Friday, March 2, 2012

கேன்ஸ் விழாவின் நேரடிப் போட்டிக்குப் போகிறது கமலின் விஸ்வரூபம்!!!

Friday, March 2, 2012
பொதுவாக கமல் படங்கள் குறித்து எக்கச்சக்க செய்திகள் வரும். ஆனால் விஸ்வரூபம் அதில் விதிவிலக்கு.

கூடுமானவரை இந்தப் படம் குறித்த தகவல்களில் ரகசியம் காத்து வருகிறார் கலைஞானி.

அப்படி தப்பித்தவறி கசிந்துள்ள ஒரு விஷயம்... இந்தப் படத்தை நேரடியாக கேன்ஸ் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவுக்கு அனுப்புகிறார் என்பது.

படத்தின் க்ளைமாக்ஸ் வரை வந்துவிட்ட கமல், அடுத்த ஒருமாதத்துக்குள் படத்தை முடித்து கேன்ஸ் விழாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து கமல் கூறுகையில், "இந்தப் படத்தை கேன்ஸுக்கு அனுப்புவதும் என் நோக்கம்தான். ஆனால் இப்போதே அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க விரும்பவில்லை. குறித்த காலத்துக்குள் படத்தை முடிக்க வேண்டும் என்பதுதான் என் முன் உள்ள சவால்.

கேன்ஸ் பட விழா ஏற்பாட்டாளர் கிறிஸ்டியன் ஜீனுடன் தொடர்பில் இருக்கிறேன். மார்ச் 15-க்குள் படம் தொடர்பான பணிகள் முடிந்துவிடும் என நம்புகிறேன்.

போட்டிப் பிரிவிலேயே விஸ்வரூபத்தைச் சேர்க்கும் முயற்சியில் உள்ளேன். அதற்கேற்ப கேன்ஸ் விழாக் குழுவினர் ஓரிரு நாட்கள் தேதிகளை மாற்றிக் கொள்வதாகக் கூறியுள்ளனர்," என்றார்.

இது மட்டும் நடந்துவிட்டால், கேன்ஸில் சர்வதேச போட்டிப் பிரிவில் நேரடியாகப் பங்கேற்கும் முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை கிடைக்கும். கமலுக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமாவின் கிரீடத்தில் இன்னும் ஒரு சிறகாக அது அமைந்துவிடும்!

புதிய நடிகர்களுக்கு ரஜினி, கமல் வாழ்த்து!!!

Friday, March 2, 2012
நாங்க என்ற படத்தின் மூலம் 10 பிரபலங்களின் வாரிசுகள் நடிகர்களாக அறிமுகமாகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும் தங்கள் வாழ்த்துக்களைக் கூறியுள்ளனர் சூப்பர் ஸ்டார் ரஜினியும் கமல்ஹாஸனும்.

பிரபல பாடகர் மனோ, இயக்குநர் சந்தானபாரதி உள்பட 10 பிரபலங்களின் வாரிசுகளை தனது நாங்க படத்தில் அறிமுகப்படுத்துகிறார் செல்வா.

படத்தில் நடித்தவர்கள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அத்தனைபேருமே சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கமல்ஹாஸனை சந்தித்து வாழ்த்துப் பெற விரும்பினார்கள்.

ரஜினியைச் சந்திக்க மனோ ஏற்பாடு செய்திருந்தார். ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, அனைவரையும் சந்தோஷத்துடன் வரவேற்ற ரஜினி, இயக்குநர் செல்வாவிடம் படத்தின் கதையைக் கேட்டுள்ளார். குறிப்பாக எண்பதுகளின் பின்னணியில் நடக்கும் கதை என்பதைக் கேட்டு, “நல்ல விஷயம். ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்னு தெரியுது… நல்லா வரும். வாழ்த்துக்கள்,” என்று ஆசீர்வதித்துள்ளார்.

கமல்ஹாஸனைச் சந்திக்க இயக்குநர் சந்தான பாரதி ஏற்பாடு செய்திருந்தார். புதியவர்களுக்கு வாழ்த்துச் சொன்ன கமல், புதியவர்கள் குறிப்பாக வாரிசுகள் வருவது நல்லதுதான், என்றாராம்.

