Thursday, May 3, 2012

கே எஸ் ரவிக்குமார் மகள் திருமணம் - ரஜினி நேரில் வாழ்த்து!!!

Thursday ,May, 03, 2012
இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரின் மூத்த மகள் ஜனனி - சதீஷ் குமார் திருமணம் இன்று சென்னையில் நடந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான கேஎஸ் ரவிக்குமார் - கற்பகம் தம்பதிகளின் மூத்த மகள் ஆர் ஜனனி. எம்பிஏ பட்டதாரி. இவருக்கும் தொழிலதிபர் ரவிசேகர் - கலாவதி தம்பதியரின் மகன் சதீஷ் குமாருக்கும் இன்று சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது.

திரையுலகினர் ஏராளமாய் கலந்து கொண்ட இந்த விழாவில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார்.

மேலும், நடிகர்கள் சிவக்குமார், விஜயகுமார், நடிகைகள் கே ஆர் விஜயா, எம் என் ராஜம், ஏ எல் ராகவன், வைஜெயந்தி மாலா, சினேகா, பிரசன்னா, சிம்ரன், கவுண்டமணி, இயக்குநர்கள் பி வாசு, சேரன், பாலாஜி சக்திவேல், ஜெயம் ராஜா, மனோஜ்குமார், நாசர், பிரபு, பாண்டு, சித்தாரா, சித்ரா, உதயநிதி ஸ்டாலின் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

150-வது ஜொள்ளு!!!150-வது ஜொள்ளு!!!

Thursday ,May, 03, 2012
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி படங்களில் நடிப்பதை விட்டு விலகி அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார். இதுவரை 149 படங்களில் நடித்துள்ள சிரஞ்சீவி தனது 150-வது படமாக ‘ஆதிக்க நாயுடு’ என்ற படத்தை துவங்கினார். அந்த சமயத்தில் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டதால் நின்று போன படம் தொடங்கப்படவே இல்லை.

இந்நிலையில் சமீபத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரன்(இவரது பெயர் ராம்சரன் தேஜா. தேஜா என்பதை விடுத்து ராம்சரன் என்று மட்டும் அழைக்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொண்டதால் ராம்சரன் என்று போடப்பட்டுள்ளது)

தமன்னாவுடன் இணைந்து நடித்த ‘ரச்சா’ படவிழாவில் கலந்துகொண்ட சிரஞ்சீவி மேடையில் பேசிய போது “ ஆஹா தமன்னாவை பார்த்ததும் என்னுடைய 150-வது படத்தை தொடங்கிவிடலாம் என்ற ஆசை வந்துவிட்டது.

என் பையன் கூட நடிச்ச பொண்ணு கூட நான் நடிக்க முடியாதே!” என ஜொள்ளினாராம் தெலுங்கு சூப்பர்ஸ்டார்.

பில்லா-2 VS விஸ்வரூபம் VS துப்பாக்கி!!!

Thursday ,May, 03, 2012
2012-ம் ஆண்டின் கோடைகாலத்தில் எந்த முக்கிய ஹீரோக்களின் படமும் வெளிவரவில்லை என்றாலும் அவர்கள் படங்களின் போஸ்டர்களும், டிரெய்லர்களும் வெளிவந்து ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கின்றன.

சக்ரி டொலட்டி இயக்கத்தில் அஜித் நடித்துக் கொண்டிருக்கும் பில்லா-2 படத்தின் டிரெய்லரும், போஸ்டரும் ஒரு கலக்கு கலக்கினாலும், பில்லா-2 படத்தின் பாடல்கள் வெளியானதும் பல ரசிகர்கள் ஒரே நேரத்தில் அவற்றை டவுன்லோடு செய்ய முற்பட்டதால் இணையதளங்கள் ஸ்தம்பித்துவிட்டன.

இதே போல் 100 கோடி ரூபாய் பட்ஜட்டில் உருவான கமலஹாஸனின் விஸ்வரூபம் படத்தின் போஸ்டரும் 30 நொடி முன்னோட்டமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தின் போஸ்டரும் இதே சமயத்தில் வெளியாகி பல ரசிகர்களின் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் வால்பேப்பராகவும் மாறிவிட்டன.

