Friday, May 25, 2012

மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறார் ஜோதிகா!

Friday, ,May, ,25, ,2012
சென்னை::நடிகை ஜோதிகாவுக்கும் நடிகர் சூர்யாவுக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். ஜோதிகா ஒரு நல்ல நடிகை அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பது தான் எனக்கு ஆசை என்று திருமணத்தின் போது சொல்லி இருந்தார் சூர்யா. ஆனால் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்க ஜோதிகா விரும்பவில்லை.

மலையாளத்தில் 'சீதா கல்யாணாம்' என்ற படம் தான் ஜோதிகாவின் கடைசி படம். தமிழில் கடைசி படமாக அமைந்தது 'மொழி'. திருமணத்திற்கு பின்னர் சூர்யாவின் அகரம் தொண்டு நிறுவனம் தயாரித்த குரும்படத்திலும், சூர்யாவுடன் சேர்ந்து சில விளம்பரப் படங்களிலும் நடித்தார் ஜோதிகா.

இது பற்றி ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார் சூர்யா. ஜோதிகாவுக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசை இருக்கிறது. விளம்பரப் படங்களில் நடிக்க இரண்டு மூன்று நாட்கள் தான் கால்ஷீட் தேவைப்படுகிறது. ஆனால் சினிமாவில் நடிக்க நிறைய நாட்கள் தேவைப்படும். அத்தனை நாட்கள் குழந்தைகளை விட்டு பிரிந்து இருக்கும் சூழ்நிலை வரும். குழந்தைகளின் நலனுக்காகவே தன் நடிப்பு ஆசையை அப்படியே அழித்துவிட்டார் ஜோதிகா.

ஆனால், காலம் என்ன முடிவு செய்யும் என்பதை நாம் சொல்ல முடியாது. ஒரு சரியான நேரம் அமைந்தால் ஜோதிகா மீண்டும் வெள்ளித்திரையில் வலம் வரும் காலம் வரும் என்று சொல்கிறார் சூர்யா.

கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Friday, ,May, ,25, ,2012
சென்னை::* கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் நடிகைகள், கவர்ச்சி உடையில்தான் வலம் வருவார்கள். ஆனால் இந்திய பாரம்பரிய சேலை அணிந்தும் சுடிதார் அணிந்தும் விழாவில் பங்கேற்கிறார் ஐஸ்வர்யாராய்.

* மம்மூட்டி மகன் துல்கர் சல்மான், உல்லாசம் படம் இயக்கிய ஜேடிஜெர்ரி இயக்கும் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

* முகமூடி படத்தில் நடிக்கும் ஜீவாவுக்கு, புரூஸ்லிக்கு ஸ்டன்ட் காட்சிகள் அமைத்த டோனி லெங்க் ஷியு ஹங் பயிற்சி அளிக்கிறார்.

* கலகலப்பு படத்தை தொடர்ந்து அதன் 2ம் பாகம் இயக்க முடிவு செய்துள்ளார் சுந்தர்.சி.

* த்ரிஷா வெளியேறிய சார் ஒஸ்தாரா தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் காஜல் அகர்வால்.

* அஜீத் நடிக்கும் புதிய படத்தில் நாகர்ஜுனா, ரவி தேஜா, ஜெகபதி பாபு, பிருத்விராஜ்
ஆகியோரில் ஒருவரை நடிக்க வைக்க பேச்சு நடத்துகிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.

* லிங்குசாமி இயக்கிய ‘சாமி’ படத்தை இந்தியில் ரீமேக் செய்து இயக்குகிறார் கே.எஸ்.ரவிகுமார். அமிதாப், சஞ்சய் தத் நடிக்க உள்ளனர்.

* ‘மத கஜ ராஜா’ படத்தில் 3 வேடத்தில் நடிப்பதாக இருந்த விஷால் கேரக்டர் ஒரு வேட கேரக்டராக மாற்றப்பட்டிருக்கிறது.

* தமிழ் படங்களைவிட மலையாள படங்களில்தான் விதவிதமான வேடங்களில் நடிக்க சந்தியாவுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கிறதாம். தற்போது ‘மை டியர் மம்மி’ என்ற மலையாள படத்தில் நடிக்கிறார்.

