடன் ’காவலன்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது ஒரு இந்தி படத்தின் படப்பிடிப்பிற்காக இலங்கை சென்று அந்நாட்டு அதிபர்கள் கொடுத்த விருந்தில் கலந்துகொண்டார். அசினின் இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி ‘காவலன்’ படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என கோரிக்கைகள் எழுந்தன.

ஒருவழியாக எல்லா பிரச்சினைகளையும் சமாளித்து ‘காவலன்’ படம் ரிலீஸானது. இப்போது அசின் ஷங்கர் படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி பரவியதும், ஷங்கருக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ஷங்கரின் இந்த படத்திற்கு தேர்தல் எனப் பெயரிடப்பட்டுள்ளதால் படத்தில் அரசியல் தாக்கம் இருக்கும் என தெரிகிறது.

ஷங்கரின் முதல்வன் படம் அரசியலில் நடக்கும் தவறுகளை அடிப்படையாகக் கொண்டு உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

என் இடம் அப்படியேதான் இருக்கு - தமன்னா!!!

Monday, ,May, 28, 2012
பிரபல நடிகர் ஒருவரை காதலித்தார், அது அந்தக் குடும்பத்துக்குப் பிடிக்கவில்லை, அந்தக் குடும்பத்தின் செல்வாக்கு காரணமாகதான் தமன்னாவுக்கு தமிழில் படங்களில்லை... இந்த காஸிப் உங்களுக்கு‌த் தெ‌ரிந்திருக்கும். இதனை அடியோடு மறுக்கிறார் தமன்னா. நான் இதுவரை காதலிக்கவேயில்லை என்று எழுபது எம்எம்மில் புன்னகைப்பவர் தனது படங்கள் குறித்து பகி‌ர்ந்து கொண்டவை...

தமிழ் மேல அப்படி என்னதான் கோபம்? ஆளையே பார்க்க முடியவில்லையே...?

என்னைப் பார்க்கிற எல்லோரும் இதையேதான் கேட்கிறாங்க. எனக்கு அங்கீகாரமும், புகழும் முதலில் கிடைத்தது தமிழில்தான். எப்படி மறக்க முடியும்? தெலுங்குப் படங்களில் பிஸியாகிட்டதால் தமிழில் கவனம் செலுத்த முடியலைங்கிறது உண்மைதான். அதுக்காக மறந்துட்டேன்னு சொல்றதெல்லாம் அதிகம்.

ச‌ரி, எப்போதான் தமிழுக்கு வரப் போறீங்க?

ரொம்ப சீக்கிரம். ஏன் என்றால் காதல் என்பேன் படத்தில் நடிச்சிட்டிருக்கேன். விரைவில் இந்தப் படம் திரைக்கு வருகிறது. அப்புறம் நான்கு டைரக்டர்ஸ் கதை சொல்லியிருக்காங்க. எனக்குப் பிடிச்ச கதையில் நடிப்பேன். கால்ஷீட்டைப் பொறுத்து அது ஒன்றா இரண்டா என்பது தெ‌ரியும்.


FILEரட்சா படத்தில் நடிச்சது பற்றி சொல்லுங்க?

ராம் சரண் தேஜா ஹீரோ. படம் ஆந்திராவில் சூப்பர்ஹிட். இந்த வருஷத்தை சநதோஷமாக்கிய படம். எனக்கு ரொம்பப் பிடிச்ச படமும்கூட. தமிழில் ரகளைங்கிற பெய‌ரில் வெளியிட்டாங்க. எனக்கு நல்ல பெயரை தந்த படம்.

தமிழ் என்று வரும் போது கதை, கேரக்டர் என்று பிகு செய்யும் நடிகைகள் தெலுங்கில் மட்டும் கமர்ஷியல் படங்களில் பேசாமல் ஆடிவிட்டு செல்வது ஏன்? ரட்சாவும் ஒ கமர்ஷியல் படம்தானே.

