Saturday, March 10, 2012'ஒய் திஸ் கொலவெறி டி' பாட்டு பிரபலமானதன் மூலம், அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் '3' படம் மார்ச் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்பாடலை பிடித்தவர்களும், சரி பிடிக்காதவர்களும் சரி ஏதோ ஒரு விதத்தில் இதைப் பற்றி பேசி அதை பிரபலமடையவைத்து விட்டார்கள். இனி படம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.. 3 என்று வெறும் ஒற்றை இலக்கை எண்ணை படத்தின் தலைப்பாக வைத்து விட்டார் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா. இப்படி ஒரு தலைப்பிற்கு பின் என்ன கதை இருக்கும் என்று நாம் மண்டை காய்ந்தது என்னவோ உண்மைதான். அதற்கு சரியான பதில் இப்போது கிடைத்துவிட்டது. ஒரு காதலர்களின் 3 பருவங்களில் ஏற்படும் பல்வேறு பரிணாமங்களை உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துச் சொல்வதுதான் கதையின் கருவாகும். யப்பா.. இதுக்குத்தான் அம்புட்டு அலப்பரை பண்ணாங்களா... தனுஷ்-ஸ்ருதி நடிக்கும் இப்படத்தில் இருவருக்கும் ஏற்படும் காதல், பள்ளிப் பருவத்தில், கல்லூரியில், தற்போது வளர்ந்து பொறுப்பை உணர்ந்த பிறகு என 3 பருவங்களிலும் எந்த வகைகளில் எல்லாம் மாற்றம் பெறுகிறது என்பதை ஐஸ்வர்யா மிக நுணுக்கமாக படம்பிடித்துள்ளார் என்கிறது படக்குழு. ஓவரா காத்தடிச்சா... ட்யூப் தெறிச்சிடும்! புரிஞ்சிக்கிட்டா சரி!!
Comments
Post a Comment