Tuesday, February 7, 2012

வயதான ஹீரோக்களுடன் ஜோடியாக நடிப்பேன்: திரிஷா!

ரஜினி, கமல் போன்ற வயதான ஹீரோக்களுடன் இளம்நாயகிகள் ஜோடியாக நடிக்கின்றனர். ஆனால் கரீனாகபூர் போன்ற சில நடிகைகள் தங்களை விட வயது குறைந்த கதாநாயகர்களுடன்தான் நடிப்பேன் என்று கூறிவருகின்றனர். திரிஷா கதைதான் முக்கியம். வயது பிரச்சினை அல்ல என்று கூறினார்.

அவர் தற்போது ஜூனியர் என்.டி.ஆர்.ஜோடியாக நடித்து வருகிறார். திரிஷா கூறும்போது நான் எப்போதுமே கதையில்தான் கவனம் செலுத்துவேன். கதாநாயகர் வயதானவரா, இளையவரா என்று கவலைப்படுவது இல்லை என்றார். விண்ணைத்தான்டி வருவாயா படத்தில் திரிஷா தன்னை விட வயது குறைந்த சிம்புவுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

முயல் பட பூஜை சென்னையில் நடந்தது!

சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் போட்டோ மற்றும் வீடியோ கிராபர்ஸின் பி அன்ட் வி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் முயல் பட பூஜை மற்றும் இசை குறுந்தகடு வெளியிட்டு விழா நடைபெற்றது.

இதில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன் கலந்து கொண்டு இசை குறுந்தகடினை வெளியிட்டார். இதனை தொடர்ந்து பட பூஜை ஸ்டூடியோவில் நடந்தது. சிறப்பு விருந்தினராக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் செயலாளர் சிவா, தலைவர் ராமதுரை, சங்க மாநில தலைவர் மோகன்ராஜ், பொதுச்செயலாளர் பிரசன்னா, விநியோகஸ்தர்கள் சங்க செயலாளர் கலைப்புலி சேகரன், கலைமாமணி யோக ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இதில் கடலூரை சேர்ந்த முத்து கலர் லேப் உரிமையாளர் முத்து, சிவக்குமார், கணேஷ், பழனிகுமார், ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இப்படத்தில் கதாநாயகனாக புழல், கண்டுபிடி, கண்டுபிடி படத்தில் நடித்த முரளி, கதாநாயகியாக பேராண்மை படத்தில் நடித்த சரண்யா ஆகியோர் நடிக்க உள்ளனர். இவர்களுடன் ராஜ்குமார், பிரபு, ஷிவானி, ஐஸ்வர்யா, மீராகிருஷ்ணன், நெல்லை சிவா, முத்துக்காளை, ரஞ்சினி மற்றும் பலர் நடிக்கின்றனர். இதன் திரைக்கதை மற்றும் வசனம் எஸ்.பி.எஸ். குகன் மேற்கொள்கிறார்.1

சினிமாவுக்கே முதலிடம்: அரசியலில் என்னை தொடர்புபடுத்த வேண்டாம்- நடிகர் வடிவேலு ஆவேசம்!

விஜயகாந்தும், வடிவேலும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் மோதிக்கொண்டனர். இதையடுத்து விஜயகாந்த் கட்சியை எதிர்க்க வடிவேலு தி.மு.க. அணியில் சேர்ந்து பிரசாரம் செய்தார். தேர்தலில் தி.மு.க. தோற்றதால் வடிவேலு அதிர்ச்சியானார். புதுப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார்.

சமீபத்தில் அ.தி.மு.க. வுக்கும், விஜயகாந்துக்கும் தகராறு ஏற்பட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க.வுடன் சமரசம் ஆகி மீண்டும் சினிமாவில் நடிக்க தீவிரமாக வடிவேலு முயற்சிப்பதாக செய்திகள் வெளியாயின. அ.தி.மு.க.வில் இணையப்போவதாகவும் கிசுகிசுக்கள் வந்துள்ளது.

