Monday, February 27, 2012

கோலிவுட்டுக்கு அழைத்துவந்தவருக்கே நோ சொன்ன அனுஷ்கா!!!

Monday, February 27, 2012
நடிகை அனுஷ்கா தன்னை கோலிவுட்டில் அறிமுகப்படுத்திய இயக்குனர் சுந்தர் சி. படத்தில் நடிக்க மறுத்துள்ளாராம்.

நடிகை அனுஷ்காவை 2 படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகப்படுத்தியவர் சுந்தர்.சி. அதன் பிறகு அனுஷ்காவுக்கு தமிழில் படங்கள் இல்லாததால் டோலிவுட்டுக்கு போனார். அங்கு அருந்ததி படம் அவருக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. அதையடுத்து அவர் தெலுங்கின் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார். அருந்ததியின் தாக்கத்தால் மீண்டும் கோலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தது.

அதையடுத்து இங்கும் பெரிய ஹீரோக்களுடன் ஒரு ரவுண்ட் வந்து கொண்டிருக்கிறார். முன்னணி ஹீரோக்களும், இயக்குனர்களும் அவருக்காக காத்திருக்கின்றனர். கோடி, கோடியாய் கொட்டிக் கொடுத்து அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்கின்றனர். இந்நிலையில் அவரை தமிழ் திரையுலகிற்கு அழைத்து வந்த இயக்குனர் சுந்தர். சி. தான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்குமாறு அனுஷ்காவை கேட்டுள்ளார்.

அதற்கு அவர் இந்த ஆண்டு முழுவதும் கால்ஷீட் புல்லாக இருக்கிறது அதனால் உங்கள் படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். இந்த பதிலை சுந்தர்.சி. எதிர்பார்த்திருக்க மாட்டார் தான்.

ஏய், 'பிராம்ப்டிங்' பண்ணாதே: நயன்!!!

Monday, February 27, 2012
பிரபு தேவாவுடன் திருமணம் நடப்பதாக இருந்ததால் மதம் மாறி, சினிமாவை விட்டு விலகியிருந்த நயன்தாரா அடுத்த ரவுண்டுக்கு வந்துவிட்டார். இதனால் குஷியாகியுள்ள இயக்குனர்களும், நடிகர்களும் நயனிடம் கால்ஷீட் கேட்கத் துவங்கியுள்ளனர்.

நயன்தாராவுக்கு யாராவது பிராம்ப்ட் செய்தால் சுத்தமாகப் பிடிக்காது. அதாவது வசனத்தை அப்பப்போ எடுத்துக் கொடுத்து உதவுவது பிடிக்காது. எவ்வளவு பெரிய வசனமாக இருந்தாலும் மனப்பாடம் செய்துவிட்டு தான் படப்பிடிப்புக்கு வருவார். இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதன்படி பேசி நடிப்பார். கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த நயன் தமிழில் நன்றாகப் பேசுவார்.

பேசினால் மட்டும் போதாது என்று நினைத்த அவர் தற்போது தமிழில் எழுதப், படிக்கவும் கற்றுக் கொண்டுள்ளார். தன்னைப் பற்றி வரும் செய்திகளை இணையதளஙகளில் தேடிப்பிடித்துப் படிக்கிறார். இவர் இப்படி இருக்க ஸ்ரேயா தமிழில் நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆகியும் தமிழில் பேசச் சொன்னால, சாரி ஐ டோன்ட் நோ டாமில் என்கிறார்.

நயன் நம்ம செய்தியையும் படிப்பார் என்று நம்புகிறோம்.

விமர்சனம் » காதலில் சொதப்புவது எப்படி!!!

Monday, February 27, 2012
விமர்சனம் » காதலில் சொதப்புவது எப்படி!!!
இளம் காதலர்களின் ஈகோ மோதல்களை சின்ன சில நிமிட குறும்படமாக எடுத்து இண்டர் நெட்டில் உலவவிட்டு பெரும் புகழ்பெற்ற இயக்குநர் பாலாஜி மோகன், அதையே ஒரு அழகிய திரைப்படமாக்கியிருக்கிறார். அதுதான் காதலில் சொதப்புவது எப்படி? திரைப்படம் மொத்தமும்!

கதைப்படி கல்லூரி காதலர்கள் சித்தார்த்தும், அமலாபாலும் ஈகோவால் பிரிந்திருக்கின்றனர். இதே மாதிரி அமலாபாலின் அப்பா-அம்மாக்களான சுரேஷூம் (மாஜி ஹீரோவேதான்) அம்மா சுரேகா வாணியும் விவாகரத்திற்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கும் கல்யாண ஜோடிகள். ஈகோவால் பிரிந்திருக்கும் இந்த இரண்டு ஜோடிகளுமே தங்களது ஈகோவை மறந்து இணைந்ததா...? இல்லையா...? என்பது தான் காதலில் சொதப்புவது எப்படி கரு, களம், கதை எல்லாமும்!

பாசத்தையும் சரி, வெறுப்பையும் சரி... பொண்ணுங்க மாதிரி ஆண்களால் காட்டவே முடியாது.... என அடிக்கடி பஞ்ச் டயலாக் பேசியபடி துறுதுறு கல்லூரி மாணவனாகவே வாழ்ந்திருக்கிறார் சித்தார்த். ரசிகர்களுக்கு தன் காதல் புட்டுகிட்ட கதையை போரடிக்காமல் சொல்லுவதிலாகட்டும், அமலாவிடம் ஆரம்பத்தில் வழிந்து பின் எரிச்சலடைவதிலாகட்டும் எல்லாவற்றிலுமே ஸ்கோர் செய்திருக்கிறார். அமலாபாலும் ஈகோ பிடித்த காதலியாக, தானும் சளைத்தவர் இல்லை என்று ப்ரேம் டூ ப்ரேம் நிரூபணம் செய்திருக்கிறார் வாவ்!

மாஜி ஹீரோ சுரேஷ், சுரேகாவாணி, சித்தார்த்தின் அப்பா ரவி ராகவேந்தர், அம்மா சிவரஞ்சினி எல்லோருமே பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்! நண்பர்களாக வரும் யுவன், யுவதிகளும் பிரமாதம்!

நிரவ்ஷாவின் அழகிய ஒளிப்பதிவும், தமனின் இதமான இசை எல்லாமும் சேர்ந்து பாலாஜி மோகனின் எழுத்து இயக்கத்தில் திரையில், காதலில் சொதப்பவில்லை, ஜெயித்திருக்கிறது! வாவ்!!