ஆந்திரா ரசிகர்கள் இப்போதும் கமர்ஷியல் படங்களை ரசிக்கிறாங்க. ஆனா தமிழில் அப்படியில்லை. அதனால்தான் மாஸ் ஹீரோக்களே அவ்வப்போது கமர்ஷியல் இல்லாத படங்களை ட்ரை பண்றாங்க. அதுதான் காரணம்னு நினைக்கிறேன்.

எல்லாம் ச‌ரி, இப்போதும் தெலுங்குக்குதானே முன்னு‌ரிமை கொடுக்கிறீங்க?

தெலுங்கில் நான் இப்போது நான்கு படங்களில் நடிச்சிட்டிருக்கேன். இதில் லாரன்ஸ் இயக்குகிற ‌ரிபெல் படமும் ஒன்று. ஆனால் அடுத்த வருஷத்திலிருந்து தமிழிலும் அதிக படங்களில் நடிப்பேன்னு நினைக்கிறேன்.

தமிழில் தமன்னாவின் இடத்தை ஹன்சிகா பிடிச்சிட்டதா ஒரு பேச்சிருக்கே?

ஹன்சிகா என்னைவிட சீனியர். சின்ன வயசிலேயே நடிக்க வந்திட்டாங்க. எனக்கும் அவருக்கும் சண்டைன்னுகூட எழுதினாங்க. ஆனா நானும் அவரும் ஃப்ரெண்ட்ஸ். ஒரு கல் ஒரு கண்ணாடி போஸ்டர் பார்த்திட்டு நல்லாயிருக்குன்னு போன் செய்தேன். சினிமாவில் யாரும் யாருடைய இடத்தையும் பிடிக்க முடியாது. தமிழில் என்னுடைய இடம் அப்படியேதான் இருக்கு. இயக்குனர்கள் தமிழில் என்னை நடிக்க வைக்க காட்டுற ஆர்வத்திலிருந்தே இது தெ‌ரியுது.

மீண்டும் கலக்க வருகிறார் ,வடிவேலு,போலி டாக்டர் சிங்காரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்!!!

Monday, ,May, 28, 2012
மீண்டும் கலக்க வருகிறார் ,வடிவேலு,போலி டாக்டர் சிங்காரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்!

வாசுபாஸ்கர் இயக்கியுள்ள "மறுபடியும் ஒரு காதல்' படத்தின் மூலம் மீண்டும் கலக்க வருகிறார் வடிவேலு. நீண்ட இடைவேளிக்குப் பிறகு இந்த படத்தில் போலி டாக்டர் சிங்காரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வடிவேலுவின் முந்தைய படமான வின்னர் படத்தின் கைப்புள்ள கேரக்டரையே மிஞ்சும் அளவிற்கு இந்த படத்தில் காமெடியில் வடிவேலு கலக்கி இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தெலுங்கு ‌ரீமேக்கில் அ‌‌‌ஜீத்? அ‌‌‌ஜீத்துக்கே இந்த நியூஸ் தெ‌ரியுமா என்பது சந்தேகம்?!!!

Monday, ,May, 28, 2012
அ‌‌‌ஜீத்துக்கே இந்த நியூஸ் தெ‌ரியுமா என்பது சந்தேகம். ஆனாலும் மாஸ் ஹீரோக்கள் பற்றிய காஸிப்பையும் கரெக்டாக வாசகர்களிடம் சேர்க்க வேண்டியது நமது கடமை.

பில்லா 2-வை முடித்துள்ள அ‌‌‌ஜீத் அடுத்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெய‌ரிடப்படவில்லை. இதையடுத்து சிறுத்தையை இயக்கிய சிவாவின் இயக்கத்தில் நடிக்கிறார். நாகி ரெட்டியின் விஜயா புரொடக்சன் இந்தப் படத்தை தயா‌ரிக்கிறது.

