Friday, March 30, 2012

சிம்பு படத்திற்கு நோ சொன்ன நயன்தாரா...?!!!

Friday, March,30, 2012
இயக்குனர், நடிகர், பாடகர் என பலமுகம் கொண்ட சிம்பு, தற்போது “வேட்டை மன்னன்” படத்தில் நடித்து வருகிறார். இதில் மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

இந்த மூன்று கதாநாயகிகளின் நடிப்பில், ஒரு கதாநாயகியின் நடிப்பு திருப்தி இல்லாமல் இருந்ததாம். இதனையடுத்து அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு, நயன்தாராவிடம் போய் கால்ஷீட் கேட்டு இருக்கிறார்கள். அதற்கு நயன்தாராவோ என்னிடம் தற்போதைக்கு கால்ஷீட் இல்லை என்று கூறிவிட்டார்.

நயன்தாரா சினிமாவில் ரீ எண்ட்ரி ஆன பிறகு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. தற்போது அஜித்துடன் ஒரு படமும், தெலுங்கில் ராணாவுடன் ஒரு படமும், இன்னும் சில படங்களும் ஒப்புக் கொண்டுள்ளார். அதனால் தான், இப்படத்திலும் கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியாமல் போனாதாம்.

சரண்யா நிர்வாண காட்சி படத்துக்கு வரி சலுகை!!!

Friday, March,30, 2012
ஸ்ரீராம், சரண்யா ஜோடியாக நடிக்கும் படம் மழைக்காலம். இதன் இயக்குனர் தீபன் கூறியதாவது: ஓவியக்கல்லூரி மாணவர்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது மழைக்காலம். இப்படத்தின் கிளைமாக்ஸில் நிர்வாண போஸ் தரும் சரண்யாவின் தோற்றத்தை மாணவர்கள் வரைவதுபோல் காட்சி அமைக்கப்பட்டது. இக்காட்சி படமாக்கப்பட்டபோது காட்சி யில் நடித்தவர்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை. அவர்கள் யாராவது செல்போனில் அதை படமாக்கக்கூடாது என்பதற்காக எல்லோரது செல்போன்களும் செட்டுக்கு வெளியிலேயே வாங்கி வைக்கப்பட்டது. இப்படத்துக்கு தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் கொடுத்தனர்.

மது குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் வந்தாலே ஏ சான்றிதழ் தரும் சென்சார், நிர்வாண காட்சி இடம்பெற்ற படத்துக்கு யு சான்றிதழ் கொடுத்தது எப்படி?’ என்கிறார்கள். இக்காட்சியில் எந்தவிதமான ஆபாசமும் இருக்காது. 20 நிமிடம் வசனமே இல்லாமல் ரீ ரிக்கார்டிங் மட்டுமே இடம்பெறுகிறது. ஒரு பெண்ணின் மனவலியை உணர்த்தும் காட்சியாக இருக்கும். இதைபார்த்தபிறகு அதிலிருந்து மீண்டுவர சில மணி நேரங்களாவது ஆகும். இந்த பாராட்டை எனக்கு சென்சார் குழுவினர் அளித்தனர். அதேபோல் வரிச்சலுகைக்காக படம் பார்த்த ஆர்.பி.சவுத்ரி, எல்.ஆர்.ஈஸ்வரி உள்ளிட்டவர்களும் இதே கருத்தைசொல்லி வரி சலுகை அளித்தனர். ஒளிப்பதிவு அகிலன். இசை பிரேம் ஆனந்த். ரீ ரிக்கார்டிங் ஜான்சன்

'3' படம் எப்படி? 3 படத்தை இன்டர் நெட்டில் வெளியிட தடை!!!

Friday, March,30, 2012
கொலைவெறி புகழ் 3 படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிவிட்டது. உலகம் முழுவதும் என்று சொல்வதைவிட, தமிழகத்தில்தான் இன்று வெளியானது. உலகின் மற்ற நாடுகளில் நேற்றே ரிலீஸ்!

ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள முதல்படம், உச்சரிக்காத உதடுகளே இல்லை எனும் அளவுக்கு பிரபலமான கொலை வெறிப் பாட்டு இடம்பெற்றுள்ள படம்... ரஜினி, கமல் என பிரபலங்கள் பார்த்துப் பாராட்டிய படம் என்பதால், ஏக எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர்.

தனுஷ் - ஸ்ருதிஹாஸன், சிவ கார்த்திகேயன், சுந்தர் ராமு ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் மீடியம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. யு சான்றிதழ் பெற்றுள்ளது சென்சாரில்.

