Wednesday, February 29, 2012

காதல் வளர்க்கும் ஹீரோ-ஹீரோயின்!!!

Wednesday,February,29,2012
கனவு கண்ட படத்துல நடிச்ச ஸ்ரீ நடிருக்கும், பிருத்வான நடிகருக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் ஓடுதாம்... ஓடுதாம்... மலையாள இயக்கம் யாராவது டோலிவுட ஆக்டரோடு சேர்ந்து நடிக்கணும்ன்னு பிருத்து நடிகர்கிட்ட சொன்னா, உடனே ஸ்ரீ நடிகர்பேரை சிபாரிசு பண்ணறாராம்... பண்றாராம்... தமிழ், தெலுங்குல அடுத்தடுத்து இவங்க சேர்ந்து நடிச்சதுக்கு இதுதான் காரணமாம்... காரணமாம்...

சூப்பர் ஹீரோ படத்துல எல்லா நடிகர்களுமே டபுள் கேரக்டர்ல நடிக்கப்போறாங்களாம்... போறாங்களாம்... இந்த மேட்டரை அப்படியே இயக்கம் பொத்தி வச்சிருக்காராம். ஆனா மறைஞ்ச நாகேசான காமெடி ஆக்டரோட கேரக்டரை மட்டும் கிராபிக்ஸ்ல உருவாக்குறதால சிங்கிள் ரோலா வச்சிருக்காங்களாம். பட ஷூட்டிங்கை விட கிராபிக்ஸ் வேலைகளுக்குத்தான் பட யூனிட் அதிக நாள் செலவிட திட¢டம் போட்டிருக்காம்... போட்டிருக்காம்... கிராபிக்ஸ் சம்பந்தமா எந்த விஷயத்தையும் வெளியே சொல்லக்கூடாதுன்னு யூனிட்டுக்கு வாரிசு இயக்கம் கண்டிஷன் போட்டிருக்காராம்... போட்டிருக்காராம்...

பாவனமான ஹீரோயின் மலையாள நடிகர் ஒருவரோடு நெருக்கமா பழகுறாராம்... பழகுறாராம்... அவரோட இணைச்சி கிசுகிசு வந்தவுடனே ரெண்டு பேரும் மறுத்தாங்க. ஆனா, ரெண்டு பேரோட சந்திப்பும் தொடர்ந்துகிட்டே இருக்காம்... இருக்காம்... காதலும் வளர்ந்துகிட்டே இருக்காம்... இருக்காம்...

ரஜினிக்கு கதை சொன்ன பட குழு : கமல்ஹாசன் பாராட்டு!!!

Wednesday,February,29,2012
தலைவாசல் படத்தை இயக்கியவர் செல்வா. இவர் தற்போது ‘நாங்க என்ற படத்தை இயக்குகிறார். இது இவர் இயக்கும் 25 படம். சந்தானபாரதி, பாடகர் மனோ ஆகியோரின் வாரிசுகளுடன் வெவ்வேறு துறையினரின் வாரிசுகள் 10 பேர் இதில் நடிகர்களாக அறிமுகமாகின்றனர். இது பற்றி செல்வா கூறியது: பட குழுவினருடன் சென்று ரஜினியை பார்த்தேன். படத்தின் கதையை கேட்டார். முழு கதையும் சொன்னேன். அதை கேட்டபிறகு படத்தின் கரு பிடித்திருப்பதாக கூறியதுடன் கதைக்களம் 1980யை பின்னணியாக கொண்டிருப்பதால் கதை அம்சம் உள்ள கதையாக இருக்கும் என்று நம்புகிறேன். நிறைய புதுமுகங்கள் திரையுலகுக்கு வரவேண்டும் என்றும் ரஜினி விருப்பம் தெரிவித்தார். அதேபோல் பட குழுவினர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ÔÔஒரே படத்தில் இவ்வளவு பேர் அதுவும் வாரிசுகள் அறிமுகமாகியுள்ளது பெரிய விஷயம்ÕÕ என்று கமல் பாராட்டினார். ரஜினி - கமல் சந்திப்புக்கு மனோ, சந்தானபாரதி ஏற்பாடு செய்திருந்தனர். அடுத்து பட குழுவினர் அனைவரும் ரோடு ஷோ நடத்த உள்ளனர். சென்னை, கோவை, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் மார்ச் 2ம் தேதி முதல் ஷூட்டிங் தொடங்குகிறது. பாலமுருகன் ஒளிப்பதிவு. பாலபாரதி இசை.

மிரட்டல் இயக்கம் நடிகர் தூது!!!