சிவா இயக்கத்தில் அ‌‌‌ஜீத் நடிக்கயிருப்பது ரவி தேஜா நடித்த தெலுங்குப் படமான Daruvu என்றொரு செய்தி கிளம்பியிருக்கிறது. இத்தனைக்கும் இந்தப் படம் நேற்றுதான் திரைக்கு வந்தது. சிவா இயக்கிய சிறுத்தை ரவி தேஜா நடித்த விக்ரமார்க்குடு படத்தின் ‌ரீமேக். அதனால் அவ‌ரின் அடுத்தப் படமும் ரவி தேஜா நடித்தப் படத்தின் ‌ரீமேக்காக இருக்கும் என்ற யூகத்தில் கிளப்பிவிடப்பட்ட செய்தியாகவே இது என தெ‌ரிகிறது.

கமல்ஹாசன் - கான்ட்ரவர்ஸிக்கு முற்றுப்புள்ளி!!!

Monday, ,May, 28, 2012
பொதுவாக ஒரு படம் நன்றாக இருந்தால் ர‌‌ஜினிக்கும், கமலுக்கும் ஸ்பெஷலாக திரையிட்டு காண்பிக்கப்படும். அவர்கள் சொல்லும் பாராட்டுகள் மறுநாள் பத்தி‌ரிகை செய்தியாகும். வசூலில் எந்திரனுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை மட்டும் இருவரும் பார்க்கவில்லை. உதயநிதி நடித்தப் படத்தை பாராட்டி ஆள்கிறவர்களின் ஆத்திரத்துக்கு ஆளாக வேண்டுமா என்று இதற்கு அரசியல் சாயம் பூசப்பட்டது.

இந்த கான்ட்ரவர்ஸிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் கமல்ஹாசன்.

ஓகே ஓகே படம் அமெ‌ரிக்காவிலிருந்து திரும்பிய கமல்ஹாசனுக்கு ஸ்பெஷலாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்த கமல் இயக்குனர் உள்பட அனைவரையும் பாராட்யிருக்கிறார். இந்த மனம் திறந்த பாராட்டில் மனம் நெகிழ்ந்து போயிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ்.

ர‌‌ஜினியும் படம் பார்த்தால் கான்ட்ரவர்ஸி கிளப்பியவர்கள் முகத்தை எங்கே வைத்துக் கொள்வார்களோ.

'பெருசா' எதிர்பார்க்கும் பிரணீதா!!!

Monday, ,May, 28, ,2012
நடித்தால் பெரிய நடிகர்களுடன் மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்கிறாராம் பிரணீதா.

முதல் படம் வெளியாகி ஓடி முடிப்பதற்குள்ளாகவே ஏகப்பட்ட பந்தாக்களைப் போட்டு சீன் காட்டும் நாயகிகளின் பட்டியல் இன்னும் கோடம்பாக்கத்தில் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.

ஆரம்பத்தில் சின்ன ஹீரோவுடன் ஜோடி சேருவார்கள். அந்தப் படம் எக்குத்தப்பாக ஓடி விட்டால், அடுத்து பெரிய ஹீரோக்களுடன் மட்டும்தான் ஜோடி போடுவேன், பெரிய பட்ஜெட் படமாக இருக்க வேண்டும். நல்ல கம்பெனியாக இருக்க வேண்டும் என்று பில்டப் செய்து பிலாக்காணம் பாடுவார்கள்.

இந்த நிலையில் சகுணி படம் மூ்லம் சினிமாவுக்கு வந்துள்ள பிரணீதாவும் அதேபோல ஏகப்பட்ட பில்டப், பிட்டப்புகளுடன் சினிமாக்காரர்களை மிரள வைக்கிறாராம். முதல் படத்தில் கார்த்தியுடன் ஜோடி போட்டு விட்ட இவர் இப்போது வெயிட்டாக பேச ஆரம்பித்துள்ளாராம்.

