Tuesday, April 24, 2012

லட்சுமியால் அதிர்ச்சியான அனுஷ்கா!!!

Tuesday, April, 24, 2012
யூ டிவி நிறுவனம் தயாரிக்கும் 'தாண்டவம்' படத்தை விஜய் இயக்குகிறார். 'தெய்வத்திருமகள்' படத்திற்கு பிறகு விஜய்யும், விக்ரமும் இணையும் படம். இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக அனுஷ்காவும், 'மதராசபட்டினம்' படத்தில் நடித்த எமி ஜாக்சனும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு மேலும் ஒரு நாயகியாக லட்சுமி ராய் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் அடுத்த வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்காக லட்சுமிராய் 25 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து லட்சுமி ராய் கூறும்போது, கடந்த வருடத்தில் நான் நடித்து வெளியான 'மங்காத்தா', 'காஞ்சனா' படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவில் எனக்கு ஒரு நிலையான இடத்தைக் கொடுத்தது. அதேபோல், இப்படத்திலும் எனது கதாபாத்திரம் பாராட்டும்படி இருக்கும் என நம்புகிறேன் என கூறினார். திடீரென லட்சுமி ராய்க்கு ஒரு புதிய கேரக்டர் கொடுக்கப்பட்டது அனுஷ்கா வட்டாரத்தில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டை ஜூலையிலும், படத்தை ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வெளியிடவும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் சந்தானம், தம்பி ராமையா, சரண்யா பொன்வண்ணன், ஷாயாஜி ஷிண்டே, கோட்டா சீனிவாசராவ், டெல்லி கணேஷ் ஆகிய நட்சத்திர பட்டாளமும் நடித்துள்ளனர்.

பேர சுருக்கி சம்பளத்தை ஏத்திய ஹன்சிகா!!!

Tuesday, April, 24, 2012
நடிகை ஹன்சிகா மோத்வானி தன் பெயருக்கு பின்னால் இருந்த மோத்வானியை சுருக்கி ஹன்சிகா என்று மாற்றியுள்ளார். 'மாப்பிள்ளை' படம் மூலம் தமிழ் சினிமானில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தொடர்ந்து 'எங்கேயும் காதல்' படத்தில் நடித்தார். முதல் இரண்டு படமும் அம்மணிக்கு தோல்வியை தழுவினாலும் அதற்கு அடுத்து, அவர் நடித்த 'வேலாயுதம்' மற்றும் சமீபத்தில் வெளியாகி இருக்கும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படம் அவருக்கு, ஒரு நல்ல இடத்தை பெற்று தந்துள்ளது. 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திற்கு பிறகு அம்மணிக்கு ஏகப்பட்ட வரவேற்பு. ஏற்கனவே 'வேட்டை மன்னன்', 'சிங்கம்-2'வில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் ஹன்சிகாவுக்கு, மேலும் நிறைய படங்கள் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது. இந்நிலையில் தன் பெயரில் ஒரு மாற்றத்தை செய்திருக்கிறார் ஹன்சிகா. அதாவது நியூமராலாஜிபடி தனது பெயருக்கு பின்னால் இருக்கும் மோத்வானியை நீக்கியுள்ளார். இனி நான் வெறும் ஹன்சிகா தான் என்று கூறியிருக்கிறார். மேலும் 'ஓ.கே. ஓ.கே.'வுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ரூ.45 லட்சமாக இருந்த தனது சம்பளத்தையும் ரூ.75 லட்சமாக உயர்த்தி இருக்கிறார்.

அஜித்தை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும்: புரூனா!!!

Tuesday, April, 24, 2012
அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் 'பில்லா-2' படத்தில் பார்வதி ஓமணக்குட்டனுடன் இன்னொரு கதாநாயகியாக நடித்திருப்பவர் புரூனா அப்துல்லா. வெளிநாட்டில் இருந்து கோலிவுட்டில் களம் இறங்கி இருக்கும் இந்த புரூனா, அஜித்தை பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார். அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து புரூனா கூறியுள்ளதாவது, அஜித் உடன் நடித்தது சிறப்பான தருணம். பெரிய நடிகர் என்று எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் அனைவரிடமும் இயல்பாக நட்பாக பழகுபவர். அவரிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். தமிழ் பேச கற்றுக்கொடுத்தார். அவருடன் நடித்தது மறக்க முடியாதது. அஜித் பற்றி எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. அவரை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும் என்று கூறியுள்ளார். தல பத்தி தம்பட்டமடிக்கிற லிஸ்ட்ல இப்ப பிரேசில் அழகி கூட சேர்ந்துட்டாங்களா....?