Wednesday,February,29,2012
நிஜ தாதா கதை, ரவுடி கதை என்று வம்ப விலைக்குவாங்குற வர்மா இயக்கம் அடுத்த வம்புக்கு தயாராயிட்டாராம்... ஆயிட்டாராம்... தெலுங்குல பிரபலமான ஒரு காஸ்ட் பேர் கொண்ட தலைவர் கதைய மையமா வச்சி அடுத்த கத பண்ணப்போறாராம்... இதுக்கு இப்பவே எதிர்ப்பு கிளப்பறாங்களாம்... படத்தோட முழு ஸ்கிரிப்ட்டயும் வெளியே சொல்லிட்டுத்தான் படம் தொடங்கணும்னு ஒரு குரூப் மிரட்டல் விட்டிருக்காங்களாம்... அதுக்கெல்லாம் பயப்படமாட்டேன்னு இயக்கம் சவால்விட்றாராம்... விட்றாராம்...

சூப்பர் ஆக்டரோட பேர பயன்படுத்தி படத்துக்கு டைட்டில் வெக்காதீங்கன்னு நடிகர் தரப்புலயிருந்து சொல்லிட்டாங்களாம்... சொல்லிட்டாங்களாம்... அதுக்கு கோலிவுட்ல நல்ல ரிசல்ட் கெட்சிருக்காம். அவர் பேர்ல வர்ற இருந்த படங்களுக்கு இப்ப பேர மாத்திட்டாங்களாம்... ஆனா டோலிவுட், சான்டல்வுட்ல இருக்கற ஆக்டருங்க சூப்பர் ஸ்டாரு படங்க பேர யூஸ் பண்ண ஆரம்பிச்சிருக்காங் களாம்... இது சூப்பர் ஆக்டர் கவனத்துக்கு போயிருக்காம்.. இருக்காம்...

கோலிவுட்ல முட்டிமோதிப்பாத்து பசுவான நடிகருக்கு போணியாகலையாம்... ஆகலையாம்... ஒரே ரூட்ல போயிட்டிருந்தா வேலைக்கு ஆகாதுன்னு பிரண்ட்ஸுங்க சொன்னாங் களாம்... அத வேதவாக்க எடுத்துகிட்டு வேற மொழிகள்ல நடிக்க தூதுவிட்டறாராம்... அதுக்கு மல்லுவுட்ல பலன் கெடச்சிருக்காம். எதிர்பார்த்ததவிட கூடுதலாவே பட வாய்ப்பு வர்றதாலே மலையாள படங்கள அதிகமா பாக்க ஆரம்பிச்சிருக்காராம்... இருக்காராம்...

ஜீவா, கார்த்திக்கு நோ சொன்ன லட்சுமி ராய்!!!

Wednesday,February,29,2012
2011-ம் ஆண்டின் மிக வெற்றிகரமான நடிகை லட்சுமி ராய்தான். அவர் நடித்த மங்காத்தா பெரிய ஹிட். காஞ்சனாவோ சூப்பர் டூப்பர் ஹிட்.

இன்றைக்கு பலரும் லட்சுமிராயை தங்கள் படத்தில் நடிக்க வைக்க முயல்கிறார்கள். ஆனால் ரொம்ப தெளிவான லட்சுமிராய், தனக்கு முக்கியத்துவம் இல்லாத படங்களை, அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் ஒப்புக் கொள்ள மறுத்துவருகிறார்.

சமீபத்தில் லட்சுமி ராய்க்கு இரு பெரிய பட வாய்ப்புகள் வந்தன. அதில் ஒன்று கார்த்தியின் படம். இதில் லட்சுமி ராய்க்கு இரண்டாவது நாயகி வேடம். ஆனால் நல்ல சம்பளம் தரத் தயாராக இருந்தார் தயாரிப்பாளர். கதையைக் கேட்ட லட்சுமி ராய், நான் நடிக்க மாட்டேன் என விலகிக் கொண்டார்.

அடுத்து ஜீவாவுடன் நடிக்க வந்த வாய்ப்பையும் வேண்டாம் என மறுத்துவிட்டார்.

ஏன் இப்படி? என்றால், இரண்டு படங்களிலுமே எனக்கு அரைவேக்காட்டுத்தனமான ரோல். அவற்றில் நடித்து பெயரைக் கெடுத்துக் கொள்வதை விட, கையிருக்கும் படங்களில் கவனம் செலுத்தவே விரும்புகிறேன், என்கிறார் லட்சுமி ராய்.

