Tuesday, January 17, 2012

பிப்ரவரி 15ல் ரஜினியின் 'கோச்சடையான்' படப்பிடிப்பு– கே.எஸ்.ரவிக்குமார்!!!

Tuesday, January 17, 2012
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கோச்சடையான் திரைப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் தொடங்கும் என்று படத்தின் மேற்பார்வையாளர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

ராணா படம் பூஜை போடப்பட்டு உடல் நலம் குன்றியதால் அந்த படம் கைவிடப்பட்டது. பின்னர் சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சைக்கு பெற்று திரும்பிய பின்னர் கோச்சடையான் படத்தில் ரஜினி நடிக்க உள்ள அறிவிக்கப்பட்டது.

எந்திரன் படத்திற்குப் பின்னர் ரஜினி நடிக்க உள்ள படம் கோச்சடையான். என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இத் திரைப்படத்தை இயக்க உள்ளார்.

அதற்கான பட வேலைகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். கே எஸ் ரவிக்குமார் மேற்பார்வையிடுகிறார். திரைப்படத்திற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பிப்ரவரி 15ல் படப்பிடிப்ப..

இந்த திரைப்படத்திற்கான பூஜை வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் திரைப்படத்தின் சூட்டிங் பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக திரைப்படத்தின் மேற்பார்வையாளர் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார். சூட்டிங்கில் கலந்து கொள்ளும் வகையில் ரஜினிகாந்த் பூரண உடல் நலம் பெற்றுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

முழுக்க முழுக்க 3 டி அனிமேஷன் படமாக தயாராக உள்ள கோச்சடையானை அவதார் பட உத்தியைப் பயன்படுத்தி, அத்தனை பாத்திரங்களும் நிஜத்தில் வருவது போலவே எடுக்க உள்ளனர். இந்தியாவில் இதுபோல தயாராகும் முதல் திரைப்படம் கோச்சடையான்தான். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

அனுஷ்காவிற்கு சுராஜ் புகழாரம்!!!

Tuesday, January 17, 2012
தலைநகரம், மருமதலை, படிக்காதவன், மற்றும் மாப்பிளை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சுராஜ், அடுத்து கார்த்தி-அனுஷ்கா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். படுவேகமாக ஷூட்டிங் நடத்தி வரும் சுராஜ், அனுஷ்காவை புகழ்ந்து தள்ளியுள்ளார். இதற்கு அனுஷ்காவின் அதிகபடியான அழகு மட்டும் காரணம் அல்ல அவரது டெடிகேஷனும் தான். பெ‌ரிய ஹீரோயின் என்ற பந்தா இல்லாமல் ஷுட்டிங் தொடங்கும் முன்பே மேக்கப்புடன் முதல் ஆளாக ஆஜராகிவிடுவார். கார்த்தி, அனுஷ்கா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் பெரும்பாலும் முதலில் மேக்கப்புடன் தயாராவது அனுஷ்காதான். படப்பிடிப்புக்கு இவ்வளவு டெடிகேட்டாக எந்த நடிகையும் வருவதில்லை என்று சுரா‌ஜ் அனுஷ்காவை புகழ்கிறார்.

குறும்படத்தில் நடிக்கிறார் கார்த்தி!!!

Tuesday, January 17, 2012
சைபர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு காவல்துறை சார்பில் உருவாகும் குறும்படத்தில் நடிகர் கார்த்தி நடிக்க உள்ளார். பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான கார்த்தி, தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து ரசிகர்கள் மத்தியில் ஒரு இடத்தை பிடித்து கொண்டார். இப்போது முதுமுக இயக்குநர் ஷங்கர் தயாள் இயக்கத்தில் சகுனி படத்திலும், சுராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விழிப்புணர்வுக்காக ஒரு குறும்படத்தில் நடிக்கிறார் கார்த்தி. நாட்டில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஆன்-லைன் மோசடிகள் நாளுக்கு நாள் பெருகி கொண்டே போகிறது. இதனை தடுக்கும் பொருட்டு, மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ‌தமிழ்நாடு காவல் துறை சார்பாக ஒரு குறும்படம் இயக்கப்படுகிறது. 5 நமிடங்களில் உருவாக இருக்கும் இந்தகுறும்படத்தில் கார்த்தி தோன்றுகிறார். இதில் எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றி ஆன்-லைன் மோசடிகள் மற்றும் பிற மோசடிகள் நடக்கிறது என்பதை பற்றி கார்த்தி விளக்க உள்ளார்.

