Sunday, May 13, 2012

விஜய் பட விவகாரம் சந்திரசேகரன் தலையீட்டால் இயக்குனருக்கு சிக்கல்!!!

Sunday, ,May, ,13, 2012
சென்னை::தயாரிப்பாளர் தலையீட்டால் புதுமுக இயக்குனருக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. விஜயகாந்த் நடிப¢பில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய படம் ‘சட்டம் ஒரு இருட்டறை. இப்படத்தை சந்திரசேகரின் உறவினர் தயாரிக்க, அவரது மகள் சினேகா இயக்குவதாக இருந்தது. பின்னர் நடிகர் விஜய் தயாரிப்பார் என அறிவிக்கப்பட்டது. விக்ரம் பிரபு, பியா, ரீமா சென் நடிக்கின்றனர். ஷூட்டிங் தொடங்குவதற்கான வேலைகள் நடைபெற்று வந¢தபோது, இப்படத்தின் ஸ்கிரிப்ட்டில் மாற்றம் செய்ய வேண்டும் என விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினாராம். இதனால் இயக்குனர் சினேகாவுக்கு சிக்கல் ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் மாற்றங்களை செய்தார்.

ஏற்கனவே தேர்வான நடிகர், நடிகைகளிடம் இப்படத்தின் கதை சொல்லப்பட்ட நிலையில் கதை, காட்சியில் திடீர் மாற்றம் செய்துள்ளது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள நட்சத்திரங்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சந்திரசேகரன் கூறும் மாற்றங்கள் ரீமேக் ஆகவுள்ள படத்துக்கு பிளஸ்ஸாக இருக்குமா அல்லது இப்போதுள்ள கதையை கெடுத்துவிடுமா என்ற சந்தேகம் பட குழுவினர் மத்தியில் எழுந்துளளது. கோலிவுட்டில் பெரிய அளவில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் களத்தில் குதித்திருக்கும் விக்ரம் பிரபுவுக்கும் ஸ்கிரிப்ட் மாற்றத்தால் பலன் இருக்கமா என்று முடிவு செய்ய முடியாமல் தவிக்கிறார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே படத்தின் முதல் ஷெட்யூல் சமீபத்தில் தொடங்கியது. ஷூட்டிங் ஸ்பாட்டில் தவறாமல் ஆஜராகும் சந்திரசேகரன், இந்த காட்சியை இது போல் படமாக்க வேண்டும் என உத்தரவிடுகிறாராம். இயக்குனரின் வேலையில் அவர் தலையீடுவதால் இயக்குனர் சினேகா வருத்தத்தில் இருக்கிறாராம்.

மார்க்கெட் காலியானதால் ஸ்ரேயாவுக்கு சம்பளம் கட்!!!

Sunday, ,May, ,13, 2012
பெங்களூர்: கன்னட படத்துக்காக சம்பளத்தை குறைத்து நடிக்கிறார் ஸ்ரேயா. கன்னடத்தில் திவ்யா நடிக்க மறுத்த படம் ‘சந்திரா. ரூபா அய்யர் இயக்குகிறார். இப்படத்தில் தற்போது ஸ்ரேயா நடிக்கிறார். மார்க்கெட் இழந்துவிட்டதாலும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்வதற்காகவும் குறைந்த சம்பளத்தில் ஸ்ரேயா நடிப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி ஸ்ரேயா கூறும்போது,‘சமீபகாலமாகவே கன்னடத்தில் நடிக்க வாய்ப்பு வந்துகொண்டிருக்கிறது. பிற மொழி படங்களில் பிஸியாக இருந்ததால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இம்முறை சூழ்நிலை சரியாக அமைந்ததால் ஒப்புக்கொண்டேன். இளவரசி வேடம் என்பதால் அதில் நடிக்க ஆர்வமாக இருந்தேன். மற்றொரு நடிகை வெளியேறிய படத்தில் நடிக்கிறேன் என்பது பெரிய விஷயம் இல்லை. அதுபோல் பல படங்களில் நடந்திருக்கிறது. கன்னடத்தில் முதன்முதலாக ஹீரோயினாக நடிப்பதால் சம்பளத்தை குறைத்துக்கொண்டு நடிக்கிறேன். இதற்கு மேல் இதுபற்றி என்ன சொல்ல வேண்டும்?ÕÕ என்றார்.
ஏற்கனவே இப்படத்துக்கு அமிர்தா ராவ், ஆண்டிரிட்டா ராய் ஆகிய நடிகைகளை நடிக்க வைக்கவும் இயக்குனர் ரூபா அய்யர் அணுகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் முதல் ஹிட் கொடுத்த ஸ்ருதி ஹாசன்!!!