அதாவது நடித்தால் பெரிய ஹீரோக்களுடன் மட்டும்தான் நடிப்பாராம். சின்னச் சின்ன ஹீரோக்களையெல்லாம் சீண்டக்கூட மாட்டாராம். கழுகு படத்தில் ஹீரோவாக நடித்த இயக்குநர் விஷ்ணுவர்த்தனின் தம்பி கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க இவரைக் கேட்டபோது மறுத்து விட்டாராம்.அப்போதுதான் இப்படிப் பதிலளித்தாராம்.

முதல் படமே இன்னும் வந்து போணியாகவில்லை, அதற்குள்ளாகவே இப்படி ஒரு சீனா என்று புலம்புகிறார்களாம் 'சின்ன நாயகர்களை கையில் வைத்துக் கொண்டு பெரிய நாயகிகளுக்காக காத்திருக்கும் இயக்குநர்கள் சங்கத்தைச்' சேர்ந்தவர்கள்...!

Sunday, May 27, 2012

'கோ' படத்தில் நடித்த நடிகை காஜலை வெப்சைட்டில் விபசார அழகியாக சித்தரித்த கும்பல்!!!

Sunday, ,May, ,27, 2012
சென்னை::'கோ' படத்தில் பெண் நக்சலைட் தீவிரவாதியாக நடித்திருப்பவர் நடிகை காஜல். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற பெயரும் உண்டு. நகைச்சுவை நடிகர் விவேக்குடன் காமெடி காட்சிகளிலும் நடித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து சினிமா நடிகையானவர். இந்நிலையில் இவரை விபசார அழகியாக சித்தரித்து ஒரு கும்பல் வெப்சைட்டில் காஜலின் போட்டோவை வெளியிட்டுள்ளது.

'அதில், கால் கேர்ள்' என குறிப்பிடப்பட்டு காஜலின் செல்போன் நம்பர் இடம் பெற்றிருந்தது. இதனை பார்த்து பலர் போன் செய்து செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளனர். பலர் காஜலின் செல்போனில் ஆபாசமாகவும் பேசி உள்ளனர்.

இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து அவர் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது செல்போனில் ஒருவர் பேசினார். உங்கள் போட்டோவை வெப்சைட்டில் பார்த்தேன் என்று கூறி அசிங்கமாக பேசினார். எனது செல்போனுக்கு பலர் ஆபாச எஸ்.எம்.எஸ்.களையும் அனுப்பினர். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.

செல்போனில் தொல்லை அதிகரித்ததால் எனது செல்போன் எண்ணை மாற்றும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளேன். இதன் காரணமாக நானும் எனது குடும்பத்தினரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எனவே எனது போட்டோவை வெப்சைட்டில் வெளியிட்டு என்னை அசிங்கப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் காஜல் கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

வில்லங்கமான வேடத்தில் அக்ஷயா!!!

Sunday, ,May, ,27, 2012
சென்னை::பட்டிக்காட்டு மாப்பிள்ளை படத்தில் சந்தோஷ் ஜோடியாக நடிக்கிறார் அக்ஷயா. இப்படம் பற்றி இயக்குனர் ஆர்.எம்.ராஜேந்திரன் கூறியதாவது:
சந்தோஷ், அக்ஷயா காதல் ஜோடி. மனைவியை இழந்து குழந்தையுடன் தவிக்கும் மற்றொருவரிடம் அன்பு காட்டுகிறார் அக்ஷயா. இறந்த மனைவி சாயலில் இருந்ததால் அக்ஷயா மீது அவரும் அன்பு காட்டுகிறார். இதை தவறாக புரிந்துகொள்ளும் சந்தோஷ், அக்ஷயாவுடன் பழகியவரை வெட்டிக் கொல்கிறார். அனாதையான குழந்தைக்காக காதலை தியாகம் செய்கிறார் அக்ஷயா. ‘கலாபக் காதலன் படத்தில் அக்கா கணவரை மணக்க துடிக்கும் நெகடிவ் வேடத்தில் நடித்த அக்ஷயா, மறுபடியும் எதிர்மறையாகவேடத்தில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார் என்கிறார்கள்? நடிப்புக்கு வாய்ப்பு அதிகம் இருப்பதால் ஒப்புக்கொண்டார். பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் நடந்துள்ளது. தயாரிப்பு ஜி.நாகராஜ். இசை சூசன்னா. ஒளிப்பதிவு கே.ஜி.மாதவன்.