மலையாளத்தில் 3 படங்கள், கன்னடத்திலும் தெலுங்கும் தலா இரண்டு என நிற்க நேரமில்லாத அளவு சோலோ ஹீரோயின் வேடங்கள் இருப்பதால், தமிழில் வரும் இரண்டாம் தர ஹீரோயின் வேடங்களை மறுக்கிறார்.

தமிழிலும் தனி ஹீரோயின் வேடம் கொடுங்கள் வெளுத்துக் கட்டுகிறேன், என்கிறார்.

தனது அப்பா விதித்த தடையை மீறி மீண்டும் நடிக்க வருகிறார் பூஜா!!!

Wednesday,February,29,2012
தனது அப்பா விதித்த தடையை மீறி மீண்டும் நடிக்க வருகிறார் பூஜா. ‘நான் கடவுள்’ உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் பூஜா. திடீரென்று தமிழ் படங்களுக்கு முழுக்குபோட்டு ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் பாலா இயக்கும் படத்தில் நடிக்கவருகிறார். இதுபற்றி பூஜா கூறியதாவது: கடந்த வாரம் இயக்குனர் பாலாவை சந்தித்தேன். ‘எரியும் தணல்’ படத்தில் நடிக்க கேட்டார். திரையுலகில் என் குரு பாலாதான். நான் கடவுள் படத்துக்கு பிறகு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் ஏற்கவில்லை. நான் கடவுள் படத்தில் பார்வை இழந்த பெண்ணாக நடித்திருந்தேன். இந்த வேடத்தை பார்த்த எனது தந்தை ‘திரையுலகில் நீ சாதித்துவிட்டாய். இனிமேல் நடிக்க வேண்டாம்’ என்று கூறிவிட்டார். அவரது வார்த்தையை மீற முடியவில்லை. ஆனால், இயக்குனர் பாலா என்னை மீண்டும் நடிக்க கேட்டபோது மறுக்க முடியவில்லை.

கோச்சடையான் படத்தில் நாகேஷ்!!!

Wednesday,February,29,2012
வரும் மார்ச் 2ம் தேதி முதல் இங்கிலாந்தில் ‘கோச்சடையான்’ ஷூட்டிங் நடக்கிறது. ‘கோச்சடையான்’ பட பணிக்காக ஹாங்காங் சென்றிருக்கும் ரஜினியின் இளையமகளும், இயக்குனருமான சவுந்தர்யா டுவிட்டரில் கூறும்போது, "கோச்சடையான் பணிக்காக பட குழுவினருடன் ஹாங்காங்கில் இருக்கிறேன். பணிகள் சிறப்பாக நடக்கிறது. மார்ச் 2ம் தேதி முதல் இங்கிலாந்தில் ஷூட்டிங் நடக்கிறது" என்று கூறி உள்ளார். இந்நிலையில் 'கோச்சடையான்' படத்தில் மறைந்த நாகேஷ் நடிப்பதுபோல், அவரது காட்சிகள் கிராபிக்ஸில் உருவாக்கப்பட உள்ளன.

ரஜினி பற்றிய `ஜீவநதி' கவிதை நூல் எஸ்.பி.முத்துராமன் வெளியிட்டார்!!!

Wednesday,February,29,2012
நடிகர் ரஜினிகாந்த் பற்றிய `ஜீவநதி' என்ற கவிதை நூலை இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் வெளியிட்டார். நடிகர் ரஜினிகாந்த் பற்றிய கவிதை தொகுப்பு நூலான `ஜீவநதி' சென்னை எழும்nullரில் உள்ள ஆல்பர்ட் திரை அரங்கில் வைத்து வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட இயக்குனரான எஸ்.பி.முத்துராமன், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தானு, திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் அங்கு வசிக்கும் குழந்தைகள் உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இந்நூல் கண்ணகி பதிப்பக ஆசிரியர் குழுவினரால் எழுதப்பட்டுள்ளது. தமிழ் செல்வன் இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இம்பிரமாண்டமான நூல் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும் என இதன் தயாரிப்பாளர்கள் செ.ராஜபாண்டிதுரை மற்றும் ம.மகேஷ் ஆகியோர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இக்கவிதை நூலினை எஸ்.பி.முத்துராமன் வெளியிட, கலைப்புலி எஸ்.தானு பெற்றுகொண்டார். இந்நூலின் முதல் விற்பனையை ராகவா லாரன்ஸின் அறக்கட்டளையை சேர்ந்த குழந்தைகள் துவக்கி வைத்தனர். இவ்விழாவில் கலந்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் இந்த நூல் தங்களுக்கு ஒரு நல்ல பொக்கிஷமாக இருக்கும் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்நூலின் விற்பனையில் ஒரு பகுதி ராகவா லாரன்ஸால் நடத்தப்படும் மாற்றுதிறனாளிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான அறக்கட்டளையில் உள்ள குழந்தைகளின் கல்வி செலவிற்காக அளிக்கப்படும் என கண்ணகி பதிப்பகத்தின் விறபனை பிரிவு தலைவர் தி.ஜெயபாலமுருகன் தெரிவித்துள்ளார்.

