தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நடிகர் வினய் நேற்று அவரது பெங்களூரூ வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக செய்திகள்!!!
Tuesday, March 20, 2012தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நடிகர் வினய் நேற்று அவரது பெங்களூரூ வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக செய்திகள் வெளி வருகின்றன. ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
தனது வீட்டில் பராமத்துப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளி கால் தவறி கீழே விழ, அவரைக் காப்பாற்ற முயற்சித்த வினய்யும் கீழே விழுந்து அடிபட்டதாக தெரிகிறது.
உடனடியாக வினய் பெங்களூரூவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
Comments
Post a Comment