இந்தி பாஷா பாட்டு ரிலீஸ்... ரஜினி வாழ்த்து!

Sunday, ,May, ,27, 2012
சென்னை::பாட்ஷா படத்தின் இந்திப் பதிப்பான பாஷாவின் ஆடியோ ரிலீஸ் ஸ்டார் கூட்டத்திற்கு மத்தியில் கோலாகலமாக நடந்தேறியது. இந்த விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை. இருப்பினும் விழா சிறப்பாக நடந்தேற வாழ்த்து தெரிவித்திருந்தார்.

தமிழில் வெளியான பாட்ஷா சூப்பர் ஹிட் திரைப்படம் தற்போது பாஷா என்ற பெயரில் இந்தியில் ரிலீஸாகிறது. இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முன்பு அஜய் தேவ்கன் விருப்பம் தெரிவித்திருந்தார். இருப்பினும் இது தற்போது நேரடியாக இந்தியில் டப் ஆகியுள்ளது. இப்படத்தை டிஜிட்டல் முறையில் சீர்திருத்தி பத்ரகாளி ரமேஷ், நரேந்திர சிங் ஆகியோர் இந்தியில் வெளியிடுகின்றனர்.

இப்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில்நடந்தது. இசைத் தட்டுக்களை இசையமைப்பாளர் மான்டி சர்மா வெளியிட அதை நடிகர் பாயல் ரோஹத்தி பெற்றுக் கொண்டார். இதில் ஏராளமான இந்தி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இப்படத்தை டிஜிட்டல் முறையில் சீரமைத்து வெளியிடுகின்றனர். டைட்டில் கார்டு முதல் அனைத்தையும் சரி செய்து நவீன முறையில் மாற்றியுள்ளனர். 5.1 டிஜிட்டல் ஆடியோ முறையில் ஒலி, ஒளியமைப்பு சரி செய்யப்பட்டுள்ளது. தமிழில் இசையமைத்த தேவாவே இந்திப் படத்தின் இசையையும் கவனித்துள்ளார்.

விழாவில் ரஜினி வரலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் ரஜினி வரவில்லை. மாறாக அவரது வாழ்த்துச் செய்தி வந்திருந்தது. மே மாத இறுதியில் படத்தை திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனராம்.

திடீர் குண்டானது பற்றி ஜஸ்வர்யா ராய் விளக்கம்!!!

Sunday, ,May, ,27, 2012
மும்பை::உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்த பிறகு அவர் உடல் எடை கூடியது. சமீபத்தில் கேன்ஸ் பட விழாவில் நவநாகரீக உடை அணிந்து பருமனான உடலுடன் போட்டோவுக்கு போஸ் தந்தார். அந்த படத்தை பார்த்து இது ஐஸ்வர்யா ராயா என்று பலர் முணுமுணுத்தனர்.
இது குறித்து ஐஸ்வர்யாவிடம் கேட்டபோது, ‘என்றைக்குமே எனது இயற்கை தோற்றத்தை மறைத்தது கிடையாது. உணவு வகையிலும் எந்த கட்டுப்பாடும் கடைபிடிக்கவில்லை. குழந்தை பிறந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன். எனக்கு பிடித்த உணவை எப்போதும்போல் விரும்பி சாப்பிடுகிறேன். இப்போதைய தோற்றமும் இயற்கையானதுதான். அதை மறைக்க விரும்பவில்லை என்றார்.
ஐஸ்வர்யாவின் தோற்றம் பற்றி பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா கூறும்போது, ‘ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் பட விழாவுக்கு வந்தபோது தனது புன்னகையாலும், தன்னம்பிக்கையான பேச்சாலும் பலரது இதயத்தை கொள்ளை கொண்டார். சற்று பூசினாற்போன்ற அவரது தோற்றம்கூட வசிகரமாகவே இருக்கிறது என்றார். உடற்பயிற்சி ஆலோசகர் சாயா மெமாயா கூறும்போது, ‘உடல் தோற்றத்தை தாண்டி அவர் எல்லோர் மனதிலும் நிறைந்திருக்கிறார். போட்டோவுக்கு அவரது உருவம் ஒத்துப்போகாமல் இருக்கலாம். ஆனால் தன்னம்பிக்கையான பெண் என்பதற்கு என்றுமே அவர்தான் வழிகாட்டி. மற்றவர்களின் கருத்தை நடிகைகள் ஏற்க வேண்டிய அவசியமில்லை. தங்களுக்கு பிடித்ததைத்தான் அவர்கள் கடைபிடிக்க வேண்டும். அதைத்தான் ஐஸ்வர்யா செய்து வருகிறார் என்றார்.