தமன்னாவை பற்றி புரளி கிளப்புவதா? தந்தை கோபம்!!!

Friday, March 2, 2012
தமிழில் புதிய படங்கள் ஒப்புக்கொள்ளாத நிலையில் தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தமன்னா. இந்நிலையில் மகேஷ்பாபு நடிக்கும் புதிய தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் கால்ஷீட் குழப்பம் காரணமாக அப்படத்திலிருந்து தமன்னா விலகிவிட்டார். அவருக்கு பதிலாக கன்னட நடிகை அக்ஷரா நடிக்கிறார் என்று டோலிவுட்டில் தகவல் வெளியானது.
இதற்கு தமன்னாவின் தந்தை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘தமன்னா பற்றி சமீபகாலமாக வதந்திகளை பரப்பி வருகிறார்கள். மகேஷ்பாபு படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறுவது தவறு. அந்தப்படத்தில் நடிப்பது உறுதி. ஆனால் மற்ற படங்களில் நடிப்பதால் கால்ஷீட் தருவதில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்தி படத்தில் நடிக்க பேச்சு நடக்கிறது. ரன்பீர் கபூர், அஜய் தேவ்கன் ஆகியோர் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது’ என்றார்.

நடிகை ஷகிலா இன்று நெல்லை கோர்ட்டில் ஆஜராகிறார்!!!

Friday, March 2, 2012
நெல்லை: ரொம்ப காலமாக நிலுவையில் உள்ளஷ ஆபாசப்படத்தில் நடித்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை ஷகிலா இன்று நெல்லை கோர்ட்டில் ஆஜராகிறார்.

பாளையங்கோட்டையில் உள்ள சினிமா தியேட்டரில் கடந்த 2003ம்ஆண்டு ஆகஸ்ட் 27ம்தேதி "இளமை கொண்டாட்டம்' என்ற பெயரில் ஆபாசப்படம் திரையிடப்பட்டது. இந்த படத்தில் அனுமதிக்கப்பட்ட 'அளவை' விட அதிகமாக ஆபாசம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் தியேட்டருக்குள் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையில் ஆபாச படச் சுருள் கைப்பற்றப்பட்டது.

இதுதொடர்பாக தியேட்டர் மேலாளர் பாஸ்கரன், ஆபரேட்டர்கள் பரமசிவன், வசீகரன், ஊழியர்கள் சிவசுப்பிரமணியன், சுப்பிரமணியன், முருகன், மாரிமுத்து, தாமஸ் மற்றும் ஆபாசப்படத்தில் நடித்ததாக நடிகை ஷகிலா, நடிகர் தினேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு நெல்லை ஜே.எம்.1 கோர்ட்டில் நடந்துவருகிறது. வழக்கில் தொடர்புடைய நடிகை ஷகிலா உட்பட 9 பேருக்கும் குற்றப்பத்திரிகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று நெல்லை ஜே.எம்.1 கோர்ட்டில் நடக்கிறது. இந்த வழக்கில் நடிகை ஷகிலா உட்பட குற்றம்சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜராகின்றனர்.

ஷகீலா வருவதையொட்டி கோர்ட்டில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இயக்கத்துக்கு எதிர்ப்பு ஹீரோக்கள் ஜகா!!!

Friday, March 2, 2012
லேடீஸ் அழகை ரசிக்கறதுல எனக்கு தனி ஆர்வம்னு வர்மா இயக்கம் வெளிப்படையா சொல்றாராம்... சொல்றாராம்... தன் படங்கள்ல ஹீரோயினுங்க அழகை வித்தியாசமான கோணத்துல காட்டுறதுக்கு முக்கியத்துவம் தர்றாராம்... இவரோட வெளிப்படையான பேச்சு பிரச்னையை உண்டு பண்ணிடுச்சாம். சில பெண்கள் அமைப்பு வர்மா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிச்சிருக்காம். ஆனா நெருக்கமான ஹீரோயின்கள் அவர் கருத்து சொன்னதுல தப்பில்லைனு ஆதரவு கரம் நீட்றாங்களாம்... நீட்றாங்களாம்...