கதாநாயகர்களுக்கு இணையாக இந்தி நடிகைகள் சம்பளம் உயர்வு!!!

Tuesday, April, 24, 2012
இந்தி திரையுலகில் கதாநாயகர்கள்தான் இது வரை அதிக சம்பளம் வாங்கினர். அவர்களை விட கதாநாயகிகளுக்கு குறைவான சம்பளம் கொடுப்பதே வழக்கமாக இருந்தது. அந்த நடை முறையை நடிகைகள் தற்போது தகர்த்துள்ளனர். கதாநாயகர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். அதன்படி சம்பளத்தையும் உயர்த்தி விட்டனர்.

பிரியங்கா சோப்ரா இதுவரை ஒரு படத்துக்கு ரூ. 3 கோடி சம்பளம் வாங்கி வந்தார். அடுத்து நடிக்க உள்ள புதிய படத்துக்கு ரூ. 9 கோடி வாங்குகிறார். வித்யபாலனுக்கு இது வரை ரூ. 1 1/2 கோடியில் இருந்து ரூ. 2 கோடி வரை சம்பளம் நிர்ணயித்து இருந்தனர். கடந்த வருடம் அவர் நடித்து ரிலீசான “டர்டி பிக்சர்” படம் வெற்றிகரமாக ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது சம்பளத்தை ரூ. 7 கோடியாக உயர்த்தி உள்ளார்.

கரீனா கபூர் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அத்துடன் படத்தின் லாபத்திலும் பங்கு கேட்கிறார். கதாநாயகர்கள்தான் லாபத்தில் பங்கு வாங்கி வந்தனர். ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான், அக்ஷய்குமார் போன்றோர் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை வாங்குகின்றனர். அதனை கரீனா கபூரும் பின்பற்றுகிறார்.

அவர் நிபந்தனையை ஏற்காத படங்களில் நடிக்க மறுத்து விடுகிறார். கரீனாகபூர் நடித்து ரிலீசான 3 இடியட்ஸ், கோல்மால், பாடிகார்ட், ராஒன் படங்கள் வசூல் குவித்தன. எனவே தான் புதிதாக நடிக்கும் ஹீரோயின் படத்தில் நடிப்பதற்கு சம்பளத்தோடு லாபத்தில் பங்கு வேண்டும் என்று நிபந்தனை போட்டுள்ளார்.

கத்ரினா கையூப் சம்பளத்தை 3 1/2கோடியில் இருந்து ரூ. 6 கோடியாக உயர்த்தியுள்ளார். நடிகைகள் முடிவால் கதாநாயகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். அவர்கள் கதாநாயகிகளை பின்னுக்கு தள்ள தங்கள் சம்பளத்தை மேலும் உயர்த்த ஆலோசிக்கின்றனர்.

கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Tuesday, April, 24, 2012
கோலிவுட்டில் 2 படங்களில் நடித்த கையோடு தமிழிலிருந்து வங்காள மொழியில் ரீமேக் ஆகும் ‘சிறுத்தை’ படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ரிச்சா கங்கோபாத்யாய்.

டைரக்டர் சக்ரி இயக்கும் ‘பில்லா 2’ படத்தில் ஜெய்கா ஸ்டன்ட் டீமை சேர்ந்த கெச்சா கம்பாக்டி அமைக்கும் ஸ்டன்ட் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார் அஜீத்.

7ம் அறிவு’ படத்தில் சர்க்கஸ் காட்சிகளில் சூர்யா நடித்ததை பார்த்து வியந்த பாலிவுட் ஹீரோ ஆமிர்கான் ‘தூம் 3’ படத்தில் சூர்யாவைப் போலவே சர்க்கஸ் காட்சிகளில் நடிக்க பயிற்சி எடுக்கிறார்.

