Sunday, April 1, 2012

திருமணத்துக்கு பிறகு வெளிவரும் ஜெனிலியா படம்!!!

Sunday, April 01, 2012
திருமணத்துக்கு பிறகு ஜெனிலியா நடித்த படம் தமிழில் வெளிவருகிறது. இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை சமீபத்தில் மணந்தார் நடிகை ஜெனிலியா. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று அறிவித்தார். திருமணத்துக்கு முன்பு அவர் நடித்த படம் உருமி. சந்தோஷ் சிவன் இயக்கி உள்ளார். பிரபுதேவா, பிருத்விராஜ், வித்யாபாலன், தபு, நித்யா மேனன் நடித்துள்ளனர். இந்த படத்தை தமிழில் ரிலீஸ் செய்கிறார் எஸ்.தாணு. வைரமுத்து பாடல்களுக்கு தீபக் தேவ் இசை அமைத்துள்ளார்.

இப்படம் குறித்து ஜெனிலியா கூறும்போது, 15,ம் நூற்றாண்டையும் 21,ம் நூற்றாண்டையும் கண்முன் நிறுத்தும் படம் இது. தமிழகத்தை ஆண்ட சேர மன்னனின் சரித்திரத்தை சொல்லும் கதை. இப்படத்துக்காக களறி சண்டை பயிற்சி பெற்றேன். இந்த படத்துக்கு உடல்ரீதியான உழைப்பு மட்டுமல்லாமல் சீரியஸான முகபாவங்களுடன் கூடிய நடிப்பும் தேவைப்பட்டது. படத்தில் மிகவும் அரிதாகவே சிரித்திருக்கிறேன். எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் எனக்கு இதுகொஞ்சம் கடினமாகவே இருந்தது. மலையாளத்தில் இப்படம் ஏற்கனவே வெளியாகி நல்ல பெயரை பெற்றுத் தந்தது. சீக்கிரமே தமிழில் ரிலீஸ் ஆகிறது என்றார்.

நான் விசுவாசமாத்தான் இருந்தேன், ஆனால் அவர் இல்லையே.நயன்தாரா!!!

Sunday, April, 01, 2012
பிரவுதேவாவைப் பிரிவேன் என்று தான் ஒருபோதும் நினைத்ததே இல்லை. நான் அவருக்கு உண்மையாக, விசுவாசமாகத்தான் இருந்தேன், ஆனால் அவர் இல்லை என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

பிரபுதேவாவுடனான காதல் முறிந்ததற்கான காரணத்தை முதல் முறையாக வாய் திறந்து கூறியுள்ளார் நயனதாரா ஒரு பேட்டியில்.

இந்தப் பேட்டியில் பிரபு தேவாவுடான காதல் முறிய காரணம் என்ன என்பதை அவர் சொல்லியுள்ளார். இதுகுறித்து நயனதாரா கூறுகையில்,

காதலுக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தேன். பிரபுதேவாவுக்காக சிலவற்றை விட்டுக் கொடுத்தேன். இருப்பினும் திருமணம் வரை சென்ற எங்கள் காதல் இறுதியில் முறிந்தவிட்டது. எங்கள் விஷயத்தில் மட்டுமல்ல எத்தைனையோ பேரின் காதல் அல்லது திருமணம் முறிவது நடக்கத் தான் செய்கிறது.

பொதுவாக காதலிலும் சரி, திருமணத்திலும் சரி ஒருவரையொருவர் முழுமையாக புரிந்துகொள்ளாமல் இருப்பது இருக்கத் தான் செய்யும். அதனால் பிரச்சனை ஏற்படத் தான் செய்யும். இது ஒரு அளவோடு நிற்க வேண்டும். எல்லை மீறும் போது காதல் முறிவு, திருமண முறிவு ஏற்படுகின்றது. என் விஷயத்திலும் அப்படித் தான் நடந்திருக்கிறது.

சில விஷயங்களை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. பிரச்சனைகளை சமாளிக்க முடியவில்லை அல்லது தெரியவில்லை என்று கூறலாம். உலகில் நிலையானது என்று எதுவும் இல்லை. மக்கள் மாறுகின்றனர், சூழ்நிலைகள் மாறுகின்றன, செயல்பாடுகள் மாறுகின்றன. அது போன்ற ஒரு மாற்றம் தான் என்னை பிரியச் செய்தது.

நான் பிரிந்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம். அது என் சொந்த விஷயம். அது பற்றி இனியும் பேச விரும்பவில்லை. என் சொந்த விஷயத்தை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

என்னைப் பற்றி பத்திரிக்கைகள் ஏதேதோ எழுதி வதந்திகளைப் பரப்பின. ஆனால் நான் எதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். தற்போது நிலைமை மாறிவிட்டது. காதல் முறிந்துவிட்டது. ஒரு உறவு சரியில்லை என்றால், அப்போது எல்லாமே மாறுவது இயற்கை தானே?