இதில் மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட துப்பாக்கி, விஸ்வரூபம் படங்களின் போஸ்டர்கள் ஏப்ரல் 30-ம் தேதியே வெளியாகின. இவை உண்மையானவை தானா என ரசிகர்கள் குழப்பமடைந்தனர். கமல்ஹாஸனை தொடர்புகொள்ள முடியாமல் போனாலும், ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டர் இணையதளத்தில் இருப்பதால் முருகதாஸிடம் இந்த போஸ்டர் உண்மையானது தானா என கேள்விகள் பறந்தன.

முருகதாஸ் அது உண்மையான துப்பாக்கி போஸ்டர் தான் என்று உறுதிபடுத்திய பின்னர் தான் ரசிகர்கள் மனம் அமைதியானது. கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் வெளியான எதிர்பார்ப்பு நிறைந்த மூன்று படங்களையும் பார்த்தால் அதில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படம் தனியாக இருக்கிறது. அஜித் நடித்துள்ள பில்லா-2, கமல் நடித்துள்ள விஸ்வரூபம் ஆகிய படங்களின் போஸ்டர்கள் நவீன முறையில்(மோஷன் போஸ்டர் டெக்னாலஜி) உருவாக்கப்பட்டுள்ளன.

மோஷன் போஸ்டர் முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர்களை எடிட் செய்வதும், வீடியோவில் பயன்படுத்துவதும் கடினமானதாம். அவ்வாறு பயன்படுத்தும் போது அவற்றின் தரம் குறைந்து விடும் என்கிறார்கள் கிராஃபிக்ஸ் டிஸைனர்கள்.

துப்பாக்கி படத்தின் போஸ்டர்கள் இதுவரை பயன்படுத்தப்பட்ட சாதாரண முறையிலேயே உருவாக்கப்பட்டிருப்பதால் அவற்றை எடிட் செய்வது எளிது என்கிறார்கள்.

மோஷன் போஸ்டர் டெக்னாலஜி முறை இதுவரை பிரபல ஹாலிவுட் படங்களிலும், ஒரே ஒரு இந்தி படத்திலும் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹீரோயின் வாய்ப்புக்கு காத்திருந்து ஏமாற்றம் : குத்து பாடலுக்கு இறங்கி வந்தார் சதா!!!

Thursday ,May, 03, 2012
ஹீரோயினாக நடிக்க காத்திருந்து ஏமாற்றம் அடைந்த சதா, குத்து பாடல் ஆட சம்மதித்துள்ளார். ‘ஜெயம்Õ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சதா. கிராமத்து பெண்ணாக பாவாடை, தாவணி அணிந்து நடித்த அவருக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருந்தது. ஆனால் அடுத்தடுத்து நடித்த படங்களில் ஹேர் ஸ்டைல், காஸ்டியூம் என எல்லாவற்றையும் கவர்ச்சியாக மாற்றிக்கொண்டு நடித்தார். இதனால் ரசிகர்களிடம் மவுசு குறைய ஆரம்பித்தது. விக்ரமுடன் ‘அந்நியன், அஜீத்துடன் ‘திருப்பதி என முன்னணி நடிகர்களுடன் நடித்தபோதும் அவரால் இழந்த மார்க்கெட்டை மீட்க முடியவில்லை. கடைசியாக அவர் தமிழில் ‘புலி வேஷம் படத்தில் நடித்தார்.