மணிரத்னத்தின் ‘கடல்’, ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்துக்கு இசை அமைப்பதில் பிஸியாக இருக்கிறாராம் ஏ.ஆர்.ரகுமான்.

தமிழில் ‘வேட்டை’ படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசை அமைத்தார். அப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கு விஷால் சேகர் இரட்டையர்களை இசை அமைக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார் லிங்குசாமி.

ரூ.3 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர். இதற்கு சுங்கவரி மட்டுமே ஒன்றே முக்கால் கோடி கட்டினார். அமிதாப், ஆமிர்கானுக்கு பிறகு ஷங்கர்தான் இந்த காரை வைத்துள்ளார்.

விக்ரம் நடிக்கும் ‘கரிகாலன்’ படத்தை 25 சதவீதம் முடித்திருக்கும் இயக்குனர் கண்ணன், அடுத்தகட்ட படப்பிடிப்பை ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக சொல்கிறாராம்.

விஜய் இயக்கும் ‘தாண்டவம்’ படத்தில் அனுஷ்கா, எமியுடன் 3-வது நாயகியாக லட்சுமிராய் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

ஆர்யா - ஸ்ரேயா நடித்த ‘சிக்குபுக்கு’ படம் தெலுங்கில் ‘லவ் டு லவ்’ என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது.

ஹீரோயின்கள் நட்பாக இருக்கவே முடியாது : சமீரா ரெட்டி!

Tuesday, April, 24, 2012
இரண்டு ஹீரோயின்கள் என்றைக்கும் நட்பாக இருக்கவே முடியாது என்கிறார் சமீரா ரெட்டி. இது பற்றி அவர் கூறியதாவது: இந்தியில் தேஸ் படத்தில் நடிக்கிறேன். இதேபடத்தில் கங்கனா ரனவத் நடிக்கிறார். எங்களுக்குள் மோதல் என்று கிசுகிசுக்கள் வருகிறது. அதில் உண்மை இல்லை. எனக்குள் நிறைய விஷயங்கள் இருந்தாலும் அதை நட்பு முறையில் யாரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டேன். ஏனென்றால் 2 ஹீரோயின்கள் ஒருபோதும் நட்பாக இருக்க முடியாது என்பது என் கணிப்பு. தேஸ் படத்தை பிரியதர்ஷன் இயக்குகிறார். ஆக்ஷன் காட்சிகளில் முதன்முறையாக நடிக்கிறேன்.

இப்படி நடிப்பது எளிதல்ல. நிறைய சவால்களை சந்திக்கவேண்டும். கடைசி நாள் ஷூட்டிங்கில் கீழே விழுந்து காயம் அடைந்தேன். இதுபற்றி பெற்றோரிடம் சொல்லவில்லை. ஆனால் எப்படியோ செய்தி வெளியாகிவிட்டது. அதை படித்த பெற்றோர், ‘இதுபோன்ற காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்றனர். ஆக்ஷன் வேடத்தில் நடிக்க அழைத்தபோது முதலில் ஓ.கே. சொல்லிவிட்டேன். காட்சி படமாக்கும் நேரம் வந்தபோது பயம் வந்துவிட்டது. ‘என்னால் செய்ய முடியாது என்றேன். இயக்குனர்தான் தைரியம் சொன்னார். எனக்கு தகுந்த பாதுகாப்பை பட குழுவினர் தந்தனர்.

தென்னிந்திய படங்களில் உடல் எடை கூடி இருந்தால்தான் ரசிக¢கிறார்கள். ஒல்லியானபோது திட்டினார்கள். ஆனால் பாலிவுட்டில் ஒல்லியாக இருந்தால்தான் ரசிக்கிறார்கள். இரண்டு ரசிகர்களையும் திருப்தி செய்வது கடினம். இருவிதமாக தோற்றத்துக்கு மாற வேண்டி இருந்தாலும் அது பிடித்திருக்கிறது.
இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.