சென்னையில் 20-க்கும் மேற்பட்ட அரங்குகளிலும், புற நகரில் 20 அரங்குகளிலும் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

அனைத்து அரங்குகளுமே கிட்டத்தட்ட ஹவுஸ் புல். ஒரு மீடியம் பட்ஜெட் படத்துக்கு இந்த அளவு ஓபனிங் என்பது மிகப் பெரிய விஷயம். கண்டிப்பாக அடுத்த மூன்று நாட்களில் படத்தின் முதலீடு தேறிவிடும்.

படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வரத் தொடங்கிவிட்டன. சிலர் துள்ளுவதோ இளமை மாதிரி இருப்பதாகவும், இன்னும் சிலர் மயக்கம் என்ன பாதிப்பு தெரிவதாகவும் கூறியுள்ளனர்.

நம்முடைய விமர்சனம் இன்னும் கொஞ்ச நேரத்தில் வரவிருக்கிறது... அதுவரை, படம் குறித்த உங்கள் கருத்தைச் சொல்லுங்க!

3 படத்தை இன்டர் நெட்டில் வெளியிட தடை!!!

தனுஷ்​ஸ்ருதி ஜோடியாக நடித்துள்ள '3' படத்தை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். கஸ்தூரிராஜா தயாரித்துள்ளார். இந்தப் படம் பிரபலமானதே இணையதளங்களால்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் நாளை ரிலீசாகிறது. இந்த நிலையில் கஸ்தூரி ராஜா சென்னை உயர்திமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் இணைய தளங்களில் '3' படத்தை வெளியிட தடை கோரியிருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தனுஷ் நடித்த '3' படம் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு உள்ளது. ரசிகர் மத்தியில் இப்படத்துக்கு அதிக வரவேற்பு உள்ளது. '3' படம் ரிலீசாவதற்கு முன்பே அப்படத்தில் இடம் பெற்ற கொலைவெறி பாடல் வெளியாகி உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளது. சமீபகாலமாக புதுப் படங்களை திருடி இணைய தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதனால் தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதுபோல் '3' படத்தையும் இணைய தளங்களில் வெளியிடலாம் என அஞ்சுகிறேன். இதனால் பெரிய இழப்பு ஏற்படும்.

எனவே '3' படத்தை இணைய தளங்களில் பதிவு இறக்கம் மற்றும் பதிவு ஏற்றம் செய்ய தடை விதிக்க வேண்டும். டி.வி.டி., வி.சி.டி.யில் வெளியிடவும் தடை விதிக்க வேண்டும், என்றார்.

இந்த வழக்கை திபதி கே.பி.கே. வாசுகி விசாரித்தார். '3' படத்தை இணைய தளங்களில் வெளியிட கூடாது என தடை விதித்து திபதி உத்தரவு பிறப்பித்தார்.

தனுஷ்-ஸ்ருதி ஜோடிக்கு ரஜினி-கமல் பாராட்டு!!!

Friday, March,30, 2012
தனது விஸ்வரூபம் படத்தின் கடைசிகட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் கமல் ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் செலவு செய்து கொண்டிருக்கிறார். இருந்தாலும் ஸ்ருதிஹாஸனுக்காக அவர் நடித்த ’3’ படத்தின் ப்ரீமியர் ஷோ பார்த்திருக்கிறார்.

கமல் படத்தை ரசித்து பார்த்தாராம். படம் பார்த்து முடித்த பின் 3 படக்குழுவையும் படத்தின் இயக்குனரான ஐஸ்வர்யாவையும் பாராட்டியிருக்கிறார்.தனுஷ்-ஸ்ருதி இடையேயான கெமிஸ்டிரி அற்புதமாக இருப்பதாக கூறினாராம்.

படத்தின் ஹீரோவான தனுஷை தனியே அழைத்து நன்றாக நடித்துள்ளதாக பாராட்டியுள்ளார். சில வாரங்களுக்கு முன்பே ரஜினி படத்தை பார்த்துவிட்டார். அப்போது ரஜினி தனுஷையும்-ஸ்ருதிஹாஸனையும் பாராட்டினார். அப்படிப்பட்ட ஜோடிப் பொருத்தமா!(படத்தில்) இருவருக்கும்.....

‘3’ படத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கிடையே பெருகிக் கொண்டே வருகிறது. “ஊர்ல இப்ப 3-னு ஒரு காய்ச்சல் பரவிடுச்சு. இதுக்கு மருந்து 30-தேதி தான் மார்க்கெட்ல வருதாம்” என்று ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பை கலப்பாக சமூக இணையதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். ரஜினி-கமல் இணைந்து நடிப்பதை விட மறுபடியும் தனுஷ்-ஸ்ருதி எப்போது இணைவார்கள் என்ற கேள்விகளே அதிகம் பறக்கின்றன.

ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் முதல் தமிழ்ப் படம் 'இனியவளே காத்திருப்பேன்'!!!

Friday, March,30, 2012
முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழர்கள், நடித்து, தயாரித்து இயக்கியுள்ள படம் 'இனியவளே காத்திருப்பேன்'.