ஆக்ஷனுக்கு குட்பை சொன்னது ஏன்? 58 வயசாச்சு; எலும்பு முறிஞ்சா தாங்காது: ஜாக்கிசான் பேட்டி!!!

Sunday, ,May, ,27, 2012
கேன்ஸ்::ஐம்பத்து எட்டு வயதாகிவிட்டது. இனி ஆக்ஷன் காட்சியில் நடித்து எலும்புகள் முறிந்தால் உடம்பு தாங்காது என்கிறார் ஜாக்கிசான். அதனால் ஆக்ஷன் படத்துக்கு குட்பை சொல்ல அவர் முடிவெடுத்துள்ளார். சமீபத்தில் ஜாக்கிசான் அளித்த ஒரு பேட்டியில், ‘இனிமேல் சண்டை காட்சிகளில் நடிக்க மாட்டேன். ‘சைனீஸ் ஸோடியக்தான் நான் நடிக்கும் கடைசி ஆக்ஷன் படம் என்று கூறி இருந்தார். இந்நிலையில் பிரான்சில் இரண்டு தினங்களுக்கு முன் நடந்த கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் அவர் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் ஆக்ஷன் படத்துக்கு முழுக்கு போட்டது பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்தபோது, ‘சைனீஸ் ஸோடியக் தான் நான் நடிக்கும் கடைசி ஆக்ஷன் படம். எனக்கு 58 வயதாகிவிட்டது. இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் ஸ்டன்ட் காட்சிகளில் நடித்துக்கொண்டிருக்க முடியும். எலும்புகள் முறிந்தால் உடல் தாங்காது என்றார். ஜாக்கிசானின் இந்த முடிவு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜாக்கிசானின் அதிரடி ஸ்டன்ட் காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது ஒருபுறம் இருந்தாலும் இதுவரை நடித்த ஆபத்தான பல ஸ்டன்ட் காட்சிகள் அவரது உயிரையே குடிக்கும் அளவுக்கு விபத்துகளை ஏற்படுத்தியிருக்கிறது. படங்களில் நடிக்கும்போது சந்தித்த விபத்துகளில் கிட்டதட்ட அவரது உடலில் உள்ள எல்லா எலும்புகளிலும் முறிவு ஏற்பட்டுள்ளது. மாத கணக்கில் சிகிச்சைக்கு பிறகே அவர் குணம் அடைந்திருக்கிறார். 1995ம் ஆண்டு அவர் நடித்த ‘ஆர்மர் ஆப் காட் என்ற படம் ரிலீஸ் ஆனபோது அவரது உடலில் ஏற்பட்ட எலும்பு முறிவு பற்றி ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் ஜாக்கியின் உடலில் எங்கெல்லாம் எலும்பு முறிவு ஏற்பட்டது என்பதுபற்றி படம் வரைந்து பாகங்கள் குறிக்கப்பட்டிருந¢தது. ‘ஆர்மர் ஆப் காட் படத்தில் உயரமான இடத்திலிருந்து குதிக்கும் காட்சியில் மரத்தை பிடிக்க வேண்டும். காட்சிப்படி, அவர் குதித்தபோது மரத்தை பிடிக்க தவறவிட்டார். அவரது தலை நேராக தரையில் மோதியது. இதில் அவரது மண்டை உடைந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார். ‘ஹூ ஆம் ஐ, ‘சூப்பர் காப், ‘வின்னர்ஸ் அண்ட் சின்னர், ‘போலீஸ் ஸ்டோரி, ‘புராஜெக்ட் ஏ என அவர் நடித்த ஆக்ஷன் படங்கள் புகழ்பெற்றவை.