Sunday, ,May, ,13, 2012
சென்னை::தெலுங்கில் கப்பார் சிங் மூலம் ஸ்ருதி ஹாசன் முதன் முதலாக ஹிட் கொடுத்துள்ளார்.

நடிகை ஸ்ருதி ஹாசன் தெலுங்கில் சித்தார்த்துடன் சேர்ந்து அனகனகா ஒக்க தீருடு மற்றும் ஓ மை பிரண்ட் ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். ஆனால் இரண்டுமே ஓடவில்லை. இதையடுத்து ஆந்திராவில் ஸ்ருதியின் மார்க்கெட் இறங்கியது. இந்நிலையில் பவன் கல்யாணுடன் சேர்ந்து அவர் நடித்துள்ள கப்பார் சிங் கடந்த 11ம் தேதி ரிலீஸ் ஆனது.

வழக்கமாக ஸ்ருதி படம் ஊத்திக்கும் என்று நினைத்தவர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. காரணம் படம் ரிலீசான முதல் நாளில் ஆந்திராவில் மட்டும் ரூ. 8 கோடி 25 லட்சம் வசூலாகி புதிய சாதனை படைத்துள்ளது. படம் சூப்பர், டூப்பர் ஹிட்டாகிவிட்டது.

இதனால் ஸ்ருதி ராசியில்லாத நடிகை என்று கூறியவர்கள் இனியும் அதைத் தொடர முடியாது. இந்த படத்தின் வெற்றி மூலம் ஸ்ருதி தான் ராசியானவள் என்பதை நிரூபித்துவிட்டார்.

இந்த கப்பார் சிங் வேறு யாருமில்லை இந்தியில் சல்மான், சோனாக்ஷி சின்ஹா நடித்த தபாங் படத்தின் ரீமேக் தான். எது எப்படியோ, தபாங் எப்படி சோனாக்ஷிக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்ததோ அதேபோன்று ஸ்ருதிக்கும் டோலிவுட்டில் பெயர் வாங்கிக் கொடுத்துள்ளது.

வாழ்த்துக்கள் ஸ்ருதி...

கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு மகளுடன் செல்லும் ஐஸ்!!!

Sunday, ,May, ,13, 2012
சென்னை::கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா தனது மகள் ஆரத்யாவுடன் கலந்துகொள்கிறார் என்று கூறப்படுகிறது.

கேன்ஸ் திரைப்பட விழா வரும் 16ம் தேதி பிரான்சில் துவங்குகிறது. இதி்ல் பிரசவத்திற்கு பிறகு கேமராக்களில் இருந்து ஒதுங்கி இருக்கும் ஐஸ்வர்யா ராய் இதுவரை உலகின் பார்வைக்கு காட்டாமல் வைத்திருக்கும் தனது 6 மாத குழந்தை ஆரத்யாவுடன் கலந்து கொள்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த விழாவில் 4 இந்திய திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. அதில் மூன்று படங்கள் இந்தி இயக்குனர் அனுராக் கஷ்யப்புடையது. பிரபல அழகு சாதன பொருட்கள் விற்கும் நிறுவனமான லாரியலின் பிராண்ட் அம்பாசிடராக ஐஸ்வர்யா இந்த விழாவில் கலந்து கொள்கிறார். அவர் கேன்ஸ் விழாவில் கலந்துகொள்வது இது 11வது முறையாகும்.

மேலும் அதே லாரியலின் இன்னொரு பிராண்ட் அம்பாசிடரான சோனம் கபூரும் கேன்ஸ் விழாவில் கலந்துகொள்கிறார். இவர்கள் தவிர பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பல், அவரது மனைவி மெஹர் ஜெசியா ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

பிரசவத்திற்கு பிறகு ஓவர் வெயிட் போட்டுவிட்டார் என்று கூறப்படும் ஐஸ் கலந்து கொள்ளும் முதல் விழா இது. ஒவ்வொரு முறை கேன்ஸ் விழாவில் கலந்துகொள்ளும்போதும் அவரது உடை மற்றும் சிகை அலங்காரம் சரியில்லை என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகின்றன. இந்த முறையாவது ஐஸ் நச்சுன்னு வருவாரா?