ஜிம்கானா கிளப்பில் கார்த்திக்கு கட்டுப்பாடு!!!

Wednesday,February,29,2012
புதிதாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் பாண்டிச்சேரி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினை தொடங்கி வைக்க, சென்னை - அண்ணாசாலை ஜிம்கானா கிளப்பிற்கு வந்த நடிகர் கார்த்தி மற்றும் சென்னை-வடபழனி கமலா திரையரங்கு உரிமையாளர் வி.என்.சிதம்பரம் உள்ளிட்டவர்கள் காலர் இல்லாத சட்டை அணிந்து வந்ததால் உள்ளே விட அனுமதி மறுத்து விட்டது கிளப்!

பின்னர் ரவுண்ட் நெக் டி-சர்ட் அணிந்து வந்த கார்த்திக்கு, அண்ணா சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் புதிதாக கேஷூவல் சட்டை ஒன்றை வாங்கி கொடுத்த விழாக்குழுவினர், அவரது காரிலேயே அந்‌த உடையை மாற்றிக் கொள்ளவும் செய்து விழா நடந்த ஹாலிற்கு அழைத்து வந்தனர். அதேமாதிரி கமலா சிதம்பரம், நடிகர் திலகம் சிவாஜி காலத்து ஆசாமி என்பதால் சிவாஜி ஸ்டைலில் சின்ன காலர் வைத்த சட்டை அணிவது வழக்கம். விழாவிற்கு வந்த அவரையும் பழம்பெருமை வாய்ந்த ஜிம்கானா கிளப் ஊழியர்கள் உள்ளே விட மறுத்து விட்டதால் அவரும், அவரது காரில் உடன் வந்த நண்பரின் சட்டையை வாங்கி அணிந்து கொண்டு இவரது சட்டையை அவருக்கு கொடுத்து விட்டு, சட்டையை காரிலேயே மாற்றிக் கொண்டு விழாவிற்கு வந்ததாக கூறி வருத்தப்பட்டார். மேலும் இது காந்தி பிறந்த தேசம் என ஞாபகப்படுத்தியதுடன், இனி இதுபோன்ற விழாக்களை சட்டயை கலட்டாத இடங்களில் நடத்தும்படி அன்பு வேண்டுகோள் விடுத்தது ஹைலைட்!

இதேபோன்று விபரம் புரியாமல், வெளியூரில் இருந்து வெறும் வேஷ்டி-சட்டையை அணிந்து கொண்டு விழாவிற்கு வந்த தியேட்டர் அதிபர்கள் பலரும் கடைசி வரை விழாவிற்கு வெளியே நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆசை: நடிகர் அனுப் பேட்டி!!!