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என 3 படவுலகிலும் அவர் கைவிடப்பட்ட நிலையில் புதிய படங்களுக்காக காத்திருந்தார். இந்நிலையில் சுந்தர்.சி. இயக்க விஷால் நடிக்கும் புதிய படத்தில் குத்துப் பாடல் ஒன்றில் ஆட சம்மதித்திருக்கிறார். ஹீரோயின் அந்தஸ்தில் நடித்துக்கொண்டிருந்த நீங்கள் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது ஏன்? என்று சதாவிடம் கேட்டபோது, ஒருபாடலுக்கு நடனம் ஆடவேண்டும் என்று தயாரிப்பு தரப்பிலிருந்து அழைப்பு வந்தபோது அதில் நடிக்க ஆர்வமில்லை என்றேன். இது வெறும் குத்துப்பாடல் அல்ல. பட ஹீரோவுடன் ஆடும் முக்கியமான பாடல் என்றனர். அவர்கள் கூறியவிதம் நியாயமாக இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்றார்.

குழப்பத்தில் நடிகை!!!

Thursday ,May, 03, 2012
கல்யாண மேட்டர்ல பிரச்னை ஏற்பட்டதால அனன ஹீரோயின் மனசொடிஞ்சிட்டாராம்... ஒடிஞ்சிட்டாராம்... பிரச்னைல சிக்குன அவரை நடிக்க வைச்சா ஈஸியாக பிசினஸ் செய்யலாம்னு பல இயக்குனருங்க தொடர்பு கொண்டாங்களாம். ஆனா நடிகையோ யார் போனையும் அட்டண்ட் பண்ணலையாம்... கல்யாணத்தை தள்ளிப்போடுறதா? இல்லேன்னா ரத்து செய்யுறதான்னு குழப்பத்துல இருக்கிறாரு. யாரும் அவரை தொந்தரவு செய்யாதீங்கன்னு தந்தை தரப்பு கெஞ்சுறாராம்...

சான்டல்வுட்ல கோலிவுட் இயக்குனருங்களுக்கு கிராக்கி ஏற்பட்டிருக்காம்... இருக்காம்... முகி இயக்கம், விலங்குகள் ஸ்பெஷல் இயக்கம் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டிருக்காங்களாம். இதையடுத்து ஒன்றிரண்டு படங்கள இயக்கினவங்களும் சான்டல்வுட் ஹீரோக்களை சந்திச்சி சான்ஸ் கேக்குறாங்களாம்...

வழக்கு படத்துலேய கவனமா இருந்த லவ் இயக்கம் அதுலேயிருந்து மீண்டு வரலையாம்... அடுத்த படத்துக்கு ஸ்கிரிப்ட் ரெடியான்னு தயாரிப்புங்க கேட்கிறாங்களாம். அடுத்த கதை ரெடி பண்ண, 2 வருஷம் கூட ஆகலாம்னு இயக்கம் பதில் சொல்றாராம்...அட்வான்சாவது வாங்கிப் போட்டுக்குங்கன்னு நட்பு இயக்குனருங்க அட்வைஸ் பண்றாங்களாம்...

நடிகர்களுக்கு ஸ்பெஷல் பார்ட்டி தருகிறார் சினேகா!!!

Thursday ,May, 03, 2012
திருமணத்துக்கு முன்பு நடிகர், நடிகைகளுக்கு ஸ்பெஷல் பார்ட்டி தருகிறார் சினேகா. நடிகர் பிரசன்னா,சினேகா திருமணம் வரும் 11ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடு கள் நடந்து வருகிறது. இது பற்றி சினேகா கூறியதாவது: எனது திருமண விழாவை 4 நாள் விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளேன். முதலாவதாக என்னுடன் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள், தோழிகளுக்கு என் வீட்டில் ஸ்பெஷல் பார்ட்டி தருகிறேன். நான்கு நாள் விழாவில் மெஹந்தி, சங்கீத் என இரண்டு விழாக்கள் ஆடம்பரமாக நடக்க உள்ளது. திருமணத்துக்காக எல்லா நிறத்திலும் பட்டு சேலை வாங்கிவிட்டேன்.