இதுகுறித்து வடிவேலுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

எனது தாயை கவனித்துக் கொள்வதுதான் இப்போது எனக்கு முக்கியம். அவர் உடல்நலம் குன்றி இருக்கிறார். விரைவில் குணமடைந்து விடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. நான் முதலில் ஒரு நடிகன். மக்களை சந்தோஷப்படுத்துவதை தொடர்ந்து செய்வேன். இந்தநேரத்தில் அரசியலில் என்னை சம்பந்தப்படுத்தி பேசுவதை நான் விரும்பவில்லை. அரசியலோடு என்னை இணைத்து வெளியாகும் செய்திகள் மூலம் கற்பனைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

பொதுவாக எல்லாவற்றுக்கும் நேரம் முக்கியம். சிலருக்கு அந்த நேரம் சாதகமாக இருக்கும். இன்னும் சிலருக்கு எதிராக இருக்கும். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. என்னுடைய முக்கியத்துவம் எல்லாம் சினிமாவில் நடிப்பதுதான். அதில்தான் முழு கவனத்தையும் செலுத்துகிறேன்.

நான் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த படம் திரையுலகில் எனது மறுபிரவேசத்தை பறைசாற்றுவதாக இருக்கும்.

இவ்வாறு வடிவேலு கூறினார்.

தமிழ் கற்கிறார் ரிச்சா!!!

தமிழில் தனுஷ் ஜோடியாக 'மயக்கம் என்ன', சிம்பு ஜோடியாக, 'ஒஸ்தி' படங்களில் நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய். தற்போது பெங்காலி படத்தில் நடித்து வரும் அவர் கூறியதாவது: பெங்காலி படமான 'சிங்கா'வின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் நடந்து வருகிறது. இது தமிழில் வெளியான ‘சிறுத்தை’ படத்தின் ரீமேக். தென்னிந்திய மொழிகளில் நடித்துவிட்டு எனது தாய்மொழியில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போது எனது உதவியாளர் மூலமாக தமிழ் கற்று வருகிறேன். அதாவது இந்தி வழியாக தமிழ். தெரியாத ஒரு மொழியை கற்றுக்கொள்வது சிறப்பாகவே இருக்கிறது. மொழி தெரிந்து நடிக்கும்போது இன்னும் சிறப்பாக உணரலாம். தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். தமிழில் நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறது. எனது இந்தி அறிமுகம் சுசி கணேசன் படம் மூலமாக நிறைவேறியிருக்க வேண்டும். கால்ஷீட் பிரச்னையால் அது நடக்கவில்லை. விரைவில் வேறு படம் மூலமாக அறிமுகமாவேன் என நினைக்கிறேன்.

மணிரத்னம் பட புது ஹீரோயின் : ரூ.25 கோடியில் படம் தயாரிக்கிறார்!

சென்னை: மணிரத்னம் படத்தில் நடிக்கும் புது ஹீரோயின் ரூ25 கோடி செலவில் சொந்த படம் தயாரிக்கிறார். ‘ராவணன்‘ படத்தையடுத்து மணிரத்னம் இயக்கம் புதுபடம் ‘கடல்’. இதில் கார்த்திக் மகன் கவுதம் ஹீரோவாக அறிமுகமாகிறார். சமந்தா, லட்சுமி மன்சூ ஹீரோயின்கள். லட்சுமி மன்சூ தெலுங்கு நடிகர் மோகன்பாபு மகள். அவர் கூறியதாவது: மணிரத்னம் படங்களை பார்த்து வளர்ந்தவள். அவர் இயக்கிய இதயத்தை திருடாதே (கீதாஞ்சலி) மிகவும் பிடித்த படம். சிறுவயதிலிருந்து நடிக்கிறேன்.

பின்னர் அமெரிக்கா சென்று திரைப்பட கல்வி படித்தேன். சமீபத்தில் மணிரத்னத்திடமிருந்து அழைப்பு வந்தது. பயந்தபடி சென்றேன். முதலில் பயத்தை தெளியவைத்து அவர் இயக்கும் ‘கடல்’ என்ற புதிய படத்தில் ஹீரோயின் வேடம் அளித்தார். இதற்கிடையில் தமிழ், தெலுங்கில் சொந்த படம் தயாரிக்கிறேன். தமிழ் டைட்டில் ‘மறந்தேன் மன்னித்தேன்’. ஆதி, டாப்ஸி ஜோடி. தெலுங்கில் ‘குண்டல்லு கோதாரி’ என்ற பெயரில் தயாராகிறது. குமார் நாகேந்திர இயக்கம். இதைத் தொடர்ந்து எனது சகோதரர் மனோஜ் நடிக்கும் படம் தமிழ், தெலுங்கு இருமொழியில் ரூ. 25 கோடி செலவில் தயாரிக்கிறேன். ராஜா டைரக்ஷன்.

