Friday, February 10, 2012

நயன்தாரா பணத்தை 'ஆட்டயப் போட்டுட்டு' அம்போன்னு விட்டுட்டார் பிரபுதேவா!

நயன்தாராவிடம் எக்கச்சக்க பணத்தை பிடுங்கிக் கொண்டு, இப்படி அம்போன்னு ஏமாத்திட்டாரே, என பிரபு தேவாவுக்கு நயன்தாராவின் குடும்பத்தினர் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நயன்தாரா - பிரபு தேவா காதல் அத்தியாயம் முடிந்து, இப்போது துரோகத்தைப் பட்டியலிடும் அத்தியாயம் தொடங்கியுள்ளது.

தன்னைக் கல்யாணம் செய்து கொள்வதாகக் கூறிவிட்டு, வேறு பெண்ணுடன் பிரபு தேவா நெருக்கமாகிவிட்டதால் இந்தப் பிரிவு வந்ததாக நயன்தாரா தரப்பு கூறுகிறது.

இந்த திருமணத்துக்காகவே நயன்தாரா சினிமாவுக்கு முழுக்கு போட்டார். இந்துவாகவும் மதம் மாறினார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிரபுதேவா திருமணத்துக்கு தயாராக இல்லை என்பது அவருக்கு முழுமையாகத் தெரிந்ததும், விலகி வந்து சினிமாவில் பிஸியாகிவிட்டார்.

இதற்கிடையில் நயன்தாரா குடும்பத்தினர் பிரபு தேவா மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். நயன்தாராவின் ஊரான கேரள மாநிலம் திருவல்லாவில் வசிக்கும் அவரது சித்தி, சித்தப்பா மற்றும் உறவினர்கள் கூறுகையில், "பிரபுதேவா எங்கள் குடும்பத்து பெண் நயன்தாராவை ஏமாற்றி விட்டார். அவள் நாங்கள் தூக்கி வளர்த்த பெண்.

அவள் நிலைமை இந்த அளவு மோசமாகும் என்று எதிர்பார்க்கவில்லை. நயன்தாராவுக்கு பிடிவாத குணம் அதிகம் என்று சொல்வதெல்லாம் தவறு. அவள் ஒரு அப்பாவி. யாரையும் எளிதில் நம்பி ஏமாந்துவிடுவாள். முதலில் சிம்புவிடம் ஏமாந்தாள். இப்போது பிரபு தேவாவிடம் ஏமாந்து போனாள்.

சிம்பு 'சுட்ட' பணம்!

சிம்பு வல்லவன் படம் எடுத்த போது பண நெருக்கடி ஏற்பட்டது. அப்போது அவருக்கு நயன்தாரா உதவினார். ஆனாலும் சிம்பு ஏமாற்றி விட்டார்.

அவரை பிரிந்து பிரபுதேவாவிடம் வந்ததும் இனியாவது சந்தோஷமாக இருப்பாள் என்று எதிர்பார்த்தோம். இங்கும் அவள் நிலைமை பரிதாபமாகி உள்ளது. பிரபுதேவாவை நயன்தாரா ரொம்ப நம்பினாள்.

ஆட்டயப் போட்ட' பிரபு தேவா!

ரம்லத்தை பிரபுதேவா விவாகரத்து செய்வதற்கு பணம் தந்தது யார் என்பது அவரவர் மனசாட்சிக்கு தெரியும். பிரபுதேவா இயக்கிய எங்கேயும் காதல் படத்துக்காகவும் நயன்தாரா பணம் பறி போனது. அவர்களுக்கு பணம்தான் முக்கியமாக இருந்ததே தவிர நயன்தாராவின் பாசம் அல்ல. நயன்தாரா இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று சொன்னதுதான் அவர்களுக்கு ஏமாற்றமாகிவிட்டது.

எல்லா பணத்தையும் ஏமாற்றி வாங்கிவிட்டனர். இப்போது எதுவும் இல்லை என்று தெரிந்ததும் கழற்றி விட்டுவிட்டார்கள். நயன்தாரா சினிமாவை விட்டு வந்தால் எங்கள் குடும்பத்திலேயே நல்ல பையனை பார்த்து திருமணம் செய்து வைக்க தயாராக உள்ளோம்," என்றனர்.

மலையாள நடிகருடன் பாவனா காதலா?

சிசிஎல் கிரிக்கெட் மூலம் பிரபலமான மாடலும், நடிகருமான ராஜீவ் பிள்ளையை பாவனா காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிசிஎல் கிரிக்கெட்டில் இம்முறைதான் கேரள அணி அடியெடுத்து வைத்துள்ளது. மோகன்லால் தலைமையிலான இந்த அணியில் பாலா, ராஜீவ் பிள்ளை, சைஜு குருப் உட்பட நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். கேரள அணியின் பிராண்ட் அம்பாசிடர்களாக பாவனா மற்றும் லட்சுமிராய் உள்ளனர். கேரள அணி விளையாட செல்லும் இடங்களுக்கெல்லாம் சென்று வீரர் களை மைதானத்தில் உற்சாகப்படுத்துவது இவர்களது வேலை. கேரள அணியின் கேப்டனாக மோகன்லால் இருந்தாலும் இந்த அணியிலுள்ள ராஜீவ் பிள்ளை தான் தற்போது சூப்பர் ஸ்டாராக உள்ளார்.