சமீர ஹீரோயின் பேரை கேட்டால் ஹீரோக்கள் ஜகா வாங்கறாங்களாம்... வாங்கறாங்களாம்... ஹீரோக்கள்கிட்ட அவர் மோதல் போக்கு எதையும் கடைபிடிக்கலையாம். ஆனா ஹீரோக்கள போல தனக்கும் ஆக்ஷன் சீன் வையுங்கன்னு இயக்கத்துக்கிட்ட சீக்ரட்டா சொல்றாராம். சீக்ரெட்டா இவர் சொல்ற விஷயத்த சில இயக்கங்கள் ஹீரோக்கள்கிட்ட போட்டுகொடுக்கறதால சத்தமில்லாம ஹீரோக்கள் எஸ்ஸாகறாங்களாம்... எஸ்ஸாகறாங் களாம்...

ஓல்டு ஈஸ்வரி பாடகிக்கு புதுசா லக் அடிச்சிருக்காம்... அடிச்சிருக்காம்... உசத்தியான படத்துல அவர் பாடின பாட்டுக்கு வரவேற்பு இருந்ததால மத்த இயக்கங்களோட பார்வையும் அவர் மேல விழுந்திருக்காம். சத்தமே இல்லாம அமுங்கிகிடந்த பாடகிக்கு திடீர்னு சான்ஸ் கெடச்சதாலே கட்ட குரல்ல பாட்ற பாடகிங்க பயத்துல இருக்காங்களாம்... இருக்காங்களாம்...

பத்து நாள் விஷாலுக்கு... பத்து நாள் என்டிஆருக்கு - த்ரிஷாவின் கால்ஷீட் மேனேஜ்மென்ட்!!!

Friday, March 2, 2012
த்ரிஷாவுக்குப் படங்களே இல்லை என்று ஒரு பக்கம் செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இதோ கல்யாணம் என்கிறார்கள்.

ஆனால் இரண்டையுமே வெற்றிகரமாகப் பொய்யாக்கி வருகிறார்.

இப்போது அவர் இரண்டு பெரிய படங்களில் படு பிஸி. ஒரு படம் தெலுங்கில். ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக.

இன்னொரு படம் தமிழில் விஷாலுக்கு ஜோடியாக. படத்தின் பெயர் சமரன்.

இரண்டு படங்களும் வெவ்வேறு இடங்களில் படமாக்கப்பட்டு வருகின்றன. எப்படி சமாளிக்கிறார்?

இதுபற்றி த்ரிஷா கூறுகையில், "அது ரொம்ப சிம்பிள்... பத்து நாட்கள் விஷாலுடன் தமிழ் படத்திலும் பத்து நாட்கள் ஜூனியர் என்.டி.ஆருடன் தெலுங்கு படத்திலும் மாறி மாறி நடித்துக் கொடுக்கிறேன். இது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது.

பத்து வருடங்களுக்கு மேல் நடிக்கிறேன். இப்போது வரைக்கும் என் அழகு குறையவே இல்லை என்று பார்த்தவர்கள் சொல்கின்றனர்.

காரணம், அழகை எப்படி பாதுகாக்கவேண்டும் என்ற ரகசியம் எனக்கு தெரியும். அதற்காக நிறைய கஷ்டப்படுகிறேன்.

அதே நேரம் மேக்கப் போடுவதில் ஆர்வம் இல்லை. சினிமா தவிர பொது நிகழ்ச்சிகளுக்கு மேக்கப் இல்லாமல் செல்லவே பிடிக்கிறது," என்றார்.

அப்பா கமல் நாத்திகம்... மகள் ஸ்ருதி ஏழுமலையானிடம் வேண்டுதல்!!!

Friday, March 2, 2012
நடிகர் கமல்ஹாஸனின் நாத்திகவாதம் ஊரறிந்தது. தான் நாத்திகம் என்பதற்காக அவர் மற்றவர் நம்பிக்கையில் குறுக்கிடுவதில்லை.

அதற்கு அவர் குடும்பத்திலிருந்தே ஒரு உதாரணம். கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாஸன் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று நெய்வேத்தியம் செய்து வழிபட்டார்.