ஒரு மணிநேரம் 15 நிமிடம் ஓடும் முழுமையான இந்த திரைப்படத்தை, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழன் இளங்கோ இயக்கியுள்ளார். நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து பல்கலைக் கழகத்தில் மல்டிமீடியா துறையில் பட்டப்படிப்பு முடித்தவர் இவர்.

கதை திரைக்கதை வசனம் எழுதி, எடிட்டிங், காமிரா உள்ளிட்ட பொறுப்புகளையும் கவனித்துள்ள ஈழன் இளங்கோ, இந்தப் படத்தில் முக்கிய பாத்திரத்திலும் நடித்துள்ளார்.

படத்துக்கு இசை உதயன். இரண்டு பாடல்கள் இடம்பெறுகின்றன. இந்தப் பாடல்களுக்கு மட்டும் சென்னையைச் சேர்ந்த மற்றொரு இசையமைப்பாளர் கவி இசையமைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தினேஷ் நாயகனாகவும், நிலோஷா நாயகியாகவும், தயா நகைச்சுவை வேடத்திலும் நடித்துள்ளனர்.

வெளிநாட்டில் எடுக்கப்படும் பெரும்பாலான திரைப்படங்களில் பிரதானமா இடம்பெறும் அம்சங்கள் கத்தி, துப்பாக்கி, ரத்தம்தான்.

ஆனால் முதல் முறையாக கத்தி ரத்தமில்லாமல், ஒரு அழகான குடும்ப சித்திரமாக 'இனியவளே காத்திருப்பேன்' படத்தை உருவாக்கியுள்ளார் ஈழன் இளங்கோ.

படத்தில் இடம்பெறும் ஒரு தாத்தா பாத்திரத்தில், முதுபெரும் ஈழத்து நடிகர் ரகுநாதன் நடித்துள்ளார். இவர்தான் அன்றைய சிலோனின் முதல் தமிழ் நடிகர்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர். தற்போது பிரான்ஸில் வசிக்கிறார். படத்தை 'அம்மா கிரியேஷன்ஸ், ஆஸ்திரேலியா' நிறுவனம் தயாரித்துள்ளது.

மே அல்லது ஜுன் மாதங்களில் உலகம் முழுவதும் வெளியாகிறது 'இனியவளே காத்திருப்பேன்'.

'சேவாக்கு, டென்டுல்கரு, மகேந்திர டோனி... கபடி ஆடுதப்பா மல்லிகப் பூ மேனி'!!!

Friday, March,30, 2012
சமீபத்தில் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த முதல் உலகக் கோப்பை கபடி போட்டியில் இந்திய பெண்கள் அணி கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் முப்பத்திரண்டு லட்சம் ஆண், பெண் கபடி வீரர்களும் வீராங்கனைகளும் இருப்பதாக புள்ளிவிபரம் சொல்கிறது. இவ்வளவு பாரம்பரியமும் சிறப்பும் கொண்ட கபடி விளையாட்டை பெருமை படுத்தும் விதத்தில் இசையமைப்பாளர் தேவா, மகளிர் கபடிக்கென்றே பிரத்யேகமாக ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார்.

கவிஞர் விவேகா வரிகளில் உருவான இந்த பாடலை தேவா பாடியிருப்பதுடன் நடித்தும் இருக்கிறார். அதுமட்டுமல்ல, இசைஞானி இளையராஜா- தேனிசைத்தென்றல் தேவா இருவரது பேத்தியான லய வர்ஷினி இதில் பாடியிருக்கிறார். பிரபல டான்ஸ் மாஸ்டர் 'மைனா' பாபி நடனம் அமைத்திருக்கிறார்.

'சேவாக்கு, டென்டுல்கரு, மகேந்திர டோனி... எல்லாரையும் மறந்துபுட்டு கொஞ்ச நேரம் வா நீ... கபடி ஆடுதப்பா மல்லிகப் பூ மேனி' என்று தனது காந்த குரலில் தேவா பாடுவதை கேட்கிற யாரும் ஆட்டம் போடாமல் இருக்க முடியாது.

ஒரு இசை ஆல்பமாக உருவாகியுள்ள இந்த பாடலில் இசையமைப்பாளர் தேவாவே தோன்றி பாடியிருப்பதுதான் இன்னும் கலகலப்பு. இதற்காக முழுசாக ஒருவாரம் கால்ஷீட் கொடுத்திருந்த தேவா, பிரபல நடன இயக்குனர் பாபி சொல்லிக் கொடுத்த மாதிரி சில மூவ் மென்ட்சுகளையும் செய்துள்ளார்.