* ‘இசை’ படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா, ரூ. 10 லட்சம் செலவில் கீபோர்ட் செட் வாங்கி அலுவலகத்தில் வைத்துள்ளார்.

தயாரிப்பாளர்கள் புறக்கணித்தனர்: சோனியா அகர்வால் வருத்தம்!!!

Friday, ,May, ,25, ,2012
சென்னை::படத்தை முடித்துக் கொடுத்ததும் என்னை புறக்கணித்துவிட்டனர் என்றார் சோனியா அகர்வால். இதுபற்றி அவர் கூறியதாவது: மலையாளத்தில் நான் அறிமுகமான ‘கிருஹநாதன்‘ படம் ரிலீஸ் ஆகிவிட்டது. ஆனால் அதுபற்றி யாருக்குமே தெரியவில்லை. ரிலீஸுக்கு ஒரு நாளைக்கு முன்புதான் என்னிடம் தகவல் தெரிவித்தனர். மிகவும் குறுகிய அவகாசமே இருந்ததால் கேரளா செல்ல முடியவில்லை. இது நல்ல படம். பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஸ்கிரிபட். ஒரு குடும்பத்தின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கும் பொறுப்புள்ள பெண்ணின் கதை.

இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி மாற்றி கூறப்பட்டதால் பட குழுவே குழப்பத்தில்தான் இருந்தது. முதலில் மார்ச் மாதம் ரிலீஸ் என்று தயாரிப்பாளர் என்னிடம் உறுதி அளித்தார். பின்னர் ஏப்ரல் மாதத்துக்கு மாற்றப்பட்டது. கேரளாவில் சிறந்த தியேட்டர்கள் கிடைப்பது கடினம். அதைவிட கடினம் உண்மையான ஒரு தயாரிப்பு குழு அமை வது. எந்தவொரு படமாக இருந்தாலும் அதற்கு விளம்பரம் அவசியம். விளம்பரம் இல்லாத படம் அதை கொல்வதற்கு சமம். இதுவரை என்னை படம் பார்க்கக்கூட அழைக்கவில்லை. அதற்காக காத்திருக்கப் போவதில்லை. விரைவில் கேரளா சென்று அப்படத்தின் இறுதி நிலை என்ன என்பதை அறிவேன். இவ்வாறு சோனியா அகர்வால் கூறினார்.

மாப்பிள்ளை பார்க்கிறார்களா? அசின் பதில்!!!

Friday, ,May, ,25, ,2012
அசினுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்களா?’ என்பதற்கு அவரே பதில் அளித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது: பாலிவுட்டில் நான் நடித்த படங்களில் ‘கஜினி’, ‘ரெடி’, ‘ஹவுஸ்புல் 2’ ஆகிய படங்கள் ரூ.100 கோடி வசூலை தாண்டியது. இந்த 3 படங்களும் 100 கோடி வசூல் பட்டியலில் இடம் பிடித்ததை அறிந்து த்ரில்லான அனுபவம் ஏற்பட்டது. இது அதிர்ஷ்டம்தான். நல்ல கலைஞர்களு டன் பணியாற்றியதற்கு கிடைத்த பலன். இதெல்லாம் பாலிவுட்டில் என் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது. என் படங்கள் கோடிகள் சம்பாதித்தது என்பதில் இருக்கும் சந்தோஷத்தைவிட பெரும்பாலான மக்களை சந்தோஷப்படுத்தி இருக்கிறேன் என்பதுதான் முக்கியம். ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தால் மற்ற எல்லாம் தேடி வரும். புதிய தலைமுறையினருடன் பணியாற்ற வேண்டும் என்று எண்ணுகிறேன். அது விரைவில் நிறைவேறும்.

