Tuesday, March 20, 2012சூர்யா, காஜல் அகர்வால் நடிக்கும் படம், 'மாற்றான்'. கே.வி.ஆனந்த் இயக்கும் இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. இதன் ஷூட்டிங் ரஷ்யாவில் ஒரு மாதம் நடந்தது. படத்தின் முக்கிய காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் இங்கு படமானது. இதையடுத்து, ரஷ்ய மொழியை தீவிரமாக கற்று வருகிறார் காஜல் அகர்வால். படத்திற்கு இந்த மொழி அதிகம் தேவைப்படுவதால் இந்த மொழியை தீவிரமாக கற்று வருகிறார். மேலும் ரஷ்யாவின் ஷாப்பிங் செல்லும்போது மொழி தெரியாததால் மிகுந்த சிரமப்படுவதை தவிர்ப்பதற்காகவும் ரஷ்ய மொழியின் சில முக்கிய வார்த்தைகளை தனது டைரியில் குறிப்பெடுத்து வைத்துள்ளதாகவும் அவரது உதவியாளர் கூறினார். பெரும்பாலான நடிகைகள் தமிழ்ல நடிச்சுதான் கல்லா கட்றாங்க.. ஆனா, தமிழ் மொழிய மட்டும் கத்துக்கணும்னு நெனக்கவே மாட்டாங்க.. நீங்க எப்டி? கத்துக்கலைன்னா மொதல்ல தமிழ கத்துக்கிற வழிய பாருங்க.........
Comments
Post a Comment