சினிமாவில் நடிக்க வந்த பல வாய்ப்புகளை வேண்டாம் என்று மறுத்து வந்த தேவா, இந்த பாடலில் ஆட சம்மதித்தற்கு காரணமே தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி மீது அவர் கொண்டிருக்கும் ஆர்வம்தான்.

துடிப்பும் துள்ளலுமாக உருவாகியிருக்கும் இந்த பாடல் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கபடி ரசிகர்கள் முன்னிலையில், பதினாறு மாவட்டங்களை சேர்ந்த கபடி வீராங்கனைகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. ஈரோட்டில் நடந்த இந்த சிறப்பான நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு.கே.வி.ராமலிங்கம் சி.டி யை வெளியிட, இயக்குனர் 'சத்யம்' ராஜசேகர் பெற்றுக் கொண்டார்.

பைரவா கிரியேஷன்ஸ்-ஜெயம் விஷன்ஸ் தயாரிக்க, சிட்டாடல் ஜெய்சங்கர் இயக்கியுள்ளார்.

விழாவில் இசையமைப்பாளர் தேவா பேசியதாவது:

"கிரிக்கெட், டென்னிஸ், வாலிபால் போன்ற எத்தனையோ விளையாட்டுகள் இருந்தாலும் பாடிக் கொண்டே ஆடுகிற ஒரே விளையாட்டு கபடிதான். இது தமிழர்களோட பாரம்பரியமான விளையாட்டு. மூச்சு அடைத்து பாடும்போது நுரையீரலுக்கு ஆரோக்கியம் கொடுக்கிற விளையாட்டு இது. இந்த விளையாட்டை பெண்களும் ஆடுகிறார்கள். அதுவும் ஆண்களுக்கு இணையாக என்று நினைக்கும்போது நிஜமாகவே பெருமையாக இருக்கிறது. எத்தனையோ பாடல்களை நான் உருவாக்கியிருந்தாலும் இந்த பாடலை உருவாக்கிய பிறகு என்னையறியாமல் ஒரு மன நிறைவு ஏற்பட்டது. உலக அளவில் கபடிக்காக பிரத்யேகமாக உருவான பாடலும் இதுவாகதான் இருக்கும் என்று நினைக்கிறேன்."

துள்ளாட்டம் போட வைக்கும் இந்தப் பாடல் விரைவில் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

நடிகர் தனுசுக்கு நன்றி தெரிவித்த சச்சின்!!!

Friday, March,30, 2012
பிரபல நடிகரும் ரஜினிகாந்தின் மருமகனுமான தனுஷ் 100 வது சதம் அடிக்க சச்சினுக்காக ஒரு பாடல் வீடியோ ஒன்றை வெளியிட்டார் அதற்கு கிரிக்கெட் வீரர் சச்சின் தனுசுக்கு நன்றி தெரிவித்து கூறியதாவது நான் அந்த வீடியோவை பார்த்தேன்.உணமையில் நன்றாக உள்ளது எல்லோருக்கும் நான் நன்றி சொல்கிறேன் எனக்காக பாடல் வெளியிட அவருக்கு (தனுசுக்கு)நன்றி தெரிவித்து கொள்கிறேன் என கூறி உள்ளார்.

அஜீத்திற்காக காத்திருக்கும் ராஜேஷ்!!!

Friday, March, 30, 2012
பாஸ் என்கிற பாஸ்கரன் என்று காமெடியின் மூலம் கல்லாகட்டிய படங்களை இயக்கிய ராஜேஷ், தற்போது உதயநிதியை வைத்து ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை இயக்கியிருக்கிறார்.

இவர் இயக்கிய முதல் இரண்டு படங்களில் பரிச்சயமான ஹீரோக்கள் நடித்தாலும், மூன்றாவது படமான ஒகே ஒகே வில் நடித்திருப்பது உதயநிதி. சந்தானத்தையும், காமெடியையும் நம்பி, உதயநிதியை ஹீரோவாக்கியிருக்கும் ராஜேஷ் ரிசல்டுக்காக காத்திருக்கிறார் என்றாலும் கூடவே வேறு ஒரு விஷயத்திற்காகவும் காத்திருக்கிறாராம்.

அது ஒன்றுமில்லை, தனது அடுத்தப் படமான 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தை கார்த்திக்குக்காக இயக்கப்போவதாக சொல்லிவந்த ராஜேஷ், தற்போது அந்த கதையை அஜீத்திற்காக எழுதியதாக தனது நண்பர்களிடம் கூறுகிறாராம். பாஸ் என்கிற பாஸ் படத்தைப் பார்த்த அஜீத், ராஜேஷிடம் எனக்கு ரொமாண்டிக் வித் ஆக்ஷன் ஸ்கிரிப்ட் பண்ணமுடியுமா? எனறு கேட்டாராம். அதனால் பில்லா 2 படப்பிடிப்பு முடித்து விட்டு வரும் அஜீத்திடம் இந்த கதையை சொல்வதற்காக காத்திருக்கிறாராம் ராஜேஷ்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் பாராட்டு!!!