Saturday, May 26, 2012

ரகுமான் குழந்தைகளுக்கு கட்டுப்பாடு!!!

Saturday, ,May, ,26, 2012
சென்னை::இங்கிலாந்து, அமெரிக்கா என மாறி மாறி பறந்து கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். தற்போது கோடை விடுமுறைக்காக மனைவி, 3 குழந்தைகளுடன் அமெரிக்கா சென்றிருக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது: என் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை விட்டிருப்பதால் அவர்களை லாஸ் ஏஞ்சல்ஸ் அழைத்து சென்றேன். அமெரிக்கா செல்லும் குழந்தைகள் எல்லோருமே டிஸ்னி வேர்ல்டுக்குத்தான் போக வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள். ஆனால் எனது குழந்தைகள் அதற்கு பதிலாக தங்களை ஸ்டுயோக்களுக்கு அழைத்துச் செல்ல கேட்டனர். அவர்களை ஹாலிவுட் ஸ்டுடியோவுக்கு அழைத்துச் சென்றேன். அதை ஆர்வமாக சுற்றிப் பார்த்தனர். என் குழந்தைகளைப் பொறுத்தவரை என்னிடம் எப்போது விளையாட வேண்டும், எப்போது தொந்தரவு செய்யாமல் ஒதுங்கி இருக்க வேண்டும் என்பதை கற்று வைத்திருக்கிறார்கள். வேலை நேரத்தில் என் எதிரில் கூட வரமாட்டார்கள். அந்த கட்டுப்பாட்டை அவர்களாக பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். என் குடும்பத்துடன் நான் இருக்கும்போது ரசிகர்களும் எனது தனிமையில் தலையிடுவதில்லை. அந்த நேரங்களில் ஆட்டோகிராப், போட்டோ எடுத்துக்கொள்வது என்று கேட்டு தொந்தரவு செய்வதில்லை.

லாஸ் ஏஞ்சல்ஸில் என்னை பலருக்கு அடையாளம் தெரியாது. அதனால் எல்லா இடத்திலும் சுற்றுவேன். அப்படியும் மேற்கு ஆப்ரிக்காவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் என்னை அடையாளம் கண்டுவிட்டனர். அவர்கள் சுமார் 12 பேர் இருந்தனர். அவர்களுடனான சந்திப்பும், கலந்துரையாடலும் மகிழ்ச்சி அளித்தது. இவ்வாறு ரகுமான் கூறினார்.

தாண்டவம் - தேம்ஸ் நதியில் டூயட்!!!

Saturday, ,May, ,26, 2012
சென்னை::லண்டனில் தாண்டவம் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் இயக்குனர் விஜய். லண்டனில் மழை பெய்து படப்பிடிப்புக்கு சவால்விட்ட நிலையிலும் அசராமல் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் விக்ரம், எமி ஜாக்ஸன் இடம்பெறும் டூயட் பாடல் ஒன்று படமாக்கப்பட்டது. பாடலுக்கு இசை ‌ஜி.வி.பிரகாஷ். இதுவொரு ஆங்கிலப் பாடல். தேம்ஸ் நதியில் இந்தப் பாடலை விஜய் படமாக்கினார். மதராசப்பட்டினத்தில் கூவத்தில் பாடலை படமாக்கினார். இப்போது தேம்ஸில்.