‘அதிகமாக உங்களை முன்னிறுத்திக்கொள்வதில்லையே’ என்கிறார்கள். அது உண்மைதான். நான் தென்னிந்தியாவில் இருந்து வருகிறேன். அங்கு தன்னைத்தானே பிரபலப்படுத்தி மார்க்கெட் ஏற்படுத்திக்கொள்ளும் கலாசாரம் கிடையாது. எனவேதான் அதில் ஆர்வம் காட்டுவதில்லை. வெற்றி வரும்போது அதை பெரிய அளவில் கொண்டாடாமல் அடக்கமாக இருக்க விரும்புகிறேன். என்னுடைய உழைப்பைத்தான் ரசிகர்கள் வியந்து பாராட்டுவார்கள் என்பதில் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன். என்னுடைய குடும்பத்தினர் எனக்கு பின்பலம். போதுமான சுதந்திரத்தை எனக்கு அளித்திருக்கின்றனர். வீட்டில் ஒரு நடிகையாக என்னை பார்ப்பதில்லை. அதுபோல் நடந்துகொள்ளும் அளவுக்கு என்னை அவர்கள் வளர்க்கவில்லை. அதேபோல் அவர்களும் ஷூட்டிங்கிற்கு வரமாட்டார்கள். ‘உங்களுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்களா?’ என்கிறார்கள். நல்ல மனிதரையும், நல்ல ஸ்கிரிப்டையும் எதிர்பார்க்கிறேன். இதுவரை நல்ல ஸ்கிரிப்ட் கிடைத்து வருகிறது. நேரம்தான் எனக்கேற்ற நல்ல மாப்பிள்ளையை தீர்மானிக்கும்.

தல-யா‌ல் தடுமா‌றிய இய‌க்க‌ம்!!!

Friday, ,May, ,25, 2012
ஒரு படம் முடித்த பிறகு ஹீரோக்கள் ‌ரிலாக்ஸாக வெளிநாடு ரவுண்ட் அடிப்பார்கள் என்ற மெத்தனத்தில் தல-யின் அடுத்தப் படத்துக்கான ஸ்கி‌ரிப்டை ச‌ரியாக டெவலப் செய்யவில்லையாம் விஷ்ணுமயமானவர்.

ஆனால் விடுமுறை எதுவும் எடுக்காமல் நான் ரெடி என்று வந்து நின்றிருக்கிறார் நடிகர். ஆடிப்போன இயக்குனர் அவசர அவசரமாக இப்போது ஸ்கி‌ரிப்ட் வேலையை முடுக்கிவிட்டிருக்கிறார். இவரது சோம்பேறித்தனத்தால் படப்பிடிப்பு தள்ளிப் போயிருக்கிறது.

உருகிப்போன பகலவன்!!!

Friday, ,May, ,25, ,2012
சீமான் இயக்கத்தில் விஜய் பகலவன் என்ற படத்தில் நடிக்கயிருப்பதாக பல மாதங்களாகச் சொல்லி வருவது அனைவருக்கும் தெ‌ரிந்திருக்கும். ஏன், அந்த விஷயம் மறந்தும்கூட போயிருக்கும். அந்த இத்துப்போன விஷயம் இப்போது மீண்டும் அச்சுக்கு வந்திருக்கிறது.

சீமான் பகலவன் படத்தை இயக்குகிறார். ஆனால் ஹீரோ விஜய் அல்ல. டைட் ஷெட்யூல் காரணமாக அவர் படத்தில் நடிக்கவில்லையாம். மீடியாக்களுக்கு தெ‌ரிந்த இந்த விஷயம் சீமானுக்கு இப்போதுதான் தெ‌ரிந்திருக்கிறது. பகலவனை தயா‌ரிப்பதாக இருந்த தாணுக்கு துப்பாக்கியை தயா‌ரிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் பகலவன் குறித்து அவர் வாயே திறக்கவில்லை. அதுதான் வட கிடைச்சிடுச்சே.

பகலவன் கதைக்கு ஆர்யா முதல் ‌ஜீவா வரை பலரு‌ம் பொருத்தமாக இருப்பார்கள் ஆனாலும் ‌ஜீவா கொஞ்சம் ஸ்பெஷல் என்று விசாலமான வலையாக வீசியிருக்கிறார் செந்தமிழன். மீன் சிக்குகிறதா பார்ப்போம்.

நடிகர் திலீப் மரணம்!!!

Friday, ,May, ,25, ,2012
நடிகர் திலீப் உடல் நலக்குறைவால் இன்று மரணமடைந்தார்.