Friday, March, 30, 2012
சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்ட நிதி நிலை அறிக்கைக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் பாராட்டு தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், "மார்ச் 26ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட ஏழை-எளிய மக்களின் வாட்டத்தை போக்கும் நிதி நிலை அறிக்கை கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.

தமிழக மக்களின் உயர்வு ஒன்றையே தன் வாழ்நாள் லட்சியமாக கெண்டு செயல்படும் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, ஜெனரேட்டர் வாங்குவதற்கு மானியம் அளிப்பதாக அறிவித்திருப்பது மின் கட்டுப்பாட்டை போக்கும் அவரின் உறுதியை காட்டுகிறது.

அந்த அறிவிப்பின்படி, ஜெனரேட்டர் வாங்குவதற்கான மானியத்தை தமிழகத்தில் உள்ள திரையரங்க உரிமையாளர்களுக்கும் கிடைக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்." என்று கூறப்பட்டுள்ளது

சென்னையில் தீ‌க்சா சேத்!!!

Friday, March, 30, 2012
ராஜபாட்டை என்ற கொடுங்கனவுக்குப் பிறகு தீ‌க்சா சேத் நடித்து வரும் படம் வேட்டை மன்னன். சிம்பு படமா அய்யோ வேணாம் என்று தன்னை தடுத்தவர்களைப் பொருட்படுத்தாமல் நான் சிம்புவின் ஃபேன் என்று வாலண்ட்‌ரியாக வந்து சிக்கிக் கொண்டவர்தான் இவர்.

ஆ‌‌ந்த்தம், போடா போடி என பல வேலைகள் இருப்பதால் அவ்வப்போது யோசித்து யோசித்துதான் வேட்டை மன்னனுக்கு சிம்பு கால்ஷீட் தருகிறார். நேற்று பட்டினப்பாக்கத்தில் இப்படத்தின் டாக்கி போர்ஷனை இயக்குனர் நெல்சன் எடுத்தார். ஜெய்யுடன் தீக்சா சேத்தும் இந்தக் காட்சியில் நடித்தார்.

வேட்டை மன்னன் கேங்ஸ்டர் படம். சிம்புவுடன் ஜெய்யும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தீக்சா சேத்துடன் ஹன்சிகாவும் ஆட்டத்தில் உண்டு. இரண்டு நாட்கள் பட்டினப்பாக்கம் ஷெட்யூல் இருக்குமென தெ‌ரிகிறது.

கருணாஸ் படத்தில் கோவை சரளா!!!

Friday, March, 30, 2012
காஞ்சனாவுக்குப் பிறகு கோவை சரளாவுக்கான டிமாண்ட் அதிக‌ரித்திருக்கிறது. தனியாளாக படத்தை காப்பாற்றிவிடுவார் என்று நற்பெயர். அதற்கேற்ப தயா‌ரிப்பாளர்கள் வ‌ரிசை கட்டினாலும் கதையை தேர்ந்தெடுத்துதான் கால்ஷீட் தருகிறார் லேடி கமல்.

கருணாஸ் இதுவரை கோவை சரளாவுடன் நடித்ததில்லை. முதல்முறையாக இவ‌ரின் ரகளைபுரம் படத்தில் கோவை சரளா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இயக்குனரை தாண்டி எதையும் சிந்திக்காத கருணாஸுக்கு கோவை சரளாவின் நடிப்பு பிரமிப்பை ஏற்படுத்தியிருப்பது எதிர்பார்த்ததுதான். இவரைப் போல யாரையும் பார்த்ததில்லை என்று வியந்து கொண்டிருக்கிறார்.

ஆர்.பி.சௌத்‌ரி ராம் சரண் தேஜா, தமன்னாவை வைத்து தெலுங்கில் இயக்கிய படத்தை ரகளை என்ற பெய‌ரில் வெளியிடுவதால் ரகளை என்ற பெயரை மாற்றலாமா என்றும் தயா‌ரிப்பாளர் தரப்பு யோசித்து வருகிறதாம்.

ஆஸ்கர் சொன்ன அப்பட்ட பொய் - ஜாக்கிசானின் தயா‌ரிப்பு நிறுவனம் மறுப்பு!!!

Friday, March, 30, 2012
ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஜாக்கிசான் படங்களின் உ‌ரிமையை வாங்கி விநியோகித்ததும், அதன் காரணமாக ஜாக்கிசானுடன் தொழில்‌ ‌ரீதியாக அறிமுகம் ஏற்பட்டதும் தமிழகத்துக்கு‌த் தெ‌ரிந்த விஷயம்தான்.