விரைவில் வெளியாக இருக்கும் இந்த குறும்படம், மக்கள் அதிகம் கூடும் இடங்களான சுற்றுலா தளங்கள், தியேட்டர்கள், பெரிய ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பல இடங்களில் பெரிய திரையில் காண்பிக்கப்பட இருக்கிறது. இதன்மூலம் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்பது போலீஸின் நம்பிக்கை.

அஜித்தின் பில்லா-2 போஸ்டர்கள் வெளியீடு!!!

Tuesday, January 17, 2012
அஜித் நடித்து வரும் பில்லா-2 படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டில் அஜித்திற்கு மாபெரும் ஹிட் படமாக அமைந்த படம் பில்லா. அதன் தொடர்ச்சியாக இப்போது பில்லா-2 உருவாகி வருகிறது. சக்ரி டோல்டி இயக்கி வரும் இப்படத்தில் அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இன்‌எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஓய்டு ஆங்கிள் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

தூத்துக்குடியில் சாதரண மனிதனாக டேவிட்டாக இருந்தவர் எப்படி பில்லாவாக மாறுகிறான் என்பதே பில்லா-2 படத்தின் கதை. படத்தின் சூட்டிங் ‌பெரும்பகுதி முடிவடைந்துள்ள நிலையில் பில்லா-2 படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. கோவப்பார்வையோடும், கையில் துப்பாக்கியோடும் வெளியாகியுள்ள இந்த ஸ்டில்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கூடவே ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கடந்தகாலம் உண்டு, அதேபோல் ஒவ்வொரு டானுக்கும் ஒரு வரலாறு உண்டு என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

பாலிவுட் போகிறார் லிங்குசாமி!!!

Tuesday, January 17, 2012
எல்லா தமிழ் இயக்குனர்களுக்கும் இந்தியில் ஒரு படம் இயக்கம் வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இந்த ஆசை லிங்குசாமியையும் விட்டு வைக்கவில்லை. சமீபத்தில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், ஆர்யா நடித்த வேட்டை படம் பொங்கலுக்கு வெளிவந்துள்ளது. படத்துக்கு சரியான வெற்றியும் கிடைத்துள்ளது. இதனால் இயக்குனர் லிங்குசாமி சந்தோஷத்தில் மூழ்கியுள்ளார். இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த லிங்குசாமி தனது திருப்தியை தெ‌ரிவித்துக் கொண்டார். வேட்டை இந்தியில் ‌ரீமேக் செய்யப்படுகிறதா என்ற கேள்விக்கு, சல்மான்கான் மாதவன் வேடத்திலும், ஆர்யா வேடத்தில் ரன்பீர் கபூரும் நடித்தால் நன்றாக இருக்கும் என்றார். இதனையடுத்து பாலிவுட்டுக்கு லிங்குசாமி போவரா... பாலிவுட்டிலும் வெற்றி பெறுவாரா என்பதை பொருதிருந்துதான் பார்க்க வேண்டும்.

மீண்டும் புயல் வேகத்தில் பிரசாந்த்!!!

Tuesday, January 17, 2012
மம்பட்டியான் படத்துக்காக உடல் எடையை கூட்டிய பிரசாந்த் அதனை குறைக்கும் முயற்சியில் இருக்கிறார். மம்பட்டியான் படத்துக்குப் பிறகு மூன்றுப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம். அதில் முதல் படம் நடனத்தை மையமாகக் கொண்டது என தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. இந்தப் படத்துக்காக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கிறார். அவரது டார்கெட் பதினோரு கிலோ என்கிறார்கள்.

படம்வெளியான இத்தனை நாளுக்கு பிறகு மயக்கம் என்ன பாடலுக்கு எதிர்ப்பு!!!

