இந்தியன் காப்பி கல்சர் படம் பார்த்து படம் செய்!!!

Tuesday, March 20, 2012
சென்றமுறை எழுதிய காப்பி கல்சருக்கு எதிர்வினை படித்து நெகிழ்ந்து போனோம். பிறகென்ன... வருஷம் முதற்கொண்டு தெ‌ளிவாக எழுதியிருந்தும் தமிழன் காப்பி அடிக்க மாட்டாண்டா ரேஞ்சில் ப‌‌ரிந்து பேசியிருந்தார்கள். இந்த வெள்ளை மனசு இருக்கிறவரை நம்மாட்கள் கொள்ளை அடிக்க தயங்க மாட்டார்கள்.

சென்றமுறை கொஞ்சம் பழைய படத்தைப் பார்த்தோம். இதில் புதிய படம். புதுசு என்றால் இன்னும் திரைக்கே வராத படம்.

இதுபோன்ற காப்பிகளுக்கு இயக்குனரை மட்டும் குறை சொல்ல முடியாது. நமக்குத் தெ‌ரிந்த திறமையான அசோஸியேட் இயக்குனர் இரண்டு ஸ்கி‌ரிப்டுகள் வைத்திருந்தார். அதில் ஒன்று தயா‌ரிப்பாளருக்கு பிடித்திருந்தது. ஆபிஸ் போடுவதுவரை வந்துவிட்டார்கள். நண்பருக்கு கெட்ட நேரம். தயா‌ரிப்பாளர் நண்பர்களுடன் வெளிநாட்டு த்‌ரில்லர் ஒன்றை பார்த்திருக்கிறார். ரகளையான மேக்கிங். உடனே நண்பருக்கு போன் பறந்திருக்கிறது. உங்க ஸ்கி‌ரிப்டை ஓரமா வைங்க, நான் சொல்ற படத்தை தமிழுக்கு ஏத்த மாதி‌ரி மாத்துங்க என்றிருக்கிறார்.

நண்பர் 12 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். வயது நாற்பதை தொடுகிறது. குடும்பம் உண்டு. நியாயவான் என்று வீம்பு பிடிப்பாரா இல்லை டிவிடி பார்த்து ஸ்கி‌ரிப்ட் தயார் செய்வாரா? ச‌ரி, நம்ம விஷயத்துக்கு வருவோம்.

பொதுவாக ஒரு படம் வெளிவந்த பிறகுதான் எந்தப் படத்தின் காப்பி என்பது தெ‌ரியும். கும்பலாக டிவிடி பார்த்து படம் செய்வதால் படப்பிடிப்புக்கு கிளம்பும் முன்பே எதிலிருந்து சுடுகிறார்கள் என்பது இப்போதெல்லாம் தெ‌ரிந்துவிடுகிறது. அப்படி தெ‌ரிய வந்த ஒரு படம், படம் பார்த்து கதை சொல்.

ஏபிஎம் புரொடக் ஷன் தயா‌ரித்திருக்கும் இந்தப் படத்தை பெஞ்சமின் பிரபு என்பவர் இயக்கியிருக்கிறார். படத்தைப் பற்றி ஆஹா ஓஹோவென இப்போதே பேசத் துவங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்தின் கதையை கொ‌ரியன் படமொன்றிலிருந்து உருவியிருக்கிறார்கள்.

தென்கொ‌ரியாவின் பிரபல இயக்குனர் Andrew Lau 2006 ல் இயக்கிய படம் டெய்ஸி. அதற்கு முன்னால் இன்‌ஸ்பெர்னல் அஃபையர்; சீ‌ரிஸை இயக்கினார். இதை அடிப்படையாக வைத்துதான் மார்ட்டின் ஸ்கார்சஸி டிபார்டட் படத்தை இயக்கி சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது பெற்றார்.

டெய்ஸியின் நாயகி Hye - young ஒரு ஆர்டிஸ்ட். ஒருவ‌‌ரின் முகத்தை அப்படியே வரையக் கூடியவள். ஆம்ஸ்டர்டாமிலுள்ள சதுக்கத்தில் பணத்துக்காக ஆட்களை வரைபவள். ஒருமுறை படம் வரைவதற்காக அழகான புற்கள் நிறைந்த மலைச் ச‌ரிவுக்கு வருகையில் நாயகன் Park Yi அவளை பார்க்கிறான். ஒரு ஓடையை அவள் கடக்கையில் தவறுதலாக அதில் விழுந்து விடுகிறாள். தொலைவிலிருந்து இதனைப் பா‌ர்க்கும் பார்க் யி ஓடி வருகிறான். அவனையோ அவன் நீ‌ரில் அடித்துச் சென்ற பையை எடுத்ததையோ பார்க்காமல் அவள் அங்கிருந்து சென்று விடுகிறாள். மறுநாள் அதே ஓடைக்கு அவள் வரும் போது ஓடையின் நடுவே பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருப்பதை பார்க்கிறாள்.

Comments