தமிழ் திரையுலகில் 1980களில் முன்னணி நடிகராக இருந்தவர் திலீப். கமலுடன் வறுமையின் நிறம் சிவப்பு, தூங்காதே தம்பி தூங்காதே படங்களில் நடித்தார். ரஜினியுடன் வள்ளி படத்தில் நடித்தார். விசு இயக்கிய பெரும்பான்மை படங்களில் திலீப் இருந்தார்.

சம்சாரம் அது மின்சாரம், பெண்மணி அவள் கண்மணி, மாப்பிள்ளை படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த திலீப் பின்னர் குடும்பத்தோடு மைசூருக்கு குடிபெயர்ந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

சிறுநீரக கோளாறும் இருந்தது. உடனடியாக அவரை மைசூரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வந்தார்கள். நேற்று உடல்நிலை மோசமானது. திடீர் மாரடைப்பும் ஏற்பட்டது. டாக்டர்கள் திலீப் உயிரை காப்பாற்ற தீவிரமாக போராடியும் பலனின்றி இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 52.

திலீப்புக்கு ஹேமா என்ற மனைவியும், பவ்யா (20) என்ற மகளும், மவுரியா (16) என்ற மகனும் உள்ளனர். திலீப் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக மைசூரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது.

நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இறுதி சடங்கு மைசூரிலேயே நடக்கிறது.

கர்நாடகத்தைச் சேர்ந்த இவர் சமீபகாலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் சொந்த ஊரான மைசூரில் இன்று அவர் காலமானார்.

'விஸ்வரூபத்தில் கிராபிக்ஸ் பேசப்படும்'!!!

Friday, ,May, ,25, 2012
விஸ்வரூபம் படத்தில் கஷ்டப்பட்டு அருமையாக கிராபிக்ஸ் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாசனின் தெனாலி, ஆளவந்தான், உன்னைப் போல் ஒருவன் ஆகிய படங்களில் பணியாற்றியவர் மதுசூதனன். அவர் தற்போது விஸ்வரூபம் படத்தின் மூலம் 4வது முறையாக கமலுடன் இணைந்து பணியாற்றுகிறார். விஸ்வரூபம் படத்தில் கிராபிக்ஸ் காட்சி மேற்பார்வையாளராக உள்ளார். அவர் ஹாலிவுட் படங்களிலும் பணியாற்றியவர்.

இந்நிலையில் அவர் விஸ்வரூபம் குறித்து கூறுகையில்,

படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. எது கிராபிக்ஸ், எது நிஜம் என்று தெரியாத அளவுக்கு உருவாக்கியுள்ளோம். கிராபிக்ஸ் காட்சிகள் படத்தின் கதையையோ, இயல்பையோ பாதிக்காத அளவில் அமைந்துள்ளன.

இந்த படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு பணிபுரிந்துள்ளோம். வேலை அதிகம் இருந்ததாலேயே படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

ஸ்பைடர்மேன் படத்தில் பணியாற்றியதால் என்னால் தசாவதாரம் படத்தில் பணியாற்ற முடியவில்லை. அந்த குறை விஸ்வரூபம் மூலம் தீர்ந்தது. இது நிச்சயமாக ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருக்கும் என்றார்
.

ஜிம்மில் தவம் கிடக்கும் பரத்!!!

Friday, ,May, ,25, 2012
நமது காதல் கதாநாயகன் பரத்தை சில நாட்களாக பார்க்க முடியாமல் போய்விட்டது. அவரது மறுபிரவேசம் மிக நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக தற்போது கடினமாக உழைத்து வருகிறார் பரத்.

சசி இயக்கி வரும் 555 படம் ஆக்சன் படமாக அமைந்துள்ளதால், அதற்காக தனது உடலை கட்டுக்கோப்பாக உருவாக்கி வருகிறார் பரத்.

சசி தற்போது இயக்கி வரும் படம் நிச்சயம் எனக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக இருக்கும் என்று நம்புகிறேன். சசியின் கதை மிக அருமையானது. அவர் என்ன சொல்கிறாரோ அதைச் செய்வேன். தற்போது படத்தின் கதைக்கு 6 பேக்ஸ் தேவைப்படுகிறது. அதனால் ஜிம்மில் கடுமையாக உழைத்து வருகிறேன் என்கிறார்.