மணமேடையில் அமரும்போது அணிவதற்காக காஞ்சிபுரம் சென்று பட்டு சேலைகள் வாங்கினேன். இருமுறைப்படி திருமணம் நடப்பதால் பிராமண முறைப்படி மடிசாரும் அணிந்துகொள்ள உள்ளேன். ஒவ்வொரு விழாவின்போதும் விதவிதமான சேலையும், ஹம் ஆப்கே ஹைன் கோன் படத்தில் திருமண காட்சியில் மாதுரி தீட்சித் அணிந்து வந்ததுபோல் காக்ரா உடை அணியவும் உள¢ளேன். எல்லா காஸ்டியூம் டிசைன்களையும் எனது அக்காதான் வடிவமைக்கிறார். பாரம்பரிய முறையிலேயே இந்த திருமணம் நடக்கவுள்ளது. திருமண நாளை நினைத்தால் மனசுக்குள் ஆயிரக்கணக்கில் பட்டாம் பூச்சிகள் பறக்கிறது. பிரசன்னா எனக்கு மிக பொருத்தமான ஜோடி. இவ்வாறு சினேகா கூறினார்.

சினிமாவின் வெற்றி, தோல்வி நடிகை கையில் இல்லை - த்ரிஷா!!!

Thursday ,May, 03, 2012
கேரள நடிகைகள் ஆட்சி செய்யும் தமி‌ழ், தெலுங்கு திரையுலகில் கடந்த பத்து வருடங்களாக முன்னணியில் இருக்கிறார் த்ரிஷா. தமிழ்ப் பெண் என்ற அளவில் இது முக்கியமானது. இதற்குமுன் முன்னணி நடிகைகளாக இருந்த குஷ்பு, சிம்ரன் என எல்லோருமே வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். முன்பு த்ரிஷா குறித்து வாரத்திற்கு நான்கு வதந்திகள் வரும். இப்போது ஆள் இருக்கும் இடமே தெரியவில்லை. மே 4 த்ரிஷாவுக்கு 28 வயது. அவரது பேச்சிலும் அந்த முதிர்ச்சி வெளிப்படுகிறது.

தமிழ் சினிமாவில் நடிப்பதை குறைத்திருக்கிறீர்களே, என்ன காரணம்?

தமிழில் நடிக்கலைன்னு யார் சொன்னது. விஷாலுடன் சமரன் படத்தில் நடிச்சுகிட்டுதான் இருக்கேன். அடுத்து அகமது டைரக் ஷனில் ஜீவா நடிக்கிற படத்திலேயும் இருக்கிறேன்.

ஆனாலும் இது குறைவு இல்லையா?

நான் பத்து வருஷமா இந்த பீல்டில் இருக்கேன். ஒரே மாதிரியான வேடங்களில் நடிச்சு போரடிச்சுப் போச்சு. அதனால் டிபரண்டான கேரக்டர் ட்ரை பண்றேன். சமரனில் அப்படியொரு கேரக்டர். அகமது படமும் அப்படிதான். சவாலான வேஷங்கள் கிடைச்சா நான் எப்போதும் நடிக்கத் தயார்.

சவாலான வேஷம்னு சொல்றீங்க, ஆனா ஹீரோயின் ஓபியண்ட் கதையை தவிர்க்கிறீங்களே...?

ஒரு சினிமாவோட வெற்றியு‌ம், தோல்வியும் ஒரு நடிகை கையில இல்லை. இதை உறுதியா நம்பறேன். ஹீரோயின் ஓரியண்ட் படம்னா மொத்த சுமையும் நாமதான் தாங்கணும். கொஞ்சம் மிஸ்ஸானாலும் கெட்ட பெயர் முழுக்க நமக்குதான் வரும். அதையும் மீறி என்னை கவர்ற கதைன்னா ஹீரோயின் ஓரியண்ட் படம்னாலும் ஓகேதான்.

இந்தி பிரவேசம் சரியாக அமையாததில் வருத்தம் உண்டா?