எடையைக் குறைக்க அமெரிக்கா பறந்த ஹன்சிகா!!!

Sunday, ,May, ,13, 2012
நடிகை ஹன்சிகா உடல் எடையைக் குறைக்க அமெரிக்கா சென்றுள்ளாராம்.

கோலிவுட், டோலிவுட்டில் பெரிய நடிகர்களுடன் நடித்துள்ளவர் ஹன்சிகா. தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் அவர் நடித்த ஓ.கே. ஓ.கே. ஹிட்டானதையடுத்து அவருக்கு கோலிவுட்டில் மவுசு அதிகமாகிவிட்டது. சிம்புவுடன் 2 படங்கள், சூர்யாவுடன் சிங்கம் 2 என பிசியாகிவிட்டார்.

சரி நம்ம மேட்டருக்கு வருவோம். ஹன்சிகாவைப் பற்றி பேச்சு எடுத்தாலே ஓ, அந்த கொழுக், மொழுக் நடிகை தானே என்று கூறுவது வழக்கமாகிவிட்டது. மற்ற ஹீரோயின்கள் எல்லாம் உடலை சிக்கென்று வைக்க இவர் மட்டும் கொஞ்சம் வெயிட்டாகத் தான் இருக்கிறார். இந்நிலையில் யார், என்ன சொன்னார்களோ தெரியவில்லை கோலிவுட்டின் கனவுக் கன்னி என்று பெயர் வாங்கிய அவர் பிளைட்டைப் பிடித்து அமெரிக்கா சென்றுவிட்டாராம்.

அங்கு உடல் எடையைக் குறைத்து சிலிம்மான பிறகு நாடு திரும்புவாராம். உடம்பைக் குறைப்பது நல்ல ஐடியா தான் ஆனால் அதற்கு எதற்கு அமெரிக்கா செல்ல வேண்டும். இங்கில்லாத வசதியா என்ன.

அதென்ன நடிகைகள் எல்லாம் உடம்பைக் குறைக்கணும் என்றாலே அமெரிக்கா பறந்துவிடுகிறார்கள்.

'கோச்சடையான்' ஷூட்டிங்கிற்காக ரஜினிகாந்த் ஹாங்காங் பயணம்!!!

Sunday, ,May, ,13, 2012
மீனம்பாக்கம்::நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை திடீர் பயணமாக ஹாங்காங் புறப்பட்டு சென்றார். சென்னையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு ஹாங்காங் செல்லும் கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த், இன்று ஹாங்காங் புறப்பட்டு சென்றார். விமானத்தில் பயணம் செய்வதற்காக அதிகாலை 2.30 மணிக்கு பாதுகாப்பு சோதனையை ரஜினி, மேற்கொண்டிருந்தபோதுதான், அவரது பயணம் பற்றிய விவரம் தெரியவந்தது. பாதுகாப்பு சோதனை அனைத்தும் முடிந்ததும், விமானத்தில் ஏறி ஹாங்காங் புறப்பட்டு சென்றார். தற்போது, நடந்து வரும் Ôகோச்சடையான்Õ பட ஷூட்டிங்கிற்காக அவர், ஹாங்காங் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, படப்பிடிப்பு குழுவினர் ஹாங்காங்கில் இருப்பதாக தெரிகிறது. 4 அல்லது 5 நாட்கள் அங்கு இருந்து விட்டு அவர் சென்னைக்கு திரும்புவார் என கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, லண்டனில் கோச்சடையான் படப்பிடிப்பில் பங்கேற்க ரஜினி சென்றபோது, சென்னை ஏர்போர்ட்டில் ரசிகர்கள் கூட்டம் நள்ளிரவிலும் அலை மோதியது. அதனால், இந்த முறை அவரது பயணம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

3 பட விவகாரம் சம்பந்தி என்பதால் ரஜினி பேரை இழுப்பதா? கஸ்தூரிராஜா கண்டனம்!!!