போட்டியில் இரண்டு முறை கேரளா வெற்றி பெற்றபோதும் இவர்தான் 'மேன் ஆப் தி மேட்ச்' ஆனார். சிறந்த மாடலான இவர் பல் டாக்டர். கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு உறவினர். சமீபத்தில் சில மலையாள படங்களில் நடித்துள்ள ராஜீவ்வை பாவனா தீவிரமாக காதலித்து வருவதாக கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பாவனாவிடம் கேட்டபோது, "கிரிக்கெட் போட்டியின்போதுதான் ராஜீவ்வை எனக்கு தெரியும். அவருடன் பேசினேன், பழகினேன். உடனே அது காதல் என்றாகிவிடுமா என்ன? எனக்கு யாருடனும் காதல் இல்லை. இது தவறான தகவல்" என்றார்.

இளையராஜா பங்கேற்ற 'ஜேசுதாஸ் 50': ஐஸ்வர்யா மூலம் ரஜினி வாழ்த்து!

பிரபல பாடகர் கே ஜே ஜேசுதாஸ் பின்னணி பாட ஆரம்பித்து 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இதைக் கொண்டாடும் வகையில் திரை இசை மற்றும் சாஸ்திரீய இசை மேதைகள் பங்கேற்ற 'ஜேசுதாஸ் 50' பொன்விழா நிகழ்ச்சி சமீபத்தில் கொச்சியில் நடந்தது. இசைஞானி இளையராஜா, இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா உள்பட இசைத் துறையின் முக்கிய பிரபலங்கள் கலந்து விழாவில் கொண்டனர்.

இந்த விழாவுக்குச் செல்ல முதலில் முடிவெடுத்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினியால், தவிர்க்க முடியாத காரணங்களால் செல்ல முடியவில்லை. தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவை தன் சார்பில் அனுப்பி வைத்தார்.

விழாவில் பங்கேற்ற அவரை மிகுந்த அன்போடு வரவேற்றனர் ஜேசுதாஸும் இளையராஜாவும்.

"இந்த விழாவுக்கு எப்படியும் வந்துவிட வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை. ஜேசுதாஸ் குரல் என் படங்களில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. அவரது இசைப் பயணம் மேலும் தொடர வாழ்த்துகள்" என்று ரஜினி தன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். ரஜினியின் வாழ்த்துக் கடிதத்தை ஐஸ்வர்யா வாசித்த போது, அரங்கம் கைதட்டி மகிழ்ந்தது.

கொச்சியிலிருந்து சென்னை திரும்பும்போது இளையராஜா - ஜேசுதாஸ் பக்கத்தில் அமர்ந்து வரும் வாய்ப்பு கிடைத்ததாகவும், இரு தந்தைகளின் அன்பான பாதுகாப்பில் வந்தது போல உணர்ந்ததாகவும் பின்னர் ஐஸ்வர்யா குறிப்பிட்டிருந்தார்.

கிளிப்பிங்ஸ்!!!

Friday, February 10, 2012
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துடன் மீண்டும் நெருக்கமாகிவிட்டார் லட்சுமிராய்.

விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் அஜீத், ஆர்யாவுடன் நயன்தாரா நடிக்கிறார்.

தனது மேக்கப் மேன் தீபக் சாவன்த் தயாரிக்கும் போஜ்புரி படத்தில் மனைவி ஜெயா பாதுரியுடன் சிறு வேடத்தில் நடிக்கிறார் அமிதாப்.

கமல்ஹாசன் நடிக்கும் தலைவன் இருக்கிறான் படத்தை இயக்க ஷங்கரிடம் பேச்சு நடக்கிறது.

மலையாள டிராபிக் படத்தின் தமிழ் ரீமேக்கில் சரத்குமார், பிரகாஷ் ராஜ் நடிக்க உள்ளனர்.

ஹீரோவாக நடிக்கும் படமே ரீ என்ட்ரியாக இருக்கும் என்று கூறும் வடிவேலு, உடல்நலம் குன்றிய தனது அம்மாவை அருகிலிருந்து கவனித்து வருகிறாராம்.

தமிழில் நீண்டநாள் தலைகாட்டாமல் இருக்கும் செந்தில், மலையாளத்தில் ‘பர்ஸ்ட் பீச் படத்தில் நடிக்கிறார்.

துப்பாக்கி, புதிய திருப்பங்கள் படங்களில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார் இந்தி நடிகர் கவுதம் குருப்.

கோச்சடையான் படத்தில் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார்.