நான் எப்போதும் இந்திக்குப் போகணும்னு விரும்பினதில்லை. ப்ரியதர்ஷன் சார் கூப்பிட்டார் சரின்னு பட்டது போனே‌ன், நடித்தேன். நான் முன்பே சொன்ன மாதி‌ரி ஒரு படத்தோட வெற்றிக்கும் தோல்விக்கும் நடிகை காரணமில்லை. இந்தியில் நடிக்க கேட்கிறாங்க. ஆனா பத்தோடு பதினொன்னா எதையும் செய்ய எனக்கு விருப்பமில்லை. நல்ல ஆஃபர்கள் வந்தால் எனக்கும் பிடித்திருந்தால் பார்க்கலாம். தமி‌‌ழ், தெலுங்கில் நடிப்பதுதான் எப்போதும் எனக்குப் பிடிச்சிருக்கு.

திருமணம்...?

யாராக இருந்தாலும் ஒருநாள் திருமணம் செய்தாக வேண்டும். அப்கோர்ஸ் எனக்கும் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். அதற்குள் திருமணம் முடிந்ததாகவு‌ம், காதலிக்கிறதாகவும் விதவிதமாக வதந்திகள். காதலித்து கல்யாணம் செய்ய எனக்கும் ஆசைதான். ஆனால் இன்னும் கொஞ்சநாள் சினிமாவில் தொடரவே ஆசைப்படுகிறேன்.

தெலுங்கு தம்முவில் உங்களுடன் கார்த்திகாவும் நடித்திருக்கிறாரே?

தெலுங்கில் இரண்டு ஹீரோயின்கள் சேர்ந்து நடிப்பது ஒன்றும் புதுசில்லை. படத்தில் என்னுடைய கேரக்டரை மட்டுமே நான் பார்ப்பேன். அந்தவகையில் தம்மு கதாபாத்திரம் பிடித்துதான் நடித்தேன். எல்லோரும் எதிர்பார்த்தபடி படத்துக்கு கிராண்ட் ஓபனிங் கிடைச்சிருக்கு.

அடுத்த தெலுங்குப் படம்...?

ரவிதேஜாவுடன் நடிக்கிறேன். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

த்ரிஷா என்றாலே பார்ட்டி என்றொரு பெயர் இருக்கிறதே...?

எனக்கு சினிமாவில் நண்பர்கள் அதிகம். மனசுக்கு நெருக்கமான நண்பர்களை பார்ட்டிகளில்தான் சந்திக்கிறேன். நண்பர்களின் பார்ட்டிகளை உங்களால் தவிர்க்க முடியாது. ரம்யாகிருஷ்ண‌ன், குஷ்பு, பிருந்தா மாஸ்ட‌ர், ரிமோசென் என்று சில பேர் இருக்கிறார்கள். சினிமாவுக்கு வந்தபோதே பழக்கம். அவர்களுடன் மனம்விட்டு பேச பார்ட்டிகள்தான் ஒரே வழி. இதை தப்பாகப் பார்த்தால் நான் என்ன செய்ய முடியு‌ம்?

'கிராமத்துக்குப் போய் நாலு பசுமாடு வாங்கிப் பிழைப்பேன்!' - 'மெரினா' பாண்டிராஜ் அறிக்கை!!!

Thursday, May ,03, 2012
மெரினா படம் தொடர்பான மோசடி புகார்கள், நீதி மன்ற உத்தரவுகள் காரணமாக தன்னைப் பற்றி தவறான செய்திகள் பரவி வருவதாக இயக்குநர் பாணடி ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

புதன்கிழமை இரவு அவர் விடுத்த அறிக்கை விவரம்:

ஒரு வாரமாக பத்திரிக்கையிலும், தொலைக்காட்சியிலும் பல லட்சம் மோசடி, கொலை மிரட்டல், கொமிஷனரிடம் புகார், மெரினாவை பிற மொழிகளில் வெளியிடத் தடை என்று என்னைப் பற்றிய தவறான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

வெளியுரில் எனது அடுத்த பட வேளைகளில் இருந்ததாலும், வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாலும், எனது சட்டத்தரனி அமைதி காக்கும்படி கூறியதாலும் இதுவரை அமைதி காத்தேன்.