இந்தப் படத்தில் லட்சுமிராயும் நடிக்கிறார். சந்தானம் இடம்பெறும் காட்சிகளும் லண்டனில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தியாகராஜ பாகவதர், கவுண்டமணி, நான்: சந்தானத்தின் கனவு!!!

Saturday, ,May, ,26, 2012
சென்னை::ஆசையில்லா மனிதன் கிடையாது. ஆனால் நடிகர் சந்தானத்திற்கு ஒரு வித்தியாசமான ஆசை உள்ளது.

சந்தானம் தான் இன்றைய தேதியில் படுபிசியாக இருக்கும் காமெடி நடிகர். ஓ.கே. ஓ.கே. படத்திற்கு பிறகு 10க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த ஆண்டு ரிலீஸான படங்களில் கிட்டதட்ட முக்கால் வாசி படங்களில் சந்தானம் தான் காமெடியன். அதுவும் இயக்குனர் ராஜேஷின் ஆஸ்தான காமெடியன் ஆகிவிட்டார். இவரை படத்தில் எடுத்தாலே அது ஹிட் என்று ராஜேஷ் நினைக்கிறார்.

இத்தனை படங்களில் நடித்துள்ள சந்தானத்திற்கு ஒரு கனவு கதாபாத்திரம் உள்ளதாம். அது குறித்து அவர் கூறுகையில்,

ஒரு படத்திலாவது நான் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது கனவு, ஆசை. அதுவும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு தலைமுறையைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும். 30களைச் சேர்ந்த தியாகராஜ பாகவதர் மாதிரி ஒரு ரோல், 80களில் கலக்கிய கவுண்டமணி மாதிரி ஒரு ரோல் மற்றும் தற்போதைய தலைமுறை பிரதிநிதியாக நான் நடிக்க வேண்டும் என்றார்.

உங்கள் ஆசை பற்றி அறிந்து கொள்ளும் ஏதாவது ஒரு இயக்குனர் உங்களின் கனவு கதாபாத்திரத்தை வழங்குவார் என்று நம்புங்கள்.

யாரு‌க்கு ப‌க்‌தி அ‌திக‌ம் - கம‌ல்ஹாச‌ன் சொ‌ல்‌கிறா‌ர்!!!!!!

Saturday, ,May, ,26, 2012
சென்னை::சாமி பக்தி குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓவியர் ஸ்ரீதர், வின்சென்ட் அடைக்கலராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் ஒரு கலைக்கூடத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் பல்வேறு வகையான ஓவியங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியக்கூடத்தை நடிகர் கமல்ஹாசன் திறந்து வைத்தார்.

அதன் பின்னர் பேசிய கமல்ஹாசன், ஸ்ரீதர் என் மீது அன்பு கொண்டவர். என்னை ஓவியங்களாக வரைந்து அவைகளை எனக்கு அன்பளிப்பாக கொடுத்து இருக்கிறார். அந்த ஓவியங்களை எல்லாம் என் அலுவலகத்தின் முன்பு வைத்து இருக்கிறேன். நம் கலைகள் இன்னும் நவீனத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. சினிமா மட்டுமல்லாமல், ஓவியங்களும் இப்போது டிஜிட்டல் மயமாக மாறிவிட்டது. காலத்துக்கு ஏற்ப நாம் மாற வேண்டும். கலைஞனை நம்பி செலவு செய்தால்தான் கலை வளர முடியும். கோவிலுக்குள் இருப்பவர்களை விட, வெளியில் இருப்பவர்களுக்குத்தான் பக்தி அதிகம். அதேபோல் கலைஞனை விட, ரசிகனுக்குத்தான் ரசனை அதிகம். நானே வேறு படங்களை பார்க்கும்போது, நல்ல கலைஞனாக மாறியிருக்கிறேன், என்றார்.