Sunday, ,May, ,13, 2012
சென்னை::ரஜினி சம்பந்தி என்பதால் 3 படத்திற்கு அவர் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று கேட்பதா? என கஸ்தூரிராஜா கண்டனம் தெரிவித்தார். தனுஷ் நடிக்க அவரது மனைவி ஐஸ்வர்யா இயக்கிய படம் ‘3. இப்படம் வாங்கி நஷ்டம் அடைந்துவிட்டதாகவும், ரஜினி மகள், மருமகன் என்பதால் படத்தை வாங்கினேன். இதில் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ரஜினி தர வேண்டும் என்றும் தெலுங்கு பட அதிபர் நட்டிகுமார் கூறி இருந்தார். இதையடுத்து, ‘தனக்கும் 3 படத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று ஏற்கனவே ரஜினி ஒரு அறிக்கை மூலம் தெளிவுபடுத்தி இருந்தார்.
இந்தநிலையில் ‘3 பட தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜா நேற்று கூறியதாவது: 3 படத்தை வாங்கச் சொல்லி யாரையும் நான் வற்புறுத்தவில்லை. வினியோகஸ்தர்கள் விருப்பப்பட்டுதான் வாங்கினார்கள். தெலுங்கு டப்பிங் உரிமையை நட்டி குமார் என்பவர் 4.35 கோடிக்கு வாங்குவதாக ஒப்பந்தம் போட்டார். ஆனால் 2.50 கோடிதான் கொடுத்தார். மீதி 1.85 கோடி தர வேண்டும். அதை நான் திருப்பிகேட்டுவிடக்கூடாது என்பதற்காகவே தற்போது நஷ்டம் ஏற்பட்டதாக கூறி வருகிறார். இப்படத்தை நான்தான் தயாரித்தேன். ஐஸ்வர்யா ஒரு டெக்னீஷியன், தனுஷ் நடிகர் அவ்வளவுதான். அவர்களுக்கு தயாரிப்பில் சம்பந்தம் கிடையாது. ரஜினி எங்கோ உச்சத்தில் இருக்கிறார். அவர் 3 பட நஷ்டத்தை தரவேண்டும் என்று நட்டி குமார் கூறுகிறார். ரஜினி எனக்கு சம்பந்தி என்பதால் அவர் பெயரை இழுப்பது தவறு. எதுவாக இருந்தாலும் நட்டி குமார் என்னிடம்தான் பேச வேண்டும். லாபம் வந்தால் எந்த வினியோகஸ்தரும் பங்கு கொடுப்பது கிடையாது. நஷ்டம் வந்தால் அதை தயாரிப்பாளரிடம் கேட்பது சரி கிடையாது.

தொலைக்காட்சி தொடர்கள்... கண்ணீரில் மூழ்கடிக்கும் அம்மாக்கள்!!!

Sunday, ,May, ,13, 2012
சினிமாவில் அம்மா சென்டிமென்ட் இல்லாவிட்டால் படமே ஓடாது என்பது எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே மாற்ற முடியாத ஒன்றாக இருந்து வந்துள்ளது. திரைப்படங்களில் கதாநாயகிகளாக நடித்து பின்னர் அந்த காதாநாயகர்களுக்கே அம்மாவாக நடித்தவர்கள் இன்றைக்கு தொலைக்காட்சி தொடர்களில் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அழகான அம்மா, அழுது அழுது ஆர்பாட்டம் பண்ணும் அம்மா, வில்லத்தனமான அம்மா என பலவித அம்மாக்கள் இன்றைக்கு தொலைக்காட்சி தொடர்களில் கோலோச்சி வருகின்றனர். அவர்களைப் பற்றி அன்னையர் தின ஸ்பெசலாக ஒரு ரவுண்ட் அப்.

அழுகை வடிவுக்கரசி

அம்மா என்றால் பிள்ளைகளை நினைத்து அழுதபடியேதான் இருப்பார் என்பதாக உள்ளார் வடிவுக்கரசி. இவர் சின்னத்திரையில் நெடுந்தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்தே பெரும்பாலான தொடர்களில் அம்மாவாக நடித்து வருகிறார்.

சன் தொலைக்காட்சியில் வரும் திருமதி செல்வம் நெடுந்தொடரில் அழுது பிழியும் அம்மாவாக வரும் வடிவுக்கரசி தனது மூன்று மகள்களின் வாழ்க்கையை எண்ணி அழுது கொண்டே இருக்கிறார். அதே சமயம் தனது மகளின் வாழ்க்கைக்கு குறுக்கே வரும் பெண் என்று தெரிந்த உடன் ஆக்ரோசமாக பெருக்குமாறினால் வெளுத்து வாங்குகிறார்.