பசங்க புரொடக்ஷன்ஸ் என்ற எனது நிறுவனம் முறையாக தயாரிப்பாளர் சங்கத்தில் எனது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

என்னிடம் மேனேஜராக வேலை பார்த்த பி. சாம்பசிவம், மாதா மாதம் சம்பளம் வாங்கிக் கொண்டு, நான் கொடுத்த உரிமையை தவறாகப் பயன்படுத்தி எனது நிறுவனத்தில் உள்ள Voucher Padகளைத் திருடிச் சென்று, எனது கம்பெனி பெயரிலேயே போலி கணக்குகளை தயார் செய்து (அதுவும் படப்பிடிப்பு எதுவும் நடக்காத நாட்களில் கூட) இன்று பாண்டிராஜ் தயாரிப்பாளர் இல்லை, இவர்தான் தயாரிப்பாளர் என்று பொய் வழக்கு போட்டுள்ளார்கள்.

ரூ 12 .50 லட்சம் போட்டவர் தயாரிப்பாளர் என்றால் கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுத்தவனை என்னவென்று சொல்வது? அவர்கள் கொடுத்த 12.50 லட்சம் கணக்கிற்கு நீதிமன்ற உத்தரவின் படி, 15 லட்சமாக நீதிமன்றம் மூலமே வழங்கி விட்டேன்.

பெருந்தன்மையாக இணை தயாரிப்பாளர் என்ற மரியாதையையும் கொடுத்து விட்டேன். இவர் முதலீட்டிற்கான லாபத்தை இறுதி செய்ய நீதிமன்ற வலியுறுத்தலின் படி ஆடிட்டர் மூலம் ஆடிட்டிங் நடந்து வருகிறது.

அதற்குள் இவர்கள் மேலும் பல லட்சங்களை பறிப்பதற்காக பொய் செய்திகளை திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள்.

இவர்கள் இரண்டு பேர் சொல்லும் பொய் எப்படி உண்மையாகிவிடும்? மெரினா திரைப்படத்தில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் உழைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நடந்த உண்மைகள் அனைத்தும் தெரியும். அதில் நடித்த சிறுவர்கள் கூட இவர்கள் செயலை பார்த்து சிரிப்பார்கள்.

இவர்கள் இருவரும் யார்? ஆர்.பாலமுருகன் என்பவர் பெரம்பலூரில் நில மோசடி வழக்கில் சிக்கி அவர் மேல் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

சாம்பசிவம் என்னும் இன்னொருவர் உதவி இயக்குனர் ஒருவரை ஏமாற்றி செக் மோசடி வழக்கில் சிக்கியவர். இவர் மேல் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இவர்கள் இருவரின் வழக்கு பற்றிய ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன.

வழக்குகளை வழக்கமாக சந்தித்து வரும் இவர்கள், என் மீது மோசடி வழக்கு போட்டுள்ளார்கள். நான் பண மோசடி செய்தேனா? இல்லை என்னை மற்றவர்கள் பண மோசடி செய்துள்ளார்களா? என்று தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கள் என அனைவருக்கும் தெரியும்.

பணத்திற்காக எதையும் செய்யும் ஈனப் பிறவி இல்லை நான். பணம் வேண்டுமென்றால் இன்று பல கோடிகளை என்னால் அட்வான்ஸாக மட்டுமே பெற்றிருக்க முடியும். யாரையும் பண மோசடி செய்து பிழைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

என் திறமைக்கும், நேர்மைக்கும் ஆண்டவன் எனக்கு நிறையவே கொடுத்திருக்கிறான். அப்படி ஒரு நிலைமை வந்தால் எனது சொந்த கிராமமான விராச்சிலைக்கே சென்று நான்கு பசு மாடுகளை வாங்கி மேய்த்து பிழைப்பேனே தவிர அடுத்தவன் உழைப்பை உறிஞ்சி குடிக்க ஆசைப்பட மாட்டேன்.

தினமும் ஏதாவது செய்தி கொடுத்தால் பாண்டிராஜ் பயந்து விடுவான், அவனை மிரட்டி பணம் வாங்கி விடலாம் என்று நினைக்கிறார்கள்.