கோவிலுக்குள் ஸ்ருதியைக் கண்டதும் ரசிகர்கள் அவரை நெருங்க முண்டியடித்தனர். கைகளை அசைத்து கூச்சலும் எழுப்பினார்கள். ஸ்ருதி அவர்களிடம் அமைதியாக இருக்கும் படி கேட்டுக்கொண்டார். சாமி கும்பிடும் இடத்தில் ஆரவாரம் செய்யக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

வழிபாடு முடிந்து வெளியில் வந்தபோது, கோவிலில் அமைதியை கடைபிடிக்கும்படி ரசிகர்களுக்குக் கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் திருச்சானூரில் உள்ள பத்மாவதி சன்னதிக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அங்கிருந்து காளகஸ்தி கோவிலுக்குப் புறப்பட்டு சென்றார்.

மனைவி லதாவின் பிறந்த நாளைக் கொண்டாடிய ரஜினி!!!

Friday, March 2, 2012
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவி, லதா ரஜினிக்கு இன்று பிறந்த நாள். இன்று வீட்டில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இந்த நாளை கொண்டாடினார் சூப்பர் ஸ்டார்.

ஸ்டெல்லா மாரீஸில் எம்ஏ வரை படித்தவர் லதா. கல்லூரியில் படிக்கும்போது ரஜினியை காதலித்து மணந்தார். சிறந்த குடும்பத் தலைவியாகத் திகழ்கிறார்.

சினிமாவில் ஒரு பின்னணிப் பாடகியாக தன் கேரியரை ஆரம்பித்தார் லதா ரஜினி. ஆனால் அவர் பாடிய முதல் பாடல் ரஜினி படத்தில் அல்ல... கமலின் டிக்டிக்டிக் படத்தில், இளையராஜா இசையில் ஒரு அட்டகாசமான பாடலுடன் தொடங்கினார். அடுத்து அன்புள்ள ரஜினிகாந்தில் கேட்பவரை உருக வைக்கும் 'கடவுள் உள்ளமே...' இவரது குரல்தான்.

அதன் பிறகு, பாடுவதை நிறுத்திவிட்ட லதா, கவனத்தை முழுக்க குடும்பத்தைக் கவனிப்பதிலும், ஆஷ்ரம் பள்ளியின் கல்விப் பணிகளிலும் செலுத்த ஆரம்பித்தார்.

இருந்தாலும் அவ்வப்போது மாணவர்களுக்காக தனி ஆல்பங்கள் பாடினார். மாணவர்களிடம் கடவுள் பக்தி, நல்லொழுக்கம், தமிழ் உணர்வை ஊட்டும் பாடல்கள் அவை.

ஆஷ்ரம் பள்ளியின் ஒவ்வொரு ஆண்டு விழாவிலும் இந்த பாடல்களை மாணவர்கள் பாடுவதைக் காணலாம். ரஜினியின் திரையுலக வெள்ளிவிழாவைக் கொண்டாடும் வகையில் 1999-ல் ரஜினி 25 எனும் ஆல்பத்தையும் உருவாக்கினார்.

இடையில் வள்ளி படத்தில் 'குக்கூ...', 'டிங் டாங்...' என இரு சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடி அசத்தியிருந்தார் லதா ரஜினி (1993). அந்தப் பாடல்கள் அடைந்த வெற்றியால் பல வாய்ப்புகள் அவருக்கு வந்தும், அவற்றை நாசூக்காக மறுத்துவிட்டார். லதா ரஜினி திரையில் பாடிய அனைத்துப் பாடல்களுக்கும் இசைஞானிதான் இசை!

"இந்த உலகில் கஷ்டப்படும் அத்தனை குழந்தைகளையும் அரவணைத்து அன்பு செலுத்த வேண்டும் என்பது என் ஆவல். இறைவன் அதற்கான சக்தியை எனக்குத் தரவேண்டும்," என்பது லதாவின் ஆசை. கல்வித் துறையில் தனது பங்களிப்பை மேலும் விஸ்தரிக்க வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளார்.

அந்த ஆசை நிறைவேறட்டும்!