Tuesday, January 17, 2012
மயக்கம் என்ன படம் வெளியாகி மாதங்கள் கடந்த பின்னர், அந்தபடத்தில் உள்ள ஒரு பாட்டுக்கு இப்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், ரிச்சா கங்கோபாத்யாய நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான படம் மயக்கம் என்ன. இப்படத்தில் காதல் என் காதல் கண்ணீருல... என்று தொடங்கும் பாடலில் அடிடா அவள உதடா அவள வெட்றா அவள... என்று வரிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் பொண்ணுங்கள் எல்லாம் நம் வாழ்வின் சாபம் என்ற வரியும் உள்ளது. இவை பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளது ராமசுப்ரமணியம் என்பவர் புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள புகாரில், பெண்களை சக்தி என்று நாம் அழைக்கிறோம். பெண்களை கொண்டாடும் நம் கலாச்சாரத்துக்கு முற்றிலும் எதிரானது இந்த பாடல். இவை பெண்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது. மேலும் அவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் பாடல் இது என்று கூறியுள்ளார்.

இதனிடையே படம் வெளியாகி இத்தனை நாளுக்கு பிறகு, இப்போது இப்பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பி இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது என்று செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி கூறியிருக்கிறார்.

மலேசிய தமிழர்களுடன் பொங்கல் கொண்டாடிய நடிகை மோனிகா!

Tuesday, January 17, 2012
மலேசியாவில் படப்பிடிப்புக்கு சென்ற நடிகை மோனிகா அங்குள்ள தமிழர்களுடன் பொங்கல் விழாவை கொண்டாடினார். அவருடன் புழல் பட நாயகன் முரளியும் கலந்து கொண்டார்.

மலேசியாவில் நடைபெற்ற படப்படிப்பில் நடிகை மோனிகா கலந்து கொண்டார். அப்போது மலேசியாவில் உள்ள தமிழர்கள் ஏற்பாடு செய்த பொங்கல் விழாவில் மோனிகா கலந்து கொண்டார்.

பொங்கல் விழாவையொட்டி கோவில் முன்பு பொங்கல் பானை வைத்து அதில் தானியங்களை படையலிட்டு தயாராக வைக்கப்பட்டிருந்தது. நடிகை மோனிகா பானையில் அரிசியை கொட்டி தீ மூட்டினார்.

பொங்கல் பொங்கி வந்த போது விழாவில் கலந்து கொண்ட தமிழ் குடும்பத்தினர் பொங்கலோ பொங்கல் என்று குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர். அதன்பிறகு பொங்கி வந்த பொங்கலை கடவுளுக்கு படையலிட்டு வணங்கினர்.

சிறப்பு பூஜைக்கு பிறகு பொங்கல் அனைவருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

விழாவில் கலந்து கொண்ட மோனிகா பாட்டு பாடி, நடனம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தார். புழல் படத்தின் கதாநாயகன் முரளியும், பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்.

ஹோசன்னா பாடல்: ரகுமானுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்!!!

Tuesday, January 17, 2012
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கில் உள்ள ஹோசன்னா பாடலுக்கு கிறிஸ்தவ அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த பாடலில் இருந்து ஹோசன்னா என்ன வார்த்தையை நீக்காவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாக அது எச்சரிக்கை விடுத்துள்ளது.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியாகி ஹிட்டான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் ஹோசன்னா என்ற பாடல் மிகவும் பிரபலம். தற்போது இந்த படம் இந்தியில் ஏக் தீவானா தா என்ற பெயரில் தயாராகிறது. இந்தியிலும் ரஹ்மான் இசையில் தமிழில் ஹிட்டான ஹோசன்னா பாடல் உள்ளது. அந்த பாடல் வெளியிட்டதில் இருந்து வட இந்தியாவில் மிகவும் பிரபலமாகிவிட்டது.

இந்நிலையில் அந்த பாடலுக்கு மும்பையைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஹோசன்னா என்பது கிறிஸ்தவர்களின் புனித வார்த்தை அதை எப்படி ஒரு காதல் பாட்டில் பயன்படுத்தலாம் என்று அது கண்டித்துள்ளது. அந்த பாடலில் உள்ள ஹோசன்னா என்ற வார்த்தையை நீக்காவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாகவும், வழக்கு தொடரப் போவதாகவும் அது தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு தனது எதிர்ப்பை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாடலாசிரியர் ஜாவித் அக்தர், பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் சோனி நிறுவனத்திற்கு இமெயில் மூலம் தெரிவித்துள்ளது.