என்னைப் பற்றியும், எனது நேர்மையை பற்றியும் இந்த விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே என்ன நடந்தது என்பது பற்றியும், என் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், என் உதவியாளர்களுக்கும், சக கலைஞர்களுக்கும் நன்றாகத் தெரியும்.

பசங்க படத்திற்காக சர்வசேத மற்றும் தேசிய விருது பெற்றது முதல் இன்று வரை எனது படைப்புகளுக்கும், எனக்கும் பேராதரவை வழங்கி வரும் பத்திரிக்கையாளர்கள், அனைத்து ஊடக நண்பர்கள் மற்றும் என் நலம் விரும்பிகளுக்கும் நடந்த உண்மைகளை தெரியப்படுத்தவே இந்த தன்னிலை விளக்கத்தை அளிக்கிறேன். இவர்களை நீதியும், நீதிமன்றமும் பார்த்துக் கொள்ளட்டும்.

குழந்தைகள் கண் சிகிச்சைக்கு உதவ தன்னார்வ அமைப்பு - ரஜினி தொடங்கி வைத்தார்!!!

Thursday, May ,03, 2012
சிஸ்டிநோசிஸ்' எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் சிகிச்சைக்கு உதவுவதற்கான தன்னார்வ அமைப்பினை சென்னையில் தொடங்கிவைத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இந்த அமைப்பின் தொடக்க நிகழ்ச்சியில் "சிஸ்டிநோசிஸ்' நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளுக்கு தலா ரூ.2 லட்சம் மதிப்புள்ள "சிஸ்டகான்' மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.

'சேபியன்ஸ் ஹெல்த் பவுண்டேஷன்' என்ற பெயரில் நாட்டிலேயே முதன்முறையாக இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாகப் பங்கேற்ற ரஜினி, தனது ஆதரவை இந்த அமைப்புக்குத் தெரிவித்தார்.

சிஸ்டிநோசிஸ் நோய் குறித்து மியாட் மருத்துவமனை சிறுநீரக மருத்துவ துறைத் தலைவரும், "சேபியன்ஸ் ஹெல்த் பவுண்டேஷன்' தலைவருமான டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் கூறுகையில், "சிஸ்டிநோசிஸ்' என்பது குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மரபணு சார்ந்த அரிய வகை நோயாகும். உலகம் முழுவதும் இந்த நோயால் 2 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் எவ்வளவு குழந்தைகளுக்கு இந்த நோய் பாதிப்பு உள்ளது என்பது தெரியவில்லை. மொத்தம் 6 குழந்தைகளுக்கு இந்த அரிய நோய் பாதிப்பு உள்ளது "சேபியன்ஸ் ஹெல்த் பவுண்டேஷன்' அமைப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

குழந்தை பிறந்தவுடன் இந்த நோய் பாதிப்பு தெரியாது. எனினும் குழந்தை வளரும்போது உரிய காலத்தில் வளர்ச்சி இல்லாத நிலையில், சிறுநீர்ப் பரிசோதனையில் சர்க்கரை இருந்தாலோ அல்லது அமினோ அமிலம் வெளியேறினாலோ இந்த நோய் குறித்துச் சந்தேகப்பட வேண்டும்; உடனடியாக

குழந்தையின் விழி வெண்படலம் ("கார்னியா') நன்றாக உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள குழந்தையை கண் மருத்துவரிடம் அனுப்பி சிறப்புப் பரிசோதனைகள் செய்ய வேண்டும்.

முன்கூட்டியே இந்த நோயைக் கண்டுபிடித்துவிட்டால் குழந்தைக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து அதன் வளர்ச்சியை உறுதி செய்து காப்பாற்ற முடியும்.

இப்போது இரண்டு குழந்தைகளுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டு குழந்தைகளின் மருந்துச் செலவுக்கு உரிய தலா ரூ.2 லட்சம், நன்கொடை மூலம் திரட்டப்பட்டு வருகிறது," என்றார்.