உறவு முறிவுக்கு 100 காரணங்கள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். நான் பிரபுதேவாவுடன் பழகியபோது 100 சதவீதம் உண்மையாக இருந்தேன். ஆனால் அதற்கு மதிப்பில்லை என்கிற போது உறவை முறி்ததுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

பிரபுதேவாவுடனான காதல் இப்படி பாதியிலேயே முறிந்துவிடும் என்று ஒருபோதும் நினைத்ததே இல்லை. ஆனால் வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதை இது உறுதிபடுத்தியுள்ளது. காதலோ, திருமணமோ இருவரும் பரஸ்பரம் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் அது வெற்றிகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும் என்றார்.

நல்ல நடிச்சா விருந்து வைத்து பாராட்டும் விஜய்!!!

Sunday, April 01, 2012
யாராவது நடிகர், நடிகையர் சிறப்பாக நடித்தால் உடனே அவர்களை போனில் தொடர்பு கொண்டு பாராட்டுகிறாராம் இளைய தளபதி விஜய்.

விஜய் தான் எந்தப் படம் பார்த்தாலும் அதில் சிறப்பாக நடித்திருக்கும் நடிகர், நடிகையரின் நம்பரை வாங்கி செல்போனில் அழைத்து பாராட்டு மழை பொழிகிறாராம். விஜயே அழைத்து பாராட்டினால் அவர்களுக்கு உச்சி குளிராமலா இருக்கும். அது மட்டுமின்றி சில நடிகர், நடிகையர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து மனம்விட்டுப் பாராட்டுகிறாராம்.

இன்னும் சிலரை ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்து வாழ்த்துகிறாராம். விஜய் போனில் பாராட்டினாலே அதை பெரிய விஷயமாக நினைப்பார்கள். அதிலும் அவர் வீட்டிலும், ஹோட்டல்களிலும் விருந்து கொடுத்து வாழ்த்தினால் யாருக்கு தான் பெருமையாக இருக்காது.

சக நடிகர்கள் சிறப்பாக நடித்தால் பெயருக்கு வாவ், ரொம்ப நல்லா நடிச்சிருக்கீங்க என்று சொல்லிவிட்டு செல்பவர்கள் மத்தியில் விஜய் சற்று வித்தியாசமானவர் தானே.

கோச்சடையான்’ படத்தில் நடிப்பது சவாலானது - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!!!

Sunday, April 01, 2012
கோச்சடையான்’ படத்தில் நடிப்பது சவாலானது என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார். ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்கும் படம், ‘கோச்சடையான்’. இதில் ரஜினி, தீபிகா படுகோன் ஜோடியாக நடிக்கிறார்கள். மேலும் சரத்குமார், ஜாக்கி ஷெராஃப், ஷோபனா, நாசர், ருக்மணி உட்பட பலர் நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிகுமார் டைரக்ஷன் மேற்பார்வை செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். 3டியில் தயாராகும் இந்தப் படம், ஹாலிவுட் படமான ‘அவதார்’ போல, பெர்பார்மன்ஸ் கேப்சரிங் என்ற நவீன டெக்னாலஜியில் உருவாக்கப்படுகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடந்து வருகிறது. இதற்காகப் படக்குழுவினர் கடந்த 17&ம் தேதி லண்டன் புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ நேற்று வெளியானது. இதில் சரத்குமார், ஷோபனா, கே.எஸ்.ரவிகுமார், ருக்மணி, நாசர், சவுந்தர்யா ஆகியோர் படம் பற்றி பேசியுள்ளனர். படத்தில் நடிப்பது பற்றி ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது: இது வழக்கமான படத்திலிருந்து வேறுபட்டது. இதில் நடிப்பது அவ்வளவு ஈசியானதல்ல. சவாலானது. மேக்கப், காஷ்ட்யூம் என எதுவுமில்லாமல் அந்த கேரக்டருக்குள் ஒன்றி நடிப்பது கஷ்டமான விஷயம். அதை செய்திருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் கற்பனை பண்ண முடியாத லொகேஷனும் இந்தப் படத்தில் முக்கியமான விஷயமாக இருக்கும். இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.

தமிழில் டர்ட்டி பிக்சர்... நாயகி அனுஷ்கா!!!

Sunday, April 01, 2012
இந்தியில் சக்கைப் போடு போட்டு, தேசிய விருதையும் வாங்கிய டர்ட்டி பிக்சர், விரைவில் தமிழில் தயாராகிறது.

மறைந்த தமிழ் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படத்தில், வித்யா பாலன் நாயகியாக அசத்தியிருந்தார். சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அவருக்குக் கிடைத்தது.

இப்படத்தை தமிழ், தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டிருந்தனர். இப்போது அந்த முடிவை மாற்றிக் கொண்டு, இரு மொழிகளிலும் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர்.

தமிழில் சில்க் ஸ்மிதா வேடத்தில் அனுஷ்காவை நடிக்க வைக்க பேசி வருகிறார்களாம்.

சில்க் ஸ்மிதா வேடத்துக்கு அனுஷ்காதான் பொருத்தமாக இருப்பார் என்று அவரை தேர்வு செய்துள்ளனர்.

அனுஷ்காவுக்கும் இதில் நடிக்க விருப்பம்தானாம். சம்பளம் படிந்துவிட்டால், தமிழ் - தெலுங்கில் அவர்தான் நாயகி. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கிறது.