எனது தந்தை மோகன் பாபுவும் ரஜினியும் நெருங்கிய நண்பர்கள். ரஜினி சாரை சமீபத்தில் சந்தித்தேன். எனக்கு வாழ்த்து கூறினார். தெலுங்கில நான் நடித்த ‘அனகனகா ஓ தீருடு’ என்ற படத்தை பார்த்து பாராட்டினார். தொடர்ந்து நடிப்பு, படத் தயாரிப்பில் ஈடுபடுவேன். ஹாலிவுட் படம் தயாரிக்க வேண்டும் என்பது லட்சியம். இந்தி நடிகர் ஆமிர்கானுடன் நடிக்க மிகுந்த ஆசை. இவ்வாறு லட்சுமி மன்சூ கூறினார்.

டெக்னீஷியன்கள் தயாரிக்கும் படம்!!!

சென்னை:டெக்னீஷியன்கள் இணைந்து தமிழ் படம் தயாரிக்கின்றனர். திரைப்பட ஒளிப்பதிவாளர் எஸ்.பி.எஸ்.குகன். இவர் ஏற்கனவே ‘மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘சனிக்கிழமை சாயங்காலம்‘ என்ற முழுபடத்தையும் ஸ்டில் கேமராவில் ஒளிப்பதிவு செய்து தயாரித்தார். இது லிம்கா மற்றும் எலைட் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது. தற்போது ‘முயல்’ என்ற படத்தை இயக்குகிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது,‘‘ஒரே கல்லூரியில் படிக்கும் 3 நண்பர்கள் படிப்பை முடித்துவிட்டு ஏதாவது ஒரு பிஸினஸ் செய்யலாம் என்று புறப்படும்போது அவர்களது வாழ்க்கையை ஒரு மிகப் பெரிய சம்பவம் புரட்டிப்போடுகிறது.

இதில் பாதிக்கப்படும் அவர்கள் வேறுயாருக்கும் இப்படியொரு சூழ்நிலை வரக்கூடாது அதற்கு என்ன செய்யலாம் என்று திட்டமிட்டு செய்யும் செயல் தான் கதை. ‘புழல்’ படத்தில் நடித்த முரளி ஹீரோ. ‘பேராண்மை’ சரண்யா ஹீரோயின். இப்படமே ஒரு புதுமுயற்சி. இதை போட்டோ மற்றும் வீடியோகிரபர்கள் ஆகிய டெக்னீஷியன்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இதற்காக தமிழ்நாடுமுழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆயிரக்கணக்கான டெக்னீஷியன்களை சந்தித்து அவர்கள் எல்லோரிடமும் முதலீடு பெற்று இப்படம் தயாராகிறது’’ என்றார்.

11 நாட்களில் ‘அக்னிபாத்’ ரூ.100 கோடி வசூல்!!!

மும்பை : நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்த இந்தி திரைப்படம் ‘அக்னிபாத்’ வெளியான 11வது நாளில் ரூ.100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது. 7 நாளில் இந்த சாதனை செய்து சல்மான்கானின் ‘பாடி கார்டு’ தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பாலிவுட் நடிகர் ஹிருத்திக் நடிப்பில் வெளிவந்துள்ள ‘அக்னிபாத்’ திரைப்படம் நாடு முழுவதும் 2,000 முதல் 3,000 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே ரூ.25 கோடி வசூலை குவித்த அந்த படம் 11வது நாளில் ரூ.100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது. முதல் 11 நாட்களில் ரூ.100 கோடி வசூலை தாண்டிய 9வது படம் இது. ஏழே நாட்களில் ரூ.100 கோடி வசூலை குவித்து சல்மான்கானின் ‘பாடி கார்டு’ சாதனை செய்தது. அடுத்ததாக கஜினி (9 நாட்கள்), 3 இடியட்ஸ் (9 நாட்கள்), தபாங் (10 நாட்கள்), கோல்மால் 3 (14 நாட்கள்), ரெடி (15 நாட்கள்) என ரூ.100 கோடி வசூலை தொட்டுள்ளன. பிரின்ட்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, அதிக சிறப்பு காட்சி கள், சினிமா தியேட்டர்களின் அளவு, அதிக கட்டணம் ஆகியவற்றால் குறைந்த நாட்களில் அதிக வசூல் கிடைப்பதாக சினிமா வர்த்தகர்கள் தெரிவித்தனர்.