Wednesday,February,29,2012
ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆசை என்று நடிகர் அனுப் கூறினார்.ஊமைவிழிகள் படத்தின் மூலம் தமிழகத்தை மிரட்டிய ஆபாவாணனின் உதவியாளரும், தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி மாணவருமான கமல் முதன் முறையாக என்டர்டெய்ன்மென்ட் அன்லிமிடெட் சார்பில் மறுமுகம் என்ற படத்தை இயக்குகிறார். டேனியல் பாலாஜி​ அனுப் (சிக்கு புக்கு) இணைந்து நடிக்கிறார்கள். மும்பையைச் சேர்ந்த ரன்யா கதாநாயகியாக நடிக்கிறார். மூன்று கட்டமாகத் திட்டமிடப்பட்டிருந்த மறுமுகம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் கொடைக்கானலிலும் நடந்து முடிந்திருக்கிறது.
ஒரு காதல் சைக்கோவாக மிரட்டியிருக்கிறார் டேனியல் பாலாஜி. இன்னொரு கதாநாயகன் அனுப்பினை காதலிக்கும் ரன்யாவை டேனியல் பாலாஜியும் துரத்த ஒரு விறு விறுப்பான காதல் திரில்லராக இந்தப் படத்தினை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் கமல். மிகவும் சிறப்பான கதைகள் கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கும் டேனியல் பாலாஜிக்கு மறுமுகம் நிச்சயம் மேலும் ஒரு மணிமகுடமாக இருக்கும். தமிழ் ரசிகர்கள் பார்க்காத டேனியல் பாலாஜியின் இன்னொரு முகத்தைக்காட்டும் படமாக மறுமுகம் இருக்கும் என்கிறார் இயக்குனர் கமல்.
வட்டாரம், சிக்குபுக்கு ஆகிய படங்களில் ஆர்யாவுடனும் கத்திக்கப்பல் படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருக்கும் அனுப் இந்தப் படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். குறுகிய காலத்தில் நான்காவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சென்னை வைஷ்ணவா கல்லூரி பட்டதாரியான அனுப் நடனப்பள்ளியில் ஜெயந்தி மாஸ்டரிடம் 8 ஆண்டுகாலம் நடனம் படித்தவர். இவரது தந்தையார் தெலுங்குப் படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றியவர். சினிமாச் சூழலில் வளர்ந்த அனுப் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வர வேண்டும் என்று தனது சிறுவயதிலேயே முடிவு செய்திருக்கிறார்.
பெற்றோர்களின் முழு ஆதரவும் அவருக்குக் கிடைக்க மளமளவென்று நான்கு படங்கள். தொடர்ந்து வெகுளியான கதாபாத்திரங்களிலேயே நடித்து வருகிறீர்களே என்று கேட்டதற்கு ஆக்ஷன் படங்களில் நடிப்பதற்குத் தமக்கும் ஆசை இருப்பதாகவும் இருந்தாலும் இதற்கு முன் அவ்வாறு நடித்த படங்களில் கதை தம்மை மிகவும் கவர்ந்ததால் அவ்வாறு நடிக்கவேண்டியதாயிற்று என்றும் மறுமுகம் படத்தில் சிறிது மாறுபட்டு யுவதிகளைக் கவரும் வகையில் ஒரு லவ்வர் பாய் ( ) ஆக, காதல்காட்சிகளில் துறுதுறுவென்று நடித்திருப்பதாகவும் கூறினார். மறுமுகம் படத்தின் பாடல்காட்சி கொடைக்கானல் மலைப் பகுதியில் படம்பிடிக்கப்பட்டது. அனுப் மிகவும் சறுக்கலான பாறைகளைக் கொண்ட அந்த மலையின் உச்சியிலிருந்து கீழே நிற்கும் கதாநாயகியை நோக்கி ஓடிவர வேண்டும் கர்ணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் துணிச்சலுடன் நடித்திருக்கிறார். டேனியல் பாலாஜிக்கும் இவருக்கும் படப்பிடின் போது நிறைய கருத்து வேறுபாடுகள் வந்திருந்த போதிலும் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்த பிறகு இருவரும் நெருங்கிய நண்பர்கள் தாம் சொல்கிறார் தயாரிப்பாளர் சஞ்சய். கதாநாயகி ரன்யாவைப் பற்றிக் கூறும் போது, அவர் மும்பையைச் சொந்த ஊராகக் கொண்டாலும் தமிழ் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் சென்னையிலேயே தங்கி நடிப்புப் பயிற்சிகள் எடுத்துக் கொண்டிருந்த ரன்யாவிற்கு மறுமுகம் ஒரு ஜாக்பாட் ஆக அமைந்திருக்கிறது.
அவருக்கு தமிழ் நன்றாகப் புரியும் ஆதலால் இந்தப் படத்தில் இயக்குனர் கமலின் திரைக்கதையினை நன்கு உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்றார். திரைப்படக்கல்லூரி மாணவரான கனகராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் மலேசியாவில் வெளிவந்த 12 என்ற தமிழ்ப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கமல் திரைக்கதை எழுதி வெளிவந்த 12 மலேசியா நாட்டின் சிறந்த படத்திற்கான விருதினை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரபல தெலுங்கு இசையமைப்பாளரான அகஸ்தியா முதன்முறையாக மறுமுகம் படம் மூலம் தமிழில் இசையமைக்க வருகிறார்.
படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பவர் ஏக்நாத். யாசின் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த மஞ்சு நடனங்கள் அமைக்க, பிரபல சண்டைப் பயிற்சியாளர் பிரகாஷின் புதுமையான சண்டைக்காட்சிகளுடன் உருவாகிக் கொண்டிருக்கும் மறுமுகம் அணியினர் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்குத் தயாராகி வருகினறனர். பானு சந்தர், உமா பத்மநாபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தினை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார் சஞ்சய். சினிமா மீது கொண்ட காதலால் தாமும் ஒரு அதில் ஒரு சிறந்த தயாரிப்பாளராக வர வேண்டும் என்கிற லட்சியத்தில் தனது முதல் படமாக மறுமுகம் படத்தினைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார் சஞ்சய்.