இந்த நட்பை வைத்து கோடிகளை கொட்டி ஜாக்கிசானை தசாவதாரம் படத்தின் ஆடியோ விழாவுக்கு அழைத்து வந்தார்கள். ஐஸ்வர்யாராய்க்கு பணம் கொடுத்து தி நகர் ஜவுளிக்கடை திறப்புவிழாவுக்கு அழைத்து வந்த மாதி‌ரிதான் இதுவும். விழா முடிந்ததும் உறவும் ஃபணால்.

ஆனால் இது ஏதோ ரத்த பந்தம் போல ஆஸ்கர் ரவிச்சந்திரன் பேட்டியளித்ததுதான் பிரச்சனையாகியிருக்கிறது. அடுத்து தயா‌ரிக்கப் போகிற படத்தில் ஜாக்கிசான் நடிக்கிறார், கூடவே சல்மான்கான். இன்னொரு ஹீரோவாக கமலும் நடிப்பார் என கதைவிட்டிருந்தார். இதனை ஜாக்கிசானின் தயா‌ரிப்பு நிறுவனம் மறுத்திருக்கிறது. அப்படி எந்த ஐடியாவும் ஜாக்கிக்கு இல்லை என்று ஆஸ்க‌ரின் மூக்கை அறுத்திருக்கிறார்கள். தேவையா இது.

இப்போதைக்கு திருமணம் பற்றி யோசிக்கலை - அஞ்சலி!!!

Friday, March, 30, 2012
எங்கேயும் எப்போதும் படத்துக்குப் பிறகு அஞ்சலி மீதான மதிப்பு மாறியிருக்கிறது. எந்தக் கேரக்டரையும் பண்ணக் கூடியவர் லிஸ்டில் நிரந்தர இடம் பிடித்துள்ளார் இந்த சின்சியர் நடிகை. அழகு, கிளாமர், நடிப்பு... முக்கூட்டணி சங்கமிக்கும் அஞ்சலியின் திரையுலகப் பார்வை, அவ‌ரின் கே‌ரியர் ஆகியவை குறித்து அவரே பேசுகிறார்.

எங்கேயும் எப்போதும் மணிமேகலை குறித்து என்ன நினைக்கிறீங்க?இயக்குனர் என்ன சொன்னாரோ அதை நான் செய்தேன். படத்தின் வெற்றி திருப்தியளித்தது. அங்காடித்தெரு கனி கதாபாத்திரத்துக்குப் பிறகு எனக்கு திருப்தியளித்த வேடம் என்றால் அது எங்கேயும் எப்போதும் மணிமேகலைதான்.

மீண்டும் அதே தயா‌ரிப்பு கம்பெனியில் நடிக்கிறீர்களே...?


இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சாருக்கு தாங்க்ஸ். அவர்தான் நான் மீண்டும் அதே கம்பெனியில் நடிப்பதற்கு காரணம். அவ‌ரின் அசிஸ்டெண்ட் டைரக்டர் கின்ஸ்லே படத்தை இயக்குகிறார். முருகதாஸ் சாரோட தம்பி சரவணன் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

சுந்தர் சி. யோட மசாலா கஃபே எந்த மாதி‌ரியான கதை?


அதுவொரு ரொமாண்டிக் காமெடி. ரொம்ப நல்லா வந்திருக்கு. விமல், சிவான்னு இரண்டு ஹீரோக்கள். நான் ஷெல்த் இன்ஸ்பெக்டராக நடிச்சிருக்கேன். இன்ட்ரஸ்டிங் கேரக்டர்.

தெலுங்கிலும் நடிக்கிறீங்களே...?


ஆமா. வெங்கடேஷ், மகேஷ் பாபு இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கிற சீதாம்மா வாகிட்லே ‌‌சி‌றிமல்லு செட்டுங்கிற படத்துல நடிக்கிறேன். அங்கயெல்லாம் இவங்களை மாதி‌ரியான மாஸ் ஹீரோக்க‌ள் இணைந்து நடிக்கிறது அபூர்வம். இதில் நான் வெங்கடேஷ் ஜோடியாக நடிக்கிறேன். இதிலும் எனக்கு நல்ல கேரக்டர்.

FILEபெ‌ரிய ஹீரோக்களுடன் நடிக்கலைங்கிற வருத்தம் இருக்கிறதா?


வெங்கடேஷும், மகேஷ் பாபும் பெ‌ரிய நடிகர்கள்தானே. அது மட்டுமில்லாம அந்தப் படத்தின் பெய‌ரில் வர்ற சீதாம்மா என்கிற கேரக்டர்லதான் நான் நடிக்கிறேன். வெங்கடேஷ், மகேஷ்பாபு போன்ற பெ‌ரிய நடிகர்களின் படத்தின் பெயரே என்னுடைய கேரக்டர் பெயார்தான். இதைவிட என்ன வேண்டும்.

