Tuesday, March 20, 2012விண்மீன்கள்' படத்தில் நடித்துள்ள ஷிகா, நிருபர்களிடம் கூறியதாவது: 'விண்மீன்கள்' படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளேன். இது அழுத்தமான கதை. படம் பார்த்தவர்கள் என் நடிப்பைப் பாராட்டினார்கள். இப்போது 'படம் பார்த்து கதை சொல்', 'வன யுத்தம்' படங்களில் நடித்து வருகிறேன். இந்தப் படத்துக்காக அடர்ந்த காட்டுப் பகுதியில் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. முத்தக்காட்சியில் நடிப்பீர்களா என்கிறார்கள். அதுபோல் நடிக்க விருப்பம் இல்லை. தொடர்ந்து தமிழில் நடிக்க முடிவு செய்துள்ளேன்.
Comments
Post a Comment