ராணி ருத்ரமா தேவி வேடத்துக்கு நயன்தாரா - அனுஷ்கா கடும் போட்டி!!!

Friday, March 2, 2012
ஆந்திராவில் ஆட்சி புரிந்த ராணி ருத்ரமா தேவியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இதில் நடிக்க நயன்தாரா, அனுஷ்கா இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட வீரப் பெண் ஜான்சி ராணியை போல் தென்னிந்தியாவில் புகழ்பெற்றவர் ராணி ருத்ரமா தேவி. இவரது வீர, தீர செயல்களை பின்னணியாகக் கொண்டு பீரியட் படம் இயக்குகிறார் தெலுங்கு இயக்குனர் குண சேகர். இந்த படத்தில் ராணி வேடத்தில் நடிக்க அனுஷ்காதான் படக்குழுவின் முதல் சாய்ஸாக உள¢ளார். இது பற்றி அனுஷ்காவிடம் பேசப்பட்டது. தமிழில் விக்ரமுடன் தாண்டவம், சூர்யாவுடன் சிங்கம் 2, கார்த்தியுடன் சுராஜ் இயக்கும் படம் என அனுஷ்கா பிசியாக உள்ளார். அதே நேரம், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள வேடம் என்பதால் ராணி ருத்ரமா தேவி படத்தில் நடிக்கவும் அவர் விரும்புகிறார். இதனால் கால்ஷீட்டை அட்ஜஸ்ட் செய்து இப்படத்தில் நடிப்பது பற்றி அறிவிக்கிறேன் என அனுஷ்கா கூறி உள்ளாராம். இதற்கிடையே இப்படத்தில் நடிக்க தயாரிப்பு நிறுவனத்துக்கு மறைமுகமாக தூது விட்டுள்ளாராம் நயன்தாரா. பிரபுதேவாவுடன் காதல் முறிந்த பின் சினிமாவில் மீண்டும் முழு கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் நயன்தாரா. இதனால் இப்படத்தில் நடித்தால் மீண்டும் தனது பழைய மார்க்கெட்டை பிடிக்கலாம் என்பது அவரது கணிப்பு. எனவே ராணி வேடத்தில் நடிக்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அருந்ததி படத்தில் நடித்ததால், ராணி வேடம் அனுஷ்காவுக்கு பொருந்தும் என குணசேகர் கருதியுள்ளார். சமீபத்தில் சீதை வேடத்தில் நயன்தாரா நடித்திருப்பதால் அவருக்கும் இந்த வேடம் பொருந்தும் என திரையுலகினர் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரம், அனுஷ்கா நடிப்பதாக கூறியுள்ள படத்துக்கு நயன்தாரா தூது விட்டிருப்பதால் இருவருக்குமிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இது மோதலாக மாறும் சூழலும் உருவாகியுள்ளது.

கமல் பட இன்னொரு நாயகியும் வெளியேறினார்!!!

Friday, March 2, 2012
சோனாக்ஷி சின்ஹாவை தொடர்ந்து கமல் படத்திலிருந்து இன்னொரு நாயகியும் வெளியேறினார். கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் புதிய படம் ‘விஸ்வரூபம்‘. இதன் ஷூட்டிங் வெளிநாடுகளில் நடந்து வருகிறது. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க பாலிவுட் ஹீரோயின் சோனாக்ஷி சின்ஹா தேர்வானார். ஷூட்டிங் தொடங்க தாமதமானதால் கால்ஷீட் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து அவர் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து இஷா ஷெர்வானி நடிக்க ஒப்பந்தம் ஆனார். தற்போது அவரும் வெளியேறிவிட்டார். இதுபற்றி அவர்கூறும்போது, ‘கமல்சார் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் கால்ஷீட் பிரச்னையால் வெளியேற வேண்டியதாகிவிட்டது. கமலுடன் நடிப்பது எனது கனவு. அந்த கனவு நனவாகவில்லை. மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறேன். மாற்றான் படத்தில் சூர்யாவுடன், டேவிட் என்ற படத்தில் விக்ரமுடன் நடிக்கிறேன். இவ்வாறு இஷா ஷெர்வானி கூறினார்.