ச‌ரி, பெ‌ரிய நடிகர்களின் படங்களில் நடிக்கும் போதே அறிமுக இயக்குனர்களின் படங்களுக்கும் கால்ஷீட் தருகிறீர்கள்...?


அங்காடித்தெரு கனி, எங்கேயும் எப்போது‌ம் மணிமேகலை மாதி‌ரி உங்களால மட்டுமே பண்ணக் கூடிய கேரக்டர்னு வர்றாங்க. அதே மாதி‌ரி நடிப்பும் கிளாமரும் சேர்ந்த கேரக்டர் அதை உங்களால மட்டும்தான் செய்ய முடியும் என்று சொல்லும் போது தவி‌ர்க்க முடிவதில்லை.

காதல் கிசுகிசு...?


ஒரு படத்தில் சேர்ந்து நடித்தால் உடனே காதலா? மீடியாக்காரர்களே ஏதாவது எழுதிவிட்டு என்னிடமே விளக்கம் கேட்கிறார்கள். அவர்கள் எழுதியதற்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்.

காதல்... திருமணம்...?


அதைப் பற்றியெல்லாம் யோசிக்க நேரமில்லை. நான் ரசிச்சு நடிக்கிறதுக்கான கேரக்டர்கள் இன்னும் இரண்டு வருஷத்துக்கு இருக்கிறது. அதையெல்லாம் முடித்த பிறகு நீங்க சொல்வதைப் பற்றி யோசிக்கலாம்.

பிரபுதேவா, நயன்தாராவை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபடவில்லை - குஷ்பு!!!.

Friday, March, 30, 2012
பிரபுதேவா, நயன்தாராவை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபடவில்லை என்றார் குஷ்பு. காதல் ஜோடிகளாக வலம் வந்த பிரபு தேவா, நயன்தாரா சமீபத்தில் பிரிந்தனர். இதையடுத்து நயன்தாரா மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். இந்நிலை யில் பிரபுதேவா, நயன்தாராவுக்கு இடையே சமரசம் ஏற்படுத்த குஷ்பு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து குஷ்பு கூறியதாவது:

பிரபுதேவா, நயன்தாரா இருவரும் எனது நல்ல நண்பர்கள். பிரபு தேவாவை அவர் நடிக்க வருவதற்கு முன்பிருந்தே எனக்கு தெரியும். அவர் என்னுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். பிரபுதேவா, நயன்தாராவுக்கு இடையில் நான் மீடியேட்டராக இருக¢கவில்லை. காதலர்களாக இருந்த அவர்களுக்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாக அறிந்தேன். அவ்வளவுதான். மற்றபடி அந்த பிரச்னை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவர்களுக்குள் என்ன நடந்தாலும் அது அவர்களின் சொந்த பிரச்னை. அதில் நான் தலையிட விரும்பவில்லை. இதற்கிடையே நான் தலையிட்டு அவர்களை சமரசம் செய்து வைக்க முயல்வதாக சிலர் புரளி கிளப்புகிறார்கள். இதில் சிறிதும் உண்மையில்லை.

நயன்தாரா நல்ல பொண்ணு... அவருடன் சேர்ந்து நடிப்பேன் - சிம்பு பேட்டி!!!

Friday, March, 30, 2012
நயன்தாரா நல்ல பொண்ணு, அவருக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்குது, என்று கூறியுள்ளார் நடிகர் சிம்பு.

சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நயன்தாரா - பிரபு தேவா பிரிவு குறித்து அவரிடம் கேட்டனர்.

அதற்கு பதிலளித்துள்ள சிம்பு, "நயன்தாரா நல்ல பொண்ணுதான். ஆனா, ஏன் அவங்களுக்கு இப்படியே நடக்குதுனு தெரியலை. அவங்க எங்கே இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும். அது போதும் எனக்கு,'' என்றவரிடம்,

நயன்தாராவுடன் நடிப்பீர்களா என்று கேட்டபோது, ''நானா தேடிப் போக மாட்டேன். கதைக்குத் தேவை இருந்தால், இயக்குநர் 'அவங்கதான் வேணும்’னு சொன்னா, நான் நடிக்கச் சம்மதிப்பேன்.

நடிப்பது என் தொழில். அதில் பெர்சனல் விஷயங்களைக் கொண்டுவரக் கூடாது,'' என்று கூறியுள்ளார்.

சிம்பு அடுத்து வேட்டை மன்னன், போடா போடி படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் போடா போடி கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குமேல் இழுத்தடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

திருமண செலவுக்காக மண்டபத்தை விற்றேனா?- சினேகா!!!

