Tuesday, March 20, 2012ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற புதிய படம், 50 காதல் ஜோடிகளுக்கு சிறப்புக் காட்சியாக போட்டுக் காட்டப்பட்டது.
படத்துக்கு ஒரு வித்தியாசமான விளம்பரமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
சேரனின் உதவி இயக்குநராக பணியாற்றிய ஷண்முகராஜ் எழுதி இயக்கியுள்ள படம் இது. மொத்தம் 71 புதுமுகங்கள் நடிக்கின்றனர். இவர்களுக்கு 372 நாட்கள் நடிப்புப் பயிற்சி கொடுத்த இயக்குநர், முழுக் காட்சிகளையும் முதலில் ஒரு ஹேண்டி கேமில் பதிவு செய்து படமாக்கி, அதை வைத்துக் கொண்டு, தனியாக சினிமாவுக்கென்று ஒரு ஷூட்டிங் நடத்தினார்.
இதனால் காட்சிகள் நினைத்த மாதிரியே வெகு நேர்த்தியாக வந்ததாம்.
'உங்க காதல் ஜெயிக்க, 5 டி (T)யை பாலோ பண்ணுங்க... கண்டிப்பா சக்ஸஸ்தான்' என்று இந்தப் படத்துக்காக விளம்பரம் செய்யப்பட்டதால், அந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள காதலர்கள் எக்கச்சக்க ஆர்வம் காட்டினார்களாம்.
எனவே, ஒரு வித்தியாச முயற்சியாக, படத்தையே காதலர்களுக்கு சிறப்புக் காட்சியாக போட்டுக் காட்ட முடிவு செய்தார் இயக்குநர்.
அதன் படி தமிழகம் முழுவதிலுமிருந்து தன்னைத் தொடர்பு கொண்டவர்களில் 50 காதல் ஜோடிகளை தேர்ந்தெடுத்து, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் சிறப்புக் காட்சியாக ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழியை திரையிட்டுக் காட்டினர்.
படம் பார்த்த ஜோடிகள் அனைவரும் திருப்தியும் பாராட்டும் தெரிவித்ததோடு, காதல் ஜெயிக்க என்ன பண்ணனும் என்ற ரகசியம் தெரிஞ்சிடுச்சி என்றனர் உற்சாகத்துடன்!
மெய்யாலுமாவா?!
Comments
Post a Comment