அதே வடிவுக்கரசிதான் அமைதியாக எதையும் பொறுமையாக கையாளும் அம்மாவாக உதிரிப்பூக்கள் தொடரில் நடித்திருக்கிறார். ஒரு நல்ல விசயம் இதில் அவ்வளவாக அழுவதில்லை. அதற்கு பதிலாக தொடரில் மூன்று குழந்தைகளின் அப்பாவாக நடித்துள்ள சேத்தன் அழுகிறார்.

திருமதி செல்வம் பாக்கியம்

அதே தொடரில் பாக்கியமாக வரும் இன்னொரு அம்மா தனது மகன், மகளுக்கு மட்டும் சுயநலமாக நடந்து கொண்டு வில்லத்தனம் செய்யும் அம்மாவாக வருகிறார். அவரேதான் தியாகம் தொடரில் மூன்று பெண்குழந்தைகளுக்கு பாசக்கார அம்மாவாக, பெண்ணின் திருமணத்தை எண்ணி அழும் அம்மாவாக நடித்திருக்கிறார்.

முத்தாரம் சத்ய பிரியா

நடிகை சத்யப்பிரியா கோலங்கள் தொடரில் தேவயானியின் அம்மாவாக நடித்தவர். எப்பொழுது பார்த்தாலும் அதில் அவருக்கு அழுகைக்கு பஞ்சம் இருக்காது. அதே சத்யப்பிரியா முத்தாரம் தொடரில் தேவயானியின் மாமியாராக வருகிறார். முதலில் பிடிக்காத மருமகளாக இருந்த தேவயானி இப்பொழுது சத்யப்பிரியாவின் பாசக்கார மருமகளாக மாறியிருக்கிறார்.

நளினி நடிக்கும் தொடர்கள்

சுதா சந்திரன்

சன், கலைஞர், ஜெயா என சுதாசந்திரன் தொடர்களில் நடித்தாலும் தென்றல் தொடரில் வில்லத்தனமான அம்மாவாக நடித்து வருகிறார் சுதா சந்திரன். இந்த கதாபாத்திரம் அவருக்கு புதிது. ஏனெனில் பொண்டாட்டி தேவை என்ற காமெடி சீரியலில் அம்மாவாக நடித்த அனுபவம் மட்டுமே இருந்தது. இப்பொழுது வில்லத்தனம் செய்யும் அம்மாவாக வருகிறார். போகப்போகத்தான் தெரியும் அவரது ஆற்றல்.

கஸ்தூரி லதா

நீண்ட நெடுங்காலமாக ஓடிக்கொண்டிருக்கும் கஸ்தூரி தொடரில் அப்பாவி அம்மாவாக வரும் லதா பாவம் அடிக்கடி காணாமல் போய்விடுகிறார். அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படியான கதாபாத்திரம் அவருக்கு இந்த தொடரில் கிடைக்கவில்லை என்றே கூறலாம்.

செல்லமே ராதிகா

செல்லமே சீரியலில் வரும் ராதிகா காணமல் போன தனது குழந்தையை பற்றி நினைக்கும் போது மட்டும் அவ்வப்போது கண் கலங்குகிறார். இதில் பாசமான அம்மா என்பதை விட பாசக்கார தங்கையாகவே அண்ணன் ராதாரவிக்காக அவர் அதிகம் அழுகிறார்.

ஆண்பாவம் மீரா

நான்கு ஆண் பிள்ளைகளின் பாசக்கார அம்மாவாக நடித்துள்ள மீரா மருமகளை பிடிக்காத மாமியாராகவும் வெளுத்து வாங்குகிறார். இந்த தொடர்களில் வரும் அம்மாக்களைப் பார்த்தால் அம்மா என்றாலே ஒன்று அழுபவராக இருக்க வேண்டும். இல்லையெனில் மருமகளுக்கு பிடிக்காத மாமியாராக இருக்கவேண்டும் அல்லது சுயநலமியாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே ஏற்படுகிறது.

இனிமேலாவது புதிதாக சீரியல் இயக்கும் இயக்குநர்கள் அம்மாக்களின் அழுகையை நிறுத்துவார்களா?