Friday, March, 30, 2012
தான் கட்டிய கல்யாண மண்டத்தை, தனது திருமண செலவுக்காக சினேகா விற்றதாக கூறப்படுகிறது. இது பற்றி அவர் பதிலளித்துள்ளார். நடிகை சினேகா, பிரசன்னா காதல் திருமணம் வரும் மே 11ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. அற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது. இதற்கிடையில் திருமண செலவுக்காக பண்ருட்டியில் தான் கட்டிய கல்யாண மண்டபத்தை சினேகா விற்றுவிட்டதாக கோலிவுட்டில் தகவல் பரவியது. இது குறித்து சினேகா கூறியதாவது: எனக்கு சொந்தமான சொத்தை ஒரு நல்ல காரியத்துக்காக விற்றிருக்கிறேன். இதைபெரிய விஷயமாக ஏன் பேசிக் கொண்டி ருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெரும் முதலீட்டில் கட்டப்பட்ட அந்த சொத்தை வெறும் திருமண செலவுக்காக விற்றேன் என்று கூறுவது சரியல்ல. கடவுள் எனக்கு அதிகமாகவே கொடுத்திருக்கிறார். எனது முதலீடுகள் அப்படியே இருக்கிறது. திருமண செலவுக்காக மண்டபத்தை விற்றால் அது எனக்கு வருத்தத்தைதான் தந்திருக்கும்.

என் குடும்பத்தில் எனது கல்யாணம்தான் கடைசி திருமணம். எனவே இந்த திருமணத்தை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. திருமணத்தையொட்டி நடக்கவுள்ள விசேஷங்களில் கட்டுவதற்காக பலவிதமான உடைகள் வித்தியாசமான டிசைன்களில் தயாரிக்க ஆர்டர் கொடுத்திருக்கிறேன். எனது திருமண நாளுக்காக நிறைய எதிர்பார்ப்புகளுடன் ஆவலாக காத்திருக்கிறேன். இவ்வாறு சினேகா கூறினார். திருமணத்தையொட்டி புதிய படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார் சினேகா. இதற்கிடையில் குமாரவேலன் இயக்கும் ஹரிதாஸ் என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அதில் மட்டும் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு சென்னையிலேயே நடக்கிறது.

தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை!!!

Friday, March, 30, 2012
திரைப்பட இயக்குனர் கஸ்தூரிராஜா, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: நடிகர் தனுஷ், நடிகை சுருதிஹாசன் நடித்த '3' படம் இன்று திரையிடப்படுகிறது. இந்த படம் ரூ.22 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அனைத்து உரிமைகளும் எனக்கு உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் பாடல்களை திருட்டுத்தனமாக செல்போன் நிறுவனங்கள், இணையதளங்கள் வெளியிட உள்ளது.

இதனால், தினந்தோறும் எனக்கு 3.88 கோடி ரூபாய் இழப்பு எற்படுகிறது. பல தனியார் இணையதளங்கள் பாடல் களை எங்களிடம் அனுமதி பெறாமல் வெளியிட உள்ளது. தனியார் செல்போன் நிறுவனங்கள், தொலைபேசி நிறுவனங்கள் இந்த படத்தின் பாடல்களை வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிபதி வாசுகி, பிஎஸ்என்எல் உட்பட 20 செல்போன், நிறுவனங்கள், இணையதளங்கள் ஆகியவை ‘3’ பட பாடல் களை வெளியிட தடை விதித்து, 4 வாரத்தில் செல்போன், தொலைபேசி நிறுவனங்கள் பதில் மனுத் தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

ரசிகர்களிடம் தப்ப முடியவில்லையே!*நடிகை ஹன்சிகா புலம்பல்!!!

Friday, March, 30, 2012
எவரும் என்னை அடையாளம் காண முடியாதபடி, சாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பலாம் என நினைத்தேன். ரசிகர்களிடமிருந்தும், மீடியாவினரிடமிருந்தும் தப்ப முடியவில்லையே...' என, நடிகை ஹன்சிகா கூறினார். கோவிலில் அவரைக் காண, ரசிகர்களிடையே சில நிமிடங்கள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.வெங்கடேச பெருமாளை தரிசிக்க, தனது குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்திருந்த நடிகை ஹன்சிகா, நேற்று முன்தினம் அதிகாலை கோவிலுக்குள் சென்று, சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் அதிகாரிகள் பிரசாதங்களை நடிகைக்கு வழங்கினர்.

கோவிலுக்கு வெளியே வந்த ஹன்சிகாவை, அருகில் சென்று காண்பதற்கு அந்த அதிகாலை நேரத்திலும், ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். இதனால், சில நிமிடங்கள் வரை ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதை கவனித்த நடிகை, "எவரும் என்னை அடையாளம் காண முடியாதபடி, சாமி தரிசனம் செய்து விட்டுத் திரும்பலாம் என நினைத்தேன். தப்ப முடியவில்லையே...' என கூறியபடி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.