இப்படத்தில் பரத்திற்கு ஜோடியாக சாந்தினி நடிக்கிறார். இப்படத்திற்கான சில முக்கியக் காட்சிகள் மலேசியாவில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் ஆட்டிஸ்டுகளை விபச்சாரத்தி்ல் தள்ளிய 'கோலங்கள்' துணை இயக்குனர் கைது!

Friday, ,May, ,25, 2012
சென்னை::கோலங்கள் மெகா சீரியலின் துணை இயக்குனர் அன்பு ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடிக்கும் இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் வெள்ளித்திரை மற்றும் சின்னதிரையில் சிறு, சிறு கதாபாத்திரங்களில் வந்து போகும் இளம் பெண் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் பணத்திற்காக பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இந்த தொழில் ஈடுபடுபவர்களை தொடர்பு கொண்டனர். அவர்களும் போலீசாரை வடபழனி சரவணபவன் ஹோட்டல் அருகே வந்து பெண்ணை அழைத்துச் செல்லுமாறு தகவல் கொடுத்துள்ளனர்.

யூனிபார்மில் போனால் வேலைக்கு ஆகாது என்று நினைத்து மஃப்டியில் சென்ற போலீசார் குறிப்பிட்ட இடத்தை அடைந்தனர். அங்கு இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக அவரை அன்பு என்பவர் அங்கு அழைத்து வந்துள்ளார்.

போலீசார் அந்த இளம் பெண்ணை மீட்டு, அன்புவை கைது செய்தனர். அன்புவிடம் நடத்திய விசாரணையில் அவர் கோலங்கள் உள்ளிட்ட மெகா தொடர்களில் துணை இயக்குனராகவும், மேடை கச்சேரிகளில் நடன இயக்குனராகவும் பணியாற்றியது தெரிய வந்தது.

விஜய்க்கு என்ன 17 வயசா? பிரபுதேவாவை கேட்ட அக்ஷய் குமார்!!!

Friday, ,May, ,25, 2012
பிரபுதேவா இயக்கும் இந்தி படமான ரவுடி ரத்தோரில் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட வந்த இளைய தளபதி விஜயை பார்த்த அக்ஷய் குமார் அவருக்கு என்ன 17 வயதா என்று கேட்டுள்ளார்.

சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் பிரவுதேவா இயக்கி வரும் இந்தி படம் ரவுடி ரத்தோர். நம்ம கார்த்தி நடித்த சிறுத்தையின் ரீமேக். இதில் அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா நடிக்கின்றனர். இதில் ஒரு பாடலுக்கு இளைய தளபதி விஜய் நச்சுன்னு ஆடியுள்ளார் என்று நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டோம்.

ஆனால் கோலிவுட்டில் பெரிய ஹீரோவான விஜயை எப்படி ஒரு பாட்டுக்கு வந்து ஆடுங்க என்று சொல்வது என்று பிரபுதேவா முதலில் தயங்கினாராம். பிறகு சரி கேட்டுத் தான் பார்ப்போம் என்று விஜயிடம் கேட்டுள்ளார். பிரபுதேவா சற்றும் எதிர்பாராவிதமாக ஓ.கே. சொன்ன விஜய் அடுத்த 1 மணி நேரத்தில் ஷூட்டிங் ஸ்பாட் வந்துவிட்டாராம்.

விஜயை பார்த்தவுடன் படத்தின் ஹீரோ அக்ஷய்க்கு ஒரே ஆச்சரியமாம். உடனே வந்து விஜயை ஆரத் தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதன் பிறகு பிரபுதேவாவைப் பார்த்து விஜயக்கு என்ன 17 வயசா என்று அக்ஷய் கேட்டுள்ளார்.

இது குறித்து பிரபுதேவா கூறுகையில், இந்த பாடல் மூலம் விஜயை பாலிவுட்டில் அறிமுகம் செய்ய முயற்சிக்கவில்லை. அவரை யாரும் பாலிவுட்டுக்கு சிபாரிசு செய்யத் தேவையில்லை. பாலிவுட்டே அவரை வரவேற்கும் என்றார்.